உலகின் அதிக எடையுள்ள பெண் 2 மாதத்தில் 262 கிலோவை இழந்தார்!!

மும்பையில் சிகிச்சை பெற்று வரும் உலகின் அதிக எடையுள்ள பெண்ணான எமான் 2 மாதத்தில் தனது உடல் எடையில் 262 கிலோவை இழந்தார்.

உலகின் அதிக உடல் எடை கொண்ட எகிப்து பெண்ணான எமான் அகமது மும்பையில் உள்ள சைஃபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது உடல் எடையை குறைப்பதற்காக கடந்த பெப்ரவரி 11ம் திகதி மும்பை வந்த எமான், கடந்த 2 மாதங்களாக தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

சைஃபி மருத்துவமனையில் முபசல் லக்டவாலா மற்றும் அவரது மருத்துவக்குழு அளித்த சிகிச்சையின் பலனாக தனது உடல் எடையான 498 கிலோவில் இருந்து 262 கிலோ எடையை இழந்துள்ளார்.

இது குறித்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் முபசல் லக்டவாலா கூறுகையில், 36 வயதான எமானுக்கு, லாப்ராஸ்கோப்பி எனப்படும் குடல்வாழ் அறுவை சிகிச்சைக்காக இரைப்பையின் அடிவயிற்றுப் பகுதியை குறைக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் மூலம் 498 கிலோ எடை கொண்ட தனது உடல் எடையில் 262 கிலோவை அவர் இழந்துள்ளார் என்று கூறினார். கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 40 சதவீதம் வரை எமானின் உடல் எடை குறைக்கப்பட்டு உள்ளது.

உடலில் இருந்து அதிகளவிலான தண்ணீரை வெளியேற்றி உடல் எடையை குறைத்து வருவதாக மும்பை சைஃபி மருத்துவமனை தலைவரும், மருத்துவருமான முபசல் லக்டவாலா தெரிவித்துள்ளார்.

கடந்த 25 வருடங்களாக, அலெக்சாண்ட்ரியாவில் உள்ள வீட்டில் உள்ள தனது அறையை விட்டு வெளியேறாமல் இருந்த எமான் சிகிச்சைக்காக, சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியா வந்தார்.

இதையடுத்து விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு லொறி மற்றும் கிரேன் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்கள் எமானுக்கு சரியான இடைவேளையில் பத்திய முறைப்படியே உணவு வழங்கி வருகின்றனர். நீர் ஆகாரங்களையே அதிகளவில் அளித்து வருகின்றனர். அதன்படி தற்போது, 262 கிலோ உடல் எடையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தந்தையை துன்புறுத்திய மகனை கொலை செய்த தாய்!!

பொலநறுவையில் தந்தையின் கழுத்தை நெரித்த மகனை தாய் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

பக்கவாதம் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தந்தையை, கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவரின் கழுத்தை நெரித்த மகன், தாயாரின் தாக்குதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிசிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹிகுரக்கொட, யோதஎல என்ற பகுதியை சேர்ந்த சியம்பலாகஸ் நென்னே கெதர காமினி சிசிர குமார என்ற 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் குடிபோதையில் தனது தந்தை மற்றும் தாயை தினமும் கொடுமைப்படுத்துபவர் எனவும், இந்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று அவ்வாறு குடிபோதையில் வந்துள்ள நிலையில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கட்டிலில் இருந்து கிழே தள்ளிவிட்டு, தாயினை கழுத்தை நெரித்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் தாய் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தர்பத்தில் தனது பாதுகாப்பிற்காக அருகில் இருந்த தடியினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதலில் காயமடைந்த தாய் மற்றும் மகன் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மகன் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகன் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

உலக வரைபடத்தில்,180 நாடுகளை,7 நிமிடங்களில் பொருத்தி தமிழ் மாணவி சாதனை!!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவி, 180 நாடுகளின் பெயர்களை, உலக வரைபடத்தில் சரியாக பொருத்தி, சாதனை படைத்தார். நேற்று முன்தினம், இச்சாதனையை பதிவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

நான்காம் வகுப்பு மாணவி லாவண்யா, உலக வரைபடத்தில் உள்ள, 180 நாடுகளையும், 7 நிமிடங்களில், அதற்குரிய இடங்களில், சரியாக பொருத்தினார்.

