மற்ற உலோகங்களை விட தங்கம் ஏன் அதிகமாக ஜொலிக்கிறது என்ற சந்தேகம் நம்மில் பலபேருக்கு உள்ளது அல்லவா? தங்கம் அதிகமாக ஜொலிப்பதற்கு என்ன காரணம்?
உலோகத்தின் மீது பாயும் ஒளியானது, அணுக்கருவின் உள்ளே செல்லாமல், உலோகத்துண்டின் மீது இருக்கும் எலக்ட்ரான்களின் ஒளியை எடுத்துக் கொள்கிறது.
ஆனால் தங்கம் போன்ற உலோகங்களில் மட்டும் அதன் இறுதிப் பாதையில் உள்ள எலக்ட்ரான்கள் அணுவிலிருந்து வெளியேறி உலோகத்துண்டில் அங்கும் இங்கும் சுற்றிய நிலையில, மின்சாரத்தை நன்கு கடத்தும் பொருட்களாக இருக்கும்.
அப்போது உலோகத்துண்டில் படும் ஒளி தூண்டப்பட்டு, எலக்ட்ரான்கள் கிளர்வு நிலையை அடைந்து எலக்ட்ரான்கள் தூண்டப்பட்ட நிலையில் இல்லாமல் இருக்கும்.
இதனால் கூடுதல் ஆற்றலை ஒளியாக உமிழும் எலக்ட்ரான்கள் தமது இயல்பு நிலைக்கு திரும்பி, அங்கும் இங்கும் ஊடுருவதால், எலக்ட்ரான்கள் கிளர்ந்து மறுபடியும் ஒளியை உமிழுச் செய்யும்.
இவ்வாறு எலக்ட்ரான்கள் மீண்டும் அதன் ஒளியை உமிழச் செய்வதால், மற்ற உலோகங்களை விட தங்கம் மட்டும் பளபளப்பாக ஜொலிக்கிறது.
சவூதி அரேபியா பெண்கள் இனி தங்கள் எடையை குறைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சி செய்து கொள்ளலாம் என்று இளவரசி ரீமா பிண்ட் பண்டர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள் உள்ளது. இதைத் தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில் பெண்களுக்கான கொள்கையில் சிறிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் விவகார துணைத்தலைவரும், இளவரசியுமான Reema bint Bandar ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், சவூதி அரேபியா பெண்கள் தங்கள் உடல் எடைகளை குறைத்து கொள்வதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று கொள்ளலாம் என்றும்,
அங்கு அவர்கள் நீச்சல் செய்து கொள்ளலாம், ஓட்டப் பயிற்சி செய்து கொள்ளலாம் மற்றும் உடற்பயிற்சிகளையும் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்பயிற்சியின் போது அங்கு ஆண்கள் யாரும் இருக்க கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான இந்த கொள்கை மாற்றம் இந்த வாரத்திற்குள் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய உடற்பயிற்சி நிலையங்கள் திறப்பதற்கான உரிமங்கள் இந்த மாத இறுதியில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் பெண்கள் ஆரோக்கியமுடன் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மட்டுமே பெண்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளதே தவிர வாலிபால், கூடைப்பந்து மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பெண்களுக்கு மீதான தடை அப்படியே உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் கடுமையாக விதிக்கப்படவுள்ளதாக அந்த தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க விசாவுக்கான நேர்முக தேர்விற்காக வருபவர்கள் அந்த சட்ட நெறிகளை ஆய்வு செய்து அதற்கமைய வருகைத்தருமாறு தூதுதரகம் அறிவித்துள்ளது. அந்த சட்டத்தை மீறும் நபர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கையடக்க தொலைப்பேசி, டிஜிட்டல் நாட்குறிப்பு, டிஜிட்டல் கடிகாரங்கள், கமரா, ஆடியோ / வீடியோ கேசட்டுகள், குறுவட்டு, எம்பீ 3 இயந்திரங்கள், மடிக்கணினிகள், மின்னணு அல்லது பேட்டரிகள் கொண்ட பொருட்களுடன் ஒருவரும் உள்ளே அனுமதிப்படுவதில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் குடிநீர், வாசனை திரவியங்கள், சீல் வைக்கப்பட்ட கடித உறைகள், தீயை ஏற்படுத்தும் சிறிய பொருட்கள், கத்தரிக்கோல், மடக்கும் போது 40 சென்றீ மீற்றரை விட அதிக நீளமான குடிகளை ஆகியவற்றை உள்ளே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் விமான நிலையம் ஒன்றில் விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஆகும் என்று கூறியதால் பயணிகள் இருவர் அங்கிருந்த விமான ஊழியர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் Kunming பகுதியில் Changshui என்ற சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு தயராக இருந்துள்ளது.
