பண்டிகைக் கால முற்கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ரயில் கடவைக் காப்பாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
எனினும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் கடவை காப்பாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்று (11.04.2017) மாலை 3.30 மணிமுதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
மழையுடன் வீசிய கடும் காற்றினால் மக்களின் காணி வேலிகள் சிலவும் சேதமடைந்துள்ளது.
மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் வவுனியா திருநாவற்குளம் மக்களின் வீடுகளுக்கு வெள்ளநீர் உட்புகும் நிலைமை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.
பத்துநாட்கள் நடைபெற்ற நடைபெற்ற மகோற்சவத்தின் போது கடந்த
08.04.2017 சனிக்கிழமை சப்பர திருவிழாவும்
09.04.2017 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்
10.04.2017 திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெற்றன.
மேற்படி மகோற்சவத்தில் நூற்றுக்கணக்கான கருமாரியம்மனின் பகதர்கள் கலந்து கொண்டனர் .
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த 09/04/2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
ஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஏழரை மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு எட்டு மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.
எட்டரை மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
தொடர்ந்து வெளிவீதி உலாவந்து யாகம் கலைக்கப்பெற்று வழமையான பூசையுடன் பகல் உற்சவம் நிறைவு பெற்றது.
ஜேர்மனியில் உள்ள வனவிலங்கு பூங்காவில் யானைகள் பயிற்சியாளர்களால் கொடுமைப்படுத்தப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உலக புகழ்பெற்ற Hanover வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. அங்கு எடுக்கபட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அதில், பெரிய மற்றும் சிறிய யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. அதற்கு பயிற்சி தரும் பயிற்சியாளர்கள் யானைகளை சவுக்காலும், கொம்பாலும் அடிக்கிறார்கள்.
யானையின் ஒரு காலை தூக்கி சொல்லி அடிப்பது, யானையை சுத்த சொல்லி அடிப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
இதை ரகசிய ககெமரா மூலம் விலங்குகள் நல அமைப்பான பீட்டா வீடியோ எடுத்துள்ளது. மேலும், பீட்டா இது குறித்து பொலிஸ் புகார் அளித்துள்ளது
தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவுவதையடுத்து வனவிலங்கு ஊழியர்களுக்கும், அதன் உரிமையாளருக்கும் கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து வனவிலங்கு உரிமையாளர் Andreas Casdorff கூறுகையில், மனிதர்களுக்கும், யானைக்கும் உறவுமுறையை ஏற்படுத்த இப்படி பயிற்சி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
யானைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கேற்றார் போல் நாங்கள் செயல்படுவோம் என கூறியுள்ளார்.
கொலை மிரட்டல் வந்துள்ளதால் பொலிசார் இங்கு பாதுகாப்பு கொடுத்ததுடன், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கனடாவில் பனியால் உறைந்த குளத்தின் மத்தியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை, அதன் உரிமையாளர் உயிரை பணயம் வைத்து மீட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.
ஆல்பர்ட்டா பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், பனியால் உறைந்த குளத்தின் மத்தியில் நாய் ஒன்று சிக்கி தவித்து உயிருக்கு போராடுகிறது.
இதைக்கண்ட அதன் உரிமையாளர் சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்து தட்டு தடுமாறி நாய்க்கு அருகில் சென்று மீட்கிறார். பின்னர், நாயை தூக்கிக்கொண்டு வரும் போது பனி உடைந்து குளத்தில் மூழ்குகிறார்.
எனினும், மீண்டும் எழுந்த அவர் பத்திரமாக நாயுடன் கரை சேருகிறார். இதுகுறித்து நாயின் உரிமையாளர் கூறியதாவது, நான் செய்தது சரி தான். இப்படி ஒரு ஆபத்தான சூழலில் நாய் சிக்கி இருப்பதை பார்க்கும் எந்த ஒரு உரிமையாளரும் இதை தான் செய்வார்கள் என கூறியுள்ளார்.
