வவுனியாவில் பொறியியல் பீட மாணவர்களுக்கு பொலிஸாரால் ஜீப் வண்டி வழங்கி வைப்பு!!

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பொறியியல் பீட மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் ஜீப் வண்டி ஒன்று இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பொறியியல் பீடத்தில் கற்கும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு வாகனம் ஒன்று இல்லாது பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் பணிப்புக்கமைய வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக் கோனினால் ஜீப் வண்டி கையளிக்கப்பட்டது.

இயங்கு நிலையில் உள்ள இவ் ஜீப் வண்டியின் தற்போதைய பெறுமதி சுமார் 6 இலட்சம் ஆகும்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் 129வது பிறந்தநாள் விழா!!

 
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் 129வது பிறந்தநாள் நிகழ்வு மற்றும் ஆண்டுவிழா நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் 2013ம் வருட உயர்தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் சிரேஸ்ட மாணவத்தலைவன் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர் திரு.சிவநாதன், முன்னாள் அதிபர் சு.அமிர்தலிங்கம், நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது 129வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், வாழ்த்துப்பா இசைத்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சந்திமாலுக்கு மீண்டும் ஏமாற்றம் : இளம் வீரருக்கு தலைவர் பதவி!!

இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான விளையாடவுள்ள இலங்கை ஏ அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து ஏ அணி இலங்கை ஏ அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டு அடுத்த 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணி வீரர்களின் பெயர் நேற்று வெளியிடப்பட்டது.

அந்தவகையில் இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் அறிவிக்கப்பட்ட வீரர்கள் வருமாறு,

தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, உத்தர ஜயசுந்தர, சாந்தன் வீரக்கொடி, சரித அசலாங்க, ரோஷன் சில்வா, லஹிரு கமகே, ராஜித, ரொன் சந்திரகுப்த, மதுசங்க,அசுத்த பெர்னாண்டோ, டில்ருவன் பெரேரா, அமில அபோன்ஸா, வாண்டர்சே, புஷ்பகுமார ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இலங்கை ஏ அணியில் சந்திமால் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை அணி மீதான பார்வையை அதிகரித்துள்ளது.

பேஸ்புக்கில் பரீட்சிக்கப்படும் புத்தம் புதிய வசதி!!

பேஸ்புக் நிறுவனம் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

டெக்ஸ்டாப் அல்லது லப்டொப் கணினிகளுக்காக அறிமுகமாகும் இந்த வசதியானது தற்போது பரிசோதனை நிலையிலேயே காணப்படுகின்றது.

Pop-Out எனப்படும் இவ் வசதியானது பேஸ்புக்கினை ஒருவர் பயன்படுத்தும்போது நண்பர்களால் மேற்கொ்ளளப்படும் பதிவுகளை மற்றுமொரு சிறிய விண்டோவில் தோற்றுவிப்பது ஆகும்.

இதன் காரணமாக நண்பர்களின் பதிவுகளை உடனுக்கு உடன் பார்க்க முடிவதுடன், தவற விடும் வாய்ப்புக்களும் மிகக் குறைவாக இருக்கும்.

இதேவேளை பின்னணியில் வழமையான பேஸ்புக் பக்கம் காணப்படுவதுடன் Pop-Out விண்டோவை இல்லாமல் செய்யும் (Close) வசதியும் காணப்படுகின்றது.

எவ்வாறெனினும் இவ் வசதியானது பயனர்கள் மத்தியில் எவ்வாறான வரவேற்பைப் பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

25000 ரூபா அபராதம் தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!!

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு 25000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து இன்றைய தினம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு 25000 ரூபா அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.இந்த பரிந்துரை குறித்து இன்று தீர்மானம் மிக்கதோர் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் 25000 ரூபா அபராதத்தை நடைமுறைப்படுத்தும் காலம் பற்றி நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக வீதிப் போக்குவரத்து குறித்த தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

25000 ரூபா அபராதத்தை குறைப்பதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்துதல், குடிபோதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட ஏழு வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கு இவ்வாறு 25000 ரூபா அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த 25000 ரூபா அபராதத்திற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழு ஒன்றை நியமித்திருந்தார்.

நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியனவற்றின் செயலாளர்கள், மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு, தனியார் பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், போக்குவரத்து சங்கங்களின் பிரரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழு இன்றைய தினம் கூடி, 25000 ரூபா அபராதம் தொடர்பில் முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்த வைத்தியர் : 10 கோடி ரூபா நட்டஈடு கோரும் தாய்!!

வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மகப்பேற்று விசேட நிபுணத்துவ வைத்தியர் ஒருவரிடம், இரண்டு பிள்ளைகளின் தாய் 10 கோடி ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகப்பேற்றுக்காக கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்ட எம்.சீ.ரீ.டி பெரேரா என்ற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே சட்டத்தரணியின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தையை ஈன்றெடுத்த குறித்த தாய், கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்றுவலி உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அறுவை சிகிச்சையின் பின்னர் குறித்த பெண் வயிற்று வலி குறித்து வைத்தியரிடம் கூறிய போதிலும் உரிய பரிசோதனை எதனையும் செய்யாத வலி நிவாரணிகளை மட்டும் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில மாதங்களாக வயிற்று வலி மற்றும் ஏனைய உடல் உபாதைகளினால் அவதியுற்ற குறித்த பெண், வேறு ஒர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட போது, அறுவை சிகிச்சையில் ஒரு தொகுதி பஞ்சு வயிற்றுக்குள் வைத்து வயிற்றை தைத்துள்ளமை கண்டறியப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி குறித்த சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடலின் ஒரு பகுதியையும் வெட்டி அகற்ற நேரிட்டதாகவும், சில மாதங்களாக தாய்ப்பால் ஊட்ட முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக பெருமளவு செலவிட நேரிட்டதாகவும் உடல் உள ரீதியாக பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டதாகவும் குறித்த பெண் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக தமக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்

சிறுமிக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்த பெற்றோர் கைது!!

பாடசாலை மாணவி ஒருவரை திருமணம் செய்ய வைத்த பெற்றோர் பிபில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் 15 வயது சிறுமி அவரின பெற்றோரினால் 20 வயது இளைஞருக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மொனராகலை மாவட்டத்திலுள்ள பிபில, மெதகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மெதக பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கே இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பிபில பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பகுதிக்கு கிடைத்துள்ள நிலையில் அந்த சிறுமி, இளைஞர் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் பிபில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

மீண்டும் வருகிறது நொக்கியா 3310!!

அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட கைத்தொலைபேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கைத்தொலைபேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது. 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த மொடல் வெளியானது.

இதன் நீடித்த பட்டரி பாவனை மற்றும் எளிதில் உடையாத வடிவம் காரணமாக மக்கள் இதனைப் பெரிதும் விரும்பியதுடன், இன்றும் நினைவில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த கைபேசியினையினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழமைபோல், கடிகாரம், கல்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும் இந்த செல்பேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதியரக ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் தோல்வியைத் தழுவிய நோக்கியா நிறுவனம், தமது பழைய மொடல்களை மீண்டும் களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

சிறைக்கு செல்லும் முன் சசிகலா செய்யப் போகும் முதல் விடயம் இது தான்!!

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதனால் இவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது. ஆனால் சசிகலா தரப்பில் மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கூவத்தூரில் இருந்து கிளம்பி, போயஸ்கார்டன் வந்த சசிகலா இரவு 11.15 மணிக்கு போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அதன் பின் அங்கு குழுமியிருந்த தன் கட்சித் தொண்டர்களுக்கு தைரியமாக இருக்கும் படி பேட்டி கொடுத்தார்.

இதனால் அவரைச்சுற்றி இருந்த பெண்தொண்டர்கள் அழுதவண்ணம் இருந்தனர். பேட்டி கொடுத்த பின், உடனடியாக வீட்டுக்குள் சென்ற அவர், இன்று முதலில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல இருக்கிறார்.

