பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அழகி மரணம்!!

மொடல் அழகிகள் தங்கள் துறையில் நிலைத்து நிற்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர்.

ஆனால், இதன் வாழ்நாட்கள் சிறிது காலம் தான், இதனால் ஆபத்துக்கள் ஏற்படும் என்று தெரிந்திருந்தும், இளமை இருக்கும் வரையில் சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற ஆசையில் அதிகப்படியாக அறுவை சிகிச்சைகளை செய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

கனடாவில் உள்ள க்யூபெக் நகரை சேர்ந்த கிறிஸ்டினா மார்டெல்லி என்ற மொடல் அழகி, தனது அழகை அதிகரிப்பதற்காக 17 வயதில் இருந்தே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்ய ஆரம்பித்தார்.

கிறிஸ்டினா 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது தனது பொழுதுபோக்கு என்றவர் கிறிஸ்டினா. தன் உடல் வடிவத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லவே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என கூறினார்.

உதடு, முன்னழகு, பின்னழகை அறுவை சிகிச்சை செய்து பெரிதாக்கினார் கிறிஸ்டினா. மேலும், தன்னைப்போன்று மற்றவர்களும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், மீண்டும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையே அவரது உயிரை குடித்துவிட்டது.

ஆறு மாதங்களாக பேசிக் கொள்ளாத கோஹ்லி, கும்ப்ளே : வெளியான உண்மை!!

கடந்த ஆறு மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோஹ்லிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தைக் கூட இல்லை என தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையிலான கருத்து வேறுபாட்டின் உச்சமாக, அனில் கும்ப்ளே தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நேற்றைய முன்தினம் விலகியுள்ளார்.

இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அணித்தலைவர் கோஹ்லியும், கும்ப்ளேவும் கடந்த ஆறு மாதங்களாக முறையாக பேசிக்கொள்வதுக்கூட இல்லை என்ற தகவல் கசிந்துள்ளது.

கடந்த டிசம்பரில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் இவர்கள் இருவருக்குள்ளேயும் கருத்து பரிமாற்றம்கூட முறையாக இல்லாமல் போய்விட்டது என தகவல்கள் கூறப்படுகின்றன.

மேலும், தலைமை ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகியோர் கும்ப்ளேவின் ராஜினாமாவுக்கு இன்னும் முழுமனதாக தங்கள் ஒப்புதலை அளிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே பி.சி.சி.ஐ நிர்வாகிகளுடன் நேரில் பேசிய கும்ப்ளே, ‘விராட்டிடம் தமக்கு எந்த பிரச்னையும் இல்லை’, என கூறியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோஹ்லி, கும்ப்ளே இருவரையும் ஒரேநேரத்தில் அழைத்துபேசியபோதும் கூட சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதே கடைசிகட்ட தகவலாக உள்ளன.

சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்த சிறுமி மரணம்!!

 
சமீபகாலமாக சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்த சிறுமி, அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில் தலைவீங்கியதால் திடீரென மரணம் அடைந்தார்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ரோனா பேகம், ஹைட்ரோசெஃபாலுஸ் (Hydrocephalus) என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதனால் அந்தப் பெண்ணின் தலை 94 செ.மீ. (37 இன்ச்) வீக்கம் அடைந்தது.

இதனால் அச்சிறுமியின் தலையின் பாரம் தாங்க முடியவில்லை, சரியாக மூச்சுவிடவும் முடியவில்லை. 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நியூ மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்பட்டது.

ஆனாலும் அவருடைய பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை. விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்த சிறுமி திடீரென மரணம் அடைந்தார்.

இந்த சிறுமியின் புகைப்படம் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

அனாதையாக இறந்து கிடந்த நடிகர் : அருகில் விளையாடிக்கொண்டிருந்த மகன்!!

திருச்சியில் நாடக நடிகர் இறந்தது கூட தெரியாமல் அவரது இரண்டு வயது மகன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்த சின்னகோப்பாநாயக்கர்( 50) என்பவர் நாடக நடிகராக இருந்துள்ளார்.

இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரகூரில் முதல் திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாயக்கர் வேறு பிரிவை சேர்ந்த திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூரை சேர்ந்த மற்றொரு பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார்.

இதனால் நாயக்கரின் சொந்த கிராமத்தினர் நாயக்கரை தங்கள் சமுதாயத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளனர்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நாயக்கருக்கு 2 வயதில் மகன் உள்ளான், இந்நிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன்னர் இரண்டாவது மனைவி இறந்துவிட்ட காரணத்தால், தனது இரண்டு வயது குழந்தையுடன் இவர் வசித்துள்ளார்.

இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை நாயக்கர் தனது வீட்டில் படுக்கையில் படுத்தபடியே இறந்துகிடந்துள்ளார்.

இதனை அறியாத மகன் தின்பண்டங்களை சாப்பிட்டபடி அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அருகில் வசித்தவர்கள் கண்கலங்கியுள்ளனர்.

மேலும், வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்துகொண்ட காரணத்தால் இவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர், இதனைத் தொடர்ந்து அனாதை பிணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் சிறுவன் தவசுமணியை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவனை திண்டுக்கல் சிறு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மனைவியை 30 முறை கத்தியால் குத்திய கணவன்: அதிர்ச்சிக் காரணம்!!

மனைவி மீது சந்தேக பார்வை கொண்ட கணவர் அவரை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியை சேர்ந்தவர் வினோத். 43 வயதான இவர் திருமணங்களை ஏற்பாடு செய்யும் சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

வினோத்திற்கு தன் மனைவி மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு வேறு யாருடனும் தகாத உறவு இருக்குமோ என பலமுறை சந்தேகத்தில் குழம்பியிருக்கிறார் வினோத்.

இதுதொடர்பாக நேற்றிரவு தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்படவே மனைவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்திருக்கிறார் வினோத். ஆத்திரமும், சந்தேகமும் குறையாததால் தொடர்ச்சியாக 30 முறை கத்தியால் குத்திவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார் வினோத்.

அப்போது பக்கத்திலிருந்த அவரின் மகனுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இரத்த வெள்ளத்தில் கிடந்த தனது அம்மாவை மீட்ட வினோத்தின் மகன், அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆனால் ஏற்கனவே அப்பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை கொலை செய்த வினோத்தை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காதலியை மயக்க மந்திரவாதியாக மாறிய காதலன்!!

வயது மூத்த பெண்ணின் காதலை பெறுவதற்காக அவரை கடத்தி சென்று இரவு முழுவதும் வசியம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய இளம் பெண் ஒருவரை கடத்தி சென்று இரவு முழுவதும் வசியம் செய்த 21 வயதுடைய இளைஞர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த இளம் பெண் தொழிலுக்காக கொழும்பிற்கு சென்றுள்ள நிலையில் கொழும்பில் உள்ள பிரதேசம் ஒன்றில் தங்கியுள்ளார்.

தொழிலுக்கு செல்லும் போது அந்த பெண் குறித்த இளைஞரை சந்தித்துள்ளார். சிறிது காலம் செல்லும் போது இருவரும் காதலில் சிக்கியுள்ளனர்.

நிரந்தர தொழில் இல்லாத இளைஞர் அந்த பெண்ணிடம் தொடர்ந்து தங்க நகைகளை பெற்றுக் அடகு வைத்துள்ளார். இந்த செயற்பாடு தொடர்ந்த நிலையில், தனது காதலை முறித்துக் கொள்ள குறித்த பெண் தீர்மானித்துள்ளார்.

காதலியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் மந்திரவாதி ஒருவரை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்றுள்ளார்.

அந்த மந்திரவாதியின் ஆலோசனையை பெற்ற இளைஞர், தனது காதலியான குறித்த பெண்ணை கடத்தி சென்று வசியம் செய்துள்ளார். இந்த விடயம் தொடர்ந்து அறிந்து கொண்ட பொலிஸார், குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

100 ரூபாவுக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்பு : அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு!!

அனர்த்த நிலைமையிலான பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த விலையில் கடவுச்சீட்டினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் வெளிநாட்டு கடவுச்சீட்டு காணாமல் போயிருந்தால், புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பரிந்துரையின் படி, விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறைந்த விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டாலும், இதுவரை வெளிநாடு செல்லாத நபராக இருந்தால், அந்த நபரிடம் 100 ரூபாய் என்ற சாதாரண கட்டணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணம் ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரை மாத்திரம் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.

தற்போது காணப்படுகின்ற சட்டரீதியான நிலைமையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு செல்லுபடியாகும் காலப்பகுதி முடிவதற்கு முன்னர் காணாமல் அல்லது சேதமடைந்திருந்தால் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளும் போது 10000 ரூபாய் அறவிடப்படுகின்றது.

எனினும் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குறிப்பிடத்தக்க அளவு மக்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

41 பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த பேருந்து!!

 
சென்னையில் ஓடும் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் அதில் இருந்த 41 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து 41 பயணிகளுடன் சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது தீப்பிடித்தது.

இஞ்ஜினில் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. அதைக் கவனித்த ஓட்டுநர், சற்றும் தாமதிக்காமல் பேருந்தை நிறுத்தி, பயணிகள் அனைவரையும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டுள்ளார். பயணிகள் தூரத்தில் சென்றதும் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எறிந்துள்ளது.

