குடித்து விட்டு தந்தை செய்த விபரீத செயல் : பரிதாபமாக உயிரிழந்த மகள்!!

இந்தியாவில் குடிபோதையில் தனது 4 வயது மகளுடன் பாலத்திலிருந்து தந்தை கீழே விழுந்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் மும்பையில் கல்போல் கிராமத்தில் வசித்து வருவபர் நிலேஷ் சத்வி(30), இவர் தனது மனைவி மற்றும் மகள் கெளரி (4) ஆகியோருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

திருமணத்தில் நிலேஷ் மது அருந்தியுள்ளார். பின்னர், அங்கிருந்து தங்கள் வீட்டை நோக்கி மூவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

கெளரியை தனது தோளின் மேல் தூக்கி வைத்து கொண்டு மது போதையில் தள்ளாடியபடியே நிலேஷ் சாலையில் நடந்து வந்துள்ளார்.

அப்போது 15 அடி கொண்ட பாலத்தின் மேல் அவர்கள் நடந்து சென்ற போது நிலைதடுமாறிய நிலேஷ், கெளரியுடன் பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த கெளரியின் மண்டை ஓடும், விலா எலும்பும் உடைந்துள்ளது, இதன்பின்னர் கெளரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகளுடன் கீழே விழுந்த நிலேஷ் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.

இதுகுறித்து கெளரியின் தாய் கூறுகையில், திருமண வீட்டில் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மூன்று நபரிடம் நிலேஷ் சண்டை போட்டார். பின்னர், அந்த கோபத்தில் கெளரியின் கழுத்தை நிலேஷ் நெரித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கூறிய பொலிசார், தற்போது இந்த வழக்கை விபத்தாக தான் பதிவு செய்துள்ளோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மற்றவைகளை கூற முடியும் என தெரிவித்துள்ளனர்.

கூடவே இரு என்று சொல்கின்ற அம்மாவின் பேச்சைக் கேட்க ஆசைதான் : திருநங்கை சாரா உருக்கம்!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாரா. இவர் அங்குள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

கேரள மாநிலத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சாரா.

பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் கேரளாவின் முதல் திருநங்கையாக அறியப்படும் சாரா இது குறித்து கூறுகையில், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த இடத்திற்கு வர நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். நான், அக்கா, அம்மா, தந்தை என அளவான குடும்பம். என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து, கல்யாண வயதில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறார்.

நான் என் வீட்டைவிட்டு பிரிந்து வந்து பல ஆண்டுகள் ஆகிறது. காரணம், அக்காவைக் கல்யாணம் செய்துகொடுத்த வீட்டில் என்னைக் கண்டாலே பிடிக்காது.

இவன் ஏன் இப்படி நடக்கிறான். இவன் ஏன் இப்படிப் பேசுகிறான் என்றெல்லாம் பேசிப் பேசி சங்கடப்படுத்தினார்கள். என் அக்காவுக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருப்பதால், யாருக்கும் சங்கடம் வேண்டாம் என வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன்.

வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் தங்கும் வசதி செய்துகொடுப்பார்கள். இப்போதுகூட எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்த விடுதியில்தான் இருக்கிறேன். அம்மா நினைவு வரும்போதெல்லாம் போன் செய்து பேசுவேன்.

வாரம் ஒருமுறை நேரில் சென்று பார்ப்பேன். நீ எங்ககூடவே இரு என்பார்கள். எனக்கு யாரையும் கஷ்டப்படுத்த விருப்பமில்லை.

கொஞ்ச நாள் போகட்டும், அப்புறம் வந்துவிடுகிறேன் என்று சமாளித்துவிடுவேன். அவர்களாலும் என்னைப் பிரிந்து இருக்க முடியவில்லை.

