வவுனியாவில் பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதல்!!

வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் மீது நேற்று (28.02.2017) மாலை 4.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள இளைஞர் மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் மேலதிக வகுப்புக்களை நிறைவு செய்துவிட்டு வீடு சென்றுகொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் தன்னுடன் மேலதிக வகுப்பில் கல்வி கற்ற மாணவர் ஒருவரையும் தனது துவிச்சக்கரவண்டில் ஏற்றிச் சென்றுள்ளார்.

அதன்போது அப்பகுதியில் நின்ற இளைஞர் ஒருவர் மதுபோதையில் ஆசிரியரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து ஆசிரியர் பாடசாலைக்கு செல்லும் வீதியிலுள்ள கடை ஒன்றில் நின்றுள்ளார்.

எனினும் கடைக்குச் சென்ற குறித்த இளைஞன் ஆசிரியர் ஏற்றிச் சென்ற மாணவனைமுதலில் தாக்கியுள்ளதுடன் ஆசிரியர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இன்று(01.03) காலை ஆசிரியரினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதல் மேற்கொண்ட நபர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியிலுள்ள பாடசாலையைச் சுற்றியுள்ளவர்கள் பாடசாலைக்குள் சென்று அதிபருக்கு பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினை வாபஸ் பெறுமாறு தெரிவித்து வருகின்றனர்.

தாக்குதல் மேற்கொண்ட இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய மகாராணியோடு கைகுலுக்கிய நடிகர் கமல்ஹாசன்!!

இங்கிலாந்து- இந்தியா இடையேயான 2017 ஆண்டு கலாசார வரவேற்பு விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது.

இந்த விழாவினை பிரித்தானியா மகாராணி எலிசபெத் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் மகாராணியின் கணவர் பிலிப், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தியா சார்பில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நடிகர் கமல்ஹாசன், சுரேஷ் கோபி, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், பேஷன் டிசைனர் மனிஷ் அரோரா, மனிஷ் மல்கோத்ரா மற்றும் சித்தார் மாஸ்ட்ரோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது என கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது, பிரதமர் மோடி எனது பெயரை முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். இந்தியா- இங்கிலாந்து இடையேயான வரலாற்றை, கலாச்சார விழாவாக கொண்டாடும் இந்த தருணம் மிகச்சிறந்தது.

இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது சிறப்பான ஒன்று என்று கூறியுள்ளார்.

70 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதற்கு தயாராக இருக்கும் நாம், அன்றைய நாட்களில் அரும்பாடும்பாட்டு, இந்தியாவிற்கும்- இங்கிலாந்திற்கும் இடையேயான உறவை ஏற்படுத்திக்கொடுத்த நம் நாட்டின் உயிர்நாடி மகாத்மா காந்தி அவர்களை நினைவு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில், அதிகமாக இந்திய உணவுகள், இந்திய பாராம்பரிய நடனங்கள் மற்றும் இந்திய மலர்கள் பயன்படுத்தப்பட்டன.

350 காதலிகளுடன் சொகுசு வாழ்க்கை நடாத்திய நபர்!!

ஆந்திராவை சேர்ந்த ரத்னா ரெட்டி என்பவர் 350 பெண்களை காதலித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

ஆங்கிலம் உட்பட பல்வேறு பல்வேறு மொழிகளை சரளமாக பேசும் திறமை பெற்ற இவர், இதனை பயன்படுத்தி பெண்களை தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.

பல்வேறு திருமண இணையதளங்களில் தனது பெயரை பதிவு செய்து கொண்ட இவர், அதன் மூலம் பெண்களுடன் பழகியுள்ளார். இணையதளத்தில் மூலம் சுமார் 350 பெண்களை காதலித்து வந்துள்ளார். இதில் கனடிய பெண் ஒருவரும் அடங்குவார்.

