வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதேசவாதக் கருத்துக்கள் : ப.சத்தியலிங்கம் கண்டனம்!!

தமிழ் பேசும் மக்கள் என்று ஒரு குடையில் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையை நிலைநாட்டவேண்டிய சூழ்நிலையில் பிரதேசவாத கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும்,

வவுனியாவில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் இவ்வாறான பிரதேசவாத கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இது கண்டனத்திற்குரியது.

தமிழ் மக்கள் கட்சி அரசியலுக்குள் அகப்பட்டு பிரிந்து நிற்பதே ஆபத்தானது. இந்த நிலையில் குறுகிய வட்டத்திற்குள் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது வருத்தமளிக்கின்றது.

இந்த கருத்து தொடர்பில் நேரடியாக எனக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் எனக்கு ஆதரவாக நடைபெற்றதாக சொல்லப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் எனது கண்டனத்தை வெளியிடுவது தார்மீக கடமையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையின் போது சிலர் பிரதேசவாத கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா..!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா எதிர்வரும் 01-07-2017 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

அன்றைய தினம் இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பன இடம்பெறும். அத்தோடு சிறப்பு நிகழ்வாக, தென்னிந்திய பின்னணி பாடகர்கள் ஹரிஹரசுதன் ( ஊதா கலர் ரிப்பன் பாடல் புகழ்), மற்றும் ஸ்வாகதா சுந்தர், கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன், இவர்களுடன் இலங்கையின் முன்னணிக் கலைஞர்களுடன் இலங்கையில் முதல்தர இசைக்குழுக்களில் ஒன்றான ஸ்ருதிலயா இசைக்குழுவின் இசையில் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான FULL HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அறிகுறிகள் ஆணிடம் கண்டால் பெண்கள் உடனே விலகி விடுவார்களாம்!!

உறவுமுறையில் தங்கள் துணையின் ஒரு சில நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்றால், பெண்கள் அவர்களை விட்டு பிரிந்துவிடுவார்கள். பெண்கள், ஆண்களை விட்டு விலகிப்போவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்,

ஆண்களிடம் இருந்து பெண்கள் விலகுவது ஏன்?

ஆண்கள் வாழ்க்கைக்கு உதவும், எதிர்காலம் பற்றிய திட்டம் இல்லாமல் இருந்தால், அவர்களை விட்டு பெண்கள் விலகி விடுவார்கள்.

எதுவாக இருந்தாலும், தன்னிடம் கூறிவிட்டு தான் செய்ய வேண்டும் என்ற நினைக்கும் ஆண்களை பெண்கள் வெறுப்பார்கள்.

தங்களின் துணையிடம் நேரம் செலவழிக்க மறுக்கும் ஆண்களிடம் இருந்து பெண்கள் விரைவில் விலகி விடுவார்கள்.
ஒரு ஆணின் பாதை வெவ்வேறு தவறான திசைகளை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிந்த எந்த ஒரு பெண்களும் அவர்களுடன் இருக்க மாட்டார்கள்.

தங்களின் துணை தன்னை விட்டு நீண்ட தொலைதூரம் சென்று விட்டீர்கள் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஏற்படும் போது, அந்த ஆணின் உறவை விட்டு விடுவார்கள்.

தனது துணையின் மீது ஆண்கள் அதிகமாக சந்தேகப்படும் உணர்வுகளை கொண்டிருந்தால், அப்போழுதே அந்த பெண் அவனை விட்டு போய்விடுவார்.

ஒரு ஆண் எங்கு சென்றாலும், தனது துணையிடம் மறைப்பது அல்லது வேறு பெண்களுடன் பழகுவதை அறிந்தால், அவர்களை விட்டு விலகி விடுவார்கள்.

காதலில் ஒருவர் மட்டுமே காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலை ஏற்படும் போதும், அந்த ஆண் மீது உள்ள நம்பிக்கை இழக்கும் போதும் பெண்கள் அவர்களை விட்டு விலகி செல்வார்கள்.

காதலை ஏற்க மறுத்த நடிகை : விஷம் குடித்த நடிகர்!!

கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட் நடிகை ரச்சனா தனது காதலை ஏற்க மறுத்ததால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்போது தனியார் மருத்துவமனையில் வெங்கட் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், தான் வெங்கட்டை காதலிக்கவே இல்லை என ரச்சனா கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, அவர் தற்கொலைக்கு முயன்றதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் அனைவரையும் என்னை குறை கூறுகிறார்கள்.

