யாழ். தீவகம் அராலி சந்தி பகுதியில் கோரவிபத்து : ஒருவர் பலி!!(படங்கள்)

 
யாழ்ப்பாணம் அராலியூர் சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிபர் வாகனமும், அராலியூர் பகுதியில் இருந்து வந்த மோட்டார் வண்டியும் மோதியததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் வேலணைப் பகுதியைச் சேர்ந்த தவனேஸ்வரன் பிரபாகரன் (வயது 29) என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதேவேளை படுகாயமடைந்த அவரதுமனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ‘ஒன்றிணைவோம் கைகொடுப்போம் போராடுவோம்’ விழிப்புணர்வு!!

 
ரணில், மைத்திரி அரசு கல்வி, சுகாதாரத்தினை நாசமாக்கின்றது மக்களே உரிமைகளை வென்றெடுத்திட போராடுவோம் என்ற தொனிப்பொருளில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று (06.02.2017) காலை 10 மணியளவில் ஒன்றிணைந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களர் ஒன்றியம் மருத்துவ பீட மாணவர்கள் ஒருங்கமைப்புச் செயற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்த மக்கள் கையெழுத்துப் போராட்டம் மற்றும் விழிப்புணர்வு என்பன இடம்பெற்றது.

கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக, மாலபே சைட்டம் கல்லூரிக்கு எதிராக, பாடசாலைகளில் பணம் அறவிடுவதற்கு எதிராக, தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக என்ற தொனிப்பொருளில் இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா !(அறிவித்தல் )

வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பன  நவகுண்ட பக்க்ஷ உத்தம  மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி  விழா எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை  காலை 9.15முதல் 10.00 வரையான  சுப வேலையில் இடம்பெற உள்ளது .

ஆலயத்தில் எண்ணெய் காப்பு 08.02.2017 புதன்கிழமையன்று  இடம்பெறுகிறது .

சித்தி விநாயகப்பெருமானின் கும்பாபிசேக  நிகழ்வுகளில் கலந்து கொண்டு இறையருள் பெற்றிடுமாறு   அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தில் கழிவுப்பொருள்!!

 
வவுனியா நகரில் உள்ள பிரபல தனியார் சுப்பர் மார்க்கற் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட அடைக்கப்பட்ட குளிர்பானத்திற்குள் இனந்தெரியாத கழிவுப் பொருள் காணப்பட்டுள்ளதையடுத்து, வவுனியா நகரசபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் உள்ள பிரபல தனியார் சுப்பர் மார்க்கெற் ஒன்றில் சனிக்கிழமை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக பிளாஸ்ரிக் கப்பில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.

நிகழ்வின் போது அவற்றை பரிமாற்றியுள்ளனர். இதன்போது அதனை திறந்து குடிந்த சிலர் குளிர்பானத்தின் அடிப்பகுதியில் கழிவுகள் இருந்ததைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அதனைப் பெற்றவர்கள்கள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் தெரியப்படுத்தியிருந்தனர். அவர்கள் வவுனியா நகரசபைச் செயலாளாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, உடனடியாகவே குறித்த சுப்பர் மார்கெற்றுக்கு சென்ற வவுனியா நகரசபை செயலாளர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் பெட்டி ஒன்றில் பொதிசெய்யப்பட்டிருந்த கப்பில் அடைக்கப்பட்ட குளிப்பானங்களை கைப்பற்றியுள்ளனர்.

இன்று குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

ரயிலால் சிதைந்து போன 15 வயது சிறுமியின் வாழ்க்கை!!

15 வயது சிறுமி ஒருவர் தவறுதலாக ரயில் மாறி ஏறியதால் அவரின் வாழ்க்கையே சிதைந்து போனது பரிதாபத்தை எற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரை சேர்ந்த நித்யா என்ற 15 வயது சிறுமி கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது உறவினர்களை பார்ப்பதற்காக ரயில் மூலம் சென்றார்.

ஆனால், அவர் தவறுதலாக டில்லி செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். அங்கு அவர் இறங்கியதும் உதவிக்காக தண்ணீர் பாட்டீல் விற்கும் அர்மான் என்பவரை அணுகியுள்ளார். அவர், சிறுமியை ஏமாற்றி சராய் கலே கான் பகுதிக்கு அழைத்து சென்று தனது மனைவி ஹசீனா உதவியுடன் பல முறை பலாத்காரம் செய்தார்.

பின்னர் அவர்கள், அந்த சிறுமியை 70 ஆயிரத்திற்கு பப்பு யாதவ் என்பவரிடம் விற்பனை செய்தனர். சிறுமியை வாங்கிய பப்பு யாதவ், திருமணம் செய்ததுடன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். சில நாட்களுக்கு பின் அங்கிருந்து ஒருவழியாக தப்பிய அந்த சிறுமி ரயில் நிலையத்திற்கு தப்பி வந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். சராய் சலே கான் மற்றும் பரிதாபாத்தில் சோதனை நடத்தி, பப்புயாதவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்ததுடன், தப்பி சென்ற மற்றவர்களை தேடி வருகின்றனர்.