திருமண தளத்தில், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பல்வேறு பெண்களுக்கு திருமண தூது அனுப்பிய இவரின் இந்த மோசமான செயலை சைபர் கிரைம் கண்டுபிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஐதராபாத் பொலிசார் நடத்திய விசாரணையில், நடத்தப்பட்ட விசாரணையில், ரெட்டி என்ற இவர் இதற்கு முன்னர், 9 குற்றசெயல்களில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் என்பதை அறிந்த பொலிசார், அவரை விரைந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

350 பெண்களை காதலித்து வந்துள்ளாரே தவிர அவர்களை திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் : ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு : பதவியை துறக்கும் சசிகலா?

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரும் அரசியல் தலைமைத்துவத்திற்கான இடைவெளி ஏற்பட்டிருப்பதுடன், அதிமுகவில் பனிப்போர் நடந்துவருகிறது.

முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டிருந்தாலும், அந்த முடிவினை வெளிப்படையாக பெரும்பான்மையினர் எதிர்த்துவருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. சினிமா பிரபலங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவினை ஏற்கவில்லை.

இதற்கிடையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று பெரும்பரபரப்பை ஏற்படுத்திய ஓ.பன்னீர்செல்வம், தனக்கென்று ஒரு அணியியை உருவாக்கியிருக்கிறார். அவ் அணியை மேலும் பலப்படுத்த அடுத்தடுத்த நகர்வுகளில் களமிறங்கியிருக்கிறரா்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அது குறித்து வாய் திறக்காமல் இருந்த பன்னீர்செல்வம், பதவி பறிபோன பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அது அனைத்து உண்மைகளையும் சொல்லப்போவதாக சாடைமாடையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொன்னையன் நேற்று முந்தினம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, மார்ச் 8-ம் திகதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மார்ச் மாதம் 8-ம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிவித்திருக்கிறார்.

இதுவொருபுறமிருக்க, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ஏற்கவேண்டும் என்றும், ஜெ.மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கருத்து வெளியிட்டிருக்கிறார். இது ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் சாதகமாக அமைந்திருப்பதாக பன்னீர்செல்வம் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இது தவிர, அதிமுகவின் தற்காலிய பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலா தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என மேலதிக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவருகின்றன.

அதிக இரட்டையர்களை கொண்ட பாடசாலை!!

பாடசாலை ஒன்றில் 28 இரட்டையர் ஜோடிகள் கல்வி கற்றுவரும் நிகழ்வு சீனாவில் இடம்பெற்றுள்ளது.

மத்திய சீனாவின் ஷியான் நகரிலுள்ள, யூயன் ஆரம்ப பாடசாலையில், சுமார் 28 ஜோடி இரட்டைக்குழந்தைகள் கல்விகற்று வருவதாக சீன ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.

குறித்த இரட்டையர்கள் ஒரே வகையான உடைகளை அணிந்து வருவதால், ஆசிரியர்களால் குறித்த மாணவர்களது பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் சிரமமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் சனத்தொகை அதிகமாகவுள்ள நாடான சீனாவில், கடந்த வருடம் ஒரே கிராமத்தில் 39 ஜோடி இரட்டையர்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது ஆரம்ப பாடசாலை ஒன்றில் அதிகளவான இரட்டையர்களை இனங்கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொலிசாருடன் விசாரணைக்குச் சென்ற கைதியை சரமாரியாக வெட்டிய மர்மகும்பல் : அதிர்ச்சி வீடியோ!!

தமிழகத்தில் விசாரணை கைதியை பொலிசார் அழைத்துச் சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் புல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம். இவர் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர் ஜெலட்டின் என்ற குச்சிகள் வைத்திருந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக தூத்துக்குடியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதற்காக பொலிசார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது கே.டி.சி என்ற பகுதிக்கு ஜீப் சென்று கொண்டிருந்த போது கார்களில் வந்த மர்மகும்பல், அவர்களை தடுத்து ஜீப்பின் உள்ளே இருந்த சிங்காரத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்துக்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள்!!

