இந்தியாவில் அரசு மருத்துவமனை சார்பில் அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தரப்படாததால் மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் பைக்கில் கொண்டு சென்ற கணவரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷங்கர் ஷா (60) இவர் மனைவி சுசீலா தேவி (50) இவர்களுக்கு பப்பு (32) என்ற மகன் உள்ளார்.
ஷங்கரும், பப்புவும் பஞ்சாப் மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சுசீலாவுக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
பின்னர், சுசீலா மருத்துவமனையில் சேர்க்கப்பட சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
பின்னர், சுசீலாவின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல இலவசமாக அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்து தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஷங்கர் ஷா கேட்டுள்ளார்.
அதற்கு, அமரர் ஊர்தி இல்லை என கூறிய நிர்வாகம் சொந்த பணத்தை செலவழித்து தனியார் அமரர் ஊர்தியில் கொண்டு செல்லும் படி வலியுறுத்தியுள்ளது.
வெளியே வந்து விசாரித்த போது தனியார் ஊர்திக்கு, 2,500 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். அந்த அளவுக்கு பணம் இல்லாததால், மனைவியின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்றுள்ளார் ஷங்கர் ஷா.
மகன் பப்பு பைக்கை ஓட்ட, மனைவியின் சடலத்தை பின்னால் ஷங்கர் பிடித்து கொண்டுள்ளார்.
இதனிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கழிப்பறையில் வாழ்க்கை நடத்தும் குடும்பம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
பொலன்னறுவை, பராக்கிரமபாகு சமுத்திரம், பத்தினி கோவிலுக்கு அருகில் உள்ள கழிப்பறையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகின்றது.
குறித்த குடும்பம்,அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பறையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் கிடைக்கும் பணத்தில் அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
கழிப்பறையில் வாழ்க்கை நடத்துவதனால் சமூகத்தில் தாழ்த்தப்பட்டுள்ள அவர்களுக்கு கூலி வேலை செய்வதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
வீடமைப்பு திட்டத்தின் ஊடாக இந்த குடும்பத்திற்கு வீடு ஒன்றை கட்டித்தருவதாக வாக்குறுதியளித்த போதிலும் இதுவரை கட்டிகொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்காக வந்த நபர்கள் போலி மனித வெடி குண்டுடனான ஜெகட் அணிந்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நகரத்தின் பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டனில் உள்ள இலங்கை ஊடகவியலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
லண்டனில் இடம்பெறும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கு அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தால் இலங்கையர்கள் பலருக்கு பாரிய பாதுகாப்பு ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த தாக்குதல் காரணமாக இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தனது நண்பர்களுக்கு உதவி செய்ய பிரித்தானிய பெண்ணொருவர் முன்வந்துள்ளார்.
தனது நண்பர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்ய நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
Miriam Agat என்ற பிரித்தானிய பெண்ணே, தனது நண்பர்களுக்கு உதவி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக அவர் ஒரு வலைத்தள பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடாக நிதி உதவி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார். அந்த பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் “நான் கடந்த வருடம் இலங்கைக்கு சென்ற போது பல வித்தியாசமான நண்பர்களை கண்டுபிடித்தேன்.
நான் உண்மையிலேயே அங்கு அன்பானவர்களை சந்தித்தேன். அவர்கள் தற்போது ஏற்பட்ட கொடூரமான வெள்ளப்பெருக்கிற்கு பின்னர் போராடி வருகின்றார்கள்.
நான் அங்கு சந்தித்த நண்பர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். அங்கு மின்சாரம் துண்டுடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.. வீட்டை விட்டு இடம்பெயர்ந்த எனது நண்பர்களுக்கு உதவ வேண்டும்.
அதற்காக நிதி சேகரிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். தேவைகள் உள்ளவர்களுக்கு உதவ முடிந்தவர்கள் தங்கள் உதவிகளை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன்.
சிறிய உதவிகளை கோரியுள்ளவர்களுக்கு நாம் உதவுவோம். நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது எனவும் 78 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் காயமடைந்துள்ள 72 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ்வனர்த்தத்தினால் 600,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 25000 க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நிலையம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள London Bridge station பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. இதனால் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கையில், அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு வேன் மக்கள் மீது மோதியதாகவும், அதன் பின் அந்த வானில் இருந்த மர்ம நபர் மூன்று பேர் கையில் பிளேடுகள் மற்றும் கத்தியுடன் கீழே இறங்கி அங்கிருந்த மக்கள் மீது கத்தியை வைத்து குத்தியதாகவும் கூறப்படுகிறது.
