பெண்ணின் மூளைக்கு அடியில் உயிருடன் கரப்பான் பூச்சி : சென்னை வைத்தியசாலையில் அகற்றப்பட்டது!!

 
பெண்­ணொ­ரு­வரின் மண்­டை­யோட்­டுக்குள் மூளைக்கு அடியில் உயி­ருடன் காணப்­பட்ட கரப்பான் பூச்சியொன்றை சென்னை வைத்­தி­ய­சா­லை­யொன்றில் மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர்.

சென்னை ஈஞ்­சம்­பாக்­கத்தைச் சேர்ந்த 42 வய­தான செல்வி என்­ற இப் பெண், அண்­மையில் இரவில் ஆழ்ந்த உறக்­கத்தில் இருந்­த­போது, அவரின் மூக்­கினுள் கரப்­பான்­பூச்சி நுழைந்­ததாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதை செல்வி அறிந்­தி­ருக்­க­வில்லை. எனினும், மறுநாள் கடு­மை யா­ன வலி கார­ண­மாக இப் பெண் அடுத்த சில நிமி­டங்­களில் மருத்­து­வர்­க­ளிடம் சிகிச்சை பெற சென்­ற­போ­திலும் மருத்­து­வர்­களால் அவ­ருக்கு என்ன பிரச்­சினை என்­பதை கண்­ட­றிய முடி­ய­வில்லை.

வலி குறை­யா­தி­ருந்த நிலையில், இறு­தியில் சென்னை ஸ்டான்லி மருத்­து­வ­ம­னையில் காது – மூக்கு – தொண்டை சிகிச்சைப் பிரிவில் சிகிச்­சைக்­காகச் சேர்ந்தார்.

அங்கு மூக்கில் மேற்­கொள்­ளப்­பட்ட என்­டோஸ்­கோப்பி பரி­சோ­த­னையில், கரப்பான் பூச்­சி­யா­னது மண்­டை­யோட்டின் அடிப்­ப­கு­தி யில் இரண்டு கண்­க­ளுக்கும் நடுவில் மூளைக்கு அருகில் இருந்­தமை தெரி­ய­வந்­தது. இதன்­பின்னர், 45 நிமிட சிகிச்­சைக்கு பின்பு கரப்பான்பூச்சி வெற்­றி­
க­ர­மாக வெளியே எடுக்­கப்­பட்­டது.

சென்னை ஸ்டான்லி மருத்­து­வ­ம­னையில் காது – மூக்கு – தொண்டை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் எம்.என்.சங்கர் இது குறித்து கூறு­கையில், இப் பெண்ணின் மூக்குக் குழாயை ஆராய்ந்­த­போது, அதற்குள் சிறிய கால்கள் அசை­வதைக் கண்டேன். மேலும் ஆராய்ந்­த­போது, சுமார் 5 சென்ரி மீற்றர் நீளத்தில் அசா­தா­ர­ண­மான ஏதோ ஒன்று இருப்­பதை உணர்ந்தேன்.

பின்னர், அது கரப்­பான்பூச்சி ஒன்றின் அடிப்­பாகம் எனத் தெரி­ய­வந்­தது. அதை­ய­டுத்து உறிஞ்சும் கருவி, கவ்­விப்­பி­டிக்கும் உப­க­ரணம் ஆகி­ய­வற்றை கொண்டு கரப்பான் பூச்­சியை எடுத்தோம். கரப்­பான்­பூச்சி இடது புறத்தில் இருந்­தி­ருந்தால், நோய்த்­தொற்று ஏற்­பட்டு, மூளையைப் பாதித்­தி­ருக்கும்” என்றார்.

இக்­ க­ரப்பான்பூச்சியா­னது இப் ­பெண்ணின் மண்­டை­யோட்­டுக்குள் சுமார் 12 மணித்­தி­யா­லங்கள் உயி­ருடன் இருந்­துள்­ளது என டாக்டர் எம்.என். சங்கர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து செல்வி கூறு­கையில், “இரவு உறக்­கத்தில் இருந்­த­போது மூக்­குக்குள் பூச்சி உள்­பக்கம் நக­ரும்­போது கண்களில் எரிச்சல் ஏற்பட்டு, நீர் வந்தது. தலைக்குள் கூசுவது போன்றும், ஊர்வது போன்ற உணர்வால் இரவு முழுவதும் அவதிப்பட்டேன். இப்போது குணமாகிவிட்டது’ என்றார்.

