வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரம் பத்தாம் நாள் உற்சவம் !(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பத்தாம் நாள்உற்சவம் 04-04 -2017 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தில் காலை முதல் மகோற்சவ குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் தலைமையில் ஆரம்பமான அபிசேகங்களை தொடர்ந்து மதியம் வசந்த மண்டப பூஜையின் பின் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் சிங்க வாகனத்திலும் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் ஆகியோர் இடப வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர் .

அன்றைய தினம் மாலையில் மஞ்ச திருவிழாவிற்குரிய உற்சவங்கள் கிரியைகளின் இறுதியில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப வாகனத்திலும் விநாயகர் மூசிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் ஆகியோர் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர்.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் முதிரை மரப் பலகைகள் கைப்பற்றப்ட்டுள்ளன!!

 
வவுனியா ஈச்சங்குளத்தில் நேற்று (04.04.2017) இரவு 8.30மணியளவில் சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளை கடத்த முற்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈச்சங்குளத்திலிருந்து நேற்று (04.04.2017) இரவு 8.30மணியளவில் பட்டா ரக வாகனத்தில் முதிரை மரப்பலகைகளை கடத்துவதாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரிய ரத்ன தலமையிலான நிர்பான் (87218) , கரன் ( 88562) , பாரதிராஜா (73919) , வித்தான ( 51424) , நவின் ( 2803) , அவதிசங்க 76702 , குணரத்ன ( 87189) , முரிஸ் (86743) ஆகிய பொலிஸாரினால் ஈச்சங்குளம் சந்தியில் வைத்து முதிரை மரக்குற்றிகளை கடத்த பயன்படுத்தப்பட்ட பட்டா ரக வாகனத்தினை கைப்பற்றியதுடன் பட்டா ரக வாகனத்தின் சாரதியை (45வயது) கைது செய்துள்ளனர்.

44முதிரை மர பலகைள் கைப்பற்றப்பட்டுள்ளதாவும் இதன் பெறுமதி சுமார் இரண்ரடை இலட்சம் எனவும் தெரிவித்தனர்.

இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னேடுப்பதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது விபரங்களை உடனடியாக பதிவு செய்யுமாறும், ஒருவார காலத்திற்குள் அவர்களது விபரங்களை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கா.ஜெயவனிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் அளிக்க அவர்களின் விபரங்களை கோரியதற்கிணங்க ஒரு வார காலத்தில் விபரங்களை கையளிப்பதாக தெரிவித்திருந்தோம்.

அதற்காக செவ்வாய்கிழமை முதல் வெள்ளிகிழமை 12 மணிவரை பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. இதனால் உறவினர்கள் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க தலைவி ஜெயவனிதா தெரிவித்தார்.

அமெரிக்காவில் இளம் மாணவியின் உயிரைப் பறித்த கேக்!!

அமெரிக்காவில் கேக் சாப்பிடும் போட்டியொன்றில், இளம் மாணவி ஒருவர் கேக் துண்டு தொண்டையில் அடைத்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தோற்றத்தில் அழகானவர் மட்டுமன்றி படிப்பிலும் கெட்டிக்காரியான கெயிட்லின் நெல்சன் (20) அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவக் கல்லூரி மாணவி.

கல்லூரியில் அண்மையில் பான்கேக் சாப்பிடும் போட்டியொன்று நடைபெற்றுள்ளது.

இதில் கெயிட்லினும் கலந்துகொண்டுள்ளார். போட்டி ஆரம்பித்த சில நொடிகளில் மளமளவெனக் கேக்குகளைச் சாப்பிட ஆரம்பித்த கெயிட்லின், நான்காவது துண்டைச் சாப்பிடும்போது எதிர்பாராத விதமாக கேக் அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டது.