அதே வகுப்பில் படிக்கும் ராகவி, 5 நிமிடம், 56 வினாடிகளில், 180 நாடுகளின் பெயர்களை, முதலில் எழுத்துக்களையும், பின், நாட்டின் பெயர்களையும் வாசித்து முடித்தார்.

மேலும், ரியா என்ற மாணவி, உலக வரைபடத்தில், அந்தந்த நாட்டின் பெயர்களை, 15 நிமிடங்களில் ஆங்கிலத்தில் எழுதினார். இந்த மூன்று சாதனைகளையும், ‘ரியல் வேல்ட் ரெக்கார்ட்’ (Real World Record) என்ற அமைப்பு பதிவு செய்து, அதற்கான சான்றிதழ், விருதுகளை வழங்கியது.

மாணவியருக்கு பயிற்சி அளித்த, ஆசிரியை ஆனந்திக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை மாணவியருக்கு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ரங்கநாதன் பாராட்டு தெரிவித்தார்.

இளையராஜாவுடன் என்ன பிரச்சனை : மனம் திறந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!

இசைத்துறையின் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா – பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.

இளையராஜாவினால் இசையமைக்கப்பட்ட பாடல்களை முன் அனுமதியின்றி பாலசுப்பிரமணியம், வெளிநாட்டு மேடைகளில் பாடக் கூடாது என சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டது.

மிகவும் நெருக்கமான நண்பர்களாக பார்க்கப்பட்ட வந்த இளையராஜா – பாலசுப்பிரமணியம் கூட்டணிக்குள் இவ்வாறான முறுகல் பலரை ஆச்சரியபடச் செய்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் இசைக்கச்சேரியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயைராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்.

காப்புரிமை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. எனினும் இளையராஜாவின் பாடல்களை பாட முடியாததால் மனதளவில் வருத்தப்பட்டேன்.

காப்புரிமை பிரச்சனை குறித்த எதுவுமே தெரியாது. அவர் அனுப்பிய நோட்டீஸ் மூலமே இவ்வாறு சட்டம் உள்ளதை அறிந்தேன். இதுபோன்று சட்டம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால், இளையராஜாவிடம் தான் அனுமதி கேட்டிருப்பேன். இளையராஜா இதுபோன்று காப்புரிமை பெற்றுள்ளார் என்று தனக்கு தெரியாது.

எனினும் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. அதுவே தற்போது, இளையராஜாவுடன் பேசவிடாமல் தடுக்கிறது. எனினும் எங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்.

இளையராஜாவின் இசையில் மீண்டும் பாடுவேனா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும். அவருக்கும் எனக்கும் எந்தவொரு அபிப்பிராய வேறுபாடும் கிடையாது. நானும் அவரும் நண்பர்கள் தான். காலம் எப்படி நிர்ணயிக்கிறதோ அப்படி நிர்ணயிக்கட்டும், நடக்கும். நான் எப்போதுமே தலை நிமிர்ந்து நடந்து கொள்ள மாட்டேன். எந்தப் பாடலையும் என்னுடைய சொந்தம் என்று நினைக்க மாட்டேன்.

ஒவ்வொரு பாடலுக்குச் சொந்தக்காரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இயக்குநர் பாடலின் பின்புலத்தை விவரிப்பார், இசையமைப்பாளர் இசையைக் கொடுப்பார், கவிஞர்கள் அழகான வரிகள் எழுதுவார்கள், நாங்கள் பாடுவோம், இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் அழகாக வாசிப்பார்கள், அதை அழகாக ஒலிப்பதிவு செய்வார்கள், இயக்குநர்கள் அழகாகக் காட்சிப்படுத்த வேண்டும், நடிகர்கள் அழகாக நடிக்க வேண்டும் என ஒரு பாடலுக்குப் பின்னால் பல விஷயங்கள் இருக்கிறது. எனக்கு நல்ல பாடல்கள் கொடுத்த அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டியிருக்கிறேன்.