ஓட்டுநரின் சமயோஜித நடவடிக்கையால், 41 பேருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத வகையில் பாரிய வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக பதிவாகி இருந்தது.

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, வரலாற்றில் முதல்முறையாக 155 ரூபாவைத் தாண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.

கண்டுபிடிக்கப்பட்டன வேற்றுக்கிரக உடல்கள் : வெளிவந்த புதிய ஆதாரம்!!

 
நாம் வாழும் பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர மனிதர்கள் வாழத்தகுந்த, நீர்நிலைகளையும் கொண்ட புதிய 10 கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அண்மையில் அறிக்கை விடுத்தது.

இதன் மூலம் வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

அதனைத் தொடர்ந்து பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆரம்பகாலத்தில் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகளின் வருகை காணப்பட்டு வந்ததாக ஆய்வாளர்கள் உறுதியாக தெரிவித்து வந்தனர்.

என்றாலும் கூட அதனை நிரூபிப்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் தேவைப்பட்டன. அதன்படி பூமி முழுவதும் சிதறிக் கிடக்கும் ஆதாரங்களை ஆய்வாளர்கள் திரட்டிக் கொண்டே வந்தனர்.

இவற்றில் தென்அமெரிக்காவில் காணப்படும் பெரு நாட்டில் உள்ள நாஸ்கா கோடுகள் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். இங்கு காணப்படும் சித்திரங்களும், தளங்களும் மனித நாகரீகம் தோற்றம் பெறுவதற்கு முன்னர் அதி உயர் தொழில்நுட்பம் கொண்டு அமைக்கப்பட்டவை.

அத்தோடு பூமிக்கு சொந்தமில்லாத தாதுக்களின் துகள்களும் இங்கு கண்டு பிடிக்கப்பட்டன. தொடர்ந்தும் இங்கு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் நேற்றைய தினம் இங்கு வேற்றுக்கிரகவாசிகளின் மம்மிகள் (பதப்படுத்தப்பட்ட உடல்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த உடல்கள் மனிதர்களைப்போன்று இல்லாது வித்தியாசமான எலும்பு அமைப்புகளைக் கொண்டு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மம்மிகள் மனித நாகரீகம் வளர்ச்சியடையாத காலகட்டத்திற்கு முன்னரான காலத்திற்கு உரியவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேற்றுக்கிரகவாசிகள் அமைத்ததாக கூறப்பட்ட நாஸ்கா தளத்தில் இவ்வாறு மம்மிகள் கண்டு பிடிக்கப்பட்டமை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக இது வரைக்காலமும் வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பை ஏற்றுக்கொள்ளாத பல ஆய்வாளர்களும் இப்போது கிடைக்கப்பெற்ற ஆதாரத்தினை வியப்பாக நோக்குகின்றனர்.

இந்த நிலையில் பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் ஓர் கலாச்சாரமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய தேவைகள் முடிந்த பின்னர் திரும்பிச் சென்று இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாசாவின் அறிக்கையைத் தொடர்ந்து இவ்வாறான பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் அண்மைக்காலமாக வேற்றுக்கிரகவாசிகள் குறித்து அதிகமாக செய்திகள் வெளிவருகின்றமையும், அவர்கள் மனிதர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்கின்றனர் எனவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

 

17 வயதில் ஐ.நாவை திரும்பிப்பார்க்க வைத்த ஈழத்துச் சிறுவன்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள 17 வயதான ஈழத்து சிறுவன் ஒருவர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில், ஈழத்தை சேர்ந்த 17 வயதான மாணவர் ஒருவரும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கொழும்பில் தீப்பற்றி எரிந்த மூன்று வாகனங்கள்!!

கொழும்பின் தெமட்டகொட வீதியில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றில் திடீரென தீ பற்றிக் கொண்டமையினால் மேலும் பல வானகங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தீ பற்றிய மோட்டார் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொட பொலிஸ் பிரிவின் தெமட்டகொட வீதி, தூய அந்தோனியார் மாவத்தையிலுள்ள தேவாலயத்திற்கு அருகில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீயினால் கார் மற்றும் வேன் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த நிலையில் தெமட்டகொட பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டி விபத்து : நால்வர் படுகாயம்!!

