அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பெயரில் தமிழக ஆளுநருக்கு பொய்யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிமுக தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆளுநருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அனுப்பியதாக ஒரு போலி கடிம் வெளியாது. அதில், என்னால் ஓரளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும், இனியும் காலதாமதம் செய்தால் எனது சாவுக்கு நீங்கள் தான் காரணம் என எழுதி வைத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என சசிகலா எழுதியாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக தலைமையகம் கூறியதாவது, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பெயரில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு பொய்யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொய்யானவை.
இது போன்று போலித்தகவல் பரப்பும் விஷமிகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக அதிமுக தலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அரசியலில் மாண்புமிகு இதயதெய்வம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நிலைதான் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களை சந்திக்க புறப்படும் முன் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூறியதாவது,
ஒரு பெண் அரசியலில் இருப்பது என்பது மிகவும் கடினம். இதே நிலைதான் மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களுக்கும் ஏற்பட்டது. அம்மாவை எதிர்த்த கூட்டம்தான் இப்போது நம்மை எதிக்கிறது .
இதுபோலவே எம்ஜிஆர் காலத்திலும் சிலர் வெளியேறினார்கள். அது போன்ற சதிகளை எல்லாம் தகர்த்து தான் அம்மா கட்சியை வளர்த்தார்கள்.
மிரட்டல் உருட்டல்களை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. எதிர்நீச்சல் போட்டுத்தான் கழகத்தை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளோம். நிச்சியமாக இதிலிருந்தும் நாம் மீண்டு வருவோம், நல்ல முடிவு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி காலி ரயில் நிலையத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நுழைந்த இரு பிரான்ஸ் பிரஜைகள், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றின் பெட்டியில் சித்திரம் வரைந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர்கள் ரயில்வே பாதுகாப்பு சேவை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காலி பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றில் நேற்று (11.02) ஆஜர்படுத்தியுள்ளனர். இதன்போது வெளிநாட்டு பிரஜைகளை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அழிக்க முடியாத பெயின்ட் மூலம் சித்திரம் வரையப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில் பெட்டிக்கு முழுவதும் பெயின்ட் பூசும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் ரயில்வே அதிகாரிகள் ரயில்வே திணைக்களத்துக்கு 64 ஆயிரத்து 440 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கிரேக்க நாட்டில் தெசா லோகினி என்ற இடத்தில் கடந்த வாரம் சாலைப் பணிகள் நடைபெற்றது. அப்போது பூமிக்குள் வெடிக்காத அணுகுண்டு புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
250 கிலோ வெடி மருந்து கொள்ளளவு கொண்ட அந்த அணுகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது.
அப்போது வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் மண்ணுக்குள் புதைந்து கிடப்பது தெரியவந்தது. அந்த குண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
அதனால் தெசாலோனிகி நகர மக்களை கூண்டோடு வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நகரில் 70 ஆயிரம் மக்கள் வகிக்கின்றனர். அணுகுண்டு புதைந்து கிடக்கும் 1.9 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகள் என 300 பேர் 20 நோயாளர் காவு வாகனங்களில் அப்புறப்படுத்தப்பட்டனர்.
பொது மக்கள் வெளியேற்றும் பணியில் 1000 போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பல நாட்களாக ரோந்து சுற்றி பொதுமக்கள் வெளியேறும் படி அறிவுறுத்தினார்.