ஆகஸ்ட் மாதத்திலே டொரண்டோவில் நிகழ்ச்சியைத் தொடங்கினோம். அதைத் தொடர்ந்து ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடத்தி வருகிறோம். அமெரிக்காவில் நடக்கும் போது மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது.

அனைவருமே என்னிடம் நீங்கள் தொலைபேசியில் பேசிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரலாமே என்று கேட்கலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு சின்னத் தன்மானம் என்று ஒன்று உள்ளது. அதற்காக இளையராஜாவைக் குறைத்துப் பேசவே இல்லை. 2015ல் தான் காப்புரிமை சட்டத்தை எழுதியுள்ளார். அவரோடு சேர்ந்தும், இல்லாமலும் நிறைய நிகழ்ச்சிகளைச் செய்துள்ளேன். இதைப் பற்றி அவர் என்னிடம் சொன்னதில்லை.

எனக்குத் தெரிந்திருந்தால் இளையராஜாவிடம் கேட்பதில், எந்தவொரு வேறுபாடும் கிடையாது. சட்ட ரீதியாக நோட்டீஸ் வந்த பிறகு நண்பர் தானே ஏன் இப்படி நடந்தது என்று ஒரு சின்ன வலி ஏற்பட்டுள்ளது. காப்புரிமை சட்டம் இருக்கும் போது, அதைக் கேட்பதில் தவறு ஒன்றுமே இல்லை. ஆனால் எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. அவருடைய அலுவலகத்திலிருந்து கூட எனக்கு யாரும் போன் செய்யவில்லை.

இப்பிரச்சினை எப்படி முடியும் என்று எனக்கு தெரியாது. ஆனால், இளையராஜா மீது நான் வைத்திருக்கும் மரியாதை குறையாது. இந்தியாவில் இருக்கும் அனைத்து இசையமைப்பாளர்களோடும் பணியாற்றியுள்ளேன். ஆனால், இளையராஜா ஒரு ஜீனியஸ். காலம் மட்டுமே தெளிவான நிர்ணயத்தைக் கொடுக்கும் என பாடகர் பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.

ரயிலில் பயணிகளின் பணத்தை கொள்ளையடிக்கப்படும் கும்பல் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

பொது மக்களின் நலன் கருதி இன்றைய தினம் அதிகளவிலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக தமது சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயிலில் பயணிக்கும் மக்களின் பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிட்ட வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளும் குழு ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகை காலத்திற்காக பயணிகளின் வசதி கருதி விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

14000 வரு­டங்கள் பழை­மை­யான புராதன கிராமம் கன­டாவில் கண்­டு­பி­டிப்பு!!

 
14,000 வரு­டங்கள் பழை­மை­யா­னது என நம்­பப்­படும் புராதன கிராமம் ஒன்று கன­டாவில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. கனடாவின் மேற்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகா­ணத்­தி­லுள்ள தொலை­தூர தீவொன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வின்­போது இக்­கி­ராமம் கண்டுபிடிக்கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்கக் கண்­டத்தில் இது­வரை கண்டறியப்­பட்ட மிகப் பழை­மை­யான கிராமம் இது­வாகும்.

