பிலிப்பைன்ஸ் முன்னாள் அழகுராணி சுட்டுக் கொலை!!

 
பிலிப்பைன்ஸை சேர்ந்த முன்னாள் அழகுராணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதான மேரி கிறிஸ்டைன் பலக்தஸ் என் பவரே இந்த முன்னாள் அழகுராணி ஆவார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பலக்கன் நகரில், தனது வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி மேரி கிறிஸ்டைன் சுடப்பட்டுள்ளார். மேரி கிறிஸ்டைனின் வீட்டுக்கு புதிய மலர்கள் மற்றும் சொக்லேற்றுகள் சகிதம் சென்ற இரு நபர்கள் அவரது வீட்டுக் கதவைத் தட்டினர்.

அதையடுத்து மேரி கிறிஸ்டைன் கதவைத் திறந்தவுடன், அவர் மீது மேற்படி நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளொன்றில் தப்பிச் சென்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத் துப்பாக்கிப் பிரயோகத்தினால் தலையில் படுகாயமடைந்த மேரி கிறிஸ்டைன் வைத்தியசாலையை நோக்கி அழைத்துச் செல்லப் பட்டவேளையில் அம்பியூலன்ஸ் வாகனத்தில் உயிரிழந்தார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற லா புலகேன்யா அழகுராணிப் போட்டியில் முதலிடம் பெற்ற மேரி கிறிஸ்டைன் 2010 ஆம் ஆண்டில் மற்றொரு அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்றிருந்தார்.

மேரி கிறிஸ்டைனை முன்னர் காதலித்த இளைஞர் ஒருவரை தாம் விசாரித்து வருவதாக பொலிஸ் அத்தியசட்கர் ஜூலியோ லிஸார்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸ் அத்தியசட்கர் ஜூலியோ லிஸார்டோ மேலும் கூறுகையில், ‘நாம் .45 ரக பிஸ்டல் ஒன்றின் வெற்றுத் தோட்டாவைக் கண்டெடுத்துள்ளோம்.

இத் துப்பாக்கி வாடகைகைக்குப் பெறப்பட்டிருக்கலாம் என நாம் நம்புகிறோம். துப்பாக்கிப் பிரயோகத்துக்கு முன்னர் மேற்படி நபர்கள் இருவரும் அப்பகுதியில் நடமாடியதை அங்குள்ளவர்கள் கண்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் ரெஜினா கார்மேலா பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பயின்று வந்த மேரி கிறிஸ்டைனை அவரின் நண்பர்கள் ‘ரின் என செல்லமாக அழைத்து வந்தனர். அழகுராணியாக தெரிவான போதிலும் எளிமையாக பழகுபவராகப் பலராலும் பாராட்டப்பட்டிருந்தார்.

அவர் படுகொலை செய்யப்பட்டமையினால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், ‘ரின்’னுக்கு நீதி வழங்குமாறு #JusticeForTin எனும் ஹேஸ்டெக் சகிதம் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘ரின்னுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியவில்லை. நீதி நிலைநாட்டப்படும் என நாம் நம்புகிறோம்’ என அவரின் நண்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புகையிரதக் கடவை சமிக்கைகளில் தொழிநுட்ப பிரச்சினை: சாரதிகள் குழப்பம்!!

கிளிநொச்சியில் உள்ள பல புகையிரதக் கடவைகளில் உள்ள சமிக்கை விளக்குகளில் நேற்றிரவு (12) ஏற்பட்ட தொழிநுட்ப பிரச்சினை சில மணித்தியாலங்களாக தொடர்ந்து சிவப்புநிற சமிக்கை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடவைகளைக் கடக்கும் சாரதிகள் பல மணித்தியாலங்கள் காத்திருந்து இது தவறான சமிக்கையை தருகிறது என உணர்ந்ததன் பின்னரே சந்தேகத்துடன் கடவையைக் கடக்கின்றனர்.