காதலர்தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த கரிநாள் தான் இந்தக் காதலர் தினம்.

மேலைத்தேய நாகரிகத்தில் தோன்றிய இன் நாள் மெதுவாக எம்மையும் தன் ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவந்துள்ளது தான் உண்மை. எம்மில் பலர் எதற்காக காதலர் தினம் கொண்டாடுகின்றோம் என்று தெரியாமலே கொண்டாடுவது தான் வேதனை.

ஆடையின்றி இருந்த காலத்திலும் காதலை கண்ணியமாகச் சொன்ன மரபு தான் எம் தமிழ் மரபு. எம் மரபால் ஈர்க்கப்பட்ட மேலைத்தேயர்கள் இன்று எம் கலை கலாச்சாராங்களை ஆய்வு செய்து வரும் நிலையில் நாமோ எம் மரபுகளை ஆடைகள் போல் ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போடுவது சற்று வேதனைக்குரிய விடயமே.

தமிழரின் திருநாள் போல் ஆகிவிட்ட இக் காதலர் தினத்தை கொண்டாட முன்னணியில் வருபவர்கள் தமிழின் பெயரால் வியாபாரம் நடாத்தும் வானொலி தொலைக்காட்சிகள் தான். தமிழரின் கலை கலாச்சார பண்டிகைகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை இக் காதலர் தினத்திற்கு இவர்கள் கொடுபதற்க்கு காரணம் வணிக நோக்கம் தவிர வேறில்லை.

நம் குழந்தைகள் கூட காதலர் தினத்தை குதூகலித்துக் கொண்டாடுகின்ற அவமான நிலைமை யாரிடம் போய் சொல்வது. தமிழர் யாரும் காதலிக்க வேண்டாம் என்று சொல்லவில்லலை. ஆனால் நாம் யார், நம் கலாச்சாரம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப எம் வாழ்வியலை அமைத்துக் கொள்கின்றோமா என்பது தான் இங்கு கேள்வி.

இக் காதலர் தினத்தை அதிகமா கொண்டாடுபவர்கள் காதல் என்பதை உண்மையாக அறியாதவர்களாகவும், பாலினக் கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்ட இளவயதுக்காரர்களாகவே உள்ளனர். இதனால் உண்மையாக காதல் செய்பவர்களும் சற்று தர்மசங்கடத்திற்கு ஆளாவது என்னவோ உண்மை தான்.

கடந்த ஆண்டு காதலர்தினம் கொண்டாடிய அதே நபருடன் இந்தாண்டு கொண்டாடுபவர்கள் எதனை பேர்? சினிமாவில் வரும் கன்றாவிக் காதலுக்கு இந்த இளைய சமூகம் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் தான் இந்த காதலர் தினத்திற்கு கிடைத்திருக்கும் முக்கியத்துவம்.

இதைச் சொல்லும் நான் ஒன்றும் காதலுக்கு எதிரானவன் அல்ல. இதைச் சொல்லக் காரணம் ஒரு சின்ன சமுதாய சிந்தனை தான். காதலர் தினம் கொண்டாடும் அன்பு நண்பர்களே ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் நேசிப்பவர்களை சந்தோசப் படுத்துவதற்காக உங்கள் அப்பாவின் பணத்தில் வாங்கிய அன்பளிப்புப் பொருட்கள் இருவரும் மறைத்து வைப்பது தான் காலம் காலமாக நீங்கள் செய்து வருவது..

நண்பர்களே சற்று சிந்தியுங்கள் எம் தாயகத்தில் யுத்தத்தின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. அன்பிற்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்கி நிற்போர் ஆயிரம் ஆயிரம். இத் தினத்தில் இவர்களில் ஒருவருக்கேனும் ஒருவேளை உணவளியுங்கள், படிக்க வசதியற்ற ஒரு குழந்தைக்கு ஒரு பென்சிலாவது வாங்கிக் கொண்டுங்கள்.இவர்களின் வாழ்த்து கண்டிப்பாக உங்களை மட்டுமல்ல உங்கள் காதலையும் வாழ வைக்கும்.

