பிரித்தானியா வரை பிரபலமடைந்த இலங்கையின் கருங்கல் ரொட்டி!!

 
இலங்கையில் தயாரிக்கப்படும் ரொட்டி பிரித்தானியா வரை பிரபலமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரனை, இரத்தினபுரி வீதியில், கிரிஎல்ல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் தயாரிக்கப்படும் ரொட்டியே இவ்வாறு பிரபல்யம் அடைந்துள்ளது.

கருங்கல்லில் ரொட்டி சுடுவதே இந்த கடையில் உள்ள சிறப்பம்சமாகும். ரொட்டி கடையை நடத்தி செல்வோர், ரொட்டி சுடும் கல் ஒன்றை கொள்வனவு செய்யக் கூடிய வசதி இருக்கவில்லை. இதன் காரணமாக அருகிலுள்ள காட்டிலுள்ள அளவிலான கருங்கல் ஒன்றை கொண்டு வந்து ரொட்டி சுடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வித்தியாசமாக சுடப்படும் இந்த ரொட்டியை சுவைத்தவர்கள் தொடர்ந்து அந்த கடையை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு கல்லில் சுட்டு விற்பனை செய்த இந்த ரொட்டி பிரித்தானியா வரை பிரபலமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபலமடைந்த ரொட்டிக் கடையின் வருமானம் அதிகரித்த போதும், கல்லில் ரொட்டி சுடும் நடவடிக்கையினை அவர்கள் நிறுத்தவில்லை. அந்த கல் மிகவும் அதிர்ஷ்டமானதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து பிரித்தானியா சென்று வசிப்பவர்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணம் வரும் அந்த கடைக்கு தவறாமல் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் கடும் குளிர்!!

யாழ்.குடாநாட்டில் கடந்த மூன்று தினங்களாகப் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாகக் கடும் குளிருடனான காலநிலை நிலவுகிறது.

கடும் குளிர் காரணமாகப் பொதுமக்கள் தங்களின் காலை நேரச் செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கடும் குளிர் காரணமாக நோயாளர்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பனியின் தாக்கம் மாலை 05.30 மணிக்கே ஆரம்பிப்பதுடன் காலை 09 மணி வரை நீடிக்கிறது.

எதிர்வரும் பங்குனி மாத இறுதி வரை பனியின் தாக்கம் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பத்தாவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்!!

கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை மீட்பதற்காக போராட்டங்களை 10வது நாளாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமது நியாயமான கோரிக்கையை ஜனதிபதியிடம் தெரிவிப்பதற்கு பல அரசியல் கட்சிகள் போட்டியாக செயற்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதுவரை சந்தித்த அரசியல் பிரமுகர்கள் தமது கோரிக்கைகளை நல்லாட்சி அரசிற்கு எடுத்துச் சொல்லுவதாக தெரிவித்து சென்ற நிலையில் அவர்கள் ஆக்கப்பூர்வமாக இதுவரை செயற்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆக்கபூர்வமாக செயற்பட்டிருந்தால் இப்பொழுது எமக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் அது கிடைக்காத காரணத்தினால் அவர்களின் செயற்பாட்டில் ஆக்கபூர்வம் இல்லை என்று நாங்கள் சொல்லுகின்றோம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், அரசியல் பிரமுகர்கள் பலர் தொலைபேசி ஊடாக அடிக்கடி தொடர்பை ஏற்படுத்தி தாம் நிலம் மீட்கும் வேலைகளில் கூடுதலாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் அடிக்கடி பதிவுகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதற்கு உதவியாக காணிகள் தொடர்பான ஆவணங்களை வருபவரிடம் கொடுத்து விடும்படியும் தொலைநகலில் அனுப்பும்படி கேட்கின்றனர்.

நாங்களும் வழங்குகின்றோம் அனுப்புகின்றோம் ஆனால் இதுவரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டு மக்களிடம் அரசாங்கம் விடுக்கும் வேண்டுகோள்!!