அடுத்தடுத்து சாப்பிட்ட கேக் துண்டுகள் சரிவர உணவுக் குழாயினுள் இறங்காமல் சுவாசக் குழாயை அடைத்ததால் மூச்சுத் திணறி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக கெயிட்லினை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோதும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடுக்கடலில் தீப்பிடித்த சர்வதேச கப்பல் : காப்பாற்றிய இலங்கை கடற்படை!!

பனாமா கொடியுடன் பயணித்த டெனிலா என்ற சரக்கு கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து 11 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைக்கு, கப்பலின் உள்ளூர் பிரதிநிதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.அதற்கமைய உடனடியாக செயற்பட்ட இலங்கை கடற்படையினர், தீயினை கட்டுப்படுத்துவதற்காக பீ 412 மற்றும் பீ 436 என்ற வேக தாக்குதல் படகுகள் இரண்டினை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் கொழும்பு துறைமுகத்தில் உள்ள இராவணா மற்றும் மஹாவெவ் என்ற இழுபறி படகுகள் இணைக்கப்பட்டுள்ளன. இராவணா மற்றும் மஹாவெவ் இழுபறி படகுகள் தீ பிடித்த கப்பலுக்கு அருகில் சென்று தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் வரை பீ 412 மற்றும் பீ 436 என்ற வேகமான தாக்குதல் படகுகள், அந்த கப்பல் ஊழியர்களின் உயிரை காப்பாற்றுவதற்கும், கப்பலில் ஏற்பட்ட நட்டத்தை குறைப்பதற்காகவும், நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய இராவணா மற்றும் மஹாவெவ் இழுபறி படகுகளினால் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரையில் 2 தாக்குதல் படகுகளும் கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் காரியல் மற்றும் ஐ.என்.எஸ் தர்ஷாக் ஆகிய இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

கொழும்பில் இருந்து மேற்கு பகுதியில் 11 கடல்மைல் தொலைவில் வணிகக் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. தீயை அணைக்கும் பணிக்காக கடற்படை கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே சர்மா தெரிவித்துள்ளார். எனினும் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

இலங்கைக்கு உச்சத்தில் சூரியன் : கடும் வெப்பநிலை மேலும் நீடிக்கும் அபாயம்!!

இலங்கைக்கு நேர்கோட்டில் சூரியன் காணப்படுவதால் நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை எதிர்வரும் 15ம் திகதி வரை நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் 30 செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுவதாகவும் இன்று பிற்பகல் 12.15 மணியளவில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியன் நேராகக் காணப்படும் என்றும் அந்த மாவட்டத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் மேற்படி நிலையம் தெரிவிக்கின்றது.

இந்த வெப்பநிலை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும்15 ம் திகதி காணப்படுவதோடு அத்துடன் வெப்பநிலை தணிந்து விடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

இலங்கைக்கு நேர்க் கோட்டில் சூரியன் காணப்படுவதால் தற்போது நாட்டில் வீசும் காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாகவும் அந்நிலையம் தெரிவித்தது.

இதேவேளை, மேற்கு மற்றும் தென் மாகாணத்தின் சில பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு(passport), வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருட்டு போனது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது பை திருட்டு போனதாக கூறப்படுகிறது.

அந்த பையில், அவரது கடவுச்சீட்டு, வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை இருந்ததாக தெரிகிறது.

பாஸ்போர்ட் திருட்டு போனது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் அளித்தார்.

அதையடுத்து அவருக்கு உடனடியாக மாற்று பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இதற்காக இந்திய தூதரகத்துக்கு தனது ‘முகநூல்’ பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துள்ளார்.

கணவனை கொன்று கழிவறை குழியில் புதைத்த மனைவி!!