இதனால் அவ்விமானத்தில் செல்பவர்கள் அனைவரும் அங்குள்ள சோதனை மையத்தில் சோதனை செய்வதற்காக வரிசையில் நின்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஆகும் என்று கூறியுள்ளார்.
திடீரென்று வரிசையில் நின்று கொண்டிருந்த சக பயணிகள் இருவர் அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக வந்து அவர்களைத் தடுத்துள்ளனர்.
இருப்பினும் விமான ஊழியருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, இரத்தம் வந்ததாகவும், சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் மது குடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இதனால் செய்வதறியாமல் இது போன்று செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தார் சசிகலா.
அதில் முக்கியமாக, சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி வெளியாகும் என்ற கேள்விக்கு, “என்ன தீர்ப்பு வந்தாலும் அதை நாங்கள் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம்.” என பதில் கொடுத்திருந்தார். அவர் அளித்த பேட்டி இதோ,
நீங்கள் தொடர்ந்து ஆளுநரிடம் வலியுறுத்தியும், இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம்?
“எங்களிடம் 129 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்காங்க. இந்த லிஸ்ட்டை ஆளுநரிடம் கொடுத்து உரிமை கேட்டோம். ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. என்னைப் பொறுத்தவரை இத்தனை நாட்கள் பொறுத்துவிட்டோம். இனியும் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.”
ஆளுநரின் இந்த காலதாமதத்திற்கு காரணம் பா.ஜ.க-வும் தி.மு.க-வும்-னு நீங்க ஏற்கனவே சொல்லி இருந்தீங்க…
குறுக்கிடுகிறார், “இந்த கருத்தை வெளியில் உள்ளவங்கதான் பேசிட்டு இருக்காங்க. இதை எல்லாம் நான் கூர்ந்து கவனிச்சு இருக்கேன். அதுதான்.”
ஓ.பன்னீர்செல்வம் 2012-ம் ஆண்டிற்கு பிறகு உங்களை சந்திக்கவே இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது மட்டும்தான் பேசினேன் என சொல்லி இருக்கிறாரே?
இது இங்குள்ள அமைச்சர்களுக்கே தெரியுமே. அவர் பேசினாரா இல்லையானு. இப்ப அவர் எதுவுமே தெரியாத மாதிரிதான பேசிட்டு இருக்கார். அப்படி இருக்கும்போது இதை எப்படி அவர் ஒத்துக்குவார்?
இப்ப அவர் எங்கிருந்தோ வானத்தில் இருந்து குதிச்சுவந்த பன்னீர்செல்வம் மாதிரிதான் எங்களுக்குத் தெரியுது. ஆனால், கோபாலபுரத்தில் இருந்து குதிச்சாரா? என்பது எங்களுக்குத் தெரியாது. சிரிக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தபின் தான், உங்க மீது குற்றச்சாட்டு எல்லாம் வைச்சாரே… அவர் அங்க போக போகிறார் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?
“நான் கேள்விபட்டது. அவர் கூட சில டைரக்டர்கள் இருக்காங்களாம். அவங்க என்ன சொல்லுறாரோ… அதுபடிதான் அவர் செய்வதாக சொல்லுறாங்க. (சிரிப்பு) எனக்கு தெரிஞ்சு அங்க போய் உட்கார்ந்த காரணம் என்னென்னு நான் நினைக்கறேன்னா… கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்தால்… என்னமோ ஏதோனு நீங்க எல்லாம் (மீடியாக்காரங்க) போய்டுவீங்கல்ல. அதுக்காக பண்ண மாதிரிதான் தெரியுது.”
எம்.எல்.ஏ-க்கள் எல்லாரையும் கூவத்தூரில் அடைத்து வைத்து உள்ளதாக குற்றாச்சாட்டு எழுகிறதே…” குறுக்கிடுகிறார்.
“என்ன சொல்லிறீங்க? புரியலையே….” என்றதும், மீண்டும் கேள்வியை கேட்கிறார் செய்தியாளர்.
“இல்லைங்க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவங்க தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தை அறிந்தபிறகு, இங்கு வரட்டும், உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கட்டும்’னு பலரும் சொல்லுறாங்களே..”