இலங்கையிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் சார்ந்த நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம், கடும் வறட்சி காரணமாக வெகுவாக குறைந்துள்ளது. எனவே, மின்வலுவை சிக்கனமாக பாவிக்கமாறு பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மக்கள் நாளொன்றில் 2300 மெகாவொட் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் தொடர்ச்சியாக 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிப்பது கஷ்டமானது என அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சார நெருக்கடியை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக 60 மெகாவொட் மின்சலுவை கொள்வனவு செய்யவும், 20 மெகாவொட் மின்வலுவை தேசிய வலைப்பின்னலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

பாடசாலை மாணவன் துஷ்பிரயோகம் : உயர்தரப் பிரிவு மாணவர்கள் மூவர் நீக்கம்!!

கினி­கத்­தேனை பிர­தே­சத்தில் வகுப்­பறை ஒன்­றினுள் வைத்து மாணவர் ஒரு­வரை துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டில் அப்­பா­ட­சா­லையின் உயர்­தரப் பிரிவில் கல்வி பயின்று வந்த மாண­வர்கள் மூவர் பாட­சா­லை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­பா­ட­சா­லையின் 10 ஆம் தரத்தில் கல்வி கற்­று­வரும் மாணவர் படை­ய­ணியை சேர்ந்த மாணவர் ஒரு­வரை பாட­சா­லையில் உள்ள அறை ஒன்­றினுள் வைத்து பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோகம் செய்­தனர் என குறித்த மாணர்கள் மூவரும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளனர்.

இம்­மா­ண­வர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு தொடர்பில் பாட­சாலை ஒழுக்­காற்று குழு மட்­டத்தில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுள்­ளன.

அதன்­போது எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்­க­மைய மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக இவ்­வி­டயம் தொடர்பில் கினி­கத்­தேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­வித்­துள்­ள­தாக அப்­பா­ட­சா­லையின் அதிபர் தெரி­வித்­துள்ளார்.

இச்­சம்­ப­வத்­துடன் மேலும் மாண­வர்கள் எவ­ரா­வது தொடர்புப்பட்டுள்ளனரா என கண்டறியும் பொருட்டு பாடசாலை ஒழுக்காற்று குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் 13,000 பேர் தூக்கிலிடப்பட்டு கொலை?

சிரிய சிறைச்­சா­லையில் 13 000 பேர் தூக்­கி­லிட்டுக் கொலை செய்ய்­யப்­பட்­ட­தாக சர்­வ­தேச மன்­னிப்பு சபை­யின் குற்­றச்­சாட்டை சிரியா மறுத்­துள்­ளது.

சிரியா கடந்த 5 வரு­டங்­களில் சுமார் 13,000 சிறைக்­கை­தி­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ளது என்ற சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் அறிக்­கையை சிரிய அரசு முற்­றி­லு­மாக மறுத்­துள்­ளது.

மேலும் சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் அறிக்கை முற்­றி­லு­மான பொய் எனவும், இது போன்ற குற்­றச்­சாட்­டுகள் சர்­வ­தேச அரங்கில் சிரி­யா­வுக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது எனவும் சிரிய அரச தரப்பில் கூறப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் குறித்த அறிக்­கையில், சிரி­யாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த சிரிய ஜனா­தி­பதி பஷர் அல் அஷாத்­துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மி­டையே உள்­நாட்டுப் போர் நடை­பெற்று வரு­கி­றது.