இதனால் புகையிரதம் வருகிறதா இல்லை தவறான சமிக்கையா என உறுதி செய்யப்பட்டதன் பின்னரே பாதுகாப்புக் கடவைகளை அவதானமாக கடக்கவேண்டிய நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்

கிளிநொச்சியில் இருக்கின்ற பல புகையிரதக் கடவைகளினூடு நாள் ஒன்றிற்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்களும் பாதசாரிகளும் தமது போக்குவரத்தை மேற்கொள்கின்றனர்.

அத்துடன் கிளிநொச்சியில் புகையிரதக் கடவைகள் சீரின்மையால் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் உயிர் சேதங்களும் இடம்பெற்றுள்ளது.

எனவே இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு மிக விரைவில் இந்த தொழினுட்ப பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

இலங்கையில் 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு வகைகளை தயாரித்த 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 19,730 உணவு தயாரிப்பு நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கூறியுள்ளது.

அதிகளவான சுற்றிவளைப்பு மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.

இந்த நடவடிக்கைக்காக நாடு பூராகவும் 2000 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரங்கள்!!

சித்திரைப் புத்தாண்டு பிறப்பதற்கான புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று (13) மாலை 7.40 தொடக்கம் நாளை (14) காலை 8.28 வரையாகும்.

இதன்படி, நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.04 மணிக்கு ஏவிளம்பி புத்தாண்டு பிறக்கின்றது.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி எதிர்வரும் 14.04.2017 வெள்ளிக்கிழமை (சித்திரை 01) அதிகாலை 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில், மகர லக்கினத்தில், மகர நவாம்சத்தில் ´ஏவிளம்பி´ வருடம் பிறக்கின்றது.

ஏவிளம்பி புத்தாண்டு பிறப்பன்று மஞ்சள் மற்றும் கபில நிறத்திலான புத்தாடைகளை அணிவது சிறந்தது.

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்.

புனர்பூசம், சித்திரை 3ம் 4ம் பாதம், சுவாதி, விசாகம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்து நீர் வைத்து நீராட வேண்டும்.

அதேவேளை, சிங்கள முறைப்படி, 14 ஆம் திகதி அதிகாலை 5.41 க்கு வடக்கு நோக்கிய படி விளக்கேற்றி, 7.05 மணியளவில் பணிகளை ஆரம்பித்தல், உணவு உண்ணல் போன்ற விடயங்களை மேற்கொள்ளலாம்.

அத்துடன், தலைக்கு எண்ணெய் வைக்கும் சம்பிரதாய சடங்கு 15 ஆம் திகதி முற்பகல் 11.04 மணிக்கு பின்னர் வடக்கு நோக்கிய படி இடம்பெறும்.

இதுதவிர, தொழில்களுக்கு செல்லும் சுபநேரம் ஏப்பிரல் 17 ஆம் திகதி காலை 6.28 மணி.

வவுனியாவில் கிணற்றில் இருந்து குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கூமாங்குளம், வள்ளுவர் கோட்டம் பகுதியியைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் நேற்று (12.04.2017) மதியம் 12.45 மணி முதல் காணாமல் போயிருந்தார். இவரை அவரது உறவினர்கள் தேடிய நிலையில் இரவு 7.30 மணியளவில் வீட்டு வளவில் உள்ள கிணற்றில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான சிறிகாந்தன் புஸ்பலதா (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் நிரந்தர வீட்டிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு!!

 
வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் இன்று (12.04.2017) காலை 9.30 மணியளவில் அப்பகுதியில் நீண்டகாலமாக தற்காலிக வீடுகளில் வசித்துவரும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு கிராமசேவையாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, ஸ்ரீரெலோ கட்சியில் செயலாளர் நாயகம் ப.உதயராசா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர் திருமதி டீ.குறூஸ், ஸ்ரீரெலோ கட்சியில் இளைஞர் அணித்தலைவர் ப.கார்த்திக், கிராமசேவையாளர் திருமதி த.தர்சிகா, அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொணடனர்.

