வவுனியாவில் வடக்கு முதல்வருக்கு எதிராக கொடும்பாவி எரிக்கப்படும் : க.ஞானசீலன்!!

வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் க.ஞானசீலன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி என்ற வகையில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு நாம் எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

முதலமைச்சர் இரண்டு நீதிபதிகளையும், ஒரு அரச உத்தியோகத்தரையும் வைத்து இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தார்.

அந்த விசாரணை அறிக்கை சரிவர வெளிவந்த பின்பு அதாவது இரண்டு அமைச்சர்கள் குற்றமிழைத்தார்கள் என்றும், இரண்டு அமைச்சர்கள் நிரபராதிகள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அறிக்கையில் நிரபராதிகள் என தெரிவிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் ஒரு மாத கட்டாய விடுமுறையில் அனுப்புவதென்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.

நீதீபதிகள் அடக்கிய விசாரணைக் குழுவின் அறிக்கையை ஒரு நீதியரசர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நீதியான விசாரணை நடத்தப்படவில்லை என்பது தெளிவாக புலனாகின்றது.

எனவே வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் மீது வீன் பழியை முதலமைச்சர் சுமத்தியுள்ளார்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். விசாரணைக் குழுவின் அறிக்கையின் தீர்ப்பை அவர் சரியாக பார்க்கவில்லை. அவர் அரசியல் இலாபத்திற்காக செயற்பட்டுள்ளார்.

இதற்கு எமக்கு நீதி வேண்டும். கிடைக்காவிட்டால் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட குழு முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியில் குறித்த நபர் எந்த பதவியிலும் இல்லை என அவ் அணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அறிமுகமாவதற்கு முன்னரே முன்பதிவில் பட்டையைக் கிளப்பும் Huawei Honor 9!!

Huawei நிறுவனத்தின் ஸ்மார்ட் கைப்பேசிகள் ஏனைய முன்னணி நிறுவனங்களின் கைப்பேசிகளுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.

இந்நிறுவனம் தற்போது Huawei Honor 9 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிக்கான முற்பதிவுகள் இடம்பெறுகின்றன.

அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்தில் சுமார் 400,000 பேர் முற்பதிவு செய்துள்ளனர்.

5.15 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் Kirin 960 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் பிரதான டுவல் பிரதான கமெராவினைக் கொண்டுள்ளதுடன் அவற்றில் ஒன்று 12 மெகாபிக்சல்கள் உடையதாகவும், மற்றையது 20 மெகாபிக்சல்களை உடையதாகவும் காணப்படுகின்றது.

தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவினையும் கொண்டுள்ளது. மேலும் 3200 mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு : முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது : ஜி.ரி.லிங்கநாதன்!!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபையில் முதலமைச்சர் உரையாற்றிய போது தமிழரசுக் கட்சி வெளிநடப்பு செய்தது. ஆனால் எமது கட்சி மற்றும் ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்யவில்லை. ஊழல் விசாரணை தொடர்பில் முதலமைச்சர் எடுத்த தீர்மானம் சரியானது.

விசாரணைக்கு குழு போடப்பட்டு நான் சாட்சியமளித்து விசாரணை நடந்தது. அத்துடன் எனது வேலை முடிந்து விட்டது. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என்பது அரசியல் பிரச்சனை. எமது கட்சியாகிய புளொட் தான் முடிவெடுக்கும். அதற்கு தான் நான் கட்டுப்படுவேன்.

இருப்பினும் புளொட் நம்பிக்கையில்லா பிரரேணைக்கு ஆதரவு தெரிவித்தால் நான் தனித்து முடிவெடுக்க வேண்டி வரும். மக்கள் வழங்கிய ஆணையின் படி ஊழல் தொடர்பில் முதலமைச்சர் எடுத்த முடிவு சரியானது. அதற்காக நமபிக்கையில்லா பிரரேரணை கொண்டு வந்தால் எப்படி ஆதரவு வழங்குவது.