வெங்கட் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை வலியுறுத்தி வந்தார். நான் முடியாது என்றேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சேர்ந்து பங்கேற்றோம், அதை தவிர எங்களுக்கு இடையே எதுவும் இல்லை.

ஜோடி 2 நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் சேர்ந்து கலந்துகொண்டதன் மூலம் வெங்கட்டுக்கு என்னை பிடித்துள்ளது. அதற்கு முன்னர் ஒழுங்காகத்தான் இருந்தார் என கூறியுள்ளார்.

வெங்கட் தற்கொலைக்கு முயல்வதற்கு முன்னர் ரச்சனாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அப்போதும் ரச்சனா காதலை ஏற்க மறுக்கவே, பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

10 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்!!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது.

கேரள தினசரி ஒன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் கணவனை இழந்த இளம்விதவைக்கு மணமகன் தேவை என குறிப்பிட்டிருந்தது.

பெண்ணின் படமும் செல்போன் எண்ணும் தரப்பட்டிருந்தது. இளைஞர் ஒருவர் விளம்பரம் தந்திருந்த ஷாலினி என்ற பெண்மணியை தொடர்பு கொண்டார்.

ஷாலினியின் பேச்சில் மயங்கிய இளைஞர், கணவனை இழந்ததான் பெங்களுருவில் மென்பொருள் பொறியியலாளர் என்றும் விரைவில் கேரள நீதிமன்றத்தில் வேலை கிடைக்கப் போவதாகவும், அவர் கூறியதை நம்பினார்.

இதனிடையே தனக்கு உறவு என்று யாருமில்லை எனக்கூறி கண்ணீ்ர் சிந்திய ஷாலினி, கல்யாண நாளையும் குறிக்க வைத்தார். திருமணத்தில் மணமகன் வீட்டார் மட்டும் பங்கேற்றனர். அப்போது திருமணத்திற்கு வந்த ஒருவருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட, உடனே தன் நண்பருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.

வந்தவர் வேறு யாருமல்ல.. ஷாலினியின் கணவர். இதனையடுத்து காவல்துறையின் உதவியை நாடியுள்ளார் அந்த நபர். அவர்கள் ஷாலினியை விசாரித்தபோது இன்னும் பல அதிர்ச்சிகள் வெளியாகின.

ஷாலினி இதுபோன்று மணமகன் தேவை விளம்பரங்கள் மூலம் இதுவரை 10 திருமணங்களை செய்த விவரம் தெரியவந்தது.

விளம்பரத்தின் மூலம் இளைஞர்களை மயக்கி திருமணம் செய்துகொண்டு அன்றிரவே பணம் நகைகளுடன் எஸ்கேப் ஆகி விடுவது ஷாலினியின் வழக்கமாம்.

கடந்த 2014 ம் ஆண்டு நாயர் என்பவரை ஏமாற்றித் திருமணம் செய்த ஷாலினி தமிழகத்தில் பழனிக்கு தப்பிவந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பழனிக்கு வந்து போலீஸார் ஷாலினியை கைது செய்தனர்.

கேரளாவில் 5 இடங்களில் அவர் மீது திருமண மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சொகுசாக வாழ ஆசைப்பட்ட ஷாலினி இப்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இலங்கையில் 30 பேரின் உயிரை காப்பாற்றிய 65 வயதான நபர்!!

அண்மையில் இலங்கையின் தென் மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது 65 வயதான நபரினால் 30 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காலி, நெழுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தில் 30 பேரின் உயிரை, கே.எல்.தயானந்த என்ற 65 வயதுடைய நபர் காப்பாற்றியுள்ளார்.

வீடு மற்றும் சொத்துக்கள் நீரில் மூழ்கியன்று இரவு 12 மணி முதல் அதற்கு அடுத்த நாள் வரையில் சிறிய படகு ஒன்றை பயன்படுத்தி கிட்டத்தட்ட 30 பேரை தயானந்த காப்பாற்றியுள்ளார்.

குறித்த வெள்ளத்தில் தயானந்த உட்பட பலரின் வீடு நீரில் மூழ்கிய தினத்தன்று இரவு பலர் உயிருக்கு போராடியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், தயானந்த தனது சிறிய படகை பயன்படுத்தி 30 பேரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

தனது உயிரை பற்றி சிந்திக்காமல் தயானந்த செய்த வீர செயலுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலை சம்பவங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என கோரிக்கை!!

