காதலியை கொலை செய்துவிட்டேன் என பொலிசாரை அதிரவைத்த காதலன்!!

தமிழகத்தில் காதலன் ஒருவன் நான் என் காதலியை கொலை செய்து விட்டதாக கூறி ரத்தம் தெறித்த உடையோடு பொலிசாரிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் மதன்ராஜ் (22). இவன், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் தங்கி வருகிறான். இவன் அதே பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற பெண்ணை பள்ளி பருவதிலேயே காதலித்திருக்கிறான்.

தற்போது, அப்பெண் சென்னை உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துவந்துள்ளார். பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, மதன் சிறு சிறு வேலைகள் செய்து வந்துள்ளார். இருந்த போதிலும் துர்கா உடனான காதலை தொடர்ந்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் துர்கா கல்லூரி சென்றவுடன் பேஸ்புக், வட்ஸ்அப் என ஆண் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதனால் அவர் மதனிடம் பேச்சு வார்த்தையை மெல்ல மெல்ல குறைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன் துர்காவை கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் நான் என் காதலியை கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

விசாரணையில் அவன், கல்லூரியில் மற்ற ஆண் நண்பர்களுடன் பேசியதைத் தொடர்ந்து தன்னிடம் அவள் சரிவர பேசவில்லை,இதனால் தனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் அவள் வாரவிடுமுறைக்காக சென்னையிலிருந்து பேருந்தில் ஜெகதாப்பட்டினம் சென்று கொண்டிருந்தாள்.

அப்போது நான் அவளை செல்போனில் தொடர்புகொண்டு, மயிலாடுதுறை பேருந்துநியைலத்தில் இறங்கு, 10 நிமிடம் பேசிவிட்டு அடுத்த பஸ்சில் ஏற்றிவிடுகிறேன் என்று ஆசையாய் பேசினேன்.

என் பேச்சை நம்பி மயிலாடுதுறையில் இறங்கிய துர்காவை டூவீலரில் ஏற்றி பூம்புகார் கடற்கரைக்கு அழைத்துச்சென்றேன். என்னத்தவிர வேறு யாரிடமும் பழகக்கூடாது. செல்போனில் செய்தி பகிரக்கூடாது. படித்து முடித்ததும் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு போட்டேன்.

நான் சொல்லும் அனைத்திற்கு அவள் எதிராக பதில் சொன்னாள். இதனால் கோபம் வந்தது. அருகே இருந்த கல்லால் மூன்று தடவை தலைய நசுக்கியே கொன்றேன். அதன் பின் நேராக இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.

பாடசாலை மாணவியை மயக்கி கடத்திச்சென்ற 2 குழந்தைகளின் தந்தை!!

பள்ளி மாணவியை கடத்தி சென்ற திருமணமான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (32). விவசாயம் செய்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரமேஷ்க்கு அதே பகுதியில் உள்ள ஒரு 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கிய ரமேஷ் அவரை கடத்தி சென்றுள்ளார்.

பின்னர், தனது மகளை காணவில்லை என மாணவியின் அம்மா பொலிசில் புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் மாணவியுடன் ரமேஷ் பொம்மிடி பஸ் நிலையம் அருகே இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற அவர்கள் மாணவியை மீட்டு, ரமேஷை கைது செய்தனர். ரமேஷ் மீது இளம் பெண்கள் பாலியல் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு சென்ற 19 வயது இளைஞர் மாயம்!!

வேலை தேடி கொழும்புக்கு சென்ற 19வயதுச் இளைஞரை 4மாத காலமாக காணவில்லை என அவரது பாட்டி பொலிஸிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்பாறை வளத்தாப்பிட்டி, பிள்ளையார் வீதியைச் சேர்ந்த இராசசிங்கம் லஸ்தகுமார்(19) கடந்த ஆண்டு மார்கழி மாதம் 15 ஆம் திகதி வீட்டை விட்டு கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பீக்காமன்ட் யமுனபுர, கடுவலை, கொழும்பு என்ற இடத்திற்கு தனது அயலவருடன் வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

அங்கு சென்று இரண்டு வாரங்கள் தனது சித்தியுடன் தொடர்பு கொண்டு தான் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். இரண்டு வாரங்களின் பின்னர் வீட்டாருடன் எவ்வித தொடர்பும் ஏற்படுத்தவில்லை.