இப்படிச் செய்வதன் மூலம் குறிக்கோள் இன்றி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு இளைய சமுதாயத்தினராகிய நாம் ஒரு சிறிய இலட்சியத்தையாவது வரும் தலைமுறைக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும்.

வவுனியாவில் இளைஞனைக் காணவில்லை!!

வவுனியாவில் கடந்த டிசம்பர் 22ம் திகதியிலிருந்து உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள விஜயபாலன் பகீரதன் என்ற 35 வயது இளைஞனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உக்கிளாங்குளம் பகுதியில் ஆட்டோ சாரதியான இவர் வீட்டில் நின்றபோது கடந்த வருடம் டிசம்பர் 22ம் திகதி 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காணாமற்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கைத்தொலைபேசி, மணிப்பேர்ஸ், அனைத்தும் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் எங்கு சென்றார், அல்லது இவரை யாரும் கடத்தியிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரைப்பற்றிய தகவல்கள் தெரிந்தால் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கவும்.

வீசா இன்றி இலங்கையர்கள் அமெரிக்கா செல்ல முடியுமா?

வீசா இன்றி இலங்கையர்கள் அமெரிக்காவிற்கு செல்ல முடியும் என யு.எஸ்.ஏ ரெலிவிசன் என்ற இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான நிறைவேற்று உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக அதிகபட்சமாக 180 நாட்கள் வரை இலங்கையர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும்.

அத்துடன், 180 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கு வீசா பெற்றுக்கொள்வது கட்டாயம் எனவும் அந்த ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியி கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, இலங்கை இராஜதந்திரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வர்த்தகம், மற்றும் இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார் என அந்த சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், வீசா இல்லாமல் இலங்கையர்கள் அமெரிக்கா செல்லலாம் என வெளியான அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

நோய்தொற்று இருக்கும் ஜெயலலிதா எதற்காக தயிர்சாதம் சாப்பிட்டார் : பூதாகரமாய் வெடிக்கும் உண்மைகள்!!

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தற்போது வரை தமிழகத்தில் நிலவி வருகின்ற நிலையில், நக்கீரன் நாளிதழின் பத்திரிகையாளர் கோபால் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது டாக்டர் பீலோ கூறிய தகவல்களின் பின்னணியில், அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி அல்லது சசிகலா இருந்திருக்க வேண்டும்.

இதற்காக, அவருக்கு பலகோடி கொடுக்கப்பட்டுள்ளது. நாடகத்திற்கு ஒத்திகை பார்த்துவிட்டு மேடையில் நடிக்கும்போது சில நேரங்களில் சொதப்படும் ஏற்படும்.

அப்படிதான் டாக்டர் பீலேவும் சொதப்பியுள்ளார். கடுமையான நோய்தொற்று (septicemia) தீவிரமடைந்து இரத்தத்தில் கலந்துவிட்ட காரணத்தினால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என அவர் கூறினார்.

மேலும், அவரை முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அப்படியிருக்கையில், ஒரு நாட்டை ஆளுகிற முதல்வர் எதற்காக இப்படி தனது உடல்நிலை குறித்து கண்டுகொள்ளவில்லை.

மேலும், அவர் தயிர்சாதம் சாப்பிட்டதாக கூறுகிறார் சசிகலா. நோய்தொற்று இருப்பவருக்கு எவ்வாறு தயிர்சாதம் சாப்பிடக்கொடுத்தார்கள்.

இவை அனைத்தும் பீலோ விட்ட பீலா என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

நடிகர் சோவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஜெயலலிதா சென்று பார்த்தார்கள். இந்த வீடியோ வெளியானது. எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, அவர் இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகங்கள் எழுந்தன.

