வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்திற்கு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் விஷேட உணவு!!

 
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் ஜெர்மனில் வசிக்கும் திரு.திருமதி ராகவன் தேவகி குடும்பத்தினரால் நேற்று (04.02.2017) சனிக்கிழமை முழு நாளுக்குமான விசேட உணவும், பழங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம் மதிய உணவு வழங்குகின்ற இவ் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அழைப்பின் பெயரில் அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உபதலைவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் மு.கண்ணதாசன், வவுனியா வாடி வீட்டின் இயக்குனரும், இந்து அன்பகத்தின் ஆயுள் கால உறுப்பினருமான மா.கதிர்காமராஜா(புஸ்), ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ.கேசவன், உப தலைவர் பி.கெர்சோன், கழகத்தின் உறுப்பினர்களான வ.பிரதீபன், ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டுக் கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள்!!

 
நேற்று (04.2.2017) வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி (325 000) மூன்று இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் செந்திலநாதன் மயூரன் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.ஜோன்ஷன் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் திரு.நாகராஜன் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் ஜனாப் A.R.M.லறீப் உட்பட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

தமிழக முதலமைச்சராகிறார் சசிகலா : ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா!!

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் விரையில் முதல்வராக பதவியேற்கவுள்ளார். நாளை அல்லது 9ம் திகதி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இராஜினாமா செய்கிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

நிதி அமைச்சர் பதவி மாஃபா பண்டியராஜனுக்கு வழங்கப்படும் என்றும் செங்கோட்டையனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியும் ஆட்சியும் ஓரே நபரிடம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காணாமல் போன 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு!!

யாழ் கீரிமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை காணாமல் போன 10 வயது சிறுவன் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து தனது பாட்டியின் வீட்டிற்கு சென்ற கஜேந்திரகுமார் கஜீபன் என்ற சிறுவனே இவ்வாறு பாழடைந்த தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வாகனங்களை சுத்தரிகரிப்பதற்கு அமைக்கப்பட்ட குறித்த நீர் தொட்டியானது, தற்போது பாவனையில் இல்லாத நிலையில் மழைநீர் தேங்கி உள்ளது.

மேலும் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

89 வய­திலும் தொடர்ந்து பணி­யாற்றும் சத்­தி­ர­சி­கிச்சை நிபுணர்!!

ரஷ்­யாவைச் சேர்ந்த மருத்­து­வ­ரான பெண் ஒருவர் 89 வய­திலும் மருத்­துவ சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்கிறார்.  டாக்டர் எலா இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா எனும் இப்பெண், உலகில் தற்­போதும் பணியாற்றும் மிக வய­தான சத்­தி­ர­சி­கிச்சை நிபுணர் எனக் கரு­தப்­ப­டு­கிறார். எதிர்­வரும் மே 5 ஆம் திகதி டாக்டர் எலா இலி­யி­னிச்னா லெவுஷ்­கி­னா­வுக்கு 90 வய­தா­க­வுள்­ளது.

இந்­நி­லை­யிலும் அவர் வரு­டாந்தம் நூற்­றுக்கும் அதி­க­மான சத்­தி­ர­சிகிச்சைகளை செய்­கிறார்.
ரஷ்­யாவின் ரைஸான் நகர வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்றும் இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா வாராந்தம் குறைந்­த­பட்சம் 4 சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்­கிறார்.

மருத்­து­வ­ராக பணி­யாற்ற வேண்டும் என சிறு பருவத்­தி­லி­ருந்தே இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா விரும்பி­னாராம். இவர் ஓய்வு பெறும் வயதை கடந்து பல தசாப்­தங்­க­ளா­கி­விட்ட போதிலும் தனது அபி­மான பணி­யி­லி­ருந்து விலக விரும்­ப­வில்லை.

தினமும் காலை 8 மணிக்கு இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா வேலைக்குச் சென்­று­வி­டு­வாராம்.  கடந்த 67 வரு­டங்­களில் 10,000 இற்கும் அதி­க­மான சத்­தி­ர­சி­கிச்­சை­களை இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா செய்திருக்­கிறார்.

இச்­சத்­தி­ர­சி­கிச்­சை­களில் ஒரு­வர்­கூட இறக்­க­வில்லை என்­பதில் மிகப் பெரு­மிதம் கொண்­டுள்ளார் டாக்டர் இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா.  தனது வீட்டில் மாற்றுத் திற­னா­ளி­யான தனது மரு­ம­க­னையும் இலி­யி­னிச்­னாவே பரா­ம­ரித்து வரு­கிறார். 8 பூனைக­ளையும் வளர்க்­கிறார்.