எரி காயங்களுடன் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் சடலம் இன்று மதியம் 12 மணியளவில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியினை வசிப்பிடமாக கொண்ட குறித்த பெண் வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்டவர் 57 வயதுடைய ஸ்ரீகலா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைவாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
வரும் 13,14 திகதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை வவுனியா நகரில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்ப்படும் என வவுனியா மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் படி,
தெற்கிலுப்பைக்குளம், வெளிக்குளத்திலிருந்து குடாகச்சக்கொடி வரை, கோவிற்குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, வவுனியா நகரத்திலிருந்து போகஸ்பவ வரை , சூசைப்பிள்ளையார்குளம், ஓவியா விடுதி, எஸ்.வீ.ஆர் அரிசி ஆலை, லங்கா அரிசி ஆலை, முதலாம் குருக்குத்தெரு வவுனியா, நெளுக்குளத்திலிருந்து பறையநாளங்குளம் வரை, பறையநாளங்குளத்திலிருந்து முகத்தான் குளம் வரை, பூவரசங்குளத்திலிருந்து கங்கள் குளம் வரை,
பிரமநாளங்குளத்திலிருந்து பெரியதம்பனை வரை, வவுனியா நகரம், பூங்கா வீதி, புகையிரத நிலைய வீதி, வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து கண்டி வீதி , மதவு வைத்தகுளத்திலிருந்து பண்டாரிக்குளம் வரை , காத்தார் சின்னக்குளம், மகாறம்பைக்குளம், பூந்தோட்டம், வைரவப்புளியங்குளம், குருமன்காடு, பட்டாணிச்சூரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரை, கூமாங்குளத்திலிருந்து நொச்சிக்குளம் வரை, நெளுக்குளத்திலிருந்து பெரியநொச்சிக்குளம் வரை, பெரியநொச்சிக்குளத்திலிருந்து செட்டிக்குளம் வரை, வவுனியா வைத்தியசாலை போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் காலங்களில் மின்சார உயர் தூக்கி மற்றும் மின்சார மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
முதற்கட்டமாக சீகிரியா சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
சீகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொல்பொருள் நிர்மாணங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சீகிரியவை பார்வையிடுவதற்காக செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதற்கமைய மின்சார உயர தூக்கி மற்றும் மின்சார மோட்டார் வாகனங்களை அறிமுகப்படுத்தி வைப்பது அவசியம் என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் வெளிநாட்டு விஜயங்களில் ஈடுப்படவுள்ளமையினால் நாளை முதல் அமைச்சர் அகில விராஜ்காரியவசம் பதில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஸ் ஒன்றில் திருடிய நபர் ஒருவர், பஸ்ஸிலிருந்து வெளியேற முற்பட்டபோது கதவை திடீரென மூடி அந்நபரை சிக்க வைத்த சாரதி, அந்த பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்ற சம்பவம் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.
கொலம்பியவின் பொகோட்டா நகரில் பஸ் ஒன்றில் ஏறிய நபர், பயணி ஒருவரின் தொலைபேசியை திருடிக்கொண்டு பஸ்ஸிலிருந்து வெளியேறுவதை பஸ் சாரதி உணர்ந்தார்.
அப்போது விரைவாக சிந்தித்த மேற்படி சாரதி பஸ்ஸின் கதவுகளை வேகமாக மூடினார். இதனால், மேற்படி திருடன் கதவு இடுக்கில் சிக்கிக்கொண்டதால் அவன் தப்பிச் செல்ல வழியிருக்கவில்லை.
பின்னர் மேற்படி பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்குச் செலுத்திச் சென்ற சாரதி, திருடனை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
பாடசாலை, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பிரிண்ட் எடுத்தல் இன்றியமையாததாக உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பிரிண்ட்டிங் தொழில் நுட்பம் செலவு அதிகம் என்பதால், கலிபோர்னிய விஞ்ஞானிகள் ஒளி மூலம் பிரிண்ட் எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் செலவை குறைப்பதுடன் மிக எளிமையானது, இதற்காக சிறப்பு பேப்பர் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. அந்த தாளில் வண்ணத்திற்காக பிரஸ்ஷியன் நீலம் உபயோகப்படுத்தப்படுகிறது.
பேப்பரில் பிரஸ்ஷியன் நீலம் மற்றும் டைட்டேனியம் டைஒக்சைட் என்ற வேதி கலவை மீது எலக்ட்ரான்களை செலுத்தும் போது தாளில் உள்ள எழுத்துக்கள் வெளிவந்து பிரதிபலிக்கிறது.
இதன் மூலம் பேப்பரில் உள்ள எழுத்துக்கள் நீல வடிவில் பிரிண்ட் ஆகிவிடும். எழுத்துக்கள் இல்லாத பிற இடங்கள் வெள்ளை நிறமாக மாறும். இதன் வெப்பநிலையை 120 டிகிரி செல்சியஸ் வரை மாற்றும் போது வெவ்வேறு வண்ணங்களில் எழுத்துக்கள் பிரிண்ட் ஆகிறது.
எழுத்துக்களின் நிறத்திற்காகவே பிரஸ்ஷியன் நீலம் மற்றும் டைட்டேனியம் டைஒக்சைட் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பிரிண்ட் செய்யப்படுவது ஒரு வாரத்திற்கு அழியாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதன்பின் பிரிண்ட் அழிந்துவிடும். ஆனால் அந்தப் பேப்பரை மீண்டும் பயன்படுத்தலாம். இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் அச்சடிக்க பயன்படும் மை, பேப்பர், மற்றும் மின்சாரம் போன்றவை மிச்சப்படுத்தபடுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்ததாக சியோல் பாதுகாப்பு அமைச்சகம் தகவல.
பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா சோதனை செய்யும் முதல் ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணையை காலை 7:55 மணிக்கு பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்துள்ளது.
மும்பை, பவாய் சிவ்சக்தி நகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு பிறந்த இரண்டாவது பெண் குழந்தையை மூச்சுத் திணறடித்து கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனா (23) என்ற பெண்ணுக்கு 2 வயதில் மூத்த புதல்வியொருவர் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மீனாவிற்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவர் பப்லு பணிக்குச் சென்று திரும்பி வந்தார்.
