இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஒன்பதாவது ஆண்டு மகோற்சவ பெருவிழா
நிகழும் துர்முகி வருடம் மாசி மாதம் 18ஆம்நாள் (02.03.2017)வியாழகிழமை சதுர்த்தி திதியும் அச்சுவினி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது .
மேற்படி மகோற்சவம் ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்ருகிறது.
இலங்கையில் விமானம் தயாரிக்கும் ஏழ்மையான நபர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அத்துருகிரிய – ஜயந்தி மாவத்தையிவில் வசித்து வரும் ராமசந்திர யசபால ஹெலிகொப்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வயது 55.
பிறவியிலிருந்து வாய் பேச முடியாத குறைப்பாட்டை கொண்டுள்ள இவர், தொழில்நுட்ப ரீதியான செயற்பாட்டில் அபார திறமையை கொண்டுள்ளார்.
சிறு உபகரணங்களை பயன்படுத்தி பறக்கும் சிறிய ரக விமானத்தை தயாரித்து வெற்றி கண்டுள்ளார். அதற்கு மேலதிகமாக பல உபகரணங்களையும் சொந்த முயற்சியில் தயாரித்து வருகிறார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட ராமசந்திர, பெரிய ஹெலிகொப்டர் ஒன்றை உருவாக்குவதே எதிர்கால கனவு.
இந்த திறமைகளை கொண்டு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆவர்வமாக உள்ளேன். அதற்காக தொழில்நுட்ப கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தால் நல்லது. எனது திறமையை முழுமையாக வெளிக்காட்ட என்னிடம் போதுமான நிதி வசதி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராமசந்திரவின் மனைவியும் பிறவியிலிருந்து வாய் பேச முடியாதவர் ஆவார்.
அண்மைக்காலமாக இலங்கையை சேர்ந்த பலரும் தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களை கண்டுள்ளனர். இதற்கான சரியான வளம் மற்றும் நிதி கிடைக்கும் பட்சத்தில் இலங்கையும் சக்தி மிக்க நாடாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இலங்கை அணியின் சிறந்த வீரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல அசேல குணரத்னவிற்கு இலங்கை இராணுவத்தினால் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் சீக்குகே பிரசன்ன இராணுவத்தின் வொரன்ட் அதிகாரி தரம் ஒன்று பதவிக்கும் அசேல குணரத்ண வொரன்ட் அதிகாரி தரம் இரண்டு பதவிக்கும் உயர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தாலி நாட்டின் கிழக்கு சிசிலி தீவில் உள்ள எட்னா என்ற எரிமலை முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. எரிமலையின் முகப்பில் இருந்து லாவா எனும் நெருப்புக்குழம்பு வெளிப்பட்டு வழிந்து வருகிறது.
எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், எரிமலை சாம்பல் பறப்பது அப்பகுதியில் விமானப் போக்குவரத்தைப் பாதிக்கும் என்றாலும், காடானியா விமான நிலையம் வழக்கம் போல இயங்குகிறது.
எரிமலை வெடிப்பு இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் இதனால் மலைச் சரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3330 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை தான் ஐரோப்பாவிலுள்ள மிக உயரமான எரிமலையாகும். 1992 ஆம் ஆண்டில் இந்த எரிமலை வெடித்துச் சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த விற்பனை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, பல வாரங்களுக்கு முன்பிருந்தே, இந்த விற்பனை நிறுத்தம் தொடர்பாக, தனது சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் அந்த சங்கங்கள் ஈடுபட்டு வந்தன.
இதையடுத்து, அந்த உறுப்பினர்களின் கடைகளில் இந்த பானங்கள் விற்பனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கருத்து தெரிவித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா. வெள்ளையன், இந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாரம் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தின்போது, மாணவர்கள் மத்தியில் பேசும் போது, அதனால் உந்தப்பட்டு, ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் கடைகளில் அந்த பானங்கள் விற்பனை நிறுத்தப்படும் என அறிவித்த நிலையில், ஏற்கெனவே 75 சதம் அளவுக்கு விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
தங்கள் அமைப்பில் 50 லட்சம் வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், அதில் 2 சதம் பேர்தான் இந்த பானங்களை விற்பனை செய்வதாகவும் அவர்களும் அதை இன்றுடன் நிறுத்திவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவன குளிர்பானங்கள் உடலுக்குக் கேடுவிளைவிப்பதாகவும், அவை பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாகவும் வெள்ளையன் குற்றம் சாட்டினார்.