சிரி­யாவில் கடந்த 5 வரு­டங்­க­ளாக நடந்த உள்­நாட்டுப் போரில் ஜனா­தி­பதி அசாத்­துக்கு எதி­ரா­ன­வர்கள் என 13,000 பேருக்கு இர­க­சி­ய­மாக மரண தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், 1000 க்கும் மேற்­பட்டோர் சித்தி­ர­வதை செய்­யப்­பட்டு, உணவு அளிக்­கப்­ப­டாமல் கொல்லப்பட்டுள்­ளனர். இன்­ற­ளவும் அங்கு வாரந்­தோறும் 50 பேருக்கு மரண தண்­டனை நிறைவேற்றப்­பட்டு வரு­கி­றது என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

சிரி­யாவைச் சேர்ந்த அரச படை வீரர்கள், நீதித்­துறை வட்­டா­ரங்­களில் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் சர்வதேச மன்னிப்பு சபை இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாக அதன் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

 
பெங்காலி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை Bitasta Salini. இவர் மொடலாகவும் இருந்து வருகிறார், கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசிக்காமல் தனியாக வாழ்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையே நேற்று Bitasta செல்போனுக்கு அவர் அம்மா பல முறை போன் செய்தும் அவர் அதை எடுக்கவில்லை. பின்னர் அவர் தன் மகள் வீட்டுக்கு வந்து கதவை வெகு நேரம் தட்டியுள்ளார்.
ஆனாலும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் கதவை உடைத்து வீட்டுக்குள் போன போது நடிகை Bitasta சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார்.

அவர் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. மேலும் அவர் கை மணிக்கட்டு மற்றும் உடலில் காயங்கள் இருந்துள்ளன.

அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய பொலிசார் பின்னர் கூறுகையில், சமூகவலைதளத்தில் அவர் பதிவின் மூலம் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துள்ளதாக கருதுகிறோம். இது குறித்து தீவிரமாக தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஒரே தடவையில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்த தாய்!!

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தாயொருவர் ஒரே சூழில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக டிக்கோயா வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஸ்கெலியா சாமிலை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய புஸ்பலதா என்ற தாயே இவ்வாறு மூன்று குழந்தைகளை பெற்றுள்ளார்.

பிரசவத்திற்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (08.02.2017) மாலை வைத்திய அதிகாரிகளினால் சீசேரியன் முறையில் ஒரே சூலில் இருந்த மூன்று ஆண் சிசுக்களையும் தாயின் வயிற்றிலிருந்து பாதுகாப்பாக பிரசவிக்க செய்துள்ளனர்.

தோட்ட தொழிலாளியின் மனைவியான குறித்த தாயிற்கு 11 வயதுடைய ஆண்குழந்தையும் 7 மற்றும் 5 வயதுடைய பெண் குழந்தையுமாக மூவர் உள்ளதாகவும் தற்போது மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ள நிலையில் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்திய அதிகரிகள் தெரிவித்தனர்.

யாழ். குளப்பிட்டி சந்தியில் கோர விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்ப்பிணிப் பெண்!!(படங்கள்)

 
யாழ். குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்து உள்ளது. குறித்த விபத்து இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழில் இருந்து காங்கேசன்துறை வீதிவழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று குளப்பிட்டி சந்தியால் ஆனைக்கோட்டை பக்கமாக திரும்பியுள்ளது. இதன் போது பின்னால் வந்த முச்சக்கர வண்டி வேன் திரும்பும் வரையில் வீதியில் தரிந்து நின்றுள்ளது. அதன் போது முச்சக்கர வண்டிக்கு பின்னால் மிக வேகமாக வந்த படிரக வாகனம் தரித்து நின்ற முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.

இந்நிலையில் படிரக வாகனம் மோதியதில் நிலைத்தடுமாறிய முச்சக்கர வண்டி முன்னால் இருந்த வேனுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியினுள் இருந்த கர்ப்பிணி பெண் உட்பட மூவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷடவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

4 வயதுச் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 20 வயதுப் பெண்!!

அமெரிக்காவில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளம் பெண்ணை அந்நாட்டு நீதிமன்றம் சிறையில் அடைக்கும்படி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரைஸ் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் கிர்க்சே(20). இவர் சின்சினாட்டி என்ற பகுதியில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு தொடந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை அவர் நேரடியாக சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பியுள்ளனர்.