என்ன செய்வது இங்கிருக்கும் சமூக கட்டமைப்பு எங்களைக் கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறதே என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் எனக்கு ஒரு துணை வேண்டும். தற்போது, நான் நல்ல வேலையில் இருக்கிறேன். கை நிறைய சம்பாதிக்கிறேன். ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

இதுவரை நான் யாரையும் காதலித்தது இல்லை. இனி அப்படி நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், எனக்கான ஒருவர் இந்த உலகத்தில் இருப்பார்.

அவரை நான் நிச்சயம் கண்டுபிடிப்பேன். வாழ்க்கை முழுவதும் அவருடன் இருப்பேன் என்று நிச்சமாக கூறியுள்ளார்.

சடுதியாக உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலைகள்!!

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை மொத்த விற்பனை மரக்கறி சந்தைக்கு மரக்கறி வகைகள் விநியோகம் செய்வது குறைந்துள்ளது. இதனால் மரக்கறி வகைகளின் விலை சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

மலைநாட்டு மரக்கறி வகைகள் 40 வீதத்தினாலும், தாழ் நிலப்பகுதி மரக்கறி வகைகள் 20 வீதத்தினாலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சில மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை வருமாறு,

ஒரு கிலோ போஞ்சி 140 ரூபா
ஒரு கிலோ கத்தரிக்காய் 140 ரூபா
ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 ரூபா
ஒரு கிலோ கறி மிளகாய் 240 ரூபா
ஒரு கிலோ தக்காளி 70 ரூபா
ஒரு கிலோ கோவா 110 ரூபா
ஒரு கிலோ கரட் 270 ரூபா

என்ற அடிப்படையில் தம்புள்ள மரக்கறி சந்தையில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறி செய்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரக்கறி வகைகளை சந்தைக்கு விநியோகம் செய்வதிலும் பயிர்ச்செய்கையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் சில பகுதிகளில் மரக்கறி வகைகளின் விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பின்தள்ளிய இலங்கை : தொழில்நுட்பத்தில் புரட்சி!!

உலக இணைய வேகத்தில் இலங்கை 68 வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய இணைய நெறிமுறைகள் பதிப்பு 4ஆம் (IPv4) பிரிவில் இணையத்துடன் நொடியில் 8.5 மெகாபைட் (8.5 Mbps) வேகத்தில் இணைக்கூடிய இடத்தில் இலங்கை உள்ளது.

இது 21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமான தொழில்நுட்பத்தை தேடி செல்லும் பயணத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றியாக கருதப்படுகின்றது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பிராந்தியத்தின் அக்கமாய் டெக்னாலஜிஸ் நிறுவத்தினால் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 89வது இடம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகில் வேகமான இணைய சேவையை வழங்கும் நாடுகளில் தென்கொரியா முதல் இடத்தை பிடித்துள்ளது. நொடியில் 28.6 மெகாபைட் (28.6 Mbps) வேகத்தில் இணைக்கூடிய இடத்தில் தென்கொரியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரின் வடுக்களை சுமந்து நோர்வேயில் சாதனை படைத்த ஈழப் பெண்!!

 
போரின் வடுக்களை சுமந்து கொண்டு புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ள ஈழத் தமிழர்கள், பார் போற்றும் நபர்களாக மாறி வருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு நோர்வேயில் வாழ்ந்து வரும் ஹம்சிக்கா பிரேம்குமார் என்ற ஈழப் பெண் தனது வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

”இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது 1993ஆம் ஆண்டு நான் பிறந்தேன். எனது அப்பா சாவகச்சேரியை சேர்ந்தவர். அம்மா புன்னாலைக்கட்டுவன் கிராமத்தை சேர்ந்தவர்.

ஒரு குழந்தை இந்த பூமியில் பிறக்கும் போது எவ்வாறு அனைவராலும் வரவேற்கப்படுகின்றதோ, அதேபோன்று தான் நானும் வரவேற்கப்பட்டேன்.. ஆனால் வேறு வழியில்,

நான் பிறக்கும் போது மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றிலிருந்து எவ்வாறு உயிர் தப்புவது என்ற கவலைகளும் எண்ணங்களும் என்னை பெற்றவர்களுக்கு இருந்து கொண்டே தான் இருந்தது.