பெப்ஸி, கோகோ கோலா பானங்கள் தற்போது சுமார் 90 சதம் அளவுக்கு சந்தையைப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், உள்ளூர் பானங்களை பிரபலப்படுத்த வேண்டும் என்று வர்த்தக சங்கங்கள் கூறுகின்றன.
மேலும், பழச்சாறு விற்பனையை ஊக்குவிக்கப் போவதாகவும் அவை கூறுகின்றன.
ஆனால், உள்நாட்டு பானங்களால் அந்த அளவுக்கு சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்று வெள்ளையனிடம் கேட்டபோது, ஒரு சில மாதங்களில் பெருமளவு தேவையைப் பூர்த்தி செய்ய முடியம் என்று தெரிவித்தார்.
சிறப்பு சந்தைகள், பல்லங்காடிகளில் இந்த பானங்கள் விற்பனை செய்யப்படுவதையும் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிரான அமைப்பான பீடாவுக்கு எதிராக இளைஞர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அந்த நேரத்தில், வெளிநாட்டு பானங்களுக்கு எதிரான பிரசாரமும் சூடுபிடித்தது.
அதுவே, வர்த்தக அமைப்புக்கள் முறைப்படி அந்த பானங்களின் விற்பனையைத் தடை செய்ய வழிவகுத்தது. ஆனால், இந்த தடையை முழுமையாக அமல்படுத்த முடியுமா என்பது குறித்து தெளிவான இலக்கு இல்லை.
தொடர்ந்து, வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக வர்த்தக அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஹிந்துஸ்தான் கோகோ கோலா மற்றும் பெப்ஸிகோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன மேலும் தமிழ்நாட்டில் 2000 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன.
எனவே இந்த புறக்கனிப்பு “இந்தியாவில் தயாரிப்பதற்கு” எதிரானதாக உள்ளது என இந்திய குளிர்பான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான தேர்தெடுக்கும் வாய்ப்பை இது கட்டுப்படுத்தும் விதமாக உள்ளது என்றும் அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் கருத்துவேறுபாடு கொண்டுள்ள எந்த ஒரு நிறுவனத்துடனும் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் இந்திய குளிர்பான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அநுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். நயினாதீவை சேர்ந்த 24 வயதான தவகுலரத்திணம் ரகுராம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக மாணவருடன், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்து போது, வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்பாணத்தினை பிறப்பிடமாக கொண்ட ஈழத்து பெண் ஒருவர் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழக தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல நடன நிகழ்ச்சியான டான்சிங் கில்லாடி நிகழ்ச்சியிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யாழ். நெல்லியடியில் இருந்து கடந்த கால யுத்தத்தின் போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் ஈழத்து பெண் விதுர்ஷா ரத்னம் என்ற யுவதியை இவ்வாறு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு பிரமாண்டமான முறையில் இடமபெற்றது. இதன் போது விதுர்ஷாவிற்கு ராணியாக அலங்கரித்து நடிகை சினேகா அவர்களினால் மகுடம் சூட்டப்பட்டது.
முன்னர் வேறு தொலைக்காட்சியில் குறித்த பெண் தொடர்பில் இடம்பெற்ற பிரச்சினைகள் காரணமாக அவரை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் மீண்டும் குறித்த நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டு தற்போது பல சோதனைகளை கடந்து சாதனை படைக்க இருக்கின்றார் விதுர்ஷா ரத்னம்.
சிறுவன் ஒருவர் பூனைக்குட்டிகள் என நினைத்து, இரண்டு சிறுத்தை குட்டிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆந்திரமாநில விசாகபட்டினத்தை சேர்ந்த, பழங்குடியின சிறுவன் ஒருவர் தான் வசித்து வந்த பிரதேசத்திலுள்ள பற்றைக்காடுகளிலிருந்து பூனைக்குட்டிகள் என நினைத்து, இரண்டு சிறுத்தை குட்டிகளை மீட்டு வளர்த்து வந்துள்ளார்.
