சனசமூக நிலைய 26ம் ஆண்டு விழாவும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்தமாக வவுனியா கற்பகபுரத்தில் சனசமூக நிலைய மைதானம் நேற்றுமுன்தினம் (10.02.2017) மதியம் 2.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் கௌரவ விருந்தினர்களாக சுகந்தினி கிசோர் ( செயலாளர்- வவுனியா தெற்கு பிரதேச சபை) , வாஜ்பா யுனைட்ராஜா (சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்) , செ.வேதநாதன் (கற்பகபுரம் பாடசாலை அதிபர்) , பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா கற்பகபுரம் முதலாம் ஒழுங்கையை வசிப்பிடமாக கொண்ட கருப்பையா ரங்கநாதன் (வயது75) காணாமல் போயுள்ளார்.
கடந்த வருடம் பத்தாம் மாதம் கொழும்பில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற இவர் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளதுடன் அவரது குடும்பத்தினரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
390170190V என்ற அடையாள அட்டையை கொண்ட இவர் இறுதியாக வெள்ளை வேட்டி சட்டையுடன் சால்வை அணிந்திருந்தார்.
இவர் தொடர்பான விபரங்கள் அறிந்தவர்கள் 0770699949 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.
இன்சோம்னியா என்ற தூக்கமின்மையால் அவதியுறுவோருக்காக விசேட ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிலக்கடலையின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவின் பெயர் சோம்நொக்ஸ். மென்மையான, அதேநேரம் உறுதியான வடிவம் கொண்ட இந்த ரோபோ தலையணையைக் கட்டியணைத்தபடி படுத்துக்கொண்டால் விரைவிலேயே தூக்கத்தைத் தழுவிவிடலாம் என்கிறார்கள் இதைத் தயாரித்தவர்கள்.
இத்தலையணையில் பொருத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ‘சென்ஸர்’கள் (உணரிகள்) நீங்கள் தூங்குவதற்கு எது தடையாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிடுகின்றன. பின்னர், அதற்கான மாற்று ஏற்பாடுகளை தானே ‘யோசித்து’ உங்களுக்கு வழங்கத் தொடங்குகின்றன. இதன்மூலம் உடனடியாக நீங்கள் நித்திரைக்குச் செல்ல முடியும்.
உங்களது சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் சோம்நொக்ஸும் செயற்கையாகச் சுவாசிக்கிறது. மேலும், உங்களுக்கு உறக்கம் வருவதற்குப் போதுமான வெளிச்சத்தில் ஒரு மெல்லிய விளக்கையும் எரிய வைக்கிறது.
ஒருவேளை உறக்கத்தின்போது நீங்கள் கனவுகண்டு உங்கள் தூக்கம் கலையவிருக்கும் சந்தர்ப்பங்களில், தாலாட்டுப் பாடி(!) தூங்கவைக்கிறது.
தற்போது பரிசோதனைக் கட்டத்தில் இருக்கும் இந்த தலையணை ரோபோ, வெகு விரைவில் உங்கள் கட்டில்களில் தவழும் என்கிறார்கள் இதைத் தயாரித்திருக்கும் ஆய்வாளர்கள்.
வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று (11.02.2017) மதியம் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜெ.மனோகௌரி தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சிறப்பு விருந்தினராக இ.சண்முகலிங்கம் ( உதவிக்கல்விப் பணிப்பாளர் -அழகியல்) , கி.மங்களகுமார் ( உதவிக்கல்விப் பணிப்பாளர் – உடற்கல்வி) , கௌரவ விருந்தினராக ச.சுபாஸ்கரன் (புதுக்குளம் ம.வி அதிபர்) , விஜயரட்ன ( உதவி பொலிஸ் அதிகாரி ஈச்சங்குளம்) , து.ரவிச்சந்திரன் ( ஆசிரிய ஆலோசகர்- உடற்கல்வி) , பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இன் நிகழ்வில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதுடன் பிரதம விருந்தினர் ப.சத்தியலிங்கம் வைபவ ரீதியாக போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
அணிவகுப்பு, உடற்பயிற்சி ,வினோதஉடை , பெற்றோர் நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி , உத்தியோகத்தர் நிகழ்ச்சி என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
உடல்நல குறைவால் மயங்கி விழுந்த தாயை 8 வயது சிறுவன் காப்பாற்றியுள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டின் Grimsby நகரை சேர்ந்தவர் Jenny Taylor. இவர் தனது மகன் Callum (8) உடன் வசித்து வந்தார்.
Jennyக்கு வைட்டமின் சத்து குறைப்பாடு காரணமாக அடிக்கடி மயக்கம் வரும் பிரச்சனை இருந்துள்ளது. நேற்று Jennyம் அவர் மகன் Callumம் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
Callum வீட்டின் மாடியிலும், அவர் தாய் Jenny கீழ் தளத்திலும் இருக்கும் போது சிறுவன் Callumக்கு ஏதோ கீழே விழுவது போன்ற சத்தம் கீழ்தளத்திலிருந்து கேட்டுள்ளது.