கத்தியை வைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால், அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து ஓடியுள்ளனர்.
மேலும் அந்த மர்ம நபர்கள் பயன்படுத்திய கத்தியின் அளவு 12- அங்குலம் இருக்கும் என்றும், இந்த கொடூர தாக்குதலால் மூன்று பேர் தொண்டையில் பலத்த காயங்களுடன் இரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென்று நடந்த சம்பவத்தால் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்கு ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்திருப்பவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
அப்பகுதியில் உள்ள போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அப்பாலத்தை பொலிசார் மூடியுள்ளனர். அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடுமோ என்று அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் இது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில், மான்செஸ்டர் பகுதியில் திவீரவாதி ஒருவன் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 22-பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தியாகராயநகர் பகுதியில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதன் உரிமையாளர் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்ட பின்னர், அங்கு தீபாவளிக்குள் புதிய கட்டிடம் கட்டப்படும். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை 200 கோடிக்கு காப்பீடு செய்து வைத்திருந்தோம்.
இந்தக் கடையில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் வரை பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேறு கிளைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்று சென்னை சில்க்ஸ் உரிமையாளர் கே.மாணிக்கம் தெரிவித்தார்.
சென்னை சில்க்ஸ் கட்டட வளாகத்தில் இருந்த, பிரம்மாண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டியினால், அக்கட்டிடத்தை இடிக்கும் பணி பல மணிநேர தாமதத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டியின் மீது கிரேன், பொக்லைன்களை ஏற்றி கட்டடத்தை இடித்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இதையடுத்து, தரைகீழ் தண்ணீர் தொட்டியின் மேற்பகுதியை உடைத்து, அந்த தொட்டியின் பள்ளமான பகுதியை நிரப்பும் பணி காரணமாக, கட்டிடத்தை இடிக்கும் பணி திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 19 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.
கட்டிடம் இடிக்கும் பணிக்காக ஜாக் கட்டர் உள்பட 4 கிரேன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கட்டிடத்தை இடிக்கும் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், ஒரு நேரத்தில் ஒரு இயந்திரம் மட்டுமே பணி செய்ய முடிந்தது.
இதில் ஜாக் கட்டர் இயந்திரம் மட்டும் சுமார் 85 அடி உயரம் வரை பணி செய்யும் திறன் கொண்டது. இந்த இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 20 ஆயிரம் கட்டணமாக வழங்கப்படுகிறது.
கட்டட இடிப்பு பணிக்காக தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் 75 பேர், சென்னை சில்க்ஸ் வளாகத்தில் முகாமிட்டிருந்தனர். பாதுகாப்புக்காக, 300 போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட சென்னை சில்க்ஸ் ஊழியர்களும் கட்டிட இடிப்பு பணிகளில் உதவி வருகின்றனர்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் சுமார் 250 கிலோ தங்கநகை, ரூ.30 கோடி மதிப்புள்ள வைர நகைகள், செவ்வாய்க்கிழமை வசூலான பணம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
தீ விபத்து, கட்டிட விபத்து என எத்தகைய சூழ்நிலையையும் தாக்கும் வகையில் இந்த பெட்டகம் வடிவமைக்கப்பட்டதாகும். இதனால் தற்போது ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாக இப்பெட்டகம் பாதிக்கப்பட்டிருக்காது என கருதப்படுகிறது.
மேலும், கட்டிடத்தை முழுமையாக இடித்த பின்பே பாதுகாப்பு பெட்டகத்தை அங்கிருந்து மீட்பது என காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியதையடுத்து, அங்கிருந்து அதிகப்படியான கட்டிட தூசு வெளியேறியது. இந்த தூசு அந்தப் பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினையும், கண் எரிச்சலும் ஏற்பட்டது.
இதனால் சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்பு பணி நடைபெறும் பிஞ்சால சுப்ரமணியம் தெருவிலும், வடக்கு உஸ்மான் சாலையிலும், மருத்துவ உதவிக்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என 15 பேர் அடங்கிய இக்குழுவினர், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த மருத்துவக் குழுக்களிடம் இடிபாடுகளில் இருந்து கிளம்பும் தூசியிலிருந்து காத்துக்கொள்ள முகமூடிகள், காயத்துக்கான தடுப்பூசிகள், கண் எரிச்சல், தோல் அரிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன
பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஓடும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொடி மெனிக்கே ரெயிலில் பாய்ந்தே மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பேராதனை பகுதியில் வைத்து நேற்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரெயிலில் பாய்ந்தே அவர் தற்கொலை செய்துள்ளார். உயிரிழந்த மாணவி பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
195 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் கட்டியமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை போக்குவரத்து மற்றும் பயணியர் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த 16 ஜனவரி 2017 வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.
