சிறைக்குப் போவது உறுதியாகி விட்ட நிலையிலும்ம கூட தனது பிடிவாதத்தை விடுவதாக இல்லை சசிகலா. சட்டசபையைக் கூட்டும் வரை தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஹோட்டலை விட்டு வெளியேறக் கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹோட்டலில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. வெளியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தடியடி நடத்துவதற்கு வசதியாக தடிகளுடன் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளே தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் பெரும் தத்தளிப்பில் உள்ளனர்.
ஆனால் என்ன நடந்தாலும் சரி சட்டசபையைக் கூட்டட்டும். அதன் பிறகுதான் அனைவரும் வெளியேற வேண்டும் என்றுசசிகலா கூறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரவோடு இரவாக உள்ளே புகுந்து போலீஸார் அத்தனை பேரையும் வெளியே கொண்டு வருவார்களா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சசிகலாவின் தேவையில்லாத பிடிவாதத்தால் கடந்த 7 நாட்களாக உள்ளே சிக்கிக் கொண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் படாதாபாடு பட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி செருப்பு மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அபராதத் தொகையாக பெறப்பட உள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவரை விடுத்து மற்ற 3 பேரும் தண்டனை சிறை செல்ல உள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி செருப்புகள் மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட மொத்தம் 140 கோடி அபராதத் தொகையை நீதிமன்றம் வசூலிக்கவுள்ளது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 100 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். எனவே, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள் ஏலம் விடப்பட்டு செலுத்தப்பட உள்ளது.
ஜெயலலிதா வீட்டை சோதனை செய்த போது, 750 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. மேலும், 10,500 புடவைகள்,750 பட்டுப் புடவைகள் மற்றும் 3.5 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்து கர்நாடக மாநிலத்தில் பொலிஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் கட்ட வேண்டிய அபராதத் தொகை கட்டப்பட வேண்டும். அதற்காக கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் செருப்புகள், புடவைகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு வர உள்ளது.
பின்னர் அவை அனைத்தும் ஏலம் விடப்படும். இதன் மூலம் கிடைக்கப் பெறும் பணம் அனைத்தையும் ஜெயலலிதாவின் கட்டப்பட வேண்டிய அபராதத் தொகையாக நீதிமன்றத்திற்கு கட்டப்படும்.
சசிகலா தண்டனை குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யார், யார் என்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பதை கீழே பார்க்கலாம்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அத்துடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேருக்கும் 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.
இந்த தீர்ப்பு குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்தனர். அதனை கீழே பார்க்கலாம்.
நடிகர் கமலஹாசன்: பழைய பாட்டுத்தான் இருந்தாலும்… என்று குறிப்பிட்டு “தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..”
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் : சட்டம் என் கையில்” என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல், சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்.
வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ்: இது முடிவு இல்லை. தூய்மையின் தொடக்கமே… இன்னும் போக பல மைல்கள் உள்ளன.
நடிகர் அரவிந்த்சாமி: தற்போதைய முதல்வராகிய ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் அலுவலகத்துக்கு செல்வதை பார்க்க ஆவலாக உள்ளது. அவரை முன்மொழிந்து பின்பற்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது பணியை தொடங்க வேண்டும்.
நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்: கடவுள் இருக்கிறார்..
நடிகை கவுதமி: ஊழல் வழக்கில் சசிகலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்மாவின் மரணம் குறித்து தகலை அவர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இரு வழக்குகளுக்கும் ஒரே தண்டனை வழங்கக்கூடாது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்: ஓ.பி.எஸ் என்றால் ஓ.பன்னீர் செல்வம் என்று நினைத்தாயா ஆப்ரேஷன் சசிகலா.
இசையமைப்பாளர் சீன் ரோல்டன்: ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான். கை விடமாட்டான்.
ரஜினிகாந்த் : கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான்
இயக்குநர் சீனு ராமசாமி: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
காமெடி நடிகர் பால சரவணன்: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… மீண்டும் தர்மம் வெல்லும்… இன்று தர்மம் வென்றது.. கொடியவர்கள் தண்டிக்கபட்டார்கள்… நன்றி இறைவா…
நடிகர் சித்தார்த்: தமிழ்நாட்டுக்கு “மினிமம்” “மினிமம்-சின்னமா” நீதி கிடைத்தது.
நடிகை குஷ்பு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைந்துவிட்டது.
நடிகர் அருள்நிதி: 3 பேர் உள்ளே…. 125 பேர் வெளியே…. பத்தரையுடன் முடிந்தது ஏழரை.
நடிகை ராதிகா சரத்குமார்: மெகா சீரியல்களுக்கு இது மிகப்பெரிய போட்டி.
இவ்வாறு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தின் பின்னர் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெறவுள்ளதாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாய பாடசாலை அதிபர் ரி.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இசையுலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 12ம் திகதி நடைபெற்றது.