 
திஸ்ஸமஹாராம, யோதகண்டிய, உத்தகந்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொலை செய்து வீட்டில் உள்ள கழிவறை குழியில் புதைத்து வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தங்காலை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனபால அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி தனது கணவன் வீட்டில் இருந்து சென்றதாகவும் அன்றில் இருந்து வீடு திரும்பவில்லை எனவும் தெரிவித்து குறித்த பெண் கடந்த மாதம் 18ஆம் திகதி திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், “எனது கணவன் மதுபோதையில் வீட்டுக்கு வந்து காலை உணவை கேட்டு என்னுடன் சண்டையிட்டார், அப்போது நான் அவரை தள்ளி விட்டடேன், இதனால் அருகில் இருந்த தண்ணீர் தாங்கியில் பட்டு கீழே விழுந்தார். இதன் பின்னரே நான் என் கணவனை தாக்கி கொலை செய்தேன்” என குறித்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர், வீட்டுக்கு அருகில் புதிதாக வெட்டப்பட்டிருந்த கழிவறை குழியில் உடலை போட்டு மூடியதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

34 வயதான மில்கோயா என்று அழைக்கப்பட்ட வீரசிங்க ஆராச்சிகே பிரியந்த என்பவரே இவ்வாறு மனைவியால் கொலை செய்யப்பட்ட நபர் என மேலும் தெரியவந்துள்ளது.

நியூயோர்க்கை விட மூன்று மடங்கு பெரிய நகரை உருவாக்க சீனா திட்டம்!!(வீடியோ)

நியூயோர்க் நகரை விட மூன்று மடங்கு பெரிய நகரத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுச்சூழல் மாசு மற்றும் நெரிசலைத் தவிர்க்க சீனா இத்தகைய நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சினுவா செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் அதிகாரமிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்ற கூட்டத்தில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் பெரிய நகரம் ஒன்றை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்படும் இந்த நகரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என சீன அதிபர் ஷீ ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் நாற்­ற­ம­டிக்கும் பாத­ணி­க­ளுக்­கான போட்டி!!

 
பாத­ணிகள் நாற்­றத்தை சகித்­துக்­கொள்ள முடி­யாது. ஆனால், மிகவும் நாற்­ற­ம­டிக்கும் சப்­பாத்­து­க­ளுக்­கான போட்டி அமெ­ரிக்­காவில் அண்­மையில் நடை­பெற்­றது.

வரு­டாந்தம் நடை­பெறும் இப்­போட்டி 42 ஆவது தட­வை­யாக நடை­பெற்­றது. இவ்­வ­ருடப் போட்டி நியூயோர்க் நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது. அமெ­ரிக்­காவின் அலாஸ்கா, நியூ மெக்­ஸிகோ, கொல­ராடோ உட்­பட பல்­வேறு மாநி­லங்­க­ளி­லி­ருந்தும் போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­றினர். 4 நடு­வர்கள் பாத­ணி­களை மணந்­து­பார்த்து புள்­ளி­களை வழங்­கினர்.

12 வய­தான கொனோர் ஸ்லோகொம்பே எனும் சிறுவன் கொண்­டு­வந்த சப்­பாத்து மிக நாற்­ற­ம­டிக்கும் பாத­ணி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டது. அச்­சி­று­வ­னுக்கு வெற்­றிக்­கிண்­ணத்­துடன் 2,500 டொலர் (சுமார் 38,000 ரூபா) பணப்­ப­ரிசு வழங்­கப்­பட்­டது.

பாத­ணி­களை நாற்­ற­ம­டிக்கச் செய்­வ­தற்­காக பல்­வேறு உபா­யங்கள் பின்­பற்­றப்­பட்­ட­னவாம். ஒரு­போதும் காலு­றை­களை (சொக்ஸ்)அணி­யா­தி­ருத்தல், சேற்றுக்கூடாக நடத்தல் ஆகிய நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டதாக போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோவில் பயணித்த நபருக்கு பியரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகை, பணம் கொள்ளை!!