 
லிந்துலையில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியதில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தலவாக்கலை – டயகம பிரதான வீதியில், லிந்துலை வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது படுங்காயங்களுக்குள்ளாகிய நால்வரும் சிகிச்சைகளுக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து லிந்துலை பேர்ஹாம் தோட்ட பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்தததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடுமுழுவதும் அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

சுகாதார அமைச்சு வளாகத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 62 மாணவர்கள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுக்குள் நேற்று (21.06) மாலை பலவந்தமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களை அங்கிருந்து கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மாணவர்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் விசேட அதிரடிப் படை உறுப்பினர்கள் மூவரும், பொலிஸ் அதிகாரிகள் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவத்தில் 96 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்தியர்கள் சங்கம் இன்று காலை 8 மணிமுதல் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

பணிபகிஷ்கரிப்பை நிறைவு செய்யும் காலம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை வருகின்றது!!

இந்­திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இல­ங்கை வருகை தரவுள்­ளது. சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டியைத் தொடர்ந்து மேற்­கிந்­தியத் தீவுகள் செல்லும் இந்­திய அணி, அடுத்த மாதம் இலங்கை வருகை தர­வுள்­ளது.

இந்த விஜ­யத்­தின்­போது இரு­வகை பிர­தான கிரிக்கெட் தொடர்க­ளிலும் ஒற்றை சர்­வ­தேச இரு­பது 20 போட்­டி­யிலும் இலங்­கையை இந்­தியா எதிர்த்­தா­ட­வுள்­ளது.

இரண்டு அணி­க­ளுக்கும் இடையில் 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 26ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

முத­லா­வது டெஸ்ட் போட்டி கண்டி பல்­லே­க­லையில் ஜூலை 26 முதல் 30 வரை நடை­பெ­ற­வுள்­ளது. இரண்­டா­வது போட்டி காலி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் ஓகஸ்ட் 4முதல் 8ஆம் திக­தி­வரை நடை­பெறும். கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் ஓகஸ்ட் 12 முதல் 16ஆம் திக­தி­வரை நடை­பெறும்.

இதனைத் தொடர்ந்து 5 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டு அணி­களும் விளை­யா­ட­வுள்­ளன.

முத­லா­வது போட்­டியும் கடைசிப் போட்­டியும் ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் ஓகஸ்ட் 20ஆம், செப்­டெம்பர் 3ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளன.

இரண்­டா­வது போட்டி ரங்­கிரி தம்­புளை விளை­யாட்­ட­ரங்கில் ஓகஸ்ட் 24ஆம் திக­தியும் மூன்றாம், நான்காம் போட்­டிகள் பல்­லே­கலை விளை­யாட்­ட­ரங்கில் ஆகஸ்ட் 27ஆம், 30ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளன.

இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் செப்டெம்பர் 6ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்கை வரும் இந்திய அணி, கொழும்பில் ஜூலை 21ஆம், 22ஆம் திகதிகளில் நடைபெறும் 2 நாள் பயிற்சிப் போட்டியில் ஈடுபடும்.

இலங்கையரான மருத்துவ மாணவி வல்லுறவு : பங்களாதேஷ் இளைஞன் கைது!!

பங்­க­ளாதேஷ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயிலும் மருத்­து­வ­பீட மாண­வி­யான இலங்கை யுவதி ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் பங்­க­ளாதேஷ் இளைஞர் ஒருவரை அந்­நாட்டுப் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

சித்­தகொங் விஞ்­ஞானம் மற்றும் தொழில்­நுட்ப பல்கலைக்கழகத்தில் மருத்­துவ பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்­டு­வந்த இலங்கை மாண­வியே கடந்த ஞாயி­றன்று வல்­லு­ற­வுக்­குட்­­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பாக 26 வய­தான எம்.டி. ஆரிவ் எனும் இளை­ஞனை பங்­க­ளாதேஷ் பொலிஸார் திங்­க­ளன்று கைது செய்துள்­ளனர். இவர் சித்­தாகொங் நகரில் விற்­பனைப் பிர­தி­நி­தி­யாக பணி­யாற்­று­பவர் என பொலிஸார் தெரி­வித்­துள்னர்.

சித்­தாகொங் நகரின் குல்ஷி பகு­தி­யி­லுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு தன்னை ஆரிவ் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கடந்த திங்­கட்­கி­ழமை மேற்­படி மாணவி குல்ஷி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார் என பங்­க­ளா­தேஷின் டெய்லி ஸ்டார் பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.

தொலை­பேசி மூலம் மேற்­படி யுவ­தியும் ஆரிப்பும் அறி­மு­க­மா­ன­தா­கவும் ஜூன் 11 ஆம் திகதி முதல் இவர்கள் உரை­யாடி வந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி யுவ­தியை அவரின் விடு­திக்கு அரு­கி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு வரு­மாறு ஞாயிறு இரவு ஆரிவ் அழைத்தார். அந்த யுவதி ஹோட்­ட­லுக்குச் சென்­றபின், அங்கு வைத்து யுவ­தியை ஆரிவ் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆரிவ், சித்தாகொங் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது