கண், காது, வாயிலிருந்து சிறுவனுக்கு இரத்தம் கொட்டும் அதிசயம் : காரணம் என்ன?

இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண். விவசாயியான இவருக்கு அகிலேஷ் (13) என்னும் மகன் உள்ளார்.

அகிலேஷ்க்கு பத்து வயதிலிருந்து விசித்திர நோய் இருந்து வருகிறது. அதாவது அவன் கண், காது, வாய், கால், தலைமுடி போன்ற இடங்களிலிருந்து இரத்தம் தினம் 1லிருந்து பத்து முறை வடிகிறது.

Haemolacria என்னும் உடலிலிருந்து நீர் வரும் நோய்க்கு சம்மந்தமான நோயாக இது கருதப்படுகிறது. இது குறித்து அகிலேஷ் கூறுகையில், இப்படி தினமும் ஒன்றிலிருந்து பத்து முறை என் உடலில் நடக்கிறது. இது நடக்கும் சமயத்தில் என் உடல் சோர்வடைந்து தலைவலி ஏற்படும் என அவர் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் தந்தை அருண் கூறுகையில், என் மகனை இந்தியாவில் உள்ள பல முக்கிய மருத்துவர்களிடம் காட்டி விட்டோம்.

ஆனால் யாராலயும் இது என்ன நோய் என கண்டுப்பிடிக்கவில்லை. சில நாட்களாக அவன் சிறுநீரிலும் இரத்தம் வருகிறது. என் மகனை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும், மருத்துவ கழகம் மூலம் உலக நாடுகளில் உள்ள மருத்துவர்கள் தான் தன் மகனுக்கு வந்துள்ள நோய்க்கு தீர்வு காண வேண்டும் என அருண் கோரிக்கை வைத்துள்ளார்.

கைதிகள் இல்லாததால் அகதிகள் இல்லமாக மாறிய சிறைச்சாலை!!

 
கைதிகளை அடைப்பதற்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிகமாக இருந்தும், கைதிகள் இல்லாததால் குறித்த கட்டிடங்கள் மறுவாழ்வு இல்லமாகவும், அகதிகளின் இல்லமாகவும் மாற்றப்பட்டு வரும் சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை. ஏனெனில் அங்கு குற்றங்கள் நடைபெறாததால் கைதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் கடந்த 20 வருடங்களாகவே அந்நாட்டில் 75 சதவீதமான சிறைகள், கைதிகள் இல்லாததால் பயனற்ற முறையில் இருந்துள்ளது. அதனால் குறித்த சிறைகள் முன்னாள் கைதிகளின் மறுவாழ்வு நிலையமாகவும், அகதிகள் இல்லமாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளிலுள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம், அதிகமாக இருப்பதனால் கைதிகள் இல்லாமல் இருக்கும் நெதர்லாந்து சிறைகளை, வாடகைக்கு எடுத்து அங்கு தமது கைதிகளை சிறை வைத்து வருகின்றனர்.

அத்தோடு நார்ஜெர் ஹவன் சிறையை, நோர்வே 3 வருடங்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. அதற்காக வருடமொன்றிக்கு சுமார் 400 கோடி வாடகை வழங்குவதற்கு, ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் குறித்த சிறையில் அந்நாட்டின் 750 இற்கும் மேற்பட்ட கைதிகளை தங்கவைத்துள்ளது.

நெதர்லாந்து ஹர்லெம் சிறை, அகதிகளின் கால்பந்தாட்ட மைதானமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலைமைகள் தொடரும் பட்சத்தில், இன்னும் 4 வருடங்களில் அந்நாட்டின் 2600 சிறை காவலர்கள், வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெல்ஜியம், இங்கிலாந்து, ஹெய்ட்டிஇ இத்தாலி, அமெரிக்கா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறைகளில், கைதிகள் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

In this Wednesday, April 20, 2016 photo, refugees and migrants line up to receive their lunch at the former prison of De Koepel in Haarlem, Netherlands. With crime declining in the Netherlands, the country is looking at new ways to fill its prisons. The government has let Belgium and Norway put prisoners in its empty cells and now, amid the huge flow of migrants into Europe, several Dutch prisons have been temporarily pressed into service as asylum seeker centers. (AP Photo/Muhammed Muheisen)

In this Tuesday, May 10, 2016 photo, refugees and migrants play football at the former prison of De Koepel in Haarlem, Netherlands. With crime declining in the Netherlands, the country is looking at new ways to fill its prisons. (AP Photo/Muhammed Muheisen)

மலேசியாவில் நண்பனை அடித்துக் கொலை செய்த இலங்கையர் கைது!!