புழைய கற்பகபுரம் பகுதியில் 78 வீடுகளும் புதிய கற்பகபுரம் பகுதியில் 269 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

இப்பபகுதிளில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் பங்களிப்புடன் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள் தேங்காய் உடைத்து வேண்டுதல்!!

 
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் இன்று (12.04) 48வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை 3 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றிணைந்த காணாமற்போனோரின் உறவினர்கள் தேங்காய் உடைத்து தமது வேண்டுதலின் ஈடுபட்டனர்.

உலகிலேயே மிகச் சிறிய தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

 
பெரிய திரைகளை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு மாறாக Posh மொபைல் நிறுவனமானது Micro X S240 என்னும் சிறிய தொடுதிரையினை கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

2.4 அங்குல திரையினை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனானது 650 எம்ஏஎச் அளவில் பேட்டரி, 13 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 இயங்குதளத்தினை கொண்ட இந்த போனானது வால் அடாப்டர், சார்ஜ் கேபிள், ஹெட்போன் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் ஒரே ஒரு மைக்ரோ சிம்கார்டு வசதியினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகச்சிறிய அளவிலான இந்த மொபைல் போனானது 5 அமெரிக்கா டொலர் என்னும் விலையில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இளைஞனை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இளம்பெண் கைது!!

அமெரிக்காவில் கார் ஓட்டுனர் ஒருவரை கத்தி முனையில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓஹியோ மாகாணதில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பிரிட்டனி கார்டர் என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு போதை பழக்கம் இருப்பதுடன் ஆண் நண்பர்களும் அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் Findlay நகரில் இரவு விருந்திருக்கு நண்பர்கள் இருவருடன் சென்றுள்ளார். விருந்து முடிந்ததும் வீட்டிற்கு திரும்ப கால் டாக்ஸி ஒன்றை வரவழைத்துள்ளார்.

கார் சென்றுக்கொண்டு இருந்தபோது ‘ஓட்டுனருடன் நான் உறவுக்கொள்ள வேண்டும்’ என பிரட்டனி கார்டர் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த நண்பர் ஓட்டுனரிடம் கத்தியை காட்டி காரை ஓரமாக நிறுத்துமாரு மிரட்டியுள்ளார்.

பின்னர், கத்தி முனையில் மிரட்டப்பட்ட ஓட்டுனருடன் பிரட்டனி உறவுக்கொண்டுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு ஓட்டுனரிடம் இருந்த 32 டொலர் பணத்தை திருடிய பிரட்டனி நண்பர்களுடன் அங்கிருந்து தப்பியுள்ளார்

இவ்விவகாரம் வெளியே தெரிந்ததும் பிரட்டனி கார்டர் அதிரடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால், நண்பர்கள் இதுவரை பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர்.

இளம்பெண்ணை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது வாலிபரை பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்திய இளைஞன்!!

அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி, Turella பகுதியில் உள்ள வீட்டிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. முன்னதாக, 25 வயதான இளம் பெண் ஒருவர் தனது 29 வயது காதலனை விட்டு பிரிந்துள்ளார்.

இதனால், கோபமடைந்த காதலன், காதலியின் அழகான தோற்றத்த அழிக்க Turella பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து கத்தரிக்கோல் மூலம் முகம் உட்பட உடலில் 37 இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தை தொடரந்து நான்கு நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் காதலனை Tamworth பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அவன் மீது கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

130 ரூபாய்க்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் பலி!!

ஹைதராபாத் உணவகம் ஒன்றில், உபரியாகக் கிடைத்த பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் ஊழியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட சண்டையில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஹைதராபாத், காஞ்சன்பக் நகரின் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜூ மற்றும் கமலேஷ் ஆகிய இருவரும் உணவகத்துக்கு வருபவர்கள் தரும் உபரிப் பணத்தைப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். கடந்த ஞாயிறு கிடைத்த உபரிப் பணத்தில் 130 ரூபாயை ராஜூ தனக்குத் தரவில்லை என கமலேஷ் சந்தேகப்பட்டார்.