இதில் அவர் சிறிய அளவில் உள்ள உடையை அணிந்து, தன்னுடைய படுக்கறையில் நான்கு வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் ஆடி பாடியுள்ளார். இதனால் அச்சிறுவன் தொடர்ந்து அழுதுள்ளான்.

இதை நேரலையில் கண்ட நபர் ஒருவர், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் குறித்த இளம் பெண்ணை கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரண மேற்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தவறு எனக் குறிப்பிட்டு அவரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

ராஜினாமா கடிதத்தில் தில்லுமுல்லு : வெளியானது புகைப்பட ஆதாரம்!!

முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கிய ராஜினாமா கடிதத்தில் இருப்பது அவருடைய கையெழுத்து இல்லை என புகைப்பட ஆதாரங்கள் தீயாய் பரவி வருகின்றன.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் தன்னை வற்புறுத்தி மிரட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக கூறினார்.

இந்நிலையில் இவர் அளித்த ராஜினாமா கடிதத்தின் புகைப்படம் வைரலாக பரவி உள்ளது. இதற்கு முன்பு பன்னீர்செல்வம் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ள கோப்புகளுடன் ஒப்பிடும்போது சற்று மாறுபட்டதாக உள்ளது.

எனவே பன்னீர்செல்வத்தை மிரட்டி பதவிக்காக சசிகலா தரப்பே ராஜினாமா கடிதத்தை தயார்செய்து ஆளுநருக்கு அனுப்பி இருக்கலாம் என பேசப்படுகிறது.

இப்படித்தான் தலையை வெட்ட வேண்டும் : இளம் சிறுமிகளுக்கு ஐ.எஸ் பயிற்சி!!

ஐ.எஸ் தீவிரவாதிகளில் ஆண்கள் எப்படியோ அதே போல தான் பெண்களும். ஐ.எஸ் விதிமுறைகளை மீறுபவர்கள் அவர்களால் தண்டிக்கப்படுவார்கள். ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் எப்போதும் அதிகமாகவே உள்ளது.

பெண் ஐ.எஸ் ஜிகாதிகள் கொடூரமான பல செயல்களில் ஈடுப்படுகின்றனர். தற்போது அதிக அப்படி சில சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஈராக் நாட்டில் Faten (10) என்னும் சிறுமி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தன் வீட்டு வாசலை சுத்தம் செய்ய அவர் தனியாக வந்துள்ளார். இதை பார்த்த பெண் ஜிகாதிகள் Faten ஐ நீ எப்படி தனியாக வீட்டுக்கு வெளியில் வரலாம் என கூறி மிரட்டியுள்ளனர். சத்தம் கேட்டு Fatenன் தாயும் அங்கு வந்துள்ளார்.

இருவரையும் கடத்தி சென்ற அவர்கள், இருவரில் ஒருவரை பற்களால் கடிப்போம். யாரை என நீங்களே முடிவு செய்யுங்கள் என கூற வெறும் பல் தானே எனFaten ஒத்து கொண்டுள்ளார். ஆனால் ஜிகாதிகள் இரும்பால் செய்யப்பட்ட பற்களை கொண்டு அவரை கடுமையாக குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதே போல இன்னொரு சம்பவத்தில், மார்க்கெட்டில் ஒரு பெண் பணத்தை சரி பார்க்க தனது முகத்தை மூடிய பர்தாவை விலக்கியுள்ளார். இது இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது என கூறி அந்த பெண்ணுக்கு 30 சவுக்கடி கொடுத்து பெண் ஜிகாதிகள் கொன்றுள்ளனர்.

அதே போல ஒருவரின் தலையை இப்படி தான் வெட்ட வேண்டும் என இளம் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த சிறுமிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது சம்மந்தமான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

பன்னீர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்ட தமிழக இளைஞர்கள்!!

