வட்ஸ் அப் மூலம் இளைஞரை ஏமாற்றிய பெண்!!

சென்னையில் வட்ஸ் அப் சமூகவலைத்தளத்தினூடாக தனது தோழியின் புகைப்படத்தை வைத்து நூதனமான முறையில் பண மோசடி செய்த பெண்னையும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச்சேர்ந்த தயாநிதி என்பவர் வாசனை பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றார். இவரது வீட்டில், ராயப்பேட்டை சாந்தா சாஹிப் தெருவைச்சேர்ந்த யாஸ்மின் என்பவர் குடியிருந்துள்ளார்.

இந்நிலையில் யாஸ்மின், தயாநிதியுடனான பழக்கத்தை பயன்படுத்தி தனது தோழி பிரியா என்பவரது தாயார் புற்றுநோயால் அவதிபடுவதாகவும், அதற்கு பண உதவி தேவைப் படுவதாகவும் தயாநிதியை அணுகியுள்ளார்.

அதேநேரம் போலியான வட்ஸ் அப் கணக்கிணை ஏற்படுத்தி தனது தோழியான ரேவதி என்பவரது படத்தை DP-யாக வைத்து தயாநிதியிடம் நட்பாக பழகிய யாஸ்மின் பின்னர் காதலிப்பதாகக் கூறியுள்ளார்.

தயாநிதியிடம் தொடர்ந்து வட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட யாஸ்மின், அவரிடமிருந்து சிறிது சிறிதாக 7 லட்ச ரூபா வரை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தயாநிதி கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு யாஸ்மினை கேட்க, தனது தோழி ரேவதியின் காசோலை புத்தகத்தைத் திருடி, அதில் கையெழுத்திட்டு தயாநிதிக்கு கொடுத்துள்ளார்.

சந்தேகமடைந்த தயாநிதி இது குறித்து வங்கியில் விசாரித்தபோது அது அவளது தோழி ரேவதியுடைய காசோலை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து ரேவதியின் முகவரிக்கு சென்று பார்த்தபோது தம்மிடம் வட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்த பெண்ணின் DP ரேவதியின் படம் என்பது தெரிய வந்த நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து தயாநிதி ரேவதியிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் ரேவதி, தயாநிதி ஆகிய இருவரும் ராயப்பேட்டை மற்றும் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையங்களில் புகார்செய்துள்ளனர்.

குறித்த புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை பொலிசார், யாஸ்மின் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யாஸ்மின் இது போன்று பல ஆண்களை வட்ஸ் எப் மூலம் ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை யாஸ்மின் மற்றும் இப்ராஹிமை பொலிஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர்களை புழல் சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

விரைவில் உயர்த்தப்படவுள்ள நீர்க்கட்டணங்கள்!!

நீர்க்கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பொனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. எனவே விரைவில் நீர்க் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஆயிரம் லீற்றர் நீர் 12 ரூபாவிற்கு வழங்கப்படுகின்றது. எனினும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஒரு லீற்றர் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நீரை சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதற்கு கூடுதலான செலவு ஏற்படுகின்றது. எனினும், நீர்க்கட்டணங்களை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்!!

போஜ்புரி படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ். 29 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் தூக்கு போட்டுக் கொண்டது பற்றி தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அஞ்சலி தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்ததாக தெரியவில்லை.

என் மகள் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அஞ்சலியின் அம்மா தெரிவித்துள்ளார்.

அம்மா, அப்பா பெயரை நம்பர் பிளேட்டில் பதித்து நெகிழ வைத்த அமெரிக்கத் தமிழர்!!

அமெரிக்காவில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த தமிழர் தனது காருக்கு தனது பெற்றோரைக் குறிப்பிடும் வகையில் நம்பர் பிளேட் பதிவு செய்து பெற்றோரை நெகிழ வைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் ஆனந்த் விருத்தகிரி. மினிசோட்டா மாகாணத்தில் வசித்து வருகிறார். அங்கு கார் எண் பதிவு செய்யும்போது கூடவே custom number plate (விருப்ப தேர்வு) செய்து கொள்ள முடியும்.

தேர்வு செய்யும் பெயர் 7 எழுத்துக்கள் மட்டுமே இருக்க முடியும். அது எண்ணாக இருக்கலாம் அல்லது எழுத்தாகவும் இருக்கலாம்.