யுத்தத்தின் போது 1 லட்சம் பேர் உயிரிழந்தனர். அவர்களில் என்னுடைய அப்பாவும் உள்ளடங்குவார். எனவே எனது அம்மா என் இரு மூத்த சகோதரர்களுடன் இலங்கையை விட்டு வெளியேறினார்.

ஒரு நாள் எனக்கு நினைவிலிருக்கின்றது, “நான் பாடசாலை முடித்து வந்தேன். இரவு உணவு உண்பதற்காக எனது குடும்பத்துடன் தயாராகினோம். திடீரென ஓடி வந்த என் அம்மா, கையை இருக்கமாக பிடித்துக் கொண்டு நாற்காலிக்கு அடியில் எங்களை தள்ளினார். அப்போது தான் புரிந்துக் கொண்டேன் அச்சம் என்றால் என்ன என்பது பற்றி.

குழந்தைகள் அழுகின்றன, முதியவர்கள்,கர்ப்பிணிப் பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.

யுத்தம் எங்களுக்கு எவ்வித சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை. எனவே நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தோம். தற்போது நாம் அதிஸ்டமானவர்கள் என நான் உணர்கின்றேன்.

2001 ஆம் ஆண்டு எனது அம்மாவுடன் நான் நோர்வேயிற்கு அகதியாக வந்தேன். எங்கள் இருவருக்கும் தெரியாத நாடாகவே நோர்வே இருந்தது. உணவு மொழி என்பவற்றிலிருந்து முற்றிலுமே வேறுபட்டு இருந்தோம்.

இருந்தாலும், உயிர் அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பாக நிம்மதியாக இருந்தோம். பல வருடங்களுக்கு பிறகு முதல் தடவையாக நிம்மதியாக உறங்கினோம்.

அதே சமயம் எனது எட்டு வயதில் என் தந்தையை இழந்தேன். என் உடன்பிறந்தோருடன் சேர்ந்து வளர முடியாது என்ற பயம். ஆனால் நோர்வே எங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை கொடுத்தது.

மற்றவர்கள் போல ஒரு சாதாரண வாழ்க்கை வாழ வாய்ப்பு கிடைத்தது. கல்வி பெறவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அகதியாக வருகை தந்த நான் எனது வாழ்க்கையை கருத்திற்கொண்டு, அகதிகள் தொடர்பில் அறிந்து கொள்ள நினைத்தேன்.

அவர்களைச் சென்று பார்த்தேன். இன்னல்களுக்கு மத்தியில் வாழும் சிறுவர்கள் மற்றும் போர்வையின்றி, பாதணிகளின்றி இருக்கும் சிறுவர்களை பார்த்தேன்.

அவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்தவர்கள். தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலையில் வந்தவர்கள்.

அவர்களின் குடும்பத்தினர். எம்மை போல ஒரு சாதாரண வாழ்க்கையை விரும்புபவர்கள். தயவுசெய்து அவர்களை அகதிகள் என்று கருதாதீர்கள், மனிதர்களாக அவர்களைப் பாருங்கள்

உங்களால் உலகத்தை மாற்ற முடியாது, ஆனால் நீ உலகத்தை மாற்றியமைப்பாய், என்னைப் போல் சிலரும் இவ்வாறு உலகை மாற்றியமைப்பார்கள்” என உணர்வுபூர்வமாக குறித்த ஈழப் பெண் தனது வாழ்க்கை அனுபவம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த ஈழப் பெண், தற்போது மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வருவதுடன், நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

மேலும், பெர்கன் செஞ்சிலுவை அமைப்பு, நோர்வே புற்றுநோய் சமுதாயம், மற்றும் SOS குழந்தைகளின் கிராமங்கள் போன்ற பல்வேறு தன்னார்வ நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றார்.

காரில் மகளுடன் சாம்பலான பெற்றோர் : திடுக்கிடும் தகவல்கள்!!