வீதியில் நின்­றி­ருந்த நபர் ஒரு­வரை முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிச் சென்று அவ­ருக்கு ஒரு­வகை மாத்­திரை கலந்த பியரை அருந்தக் கொடுத்து பாழ­டைந்த இட­மொன்றில் வைத்து அவர் அணிந்­தி­ருந்த சுமார் 1,75,000 ரூபா பெறு­ம­தி­யான தங்கச் சங்­கிலி மற்றும் பணத்தைக் கொள்­ளை­யிட்டுக் கொண்டு தப்பிச் சென்ற முச்­சக்­கர வண்­டியின் சார­தியை முச்­சக்­கர வண்­டி­யுடன் நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொழும்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த 48 வய­தான முச்­சக்­கர வண்­டியின் சார­தியே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் வென்­னப்­புவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 50 வய­து­டைய நபரே இச்­சம்­ப­வத்­திற்கு முகங்­கொ­டுத்­த­வ­ராவார்.

கைது செய்­யப்­பட்ட முச்­சக்­கர வண்­டியின் சாரதி கொழும்­பி­லி­ருந்து சிலா­பத்­துக்கு வந்­து­விட்டு மீண்டும் கொழும்­புக்குத் திரும்பிக் கொண்­டி­ருந்த போது வென்­னப்­புவ பிர­தே­சத்தில் பஸ்­ஸூக்­காக காத்­தி­ருந்த நபர் ஒரு­வரை முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிக் கொண்டு சென்­றுள்­ள­தா­கவும் பின்னர் வென்­னப்­புவ பஸ் தரிப்­பி­டத்­துக்கு அருகில் வைத்து இரு­வரும் பியர் அருந்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு பியர் அருந்­திய பின்னர் மயக்­க­ம­டைந்த நபர் கழுத்தில் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கிலி மற்றும் அவ­ரி­ட­மி­ருந்த பணத்­தையும் கொள்­ளை­யிட்டுக் கொண்­டுள்ள முச்­சக்­கர வண்­டியின் சாரதி மயக்க நிலை­யி­லி­ருந்த நபரை நைனா­மடம் பிர­தே­சத்தில் வீதியில் இறக்கி விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.

துபாயில் கடற்­கரை நூலகம் திறப்பு!!

 
ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் ஒரு பிரந்­தி­ய­மான துபாயில் கடற்­கரை நூலகம் (பீச்லைப்­ரரி) திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. துபாய் மாந­கர சபை­யினால் கடந்த சனிக்­கிழமை இந்த நூலம் திறந்­து­வைக்கப்பட்டது.

கடற் ­கரைக்குச் செல்­ப­வர்கள் புத்­த­கங்­களை வாசிப்­பதை ஊக்­கு­விப்­ப­தற்­காக இத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மத்­திய கிழக்கில் இத்­த­கைய கடற்­கரை நூலகம் ஸ்தாபிக்­கப்­பட்­டமை இதுவே முதல் தட­வை­யாகும். அரபு மற்றும் ஆங்­கில மொழி மூல­மான நூல்கள் இங்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

துபாய் கடற்­க­ரை­களில் 8 கடற்­கரை நூல­கங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் துபாய் மாந­கர சபை அறி­வித்­துள்­ளது . இந்­நூ­ல­கங்கள் சூரிய ஒளிமூல­மான மின்­சா­ரத்தைப் பெறு­வ­துடன் தானாக ஒளிர்ந்து அணையும் மின் விளக்குகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு கால்களும் ஊனமான நிலையில் பிச்சையெடுத்த நபர் : மக்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி!!

இரு கால்களுடன் ஊனமான நிலையில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் செயல் பிரதேச மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கம்பஹா, கலவானை பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

மிகவும் கஷ்டமான நிலையில் பிச்சையெடுத்து கொண்டிருந்த நபர் ஒருவர் தனது இறுதி பஸ்ஸில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் தினமும் காலை முதல் மாலை வரை நகரத்திற்கு வரும் மக்களிடையே தமக்கு இரு கால்கள் இயலாமையினால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் தனது வயிற்று பசிக்காக தான் பிச்சையெடுப்பதாகவும் தெரிவித்து பஸ்களில் கஷ்டப்பட்டு ஏறி பிச்சையெடுத்து வந்துள்ளார்.