உடனே கீழே போய் அவன் பார்த்த போது, தாய் Jenny தரையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே புத்திசாலிதனமாக செயல்ப்பட்ட Callum தாமதிக்காமல் 999 என்னும் ஆம்புலன்ஸ் நம்பருக்கு போன் செய்தான்.
அதே நேரத்தில் Jenny மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார். பின்னர் நிலைமை சீராக, என் மகனின் செயல் எனக்கு பெருமையாக உள்ளது என Jenny கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண். விவசாயியான இவருக்கு அகிலேஷ் (13) என்னும் மகன் உள்ளார்.
அகிலேஷ்க்கு பத்து வயதிலிருந்து விசித்திர நோய் இருந்து வருகிறது. அதாவது அவன் கண், காது, வாய், கால், தலைமுடி போன்ற இடங்களிலிருந்து இரத்தம் தினம் 1லிருந்து பத்து முறை வடிகிறது.
Haemolacria என்னும் உடலிலிருந்து நீர் வரும் நோய்க்கு சம்மந்தமான நோயாக இது கருதப்படுகிறது. இது குறித்து அகிலேஷ் கூறுகையில், இப்படி தினமும் ஒன்றிலிருந்து பத்து முறை என் உடலில் நடக்கிறது. இது நடக்கும் சமயத்தில் என் உடல் சோர்வடைந்து தலைவலி ஏற்படும் என அவர் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் தந்தை அருண் கூறுகையில், என் மகனை இந்தியாவில் உள்ள பல முக்கிய மருத்துவர்களிடம் காட்டி விட்டோம்.
ஆனால் யாராலயும் இது என்ன நோய் என கண்டுப்பிடிக்கவில்லை. சில நாட்களாக அவன் சிறுநீரிலும் இரத்தம் வருகிறது. என் மகனை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
மேலும், மருத்துவ கழகம் மூலம் உலக நாடுகளில் உள்ள மருத்துவர்கள் தான் தன் மகனுக்கு வந்துள்ள நோய்க்கு தீர்வு காண வேண்டும் என அருண் கோரிக்கை வைத்துள்ளார்.
கைதிகளை அடைப்பதற்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிகமாக இருந்தும், கைதிகள் இல்லாததால் குறித்த கட்டிடங்கள் மறுவாழ்வு இல்லமாகவும், அகதிகளின் இல்லமாகவும் மாற்றப்பட்டு வரும் சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை. ஏனெனில் அங்கு குற்றங்கள் நடைபெறாததால் கைதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் கடந்த 20 வருடங்களாகவே அந்நாட்டில் 75 சதவீதமான சிறைகள், கைதிகள் இல்லாததால் பயனற்ற முறையில் இருந்துள்ளது. அதனால் குறித்த சிறைகள் முன்னாள் கைதிகளின் மறுவாழ்வு நிலையமாகவும், அகதிகள் இல்லமாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில் பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளிலுள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம், அதிகமாக இருப்பதனால் கைதிகள் இல்லாமல் இருக்கும் நெதர்லாந்து சிறைகளை, வாடகைக்கு எடுத்து அங்கு தமது கைதிகளை சிறை வைத்து வருகின்றனர்.
அத்தோடு நார்ஜெர் ஹவன் சிறையை, நோர்வே 3 வருடங்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. அதற்காக வருடமொன்றிக்கு சுமார் 400 கோடி வாடகை வழங்குவதற்கு, ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் குறித்த சிறையில் அந்நாட்டின் 750 இற்கும் மேற்பட்ட கைதிகளை தங்கவைத்துள்ளது.
நெதர்லாந்து ஹர்லெம் சிறை, அகதிகளின் கால்பந்தாட்ட மைதானமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலைமைகள் தொடரும் பட்சத்தில், இன்னும் 4 வருடங்களில் அந்நாட்டின் 2600 சிறை காவலர்கள், வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெல்ஜியம், இங்கிலாந்து, ஹெய்ட்டிஇ இத்தாலி, அமெரிக்கா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறைகளில், கைதிகள் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
In this Wednesday, April 20, 2016 photo, refugees and migrants line up to receive their lunch at the former prison of De Koepel in Haarlem, Netherlands. With crime declining in the Netherlands, the country is looking at new ways to fill its prisons. The government has let Belgium and Norway put prisoners in its empty cells and now, amid the huge flow of migrants into Europe, several Dutch prisons have been temporarily pressed into service as asylum seeker centers. (AP Photo/Muhammed Muheisen)
In this Tuesday, May 10, 2016 photo, refugees and migrants play football at the former prison of De Koepel in Haarlem, Netherlands. With crime declining in the Netherlands, the country is looking at new ways to fill its prisons. (AP Photo/Muhammed Muheisen)
மலேசியாவில் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள Jalan Sidam Kiri என்ற தோட்டத்தில் இலங்கையை சேர்ந்த நபரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 வயதுடைய இலங்கையர் மற்றும் 30 வயதுடைய இந்தியர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த இருவரும் தங்களின் 49 வயதுடைய இலங்கை நண்பரை கல்லினால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சடலம் மீட்கப்பட்டதற்கு முதல் நாள் கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் நண்பர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் நம்புவதாக Kuala Muda தலைமை பொலிஸ் அதிகாரி Zukir Md Isa தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் அதாவது கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் உயிரிழந்த நபர் அவரது மனைவிக்கு காணொளி அழைப்பொன்று மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு நண்பர்களும் ஒரு கான்கிரீட் கல்லை பயன்படுத்தி குறித்த நபரின் பின் தலையில் அடித்துள்ளனர். அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலைமை பொலிஸ் அதிகாரி Zukir Md Isa சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிரழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக Alor Setar பகுதியில் உள்ள Sultanah Bahiyah வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இன்று(11.02.2017) பிற்பகல் 3 மணியளவில் A9 தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து அதே வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பேரூந்தின் பின்பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது.