தமிழகத்தில் ஆடிட்டர் உட்பட அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தீயில் எரிந்து சாம்பலான வழக்கில் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் கணக்காய்வாளர் ஜெயதேவன்(55). இவருக்கு ரமாதேவி என்ற மனைவியும், திவ்யஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் கடந்த 27-ஆம் திகதி காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே உள்ள இடத்தில் திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்ததுள்ளது.

இதில் ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகிய 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இதனால் இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பொலிசாருக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

திவ்யஸ்ரீக்கும், பதன்கோட்டில் இராணுவத்தில் தலைவர் பணியில் இருக்கும் சரத் என்பருக்கும் அண்மையில் திருமணம் நடந்துள்ளது.

அதன் பின்னர் இருவருக்கும் சண்டை சச்சரவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் பல்வேறு அவமானங்களை சந்தித்த திவ்யஸ்ரீ, அங்குள்ள மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட பொலிசார் திவ்யஸ்ரீயின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசும்படி அறிவுறுத்தி இருந்தனர். இதனால் ஜெயதேவன் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தருணத்தில் சுற்றுலா சென்ற அவர்களின் கார் தீப்பிடித்து எரிந்துள்ளதால், அவர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.

தற்போது இது கொலையாக இருக்கலாமா என்ற புதிய சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக திவ்யஸ்ரீ கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் சில தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் தீயில் கருகியபோது மூன்று பேருமே எந்த சத்தமும் கொடுக்கவில்லை. வெளியில் வரவும் முயற்சிக்கவில்லை.

என்னதான் தற்கொலை முடிவாக இருந்தாலும் தீ உடலில் பரவும்போது அலறுவார்கள். அந்த சாதாரண அலறல் கூட இவர்களிடமிருந்து வரவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கார் ஆடவில்லை, அசையவில்லை, ஒரு சத்தமும் கேட்கவில்லை.

இந்த சம்பவத்தால் இவர்கள் மூன்று பேரையும் கொன்று விட்டு யாரேனும் எரித்திருக்கலாம் என்று சந்தேக எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து பொலிசார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மண்ணில் மூழ்கிப் போன ஒரே குடும்ப உறுப்பினர்கள் : இறுதிசடங்கு செய்ய யாருமில்லா பரிதாபம்!!

இலங்கையின் தென் மாகாணத்தை உலுக்கிய இயற்கையின் சீற்றம் காரணமாக, பல்வேறு குடும்பங்கள் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.

பேரனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இன்னும் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்ததுடன், அவர்களுக்கான இறுதி சடங்கை ஒழுங்காக நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

இரத்தினபுரி அயகம, கொலபேவ கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த 7 பேரின் சடலங்களை புதைப்பதற்கு சவப்பெட்டிகள் இன்றி பொலித்தீன் பைகளில் சுற்றி புதைத்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் மற்றொரு நபரின் இறுதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஊடக நண்பர்களே சமய சம்பிரதாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எம்.எச்.குணவதி, ஆர்.ஏ.ருவன் நிஷாந்த, தருணி தத்சரிணி, ஆர்.ஏ.கயான் ஹிமிருவன், ஆர்.ஏ.பசிந்து தில்ஷான், சஜித் பிரியங்கர, பிரசங்கிஸா சமன் குமாரி மற்றும் அஜித் குமார மாலகே ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்களுக்காக அந்த பகுதி விகாரையில் விசேட மத வழிப்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மரங்களுக்கான நூலகம்!!

 
புத்­தங்­க­ளுக்­காக நூல­கங்கள் உள்­ளதைப் போல் மரங்­க­ளுக்­கா­கவும் நூல­கங்கள் உள்­ளன. மரங்­க­ளுக்­காக மரங்­களால் செய்­யப்­பட்ட நூல­கத்தை xylotheques என்று அழைக்­கி­றார்கள்.