இது பற்றி இவரை அழைத்துச் சென்ற வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த இளைஞரிடம் தகவல் கேட்டால், இவர் வேலையை விட்டு விட்டு தனது ஊரிற்கு செல்வதாக கூறிச் சென்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன சிறுவன் குறித்து அவரது பாட்டி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, முறைப்பாடுகள் பதிவு செய்தும் தனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று மனித அபிவிருத்தி தாபனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தனது பேரனை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறும் குறித்த பாட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

காணாமல் போன கணவரைத் தேடி மந்திரவாதியிடம் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட பயாகல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன கணவரை மீட்டுத் தருவதாக கூறி குறித்த மந்திரவாதி இளம் பெண்ணை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

22 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடியுள்ளார்.

இதில் காணாமல் போன கணவரை மீட்டுத் தருவதற்கு 15,000 ரூபாய் செலவாகும் என்று குறித்த மந்திரவாதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த பெண்ணை தனியறைக்குள் அழைத்துச் சென்ற மந்திரவாதி போதை தரும் எண்ணெய் ஒன்றை பெண்ணின் உடலில் பூசி அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். எனினும், பாதுகாப்பாக தப்பி வந்த யுவதி பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளார்.

பெண்ணின் முறைப்பாட்டையடுத்து பயாகல பொலிஸார் மந்திரவாதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் 100 வயதை கடந்தும் அசத்தும் வயோதிபப் பெண்!!

 
இலங்கையில் 100 வயதை தாண்டியும் ஆரோக்கியமாக வாழும் வயோதிப பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மாவனெல்ல, கெஹேல்பன்னல பிரதேசத்தில் 100 வயதுடைய பெண் ஒருவர் தற்போதும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

ஜாமுனி கொல பிஞ்சி என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு நூறு வயதினை தாண்டியும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். பாட்டியின் வயது 100 என்ற போதிலும், அவரது வயது நூற்றுக்கும் அதிகம் என அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவரது அடையாள அட்டைக்கமைய 1917ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி அவர் பிறந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றன.

அதற்கமைய நூறு வயதுடையவர் மாவனெல்ல பிரதேச செயலாளர் எல்லைக்கு சொந்தமான பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.

பொதுவாக இந்த கிராமத்திற்கு நடந்து செல்வதென்றால், கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலங்கள் செல்லும் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையை வெள்ளையர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியில் தனக்கு அந்த பகுதியில் வீடு ஒன்றை கட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக குறித்த வயோதிப பெண் தெரிவித்துள்ளார்.

வெள்ளையர்களின் தோட்டங்களில் தேயிலைகளை வளர்த்து, அவர்களிடம் சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

உக்கு என்ற நபரை திருமணம் செய்திருந்தார். அந்த திருமணத்தின் பின்னர் அந்த கிராமத்திலேயே தனது பிள்ளைகளை வளர்த்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

திருமணம் செய்ததன் பின்னர் அந்த பகுதிக்கு வருகைத்தந்தவர், முதலாவதாக கம்பளை வெடகதெனிய கிராமத்தில் வாழ்ந்துள்ளார்.