தற்கொலை செய்து கொள்வதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் ரயிலில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வது தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான சம்பவங்களுக்கு ஊடகங்கள் ஊடாக அநாவசிய பிரச்சாரங்கள் வழங்கப்படுவதனால், அவ்வாறான தற்கொலைகள் சமூகத்தின் மத்தியில் மேலும் பிரபல்யமடைவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு சிக்கல் மற்றும் பிரச்சனைகளினால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அவ்வாறான செய்திகள் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாராவது மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தில் ஆலோசனை சேவை பெற்றுக் கொள்வதற்கான நிலையங்கள், அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவுகளில் செயற்படுகின்றது. அவ்வாறான நிலையங்களுக்கு அவர்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு குறைவானவர்கள் அவ்வாறான சிக்கிலின் போது 1929 என இலக்கத்திற்கு அழைத்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மனோதத்துவ பிரிவின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் : விவசாய அமைச்சு!!

எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியமுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிற்குத் தேவையான அரிசியை தேவைக்கேற்ப பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்

நாட்டில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வறட்சி காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனால் எதிர்பார்க்கப்பட்ட அரிசி உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், மக்களின் நுகர்விற்கு தேவையான அளவு அரிசியை நாட்டின் விவசாயிகளிடமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கொள்வனவு செய்யவுள்ளதாக குறிப்பிட்டார்.

03 இலட்சம் மெற்றிக்தொன் அரிசி கொள்வனவிற்கான அனுமதி வாழ்க்கை செலவு தொடர்பான குழுவில் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதில் இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி தனியார் துறையூடாக நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் பக்டீரியாக்களை கொண்டு கட்டுப்படுத்தப்படுகின்றன : ராஜித!!

அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தீவிரமாக பரவியுள்ள டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் தொடர்பாக ஆராயவே அவர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள், அவுஸ்திரேலியாவில் வெற்றியளித்துள்ளன. இந்த நிலையில் இலங்கையிலும் அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தோனேசியா மற்றும் வியட்நாமிலும் இந்த திட்டம் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்

இந்த திட்டத்தின் மூலம் டெங்கு நுளம்புகள் பக்டீரியாக்களை கொண்டு கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழுக்கள்!!

முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கொழும்பு நகரில் மாத்திரம் 06 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது

இந்தக் குழுக்கள் ஊடாக முறையற்ற விதத்தில் குப்பை கொட்டுவோரை ஔிப்பதிவு செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வீ.கே அநுர தெரிவித்தார்

இதற்காக இராணுவம்,பொலிஸார் மற்றும் நகரசபை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நகரசபை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்

இதேவேளை குப்பைகளை பிரிவுகளாக பெற்றுக் கொள்ளும் செயற்பாடு ஆரம்பமானது முதல், கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு 650 டொன் வரை குறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் சுட்டிக்காட்டினார்,

என்னால் அவர் பற்றி புகார் செய்ய முடியவில்லை : ஸ்ரேயா!!

பிரகாஷ்ராஜ் பற்றி என்னால் குறை கூற முடியவில்லை என்று அவரது இயக்கத்தில் `தட்கா’ படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா கூறியிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கி நடித்த படம் ‘உன் சமையல் அறையில்’. இந்த படத்தை பிரகாஷ்ராஜ் இந்தியிலும் தயாரித்து இயக்குகிறார். ஆனால் நடிக்கவில்லை.

தமிழில் இவர் நடித்த வேடத்தில் நானா படேகர் நடிக்கிறார். சினேகா நடித்த பாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கிறார். ‘தட்கா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்தி படத்தில் அலிபாசல், டாப்ஸி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

‘உன் சமையல் அறையில்’ படத்துக்கு இசை அமைத்த இளையராஜாதான் ‘தட்கா’ இந்தி படத்துக்கும் இசை அமைக்கிறார். பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய ஸ்ரேயா, “நானும் பிரகாஷ்ராஜும் சேர்ந்து படங்களில் நடித்த போது, அந்த படங்களின் இயக்குனரை எங்களுக்குள் குறை சொல்லி பேசிக் கொள்வோம்.

இப்போது நான் நடிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜ் இயக்குனராக இருப்பதால் என்னால் அவரை குறை கூறவோ, அவர் பற்றி புகார் செய்யவோ முடியவில்லை. இந்த படத்தில் பணிபுரியும் துணை இயக்குனர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது” என்றார்.