Xylos என்றால் மரம் வாந­ங­ரந என்றால் களஞ்­சியம். புத்­தக வடிவில் மரத்­தா­லான பெட்­டி­களைச் செய் கிறார்கள். இந்தப் பெட்­டிக்குள் மரங்­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட இலை, பூ, காய், கனி, விதை, மரப்­பட்டை, வேர் போன்ற மாதி­ரி­களைச் சேக­ரித்து வைக்­கி­றார்கள்.

தாவ­ர­வியல் பெயர்கள், மரம் பற்­றிய குறிப்­புகள், ஏதா­வது நோய் தாக்­கி­யி­ருக்­கி­றதா போன்ற தக­வல்­க­ளையும் எழுதி வைத்­து­வி­டு­கி­றார்கள்.

வழக்­க­மான நூல­கத்தைப் போலவே மர அல­மா­ரி­களில் இந்த மரப்­புத்­த­கங்­களும் அழ­காக அடுக்கி, தலைப்­புகள் எழுதி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அமேரிக்காவின் யேல் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லுள்ள சாமுவேல் ஜேம்ஸ் மர­நூ­ல­கத்தில் 60 ஆயிரம் மரங்கள் குறித்த தக­வல்கள் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பெல்­ஜி­யத்தில் 57 ஆயிரம் மாதிரிகளுடனும் ஜேர்மனியில் 37 ஆயிரம் மாதிரிகளுடனும் மர நூலகங்கள் இயங்கிவருகின்றன.

ஆசிய மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் யாழ் மங்கை அனித்தா புதிய சாதனை!!

திய­கம மஹிந்த ராஜ­பக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்­ப­மான ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான இரண்­டா­வது திறன்காண் போட்­டியில் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த பெண்­க­ளுக்­கான கோலூன்­றிப்­பாய்தல் நட்­சத்­திரம் அனித்தா ஜெக­தீஸ்­வரன் உட்­பட மூவர் இலங்­கைக்­கான புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர்.

பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார்.

இதே மைதா­னத்தில் கடந்த மாதம் நடை­பெற்ற முத­லா­வது திறன்காண் போட்­டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலை­நாட்­டிய தனது சொந்த சாத­னையை அனித்தா முறி­ய­டித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் இஷார சந்­த­ருவன் 5.11 மீற்றர் உயரம் தாவி இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார். இதற்கு முன்னர் இவ­ரது சாதனை 5.10 மீற்­ற­ராக இருந்­தது.

ஆண்­க­ளுக்­கான குண்டு எறிதல் போட்­டியில் சரித் கப்­பு­கொட்­டுவ 17.55 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார். இவ­ரது முன்­னைய சாதனை 17.03 மீற்றர் தூர­மாக இருந்­தது.

ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்கு மேலும் ஐவர் தகுதி

திய­க­மவில் நடை­பெறும் திறன்காண் போட்­டி­களின் போது அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய ஐவர் ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான அடைவு மட்­டத்தை எட்­டி­யதன் மூலம் அப் போட்­டியில் பங்­கு­பற்றும் தகு­தியைப் பெற்­றுக்­கொண்­டனர்.

ஆண்­களில் வினோஜன் சில்வா (100 மீற்றர், 10.32 செக்.), ஜீ. எம். பிரே­ம­கு­மார (400 மீற்றர், 46.36 செக்.), எச். எம். டிலிப் ருவன் (400 மீற்றர், 46.41 மீற்றர்), தனூக்க லிய­ன­பத்­தி­ரண (நீளம் பாய்தல் 7.88 மீற்றர்), பெண்­களில் ருமே­ஷிகா ரட்­நா­யக்க (100 மீற்றர், 11.60 செக்.) ஆகி­யோரே ஆசிய மெய்­வல்­லுநர் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றவர்களாவர்.

ஏற்­க­னவே தகு­தி­ பெற்ற ஐவ­ருடன் இது­வரை மொத்தம் பத்து மெய்­வல்­லு­நர்கள் தகு­தி­ பெற்­றுள்­ளனர்.