அங்கு செல்லும் சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் சிறிதுநேரம் பிரார்த்தனைச் செய்துவிட்டு, காரிலேயே பெங்களூரு நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

15 வயதான மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் விளக்கமறியலில்!!

15 வயது பாட­சாலை மாணவி ஏழு மாதக் கர்ப்­ப­மான சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட அச்­சி­று­மியின் தாயின் சட்­ட­ரீ­தி­யற்ற கண­வரை இம்­மாதம் 19 ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நிக்­க­வெ­ரட்டி நீதிவான் திரு­மதி காஞ்­சனா டி.சில்வா உத்­த­ர­விட்­டுள்ளார்.

நிக்­க­வெ­ரட்­டிய ரம்­ப­பொக்­குன பிர­தே­சத்தைச் சேர்ந்த 33 வய­தான நபர் ஒரு­வரே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

பாதிக்­கப்­பட்ட சிறுமி பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­தே­ச­வா­சிகள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட போது கடந்த ஏழு மாதங்­க­ளாக தாயின் சட்­ட­ரீ­தி­யற்ற கண­வரே சிறு­மி­யுடன் குடும்பம் நடத்­தி­யுள்­ள­தா­கவும் சந்­தேக நப­ரான சிறிய தந்­தையின் வேண்­டு­கோளில் இச்­சம்­ப­வத்தை தாயிடம் சிறு­மி­ம­றைத்­த­தா­கவும் பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தனர்.

சிறு­மியின் சிறிய வய­தி­லேயே தந்தை அவர்­களை விட்டுச் சென்­றுள்­ளதால் அதன் பின்னர் தாய் சட்­ட­ரீ­தி­யற்ற கணவர் ஒரு­வ­ருடன் வாழ்ந்து வரு­வ­துடன் அத்­தாய்க்கு தற்­போது ஏழு வயதில் மற்­றொரு பிள்­ளையும் உள்­ள­தா­கவும் தாய் வீட்டில் இல்லாத நேரம் இச்சிறுமி தனது சிறிய தந்தையினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோர விபத்து : 5 பேர் வைத்தியசாலையில்!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி, கடற்கரை வீதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ் விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, படுகாயமடைந்த 19 வயது இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஆண் வேடத்தில் வந்த இரானியப் பெண்கள் கைது?

இரானில் கால்பந்து போட்டிகளை பெண்கள் காண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து ஆண் வேடம் அணிந்து மைதானத்திற்குள் நுழைந்த பல இளம் பெண்களை தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறன்று டெஹ்ரானில், இரானின் மிகப் பிரபலமான இரண்டு அணிகள் விளையாடும் கால்பந்து போட்டியை காண முயன்ற எட்டு பெண்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இரானில் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி நடைபெற்றதிலிருந்து கால்பந்து போட்டிகளையும் பிற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பெண்கள் காண தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பேஸ்புக் தொடர்பில் கட்டுப்பாடுகள்?

பேஸ்புக் தொடர்பில் ஒரு கொள்கைத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே தெரிவித்துள்ளார்.

இது பேஸ்புக்கிற்கு தடை விதிப்பது அல்ல, ஒழுங்குபடுத்தலே என சுட்டிக்காட்டிய அவர், அது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

பேஸ்புக் வலைத்தளம் குறித்த பல்வேறு முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைக்கப்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே நிமல் போப்பகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்பு!!

 
வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக நேற்று (14.02.2017) வவுனியா வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கடந்த 17.11.2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.