“ஏங்க ஒண்ணா சேர்ந்து, இருக்குற இடத்துலேயே அவரு (ஓ.பி.எஸ்) ஆளை தூக்கிட்டுப் போய்டுவோம்னு சொல்லுறாரே… இவங்க எல்லாரும் ஒற்றுமையாக, இங்க சுதந்திரமாகத்தான் இருக்காங்க. இதில் ஒன்றும் தவறு இல்லையே….”
தீர்ப்பு வெளிவரப்போகுது. எப்படி வரும்னு நினைக்கறீங்க?
என்னைப் பொறுத்தவரை.. என்ன தீர்ப்பு வந்தாலும் அதை நாங்க இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம்.”
சரி, இந்தப் பிரச்னை எல்லாம் முடிந்து. நீங்கள் முதல்வராக பதவியேற்றால்… முதல் கையெழுத்தை எதற்கு போடுவீர்கள்?
“அது ஒரு சஸ்பென்ஸுங்க. அதை அன்னைக்கு பார்த்துக்கலாம்.” என மீண்டும் சிரித்து விடைபெறுகிறார்.
யாழ்ப்பாணம் – கச்சேரி நல்லூர் வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ஹயஸ் வானும் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து நேற்று நண்பகல் நல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், சுற்றுலாப்பயணிகளின் சாரதி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் ஹயஸ் வான் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்றுள்ளது. தொடர்ந்து, நாவலர் வீதியிலிருந்து ஏ9 வீதியை நோக்கி பயணித்த சுற்றுலாப் பயணிகளின் வாகனம் சந்தியை கடக்க முற்பட்ட வேளையில் இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற ஹயஸ் வானின் சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
யாழ்தேவி ரயிலில் பாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற யுவதி ஒருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
மாத்தறை பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு நடந்த கொண்ட போதும், பொலிஸார் உடனடி நடவடிக்கை காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.
வீட்டில் சகோதரர்கள் திட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கல்கமுவ பிரதேசத்தில் ரயில் வீதிக்கு அருகில் நின்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் சகோதரர்கள் தொடர்ந்து தன்னை அடிப்பதனால் இவ்வாறு தற்கொலை செய்துக் கொள்ள தான் அங்கு வந்ததாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
இந்த மாணவி கடந்த 11ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பகுதி நேர வகுப்பிற்கு செல்வதான கூறி, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து மாத்தறையில் இருந்து பல பஸ்களில் ஏறி கல்கமுல பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
கல்கமுவ பிரதேசத்திற்கு அருகில் வடக்கு ரயில் வீதியில் நின்ற சந்தர்ப்பத்தில் இந்த மாணவி மீது சந்தேகம் கொண்ட பிரதேச மக்கள் கல்கமுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தகவல் கிடைத்தவுடன் விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த யுவதியை கைது செய்துள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது யுவதி மேற்படி விபரங்கள் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளினால் இந்த யுவதியின் பெற்றோரை அழைத்து இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் செயற்பட்டிருக்கவில்லை என்றால் அவர் யாழ்தேவி ரயிலில் மோதுண்டு உயிரை விட்டிருப்பார் என கல்கமுவ மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குளுமாட்டு சந்தியிலிருந்து மரக்காரம்பளை நோக்கி பயணிக்கும் பாதையில் தனியார் பேரூந்து ஒன்று கடந்த நான்கு நாட்களாக அனாதரவற்ற நிலையில் காணப்படுகின்றது. இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த நான்கு நாட்களாக மரக்காரம்பளை வீதி காளி கோவிலுக்கு அருகே தனியார் பேரூந்து ஒன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதியில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாரை தொடர்பு கொண்ட போது, இந்த தனியார் பேரூந்து இயந்திர கோளாறு காரணமாக தரித்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எனினும் கடந்த நான்கு நாட்களாக இத் தனியார் பேரூந்து தரித்து நிறுத்தப்பட்டுள்மையினையால் மக்களின் சிரமத்துக்கு மத்தியில் போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்கவுள்ள படம் நகல்.
ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த நகல் திரைப்படத்தில் நடிப்பதற்கு சில முன்னணி கதாநாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், டப்மாஷ் புகழ் மிர்னாலினி ரவி இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ் சார்பில் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்க இருக்கின்றார்.
மிர்னாலினி ரவி தனது தனித்துவமான டப்மாஷ்கள் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டப்மாஷில் அவரது முகபாவமும், அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களுக்கு மிர்னாலினி மீதான ஈர்ப்பு அதிகரிக்க காரணம்.