ஆனந்த் தனது காருக்கு தேர்ந்தெடுத்துளள பெயர் “AMMAPPA” (அம்மா அப்பா). இனி, மினிசோட்டா முழுவதிலும் இந்த பெயரில் இந்த ஒரு வண்டி மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கும். வேறு காருக்கு இந்த அம்மா அப்பா பெயர் கிடைக்காது.

இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், என் அம்மாவையும்,அப்பாவையும் அழைத்து வந்து வண்டியுடன் சேர்த்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை நேற்று நிறைவேறியது. மற்றுமொரு மகிழ்ச்சி – இது தந்தையர் தினத்தன்று நடந்தது என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.

 

15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாடகை அடிப்படையில் அறைகள் வழங்கும் நிறுவனத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை குறித்த நபரை விளப்பமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தும்மலசூரிய பிரதேசத்தில் அறை வசதிகள் வழங்கும் நிறுவனத்தின் பொறுப்பாளராக செயற்படும் நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை அவர் ஏமாற்றி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

தும்மலசூரிய பிரதேச தோட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிறுமியின் தாய் தந்தை கல்வி செலவை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுமியின் கல்வி செலவை பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறி, அவரின் உறவினர் ஒருவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதன்போது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

தனது பாடசாலை நண்பி ஊடாக தான் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டமை தொடர்பில் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற

சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியினருக்கு தாய் நாட்டில் அமோக வரவேற்பு!!

 
சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றிக் கொண்ட பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று தனது தாய் நாட்டை சென்றடைந்தது. லாஹூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீரர்களுக்கு பாரிய வரவேற்பளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் பெற்ற அபார வெற்றி மூலம் தன் வசப்படுத்தியிருந்தது. பாக்கிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றி கொண்ட முதற் சந்தர்ப்பமாக இது அமைந்தது.

பீ பிரிவில் இம்முறை போட்டிகளில் கலந்து கொண்டிருந்த பாக்கிஸ்தான் அணியைப் பொறுத்தளவில் இளம் வீரர்கள் பலர் அணியில் இடம்பிடித்திருந்தனர்.

தீர்மானமிக்க இலங்கை அணியுடனான போட்டியை வெற்றி கொண்டதன் மூலம், இம்முறை தொடரின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிப் படுத்திக் கொண்ட பாக்கிஸ்தான் அணி, இறுதிப் போட்டியில் தன் அயல் நாடான இந்திய அணியை ஓவல் மைதானத்தில் சந்தித்தது.

பல இலட்சக்கணக்கான இரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பலம் வாய்ந்த இந்திய அணியை தோற்கடித்த பாக்கிஸ்தான் தனது பெயரை மீண்டும் ஒரு முறை பலமான அணி என்று பொறித்துக் கொண்டது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றிய நிலையில் ,புதிய உத்வேகத்தை கண்டுள்ளதாக அணியின் பயிற்றுவிப்பாளர் மிகி ஆதர் தெரிவித்துள்ளளார்.

பூமியைப் போன்று மனிதர்கள் வாழக்கூடிய மேலும் 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு!!

பூமி போன்று மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

இந்தக் கிரகங்கள் பூமியை போன்றே தட்பவெப்ப நிலையையும், பூமியின் அளவையும் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 219 கிரகங்களை உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில் சேர்த்துள்ளனர்.

நாசாவின் கெப்ளர் வான்வெளி தொலைநோக்கி மூலம் நடைபெற்று வந்த ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளன.

2009 ஆம் ஆண்டில் கெப்ளர் ஆய்வினைத் துவங்கி பிரபஞ்சத்தில் பூமி மட்டும் தனித்துள்ளதா இல்லை அது போன்ற கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி துவங்கப்பட்டது.

விஞ்ஞானிகள் இதுவரை 4,034 கிரகங்களை கண்டறிந்துள்ளனர், இதில் பூமி போன்றே உருவத்திலும், தட்பவெப்ப நிலையில் சுமார் 50 கிரகங்கள் வரை இருப்பதாக தெரிகிறது.