வேலைக்காரி எல்லாம் முதல்வராக கூடாது : சசிகலாவிற்கு பதிலடி கொடுத்த ராதாரவி!!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராதாரவி, ஸ்டாலினுக்கு முதல்வராகும் தகுதி இருக்கிறது என்றும் அவர் விரைவில் முதல்வராவார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இதுவரை அதிமுக கட்சியின் உறுப்பினராக இருந்து வந்த இவர், விரைவில் திமுக எனது தாய்வீடு எனவும் நான் அங்கு செல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி வேலைக்காரியாக இருந்து சசிகலா முதல்வர் ஆகக்கூடாது என கூறியுள்ளார்.

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வசந்த உற்சவம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவத்தில் ஆறாவது நாளான நேற்று  05.02.2017 ஞாயிறு ) மாலை  வசந்த உற்சவம் இடம்பெற்றது .

ஆலயத்தின் முன்புறம் அமைக்கபட்டுள்ள  தீர்த்த கரைக்கு  எழுந்தருளிய  வள்ளி தெய்வயானை  சமேத முருகப் பெருமானுக்கு  அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த உற்சவத்தின் பின்  வெளி வீதி உலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது

பாலியல் வன்கொடுமைகளை கலையின் மூலம் வெளிப்படுத்திய 19 வயது இளம்பெண்!!

19 வயது கொண்ட ஒரு இளம்பெண், தனது கலையின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி, அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார்.

நெப்ராஸ்கா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் கலை பயிலும் மாணவி எம்மா க்ரேன்சர் என்பவர் கைகளால் ஓவியம் வரைவதில் மிகுந்த வல்லமை பெற்றவர்.

இந்த பெண் வாஷிங்டன் டி.சியில் பெண்கள் நடத்திய Women March – ற்கு சென்று வந்த பின் ஒரு ஆர்ட் வரைந்து, அதை இன்டர்நெட், ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

அவர் வரைந்து வெளியிட்ட அந்த ஓவியத்தில், விரல்களின் தீண்டல்களால் பெண்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமையை உடலிலேயே வரைந்து சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் அவலத்தை அப்பட்டமாக வெளிபடுத்தி இருந்தார்.

மேலும் அந்த இளம்பெண் தான் வரைந்த இந்த ஓவியத்தில், யார், எப்படி ஒரு பெண்ணை பார்க்கின்றனர். எந்தெந்த உறவு, எப்படி, எப்படி ஒரு பெண்ணை நெருங்குகிறது என்று தெளிவாக காட்டியுள்ளார்.

இந்த ஓவியம் குறித்து எம்மா கூறுவது, ஒரு பெண் மீதான தீண்டுதல்கள் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக தான் இந்த ஓவியத்தை நான் வரைந்தேன்.

மேலும் பாலியல் வன்கொடுமைகள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு நீதி வேண்டும் என்பதற்காக, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு ஆணின் தீண்டுதல் எவ்வாறாக இருக்கு என்ற கருத்தை, தன் மூலமாக சமூகத்தின் பார்வைக்கு நான் தெரியப்படுத்தவே இந்த ஓவியத்தை வரைந்து வெளிப்படுத்தினேன் என்று எம்மா க்ரேன்சர் கூறியுள்ளார்.

பெற்றோருக்கு வந்த சாபம் : ஏலியன் குழந்தையால் கண்ணீருடன் கதறிய பரிதாபம்!!

 
இந்தியாவில் மரபியல் நோய் காரணாமாக ஏலியன் போன்ற அமைப்புடன் பிறந்த குழந்தையைக் கண்டு பெற்றோர், இது தங்களுக்கு வந்த சாபம் என கூறி வருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசத்தின் சாக்கியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலிந்திரா மக்டோ(34), இவருக்கு பிரியங்கா குமாரி(25) என்ற மனைவி உள்ளார். அண்மையில் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையைக் கண்ட பிரியங்கா பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார் .ஏனெனில் குழந்தை மரபியல் நோய் காரணமாக தலைப் பகுதிகள் தடித்து ஒரு செல் அமைப்பு போன்று காணப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குழந்தையின் கண் பெரிதும் வீக்கம் ஏற்பட்டு காணப்பட்டுள்ளது.

இதனால் பிரியங்கா இது தங்களுக்கு வந்த சாபம் என்றும் இவளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற பயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் நான் கடவுளிடம் ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எதுவாக இருப்பினும் அது நலமுடன் பிறக்க வேண்டும் என்று தான் வேண்டி இருந்தேன். ஆனால் தனக்கு பிறந்த குழந்தை மற்ற குழந்தைகள் போல் இல்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரியங்கா கணவர் கூறுகையில், நான் ஒரு ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன்.