சம்பவயிடத்திலிருந்த ஒருவர் இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். நாயை மீட்டு உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் 24 வயதான மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் ஓடும் இரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (07.04.2017) அகமதாபாத்- புரி வரை செல்லும் விரைவு இரயிலில் நாக்பூர் அரசு மருத்துவகல்லூரி மாணவர் விபின் கட்ஷே பயணித்துள்ளார்.
அதே இரயிலில் சித்திரலேகா என்னும் கர்ப்பிணியும் அவரது கணவரும் பயணித்துள்ளனர்.
ரயில் சென்று கொண்டிருந்த போது சித்திரலேகாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது, என்னசெய்வதென்று தெரியாமல் சித்திரலேகாவின் உறவினர்கள் ரயிலை நிறுத்தியுள்ளனர்.
உடனிருந்த பெண்கள் உதவிபுரிய கட்ஷே அனுபவமுள்ள மருத்துவர்களின் வழிகாட்டலுடன் பிரசவம் பார்த்துள்ளார்.
இதுகுறித்து கட்ஷே கூறுகையில், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் டிக்கெட் பரிசோதகர் முதலில் மருத்துவர்கள் யாராவது உள்ளனரா என கேட்டபோது எனக்கு அனுபவம் இல்லாததால் பதில் கூறவில்லை.
மறுபடியும் மருத்துவர் உள்ளனரா என தேடினர், பின்னரே நான் உதவி செய்வதாக கூறினேன்என்று கூறியுள்ளார்.
மேலும், சித்திரலேகாவிற்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டதால் குளிர்ந்த தண்ணீர் போத்தல்களை வைத்து அவரின் இரத்தபோக்கினை கட்டுப்படுத்தி உள்ளார்.
குழந்தையின் தோள்பட்டையினை வெளியில் எடுக்க முடியாதபோது வாட்ஸ் அப் மூலமாக குழந்தையின் நிலையினை புகைப்படம் எடுத்து மற்ற மருத்துவர்களுக்கு அனுப்பி ஆலோசனை கேட்டு பிரசவம் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
பின்னர் இரயில் நாக்பூர் நிலையத்திற்கு சென்றவுடன் அங்கு குழந்தைக்கும் தாய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரதான கடைத்தெருக்கள், கோயில்களில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பிச்சைக்காரி ஒருவர் தனக்கு கிடைக்கும் பணத்தில் வைத்து அருகில் உள்ள லாட்டரி கடையில் தினமும் ஒரு டிக்கெட் வாங்கி செல்வார்.
சத்திரம் ஒன்றில் தங்கி வந்த இவருக்கு ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக லாட்டரி டிக்கெட்டில் ரூ.1 லட்சம் விழுந்துள்ளது.
ஐந்து பத்து ரூபாய் நோட்கள் தான் தன் வாழ்நாளில் மிகப்பெரிய நோட்டுகள் என நினைத்து வந்த இவருக்கு, அந்த 1 லட்சம் ரூபாய் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
அளவில்லா சந்தோஷத்தில் இருக்கும் இவர், அந்த பணத்தின் மூலம் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் வசிக்க இருப்பதாகவும், மேலும் சிறிய பெட்டிக்கடை ஒன்றை வைத்து இனிமேல் பிழைப்பு நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
தெருக்களில் அலைந்து திரிந்து வாழ்க்கை நடத்தி பழக்கப்பட்ட எனக்கு, தற்போது ஒரு வீட்டில் வசிக்கப்போகிறேன் என்பதை நினைக்கும்போதே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை பிரிட்டன் பர்மிங்ஹாமில் ஆங்கில பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அந்த இயக்கத்தின் தலைவரை, இஸ்லாமிய பெண் ஒருவர் பார்த்த பார்வை இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
பிரிட்டன் இஸ்லாமியமயம் ஆக்கப்படுவதை எதிர்த்து ஆங்கிலப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து பிரிட்டனின் பர்மிங்ஹாமில் பேரணி நடத்தினர்.