மலேசியாவில் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் உள்ள Jalan Sidam Kiri என்ற தோட்டத்தில் இலங்கையை சேர்ந்த நபரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 வயதுடைய இலங்கையர் மற்றும் 30 வயதுடைய இந்தியர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இருவரும் தங்களின் 49 வயதுடைய இலங்கை நண்பரை கல்லினால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சடலம் மீட்கப்பட்டதற்கு முதல் நாள் கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் நண்பர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் நம்புவதாக Kuala Muda தலைமை பொலிஸ் அதிகாரி Zukir Md Isa தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் அதாவது கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் உயிரிழந்த நபர் அவரது மனைவிக்கு காணொளி அழைப்பொன்று மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு நண்பர்களும் ஒரு கான்கிரீட் கல்லை பயன்படுத்தி குறித்த நபரின் பின் தலையில் அடித்துள்ளனர். அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலைமை பொலிஸ் அதிகாரி Zukir Md Isa சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக Alor Setar பகுதியில் உள்ள Sultanah Bahiyah வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மனிதர்களிடம் உயிர் பிச்சையெடுத்த குட்டி சிம்பன்சி : நெகிழ வைக்கும் காட்சி!!

ஆபிரிக்க வீதியில் குட்டி சிம்பன்சி குரங்கு ஒன்று மனிதர்களிடம் உயிரை காப்பாற்ற கையேந்தி பிச்சையெடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

காங்கோ பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குட்டி சிம்பன்சியின் தாயை கடத்தல்காரர்கள் கொன்றதாக கூறப்படுகிறது.

தாயை இழந்த குட்டி சிம்பன்சி, கழுத்தில் சங்கிலியுடன் பட்டினியால் வாடி உயிருக்கு போராடிய நிலையில் மக்களிடம் கையேந்தி பிச்சையெடுத்துள்ளது.

இதனை பார்த்த நபர் ஒருவர் அருகிலுள்ள விலங்குகள் மையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்பு மையத்தினர் சிம்பன்சியை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

தற்போது Mado என பெயர் வைக்கப்பட்டுள்ள குட்டி சிம்பன்சி சிகிச்சை மூலம் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிறது.

குறித்த சிம்பன்சி தெருவில் உயிருக்காக மனிதர்களிடம் பிச்சையெடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

வவுனியா தாண்டிக்குளத்தில் நடந்த கோர விபத்தின் CCTV காணொளி வெளியானது!!

 
இன்று(11.02.2017) பிற்பகல் 3 மணியளவில் A9 தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து அதே வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பேரூந்தின் பின்பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நடேசபிள்ளை கமலாகரன் (வயது 36) மற்றும் டிப்பர் சாரதியான றோபேட் சந்திரகுமார் (வயது 38) வவுனியா ஆகிய இருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம், கதறும் தந்தை : நெஞ்சை உருக்கும் ஹாசினியின் இறுதிச்சடங்கு!!

சென்னையில் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினியின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகி நெஞ்சை உருக செய்துள்ளது.

சென்னை போரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமல் போன 7 வயது சிறுமி ஹாசினி, நான்கு நாட்கள் கழித்து எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 22 வயதான குற்றவாளி ஜஸ்வந்த்தை பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஜஸ்வந்த்தை கைது செய்த போது பொதுமக்கள் அவனை சரமாரியாக தாக்கினர்.

மேலும், ஜஸ்வந்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர், பலர் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமி ஹாசினியின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், மகளின் முகத்தை காண முடியாமல் தந்தை கதறும் காட்சி அனைவரது நெஞ்சத்தையும் உருக வைத்துள்ளது.

நாட்டில் இனியும் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மூன்று வயதுத் தங்கையைக் காப்பாற்றிய 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கதி!!

விபத்தொன்றில் தனது மூன்று வயதுத் தங்கையை துணிச்சலுடன் மீட்ட 11 வயதுச் சிறுமி லொறியொன்றில் நசுங்கிப் பலியான சம்பவம் இங்கிலாந்தின் ரொச்டேல் பகுதியில் இடம்பெற்றது.