நமது சூரிய குடும்பத்தினையும் கடந்து அமைந்துள்ள விண்மீன் கூட்டங்களில் சுமார் 3,500 கிரகங்கள் பூமியைப் போல இருப்பதற்கு வாய்ப்புள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அனில் கும்ளே திடீர் இராஜினாமா : காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே திடீர் இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு 2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ளேவை இந்திய கிரிட்கெட் சபை நியமித்தது. இவர் ஓராண்டு காலம் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. நேற்றுடன் கும்ப்ளேவின் பயிற்சியாளர் ஒப்பந்த காலம் நிறைவு பெற்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே திடீர் இராஜினாமா செய்துள்ளார். இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுபயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் கும்ப்ளே இராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ண போட்டியின் போது கோலியுடன் கும்ளேவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டி வரை அனில் கும்ளே நீடிக்க இந்திய கிரிட்கெட் சபை கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.புதிய பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனைவியை பகிடி செய்த நபரை நித்திரையிலிருந்து எழுப்பி குத்திக் கொலை செய்த நபர்!!

தனது மனை­வியை பகிடி செய்த நபரை தலையில் கூரிய ஆயு­தத்­தினால் குத்திக் கொலை செய்­து­விட்டுத் தப்பிச் சென்ற நபர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பங்­க­தெ­னிய குமா­ர­கட்­டுவ நிவ­ஹல்­புர எனும் பிர­தே­சத்தைச் சேர்ந்த 53 வய­து­டைய நபரே இவ்­வாறு கொலை செய்யப்பட்டவ­ராவார்.

கொலை செய்­யப்­பட்­ட­வரும் அவரைக் கொலை செய்­த­வரும் ஒரே பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். கொலை செய்­யப்­பட்ட நபர் அவரைக் கொலை செய்­த­வரின் மனை­வியை அநா­கரிக­மான முறையில் பகிடி செய்­ததால் அவரை சந்­தேக நபர் எச்­ச­ரித்­தி­ருந்­த­தாக கூறப் ­ப­டு­கி­றது.

அத்­துடன் நிறுத்திக் கொள்­ளாத சந்­தேக நபர், அதி­காலை 1.30 மணி­ய­ளவில் கொலை செய்­யப்­பட்­ட­வரின் வீட்­டுக்குச் சென்று நித்­தி­ரை­யி­லி­ருந்த அவரை எழுப்பி மீண்டும் தனது மனை­வியை பகிடி செய்­த­தற்­காக அவரை எச்­ச­ரித்­துள்­ள­துடன் தனது கையி­லி­ருந்த அரி­வாளால் அவரின் தலையில் வெட்­டி­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். பின்னர் மன்னா கத்தி தாக்­கு­தலில் பலத்த காயங்­க­ளுக்­குள்­ளான நபர் சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் அங்கு உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இத்­தாக்­கு­த­லை­ய­டுத்து சந்­தேக நபர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்த நிலையில் இன்று தாக்­கு­த­லுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட மன்னா கத்­தி­யுடன் அவரைக் கைது செய்ய முடிந்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிலாபம் பொலிஸ் நிலைய தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­தகர் வசந்த ஹேரத்தின் ஆலோ­ச­னையின் பேரில் குற்ற விசா­ரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமாரவின் தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு நோயினால் 200 பேர் பலி!!

நாட்டில் மோசமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சகல அரச வைத்தியசாலைகளிலும் 100க்கும் அதிகாமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நாட்டில் சகல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இந்த ஆண்டில் இதுவரையிலான ஆறுமாத காலத்தில் 63 ஆயிரத்து 987 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவரும் நிலையில் நாட்டில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வைத்திய சாலையில் 100 க்கும் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிளை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் வீட்டு மற்றும் வெளி சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் தொடர்ச்சியாக சுகாதார துறையினர் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் ஒரு நபருக்கு மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல், இருமல் இருக்குமாயின் உடனடியாக வைத்திய உதவிகளை நாடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல்வித் துயரத்தை மீம்களில் கரைக்கும் இந்திய ரசிகர்கள்!!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

கிரிக்கெட் போட்டி அதுவும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பதால் பரபரப்பிற்குப் பஞ்சமில்லை, அந்த பரபரப்பின் அளவிற்கு போட்டிகளை விமர்சித்து வந்த மீம்களும் சமூக ஊடகத்தில் பரவலாக வலம் வந்தன.

நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ஆனால் பாகிஸ்தானின் விக்கெட்டுகளை எடுக்க தவறியதால் பாகிஸ்தான் அதிக ஓட்டங்களை சேர்க்க நேர்ந்தது.