அப்போது, அந்தக் கூட்டத்தில் ‘ஹிஜாப்’ அணிந்த பெண் ஒருவர் அக்கூட்டத்தினருக்கு எதிராக கத்தியபடி வந்தார். ஒரே நிமிடத்தில் ஆங்கிலப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இருபது பேர், அந்தப்பெண்ணை சூழ்ந்துகொண்டனர்.
அப்போது, சாஃபியா கான் என்ற மற்றொரு பெண் ஓடிவந்து கூட்டத்தில் சிக்கிய பெண்ணை பாதுகாத்தார். இதையடுத்து, ஆங்கிலப் பாதுகாப்பு இயக்கத்தினரின் கோபம் சாஃபியா கான் மீது திரும்பியது. அப்போது, அந்தப்பெண்ணை தாக்க முற்பட்ட இயக்கத் தலைவரை சாஃபியா கான் பார்த்த பார்வைதான் இன்றைய டாப் வைரல் ஹிட்.
எதார்த்தமாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் பரவுவதை சற்றும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறுகிறார் சாஃபியா கான்.
மேலும் அவர் கூறுகையில், ’இயக்கத்தினருக்கு நடுவில் சிக்கிய ஒரு பெண்ணை போலீஸார் யாரும் மீட்க வராததால் சென்றேன். மற்றபடி போராட்ட ஊர்வலத் தலைவர் என்னைத் தாக்க வந்தபோது சற்றும் பயப்படாமல் அவரை எதிர்கொண்டேன்’, என்றார்.
அதிகாரத்துக்கும், இனவாதத்துக்கும் எதிரானப் பார்வை என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம், கடலுார் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் அனில்குமார். தனியார் பாடசாலை ஆசிரியர். இவரது மனைவி பெட்டா, பொலிஸ் எஸ்.ஐ.,யாக இருக்கிறார். இவர்களது 14 வயது மகன் ரிஷிகுமார் தனியார் பாடசாலையொன்றில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
படிப்பில் சுட்டியான இவர், ‘மொபைல் அப்’ உருவாக்குவதிலும் வல்லவர். மாணவர் ரிஷிகுமார், ஆண்ட்ரொய்ட் மற்றும் அப்பிள் போன்களில் பயன்படுத்தும் வகையில், ‘மோஷன் டிரேடர்’ எனும், ‘அப்’ ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இதன் மூலம், சி.சி.டி.வி., கெமராவில் பதிவாகும் முகங்களை, அவரவர் மொபைல் போனில் பதிவு செய்யவும் மொபைல் போன்களில் கெமராவை ஓன் செய்யாமல், சென்சார் மூலம் முகங்களை பதிவு செய்யும் வசதி உள்ளது.
72க்கும் மேற்பட்ட கேம்ஸ் அப் உருவாக்கி, 30 அப்களை, கம்பெனிகளிடம் விற்பனை செய்துள்ளார். ’ரோபோனாட்டிக்ஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கி, நடத்தி வரும் மாணவர் ரிஷிகுமார் கூறியதாவது:
‘இன்டர்நெட் மூலம் அப்களை உருவாக்கவும், ரோபோக்களை செயல்படுத்தும் புரோகிராம்களை உருவாக்கவும் கற்றேன். ‘மோஷன் ட்ரேடர்’ ஆப் முதலில் உருவாக்கி, அதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவு செய்து, செயல்படுத்தினேன்.
நான் உருவாக்கி உள்ள ஜார்விஸ் மினி சி.பி.யு.,வை, குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் மாதம், 2.50 லட்சம் ரூபாய் (இந்திய ரூபா) சம்பாதிக்கிறேன்.
இதில், 50 சதவீத தொகையை என் கண்டுபிடிப்புகளுக்கும், 30 சதவீதத்தை ஆதரவற்றோர், ஏழை மாணவர்கள் கல்வி செலவுக்கும் உதவி வருகிறேன்.