இமான் ஜாவேத்(11) என்ற இந்தச் சிறுமி, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பிரதான வீதியொன்றில் காரில் சென்றுகொண்டிருந்தார். பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அவர்களது காருக்குப் பின்னால் வந்த மற்றொரு கார் இவர்களது கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் வீசுப்பட்ட இமானின் கார் கடுமையாகச் சிதைந்தது.

அதிலிருந்து அவரது தாயும், மூத்த சகோதரியும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெளியேறினார்கள். காருக்குள் இருந்த இமான், தனது மூன்று வயதுத் தங்கை வெளியேற முடியாமல் தவிப்பதைக் கண்டு, அவளை பத்திரமாக வெளியேற்றினாள்.

பின்னர், காரிலிருந்து இமான் வெளியேற முயற்சித்தபோது, பின்னால் வந்த லொறியொன்று மீண்டும் இமானின் காரில் மோதியது. இதில், இமான் உயிரிழந்தாள். இமானின் தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தன் தங்கை மீது இமான் உயிரையே வைத்திருந்தாள் என்று கூறும் இமானின் தாய், இமானின் கடைசிச் செயல் தன் தங்கை உயிரைக் காப்பாற்றியதே என்று கூறிக் கலங்குகிறார்.

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் முறுகல்!!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தென் சீன கடற்பரப்பிற்கு மேலே தன்னுடைய ராணுவ விமானம் பறந்தபோது, சீன கண்காணிப்பு விமானம் 300 மீட்டர் தூரம் பின்தொடர்ந்து வந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஸ்கார்போரஃப் ஷோல் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பவளப்பாறை தீவு அருகில் நிகழ்ந்த இந்த சம்பவம் பாதுகாப்பற்ற ஒன்றாக இருந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய விமானி பொறுப்புணர்வுடன், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டிருப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ஏற்கனவே, தென்சீனக் கடற்பரப்பில் சீனா செயற்கைத் தீவுகளை அமைத்து ராணுவ கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.

தற்போது, அமெரிக்க ராணுவ விமானத்தை, சீன விமானம் பின் தொடர்ந்துள்ள சம்பவம் தென்சீனக் கடற்பரப்பில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் மோதி தாய் பலி : 12 வயது மகள் படுகாயம்!!

கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி, தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய மகள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று காலை பிலிமத்தலாவ புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய தாய் இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் 12 வயதுடைய மகள், கடுகண்ணாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதெனிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நடிகை ரோஜா அதிரடியாக கைது!!

நடிகை ரோஜா விஜயவாடா விமான நிலையத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரோஜாவை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் சார்பில் ஐதராபாத்தில் 3 நாள் தேசிய மகளிர் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா விமானம் மூலம் விஜயவாடாவுக்கு வந்தார்.

அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய ஆந்திர பொலிசார் தேசிய மகளிர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனக் கூறி அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரோஜாவை கைது செய்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று விஜயவாடா பொலிஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

 
இன்று(11.02.2017) பிற்பகல் 3 மணியளவில் A9 தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து அதே வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பேரூந்தின் பின்பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நடேசபிள்ளை கமலாகரன் (வயது 36) மற்றும் டிப்பர் சாரதியான றோபேட் சந்திரகுமார் (வயது 38) வவுனியா ஆகிய இருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10.02.2017) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இரானுவ வீரர் வைத்தியசாலை அவரச கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கடந்த 05.02.2017 அன்று இராணுவ வீரர் நுவான் கேஜி (வயது 27) கிருமிநாசினி அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

அதன் பின்னர் 14ம் வாட்டிக்கு மாற்றப்பட்ட குறித்த இரானுவ வீரர் நேற்று (10.02.2017) இரவு 11.45 மணியளவில் வைத்தியசாலை மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் கால் இரண்டும் உடைந்த நிலையில் உயிர்பிழைத்த இராணுவ வீரர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்ட போது, தற்போது குறித்த இராணுவவீரரின் கால்கள் இரண்டினையும் பொருத்துவதற்கான சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

3A சித்திகளை பெற்றும் பல்கலைகழகம் செல்ல முடியாத நிலையில் மாணவி!!