நான் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்வைத்திருந்த போது எனது கட்சி முதல் எதிர்த்தது. பின்னர் தான் புரிந்து கொண்டார்கள். தேவையேற்பட்டால் எனக்கு வாக்களித்த மக்களுக்காக தனித்தும் முடிவெடுக்க வேண்டி வரும் எனத் தெரிவித்தார்.

லண்டன் தீ விபத்தில் சிக்கிய பெண்ணின் கடைசி செய்தி : கண்ணீர் விட்டு அழுத தோழி!!

 
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் 27 மாடிகளை கொண்ட Grenfell Tower என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 1.15 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைத் தொடர்ந்து கட்டிடம் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீயை முழுவதுமாக அணைக்க 200 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள், கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதால் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை உருவாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் தற்போது வரை 12 பேர் பலியாகியிருப்பதாகவும். 70க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை தீயணைப்பு படையினர் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்தின் போது உள்ளூர் நேரப்படி சரியாக விடியற் காலை 2.54 மணி அளவில் Rania Ibraham (30), என்பவர் தன்னுடைய தோழியான Yaz-ற்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளார்.

மன்னித்து விடுங்கள், நான் விடைபெறுகிறேன்(Good Bye) என்று செய்தி அனுப்பியுள்ளார். இதைக் கண்ட அவரது தோழி உணர்ச்சி தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், Rania Ibraham-க்கு 5வயதில் பையன் மற்றும் 3வயதில் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவள் அங்குள்ள கட்டிடத்தின் 23வதும் மாடியில் வசித்து வருகிறார்.

இந்த தீ விபத்து சம்பவத்தால், அவள் தனக்கு ஒரு செய்தி அனுப்பினாள் அதைக் கண்டதும், தன்னால் அழாமல் இருக்க முடியவில்லை.

அதில் மன்னித்து விடுங்கள், நான் விடைபெறுகிறேன் என்று அனுப்பினால். அதன் பின் அவளைத் தொடர்பு கொண்ட போது நெட்வேர்க் பிரச்சனை காரணமாக அவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தன்னுடைய உயிர் நண்பன் அவள், அவளுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது என்று கண்ணீர் மல்க கூறினார். ஆனல் தற்போது வரை Rania Ibraham பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் துப்பாக்கி சூடு : 4 பேர் பலி, 5 பேர் காயம்!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் யு.பி.எஸ். கிடங்கு ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பலர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் யு.பி.எஸ். கிடங்கு மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தபட்டதாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டினை தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் பொலிசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மக்கள், அருகாமையிலுள்ள சக்கர்பெர்க் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள், மற்ற பாதிப்புகள் குறித்த முதற்கட்ட தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.

முன்னதாக விர்ஜினியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் டிரம்பின் குடியரசு கட்சி கொறடா ஸ்டீவ் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

சமீப காலமாகவே அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவது, மக்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் போட்டியில் சாதனை படைத்த மாணவி!!

 
ரொறொன்ரோ உயர்தர பாடசாலை மாணவி ஒருவர் கூகுள் கனடா ரோயல்டி கிரீடத்தை பெற்றுள்ளார்.

ரொறொன்ரோ மடோனா இரண்டாம் நிலை கத்தோலிக்க பாடசாலை மாணவியான ஜனா பனெம் இளம் கலைஞர்களிற்கான் Google Doodle டிசைன் வடிவமைக்கும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு பிரகாசமான எதிர்காலம் என்ற தலைப்பிலான வடிவமைப்பு புதன்கிழமை முகப்பில் இடம்பெறுகின்றது.

10,000 டொலர்கள் பல்கலைக்கழக நன்கொடை மற்றும் இவரது பாடசாலை மற்றும் மடி கணனிக்காக 10,000 டொலர்கள் மானியமாகவும் வழங்கப்படுகின்றது.

இப்போட்டியில் கலந்துகொண்ட மற்றய மூன்று மாணவர்களும் பரிசில்களை பெற்றுள்ளனர்.

லண்டன் கட்டட தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்!!