3 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பூம்ரா பந்துவீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் ஆட்டமிழந்த போதும், அந்த பந்து ´நோ-பால்´ என்பதால் அவர் ஆட்டமிழக்காமல் தப்பினார்.

முன்னணி வீரர்கள் பலரும் ஆட்டமிழந்த நிலையில், ஒரு கட்டத்தில் நன்றாக அடித்து ஆடிக் கொண்டிருந்த பாண்ட்யா, ஜடேஜாவால் ரன் அவுட் ஆனார்.

கிரிக்கெட்டில் தோற்றால் என்ன ஹாக்கியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது. அதுதானே நமது தேசிய விளையாட்டு என்பதை போல் அமைந்த இந்த படம் அதிகமாக டிவிட்டரிலும் முகநூலிலும் பகிரப்பட்டது.

எனவே கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் திடீரென தங்களின் கவனத்தை ஹாக்கியின் பக்கம் திருப்பி தங்கள் மனக்கவலைக்கு ஆறுதல் தேடினர்.

டிவிட்டரில் #INDvPAk என்ற ஹேஷ்டாக் நீண்ட நேரமாக டிரண்டிங்கில் இருந்தது. டிவிட்டர் பதிவுகள் மூலமாக, ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தையும், ஆதரவையும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையுடனும் பலர் வெளிப்படுத்தினர்.

இது ஒரு விளையாட்டுதான் என்றும், அதில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று, எனவே அதை தீவிரமாக எடுத்து கொள்ள கூடாது என்றும் ட்விட்டுகள் பகிரப்பட்டன, சிலர் பாகிஸ்தானிற்கு தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.

அஞ்சலி – ஜெய்க்கு திருப்பதியில் திருமணம்?

நடிகை அஞ்சலி, 2007ம் ஆண்டு கற்றது தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். அங்காடித் தெரு படம் அவரை பிரபலபடுத்தியது. கலகலப்பு, எங்கேயும் எப்போதும், சேட்டை, சகலகலா வல்லவன் மாப்ள சிங்கம், இறைவி ஆகியவையும் முக்கிய படங்களாக அமைந்தன.

தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். குடும்ப பிரச்சினையால் சினிமாவை விட்டு தற்காலிகமாக சில மாதங்கள் ஒதுங்கி இருந்து விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் அவரது மார்க்கெட் சரியவில்லை. கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறார். அஞ்சலிக்கு 31 வயது ஆகிறது. அவருக்கு திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் அஞ்சலிக்கும் நடிகர் ஜெய்க்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அஞ்சலிக்கு ஜெய் தனது வீட்டில் தோசை சுட்டு கொடுத்தும் நெருக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலிக்கு ஜெய் டுவிட்டரில் தெரிவித்து இருந்த வாழ்த்து செய்தியில், “நீ எனக்கு முக்கியம். நீ நீயாக இருந்து எனது ஒவ்வொரு நாளையும் முக்கியமானதாய் ஆக்குகிறாய். நானும் கடவுளும் என்றும் உன்னுடன் இருப்போம்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு அஞ்சலி நன்றி தெரிவித்தார்.

அஞ்சலி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த தெலுங்குப் பெண் ஆவார். “அஞ்சலிக்கும், ஜெய்க்கும் வருகிற டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்” என்று அஞ்சலியின் உறவினர்கள் தெரிவித்ததாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.

வவுனியாவில் பிறந்த குழந்தை உயிரிழப்பு : தயார் சந்தேகத்தில் கைது!!

வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் நேற்று (20.06.2017) மாலை 5.30 மணியளவில் தனது வீட்டில் தயார் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பிறந்த குழந்தை இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஈஸ்வரிபுரம் கிராம மக்களால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அந்த முறைப்பாட்டில் குழந்தையை பிரசவித்த 26 வயது தயார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பிரசவித்த குழந்தையை தயாரே கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வைத்தியசாலையில் தங்கியுள்ள தயாரை பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடமாகாண சபை அங்கத்தவர்களின் செயற்பாடு புரியாத புதிராக இருக்கின்றது : ம.தியாகராசா ஆதங்கம்!!