இந்நிலையில், அவர் நகல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதால் சிறிய வீடியோவில் மட்டுமே பார்த்த ரசித்த அவரது ரசிகர்கள், இனி வெள்ளித்திரையில் காணலாம்.
நகல் படம் குறித்து இயக்குநர் சுரேஷ்குமார் தெரிவித்தபோது, “ஒரு முற்றிலும் தனித்துவமான கதைக் களத்தோடு தான் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்படி இருந்து நான் உருவாக்கி இருக்கும் கதை தான் இந்த நகல்.
ஒரு பெண்ணின் அமானுஷிய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் நகல் படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், நகல் படத்தின் கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது.
தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில் அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக நகல் இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் இந்த கதையில் உள்ளடக்கி இருக்கின்றேன்.
ஒளிப்பதிவாளர் – பிரசன்னா, இசையமைப்பாளர் – அண்டனி ஜோர்ஜ், படத்தொகுப்பாளர் – லோகேஷ், கலை இயக்குநர் – ரூபெர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் – சக்தி சரவணன் மற்றும் டிசைனர் – ஜோசப் ஜாக்சன் என பல திறமை வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த நகல் படத்தில் பணியாற்ற இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
நாட்டில் தொடரும் வறட்சியான காலநிலை 14 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 699 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 93 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் 49 ஆயிரத்து 477 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது தமிழர் ஒருவருடைய வர்த்தக நிலையம் முற்றாக சேதமாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிகிக்கின்றன.
பாரிஸின் புறநகர் பகுதியில் சனிக்கிழமை (11) கலகக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, இப்பகுதியில் அமைந்திருந்த தமிழர் ஒருவருடைய வர்த்தக நிலையம் முற்றாக சேதமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்மூலம் இரண்டு இலட்சம் யூரோவுக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த தமிழ் வர்த்தகர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதில் பொலிஸ் விசாரணைகளின் போது இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார் என்ற காரணத்திற்காக இளைஞர்கள் அனைவரும் ஒல்னே சுபுவா பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த வன்முறைச் சம்பவங்களில் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரியூட்டப்பட்டதோடு பொதுச்சொத்துக்கள் பலவும் சேதமாக்கப்பட்டிருந்தன. இதன்போதே தமிழர் ஒருவருடைய வர்த்தக நிலையமும் முற்றாக சேதமாகியுள்ளது.
மேலும், இளைஞர்கள் முன்னெடுத்திருந்த வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடைய 37 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரம் மூண்ட ஒல்னே சுபுவா பகுதியானது வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் ஒன்றாகவும், வேலையில்லாத் திண்டாடம் உள்ள பகுதியாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
46 வருடங்களான எந்தவொரு அதிகாரிகளின் அவதானத்திற்கும் உட்படாமல் உள்ள கிராமம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அரணாநாயக்க பிரதேச செயலாளர் எல்லைக்கு சொந்தமான தெல்லெக கிராம சேவகர் எல்லையில் கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கிராமம் அம்பகொல்ல என அழைக்கப்படுகிறது.
1971ஆம் ஆண்டு கிராம விரிவாக்கத்தின் கீழ் அப்போதைய அரசாங்கத்தினால் இந்த கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது கிட்டத்தட்ட 52 வீடுகள் உள்ள அந்த கிராமத்தில் வசிப்பவர்களில் ஒருவரேனும் அரசாங்க தொழில் செய்யாதவர்கள் என கூறப்படுகின்றது.
பலர் கூலி வேலை மூலம் வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொள்கின்றனர். பெண்கள் பலர் வீட்டில் பீடி சுற்றுவதன் ஊடாக கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
உரிய வீதி கட்டமைப்பு இல்லாமையினால் சிரமத்திற்குள்ளாகியுள்ள இந்த கிராம மக்கள், தற்போது பயன்படுத்துகின்ற வீதியும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கிராமத்தின் நீர் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்தாமையினால் பல கிலோ மீற்றர் தூரம் சென்று நீர் கொண்டு வரும் அவல நிலைக்கு அங்குள்ள மக்கள் முகங்கொடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றவாளி ஆசிரியர் ரமீஸை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ரமீஸ், வகுப்பில் படிக்கும் மாணவர்களை நல்ல மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்தி தன்னிடம் டியூசன் பயில வைத்துள்ளார்.