“ஓய்வு காலத்தில் நான் செய்­வ­தற்கு வேறு எது­வு­மில்லை. மருத்­துவர் என்­பது ஒரு தொழில் அல்ல. இது ஒரு வாழ்க்கை முறை” என்­கிறார் டாக்டர் இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா.

தனது ஆரோக்­கி­ய­மான நீண்ட வாழ்க்கை தொடர்பில் இர­க­சியம் எது­வு­மில்லை எனவும் இலி­யி­னிச்னா லெவுஷ்­கினா கூறு­கிறார். “நான் எல்­லா­வற்­றையும் உண்­கிறேன். அதிகம் சிரிக்­கிறேன், அதிகம் அழு­கிறேன்” என இவர் கூறு­கிறார்.

“நான் இன்னும் ஏன் பணி­யாற்­று­கிறேன் என்றால், இதில் நான் ஆர்வம் கொண்­டுள்ளேன். அத்­துடன், வெற்றி பெறு­வதை நான் விரும்­பு­கிறேன். மக்கள் குண­ம­டை­வ­தற்கு உத­வுவதை நான் விரும்­பு­கிறேன்.

பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் வேறு எவரும் சத்­தி­ர­சி­கிச்சை செய்ய முன்­வ­ராத நிலையில் இருந்த பல­ருக்கு நான் சத்­தி­ர­சி­கிச்சை செய்து இவர்­களை காப்­பாற்­றி­யுள்ளேன்.

அவர்கள் இன்னும் உயி­ருடன் உள்­ள­துடன் வளர்ந்த பிள்­ளை­க­ளையும் கொண்­டுள்­ளனர்” என்­கிறார் டாக்டர் டாக்டர் இலியினிச்னா லெவுஷ்கினா.

துவிச்­சக்­கர வண்­டியில் 500 கிலோ­மீற்றர் தூரம் தவ­றான திசையில் பயணம் செய்த நபர்!!

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் பணி­யாற்­றிய நக­ரி­லி­ருந்து சொந்த ஊருக்கு துவிச்­சக்­கர வண்டியில் செல்­லும்­போது சுமார் 500 கிலோ­மீற்றர் தூரம் எதிர் திசையில் சென்­றுள்ளார்.

இந்­நபர் சீனாவின் ஷாங்டோங் மாகா­ணத்­தி­லுள்ள ரிஸாவோ நகரில் பணி­யாற்­று­பவர். சீன புத்தாண்டு  தினத்­தை­யொட்டி தனது சொந்த ஊருக்குச் செல்­வ­தற்கு இவர் தரானார்.  இந்­நபர் பணியாற்றும் ரிஸாவோ நக­ரி­லி­ருந்து சுமார் 1700 கிலோ­மீற்றர் தூரத்தில் ஹெய்­லோங்­ஜியாங் மாகாணத்தில் குய்­கிஹார் எனும் நகரில் இவரின் வீடு உள்­ளது.

பெரும்­பா­லான சீன மக்கள் விடு­மு­றையில் ஊருக்குச் செல்­வ­தற்கு ரயில் அல்ல பஸ்ஸை பயன்படுத்திய­போது, 1700 கிலோ­மீற்றர் சைக்கிள் மூலம் பயணம் செய்­ய­வ­தற்கு இவர் தீர்­மா­னித்தார்.

ஆனால், தவ­றான திசையில் பய­ணத்தை ஆரம்­பித்த இவர், சுமார் 500 கிலோ­மீற்றர் தூரம் தவ­றான பாதையில் சென்று கொண்­டி­ருந்தார். வரை­ப­டங்கள் எதையும் பார்த்து அறி­வ­தற்கு முடி­யாத நிலையில் இருந்த இவர், மற்­ற­வர்­களின் உத­வி­யு­ட­னேயே பாதையை அறிந்­து­கொள்ள வேண்­டிய நிலையில் இருந்தார்.

அன்ஹுன் மாகா­ணத்தின் வுஹு நகரில் அதி­வேக நெடுஞ்­சா­லையில் துவிச்­சக்­கர வண்­டியில் இவர் சென்­று­கொண்­டி­ருந்­த­போது பொலி­ஸாரால் தடுத்து நிறுத்­தப்­பட்டார்.

அவ்­வீ­தியில் சைக்­கிள்கள் செல்­வ­தற்கு அனு­ம­தி­யில்­லாத நிலையில் பொலிஸார் அவரை வழி­ம­றித்து விசா­ரித்­தனர். அப்­போதே அவர் எதி­ரான திசையில் 500 கிலே­மீற்றர் தூரம் பயணம் செய்­தி­ருப்­பதை பொலிஸார் உணர்ந்­தனர்.