காய்ச்சல் ஏன் வருகின்றது என்று தெரியுமா?

எம்முடைய வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கும், பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கும் திடீரென்று காய்ச்சல் வரும். நாமும் உடனே பாராசிட்டமல் மருந்தையோ அல்லது மாத்திரையையோ உடனடி நிவாரணமாக கொடுத்து சமாளிக்கிறோம். ஆனால் யாரும் காய்ச்சல் ஏன் வருகிறது என்று தெரிந்துகொள்வதில்லை.

ஒவ்வொருவரின் உடலின் வெப்பநிலை சராசரியாக 98,4 டிகிரி பாரன்ஹீட் இருக்கும். இதைவிட வெப்பநிலை அதிகமாகும் போது ஏற்படுவது தான் காய்ச்சல். ஆனால் காய்ச்சல் என்பது நோயல்ல. எம்முடைய உடலுக்குள் பக்டீரியா அல்லது வைரஸ் தொற்று நுழைவதே அறிவிக்கும் அறிகுறி தான் காய்ச்சல்.

இந்நிலையில் பெரியவர்களுக்கு இந்த வெப்ப நிலை 103 டிகிரி வரை உயர்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் சிறார்களுக்கும், பச்சிளங்குழந்தைகளுக்கும் இயல்பான வெப்பநிலையை விட சற்று உயர்ந்தாலும் தீவிர தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

ஜலதோஷம், அதிகப்படியான வெயில், உடலில் நீர்ச்சதது குறைவது, கட்டிகள், அதிகப்படியான வேலை,நிமோனியா, ஓர்த்தரைடீஸ், தீவிர இரத்த அழுத்தத்திற்கு பயன்படும் ஆன்டிபயாடீக் மாத்திரைகள், சைனஸ், சிறுநீரகத் தொற்று, ரத்தம் உறைவது போன்ற பல காரணங்களால் உடலுக்குள் உஷ்ணம் அதிகரிக்கலாம்.

அதே சமயத்தில் பருவ நிலை மாறும் போது நீரின் மூலம் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளின் தொற்று பரவுவது அதிகமாக இருக்கும். இதன் பாதிப்பாலும் காய்ச்சல் வரலாம். அதனால் பொதுமக்களுக்கும், சிறார்களுக்கும், பச்சிளங்குழந்தைகளுக்கும் காய்ச்சல் வந்தால் முறையாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை செய்து கொள்வதே சிறந்த பாதுகாப்பு

7 மாதக் குழந்தையை குழந்தை வரம் வேண்டி கொலை செய்த மந்திரவாதி!!

குழந்தை வரம் பெறவேண்டும் என்பதற்காக 7 மாதமான குழந்தையை மந்திரவாதி கடத்தி சென்று நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள செராய்கேலா-கர்ஸ்வான் மாவட்டத்தின் சாய்டா கிராமத்தில், சுபாஷ் என்பவரின் 7 மாத பெண் குழந்தையை, அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு குழந்தை இல்லை என்பதற்காக கடத்தி சென்று நரபலி கொடுத்த மந்திரவாதி மற்றும் குறித்த பக்கத்து வீட்டுக்காரர் என்போரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் கடந்த மாதம் கடத்தப்பட்ட 7 மாத குழந்தையை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை காணாமல் போன தினங்களில் குறித்த மந்திரவாதி மற்றும் பக்கத்துக்கு வீட்டுக்காரரான பதோய் என்போர் ஊரில் இல்லாமையை சந்தேகித்த பொலிஸார், மேற்கொண்ட தீவிர விசாரணையை தொடர்ந்து மந்திரவாதி குழந்தையை நரபலி கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பதோயின் வீட்டிலிருந்து குழந்தையை பலி கொடுக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, குழந்தையின் உடலை அருகிலுள்ள சுடுகாட்டிலிருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுவருவதாக குறித்த பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

விமானத்தை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய இலங்கையர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்!!