இந்நிலையில் பல மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த ரமீஸ், அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர், வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என மாணவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
ரமீஸ் ஒரு மாணவனின் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட அது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
பொலிசார் ரமீஸிடம் நடத்திய விசாரணையில் அவர் இதே போன்று பல மாணவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, ரமீஸை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவின் உயரமான அணையான கலிபோர்னியாவிலுள்ள ஒரோவிலே அணை, இடியும் அபாயம் காணப்படுவதால் சுமார் 2 இலட்சம் பேரை குறித்த பிராந்தியத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு வேண்டப்பட்டுள்ளது.
வடக்கு கலிபோர்னியாவில் சுமார் 230 மீற்றர் உயரமுள்ள ஒரோவிலே அணையில், நீர் நிரம்பி வழியும் நிலையில் அணையின் அவசர நீர் வெளியேற்றும் வான்கதவுகள் எந்நேரத்திலும் உடையும் அபாயம் காணப்படுவதால், குறித்த பகுதியில் வாழும் மக்களை உடனடியாக வெளியேறும் படி அம்மாநில திட்டமிடல் ஆணையம் அறிவித்துள்ளது.
கனமழையாலும், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஏற்பட்ட பனி உருக்கத்தாலும் இந்நீர்தேக்கத்தின், நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குறித்த பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 50 வருடங்களில் முதல்முறையாக ஒரோவிலே குளத்திலிருந்து, நிமிடத்திற்கு ஒரு லட்சம் கன அடி நீரை வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளதாக கலிபோர்னியாவின் நீர்வளத் திட்டமிடல் துறை தெரிவித்துள்ளது.
அத்தோடு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஒரோவிலே பகுதிக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணொருவரின் மண்டையோட்டுக்குள் மூளைக்கு அடியில் உயிருடன் காணப்பட்ட கரப்பான் பூச்சியொன்றை சென்னை வைத்தியசாலையொன்றில் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயதான செல்வி என்ற இப் பெண், அண்மையில் இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவரின் மூக்கினுள் கரப்பான்பூச்சி நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதை செல்வி அறிந்திருக்கவில்லை. எனினும், மறுநாள் கடுமை யான வலி காரணமாக இப் பெண் அடுத்த சில நிமிடங்களில் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற சென்றபோதிலும் மருத்துவர்களால் அவருக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிய முடியவில்லை.
வலி குறையாதிருந்த நிலையில், இறுதியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காது – மூக்கு – தொண்டை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.
அங்கு மூக்கில் மேற்கொள்ளப்பட்ட என்டோஸ்கோப்பி பரிசோதனையில், கரப்பான் பூச்சியானது மண்டையோட்டின் அடிப்பகுதி யில் இரண்டு கண்களுக்கும் நடுவில் மூளைக்கு அருகில் இருந்தமை தெரியவந்தது. இதன்பின்னர், 45 நிமிட சிகிச்சைக்கு பின்பு கரப்பான்பூச்சி வெற்றி
கரமாக வெளியே எடுக்கப்பட்டது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காது – மூக்கு – தொண்டை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் எம்.என்.சங்கர் இது குறித்து கூறுகையில், இப் பெண்ணின் மூக்குக் குழாயை ஆராய்ந்தபோது, அதற்குள் சிறிய கால்கள் அசைவதைக் கண்டேன். மேலும் ஆராய்ந்தபோது, சுமார் 5 சென்ரி மீற்றர் நீளத்தில் அசாதாரணமான ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்தேன்.
பின்னர், அது கரப்பான்பூச்சி ஒன்றின் அடிப்பாகம் எனத் தெரியவந்தது. அதையடுத்து உறிஞ்சும் கருவி, கவ்விப்பிடிக்கும் உபகரணம் ஆகியவற்றை கொண்டு கரப்பான் பூச்சியை எடுத்தோம். கரப்பான்பூச்சி இடது புறத்தில் இருந்திருந்தால், நோய்த்தொற்று ஏற்பட்டு, மூளையைப் பாதித்திருக்கும்” என்றார்.
இக் கரப்பான்பூச்சியானது இப் பெண்ணின் மண்டையோட்டுக்குள் சுமார் 12 மணித்தியாலங்கள் உயிருடன் இருந்துள்ளது என டாக்டர் எம்.என். சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செல்வி கூறுகையில், “இரவு உறக்கத்தில் இருந்தபோது மூக்குக்குள் பூச்சி உள்பக்கம் நகரும்போது கண்களில் எரிச்சல் ஏற்பட்டு, நீர் வந்தது. தலைக்குள் கூசுவது போன்றும், ஊர்வது போன்ற உணர்வால் இரவு முழுவதும் அவதிப்பட்டேன். இப்போது குணமாகிவிட்டது’ என்றார்.