59வது ஆண்டு கிராமி விருது வழங்கல் விழாவில் பரிந்துரைக்கப்பட்ட 5 பிரிவுகளின் கீழ், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பாடகியான அடேல் அனைத்து விருதுகளையும் வென்றார்.
கடந்த ஆண்டின் சிறந்த இசை அல்பம், சிறந்த இசைத்தட்டு, சிறந்த பாடல், சிறந்த பாப் பாடகி, சிறந்த பாப் பாடல் அல்பம் ஆகிய ஐந்து விருதுகளையும் இவர் பெற்றார்.
அடேலின் இசை அல்பத்துடன் போட்டியிட்ட பிரபல அமெரிக்க பாடகியான பெயான்ஸ் பாடியிருந்த ‘லெமனேட்’ என்னும் ஆல்பம் 9 பிரிவுகளின் கீழ் கிராமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எனினும், பாரம்பரிய இசை மற்றும் சிறந்த வீடியோ அல்பம் ஆகிய இரு கிராமி விருதுகளையே ‘லெமனேட்’ வென்றது.
அடேலுடன் போட்டியிட்ட பிரபல பாடகி பெயான்ஸ், விருதுக்கான வாய்ப்பை இழந்தபோதும், விழா மேடையில் தனது இசை மழையால் ரசிகர்களை மகிழ்வித்தார்.
ஐந்து விருதுகளை வென்று வெற்றிக்களிப்பில் மகிழ்ந்த அடேல், தனது ஏற்புரையின்போது பெயான்ஸை வெகுவாகப் புகழ்ந்து, பாராட்டிப் பேசினார்.
பின்னர், திடீரென்று உணர்ச்சிவசப்பட்டவராக ஒரு கிராமி விருதை இரண்டாக உடைத்து, இந்த பாதி பெயான்ஸூக்கு சேர வேண்டியதாகும், என்று ஒரு துண்டை பெயான்ஸூக்கு அளித்தபோது அரங்கத்தில் இருந்த நடுவர்கள் மற்றும் ரசிகர்கள் நெகிழ்ந்துபோய் பலத்த கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான 26 வயதான உமர் அக்மல், 24 ஆவது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உமர் அக்மல் விளையாடி வருகின்றார்.
நேற்று (13.02) நடைபெற்ற போட்டியில் உமர் அக்மல் டக் அவுட் ஆனார். இதன் மூலம் உமர் அக்மல் 24 ஆது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன் தென்னாபிரிக்கா அணியின் கிப்ஸ், இலங்கையின் தில்ஷான், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஸ்மித் ஆகியோர் 23 முறை டக் அவுட் ஆகி முன்னிலையில் இருந்தனர்.
இந்திய அணியின் கவுதம் கம்பீர் 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். ஹர்பஜன் சிங் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தனக்குத் திருமணம் ஆகுமோ, ஆகாதோ என்ற கவலையில் மூழ்கிப்போயிருந்த உலகின் உயரம் குறைந்த பெண்ணுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது, அதுவும் ஒரு சதம் கூடச் செலவில்லாமலேயே.
தாய்லாந்தைச் சேர்ந்தவர் சேய்பொன் ஜாருன்சி. 38 வயதாகும் இவருக்கு, பிறப்பின்போதே ஏற்பட்ட ஒரு கோளாறினால் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் உடல் ஒரு அளவுக்கு மேல் வளர்ச்சியடையாமல் போய்விட்டது. மேலும், இந்தக் கோளாறினால் ஜாருன்சியால் நடக்கவும் முடியாமல் போனது.
இவரது இந்தப் பிரச்சினையால் சிறு வயது முதலே பலரது கேலிக்கும் ஆளாகினார். இதன் விளைவால் இவரால் சமூகத்துடன் ஒன்றிப் போக முடியாமல் போனது. இதனால் வறுமையும் இவரைக் கௌவிக்கொண்டது.
தனது நிலை கண்டு வருந்திய ஜாருன்சி, தனக்குத் திருமணமாகுமோ, தன் மீது அன்பு செலுத்தும் ஒருவரை கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமல் போகுமோ என்ற பயமும் ஏற்பட்டது. ஆனால் அந்தப் பயம் வெகு நாட்கள் நீடிக்கவில்லை.
தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றும் 65 வயது (!) நபர் ஒருவருடன் ஜாருன்சிக்கு நட்பு ஏற்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாக மாறியது. ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க முடியாது என்ற நிலையை அடைந்த அவர்கள், திருமணம் செய்துகொள்வதற்கு போதுமான பணம் இல்லாததால், சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில், ரிச்சாவீபத் என்ற அழகுக் கலை நிபுணர் ஒருவருடன் ஜாருன்சிக்கு பழக்கம் ஏற்பட்டது. பெரும் செல்வந்தர்களுக்கு அழகு சிகிச்சை செய்பவர் ரிச்சாவீபத். அவரிடம் தனது திருமணக் கனவை சொன்ன ஜாருன்சி, தனக்கு இலவசமாக ஒப்பனை செய்து தர முடியுமா என்று கேட்டார்.