மக்கள் மனங்களிலே ஏற்பட்ட உணர்வுகளுக்கு அமைவாக இந்த உறுப்பினர்கள் வடக்கு மாகாணத்திலே செயற்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசாவின் அலுவலகத்தில் நேற்று (20.06.2017) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண சபையிலே நடந்து கொண்டிருக்கின்ற பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்ததையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பாடுபட்ட கட்சி தலைவர்கள், மதகுருமார்கள் எல்லோருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

வடமாகாண சபையை பொறுத்தமட்டிலே உங்களுக்கு தெரியும் புதிதாக கொண்டுவரப்பட்ட இந்த வட மாகாண சபையிலே வட மாகாணத்திலே இருக்கின்ற மக்கள் எல்லோரும் ஒருமித்த குரலோடு ,ஆதரவோடு, உணர்வோடு வாக்களித்தார்கள் என்னென்று சொன்னால் மாகாண சபையினூடாக ஏதாவதொரு விடிவை பெறவேண்டும் என்பதற்காக 2013ம் ஆண்டு மாகாண சபைக்கு உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்தார்கள்.

அதே வேளை மக்களிடையே இருக்கின்ற மக்கள் மனங்களிலே ஏற்பட்ட உணர்வுகளுக்கு அமைவாக உறுப்பினர்கள் இந்த வட மாகாணத்திலே செயற்படவில்லை என்பது தான் என்னுடைய கருத்து.

என்னை பொறுத்த மட்டில் வவுனியா மாவட்டத்திலே நான் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். எனது பிரதேசம் விவாசயத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழ்கின்ற பிரதேசம்.

இதே போன்று முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் கூடுதலாக மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.அவர்களுடைய தேவைகள் விருப்பங்கள் எல்லாம் வேறு விதமாக அமைந்திருக்கின்றது.

அந்த வகையிலே அந்த தேவைகளை இனங்கண்டு அந்த தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பது தான் இந்த உறுப்பினர்களுடைய கடமை. அதை விட்டு இந்த உறுப்பினர்கள் ஏனோ தானோ என்று மாகாண சபையிலே நடந்து கொள்வதும், உறுப்பினர்களுடைய செயற்பாடும் மக்கள் மத்தியிலே ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

எங்களுடைய மாகாண சபையிலே இருக்கின்ற அமைச்சர்களுடைய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றமை உங்களுக்கு தெரியும். இந்த அமைச்சர்கள் செய்கின்ற ஊழல் மோசடிகளுக்கு அப்பால் அமைச்சர்களுடன் பல தடவைகள் மாகாண சபையிலும் சரி வெளியிலும் சரி நான் அவர்களுடன் ஆதங்கப்பட்டிருக்கின்றேன், அவர்களுடன் சண்டை பிடித்திருக்கின்றேன்.

காரணம் என்னவென்று சொன்னால் எங்களுடைய வவுனியா மாவட்டத்திலே இருக்கின்ற மக்களுடைய தேவைகளை இனங்கண்டு அவர்கள் செய்ய தவறிவிட்டார்கள் என்ற சந்தர்பத்திலே தான் நான் அவர்களுடன் சண்டை பிடித்திருக்கின்றேன்.

அந்த வகையில் எந்தவொரு அமைச்சர்களையும் நான் ஊழல் மோசடி செய்தார்கள் என்று குற்றம் சாட்டவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்யவும் என்ற கருத்தையும் நான் சபையில் முன்வைக்கவில்லை. இந்த குற்ற சாட்டை முன்வைத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழரசுகட்சி உறுப்பினர்கள் தான் இந்த குற்ற சாட்டுகளை முன் வைத்தார்கள்.

அந்த வகையில் தான் அவர்கள் ஐங்கரநேசனின் மீது இந்த குற்றச்சாட்டுக்களை கொண்டு வந்து அவர்களே ஊழலை கண்டுபிடித்து அவரை தனியாக நீக்குவதற்கு மேற்கொண்ட செயற்பாடுகளில் தான் நாங்கள் முரண்பட்டோம்.

ஏனென்று சொன்னால் இந்த மாகாண சபையிலே இருக்கின்ற நான்கு அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகிய ஐந்து பேரும் ஒருமித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே ஒரு அமைச்சரை மட்டும் தனியாக ஊழல் மோசடி செய்கின்றார். என்ற பிரச்சினையை நாங்கள் கொண்டு வரகூடாது என்று நான் வாதாடினேன்.