அவருக்கு பிறந்த 10 பிள்ளைகளில் ஏழு பேர் ஆண் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் தனது கடைசி மகனின் வீட்டில் வாழ்ந்து வருகின்றார். கடைசி மகனின் மனைவி அவரை தனது பெற்ற தாய் போன்று பாதுகாப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

131 பாடசாலைகள் சார்பில் சாதாரண தரப் பரீட்சையில் ஒரு மாணவர் கூட உயர்தரத்திற்கு தெரிவாகாத நிலை!!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 131 பாடசாலைகளில் ஒரு மாணவர் கூட உயர் தரத்திற்கு தெரிவாகவில்லை. இலங்கை பரீட்சைத் திணைக்கள புள்ளிவிபரத் தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

131 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியுள்ளனர். எனினும் அந்தப் பாடசாலைகளிலிருந்து ஒரு மாணவரேனும் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுக்கொள்ளவில்லை.

கண்டி, காலி, கேகாலை ஆகிய கல்வி வலயங்களின் பாடசாலைகளே அதிகளவில் இந்தப் பட்டியலில் உள்ளடங்குகின்றன. குறித்த கல்வி வலயங்களில் தலா ஆறு பாடசாலைகளில் எந்தவொரு மாணவரும் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுக்கொள்ளவில்லை.

அவுஸ்திரேலியாவை அழிப்போம் : மூன்றாம் உலகப் போர் தொடங்கும் : மிரட்டல் விடுக்கும் வடகொரியா!!

அணு ஆயுதம் மூலம் அவுஸ்திரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக தெரிவித்துள்ளது.

வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், வடகொரியாவை தனிமைப்படுத்தும் மற்றும் அகற்றும் முயற்சியில் இருக்கும் அமெரிக்காவின் செயலை அவுஸ்திரேலியா பின்பற்றினால் அது கண்டனத்துகுரியது.

இதை அவுஸ்திரேலியா செய்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இதை அவர்கள் தொடர்ந்தால் அவுஸ்ரேலியா மீது அணுகுண்டு வீசுவோம் என கூறப்பட்டுள்ளது.

இது நடந்தால் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலை மையம் Opera House தகர்க்ப்படும்.
இந்த தாக்குதல் மூலம் மூன்றாம் உலக போரை ஆரம்பிப்பது வட கொரியாவின் திட்டம் என நம்பப்படுகிறது.

இதனிடையில், வட கொரியாவின் அணுகுண்டு அனுகுமுறை நம் பிராந்தியத்திற்கு ஏற்கத்தக்கது அல்ல என அவுஸ்ரேலியா வெளியுறவு துறை அமைச்சர் Julie Bishop இரு தினங்களுக்கு முன்னர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம : அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடவடிக்கையில் வடகொரிய ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வடகொரிய நாட்டின் இராணுவ தினம் மே மாதம் 25ம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அன்றைய நாள் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்த வாய்ப்புக்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனை குறித்து அமெரிக்க அரசாங்கம் பல தடவைகள் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் தங்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தன.

எனினும், வடகொரியா அந்த எதிர்ப்புக்கள் எதனையும் காதில் வாங்கிக் கொண்டதாக இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆறாவது அணு பரிசோதனையை நடத்தியிருந்தது. எனினும் அந்தச் சோதனை தோல்வியில் முடிந்தது.

ஆனாலும் அந்த நாட்டு ஜனாதிபதி தமது ஆராய்ச்சியும், சோதனைகளும் நிறுத்தப்படாது என்றும், விரைவில் அடுத்த பரிசோதனை நடவடிக்கைகளை செய்வதற்கு தயாராவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, வடகொரிய நாட்டின் இராணுவ தினம் மே மாதம் 25ம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அன்றைய நாள் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்த வாய்ப்புக்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது அமெரிக்காவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தங்களது முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பது போல இருக்கிறது வடகொரியா.

வடகொரியாவின் இந்த நிலைப்பாட்டால், கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் அதிகரித்திருக்கிறது.