பேருந்தில் பயணம் செய்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நடேசபிள்ளை கமலாகரன் (வயது 36) மற்றும் டிப்பர் சாரதியான றோபேட் சந்திரகுமார் (வயது 38) வவுனியா ஆகிய இருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினியின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகி நெஞ்சை உருக செய்துள்ளது.
சென்னை போரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமல் போன 7 வயது சிறுமி ஹாசினி, நான்கு நாட்கள் கழித்து எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 22 வயதான குற்றவாளி ஜஸ்வந்த்தை பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஜஸ்வந்த்தை கைது செய்த போது பொதுமக்கள் அவனை சரமாரியாக தாக்கினர்.
மேலும், ஜஸ்வந்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர், பலர் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமி ஹாசினியின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், மகளின் முகத்தை காண முடியாமல் தந்தை கதறும் காட்சி அனைவரது நெஞ்சத்தையும் உருக வைத்துள்ளது.
நாட்டில் இனியும் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
விபத்தொன்றில் தனது மூன்று வயதுத் தங்கையை துணிச்சலுடன் மீட்ட 11 வயதுச் சிறுமி லொறியொன்றில் நசுங்கிப் பலியான சம்பவம் இங்கிலாந்தின் ரொச்டேல் பகுதியில் இடம்பெற்றது.
இமான் ஜாவேத்(11) என்ற இந்தச் சிறுமி, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பிரதான வீதியொன்றில் காரில் சென்றுகொண்டிருந்தார். பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அவர்களது காருக்குப் பின்னால் வந்த மற்றொரு கார் இவர்களது கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் வீசுப்பட்ட இமானின் கார் கடுமையாகச் சிதைந்தது.
அதிலிருந்து அவரது தாயும், மூத்த சகோதரியும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெளியேறினார்கள். காருக்குள் இருந்த இமான், தனது மூன்று வயதுத் தங்கை வெளியேற முடியாமல் தவிப்பதைக் கண்டு, அவளை பத்திரமாக வெளியேற்றினாள்.
பின்னர், காரிலிருந்து இமான் வெளியேற முயற்சித்தபோது, பின்னால் வந்த லொறியொன்று மீண்டும் இமானின் காரில் மோதியது. இதில், இமான் உயிரிழந்தாள். இமானின் தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தன் தங்கை மீது இமான் உயிரையே வைத்திருந்தாள் என்று கூறும் இமானின் தாய், இமானின் கடைசிச் செயல் தன் தங்கை உயிரைக் காப்பாற்றியதே என்று கூறிக் கலங்குகிறார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தென் சீன கடற்பரப்பிற்கு மேலே தன்னுடைய ராணுவ விமானம் பறந்தபோது, சீன கண்காணிப்பு விமானம் 300 மீட்டர் தூரம் பின்தொடர்ந்து வந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்கார்போரஃப் ஷோல் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பவளப்பாறை தீவு அருகில் நிகழ்ந்த இந்த சம்பவம் பாதுகாப்பற்ற ஒன்றாக இருந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
தங்களுடைய விமானி பொறுப்புணர்வுடன், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டிருப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே, தென்சீனக் கடற்பரப்பில் சீனா செயற்கைத் தீவுகளை அமைத்து ராணுவ கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.
தற்போது, அமெரிக்க ராணுவ விமானத்தை, சீன விமானம் பின் தொடர்ந்துள்ள சம்பவம் தென்சீனக் கடற்பரப்பில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி, தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய மகள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று காலை பிலிமத்தலாவ புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
48 வயதுடைய தாய் இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் 12 வயதுடைய மகள், கடுகண்ணாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதெனிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நடிகை ரோஜா விஜயவாடா விமான நிலையத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரோஜாவை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் சார்பில் ஐதராபாத்தில் 3 நாள் தேசிய மகளிர் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா விமானம் மூலம் விஜயவாடாவுக்கு வந்தார்.
அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய ஆந்திர பொலிசார் தேசிய மகளிர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனக் கூறி அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரோஜாவை கைது செய்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று விஜயவாடா பொலிஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
இன்று(11.02.2017) பிற்பகல் 3 மணியளவில் A9 தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து அதே வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பேரூந்தின் பின்பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது.
பேருந்தில் பயணம் செய்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நடேசபிள்ளை கமலாகரன் (வயது 36) மற்றும் டிப்பர் சாரதியான றோபேட் சந்திரகுமார் (வயது 38) வவுனியா ஆகிய இருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.