குறித்த நபர்கள் சிலாபத்துறை, ஒட்டிசுட்டான், அடம்பன், மன்னார், மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், செட்டிகுளம், வவுனியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இந்தக் கும்பல் செயற்பட்டு வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட் விசாரணைகளின் பிரகாரம் மன்னாரில் களவாடப்பட்ட தங்கநகைகள் வவுனியா வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிசிர குமார மற்றும் உப பொலிஸ் அத்தியட்சகர் பியசிரி பர்னாந்து ஆகியோரின் வலிகாட்டலில் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொ.ப.இரத்ணதிலக மற்றும் ஜேசுதாசன் (42521) , ஜீவானந்தன் (45401) , கருணாதிலக (52391) , ரனதுங்க (29246) , சாலிய (74331) , வீரசேன (78448) , சானக (12159) , பிரசன்ன (81200) , அதுல (80891) ஆகிய பொலிஸார் அடங்கிய குழு நேற்று (14.02.2017) குறித்த வர்த்த நிலையத்தினை சுற்றிவளைத்து வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பொருட்களை ஒப்படைப்பதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

50 ஜல்லிக்கட்டு போட்டியிலும் கறுப்பனை யாரும் அடக்கியதில்லை : காளை வளர்க்கும் 14 வயது அமுதா!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டாம் குடி மஞ்சுவிரட்டுக்கு தனது காளையை 13 கிலோ மீட்டர் நடந்தே அழைத்து வந்தார் 9ம் வகுப்பு மாணவி அமுதா. அந்த புகைப்படம் பேஸ்புக், வாட்ஸ்அப் என்று வைரல் ஆனது. நாம் போயிருந்தபோது பள்ளிக்குச் சென்றிருந்த அமுதாவுக்காக அவர் வீட்டில் காத்திருந்தோம்.

”அது மாடு இல்லண்ணே.. என் அண்ணன். அவன் பேரு கறுப்பு. அவன் கலரும் கறுப்பு” என்று சிரித்தபடியே பேச ஆரம்பிக்கிறார் அமுதா.

” என் பேச்சுக்கு மட்டும்தான் கட்டுப்படுவாண்ணே. பயங்கர கோவக்காரன். என்னத்தவர வேற யார் என்ன சொன்னாலும் கண்டுக்கவே மாட்டான். அதனால எங்கின ஜல்லிக்கட்டு நடந்தாலும் சரி, நாந்தேன் அவன கூட்டிட்டு போவனும். நான் மட்டும் சத்தம் போட்டு அடக்கலினா அவனை எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது… புடிக்கவும் முடியாது.

அவனுக்கு நடந்து போறதுதான் புடிக்கும்ண்ணே. வேன்லயோ, லாரியிலேயோ கூட்டிட்டு போகனும்னு சொன்னா கூட வரமாட்டான். அதனால 20 கிலோமீட்டருக்கு உட்பட்ட தூரத்துல உள்ள ஊருக்கெல்லாம் நடந்துதான் கூட்டிட்டு போவேன். அதுக்கும் மேல தூரமா இருந்தா அவன்கிட்ட செல்லமா பேசணும். இல்லாட்டி படித்தியெடுத்திருவான். செல்லமா தாஜா பண்ணி கூப்டுட்டு போகனும்.

எனக்கு ஜல்லிக்கட்டு மாடு புதுசு இல்லண்ணா. நான் தவழ்ற வயசுல இருந்தப்பவே எங்க வீட்டுல மாடு இருந்துச்சு. அதனால எனக்கு பயம்னா என்னனே தெரியாது. நான் கறுப்ப ஜல்லிக்கட்டுக்கு கூட்டி போகும்போது மேலூர் ஜில்லாவே வெறிச்சு பாக்கும்.. நிறைய பேர் ஆச்சர்யமா பாப்பாங்க. இதுல ஆச்சர்யப்படவோ, சிரிக்கவோ என்ன இருக்குது? ஏன் பொண்னுங்க மாடு வளர்க்க முடியாத என்ன?” என்பவரின் பேச்சில் குழந்தைத்தனமே ஓங்கி நிற்கிறது.

”என் கறுப்பு இதுவரைக்கும் 50 ஜல்லிக்கட்டுக்கு மேல கலந்துகிட்டு வந்துட்டான். இன்னமும் ஒரு தடவ கூட தோக்கலை. போன எடத்துல எல்லாம் அவனுக்கு வெற்றிதான். கொம்பு வைச்ச சிங்கம் மாதிரி இருக்கிற அவன் கண்ணப் பாத்தாலே எல்லாரும் பயந்து போயிடுவாங்க. இந்த வருசம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு கூட்டிட்டு போக முடியல. அந்த மூணு நாளும் நான் பழனி பாதயாத்திரை போயிட்டேண்ணா. ரொம்ப வருத்தமா இருக்குது. அடுத்த வருஷம் விட்ற மாட்டேன்ல.