பொதுப் பேருந்துகளில் பயணம் செய்யும் 90%வீதமான பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு சுமார் 2500 தனிப்பட்டவர்களுடன் நேர்காணல் மற்றும் கேள்விக்கொத்துக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாளாந்தம் 12.1 வீத பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாராந்தம் 16.4 வீதப்பெண்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். மாதம் ஒன்றுக்கு 25.8வீதப்பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலியல் தொந்தரவுகள் தொடர்பிலும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பில் 53வீதமானவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

எனினும் பொதுப்போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் பாலியல் தொந்தரவுகளுக்கான சட்டங்கள் குறித்து 74%வீதத்தினர் அறிந்து வைத்திருக்கவில்லை.

இதேவேளை, பொதுப்போக்குவரத்துக்களில் பாலியல் தொந்தரவுகள் காரணமாக 37%வீதப்பெண்கள் தமது பணிகளில் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், 29% வீதமான பெண்கள் தமது கல்வியில் பாதிக்கப்படுவதாகவும், 44%வீதமான பெண்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாவது குழந்தை பெற்றுகொண்டால் ஊக்குவிப்புத் தொகை : சீன அரசு ஆலோசனை!!

சீனாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அரசு, இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பெண்களின் குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவது பற்றி ஆராய்ந்து வருகிறது.

சீனாவின் தேசிய சுகாதார மற்றும் குடும்பத் திட்டமிடலுக்கான ஆணைக்குழுவின் பிரதியமைச்சர் வேங் பியான் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த நான்கு தசாப்தங்களாக, இதே சீனாவில்தான் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் அமலில் இருந்து வந்தது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு பெண் இரண்டாவது குழந்தையைக் கருவுற்றிருப்பது தெரியவந்தால் அவர் கட்டாய கருக்கலைப்புச் செய்துகொள்ளவேண்டும் என்ற சட்டமும் இருந்து வந்தது.

இந்த நிலையில், சீனாவில் மத்திய வயதை உடையவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகக் குறைந்துபோன நிலையில், தேசிய உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் இரத்துச் செய்யப்பட்டு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், பொருளாதாரச் சிக்கல்களால் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள மக்கள் தயங்கிவருவதையடுத்தே ஊக்குவிப்புத் தொகை வழங்குவது பற்றி அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : கைப்பற்றப்பட்ட வெள்ளை வேன் தொடர்பான தகவல்கள் வெளியானது!!

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டுச் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற வேன் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர்.

களுத்துறை – சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வெள்ளை நிற வேன் ஒன்று, ஹொரணை – மொரகஹாஹென பகுதியில் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டது.

குறித்த வேன் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மருதானைப் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட வேன் என்பதோடு குறித்த வேன் திருகோணமலையைச் சேர்ந்த நபருக்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27) காலை 8.30 மணியளவில் களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லையில் இருந்து கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு பாதாள உலகக் கோஷ்டி சந்­தேக நபர்­களை ஏற்றி வந்த சிறைச்­சாலை பஸ் வண்டி மீது களுத்­துறை, மல்­வத்த – எத்­த­ன­ம­டல பகு­தியில் வைத்து சர­ம­hரி­யான துப்­ப­hக்கிச் சூடு நடத்­தப்­பட்­டது.

இதன்போது அந்த பஸ் வண்­டியில் இருந்த பிர­பல பாதாள உலகக் கோஷ்­டியின் தலை­வ­னான ‘ரணாலே சமயா’ அல்­லது சமயங் என அறி­யப்­படும் எம்.பி. அருண தமித் உத­யங்க பத்­தி­ரண உள்­ளிட்ட 5 கைதி­களும் இரண்டு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர். மேலும் நான்கு சிறைச்­சாலை அதி­கா­ரிகள் படு காய­ம­டைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சந்தேக நபர்கள் கெப் ரக வாகனத்தில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு வெள்ளை நிற வேன் ஒன்றில் தப்பிச் சென்றனர்.