எனினும், இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் அந்நாடு, அமெரிக்காவின் எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமையுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த நிலைப்பாட்டினை அடுத்து, தனது நவீன ஆயுதம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செல்வதற்காக வெளிநாட்டில் காத்திருத்தவர் மரணம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

சவுதி அரேபியாவுக்கு வீட்டுச் சாரதியாக பணியாற்ற சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 17ம் திகதி மூச்சு திணறல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி 3, கிராமசேவகர் பிரிவு, முருகன் கோயில் வீதியிலுள்ள பிள்ளையான் சந்திரகுமார் (வயது 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சவுதி அரேபியாவில் ரியாத் எனும் இடத்திற்கு கடந்த 2016.07.03ம் திகதி வீட்டுச் சாரதியாக வெளிநாடு சென்றதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

உயிரிழந்த பிள்ளையான் சந்திரகுமார் வீட்டுச் சாரதியாக சென்றுள்ளார். வீடு ஒன்றிலுள்ள குடும்பங்களை நாளாந்த வழமையான போக்குவரத்தில் தனது சேவையை செய்து கொண்டுவந்துள்ளார்.

கடந்த 17ம் திகி தனது சாரதி சேவையை செய்து விட்டு நித்திரையில் இருந்தவேளையில் அன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டிருந்தமையினால் உறக்கத்தில் இருந்தவாறு உயிரிழந்து இருக்கலாம் என சவுதியிலுள்ள சக நண்பர் ஒருவர் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவரின் வீட்டு உரிமையாளர் சம்பவம் இடம்பெற்ற அன்று அந் நாட்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தியதும், உடன் வைத்தியசாலைக்கு உடலை கொண்டு சென்று பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவர் எதிர்வரும் 19.05.2017 அன்று தனது வேலையை முடித்துவிட்டு இலங்கைக்கு திரும்புவதற்குரிய விசா மற்றும் அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் கடந்த 17ம் திகதி உயிரிழந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்குரிய அனைத்துவித ஏற்பாடுகளையும் உறவினர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

லண்டனில் மிகவும் ஆபத்தான வீதியில் பலியான இலங்கை மருத்துவர்!!

லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் நிபுணத்துவ சங்கத்தின் துணைத் தலைவரும் வைத்தியருமான செஸ்மல் சிறிவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மத்திய லண்டன் ஆக்ஸ்போர்ட் வீதியில் இடம்பெற்ற இரட்டைப் பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் சடலமாக மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

38 வயதுடைய குறித்த இலங்கை வைத்தியர் கிரீன்விச் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பும் போது N98 என்ற பஸ் வண்டியில் மோதுண்டுள்ளார்.

அவரது இறப்பின் போது அவர் London School of Hygiene and Tropical Medicine என்ற பாடசாலையில் இணை பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கற்கை நிறைவு செய்தவர், ரஷ்யாவில் உள்ள People’s Friendship பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்றவர் அங்கு முதுகலைப் படிப்புகளை மேற்கொண்டுள்ளதுடன் 2015ஆம் ஆண்டு PhD கற்கையை நிறைவு செய்துள்ளார்.

வைத்தியர் சிறிவர்தன உயிரிழந்த வீதி பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தான வீதியாக 2015ஆம் ஆண்டு பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!

 
வவுனியாவில் இன்று (23.04.2017) காலை தனது வீட்டின் துப்பரவுப் பணியின்போது காணியிலிருந்து உரிமையாளர் ஒருவர் கைக்குண்டு ஒன்று இருப்பதைக்கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

இன்று காலை தனது வீட்டு வேலியை துப்பரவு செய்து கொண்டிருந்த வவுனியா சாந்தசோலை 50வது வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ளவர் பொலித்தீன் பையினால் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று இருப்பதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் கைக்குண்டினை பார்வையிட்டதுடன் நீதவானில் அனுமதி பெற்று விஸேட அதிரடிப்படையினரின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டு செயலிழக்கச் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளத்தில் குளத்தில் முழ்கி 10 வயதுச் சிறுவன் பலி!!