இதில் 13 பஸ்கள் மாகாணங்களுக்கிடையிலான சேவையிலும் 21 பஸ்கள் உள்ளூர் சேவையிலும் ஈடுபடத்தக்க வகையில் A9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில நாளாந்தம் 100 பஸ்கள் வந்து செல்லத்தக்க வகையில் நவீன முறையில் இந்த பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சாரதி, நடத்துனர்களுக்கிடையிலான ஏற்ப்ட்ட கருத்து முறன்பாடுகள், மோதல்கள் காரணமாக புதிய மத்திய பேரூந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
கடந்த 26 ஆம் திகதி வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 09 ஆவது அமர்வு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் மன்னாரில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
கடந்த 15 ஆம் திகதி பல்வேறு சட்ட ஒழுங்குகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாகாணத்திற்குள் சேவை வழங்குகின்ற இலங்கை போக்குவரத்து சபையினருக்கு 40% மும் தனியார் பேருந்துகளுக்கு 60% ம் என்ற வகையில் பேரூந்து சேவைகளை ஒழுங்குசெய்யவும், அதனடிப்படையில் இணைந்த நேர அட்டவணையை தயார்செய்து அமுல்படுத்துவது தொடர்பில் விசேட ஏற்பாடுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும்,
அத்தோடு இவற்றை மீறுகின்ற தரப்பினருக்கு எதிராக 10,000/= ரூபாய் தண்டப்பணமும் அல்லது இரண்டுவருட சிறைத்தண்டனை வழங்கவும் அல்லது இரண்டு தண்டனைகளையும் அனுபவிக்கநேரிடும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் தலமைக்காரியாலயம் மற்றும் இ.போ.சபையின் வடபிராந்திய அலுவலகத்தின் வேண்டுகோளிற்கு இனங்க இ.போ.சபையின் பேரூந்துகள் நேற்று (03.06.2017) முதல் புதிய பேரூந்து நிலையத்தில் சேவையினை ஆரம்பித்துள்ளது.
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள இ.போ.ச சபையின் பேரூந்து நிலையத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புதிய மத்திய பேரூந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.
எனினும் தனியார் பேரூந்துகள் புதிய மத்திய பேரூந்து நிலையத்தில் சேவையினை வழங்கவில்லை என இ.போ.ச ஊழியர்களினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் போக்குவரத்தின் சங்கத்தின் தலைவர் ராஜேஸ்வரனிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,
இ.போ.சபையின் அனைத்து பேரூந்துகளும் புதிய மத்திய பேரூந்து நிலையத்திற்கு செல்வதில்லை எனவும் இவ்விடயம் தொடர்பாக தற்போது வன்னி பிராந்தி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கூட்டம் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
எனினும் புதிய மத்திய பேரூந்து நிலையத்தில் பயணிகள் எவரும் இல்லாமல் தற்போது புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையின் பேரூந்துகள் சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் நேற்றுடன் (03.06.2017) 100 நாட்களை நிறைவுசெய்தது. இன்று 101 வது நாளாக போராட்டம் தொடர்கின்றது.
100வது நாளை முன்னிட்டு நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் எனத் தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை நேற்று (03.06.2017) மதியம் 12 மணியளவில் மேற்கொண்டனர்.
வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர்.
ஊர்வலத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் அமெரிக்கா தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் தமிழர்களாகிய நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகிறோம், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தனது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும், அமெரிக்கா தமிழர் தாயகத்திற்கு வந்து எமக்கு எப்போதும் உதவியளிக்க வேண்டும், எமக்கு அமெரிக்கா மட்டுமே நீதியை பெற்றுத் தர முடியும் என அமெரிக்காவின் இலட்சனை பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைக் கோரிய கொடியும் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை, தமக்கு நீதி கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர். இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஊர்வலத்தில் அவர்கள் கலந்து கொள்ளது திரும்பிச் சென்று விட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ‘ நாம் அமெரிக்காவின் உதவியைக் கோருகிறோம்’ என எழுதப்பட்ட பதாதைகள், மற்றும் அமெரிக்க கொடியை ஏந்தியவாறு ஊர்வலத்தை மேற்கொண்டமையால் அவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இடம்பெறுவதால் தாம் கலந்து கொள்ள வில்லை என மக்கள் பிரதிநிதிகள் சிலர் ஊடகவியலாளிடம் தெரிவிருந்தனர்.