லண்டனில் உள்ள கிரென்ஃபெல் டவரில் ஆக்ரோஷமாக எரிந்த தீயில் இருந்து தன் குழந்தையைக் காப்பாற்ற முயன்ற தாய், அந்தக் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியெறிந்தார்,

யாராவது பிடித்துக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையி்ல். அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை.

கட்டடத்திற்குள் இருந்த பெண் ஒருவர், வெளியே கூடியிருந்த கூட்டத்தினரிடையே தான் தனது குழந்தையை கீழே போடப்போவதாக சைகை செய்ததாகவும், அவர் கட்டிடத்தின் 9 அல்லது 10வது மாடியில் இருந்திருக்கிலாம் என்றும் நேரில் கண்ட சமிரா லம்ரானி கூறியுள்ளார்.

கீழே போடப்பட்ட குழந்தையை ஆண் ஒருவர் ஓடிச்சென்று சரியான நேரத்தில் பிடித்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட கென்சிங்டனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பற்றிய தீயில் சிக்கி 12 பேர் கொல்லப்பட்டதாக இதுவரை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை உயரும் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.”

கட்டடத்தின் ஜன்னலோரம் வந்து நின்ற குடியிருப்பு வாசிகள் பதற்றத்துடன் கதவுகளை தட்டினார்கள், கூக்குரலிட்டார்கள்” என்று பிரஸ் அசோஷியனிடம் லம்ரானி தெரிவித்துள்ளார்.”

ஜன்னல்கள் சிறிதாக திறந்திருந்த பகுதியில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கீழே வீசப்போவதாக சைகை செய்தார்.

மேலும், தனது குழந்தையை யாராவது பிடித்துக் கொள்ள முடியுமா என்றும் கேட்டார். ஒரு நபர் உடனடியாக முன்னே சென்று கீழே வீசப்பட்ட குழந்தையை பிடித்தார்.

குழந்தையை வெளியில் வீசிய அந்தத் தாயின் நிலை பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் : வெளியான சிசிடிவி காட்சிகள்!!

 
அபுதாபியில் 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

அபுதாபியில் உள்ள மசூதி ஒன்றில் Azan Majid Janjua என்ற 11 வயது சிறுவன் ஒருவன் மதியவேளையில் பிரார்த்தனைக்காக சென்ற போது திடீரென்று மாயமானான். அதன் பின் அவன் கடந்த 31-ஆம் திகதி அரைநிர்வாணத்துடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.

அப்போது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது Azan Majid Janjua பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறுவன் மாயமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், கருப்பு நிற புர்கா அணிந்த மர்ம நபர் ஒருவர் Azan Majid Janju-ஐ அங்குள்ள லிப்டின் கீழே அழைத்துச் செல்கிறார். அதன் பின் அச்சிறுவனும் மர்ம நபர் பின்னரே செல்கிறான்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், Azan Majid Janju அழைத்துச் சென்றது நிச்சயமாக பெண்ணாக இருக்க முடியாது, அது கண்டிப்பாக ஒரு ஆண் தான் என்று கூறியுள்ளனர்.

மேலும் சிறுவனின் தந்தை Majid Janjua கூறுகையில், அன்றைய தினம் அவன் வேகமாக மசூதிக்கு பிரார்த்தனைக்கு செல்வதாக கூறிச் சென்றான், அதன் பின் அவன் மாயமானான்.

இதைத் தொடர்ந்து கடந்த 31-ஆம் திகதி தங்களுடைய கட்டிடத்திற்கு ஏசி டெக்னீசியன் ஒருவர் வேலைக்காக வந்திருந்தார்.

அவர் தான் கட்டிடத்தின் மேல் பகுதியில் Azan Majid Janju இருப்பதை கூறினார், நாங்கள் சென்று பார்த்த போது அரைநிர்வாணமாக கிடந்தான் என தெரிவித்தார். இதுதொடர்பாக பொலிசார் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் மிகப்பெரிய யானையை கொலை செய்த யானை!!

இலங்கையிலுள்ள மிகப்பெரிய யானை உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை வைத்தியர் தர்மகீர்தி தெரிவித்துள்ளார்.