விக்­டோ­ரியா நக­ரி­லி­ருந்து சுமார் 500 கிலோ­மீற்றர் தொலை­விலுள்ள ட்ரைகுவெட் தீவில் இக்­கி­ராமம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. மீன் தூண்டில், தீயை உரு­வாக்­கு­வ­தற்­கான உப­க­ர­ணங்கள், ஈட்டி முத­லா­ன­வையும் இக்­கி­ரா­மத்தில் கண்­டெக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரிட்டிஷ் கொலம்­பியா பிராந்­தி­யத்தில் பல்­லா­யிரம் வரு­டங்­க­ளுக்கு முன் பெரும் எண்ணிக்கையிலான மனிதக் குடிவரவு இடம்பெற்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பெற்ற தாயின் தலையை வெட்டி நரபலி கொடுத்த மகன்!!

பெற்ற தாயின் தலையைத் துண்டித்து காளி கோவிலுக்கு நரபலி கொடுத்துவிட்டு நாடகமாடிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள புருலியா மாவட்டம், பாமாகிராம் பகுதியைச் சேர்ந்தவர் புலி மஹாட்டோ (55). இவரது இளைய மகன் நாராயணன் மஹாட்டோ (35).

கடந்த வெள்ளிக்கிழமை தனது தாயாரை நாராயணன் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் காளி கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். சாமியை தரிசித்து விட்டு அங்கு கிடந்த ஆடு-, மாடுகளை வெட்டப் பயன்படுத்தும் நீண்ட வாளை எடுத்துள்ளார்.

சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று அந்த வாளால் அவரது தாயாரின் தலையை ஓங்கி வெட்டியுள்ளார். பல அடி தூரத்தில் தள்ளி விழுந்த தாயாரின் தலையைக் கண்டு பதற்றப்படாத நாராயணன் நேராக வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்த தனது அண்ணனிடம் ’நமது அம்மா காளி கோயிலில் இருந்த வாளை எடுத்து,தலையை வெட்டிக் கொண்டார்’ என தெரிவித்துள்ளார். பதற்றமடைந்த நிலையில் ஓடிச் சென்று பார்த்து சந்தேகமடைந்த புலி மஹாட்டோவின் மூத்த மகன் இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நாராயணனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், பெற்ற தாய் என்றும் பாராமல் புலி மஹாட்டோவின் தலையை வெட்டி அவர் நரபலி கொடுத்த உண்மை தெரிய வந்தது.

உனது குடும்பம் நல்ல வளமான நிலைக்கு உயர வேண்டுமென்றால், உன் தாயாரை நீ எனக்கு நரபலி கொடுக்க வேண்டுமென தனது கனவில் வந்த காளி தேவி சொன்னதாகவும், காளியின் கட்டளைப்படி புலி மஹாட்டோவை நரபலி கொடுத்ததாகவும், பொலிஸாரிடம் நாராயணன் மஹாட்டோ வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அவரை கைது செய்த பொலிஸார் நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

சவுதி அரேபிய மக்களும் நிறுவனங்களும் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை!!

சவுதி அரேபிய மக்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என அந்நாட்டின் நிதி அமைச்சர் மொஹமட் அல் ஜடான் அறிவித்துள்ளார்.

மேலும், அங்குள்ள நிறுவனங்களும் தமது இலாபத்தைக் கணக்கிட்டு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் இடையில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தால் சவுதியின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இதனைக் கட்டுப்படுத்த சவுதி அரசாங்கம் புதிய வரிகள், தனியார்மயமாக்கல், மாற்றப்பட்ட முதலீட்டு உத்திகளைக் கையாண்டது.

தற்போது வருமான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், 2018ம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரி எனப்படும் வெட் வரியை உயர்த்தும் எண்ணம் இருப்பதாகவும் ஆனால் அதுவும் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலின் கீழ் வரும் 6 அரபு முடியாட்சி நாடுகளில் 2018 ஆம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரியை 5 சதவீதமாக அறவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணெய்ப் பொருளாதாரம் அல்லாத பிறவற்றின் மூலம் வருவாயை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியப் படகுகளை சிறைப்பிடிக்க வந்த பாகிஸ்தான் படகுக்கு நேர்ந்த கதி!!