ஜாருன்சியின் நிலை கண்டு இரக்கம் கொண்ட ரிச்சாவீபத், தனக்குத் தெரிந்த ஒரு திருமண ஏற்பாட்டு நிலையத்துடன் தொடர்புகொண்டு ஜாருன்சியின் நிலை பற்றித் தெரிவித்தார். அவர்களும் களமிறங்க, ஜாருன்சியின் திருமணம் வெகு கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது.
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்று சொல்லும் ஜாருன்சியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பியிருக்கின்றன.
யாழ்தேவி ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
மாத்தறை பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற போது பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவி கடந்த 11 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பகுதி நேர வகுப்பிற்கு செல்வதாகக் கூறி, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து பஸ்களில் பயணித்து கல்கமுல பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்திற்கு வந்த மாணவி அங்கிருந்த ரயில் வீதியில் நின்ற சந்தர்ப்பத்தில், மாணவி மீது சந்தேகம் கொண்ட பிரதேச மக்கள் கல்கமுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொதுமக்களின் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த மாணவியை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து மாணவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் சகோதரர்கள் தொடர்ந்து தன்னை அடித்து தொல்லைப்படுத்துவதால் தான் இவ்வாறு தற்கொலை செய்துகொள்ள இங்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
வீட்டில் சகோதரர்கள் திட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் 17 வயதுடைய பாடசாலை மாணவியே தற்கொலைக்கு முயன்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு கைது செய்யப்பட்டவராவார்.
இதையடுத்து பொலிஸாரினால் குறித்த மாணவியின் பெற்றோர் அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தாய்வானில் சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 12 பேர் தைபே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தைவான் தலைநகர் தைபே அருகே ஒரு சுற்றுலா பஸ்சென்று கொண்டிருந்தது. அதில் 44 பேர் பயணம் செய்தனர். அதிவேகமாக வந்த பஸ் வீதியின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது.
அப்போது மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. அதில் இருந்து கரும்புகையுடன் தீ எரிந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.
இந்த விபத்தில் 30 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாகினர். இருவர் வைத்தியசாலையில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 32 ஆனது.
பலியானவர்களில் 20 முதல் 60 வயது உடையவர்கள் அடங்குவர். அவர்கள் அனைவரும் தாய்வானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலர் தினத்தை முன்னிட்டு புதிய 2000 ரூபாய் நோட்டால் அலங்கரித்து கார் பரிசளிக்க சென்ற காதலன் கைது செய்யபட்டார்.
காதலர் தினமான இன்று தனது காதலி நிரூபிக்க காதலிக்கு பரிசு கொடுக்க சென்ற காதலன் அதிரடியாக கைது செய்யபட்டார். மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இளைஞன் ஒருவன் தனது காதலிக்கு பரிசளிக்க முழு காரையும் புதிய 2000 ரூபாய் நோட்டால் அலங்கரித்து வீதியில் ஓட்டிச் சென்றுள்ளான். இதைக்கண்டு பொதுமக்களும், போலீசாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், போலீசார் காருடன் குறித்த இளைஞனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர்களுக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதில் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், அமிதவ ராய் என இரண்டு நீதிபதிகளுமே ஒரே தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
மேலும் சசிகலாவை உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளியாகும் நீதிமன்ற அறை எண் 6இல் பெரும் கூட்டம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030 இல் பூமிக்கு ஆபத்து நேரிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு, அதே போல பூமி என்னும் கிரகத்தைச் சுற்றி இருக்கும் காந்தத்திலும் இரு துருவங்கள் உள்ளன.
வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர், அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது.
பூமியின் காந்த மண்டலம்தான் சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களில் இருந்து நம்மை காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும்.
காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும், அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும்.
இந்த நிகழ்வு ஓரிரவில் நடந்து விடாது 1000 ஆண்டு கூட ஆகலாம், இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது என விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர்.
2030 இல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது, இப்படி துருவம் மாறுவது நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த 100 ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் 10 சதவீதத்தை இழந்துவிட்டது.
காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நாய்களின் இனப்பெருக்க வல்லமையை நிரூபிப்பதற்காக, வேற்று இன நாய்களுடன் இரத்தம் சொட்டும் நிலையில் கடுமையாக மோதவிடும் நிகழ்வு கசகஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
‘வலிமையை நிரூபிப்பதற்கான நாய்களின் சண்டை’ எனும் தொனிப்பொருளில் கசகஸ்தானின் தலைநகர் பிஸ்கெக்கீல் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த நாய் சண்டையை மேற்கொள்வதற்காக சுமார் 17 உரிமையாளர்கள், தமது நாய்களை அழைத்து வந்துள்ளதோடு அவற்றின் வெறியை ஏனைய நாய்கள் மீது காட்டி, உச்சக்கட்ட தாக்குதல்களை மேற்கொள்ளுவதற்கு, அவை தூண்டுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
குறித்த நாய் சண்டை நிகழ்வானது சீனாவிலிருந்து, கசகஸ்தான் பிரதியிட்டதாக குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் கசகஸ்தான் போட்டி ஏற்பாட்டாளர்கள், குறித்த போட்டியானது நாய்களின் வெறியை தூண்டுவதற்கான நிகழ்வன்று, அவற்றின் இன விருத்தியில் செல்வாக்கு செலுத்தும் சிகிச்சை முறை என வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பிரஜைகள் தொடர்பான வீசா நடைமுறையில் அமெரிக்கா மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வௌியான தகவல்களை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது. தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்திலேயே அவர்கள் இதனைப் பதிவிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிகத் தகவல்களை http://www.ustraveldocs.com/lk/lk-niv-visaapply.asp என்ற இணையத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கான வீசா நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் அந்த நாட்டு ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாகவும் செய்திகள் வௌியாகின.
இதற்கமைய இலங்கையர்கள் சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக அதிகபட்சம் 180 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததோடு, அதற்கு மேலதிகமாக இருப்பவர்கள் வீசாவை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆச்சி மனோராமாவை யாராலும் மறக்க முடியாது. அவரது நடிப்பையும் தாண்டி அனைவரையும் சிரிக்க வைத்து மகிழவைத்தார். குழந்தைகளுக்கும் இவரது நடிப்பு பிடித்து போகும்.
மிகவும் கஷ்டப்பட்டு சினிமாதுறைக்குள் வந்து தனக்கென ஒரு அரியாசனத்தை தக்க வைத்து சிறப்பு பெற்றவர். அனைவரும் இவரை ஆச்சிமா என்றே கூப்பிடும் அளவுக்கு தன்னுடன் பணியாற்றிய அனைவருடனும் வயது வேற்றுமை பாராமல் மதிப்பு கொடுத்தவர்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சில வருடங்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் அது பலனளிக்காமல் கடந்த அக்டோபர் 2015ல் காலமானார்.
இந்நிலையில் அவர் 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது மிரட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது, இதன் பின் தான் அவரின் உடல் நிலை மோசமாகப்போனது என்றும் சொல்கிறார்கள்.
ஏற்கனவே கங்கை அமரன் தன்னுடைய பையனூர் பங்களாவை சசிகலா கும்பல் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார்கள் என கூறிய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாக பரவியது.
மேலும் பல முக்கிய தயாரிப்பாளர்களையும் மிரட்டி படங்களை மிக சொற்பமான விலையில் தங்கள் வசம் வாங்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இன்று பேஸ்புக்கிற்கு அடுத்ததாக அதிகளவில் பாவிக்கப்பட்டு வரும் சேவையாக வட்ஸ்அப் காணப்படுகின்றது.
எனினும் இச் சேவையில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதனால் தகவல்கள் திருட்டுப் போகும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனம் தற்போது சற்று வித்தியாசமான இரு படி சரிபார்ப்பினை (Tow Step Verification) அறிமுகம் செய்துள்ளது.
இதில் வட்ஸ் அப்பினை கணக்கினை உருவாக்க தேவையான மொபைல் நம்பர் உட்பட 6 டிஜிட் கடவுச் சொல் ஒன்றும் அவசியம் ஆகும்.
இவ்வாறு கணக்கு சரிபார்க்கப்பட்ட பின்னர் அதே நாளில் இருந்து 7 நாட்களுக்கு குறித்த கடவுச் சொல் இன்றியே மீண்டும் மீண்டும் வட்ஸ் அப்பினை பயன்படுத்த முடியும்.
குறித்த 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மொபைல் நம்பரினை மீள் சரிபார்ப்பு (Reverify) செய்ய வேண்டும்.
தவறுதலாக 7 நாட்களைத் தாண்டி மீள் சரிபார்ப்பு செய்யின் இடைப்பட்ட காலத்தில் பெறப்பட வேண்டிய குறுஞ்செய்திகள் உட்பட ஏனைய தரவுகள் முற்றாக அழிவடைந்து விடும். அவற்றினை மீண்டும் பெற முடியாது.
இவ்வாறு 30 நாட்கள் வரை மீள் சரிபார்ப்பு செய்யாது விடின் வட்ஸ் அப் கணக்கே அழிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் புதிதாக வட்ஸ் அப் கணக்கு ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.