இந்த சந்தேகத்தி போக்குவதற்காக, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை வெளியிட்டார்கள். இப்படி எம்ஜிஆர் செய்திருக்கும்போது, ஜெயலலிதாவை புகைப்படம் எடுப்பதற்கு ஏன் மறுத்துவிட்டார்கள்.

ஜெயலலிதாவை ஐசியூவில் உள்ள துகளின் வழியாக ஆளுநர் பார்த்ததாக டாக்டர் பாலாஜி கூறினார். இது எவ்வளவு பெரிய பொய்.

ரெட்டியை பார்த்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தேன் என ஆளுநர் அறிக்கை வெளியிட்டார். ஆனால் மருத்துவர் பாலாஜியோ ஐசியூவின் துகள் வழியாக ஆளுநர் பார்த்தாக பொய் கூறுகிறார் என்று நக்கீரன் தெரிவித்துள்ளார்

ஒரே பிரவசத்தில் மூன்று பிள்ளைகள் : தாய்க்கு கிடைத்த அதிஸ்டம்!!

ஹட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளை அண்மையில் பெற்றெடுத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. இது தொடர்பான செய்திகளும் அண்மையில் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

குறித்த குழந்தைகளை வளர்பதற்கு தேவையான உதவிகளை செய்ய தற்போது வர்த்தகர் ஒருவர் முன்வந்துள்ளார்.

மூன்று குழந்தைகளும் பாதுகாப்பாக வாழ்வதற்கு பொருத்தமான வகையில் அவர்களது இல்லத்தை மறுசீரமைத்து கொடுக்கவும் வர்த்தகர் உடன்பட்டுள்ளார்.

மஸ்கெலியா சாமிமலை ஸ்டோக்ஹோம் தோட்டத்தில் வசித்து வரும் புஷ்பலதா என்ற பெண்னே இந்த மூன்று குழந்தைகளின் தாயாவார். இவருக்கு இது நான்காவது பிரசவம் எனவும் ஏற்கனவே அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவர் குழந்தையை வளர்க்க பொருளாதார சிக்கல்கள் உள்ளதாக அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் வர்த்தகர் உதவி செய்ய முன்வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கு தேவையான பால் மா, உடைகளுடன், அந்த குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மேலும் பல பரிசு பொருட்களையும் அந்த வர்த்தகர் வழங்கியுள்ளார்.

களனி – வரகாகொட பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரான ரொஹான் அபயவர்தன என்ற நபரே தற்போது அவருக்கு உதவி செய்வதற்காக முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனி இவற்றை கூகுளில் அனுப்ப முடியாது : கூகுள் அதிரடி தடை உத்தரவு!!

ஜி-மெயில் கணக்கிலிருந்து சில குறிப்பிட்ட வகையான ஃபைல்களை நாளை முதல் அனுப்ப முடியாது என கூகுள் அறிவித்துள்ளது.

ஜி-மெயிலில் .js என்ற அமைப்பில் உள்ள ஃபைல்களை அனுப்ப கூகுள் தடை விதித்துள்ளது. அனுப்ப முயற்சித்தால் ஏன் அனுப்ப இயலாது என்ற காரணத்தை ஜி-மெயிலுக்கு கூகுள் அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

.js ஃபைல்கள் மூலம் எளிதில் வைரஸ் பரப்பபடலாம் என்ற முக்கிய பாதுகாப்பு காரணங்களுக்காகவே இது தடை செய்யப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஜி-மெயில் மூலம் அனுப்பமுடியாவிட்டாலும் இந்த வகையான ஃபைல்களை கூகுள் ட்ரைவ் மற்றும் க்ளவுட் ஸ்டோரேஜ் மூலம் அனுப்ப முடியும் என்பது முக்கிய விடயமாகும்.

ஏற்கனவே கூகுள் .ade, .adp, .bat, .chm, .cmd, .com போன்ற 30க்கும் மேற்ப்பட்ட ஃபைல்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2030 ஆம் ஆண்டு பூமிக்கு நேரவிருக்கும் மாபெரும் ஆபத்து : அச்சுறுத்தும் ஆய்வுகள்!!

பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030 ஆம் ஆண்டு பூமிக்கு ஆபத்து நேரிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் குடியிருந்துவரும் இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல பூமி என்னும் கோளத்தைச் சுற்றி இருக்கும் காந்தத்திலும் இரு துருவங்கள் உண்டு.

வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆய்வாளர்கள் காலங்காலமாக ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது.

பூமியின் காந்த மண்டலம்தான் சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களில் இருந்து நம்மை காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும்.

காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும்.

அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.

இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது என விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் தற்போது கவலை அடந்துள்ளனர்.

2030 ஆம் ஆண்டு இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர்.

கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது. துருவங்கள் மாறும் இந்த நாலு லட்சம் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட இந்துக்கள் கூறும் கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது.

இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:

கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432, 000 ஆண்டுகள்

நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர்

இதனால் தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிகின்றனர். இதை மாக்னெட்டோகெடான் என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

மன்னார் விபத்தில் மூவர் காயம்!!

மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,

மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 3 பேரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகனை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈஃபிள் கோபுரத்தைச் சுற்றி அமைக்கப்படவுள்ள கண்ணாடி தடுப்புச்சுவர்!!

பிரான்ஸில் உள்ள பிரபல ஈஃபிள் கோபுரத்தை சுற்றிலும் கண்ணாடியால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கப்படவுள்ளது.

பிரான்ஸில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடியால் ஆன சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

சுமார் 2.5 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த கண்ணாடி சுவரை அமைக்க 300 மில்லியன் யூரோக்கள் செலவாகும் கணக்கிடப்பட்டுள்ளது.

128 வருட பழைமையான ஈஃபிள் கோபுரத்தை புதுப்பிக்கும் வகையில் இந்த கண்ணாடி சுவர் மாதிரியை அமைக்க உள்ளதாக ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஈஃபிள் கோபுரத்தை கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் உள்ளே நுழைய முடியும். இந்த கண்ணாடியால் ஆன மதிலை எழுப்புவதன் மூலம் குறிப்பிட்ட வழியாக மட்டுமே சுற்றுலாப் பயணிகள் உள்ளே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுவர் எழுப்புவதன் மூலம் நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும், மேலும் ஈஃபிள் கோபுரம் பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை!!

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்க முடியவில்லை. இன்னும் பல நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளன.

கிர்குக் நகரில் இருந்து 55 கி.மீ. தென்மேற்கில் அமைந்துள்ள அல் ஷஜரா கிராமமும் அவர்களது கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது.

இந்த நிலையில் அங்கிருந்து குடிமக்கள் சிலர் தப்பி கிர்குக், சலாகுதீன் போன்ற இடங்களுக்கு நேற்று முன்தினம் ஓட்டம் எடுத்தனர். ஆனால் அவர்களில் சிலர் அல்ரியாத்- ஹம்ரீன் மலைப்பகுதியில் செல்வதை ஐ.எஸ். இயக்கத்தினர் பார்த்து விட்டனர்.

இதையடுத்து அவர்களை ஐ.எஸ். இயக்கத்தினர் பிடித்து, உயிரோடு எரித்து கொலை செய்து விட்டனர். குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும், இனி யாராவது தப்பித்து ஓட முயன்றால், அவர்களும் உயிரோடு எரித்துக்கொல்லப்படுவார்கள் என ஐ.எஸ். இயக்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் மீது தார் ஊற்றி தீ வைத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடூர செயல், கிர்குக் பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாய் கைவிட்டுச்சென்ற குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய்!!

 
தாயினால் கைவிடப்பட்டு சென்ற 2 வயது சிறுவனின் உயிரை, கடும் பனிப்பொழிவு நிறைந்த குளிரிலிருந்து, நாயொன்று இரண்டு நாட்களாக காப்பாற்றிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் ஹலடாய் பகுதியில் உள்ள கிராமத்தில், தயொருவர் தனது இரண்டு வயது மகனை கடும் பனிப்பொழிவு மிகுந்த காலநிலையில், உணவேதும் இல்லாதவாறு விட்டுச் சென்றுள்ளார்.