கனகராயன்குளம் குரிசுட்டகுளம் படுகாட்டுக்குளத்தில் குளிக்க சென்ற 10வயது சிறுவன் நேற்று ( 21.04.2017) காலை குளத்தில் முழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

புலமைப்பரிட்சை வகுப்புக்கு சென்று விட்டு கனகராயன்குளம் படுகாட்டுக்குளத்தில் அமைந்துள்ள குளத்திற்கு அருகே காணப்படும் ஆலயத்திற்கு சென்ற மூன்று சிறுவர்கள் ஆலய வழிபாடுகளை முடித்து விட்டு ஆலயத்திற்கு அருகே காணப்படும் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

இதன்போது 10 வயதுடைய பாலச்சந்திரன் கவிப்பிரியன் என்ற சிறுவன் குளத்தில் அருகே காணப்பட்ட குழியில் வீழ்ந்துள்ளார். உடனே அவருடன் சென்ற இரு சிறுவர்களும் அயலவரை அழைத்து வரச் சென்றுள்ளனர். அயலவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குழியில் வீழ்ந்த சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணிநேரமாக போராடி சிறுவனை மீட்டெடுத்து அருகே காணப்படும் புளியங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தற்போது குறித்த சிறுவனின் சடலம் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரின் தயார் தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவில் வீட்டுபணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றfமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கண்டிவீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : பெண் உட்பட இருவர் படுகாயம்!!

 
வவுனியா கண்டி வீதியில் இன்று (22.04.2017) மதியம் 12.10 மணியளவில் நடைபெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலைக்கு முன்பாக வீதியின் மறுபக்கம் மாற முற்ப்பட்ட முதியவர் மீது கண்டி வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலை செலுத்திய பெண் மற்றும் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

அழிவை ஏற்படுத்தும் அமெரிக்காவின் ஆயுதம்? ரஸ்யாவிற்கு சவால்!!

பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அணுவாயுதம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் அணுவாயுத பலத்தை முறியடிக்கும் வகையில் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Kinetic Energy Projectile (KEP) பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அனைத்து குண்டுகளுக்கும் தாய் குண்டாக (the mother of all bombs) பயன்படுத்தி அமெரிக்கா கடந்த வாரம் தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலில் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது அதனை மிஞ்சும் வகையில் “பேரழிவை” ஏற்படுத்தும் ஆயுதம் ஒன்றை அமெரிக்கா தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுதம் ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செயற்படக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருமுறை ஏவினால் குறி தவறாது இலக்கை தாக்கி அழிக்க கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆயுதம் 2013ஆம் ஆண்டு முதன் முறையாக சோதனை செய்த போது விநாடிக்கு 3500 அடிவரை பயணித்தமை குறித்தும் பேரழிவை ஏற்படுத்துவது குறித்தும் Hix தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த சோதனை நடவடிக்கையானது மிகவும் வெற்றியளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தனக்கு நேர் எதிரே வரும் எந்த இலக்கினையும் இந்த ஆயுதம் தாக்கில் அழிக்கவல்லது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

AH1N1 தொற்று குறித்து இலங்கையர்களுக்கு புதிய எச்சரிக்கை!!

இன்புளுவன்ஸா AH1N1 தொற்று குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்புளுவன்ஸா AH1N1 தொற்று கடந்த நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் இந்தத் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

மேலும், இந்தத் தொற்று இருப்பவர்கள், அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவர்களை சந்தித்த பின்னர், குறித்த நபர் தமது கைகளை சவர்காரமிட்டு நன்றாக கழுவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைகளை சவர்காரமிட்டு நன்றாக கழுவாமல், மூக்கையோ, கண்களையோ அல்லது முகத்தையோ தொடக்கூடாது என சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார ஆலோசனை கூறியுள்ளார்.

முழுக் கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்திய யுவதியின் மரணம்!!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

17 வயதான அ.மேரி செறின் என்ற யுவதி கடந்த 19 ஆம் திகதி இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுவதியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

குறித்த யுவதியின் பிரிவால் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்த யுவதியின் பிறந்த தினம் இன்றாகும்.