அந்­நபர் மீது வுஹு நகர பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும், நெடுஞ்­சா­லையில் கட்­டணம் அற­விடும் உத்­தி­யோ­கத்­தர்­களும் அனு­தாபம் கொண்­டனர்.

இதனால், அவரை மேலும் 2200 கிலோ­மீற்றர் துவிச்­சக்­கர வண்­டியில் பயணம் செய்ய வைக்காமல், அவர்கள் அனைவரும் இணைந்து, வாகனத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அந்நபரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

புலியும் – சிங்கமும் இணைந்து பெற்ற குட்டி!!

சிங்­கமும் புலியும் இணைந்து பெற்ற குட்­டி­யொன்று ரஷ்­யா­வி­லுள்ள நட­மாடும் மிருகக் காட்­சி­சாலை ஒன்றின் பார்­வை­யா­ளர்­களை வெகு­வா­ககக் கவர்ந்­துள்­ளது.

பெண் புலி­யொன்றும் ஆண் சிங்­க­மொன்றும் இணைந்து இக் ­குட்­டியை பெற்­றுள்­ளன. நவம்பர் 11 ஆம் திகதி நட­மாடும் மிருகக் காட்­சி­சா­லை­யொன்று சுற்­று­லாவில் ஈடு­பட்­டி­ருந்த வேளையில் இப் ­பு­லிக்­குட்டி பிறந்­தது என இம்மி­ருகக் காட்­சி­சா­லையின் பிர­தான அதி­காரி எரிக் அய்­ர­பெட்யன் தெரிவித்துள்ளார்.

இரண்­டரை மாத வய­தான நிலையில் 5 கிலோ­கிராம் எடை­யுடன் இப்­பு­லிக்­குட்டி உள்­ளது. இவ்­வாறு சிங்­கமும் புலியும் இணைந்து குட்டி ஈனு­வது அரி­தா­ன­தாகும்.

இத்­த­கைய குட்­டிகள் பொது­வாக, சாதா­ரண சிங்­கக்­குட்­டிகள் அல்­லது புலிக்­குட்­டி­க­ளை­விட பல­வீ­ன­மா­ன­மாகக் காணப்­படும் என மொஸ்­கோ­வி­லுள்ள டார்வின் நூத­ன­சா­லையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் திமித்ரி மிலோ­சேர்டோவ் தெரி­வித்­துள்ளார்.

இதன் தாய் மேற்­படி மிருகக் காட்­சிச்­சா­லையின் ஒரே­யொரு பெண் புலி­யாகும். அது 3 குட்­டி­களை பிரச­வித்த போதிலும் ஒன்று மாத்­தி­ரமே உயிர்­தப்­பி­யுள்­ளது.

“இப் ­பு­லிக்­குட்­டியை நாம் கூண்டில் அடைத்து வைப்­ப­தில்லை. ஏனெனில், வெளியே அதிக குளி­ராக உள்­ளது. இது எவ்வேளையிலும் எமது அருகிலேயே உள்ளது. எமது கட்டிலில் அது உறங்குகிறது” என எரிக் அய்ரபெட்யன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க!!

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.

உபாதை காரணமாக அணித்தலைவர் மெத்திவ்ஸ் இந்தப் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உபுல் தரங்க இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெனிஸ்வரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டமை மனவருத்தத்தை தருகின்றது : செல்வம் அடைக்கலநாதன்!!

வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டமை மனவருத்தத்தை தருவதாகவும், அதனை ஏற்று கொள்ளமுடியாத செயல் எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களால் வட மாகாணத்தின் பல இடங்களிலும் வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டமை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கருத்துக்களை கருத்துக்களால் பேசி தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டிய நிலையில் ஒருவருடைய மனதை நோகடிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுதல் தவிர்க்கப்படவேண்டும்.

எனவே ஒரு சில விரோதங்களுக்காகவும் பேசித்தீர்க்க வேண்டிய விடயங்களுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடுகளை முன்னெடுப்பது மனவேதனையை ஏற்படுத்துகின்றது.

இந்நிலையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தளர்ந்து போகாது தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வட மாகாணத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக தொடர்ந்தும் செயற்படவேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த யுவதியை கடத்தியவர்கள் கைது!!

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த யுவதி ஒருவர் சில நபர்களால் கடத்தி செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பிரபல வர்த்தகர் ஒருவரும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கடத்த முற்பட்ட யுவதி முன்னர் இந்த வர்த்தகரின் மசாஜ் நிலையம் ஒன்றில் சேவை புரிந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த யுவதி 5 மசாஜ் நிலையங்களை நடாத்துவற்கு முயற்சித்துள்ளார், இதன் காரணமாக கடத்த முயன்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, மொனராகலை நீதாவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைதீவில் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரிவதால் மக்கள் அசௌகரியத்தில்!!