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஊரே பற்றி எரியும்போது முதல்வர் பன்னீர் செல்வம் உட்கார்ந்து மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

இதனால், அவரை மிக்சர் பன்னீர் செல்வம் என கிண்டல் செய்து மீம்ஸ்களை இளைஞர்கள் வெளியிட்டனர். இப்படி அமைதியாக இருந்த பன்னீர் செல்வம், திடீரென அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியது இளைஞர்கள் மத்தியில் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதுவும், மெரினாவில் வைத்து பத்திரிகையாளர்களை அவர் சந்தித்துள்ளது, அவரை குறித்து வெளியிட்ட மீம்ஸ்க்காக தமிழக இளைஞர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற மிருகம் : சென்னையில் பயங்கரம்!!

தமிழ்நாட்டில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியின் உடல் மாங்காடு பகுதிக்கு அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட ஜஸ்வந்த என்ற 22 வயது பொறியாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஹாசினி கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்து ஹாசினியை தேடி வந்தனர். இந்நிலையில், குடியிருப்பில் விசாரணை மேற்கொண்டு பொலிசார், ஜஸ்வந்த்திடம் விசாரணை மேற்கொள்ள அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஜஸ்வந்த் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து தலையணையால் முகத்தில் அழுத்தி கொன்று, உடலை மாங்காடு அருகே பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து மாங்காடு பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர்.

குடியிருப்பில் வைத்து ஜஸ்வந்த்தை பொலிசார் கைது செய்தபோது அங்கிருந்து மக்கள் அவரை கடுமையாக தாக்கினர்.

ஜஸ்வந்த்தை மக்களிடமிருந்து மீட்ட பொலிசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கலாம் : புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது!!

ஏதேனும் பழ வகைகளை இனி சாப்பிடும் முன் அதனுள் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாகப் பார்க்க முடியும்.

ஃபிரான்ஹோஃபர் ஃபேக்ட்ரி ஆப்பரேஷன் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் (HawkSpex mobile) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர்.

இந்த செயலி பொருட்களை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து அதனுள் இருப்பதைக் கண்டறிய வழி செய்கிறது.

உதாரணமாக, அப்பிள் ஒன்றை ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் ஹாக்ஸ்பெக்ஸ் செயலியை ஸ்மார்ட்போனில் ஓபன் செய்து பழத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்டதும் அப்பிள் பழத்தில் இருக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் அதன் உறுப்புக்கள் ஸ்மார்ட்போன் திரையில் தெரியும்.

சந்தையில் ஏற்கனவே பல்வேறு ஸ்கேனிங் சாதனங்கள் இருந்தாலும் இவை ஸ்மார்ட்போனில் கூடுதலாக பிரிசம் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இந்த செயலி இருந்தாலே போதுமானது, இத்துடன் ஸ்மார்ட்போன் கேமரா மட்டும் கொண்டு ஸ்கேன் செய்யலாம்.

இந்த செயலியைக் கொண்டு உணவு வகைகளின் தரம் மற்றும் விவசாயம் சார்ந்த பயன்பாடுகளைப் பெற முடியும்.

இந்த செயலி வணிகப் பயன்பாட்டிற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசனின் டுவீட்டுகள்!!

தமிழ்நாடே தற்போது ஒரு அரசியல் பிரளயத்தை கண்டு வரும் நேரத்தில், நடிகர் கமலஹாசன் சர்ச்சையான இரண்டு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முதல் டுவீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வரூபம் படம் கடந்த சிக்கல்களுடன் வெளியாகியது, அந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள அவர், மக்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று தனக்கு ஆதரவாக நின்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டுவீட்டில், தமிழகமே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்னதாக அவர்கள் எழுந்து விடுவார்கள் என பதிவு செய்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு இரண்டு கருத்துக்களும் பொருந்துவதால், கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார் என அனைவரும் வழக்கம் போல குழம்பி வருகின்றனர்.