யால தேசிய பூங்காவில் மிக பெரிய யானையாக கருதப்படுகின்ற திலக் என்ற யானை, கந்தலயா என்ற யானையை தாக்கியமையால் உயிரிழந்துள்ளது.

உயிரிழக்கும் போது அந்த யானைக்கு சுமார் வயதாகும் என வனவிலங்கு கால்நடை வைத்தியர் தர்மகீர்தி பிரதேச பரிசோதனை நடத்திய பின்னர் தெரிவித்துள்ளார்.

இந்த யானைக்கு அதிக வயது என்பதனால் தாக்குதலில் காப்பாற்றி கொள்வதற்கும், மீண்டும் தாக்குதல் மேற்கொள்வதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாக்குதலில் யானை வயிற்று பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அடித்துக் கொலை செய்யப்பட்ட நடிகை!!

பிரபல நடிகை கிரித்திகா சவுத்ரி இரும்பு ஆயுதத்தால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஹரித்துவாரிலிருந்து மும்பையின் அந்தேரி பகுதியில் குடியேறிய கிரித்திகா சவுத்ரி, பொலிவுட் படங்களில் நடித்துள்ளார். மொடலிங்கும் செய்து வந்தவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரது வீட்டிலிருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், தலையின் வலப்பக்கத்தில் யாரோ அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் கிரித்திகாவை கொலை செய்த நபர் உடல் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்க ஏசியை ஒன் செய்துவிட்டு வந்ததும் தெரியவந்தது.

யார் அவர் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவன் : காரணம் என்ன?

மனைவிக்கு வேறு நபருடன் கள்ளக்காதல் இருந்ததை அறிந்த கணவர் மனைவியை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், இவர் மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஈஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வேல்முருகன் ஈஸ்வரியை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று மாலை கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வேல்முருகன் ஈஸ்வரியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து பொலிசார் வேல்முருகனை கைது செய்தார்கள்.

 

பாலியல் வன்கொடுமையை ஓவியம் மூலம் நிரூபித்த 10 வயதுச் சிறுமி!!

கொல்கத்தாவில் சிறுமி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை வரைபடமாக நீதிபதிக்கு வரைந்து காட்டியதன் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர்.

தாயை இழந்த சிறுமி டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது இந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும்.

நெருங்கிய உறவினர் ஒருவர் சுமார் இரண்டு வருடங்களாக பலாத்காரம் செய்துள்ளார், இந்த சம்பவம் வெளியே தெரிந்தவுடன் இந்த சிறுமியை பலாத்காரம் செய்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இதுதொடர்பாக பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் என்பதாலும், அந்த சிறுமியின் பதில் தெளிவான முறையில் இல்லாத காரணத்தினாலும் குற்றவாளியை பிடிப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது.

இந்நிலையில், நடந்த சம்பவத்தை வரைந்து காட்டுமாறு நீதிமன்றம் அந்த சிறுமியிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி அச்சிறுமி அந்த ஓவியத்தில் கையில் பலூனுடன் ஆடையில்லாமல் நிற்கும் தன்னுடைய படத்தையும், கழற்றிய ஆடையைத் தனியாகவும், தன்னைச் சுற்றியிருந்த வீட்டின் படத்தையும் வரைந்தார்.

இந்த ஓவியத்தின் மூலம் சம்பவம் நடந்த இடம், சிறுமியின் உறவினர் வீடுதான் என்பதையும், அந்த வீட்டுக்குள் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

எனவே இந்த குற்றத்தில் ஈடுபட்ட அந்த நபருக்கு ரூ.10,000 அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

மேலும் சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு 3 லட்சம் நிலுவைத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.

 

இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்த லண்டன் நீதிமன்றம்!!

லண்டனில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் மிச்சம் என்ற பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அக் கருத்து முரண்பாடு இரு குழுக்களுக்கிடையிலான சண்டையாக மாறி மோதலாகியுள்ளது. இதன் போது லண்டனைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வந்தது.