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, கென்விதானே படேல் கம்பெனியில், சி.இ.ஓ.,வாக பணியாற்ற, எனக்கு அழைப்பு வந்துள்ளது. மேலும், பல கம்பெனிகளில் வேலை வாய்ப்புகள் தேடி வருகின்றன, என்றார்.
கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 250 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
அதிக வேகம், குடிபோதை மற்றும் நித்திரையின்மையே பல விபத்துக்கள் ஏற்பட காரணம் என சபையின் தலைவர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் தடுப்பு கட்டமைப்புகள் (பிரேக்) ஒழுங்கான முறையில் செயற்படாமையே பல விபத்துக்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
எப்படியிருப்பினும் விபத்துக்கள் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக பேராசிரியர் சிசிர கோதகொட மேலும் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் தொடர்பாக இலங்கை மக்கள் விழிப்படைய வேண்டிய காலகட்டம் வந்துள்ளதாக சமூக ஆர்வலர்களும் கல்வியியலாளர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
சமூக வலைத் தளங்களின் பயன்பாடு காரணமாக நாட்டில் சமூக சீர்கேடுகள் மோசமாக அதிகரித்து வருவதன் காரணமாகவே இவ்விடயமானது சமூகத்தின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் கடந்த வாரம் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்பெண் தொடர்பாக முகநூலில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததாகவும், அதனால் உண்டான அவமானம் காரணமாகவே இப்பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சமூக வலைத் தளங்களின் ஆதிக்கம் காரணமாக எமது சமூகத்தில் உருவாகி வருகின்ற பாரதூரமான பிரச்சினைக்கு எடுத்துக்காட்டாக இச்சம்பவம் அமைந்துள்ளது.
முகநூல் பாவனை காரணமாக எமது இளைஞர், யுவதிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் தொடர்பாக ஒருசில தகவல்கள் மாத்திரமே வெளிவருகின்றன. ஏராளமான தகவல்கள் வெளிவராமலேயே அமுங்கிப் போகின்றன.
முகநூல் தொடர்பினால் ஏற்படுகின்ற சமூக சீர்கேடுகளில் பாலியல் ரீதியான குற்றச் செயல்களே அதிகளவில் காணப்படுகின்றன.
ஒருவரின் அந்தரங்கங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதால் ஏற்படுகின்ற இழுக்கு, மன அழுத்தம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இளைஞர், யுவதிகளே சமூகவலைத்தளங்கள் மீது அதிகளவில் ஈர்க்கப்படுகின்றனர். முகநூல் வாயிலாக இளைஞர்களும் யுவதிகளும் மிக இலகுவாகவே தொடர்பு கொள்வதற்கான பாதை திறந்து விடப்படுகின்றது.
இளைஞர், யுவதிகளுக்கு முகநூல் மீது ஏற்படுகின்ற ஈர்ப்புக்குக் காரணமாக எதிர்பால் கவர்ச்சியையும் கூற முடியும்.முன்பின் அறிமுகமில்லாத ஒருவரின் பின்புலம் எவ்வாறிருக்குமென்பது எமக்குத் தெரிவதில்லை.
எமது சமூகத்தில் நல்லவர்களெனக் கூறக் கூடியோர் எத்தனை பேர் உள்ளனரோ, அதனை விடக் கூடுதலானோர் தீயவர்களாகவே உள்ளனர்.
மற்றையோருக்குத் தீங்கிழைப்பதையே சுபாவமாகக் கொண்டோரின் எண்ணிக்கையே உலகில் அதிகம் எனலாம்.ஆனால் நல்லவர்களையும் தீயவர்களையும் கூட சமூக வலைத்தளங்கள் இணைத்து விடுகின்றன.