திங்களன்று காலை உணவகத்துக்கு வந்த ராஜூவிடம், தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தருமாறு கமலேஷ் கேட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட சண்டையில் கமலேஷ், ராஜூவைக் கீழே தள்ளினார். நிலை தடுமாறிக் கீழே விழுந்த ராஜூவின் தலை கல்லில் மோதியதால் அவ்விடத்திலேயே அவர் மரணமானார்.

இதையறிந்த உணவகத்தின் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் கமலேஷைக் கைது செய்தனர்.

ஜெயலலிதாவுடன் நடித்த பெண் கோவிலில் பிச்சை எடுக்கும் அவலம்!!

பிரபல நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் நடிகை ஜெயலலிதா ஆகியோர் நடித்த படங்களில் குரூப் டான்ஸராக நடனமாடிய ஜமுனா தற்போது கோவிலில் பிச்சை எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சுந்தரம்பிள்ளை, சி சரஸ்வதி சபதம், அவ்வையார் உள்பட பல படங்களுக்கு குரூப் டான்சராக இருந்தவர் ஜமுனா. தற்போது அவருக்கு வயது 80 ஆகிறது. அவருடைய கணவர் ஒரு மேக்அப் மேன்.

இந்நிலையில் அவர் தன்னுடைய நிலைமையை பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு காலத்தில் நாங்கள் வசதியாக இருந்தோம்.

சென்னையில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம். ஆனால் வயது அதிகமாக, அதிகமாக தங்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை. இதனால் தாங்கள் எதற்கும் பயன்படாதவர்கள் என்று உறவினர்களும் தங்களை ஒதுக்கிவிட்டனர்.

ஒதுக்கப்பட்ட காலக்கட்டத்தில் பல வேலைகளை செய்தேன். தற்போது தன்னுடைய உடல் நிலை சரியில்லாததால், தன்னால் வேலைக்கு செல்லமுடியவில்லை, இதனால் பிறரிடம் கையேந்தி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.

விஷால் பல நடிகர்களுக்கு உதவி செய்துள்ளார் என்று கேள்விப்பட்டுள்ளேன். அவர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜமுனா சென்னையில் உள்ள வடபழனி கோவில் அருகே பிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் எடையை குறைக்கும் சுவை எது தெரியுமா?

அன்றாடம் நாம் ஒரு உணவை சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மைகள், தீமைகள் மற்றும் அந்த உணவின் சுவை மூலம் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

அந்த வகையில் நமது உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும் உணவின் சுவைகள் எது? என்பது உங்களுக்கு தெரியுமா?

உடல் பருமனை அதிகரிக்க செய்யும் சுவைகள் என்ன?

அன்றாடம் நாம் சாப்பிடக் கூடிய உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், விட்டமின்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

அதில் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது, புரோட்டீன் உடலில் செல் மற்றும் திசு வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு ஹார்மோன் இயக்கத்திற்கு உதவுகிறது.

இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள சுவையுள்ள உணவுகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

கசப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை கொண்ட உணவுகள் பொருட்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

துடிதுடிக்க காதை கடித்து துப்பிய நபர் : அதிர்ச்சி தரும் காரணம்!!

தமிழகத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் மகேந்திரன், பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ், இவர் அங்குள்ள பகுதியில் டீக்கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநகராட்சி குடிநீர் குழாயில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க காத்திருந்தனர்.அப்போது 10 குடங்களுடன் மகேந்திரன் நின்று கொண்டிருந்தார். அப்போது, ரங்கராஜ் வரிசையில் நிற்காமல் தண்ணீர் பிடிக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்த கேட்டபோது, மகேந்திரனுக்கும், ரெங்கராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் இது கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரெங்கராஜ், திடீரென மகேந்திரனின் காதை கடித்து துப்பினார்.