ஆனால் குழந்தை இப்படி பிறந்து விட்டது, எதுவாகியினும் குழந்தையை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், நல்ல நிலையில் வளர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் இக்குழந்தைக்கு அரிய மரபணு நோயான Harlequin Ichthyosis என்ற நோயின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஊட்டச் சத்து சம்பந்தமான பிரச்சனைகளும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இக்குழந்தைய காண்பவர்கள் சிலர் இக்குழந்தை கடவுளின் ஆவதாரம் என்றும் கூறிவருகின்றனர்.

இலங்கையில் உணவுப்பொதி ஒன்றின் விலை மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் அண்மையில் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட உணவுப்பொதி ஒன்றின் விலை மேலும் 10 அல்லது 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையே உணவுப்பொதிகளின் விலையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, தேங்காய் ஏற்றுமதியை உடனடி​யாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உணவுப் பொதியொன்றினை, 50 ரூபாவுக்கு வழங்க முடியாத நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் புதிய சட்டங்கள் : இதனை கடைப்பிடிக்கவும்!!

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் முகப்புத்தகத்தில் பதிவு செய்யும் சில விடயங்களை தவிர்க்குமாறு பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையில், மக்கள் தங்கள் முகநூலில் பதிவுகளை பிரசுரிக்குமாறு அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், சமுதாய சீர்கேடுகள் ஏற்படாத வகையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்கு,மேற்கூறிய பதிவுகளை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பில், சட்டங்களை கொண்டுவருவதற்கு பதிலாக மேற்கூறியவற்றினை தவிர்க்க வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழில் தொடரும் சுற்றிவளைப்பு : வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது!!

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் கத்தி மற்றும் வாள் போன்றவற்றை செய்துகொடுத்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கல்வியங்காடு, கோப்பாய், அளவெட்டி, சுன்னாகம், உரும்பிராய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பாணந்துறை கொரகான கல்கனுவ பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கடந்த 2ம் திகதி இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும், 5000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டில் கீழ் மாடியில் இவ்வாறு தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குசால் மெண்டிஸின் குடும்ப உறுப்பினர் தீப்த மெண்டிஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குசால் மெண்டிஸ் தென் ஆபிரிக்காவில் நடைபெற்று வரும் கிரிக்கட் போட்டித் தொடரில் தற்போது விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் வீதி விபத்து : ஒருவர் பலி!!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பிலயை சேர்ந்த சந்திரபோஸ் குணசீலன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த நபர் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில், மாடு ஒன்று வீதியை கடக்க முற்பட்டபோது அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி விபதுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனிதனின் தவறைத் திருத்திய இயற்கை!!

 
ரஷ்யாவின் உஸுரி வளைகுடா மிக அழகானதோர் பகுதி. ஒரு காலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கண்ணாடிப் போத்தல்கள் இந்தக் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகக் கொட்டப்பட்டன.

உடைந்த கண்ணாடிகள் நிரம்பிய பகுதி என்பதால், மனிதர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. காலங்கள் சென்றன. கூர்மையான உடைந்த கண்ணாடி துண்டுகள் எல்லாம் நீரால் அரிக்கப்பட்டு, கூழாங்கற்களைப் போன்று வழவழப்பாகி விட்டன.

சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை என்று அத்தனை கண்ணாடித் துண்டுகளும் தற்போது கற்கள் போல உருமாறி, கரைக்கு வந்து சேர்கின்றன. கடற்கரை முழுவதும் வண்ணக் கண்ணாடிக் கற்களால் அழகாகக் காட்சியளிக்கிறது.

இந்தப் பகுதியைக் காண்பதற்காக உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் செல்கின்றனர்.

கரைகளில் ஒதுங்கும் கண்ணாடிக் கற்களை சேகரிப்பதற்கும் சற்றுத் தொலைவில் உறைந்திருக்கும் பனிப்பாறைகளைப் புகைப்படம் எடுப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மனிதன் செய்த தவறை அழகாய்த் திருத்தியிருக்கிறது இயற்கை.

வவுனியா புளியங்குளம் புரட்சி இளைஞர் கழகத்தின் மைதான திறப்பு விழா!!

 
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “Youth Got Talent – 2016” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில், புளியங்குளம் வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் புரட்சி இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவு பெற்ற மைதான புனரமைப்பு, சுற்றுவேலி நிர்மாணம் என்பவற்றின் திறப்பு விழா அண்மையில் இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் இளைஞர் சேவைகள் அதிகாரி திரு.சதீஸ் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக வட மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ.கேசவன், வாசலை பசிந்து, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் ரி.அமுதராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.