இவ்வாறான தவறான தொடர்புகளால் இளைஞர்களைப் பார்க்கிலும் யுவதிகளே கூடுதலாகச் சீரழிக்கப்படுகின்றார்கள். காதல் என்ற போர்வையில் சிக்கலுக்குள் வீழ்ந்த பலரின் எதிர்காலமே சின்னாபின்னமாகிப் போயுள்ளது.
இளைஞர், யுவதிகள் பலர் தங்களது நற்பெயரையே கெடுத்துக் கொண்டுள்ளார்கள்.சமூக வலைத் தளங்கள் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து கல்விச் சமூகம் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்து வருகின்ற போதிலும் பெற்றோர் மத்தியில் இன்னுமே விழிப்புணர்வு ஏற்படுவதாக இல்லை.
மாணவர்களின் கைகளில் ஸ்மாட் போன்களை பெற்றோர் வாங்கிக் கொடுப்பதற்கான காரணம் என்னவென்பதை அறிய முடியாதிருப்பதாக கல்விச் சமூகத்தினர் கூறி வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஸ்மாட் போன்களை வாங்கிக் கொடுப்பதன் வாயிலாக சமூக சீரழிவுகளுக்கு பெற்றோர் வழியைத் திறந்து விடுகின்றனரென்பது பொதுவான குற்றச்சாட்டாக இருக்கின்றது.
கையில் ‘ஸ்மாட்போன்’ இல்லாத மாணவர்களை இப்போதெல்லாம் காண்பது அரிது. ஒரு கையில் பாடப்புத்தகமும், மறுகையில் ஸ்மாட்போனுமாக அவர்கள் வீதியில் நடமாடுவது சாதாரண காட்சியாகும்.
இளைஞர்கள் இப்போதெல்லாம் மனிதர்களுடன் நேருக்குநேர் பேசுவதை கூடியளவில் தவிர்த்து வருகின்றனர். கருவியுடனேயே அவர்கள் பேசுகின்றனர், பழகுகின்றனர்.
மக்களுடனான நேரடித் தொடர்பு இல்லாமல் போன நிலையில், தொலைபேசிக் கருவியென்பதே அவர்களுக்குத் துணையாகிப் போயுள்ளது.
கல்வியையும் எதிர்காலத்தையும் சீரழிக்கின்ற கைத்தொலைபேசிப் பாவனையிலிருந்து மாணவர்களை விலக்கி வைக்கின்ற காரியத்தையே பெற்றோர் இப்போது செய்ய வேண்டியிருக்கின்றது.
மாணவர்கள் முகநூலுக்கு அடிமையாகிப் போவது ஆரோக்கியமான அறிகுறியல்ல. இது கட்டுப்படுத்தப்பட வேண்டியதாகும்.
கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது மேற்குலகத்தில் ஆகும். ஸ்மாட்போன் உட்பட அத்தனை நவீன சாதனங்களின் கண்டுபிடிப்பாளர்களும் மேற்குலகத்தினராவர். ஆனால் ஸ்மாட்போன் போன்ற நவீன சாதனங்களுக்கு மேற்கு நாட்டவர்கள் இன்னுமே அடிமையாகி விடவில்லை.
கைத்தொலைபேசியை இயக்கியபடி மேற்கு நாடுகளின் வீதியில் அம்மக்கள் நடமாடுவதை எம்மால் காண முடிவதில்லை. கைத்தொலைபேசியில் உரையாடியபடி சென்றதால், வீதியில் வாகனங்களில் அவர்கள் மோதுண்ட செய்தியையும் நாம் அறிந்திருக்கவில்லை.
தொலைபேசியில் உரையாடியடி ரயில் பாதையினால் சென்று ரயிலில் மோதுண்டு இறந்த செய்தியையும் மேற்கு நாடுகளில் நாம் கேள்வியுற்றதில்லை.இலங்கை போன்ற நாடுகளிலேயே இவ்விதமான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
வீதிவிபத்துகள், ரயிலால் மோதுண்டு மரணமடையும் சம்பவங்கள், சமூக சீர்கேடுகள் போன்ற அத்தனை காரியங்களும் இங்குதான் இடம்பெறுகின்றன. ‘ஸ்மாட்போன்’ மூலம் ஏற்படுகின்ற அவலங்கள் உண்மையில் இங்கு பெருகித்தான் போய் விட்டன.
இது தொடர்பாக இளைஞர், யுவதிகளை அறிவுறுத்தும் ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் அவலங்கள் தொடரவே செய்கின்றன.
சமூகவலைத்தளம் என்பது சமூகச் சீர்கேட்டுக்கான நுழைவாயில் ஆகி விட்டதால், எமது சமூகம் விழிப்படைய வேண்டியது இப்போது அவசியமாகியுள்ளது.
தமது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவரை நாடு கடத்துமாக கனேடியகுடிவரவு மற்றும் அகதிகள் சபை கட்டளையிட்டுள்ளது. ரேடியோ கனடா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
எனினும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சிவலோகநாதன் தனபாலசிங்கம், இந்ததீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும்.
இந்தநிலையில் அவரை நாடு கடத்தும் கட்டளையை நடைமுறைப்படுத்த காலம் செல்லும் என்றுகனேடிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டு தமது மனைவியான அனுஜா பாஸ்கரனின் சடலம் குடியிருப்பு ஒன்றில்கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து சிவலோகநாதன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டார்.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை சாதிக்க வேண்டுமானால் வீரர்களின் களத்தடுப்பும் உடற்தகுதியும் உயரிய நிலையில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசன்க குருசின்ஹ தெரிவிக்கின்றார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக தனது ஆரம்பப் பயணம் திருப்திகரமாக அமைவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார். தென் ஆபிரிக்காவில் இலங்கை அணி வாங்கிக்கட்டியபோதிலும் சொந்த மண்ணில் பங்களாதேஷை டெஸ்ட் தொடரில் வெற்றிகொண்டிருக்க வேண்டிய எதிர்பார்ப்பு தாராளமாக இருந்தது.
ஏனெனில் கடந்த காலங்களில் இலங்கையிடம் பங்களாதேஷ் வாங்கிக்கட்டிய அணியாகவே இருந்தது. இதற்கு முன்னர் ஏழு டெஸ்ட் தொடர்களில் பங்களாதேஷை இலங்கை தொடர்ச்சியாக வெற்றிகொண்டிருந்தது. எனினும் டெஸ்ட் தொடரில் மட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் ஆகிய மூன்றும் 1 – 1 என்ற சமநிலையிலேயே முடிவடைந்தது.
இதன்மூலம் பங்களாதேஷ் முதல் தடவையாக எந்தத் தோடரிலும் இலங்கையிடம் தோல்வி அடையாமல் நாடு திரும்பியமை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். ‘‘இந்த முடிவுகள் எமக்கு பொருத்தமானவை அல்ல.
இந்த மூன்று தொடர்களிலும் நாங்கள் வெற்றிபெற்றிருக்கவேண்டும். சொந்த மண்ணில் விளையாடியதால் மூன்று தொடர்களையும் சமப்படுத்தினோம் என்று கூறுவது சரியல்ல. தொடர்களை வெல்வோம் என எதிர்பார்த்திருந்தோம்’’ என அசன்க குருசின்ஹ சர்வதேச இருபது 20 தொடர் முடிவில் கூறினார்.
கடைசி சர்வதேச இருபது 20 போட்டியில் 177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறியதால் தோல்வியைத் தழுவியதுடன் மஷ்ராபே மோட்டாஸா வெற்றியுடன் இருபது 20 போட்டியிலிருந்து விடைபெற்றார்.