மேலும் குறித்த சிறுத்தை குட்டிகளுக்கு உணவளித்து பராமரித்து வந்துள்ளநிலையில், அயலவர்களால் அவை பூனை குட்டிகளல்ல, சிறுத்தை குட்டிகள் என அறிவுறுத்தப்பட்டவே, வனத்துறை அதிகாரிகளின் ஊடாக குறித்த சிறுத்தை குட்டிகள், காட்டிற்குள் விடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு வெளியான கல்வி உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற போதும் மாணவி ஒருவருக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த தில்கி ரசாஞ்சலி என்ற மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
உயர் தரத்தில் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 34ஆம் இடத்தை பிடித்த மாணவி, பல்கலைக்கத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் இதுவரையில் அவருக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட தில்கி ரசாஞ்சலி என்ற மாணவி தெரிவித்துள்ளார்.
சிங்களம், பௌத்தம், கலை ஆகிய பாடங்களை தெரிவு செய்து 2 ஏ சித்திகள் மற்றும் ஒரு பி சித்தியும் பெற்றுள்ளார்.
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளுக்கமைய 1.6302 என்ற இசட் புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளார்.
எப்படியிருப்பினும் அவர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணபித்துள்ள போதிலும், அவருக்கு இதுவரையில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் ஆராய்ந்த அதிகாரிகள் அவர் உயர் தரத்தில் தெரிவு செய்த பாடங்கள் கலை பிரிவுக்கான பாடங்கள் இல்லை எனவும், இதனாலேயே அவர் இந்த பிரிச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உயர் தரத்தில் சிறப்பான சித்திகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு செல்ல முயற்சிக்கும் இந்த மாணவிக்கு, திருகோணமலை பல்கலைக்கழகத்தில் சந்தர்ப்பம் வழங்குவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த மாணவியின் பெற்றோரிடம் இருந்த ஒரே காணியை குத்தகைக்கு வழங்கி அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு செலவிட்டுள்ள நிலையில், இன்று வரையில் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது அந்த காணியையும் இழக்கும் நிலை தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வவுனியா கொல்களத்தினை மறுஅறிவித்தல் வரை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தினை தற்காலிகமாக மூடுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் திகதி குறித்த கெல்களத்தில் கொழும்புக்கு கொண்டு செல்வதற்காக வெட்டப்பட்ட மாடுகள் தொடர்பாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தமது கடமைக்கு இடையூறு விளைவித்தாக தெரிவித்து வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் வெட்டப்பட்ட மாடுகளுக்கான ஆவணங்கள் இருந்தமையை கருத்தில் கொண்டு வெட்டப்பட்ட மாடுகளின் இறைச்சியை கொழும்புக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 15ம் திகதிக்கு வழங்கு மீண்டும் எடுக்கப்படவுள்ளது.
இந் நிலையில் இன்று குறித்த மாடு வெட்டும் கொல்களத்திற்கு வருகைதந்த மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன் கொள்களத்தில் மாடுகள் வெட்டும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந் நிலையில் நகரசபை அதிகாரிகளுக்கும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை அதிகாரிகளுக்குமிடையில் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மில் வீதியில் இன்று (01.03.2017) காலை 9 மணியளவில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சபையின் பிராந்தியக் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் ஜ.எம்.றபீக், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.றோஹகன புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக ஆகியோர் கலந்து கொண்டு ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச்சபையின் பிராந்தியக்காரியலாயத்தினை திறந்து வைத்தனர்.
அத்துடன் பலகாலமாக கொழும்பில் பெற்றுவந்த சேவைகளை இக் காரியாலயம் திறந்து வைத்ததனூடாக பலபகுதிகளிலுள்ள பொதுமக்கள் இலகுவான முறையில் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்ப்பாட்டில் சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு இன்று (01.03.2017) காலை 9.30 மணியளவில் நடைபவணியொன்று நடைபெற்றது.
வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக ஆரம்பமாகிய நடைபவணி வவுனியா மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்ததுடன், வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இன் நடைபவணியில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் , வவுனியா மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் 6வது நாளாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (01.03.2017) 6வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம் மேற்கொண்ட சாகும் வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னோற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்து தமது போராட்டத்தினை சுழற்றி முறையில் தற்போது 5ஆவது நாளாக மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் மீது நேற்று (28.02.2017) மாலை 4.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள இளைஞர் மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் மேலதிக வகுப்புக்களை நிறைவு செய்துவிட்டு வீடு சென்றுகொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் தன்னுடன் மேலதிக வகுப்பில் கல்வி கற்ற மாணவர் ஒருவரையும் தனது துவிச்சக்கரவண்டில் ஏற்றிச் சென்றுள்ளார்.
அதன்போது அப்பகுதியில் நின்ற இளைஞர் ஒருவர் மதுபோதையில் ஆசிரியரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து ஆசிரியர் பாடசாலைக்கு செல்லும் வீதியிலுள்ள கடை ஒன்றில் நின்றுள்ளார்.
எனினும் கடைக்குச் சென்ற குறித்த இளைஞன் ஆசிரியர் ஏற்றிச் சென்ற மாணவனைமுதலில் தாக்கியுள்ளதுடன் ஆசிரியர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இன்று(01.03) காலை ஆசிரியரினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதல் மேற்கொண்ட நபர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியிலுள்ள பாடசாலையைச் சுற்றியுள்ளவர்கள் பாடசாலைக்குள் சென்று அதிபருக்கு பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினை வாபஸ் பெறுமாறு தெரிவித்து வருகின்றனர்.
தாக்குதல் மேற்கொண்ட இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து- இந்தியா இடையேயான 2017 ஆண்டு கலாசார வரவேற்பு விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது.
இந்த விழாவினை பிரித்தானியா மகாராணி எலிசபெத் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் மகாராணியின் கணவர் பிலிப், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்தியா சார்பில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நடிகர் கமல்ஹாசன், சுரேஷ் கோபி, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், பேஷன் டிசைனர் மனிஷ் அரோரா, மனிஷ் மல்கோத்ரா மற்றும் சித்தார் மாஸ்ட்ரோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது என கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது, பிரதமர் மோடி எனது பெயரை முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். இந்தியா- இங்கிலாந்து இடையேயான வரலாற்றை, கலாச்சார விழாவாக கொண்டாடும் இந்த தருணம் மிகச்சிறந்தது.
இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது சிறப்பான ஒன்று என்று கூறியுள்ளார்.
70 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதற்கு தயாராக இருக்கும் நாம், அன்றைய நாட்களில் அரும்பாடும்பாட்டு, இந்தியாவிற்கும்- இங்கிலாந்திற்கும் இடையேயான உறவை ஏற்படுத்திக்கொடுத்த நம் நாட்டின் உயிர்நாடி மகாத்மா காந்தி அவர்களை நினைவு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில், அதிகமாக இந்திய உணவுகள், இந்திய பாராம்பரிய நடனங்கள் மற்றும் இந்திய மலர்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆந்திராவை சேர்ந்த ரத்னா ரெட்டி என்பவர் 350 பெண்களை காதலித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
ஆங்கிலம் உட்பட பல்வேறு பல்வேறு மொழிகளை சரளமாக பேசும் திறமை பெற்ற இவர், இதனை பயன்படுத்தி பெண்களை தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.
பல்வேறு திருமண இணையதளங்களில் தனது பெயரை பதிவு செய்து கொண்ட இவர், அதன் மூலம் பெண்களுடன் பழகியுள்ளார். இணையதளத்தில் மூலம் சுமார் 350 பெண்களை காதலித்து வந்துள்ளார். இதில் கனடிய பெண் ஒருவரும் அடங்குவார்.
திருமண தளத்தில், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பல்வேறு பெண்களுக்கு திருமண தூது அனுப்பிய இவரின் இந்த மோசமான செயலை சைபர் கிரைம் கண்டுபிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐதராபாத் பொலிசார் நடத்திய விசாரணையில், நடத்தப்பட்ட விசாரணையில், ரெட்டி என்ற இவர் இதற்கு முன்னர், 9 குற்றசெயல்களில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் என்பதை அறிந்த பொலிசார், அவரை விரைந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
350 பெண்களை காதலித்து வந்துள்ளாரே தவிர அவர்களை திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்த தகவல்கள் இல்லை.