இந்திய மீன்பிடிப் படகுகளைச் சிறைப்பிடிக்க முயற்சித்த பாகிஸ்தான் படகொன்றின் மீது, இந்திய ட்ரோலர் ரக மீன்பிடிப் படகு மோதியதில் மூவர் கொல்லப்பட்டனர். இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவரைக் காணவில்லை. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குஜராத் கடற்பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான பன்னிரண்டு மீன்பிடிப் படகுகள் நிலைகொண்டிருந்தன. அந்தப் படகுகளை கராச்சிக்கு இழுத்துச் செல்லும் நோக்கில் பாகிஸ்தான் பாதுகாப்பு முகவரகப் படகுகள் சில இந்தியப் படகுகளைச் சுற்றிவளைத்தன.

அதன்போது, இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகொன்று மோதியதில் பாகிஸ்தான் கமாண்டோக்கள் மூவர் பலியானதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இருவரை இந்திய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

விபத்து குறித்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விபத்துப் பகுதிக்குச் சென்ற இந்திய கடற்படையின் ‘அரிஞ்சே’ என்ற படகு, உயிரிழந்த நிலையில் மூவரையும் உயிருடன் இருவரையும் மீட்டெடுத்தது. தம்முடன் வந்த மற்றொருவரைக் காணவில்லை என காப்பாற்றப்பட்ட கமாண்டோக்கள் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரையும் மற்றும் உயிரற்ற மூவரின் உடல்களையும் மேற்பட முகவரகத்திடமே இந்தியக் கடற்படை கையளித்தது. காணாமல் போயுள்ளவரைத் தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன

பொலிஸ் உத்தியோகத்தரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்!!

மின்னேரிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறப்புறுப்பு அவரது கள்ளக் காதலியினாலேயே வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையில் ஈடுபட்டிருந்த 30 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த சோக சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதுடன் தற்சமயம் அவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

30 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹிங்குராங்கொட பகுதியில் பெண்ணொருவருடன் கள்ளக் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

இந் நிலையில் அந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அண்மையில் மற்றொரு பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயமானது முதலாவது கள்ளக் காதல் தொடர்பில் இருந்த பெண்ணுக்கு தெரியவரவே அவர் பொலிஸ் உத்தியோகத்தரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.

பிறப்புறுப்பு வெட்டப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் முதலில் ஹிங்குராங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட விமானப் பயணி!!(வீடியோ)

அமெரிக்காவில் சிகோகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் யுனைட்டெட் எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளால் நிரம்பி வழிந்தது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதை கண்டறிந்த அந்த விமான நிறுவனம், 4 பயணிகளை தாமாக முன்வந்து இறங்குமாறு கேட்டுக்கொண்டது.

அப்படி இறங்குகிற பயணிகளுக்கு தலா 400 டொலர் தருவதாக கூறியது. யாரும் முன்வரவில்லை. அடுத்து தலா 800 டொலர் தருவதாக கூறியது. அப்படியும் யாரும் முன்வரவில்லை.

கடைசியில் அந்த நிறுவனமே 4 பயணிகளை தேர்ந்தெடுத்து வெளியேற்ற முடிவு செய்தது. அதன்படி 3 பயணிகள் வெளியேறினர். 4-வதாக வெளியேற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பயணி வெளியேற மறுத்தார். அவர் “நான் வீட்டுக்கு செல்ல வேண்டும், வீட்டுக்கு செல்ல வேண்டும்” என்று கதற கதற விமானத்தில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டார். அவரது உதட்டில் ரத்தம் வடிந்தது.

இதை ஒரு பயணி ரகசியமாக படம் பிடித்து ஒன்லைனில் வெளியிட அது வைரலாக பரவியது. அதைக்கண்டவர்கள் விமான நிறுவனம் மீது ஆத்திரம் அடைந்தனர். இனி அந்த விமான நிறுவனத்தை புறக்கணிப்போம் என்று அவர்கள் சமூக வலைத்தளங்களில் கொதித்தெழுந்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இதையடுத்து அந்தப் பயணியை இழுத்து சென்ற விமான பாதுகாப்பு ஊழியர் விடுமுறையில் அனுப்பப்பட்டார் என தெரிய வந்துள்ளது.