இவரின் மீது இரக்கம் கொண்ட மக்கள் அவருக்கு உணவு மற்றும் பணமும் வழங்கி வந்துள்ளனர். இந்த நடவடிக்கை தினசரி நடைப்பெற்று வந்துள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள தினத்தில் இந்நபர் செல்லும் கடைசி பஸ் செல்வதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது. குறித்த நபர் மலசலக் கூடத்திற்கு சென்று தனது உடையினை மாற்றிவிட்டு வருவதற்கு முன் அவர் செல்லவேண்டிய பஸ் புறப்பட்டுச் சென்றுள்ளது.

அருகாமையில் இருந்த முச்சக்கரவண்டியின் ஏறியில் குறித்த பஸ்ஸினை பிடிக்க விரட்டிச் சென்று பஸ்ஸின் பின்புறமாக நிறுத்தி முச்சக்கரவண்டியிற்கு பணம் செலுத்தும் வேளையில் பஸ் புறப்படுவதை கண்ட குறித்த நபர், ஊன்றுகோல் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் ஓடிச்சென்று ஏறியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோய்களை உணவு முறைகளின் மூலம் கட்டுப்படுத்தலாமா?

புற்றுநோய்களில் கழுத்து, மூளை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய்களை தெரிவு செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும், வராமல் தற்காத்துக் கொள்ளலாம் என்றும் அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிராக்கோலி மற்றும் சோயா ஆகியவற்றை சமைத்து சாப்பிடுவதால் இதனை கட்டுக்குள் வைத்திருக்க இயலும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இவையிரண்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, இவை செரிமானமாகி Di=indolylmethane என்ற பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் புற்றுநோயை பரப்பும் செல்கள் தொடர்ந்து வளர்ச்சியடையாமல் முடக்கப்படுகின்றன.

அதே போல் தினசரி பழங்களையும்,காய்கறிகளையும் குறைந்த பட்சம் 1000 கலோரி அளவிற்கு உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளத்தொடங்கினால் கழுத்து மற்றும் மூளையில் ஏற்படும் புற்றுநோயை வராமல் தடுக்கவும், வந்தபின் அதனை கட்டுக்குள் வைக்கவும் இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே போல் எக்காரணம் கொண்டும் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, செம்மறியாட்டு இறைச்சி, வெள்ளாட்டு இறைச்சி ஆகியவற்றை அதிகளவில் சாப்பிடக்கூடாது. அதிகளவில் உப்புச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

முதலாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் இன்று மூடப்படுகிறது!!

2017 ஆம் கல்வியாண்டின் முதலாம் தவணை விடுமுறைக்காக அரச மற்றும் அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகள் இன்று மூடப்படவுள்ளன.

மூடப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ள.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக நாளை மூடப்படவுள்ளதுடன் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

உலக சாதனை படைத்த வைர விற்பனை!!

 
இளஞ்சிவப்பு நிறமான நட்சத்திர வைரம் ஒன்று ஏலத்தில் விடப்பட்ட நிலையில், அது அதிக விலையில் விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது.

ஹொங்கொங் நகரில் இன்று (ஏப்ரல் 4) நடைபெற்ற ஏல விற்பனையில் 71.2 மில்லியன் டொலரில் (இலங்கை ரூபா மதிப்பில் 1081கோடியே 81 இலட்சம்) வைரத்தை விற்பனை செய்துள்ளதாக வைரத்தை வைத்திருந்த சொதேபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கு முன் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் விற்பனை செய்யப்பட்ட நீலநிறமான வைரமே (48 மில்லியன் டொலர்கள்) இதுவரை அதிக விலைக்கு விற்பனையான வைரமாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது குறித்தஇளஞ்சிவப்பு வைரம் 71.2 மில்லியன் டொலருக்கு விறபனையாகி உலக சாதனை படைத்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.