2015ம் ஆண்டு உயர்தரத்தின் கலை பிரிவில் கல்வி கற்று 3ஏ சித்திகளை பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக விண்ணப்பப்படிவம் கிடைக்காத மாணவி ஒருவர் தொடர்பில் மொனராகலை பிரதேசத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

புத்தல கல்வி வலையமைப்பிற்கு உட்பட கொட்டமுதுன மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர பரீட்சை எழுதிய ஆர்.எம்.சவும்யா உதேஷிகா என்ற மாணவியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக தனக்கு கடிதம் ஒன்று கிடைத்ததாகவும், 2015 – 2016 கல்வி பட்டப்படிப்பிற்காக அழகியல் பிரிவிற்கு ஆணைக்குழுவினால் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ugc.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அந்த பட்டப்படிப்பிற்காக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்த மாணவி கூறியுள்ளார்.

இணையத்தள வசதி இல்லாமையினால் பஸ்ஸர நகரத்தின் தனிப்பட்ட நிறுவனத்தின் அந்த இணையத்தளம் ஊடாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் தனக்கு பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை என அந்த மாணவி கூறியுள்ளார்.

பின்னர் ஆராய்ந்து பார்த்த போது மாணவி இணைய சேவை பெற்றுக் கொண்ட இடத்தில் உரிய முறையில் பதிவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை தொடர்பில் மாணவி கவலை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் கிணற்றில் வீழ்ந்து குடும்ப பெண் பலி!!

கிளிநொச்சி பரந்தன் கோரக்கன்கட்டுப் பகுதியில் 4 பிள்ளைகளின் தாயாரான குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

54 வயதான பாலகிருஸ்ணன் கமலாதேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று இரவு 12.00 மணியளவில் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று இன்று மதியம் வீடு திரும்பியுள்ளார். எனினும், இன்று இரவு குறித்த பெண் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த பெண், உயிரிழந்த நிலையில், கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இந்நிலையில், நீர் எடுக்கும் வாளியும் கிணற்றில் வீழ்ந்து காணப்படுகின்றமையினால், இரவு நீர் எடுக்கச் சென்ற நிலையில் குறித்த பெண் தவறி வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதிய மைல் கல்லை எட்டியது பேஸ்புக் லைட் அப்பிளிக்கேஷன்!!

பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் வலைத்தளமானது விரைவில் 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது.

இவ் வலைத்தளத்தினை அதிகளவானவர்கள் தமது மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக விசேட அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எனினும் குறைந்தளவு டேட்டா பாவனை மற்றும் விரைவாக செயற்படக்கூடியது என்பவற்றின் அடிப்படையில் பேஸ்புக் லைட் (Facebook Lite) அப்பிளிக்கேஷனே அதிக பயன்பாட்டில் காணப்படுகின்றது.

தற்போது இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனை எட்டியுள்ளதாக பேஸ்புக்கின் தலைமை இயக்குனரான Sheryl Sandberg தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாத அறிக்கைகளின்படி இந்த எண்ணிக்கை 100 மில்லியனாக காணப்பட்டதாகவும், அதன் பின்னரான இந்த ஒரு வருட காலத்தில் மேலும் 100 மில்லியனால் அதிகரித்து 200 மில்லியனை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இளம்பெண்ணுக்கு பிறந்த ஆட்டுக்குட்டி : அதிர்ச்சி உண்மை!!

நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் அபியா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாகவே கர்ப்பமாக இருந்துள்ளார்.

10 மாதத்தில் ஆகும் பிரசவம் இவருக்கு மட்டும் ஆகாமல் 3 ஆண்டுகள் வரை நீடித்துள்ளது. பின்னர் ஒரு வழியாக அவருக்கு பிரசவம் ஆக, அது அதிர்ச்சியில் போய் முடிந்தது.

காரணம், அந்த பெண்ணுக்கு பிரசவத்தில் குழந்தைக்கு பதில் ஆட்டுகுட்டி பிறந்துள்ளது.

இதையறிந்த அந்த பெண்ணின் ஊர்மக்களும், அக்கம்பக்கத்தினரும் அந்த பெண்ணையும், ஆட்டுகுட்டியையும் வந்து அதிசயமாக பார்த்து சென்றனர்.

மருத்துவர்கள் இதற்கான காரணத்தை இன்னும் கூறவில்லை. இதனிடையில், அந்த பெண் வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், அந்த பெண்ணின் விரோதிகள் யாரோ சூனியம் வைத்து அவர் கருவில் ஆட்டு குட்டியை உருவாக்கியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.