ஜல்லிக்கட்டு மாடு வளர்க்குறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குண்ணா. நான் தெனமும் பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னாடி என் கறுப்ப கொஞ்சிட்டுதான் போவேன். என் கறுப்புக்கு குலாப் ஜாமூன்னா அவளோ இஷ்டம். சோளக்கருது, பருத்திக்கொட்ட, புண்ணாக்கு, வைகோல், புள்ளு சாப்பிடுவான். மத்தபடி எது கொடுத்தாலும் தொடவே மாட்டான்.

எங்க ஊரு கண்மாய்ல தண்ணியும், கிராமம் செழிச்சு இருக்கிறதுனால வைக்கோலும் நெறைய கிடைக்கும். அது போக அவனுக்கு தேவைப்படுறதை லீவு நாள்ல வெவசாய வேலைக்கு போயி சம்பாதிச்சு நாந்தான் வாங்கிக் கொடுப்பேன். எனக்கு ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி. அப்பா கூட பிரச்னையில இருக்கிறதுனால எங்க தாத்தா வீட்டுலதான் இருக்கோம்.

ஜல்லிகட்டுக்கு இருந்த தடைனால மாடு தளர்ந்து போச்சு. அதனால தாத்தா மாட்ட விக்க விலைபேசி 2 லட்ச ரூவா பணம் வாங்கிட்டாரு. கடைசியில மாமாதான் இது அமுதாவோட மாடுனு சொல்லி காப்பாத்தினாரு. 2 லட்சம் இல்ல… 2 கோடி குடுத்தா கூட கறுப்ப யார் கிட்டேயும் கொடுத்திராதீங்க தாத்தானு நான் அவர் காலை புடிச்சுகிட்டு அழுதுட்டேன். இப்ப தாத்தாவும் கறுப்போட ஃபேனாகிட்டாரு. அமுதா ஹேப்பிண்ணா.

என் கறுப்புக்கு வெள்ளை சட்டயப் பாத்தா பிடிக்காது. கோவம் பொத்துகிட்டு வரும், சீறிப் பாயும். டேய் சும்மா இருடானு அதட்டுனாதான் அடங்குவான். முன்னலாம் நான் மாடு வளர்க்குறது பாத்து எல்லாரும் ‘பொட்டப் புள்ளைக்கு என்னாத்துக்கு இந்த வேல’னு எல்லாரும் பேசுவாங்க. அப்புறமா நான் நெறைய போட்டிக்கு போய் ஜெயிச்சுட்டு வந்ததும் எல்லாம் பெருமையா பாக்குறாங்க. நான் பள்ளிக்கூடத்துல செம பேமஸ்ண்ணா… எல்லாம் என் கறுப்பால” என்கிற அமுதாவின் முகத்தில் அத்தனை பிரகாசம்.

வவுனியாவில் 13 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன : ஒருவர் தப்பியோட்டம்!!

 
வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்தினால் நேற்று (13.02.2017) இரவு சட்டவிரோதமாக கடத்த முற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (13.02.2017) வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை விஸேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வவுனியா ஒமந்தை பெரியமடு பகுதியிலிருந்து கனகராயன்குளம் நோக்கி சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த மூன்று லட்சம் பெறுமதியான முதிரை 13 மரக்குற்றிகளையும் ஒரு பட்டா ரக வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

முதிரைக்குற்றிகளை கடத்த முற்பட்ட பட்டா ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி ஒமந்தை பெரியமடு பகுதியிலிருந்து கனகராயன்குளத்திற்கு பட்டா ரக வாகனத்தில் கொண்டு சென்று பின்னர் கனராயன்குளத்திலிருந்து கனகர வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்வதாக தெரியவருகின்றது

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்ப்படுத்துவதாக தெரிவித்தனர்.