சம்பவ இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கெப்ரக வாகனம் கொள்ளையிடப்பட்ட வாகனம் எனவும் இதன் உரிமையாளர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனவும் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேனும் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மருதானை பகுதியில் வைத்து கொள்ளையிடப்பட்ட வேன் என்பதோடு திருகோணமலையைச் சேர்ந்த வேனின் உரிமையாளரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கல்வியைக் கைவிட்டு, நகைகளைத் திருடி பேஸ்புக் காதலர்களுடன் சென்ற மாணவிகள் கைது!!

பாட­சாலை கல்­வியை இடை­நி­றுத்­தி­விட்டு தமது வீடு­க­ளி­லி­ருந்த நகை­களை திருடிக் கொண்டு தமது பேஸ்புக் காத­லர்­க­ளுடன் தப்­பிச்­சென்ற உயர்­தரம் கற்­று­வந்த மாண­விகள் இருவர், பேலி­ய­கொடை பிர­தே­சத்தில் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த நிலையில் மாஹோ பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பேஸ்­புக்கில் அறி­மு­க­மான தமது காத­லர்­க­ளுடன் இம்­மா­ண­விகள் இரு­வரும் முதலில் குறுந்­த­க­வல்­களின் மூலம் தக­வல்­களை பரி­மாறிக் கொள்­வதன் ஊடாக அறி­மு­கமா னதை­ய­டுத்து பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்­தி­விட்டு தொழில்­பு­ரியும் நோக்கில் பேலி­ய­கொடை பிர­தே­சத்தில் வீடொன்­றினை வாட­கைக்கு பெற்று தமது காத­லர்­க­ளுடன் வசித்து வந்­துள்­ளனர்.

பின்னர் இம்­மா­ண­விகள் இரு­வரும் தமது வீட்­டி­லி­ருந்து எடுத்­து­வந்த தங்க நகை­களை வெயாங்­கொட பிர­தே­சத்­தி­லுள்ள அடகு நிலை­ய­மொன்றில் விற்­பனை செய்­த­துடன் அதன்­மூலம் கிடைத்த பணத்தில் தமது வீட்­டுக்கு தேவை­யான பொருட்­களை கொள்­வ­னவு செய்­துள்­ளனர்.

இம்­மா­ண­வர்­களின் காத­லர்­களில் ஒருவர் கடற்­ப­டையில் பணி­யாற்றி பின்னர் அதி­லி­ருந்து வில­கி­யவர் எனவும், மற்­றைய நபர் திரு­மணம் புரிந்­த­வ­ரெ­னவும் அவ­ருக்கு பிள்ளை ஒன்றும் காணப்­ப­டு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் மஹவ பொலி­ஸா­ருக்கு கிடைத்த இரு­வேறு முறைப்­பாடு களுக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் இவர்கள் நால்­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட மாண­வி­களில் ஒரு­வரின் முன்னாள் காத­லனின் மூல­மாக உள­வாளி ஒரு­வரை ஈடு­ப­டுத்தி மாண­விகள் உள்ள இடத்­தினை கண்­டு­பி­டித்­தி­ருந்­த­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

இம்­மா­ண­விகள் இரு­வரும் மஹவ, நாகொல்­லா­கம மற்றும் மொர­கொல்­லா­கம பிர­தே­சத்தை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபர்கள் இருவரும் பமுணுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரியனுக்கு விண்கலம் அனுப்புகிறது நாசா : மூன்று மர்ம முடிச்சுக்கள் அவிழுமா?

அடுத்த ஆண்டு சூரியனுக்கு விண்கலமொன்றை அனுப்ப நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.