தனுஷ் யாருடைய மகன் : வழக்கின் தீர்ப்பு விரைவில்?

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்றும், வயதாகி விட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை. எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கதிரேசன். நடிகர் தனுஷ் எனது மகன்தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறி இருந்தார்.

மேலும் எனது மகன் கலைச்செல்வன் தான் தற்போது தனுஷ் என்று பெயரை மாற்றி சினிமாவில் நடித்து வருகிறார் என்றும் அவனது பள்ளிச்சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் உயர்நீதிமன்றத்தில் கதிரேசன் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்றத் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனுசின் அங்க அடையாளங்களை சரி பார்க்க உத்தரவிட்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தனுசின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

கிளிநொச்சி விபத்தில் காயமடைந்த யுவதி மரணம்!!

கிளிநொச்சி சேவயர்கடைச் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக உந்துருளியும் விபத்துக்குள்ளாகி இறந்த வயோதிபரின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வேளையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

யுவதி பயணித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் கிளிநொச்சி திருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெர்மன் கால்பந்து அணி பஸ்ஸின் மீது குண்டுத் தாக்குதல்!!

 

ஜெர்மனியின் பொருஸியா டார்ட்மன்ட் கால்பந்து அணி பயணம் செய்த பஸ்ஸில் மூன்று குண்டுவெடிப்புக்கள் ஏற்பட்டன.

பிரதான வீரரான மார்க் பர்த்ரா கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ்ஸுக்கு அருகில் 3 குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மொமாகொ அணிக்கு எதிரான உள்ளுர் சாம்பியன்ஸ்லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்க அந்த அணி பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தது.

இந்த தருணத்திலேயே பஸ்ஸுக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், விளையாட்டு மைதானத்தை சுற்றி எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கால்பந்துப் போட்டி இன்று தாமதமாக இடம்பெறும் வண்ணம் ஒத்திவைக்கப்பட்டது. ஹோசஸ்டன் என்ற பகுதியில், நகருக்கு வெளியே ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை.

இதுதொடர்பாக அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பொருஸியா டார்ட்மண்ட் அணி புறப்பட்ட சிறிது நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. பஸ்ஸின் இரண்டு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்த்ரா முன்பு விளையாடிய பார்சிலோனோ கால்பந்து கிளப்பும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயும் பர்த்ரா விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் முன்னிலையில் உள்ள அணிகளில் நான்காவது முக்கிய அணி டார்ட்மன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 47வது நாளாக தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 47 ஆவது நாளாகவும் இன்று (11.04.2017) நாளாக தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பதியாதவர்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி ஜெயவனிதா கேட்டுக்கொள்கின்றார்.

வவுனியா புதிய கற்பகபுரம் முன்பள்ளி மாணவர்களின் திறன்காண் நிகழ்வு!!

 
வவுனியா புதிய கற்பகபுரம் அன்னை திரேசா முன்பள்ளியின் மாணவர் திறன்காண் நிகழ்வு நேற்று (10.04.2017) மாலை 3.30 மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீரெலோ கட்சியின் செயளாளர் நாயகம் ப.உதயராசாவுடன் ஸ்ரீரெலோ இளைஞரணி தலைவர் ப.கார்த்திக் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சங்கரன் சசி மற்றும் முன்பள்ளிகளின் கோட்ட செயலாளர் திருமதி அருள்வேல் நாயகி, கற்பகபுரம் அ.த.க.பாடசாலை அதிபர், தமிழ்விருட்சம் அமைப்பின் செயலாளர் ஜெகன், தாய்மடி நற்பணி நிதியத்தின் தலைவி பிரேமிளா ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.