அப்போது 2-வது குழந்தை வெகு நேரமாக அமைதியாக இருந்தது. இதுகுறித்து அவர் கேட்டபோது குழந்தை தூங்குவதாக மீனா கூறினார்.
சிறிது நேரம் கழித்து மீனா குழந்தையை எழுப்பினார். ஆனால் குழந்தை பேச்சு மூச்சு இன்றி கிடந்தது.
உடனடியாக அவர்கள் குழந்தையை ராஜவாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.
இதைகேட்டு மீனா கதறி அழுதார். ஆனால் குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை.
தகவல் அறிந்து வந்த பொலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் குழந்தையின் தலையிலும் காயமிருந்தது. இதையடுத்து பொலிசார் குழந்தையின் தாய் மீனாவிடம் துருவிதுருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கையில்..
எனக்கு ஆண் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும். எனவே திருமணத்திற்கு பிறகு எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசையாக இருந்தேன். இந்தநிலையில் எனக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்தது.
எனவே 2-வது குழந்தையாவது ஆணாக பிறக்க வேண்டும் என ஏக்கத்துடன் இருந்தேன். ஆனால் 2-வது குழந்தையும் பெண்ணாக பிறந்தது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. மனவேதனை அடைந்தேன்.
இந்தநிலையில் சம்பவத்தன்று குழந்தை அழுது கொண்டே இருந்தது. எனவே கோபத்தில் குழந்தையை வாய், மூக்கை பொத்தி மூச்சுத்திணறடித்தேன். மேலும் குழந்தையை தரையில் தூக்கி வீசினேன். இதில் குழந்தை பலியானது.
இந்தநிலையில் கணவரை ஏமாற்ற குழந்தை தூங்குவது போல படுக்க வைத்தேன். ஆஸ்பத்திரியில் அழுது நடித்தால் தப்பித்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையால் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணிகளில் இருந்து இலங்கை விமானப்படையினர் வெளியேற வேண்டும் என கோரி 13 நாளாக இன்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தீர்வின்றி தொடரும் போராட்டத்தின் காரணமாக அங்கே சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாங்கள் இவ்விடத்தை விட்டு போனால் அது எங்கள் பூர்விக நிலங்களுக்குத்தான் என்றும் வேறு இடங்களுக்கு செல்ல முடியும். எமது நிலம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் திடமாக அறிவித்துள்ளனர்.
வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் டெங்கு நுளம்பை ஒழிக்க விசேட நடவடிக்கை நேற்று (11.02.2017) மேற்கொள்ளப்பட்டுள்ளளது.
நெளுக்களம் பொலிஸாரும், வவுனியா பொது சுகாதார பணிமனையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் பட்டாணிச்சூர் கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டு இதனை அழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீடு வீடாகச் சென்று மக்களுக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் அமைந்திருந்த பாடசாலை, பள்ளிவாசல், வாகனங்கள் திருத்தும் இடங்கள், பொதுமக்களின் வீடுகள் என்பவற்றில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நுளம்பு பெரும் இடங்களும் அழிக்கப்பட்டன.
மேலும், டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்வில் வைத்தியர் லவன், பொது சுகாதார பரிசோதகர் வாகீசன், நெளுக்குளம் பொலிஸ் உத்தியோகஸ்தர், கிராம சேவையாளர் தவராசா, சமுதாய பாதுகாப்பு குழு தலைவர் நாகூர்கனி ஸாபி, அதன் பொருளாளர் ஜெமீல் மற்றும் எமது பகுதி சமுதாய பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சண்முகபுரம் பகுதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று(11.02) வழங்கிவைக்கப்பட்டது.
சண்முகபுரம் அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர் திருமதி.ஞ.சிவானி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட சிறிலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ம.ஆனந்தராஜ், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பூசகர் மு. கணேசன், அறநெறிப்பாடசாலையின் உதவி ஆசிரியர் திருமதி.தே.தட்சாயினி, சனாதன சன்மார்க்க பீடாதி சிவதர்சன் குருக்கள், கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் இ.ராகவன், சிறுவர் பாதுகாப்புத் தலைவி திருமதி கமலகுமாரி, மாதர் சங்கத் தலைவி துஷ்யந்தினி மற்றும் அப்பகுதி மக்கள், என பலரும் கலந்து கொண்டதுடன்,
அறநெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் வசதியற்ற 32 மாணவர்களுக்கு வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தனது சொந்த நிதியிலிருந்து கற்றல் உபகரணங்களும், விளையாட்டு கழகத்திற்கு உபகரணங்கள், அறநெறி பாடசாலை ஆரம்ப கட்டட நிதிக்கு ஒரு தொகை காசோலை என்பன வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.