அதற்கு அமைவாக எங்களுடைய கட்சியிலே அங்கம் வகிக்கின்ற அனைத்து அங்கத்தவர்களும் ஒட்டுமொத்தமாக எங்களுடைய கருத்துக்கு உடன்பட்டு நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் மோசடி விசாரணை செய்ய வேண்டும்.

ஒரு அமைச்சர் மீது மாத்திரம் விசாரணை செய்யவதை ஏற்க மாட்டோம் இதற்கு நாங்கள் உடன்படவும் மாட்டோம் என நாங்கள் எதிர்த்து நின்றோம்.

அந்தவகையில் தான் தனியாக அமைச்சர் ஐங்கரநேசனை விலக்க வேண்டும் என்று செயற்பட்ட இந்த தமிழரசு கட்சி உறுப்பினர்கள் இன்று தங்களுடைய கட்சியிலே இருக்கின்ற அமைச்சர்களையும் விலக்க வேண்டிய சந்தர்பத்திலே இருக்கின்றார்கள்.

இது அவர்களால் ஏற்பட்ட பிரச்சினை என்று தான் நான் கூற விரும்புகின்றேன். அமைச்சர்களுடைய மாற்றம் என்பது அமைச்சர்களுடைய ஊழல் மோசடி என்பது ஒரு தேவையில்லாத பிரச்சினை அவர்களே கொண்டு வந்து அவர்களே ஊழல் இல்லை பிரச்சினை இல்லை என்று திரும்பவும் வேறு விதத்தில் வாதாடிக்கொண்டிருக்கின்ற இந்த அங்கத்தவர்களுடைய செயற்பாடு என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.

ஆகவே நான் கூறுவது என்னவென்று சொன்னால் இந்த அமைச்சர்களுடைய செயற்பாடு உண்மையாகவே சரியோ, பிழையோ என்பதற்கு அப்பால் இனி வரும் காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்த நாங்கள் கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்காக என்ன நோக்கத்திற்காக வாக்களித்தார்களோ அந்த மக்களுடைய தேவைகளை இனங்கண்டு செய்வதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான்.

மக்கள் என்னுடன் இப்படியான ஆதங்கத்தை இரண்டு வாரமாக பகிர்ந்து கொண்டார்கள். இதனால் தான் நான் இப்படியாக ஒரு ஊடக சந்திப்பை ஒழுங்குபடுத்தினேன்.

தமிழரசு கட்சியில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் மற்றைய கட்சியில் இருக்கின்ற உறுப்பினர்களோடு இணைந்து எங்களுக்கு வாக்களித்த இந்த மக்களுக்கு நல்லதொரு செயற்பாட்டை செய்ய வேண்டும். நல்லதொரு வேலைத்திட்டத்தை செய்து மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு!!

 
வவுனியா சாளம்பைக்குளத்தில் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துமுகமாக இப்தார் நிகழ்வு நேற்று (20.06 )மாலை 5.30 மணிக்கு வவுனியா அல் அக்சா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர் றசூல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது சமூர்த்தி சமுதாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அதிதிகளாக வைத்தொழில் வணிபத்துறை அமைச்சரின் இணைப்பாளர் முத்து முகமது, பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பாடசாலையின் அதிபர், மார்க்க அறிஞர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என 500 க்கு மேற்பட்டோர் கலந்தகொண்டிருந்தனர்.

வவுனியாவில் நடைபெற்ற “என் மனத் துளிகள்” கவிதைநூல் வெளியீட்டுவிழா!!

 
பிரமிளா(லதா) எழுதிய “என் மனத் துளிகள்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணி முதல் 5.30 மணி வரை வவுனியா,குருமன்காடு பிறின்சஸ் ரோஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

​​தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக சிறி ரெலோ செயலாளர் நாயகம் ப.உதயராசா, சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா,வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர்.தயாபரன் கெளரவ விருந்தினர்களாக தமிழ் விருட்சம் செ.சந்திரகுமார், கலைஞர் மாணிக்கம் ஜெகன், வவுனியா ECBC ஸ்தாபகர் எஸ்.கிருஷ்ண்குமார், வவுனியா சர்வதேசப் பாடசாலை அதிபர் திருமதி.எலிசபெத் ஜேக்கப், USA வட பிராந்திய முகாமையாளர் J.கார்த்திகேயன், சேவா லங்கா நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.சபேஷன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.