விண்கலத்தை அனுப்பி சூரியனை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த நெருப்புக் கோளத்தைச் சுற்றியுள்ள மூன்று மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சூரியனை ஆய்வு செய்ய ஏற்கனவே விண்கலங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் அடுத்த ஆண்டு பயணிக்கவுள்ள விண்கலம் மிக அருகில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி லைவ் சைன்ஸ் இதழில் நாசா விஞ்ஞானி எரிக் கிறிஸ்டியனால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சூரியனை நோக்கிய எங்களது முதல் ஆய்வு இது. நிலவைப் போலவோ, செவ்வாய் கிரகத்தைப் போலவோ இந்த ஆய்வில் சூரியனின் மேற்பரப்பிற்கு சென்று எங்களால் ஆய்வு செய்ய முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், இதுவரை இல்லாத நெருக்கத்திற்குச் சென்று, அதாவது தகிக்கும் சூரியனை எந்த அளவுக்கு தாங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கிச் சென்று எங்களது விண்கலம் ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கிறது.

இதன்மூலம், இதுவரை விடை காண முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வந்த 3 கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடும். சூரியனின் மேற்பரப்பைவிட அதன் வளிமண்டலம் எவ்வாறு பன்மடங்கு வெப்பத்துடன் காணப்படுகிறது, சூரியனின் மேற்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் அக்கினிப் புயலைத் தூண்டுவது எது, விண்வெளியில் மிதக்கும் விண்கலங்கள், விண்வெளி வீரர்கள் ஆகியோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த துகள்களை சூரியன் அவ்வப்போது வெளியிடுவது எப்படி ஆகிய கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்து வந்தது. எங்களது ஆய்வின்மூலம், இவற்றுக்கான விடை கிடைக்கும் வாய்ப்பு முன்னெப்போதையும்விட மிக அதிகமாக உள்ளது.
என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக, 1,370 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தைத் தாங்கக்கூடிய திறனை விண்கலத்திற்குத் தரும் 11.4 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட கரிமக்கலப்புப் பொருளை உருவாக்கியுள்ளனர்.

மேலும், வெப்பத்தால் பாதிப்படையக்கூடிய ஆய்வுக் கருவிகளைப் பாதுகாக்கும் வகையில், புதிய குளிரூட்டிக் குழாய்களையும் தயாரித்துள்ளனர்.

நாசாவின் இந்தத் திட்டத்துக்கு “Solar Probe Plus” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விடை தெரியாத மூன்று மர்மங்களாவன…

1. குளிர் சூரியன்

சூரியனின் வளிமண்டலத்தைவிட அதன் மேற்பரப்பு குளிர்ந்து காணப்படுவதுதான் விஞ்ஞானிகளுக்கே விந்தையாக இருந்து வருகிறது. சூரியன் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500 டிகிரி செல்சியஸ்தான். ஆனால் அதனைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வளிமண்டலத்தின் வெப்பநிலை 20 இலட்சம் டிகிரி செல்ஷியஸ். பூமியின் மேற்பரப்பை விட்டு உயரே செல்லச் செல்ல வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். ஆனால் சூரியனின் மேற்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரிப்பது ஏன் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்!

2. சூரியப் புயல்

சூரியனிலிருந்து சக்திவாய்ந்த துகள்பொருள்கள் அனைத்து திசைகளிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் புயலின் வேகம், மணிக்கு பல இலட்சம் கிலோ மீட்டர்கள். இவ்வளவு உக்கிரமாக வீசும் இந்தப் புயலைத் தூண்டுவது எது என்பதற்கு எந்த விஞ்ஞானியாலும் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை.

3. மர்மக் கதிர்வீச்சு

சூரியனிலிருந்து அவ்வப்போது ஒருவகையான சக்திவாய்ந்த கதிர் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். அந்தக் கதிர்கள் ’எக்ஸ்ரே’ போன்று ஊடுருவும் தன்மை கொண்டவை. தகுந்த பாதுகாப்பு இல்லாவிட்டால், விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக் கலங்களுக்கும் அவற்றின் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கும் அந்தக் கதிர்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்தக் கதிர்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு விடை தெரியா கேள்வியாகவே இருந்து வருகிறது.

கௌதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை!!

நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா ஆனந்த் இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் முத்துராமலிங்கம் படத்தைத் திரையிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா ஆனந்த், நடிகர் நெப்போலியன் இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் படம் முத்துராமலிங்கம்.