குளிர் காக்கும் உடைகள் எதுவும் அணியப்படாத சிறுவன், குளிரில் கடுமையாக பாதிக்கப்பட்டவே, சேவியர் என்ற பெயருடைய நாய், குறித்த சிறுவனை தனது உடல் வெப்பத்தால், இரண்டு நாட்கள் பாதுகாத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் அயலவர்கள், சிறுவன் உணவில்லாமல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சிறுவனின் தாய், நான்கு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த நிலையில், பொலிஸார் குழந்தையை பராமரிக்காத குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலர் தினத்­துக்­காக இந்­தி­யா­வி­லி­ருந்து ரோஜா பூக்கள் : கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் கைப்­பற்­றப்­பட்­டன!!

காதலர் தினத்தை முன்­னிட்டு இந்­தி­யா­வி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக கூறப்­படும் ரோஜா பூக்கள் அடங்­கிய 4 பெட்­டிகள் விமான நிலைய சுங்கப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக சுங்­கத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

நான்கு பெட்­டி­களில் மொத்­த­மாக 53 கிலோ­கிராம் வாடாத ரோஜா பூக்கள் காணப்­பட்­டுள்­ளன. இவை பெத்­த­கான வீதி, கோட்டே என்ற முக­வ­ரி­யி­டப்­பட்ட நிலையில் வர்த்­த­க­ரொ­ரு­வரின் பெயரில் வரவழைக்­கப்­பட்­டுள்ள நிலையில் யூ.எல் 124 என்ற விமா­னத்தின் ஊடாக கடந்த 8 ஆம் திகதி இலங்கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ரோஜா பூக்­களை இலங்­கைக்கு கொண்டு வரு­வ­தற்­காக NPQS/CFL/206/053 என்ற பதி­வி­லக்­கத்தில் அனு­ம­திப்­பத்­தி­ர­மொன்று பெறப்­பட்­டி­ருந்த போதிலும், அப்­பத்­திரம் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­ப­டாமல், சட்­ட­வி­ரோ­த­மாக கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­த­மை­யினால் சுங்­கத்­தினர் அவற்­றினை கைப்பற்றியுள்ளனர்.

இந்­நி­லையில், சுங்­கத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்ட பூக்­களை விடு­விப்­ப­தற்­காக விமான நிலை­யத்­துக்கு சென்ற குறித்த வர்த்­தகர், பிர­பல அமைச்­ச­ரொ­ரு­வரின் உத்­த­ர­வுக்­க­மை­யவே இவை கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்­த­தோடு சுங்க அதி­கா­ரி­களின் முன்­னி­லை­யி­லேயே குறித்த அமைச்­ச­ருக்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்து இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

எனினும் சுங்கத்தினர் அப்பூக்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எடுத்திராது தடுத்துவைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகள் சசிகலாவால் துன்பத்தை அனுபவித்தேன் : பன்னீர்செல்வம்!!

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதியில் குண்டர்கள் காவலுக்கு இருப்பதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கூவத்தூரில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திற்குப் பிறகு சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் தமது தொகுதி மக்களின் மன நிலையை அறிந்த பிறகு தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை முடிவுசெய்ய வேண்டுமெனக் கூறினார்.

உள்துறை முதல்வர் வசம் இருப்பதால், அந்த எம்.எல்.ஏ.க்களை ஏன் ​பொலிஸ் மூலம் மீட்கக்கூடாது என கேள்வியெழுப்பப்பட்ட போது, அசாதாரண சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அம்மாதிரி நடவடிக்கையில் இறங்கவில்லையென்று கூறினார்.

சசிகலா தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பது குறித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்து வந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து உண்மை நிலையை ஏன் தெளிவுபடுத்தவில்லையென்று கேள்வியெழுப்பினார்.

மேலும் முதல் முறையாக ஜெயலலிதா தன்னை முதலமைச்சராக்கிய காலகட்டத்திலிருந்து தற்போது வரையிலான 15 ஆண்டு காலத்தில் சசிகலாவால் தான் பட்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அளவில்லையென்றும் ஜெயலலிதா யாரோடு அன்பு பாராட்டினாலும் சசிகலாவால் பொறுக்க முடியாது என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.

ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபாவை ஜெயலலிதா இறந்த பிறகுகூட அவரது சடலத்தின் அருகில்கூட அனுமதிக்கவில்லையென பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

சசிகலா எம்எல்ஏக்கள் மத்தியில் பேசும்போது தன்னைத்தானே சிங்கம் என்று சொல்லிக்கொள்வது வடிவேலு நானும் ரவுடிதான் என்று கூறிக்கொள்வதைப் போல இருக்கிறது என்று கேலியாகச் சொன்னார்.

மேலும் திங்கட்கிழமை தமிழக தலைமைச் செயலகத்திற்குச் சென்று பணிகளைக் கவனிக்கப்போவதாகவும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை தன்னால் நிரூபிக்க முடியுமென்றும் பன்னீர்செல்வம் கூறினார்.

ஜெயலலிதா 145 படங்களில் பெரும் சிரமப்பட்டு நடித்து சம்பாதித்த சொத்துகள் கட்சிக்குத்தான் சொந்தமென்றும் பன்னீர்செல்வம் கூறினார்.

இதற்கிடையில் தேனி தொகுதியின் எம்.பி.யான ஆர். பார்த்திபனும் தனது ஆதரவை ஓ. பன்னீர்செல்வத்திற்குத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

மரண அறிவித்தல் அமரர். சதாசிவம் கைலாயபிள்ளை(ஒய்வு நிலை பாடசாலை அதிபர்)

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வேலணை வடக்கு சோளாவத்தையை நிரந்தர முகவரியாகவும் வவுனியா மற்றும் கச்சேரி கிழக்கு ஒழுங்கை சுண்டுக்குழி யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவரும் முன்னைநாள் யாழ்/வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபருமான அமரர் திரு சதாசிவம் கைலாயபிள்ளை(கைலாயபிள்ளை வாத்தியார்) அவர்கள் 11.02.2017  அன்று காலமானார்.

அன்னார் அமரர்களான சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்  அமரர்களான தம்பாபிள்ளை நாகமம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற இராசலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின்  அன்புக் கணவருமாவார்.

அன்னார் காலஞ்சென்ற  சண்முகம், மாணிக்கவாசகர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மூத்ததம்பி(கனடா),கமலாதேவி ஆகியோரின் சகோதரரும்

ஜெயதேவி,(ஓய்வுபெற்ற பிரதி மாகாண விவசாய பணிப்பாளார்),சத்தியதேவி, காலஞ்சென்ற ஸ்ரீதேவி ,நிர்மலாதேவி(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புத்தந்தையும் ஜெகநாதன் (ஓய்வுபெற்ற பிரதி மாகாண விவசாயபணிப்பாளர்) குமாரதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்

பிருந்தாபன்(பரியோவான் கல்லூரி),கோகுல்,நிவேத்  ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 14.02.2017 செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று  தகன கிரியைகளுக்காக  மதியம் 12.00 மணியளவில் சாட்டி மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.  இவ்வறிவித்தலை  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம் .

 

தகவல்

திரு.திருமதி. ஜெயதேவி ஜெகநாதன் (மகள்)        தொடர்புகளுக்கு 94 77 037 7390

(ஓய்வுபெற்ற பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்)

திரு.ச. மாணிக்கவாசகர் (சகோதரன்)

ஓய்வுபெற்ற பெற்ற ஆசிரியர் வேலணை )

காலதாமதம் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் : ஆளுநருக்கு சசிகலா கடிதம்!!

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பெயரில் தமிழக ஆளுநருக்கு பொய்யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிமுக தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆளுநருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அனுப்பியதாக ஒரு போலி கடிம் வெளியாது. அதில், என்னால் ஓரளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும், இனியும் காலதாமதம் செய்தால் எனது சாவுக்கு நீங்கள் தான் காரணம் என எழுதி வைத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என சசிகலா எழுதியாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக தலைமையகம் கூறியதாவது, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பெயரில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு பொய்யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொய்யானவை.

இது போன்று போலித்தகவல் பரப்பும் விஷமிகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக அதிமுக தலைக்கழகம் தெரிவித்துள்ளது.