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் நேற்று (03.06.2017) 100வது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பெருட்படுத்தாது தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிவநேசன், தியாகராஜா ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது தீர்வு கிடைக்கும் வரை இச் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று (03.06.2017) மதியம் 12.00மணியளவில் மேற்கொண்டனர்.
வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 100 ஆவது நாளை அடைந்தது.
இதனை முன்னிட்ட வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர்.
ஊர்வலத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் அமெரிக்கா தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் தமிழர்களாகிய நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகிறோம், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தனது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும், அமெரிக்கா தமிழர் தாயகத்திற்கு வந்து எமக்கு எப்போதும் உதவியளிக்க வேண்டும், எமக்கு அமெரிக்கா மட்டுமே நீதியை பெற்றுத் தர முடியும் என அமெரிக்காவின் இலச்சனை பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைக் கோரிய கொடியும் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை, தமக்கு நீதி கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர். இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஊர்வலத்தில் அவர்கள் கலந்து கொள்ளது திரும்பிச் சென்று விட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ‘ நாம் அமெரிக்காவின் உதவியைக் கோருகிறோம்’ என எழுதப்பட்ட பதாதைகள், மற்றும் அமெரிக்க கொடியை ஏந்தியவாறு ஊர்வலம் மேற்கொண்டமையால் அவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இடம்பெறுவதால் தாம் கலந்து கொள்ள வில்லை என மக்கள் பிரதிநிதிகள் சிலர் ஊடகவியலாளிடம் தெரிவிருந்தனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் இன்று (03.06.2017) மதியம் 1 மணியளலில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
லக்சபானா வீதியிலிருந்து வவுனியா புகையிரத நிலையம் நோக்கி நால்வரை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக முச்சக்கரவண்டியின் சாரதியிடம் வினாவிய போது, லக்சபான வீதியிலிருந்து புகையிரத நிலையம் நோக்கி பயணித்தேன். கடும் காற்று வீசியதால் முச்சக்கரவண்டி எனது கட்டுப்பாட்டை இழந்து குளக்கட்டில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது எனத் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்கடந்த 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் மகோற்சவகுரு சிவஸ்ரீ செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது .
கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற உற்சவநிகழ்வுகள் தொடர்பான காட்சிகள் ..
அமெரிக்காவைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாகச் சொல்லும் போட்டியின் பரபரப்பான இறுதி சுற்றில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் அனன்னயா(12). இவர் ஒரு இந்திய வம்சாவளி சிறுமி ஆவார்.
இந்நிலையில் அனன்யா வாஷிங்டனில் நடைபெற்ற Cripps National Spelling Bee எனப்படும் ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாகச் சொல்லும் போட்டியில் பங்குபெற்றுள்ளார்.
இப்போட்டியில் பங்கு பெற்ற அவர் பல போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதிச்சுற்றில் அனன்யா, ஓக்லஹோமாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ரோஹன் ராஜீவ்வுடன் மோதியுள்ளார்.
இருவரும் பெரும்பாலான வார்த்தைகளை சரியாக உச்சரித்ததால், யார் தவறிழைப்பார்கள் என்று ஒருவரை ஒருவர் மற்றவர்களுக்காக காத்திருந்தனர்.
அந்த நேரத்தில் மராம் (marram) என்ற சொல்லை ரோஹன் தவறாக உச்சரிக்க, அனன்னயா இரு வார்த்தைகளை சரியாக கூறி போட்டியில் வெற்றி பெற்றார். ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய – அமெரிக்க பிரஜை ஒருவர் வெல்வது 13-வது முறையாகும்.
இந்த வெற்றி குறித்து அனன்யா கூறுகையில், இந்த போட்டியில் வென்றதன் மூலம் 40,000 டொலர்கள் பரிசுத்தொகையை பெற்றுள்ளதாகவும், அதில் சரி பாதியை தனது ஏழு வயது சகோதரருடன் பங்கிட உள்ளதாகவும், தன்னுடைய பங்கை தனது கல்லூரி படிப்பிற்காக வங்கிக் கணக்கில் சேமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலிருந்தும், அமெரிக்க பிராந்தியங்களான போர்டோ ரீகோ மற்றும் குவாம், ஜப்பான் மற்றும் ஜமைக்கா போன்ற பல நாடுகளிலிருந்தும் 11 மில்லியனுக்கு அதிகமான இளம் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.