‘‘கடைசிப் போட்டியைப் பொறுத்தமட்டில் துடுப்பாட்டம் ஏமாற்றம் அளிக்கின்றது. ஆடுகளத்திற்கு எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் ஏதோ ஒன்று எங்கோ பிழைத்துவிட்டது. இவற்றுக்கு பதில் கூறுவது இலகுவல்ல. இதுதான் நாட்டிலுள்ள அதி சிறந்த ஆடுகளம். முதல் ஐந்து துடுப்பாட்டக்காரர்கள் பிரகாசித்திருக்க வேண்டும். இங்கு ஓட்டங்களைப் பெறமுடியாதென்றால் அது பிரச்சினையாகத் தான் இருக்கப்போகின்றது’’ என்றார் அசன்க குருசின்ஹ.
களத்தடுப்பில் அதீத ஆற்றல்களை வெளிப்படுத்துபவர்களே சம்பியன் கிண்ணத்திற்கான தேர்வுக்கு தகுதி உடையவர்கள் என்பதில் தானும் தெரிவுக் குழுத் தலைவரும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அசன்க மேலும் கூறினார். இப் போட்டிக்கான இறுதிக் குழாம் இம் மாதம் 25ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
‘‘களத்தடுப்பு தொடர்பில் வீரர்களுக்கென சில திட்டங்களை வைத்துள்ளோம். வீரர்கள் திடகாத்திரத்துடன் இருந்தால் அவர்கள் களத்தடுப்பு, துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய சகலவற்றிலும் சிறப்பாக செயல்படுவர்.
உள்ளூர் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தார்கள் என்ற காரணத்திற்காக யாரையும் தெரிவு செய்வதில்லை என்ற தெளிவான தகவலை தெரிவுக் குழுத் தலைவரும் நானும் வெளியிட்டுள்ளோம்.
களத்தடுப்பில் வீரர்கள் குறிப்பிட்ட தராதரத்தை அடைவதுடன் உடற்தகுதியும் உயரிய நிலையில் இருப்பது அவசியம்’’ என அசன்க குருசின்ஹ மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இரு வார கால இடைவெளியில் பாரிய 10 மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 15 அடிகளை விட நீளமான இரு பாம்புகளும் அடங்கும்.
இவற்றில் மிகப் பெரிய பாம்பு 15 அடி மற்றும் 10 அங்குல நீளமானது. இரண்டாவது மிகப் பெரிய பாம்பு 15 அடி மற்றும் 2 அங்குல நீளமானது. பாம்புப் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரம் கொண்டுள்ளவர்களால் இப் பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிக்கலஸ் பனோஸ், லியனார்டோ சான்சஸ் ஆகியோர் அண்மையில் 15 அடி நீளமான மலைப்பாம்பை பிடித்தனர். பர்மிய மலைப்பாம்புகள் புளோரிடா மாநிலத்தில் பொது இடங்களை அழிப்பதுடன், சுற்றாடல் உணவுச் சங்கிலிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், தென் புளோரிடா நீர் முகாமைத்துவத் துறை அதிகாரிகளால் 175,000 டொலர் செலவில் பாம்புகளைப் பிடிப்பதற்கான திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் 25 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பாம்புகளைப் பிடிப்பதற்கு இவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நாளாந்தம் 8 மணித்தியாலங்கள் வரை மணித்தியால அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. 4 அடிகளுக்கு மேற்பட்ட பாம்புகளைப் பிடித்தால் மேலதிகமாக 50 டொலர்கள் (சுமார் 7,650 ரூபா) வழங்கப்படும். அத்துடன், மிகப் பெரிய பாம்புகளுக்கு 4 அடிக்கும் அதிகமான ஒவ்வொரு அடி நீளத்துக்கும் 25 டொலர்கள் (3,825 ரூபா) வழங்கப்படும்.
இதன்படி, 15 அடி நீளமான பாம்புக்கு 275 டொலர் (சுமார் 42, 075 ரூபா) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிண்ணியா அஹமட் லேன் பகுதியைச் ஒருவரே காயமடைந்த நிலையில் திருகோணமலை பொதுவைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.