குளோபல் மீடியா வேர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரித்து உள்ள இந்த படத்தில் நடிகர்கள் சுமன், சிங்கமுத்து, சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சென்னை உள்பட தமிழகத்தில் பிப்ரவரி 24 முதல் வெளியாகி ஓடி வருகிறது.

இந்த நிலையில், ’யாகூ பைனான்ஸ் கன்சல்டன்ட்´ நிறுவனத்தின் உரிமையாளர் எம்.வி.பிரகாஷ் என்பவர் முத்துராமலிங்கம் படத்தைத் மேலும் திரையிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முத்துராமலிங்கம் படத்தின் தயாரிப்பாளருக்கு 28 லட்சத்து 55 ஆயிரம் கடனாக அளித்தேன். படம் திரையிடுவதற்கு முன்பாக, முழுத் தொகையையும் செலுத்துவதாக தயாரிப்பாளர் என்னிடம் உறுதி அளித்திருந்தார்.

ஆனால் ஒப்பந்தப்படி பணத்தைத் திருப்பித் தரவில்லை. எனவே, அவருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முத்துராமலிங்கம் படத்தின் தயாரிப்பாளர் டி.விஜய் பிரகாஷ், ர29 லட்சத்தைத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டது.

ஆனால், அந்தத் தொகையைச் செலுத்தவில்லை. ஆகையால், படத்தை மேலும் திரையிட தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், முத்துராமலிங்கம் படத்தைத் திரையிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

யுவதியின் படத்தை இணையத்தில் வெளியிட்டு பொலிஸாரிடம் சிக்கிய இளைஞர்!!

யுவதி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தமையின் காரணமாக, குறித்த பெண்ணின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளைஞரையே பதுளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பதுளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த யுவதியை திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்த போதும் யுவதி மற்றுமொரு இளைஞரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் தன்னிடம் இருந்த யுவதியின் நிர்வாணப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞர் கைது செய்யப்பட்டு, பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விஷேட தேவையுடைய மாணவி துஷ்பிரயோகம் : 54 வயதான சாரதி கைது!!

விஷேட தேவையுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கம்புறுபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

54 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 13 வயதான விஷேட தேவையுடைய மாணவி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியை பாடசாலை நேரத்தின் பின்னர் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு ஏனைய பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைக்கு அருகே சென்று பாடசாலை முடியும் வரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனிஷ்ட மாணவர்களை நிர்வாணப்படுத்தி காணொளி பதிவுசெய்த மூன்று மாணவர்கள் கைது!!

கண்டி – குண்டசாலைப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் சில கனிஷ்ட மாணவர்களை துஷ்பிரயோகப்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி சேவைக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த 3 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயிற்சி வகுப்பு ஒன்றின் போது கனிஷ்ட மாணவர்கள் சிலரை நிர்வாணமாக்கி அதனை காணொளியாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மேற்படி 2 மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்களை தெல்தெனிய நீதவான் முன் ஆஜர்செய்யவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்கள் தரம் 11,12 மற்றும் 13 ஆம் வகுப்புளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவுக்கு பயணிக்க முன்பணம் கட்டிய இரண்டு பேர்!!

நிலவுக்குப் பயணம் செய்ய இரண்டு அமெரிக்க தனி நபர்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாக, அமெரிக்க விண்வௌி பயண நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்திருக்கிறது.

2018 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளி பயணம் மூலம் 45 ஆண்டுகளில் முதல்முறையாக மனிதர்கள் நிலவுக்குப் பயணிக்க உள்ளனர்.

இந்தப் பயணத்திற்கு, பெயர் வெளியிடாத இரண்டு பேர் குறிப்பிடத்தக்க வைப்புத்தொகையை செலுத்திவிட்டதாகவும், அவர்கள் முழு மனித குலத்தின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சுமந்து செல்வார்கள் என்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் முஸ்க் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வழங்கும் ஒத்துழைப்புதான், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூற்றை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.