இதனால் துடிதுடித்த ராஜேந்திரன் இரத்தக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எயிட்ஸ் நோய் என தடை போட்ட பாடசாலை : பரீட்சையில் சாதித்து பதிலடி கொடுத்த மாணவி!!

பாடசாலையில் படிப்பதற்கு தடையேற்படுத்திய மாணவி, தவணை பரீட்சையில் முதலாம் இடத்தை பிடித்து பதிலடி கொடுத்துள்ளார்.

எயிட்ஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகித்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சில பெற்றோரின் அழுத்தம் காரணமாக மாணவி ஒருவருக்கு கல்வியை தொடர அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.

கனேமுல்லேயிலுள்ள பாடசாலையை சேர்ந்த மாணவி இம்முறை தவணை பரீட்டையில் முதலாம் இடத்தை பிடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கனேமுல்ல பகுதியின் ஸ்ரீசுமங்கல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவிக்கு எய்ட்ஸ் தொற்று காணப்படுவதாக தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அந்த பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்களின் பெற்றோர் இந்த மாணவியின் பெற்றோருக்கு கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர்.

எனினும் இவை அனைத்து குறித்தும் கருத்திற் கொள்ளாத 9 வயது மாணவி, இறுதியாக இடம்பெற்ற தவணை பரீட்சையில் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

அவருக்கு எதிராக காணப்பட்ட அனைத்து தடைகளையும் தகர்த்து, கல்வியின் மீது ஆர்வம் செலுத்தியுள்ள இந்த மாணவியை சுதந்திரமான படிப்பதற்கு அனுமதிக்குமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

படித்தது 5 ஆம் வகுப்பு : வாங்கும் சம்பளம் 21 கோடி!!

படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றில்லை, படிப்பறிவு இல்லாட்டால் கூட பரவாயில்லை, நாம் கற்றுக்கொண்ட அனுபவ அறிவின் மூலம் சாதனை நிகழ்த்தலாம் என நிரூபித்துள்ளார் தர்மபால் குலாத்தி. 94 வயதான இவர், இந்திய நுகர்பொருள் துறையில் அதிகச் சம்பளம் வாங்கு தலைமை செயல் அதிகாரி ஆவார்.

எம்டிஎச் மசாலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இவர், 5 ஆம் வகுப்பை கூட தாண்டவில்லை. 5 ஆம் வகுப்பை கூட நிறைவு செய்யாத இவர் வாங்கும் ஊதியம் வருடத்திற்கு 21 கோடி ஆகும்.

ஊழியர்கள் அனைவராலும் தாதாஜீ அல்லது மஹாஷியாஜி என்று அழைக்கப்படும் குலாத்தி தினமும் நிறுவனத்தைச் சுற்றி வருவது, சந்தை விற்பனையாளர்கள் மற்றும் டீலர்களை ஞாயிற்றுக் கிழமை என்றும் பார்க்காமல் சந்தித்துப் பேசுவது போன்றவற்றைச் செய்வார்.

மேலும் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகள் இவருடைய கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது. நோக்கம் குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்களை அளிப்பதே எனது நோக்கம் என்றும் என்னுடைய சம்பளத்தில் இருந்து 90 சதவீதம் அறக்கட்டளைக்கு அளிப்பதாகவும் தர்மபால் குலாத்தி கூறுகின்றார்.

கிளைகள் எம்டிஎச் நிறுவனத்திற்குத் துபாய், லண்டன் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது, 100 நாடுகளுக்கும் மேலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

60-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் எம்டிஎச் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வெளிவருகின்றது. அதில் டேகி மிர்சி, சேட் மசாலா மற்றும் சன்னா மசாலா பாகெட்கள் ஒவ்வொன்றும் மாதத்திற்கும் 1 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளது. ஆனால் இன்று வரை பிற வெளிநாட்டு உணவுகளைத் தயாரித்ததில்லை.