இன்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில், இலங்கைச் சேர்ந்த பிரஷாத் சோதிலிங்கம் 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுகன் செல்வராசனுக்கு 14 ஆண்டுகளும், சிவாகரனுக்கு 31 மாதங்களும், விசுபரன் தயாபரன் 21 மாதம் என்ற அடிப்படையில் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சகோதர, சகோதரிகளின் உயிரிழப்பு துயரம் தாளாது அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை!!

 
ஒரே குடும்பத்தில் தொடர்ந்து மரணம். சகோதரிகள் இருவர் ஏற்கெனவே அரவம் தீண்டிமரணமடைந்துள்ள நிலையில் சகோதரன் திடீர் மாரடைப்பால் மரணமாக அந்தத் துயரம் தாளாதுஅண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வாகரைப் பிரதேசத்தைதுயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மட்டக்களப்பு வாகரை 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் லோகிதராணிதம்பதியினரின் குடும்பத்திற்கே இந்த தொடர்ச்சியான துயரம் இடம்பெற்று வந்துள்ளது.

இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அதில் இரண்டாவது மகளான மோகனராணி (வயது 16) என்பவர்உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும்போது 1996ம் ஆண்டு அரவம் தீண்டியதில் மரணமானார்.

அதன் பின்னர் அவரது தங்கையான ஷர்மிகா (வயது 09) என்பவர் அரவம் தீண்டியதில் 2001ம் மரணமடைந்தார்.

இவ்வாறிருக்கையில் கடந்த வியாழக்கிழமை இரவு (08.06.2017)‪ தெய்வேந்திரன்லோகிதன் வயது 23) தமது மாடுகளை பராமரிக்கச் சென்றவர் இரவு ஒன்பது மணியாகியும் வீடுதிரும்பாததால் அவரது சகோதரனான மோகனதரன் (வயது 28) என்பவர் மாடுகள் கட்டப்படும்இடத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது தம்பி உயிர் பிரிந்த நிலையில்விழுந்து கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட துயரம் தாங்காது தம்பி இல்லாத உலகத்தில் நான்வாழ மாட்டேன் எனக் கூறியவாறு மாடுகள் கட்டும் கயிற்றை எடுத்துக் கொண்டு ஓடியவர்அயலில் உள்ள நாவல் மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.

மயங்கிய நிலையில் காணப்பட்ட அவர் உடனடியாக வாகரை மற்றும் வாழைச்சேனைவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் மேலதிகசிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாக்கிழமை 13.06.2017சிகிச்சை பயனின்றி மரணமானார். இச்சம்பவங்கள் பற்றி வாகரைப் பொலிஸார்விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியானஉயிரிழப்புக்கள் வாகரைப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லண்டன் தொடர்மாடிக் குடியிருப்பு தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு : பலர் வைத்தியசாலையில்!!

 
லண்டன் தொடர் மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 65 இற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, வைூத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறும் 50 இற்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இதுபோன்ற நிலையிலுள்ள ஏனைய தொடர்மாடிக் குடியிருப்புக்களில் சோதனை நடத்தப்படும் என பொலிஸார் மற்றும் தீயணைப்புத்துறை அமைச்சர் நிக் ஹர்ட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேற்கு லண்டனில் தொடர் மாடிக் குடியிருப்பு கட்டடத்தில் தீப் பிடித்து, மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

லண்டனில் புதன்கிழமை (14) அதிகாலையில் பெரிதாக பரவிய இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பிடித்த நேரத்தில், நூற்றுக்கணக்கானோர் அந்தக் கட்டடத்தில் இருந்ததாகவும், பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது.

தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களே அவதானம் : டெங்கு காய்ச்சலால் 155 பேர் பலி!!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிகமான நோயாளர்களை கொண்டதாக இனங்காணப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான 6 மாத காலத்தில் 61 ஆயிரத்து 844 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் டெங்கு காய்ச்சலினால் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் இருந்த போதிலும் கொழும்பு, களுத்துறை, கம்பகா மாவட்டங்களில் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணம் அதிக இறப்புகளை கொண்ட மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.