அவுஸ்திரேலியாவிலிருந்து மலேசியா நோக்கிப் பயணித்த விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்ட இலங்கையரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்து அவரின் வழக்கறிஞர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி பயணித்த MH 128 விமானத்தைத் தகர்க்கப் போவதாக குறித்த நபர் அச்சுறுத்தியுள்ளார்.

வெடிகுண்டு மூலம் விமானத்தை தகர்க்கப்போவதாகத் தெரிவித்து குறித்த பயணி அச்சுறுத்தியுள்ள போதிலும் அவர் கையில் இலத்திரனியல் உபகரணத்தை வைத்தே அச்சுறுத்தியுள்ளதாக மலேசிய பிரதி போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பயணி மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் விமானம் பாதுகாப்பாக மலேசியாவில் தரையிறக்கப்பட்டது.

குறித்த பயணி அதிக மது போதையில் இருந்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனர்த்தங்களால் 208 பேர் உயிரிழப்பு : 92 பேர் காணாமற்போயுள்ளனர்!!

வௌ்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட 65 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த 208 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 92 பேர் காணாமற்போயுள்ளதுடன், 72 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆறு இலட்சத்து 77 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!!

 
முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திராதிகள் உதவியுடன் அந்த பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது.

இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் மீனவர்கள் கருத்து வெளியிடுகையில்,

மக்களை வாழவைக்கும் இந்த நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர்மட்டம் தற்பொழுது மிகக்குறைவடைந்துள்ளது.
தொடரும் வெப்பநிலை அதிகரிப்பினால் மீன்கள் இறந்துள்ளன. இதனால் எமது சிறு கடற்றொலில் பாதிப்படைந்துள்ளது.

குறித்த நந்திக்கடலில் தேங்கியுள்ள சேற்று மண்ணை அகற்றுவதன் மூலம் மழைக் காலத்தில் அதிகமான மழைநீரை தேக்கிவைக்க முடியும். இது தொடர்பாக அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து ஆழ்கடல் மீன்களை கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புகையிரத நிலைய வீதி புனரமைப்பு மந்தகதியில் : வர்த்தகர்கள் விசனம்!!

 
வவுனியா புகையிரத நிலைய வீதி புனரமைப்பு மந்தகதியில் நடைபெறுவதால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி வர்த்தகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வவுனியா நகரத்திற்கும் குருமன்காட்டிற்கும் இடையிலான புகையிரத நிலைய வீதி பல வருடங்களுக்கு பின்னர் கடந்த வருடத்தில் இருந்து திருத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இத் திருத்த வேலைகளின் போது வீதியின் இரு மருங்கிலும் வெட்டப்பட்ட கால்வாய்கால் பூரணப்படுத்தப்படாது காணப்படுகின்றது. ஒரு வாரத்திற்குள் வெட்டப்படும் கால்வாய்கள் மூடப்பட்டு பாவனைக்கு விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் சில இடங்களில் இரண்டு மாதங்களுக்கு மேலாக வெட்டப்பட்ட வடிகான்கள், கால்வாய்கள் பூரணப்படுத்தப்படாது காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வீதியோரத்தில் அமைந்துள்ள தமது வர்த்தக நிலையங்களுக்கு தமது வாடிக்கையாளர்கள் வர முடியவில்லை எனவும், இதுவரை பூரணப்படுத்தப்படாத வடிகால்களால் 5 வரையான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பல முறை தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபையை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிலாவில் நட்சத்திர விடுதிக்குள் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் பலி!!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நட்சத்திர விடுதிக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

நட்சத்திர விடுதிக்கு அந்நபர் தீ வைத்ததுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார்.

பின்னர், தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் சடலம் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதிக்குள் இருந்து 36 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

புகைமூட்டத்தால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதே உயிரிழப்பிற்குக் காரணமாகும்.

இது தீவிரவாதிகளின் தாக்குதல் இல்லை என்றும் கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர் விடுதிக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CCTV கெமராவில் பதிவாகியுள்ள அந்த நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்