பூமிக்குள் புதைந்திருந்த அதிசயம் கண்டுபிடிக்கப்பட்டது!!

 
அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலுமுள்ளது. தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி உள்ளது. மேலும் கண்ணாடி பீங்கான் உடைந்த பாத்திரங்கள், பாறை துகள்கள் மடாகல்கர், மாலைதீவுகள், யெமன் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்பாண்டங்கள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.

இதன் மூலம் இந்த நகரம் எத்தியோப்பியாவின் வர்த்தக மையமாக திகழ்ந்து இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

காதலை கைவிட மறுத்த நண்பனிற்கு நான்கு சிறுவர்கள் செய்த வேலை : மக்கள் பெரும் அதிர்ச்சியில்!!

காதலை கைவிட மறுத்த 16 வயது சிறுவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகிலுள்ள கஞ்சவாலா பகுதியை சேர்ந்த ஜடின் என்ற 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவனான குலாமின் தங்கையை காதலித்து வந்துள்ளான். தனது தங்கையை காதலிப்பதை நிறுத்திவிடுமாறு குலாம் பலமுறை ஐடினிடம் கூறியும் அவன் கேட்கவில்லை.

இதனால், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்று, என் தங்கச்சியை காதலிக்காதே என்று சொன்னால் கேட்க மாட்டியா, என்று கேட்டுவிட்டு ஜடினின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளான். சிறுவன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

பின்னர் இந்த சம்பவத்தை ஒரு நண்பரிடம் சொல்லி,கொலையாளியான சிறுவன் தப்பிக்க என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளனர். அந்த சிறுவன், பொலிஸ் உதவி ஆய்வாளரின் மகன் என்பதால், நான் இதனை எனது தந்தையிடம் தெரிவிக்கிறேன், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு தனது அப்பாவிடம் இந்த சம்பவத்தை கூறியுள்ளான்.

இதனைத்தொடர்ந்து, அந்த பொலிஸ் ஆய்வாளர், பாழடைந்த பங்களாவுக்கு சென்று, அங்கு பலியாகி இருந்த ஜடினின் உடலை கைப்பற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது, அந்த 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எதிர்கட்சித் தலைவர் வடக்கு முதல்வரை சந்தித்து பேசத் தயார்!!

வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலைமை தொடர்பாக வடக்கு முதல்வர் எதிர்கட்சித் தலைவருக்கு நேற்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதற்கான பதிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் வழங்கியுள்ளார். தங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

மேலும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தவிடயம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்து வடக்கு ஆதீனம் ஸ்ரீPலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் வண.பிதா.ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்க கூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.

நான் தற்போது தொலைபேசியில் கௌரவ வடமாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ளேன்.

அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பை மேற்கொண்டுள்ளேன். எல்லாம் நலமாகவே அமையட்டும்.

நாம் வெகுவிரைவில் சந்தித்தது பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்த்துள்ளேன்.

இரா. சம்பந்தன்

தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு

வெடிக்கும் புதிய சர்ச்சை : அவைத்தலைவராக சீ.வி.கே பதவி வகிக்க முடியாது?

மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக இருந்தால் அது அவைத்தலைவரிடமே கையளிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும், என்னுடைய விடயத்தில் அவைத்தலைவரே தானாக முன்வந்து, உறுப்பினர்கள் சிலரை தன் பக்கம் இழுத்துக்கொண்டு ஆளுநரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவருடைய செயல் சட்டத்திற்கு புறம்பானது. இவ்வாறு பக்கச் சார்பாக நடந்துகொண்ட அவைத்தலைவர் தொடர்ந்தும் அந்த பதவியில் நிலைத்திருக்க முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த விடயம் குறித்து எமது அனைத்து உறுப்பினர்களும் விவாதிக்க இருக்கின்றனர். அதன் அடிப்படையில் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றேன்.

இதேவேளை, வடமாகாண கல்வி அமைச்சர் தனது இராஜினாமா கடிதத்தை தருவதாக கூறியிருந்த போதிலும், இதுவரையிலும் இராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது : வடக்கு சுகாதார அமைச்சர்!!

கடந்த ஒருவார காலமாக வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று(19.06.2017) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு படாமல் ஒன்றாக இணைந்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் தன்னுடைய கருத்தையும், கூட்டமைப்பின் தலைவர்கள் பேசிய கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் கூட்மைப்பின் தலைவருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.