 
சீரற்ற காலநிலை காரணமாக பெய்த தொடர் மழையினால் கடற்கரையை அண்டி அமைந்துள்ள காரைதீவு பொது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரியும் நிலை தோன்றியுள்ளது. அண்மைக்காலமாக அப்பகுதியில் சடலங்களும், எலும்புகளும் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் வெள்ளம் ஏற்படும் காலங்களில், இதுபோன்று சடலங்கள் வெளியே தெரியும் நிலை காரைதீவு மயானத்தில் ஏற்பட்டுக் கொண்டு இருப்பதாக மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் அம்மயானம் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி காரைதீவு மாயனத்தை பாதுகாக்க உதவுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் : பிணத்துடன் காவல் நிலையத்துக்கு வந்த காதலி!!

இந்தியாவில் ஏமாற்றிய காதலனுடன் சேர்த்து வைக்ககோரி இறந்த குழந்தையுடன் பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கனகராஜா, இவரும் திவ்யா (19) என்ற பார்வையில்லாத பெண்ணும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

பல இடங்களில் இருவரும் சென்று உல்லாசமாக இருந்ததால் திவ்யா கர்ப்பமடைந்தார்.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள கனகராஜாவை அவர் வலியுறுத்தியுள்ளர், ஆனால் இதற்கு அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காவல் நிலையத்துக்கு கையில் ஒரு பையுடன் திவ்யா வந்தார். பின்னர் பையிலிருந்து தன் வயிற்றில் இருந்த குழந்தை கருசிதைவானதை எடுத்து பொலிசாருக்கு காட்டியுள்ளார்.

இதை கண்ட பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தன்னை ஏமாற்றிய காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க திவ்யா பொலிசாரிடம் கோரினார்.

அவர் புகாரை ஏற்று கொண்ட பொலிசார் தலைமறைவாகியிருந்த கனகராஜாவை கண்டுபிடித்து, அவருக்கு புத்திமதி கூறி திவ்யாவுடன் திருமணம் நடத்தி வைத்தார்கள்.

அரசியலில் குதிக்கிறார் நடிகர் ரஜினி : புதிய கட்சி துவக்க ஆலோசனை!!

நடிகர் ரஜினகாந்த் புதிய அரசியல் கட்சி ஒன்றை துவக்க ஆலோசனை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜின், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடத்தினார். அப்போது, நிர்வாகிகள் ரஜினியிடம் கூறியதாவது: தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள தால், மாற்று சக்தியை, தமிழக மக்கள் எதிர் பார்க்கின்ற னர்

சித்திரை மாதத்தில், முத்திரை பதிக்கும் விதத்தில், புதிய கட்சியை துவக்குவோம், உள்ளாட்சித் தேர்தலையும் சந்திப்போம்.

அ.தி.மு.க., – தி.மு.க., போன்ற கட்சிகளில், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், 2-ம் கட்ட தலைவர்கள்,மாவட்டசெயலர்கள் என, பெரும் படையே, உங்கள் பின்னால் அணி வகுக்கும்.

எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கும்போது, ‘எனக்கு காமராஜர் தலைவர்; அண்ணாதுரை வழிகாட்டி’ என்றார். அதே பாணியில், நீங்களும் செயல்பட வேண்டும். எனவே, இந்த முறை அரசியல் வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என வலியுத்தியுள்ளனர்.

இதேசமயம், அமித் ஷா உட்பட ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள் அவரை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து, சில ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

முதலமைச்சராகிறார் சசிகலா : அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு!!

சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், சசிகலா விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

பொதுச்செயலாளர் பதவியும், முதலமைச்சர் பதவியும் ஒருவரிடத்தில் தான் இருக்க வேண்டும். அதன்படி சசிகலா முதலமைச்சராவது தான் சரியாக இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

மூத்த நிர்வாகிகள் பலரும் இதே கருத்தை ஆதரித்தனர். இதனால் எந்த நேரத்திலும் சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், கட்சியின் பல்வேறு நடைமுறைகள் அமைந்தன.

இந்நிலையில் சசிகலா இன்று கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலாவை தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சரும் கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்ததையடுத்து சசிகலா ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, சசிகலா விரைவில் கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி கடிதம் கொடுப்பார் என தெரிகிறது. அதேசமயம் முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

யாழில் குடும்பப் பெண்மணிக்கு நேர்ந்த அவலம்!!

யாழ் – ஏழாலை தெற்குப் பகுதியில் குடும்பப் பெண்மணி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் வழமை போல நேற்று முன்தினம் (03.02.2017) மாலை 03.30 மணியளவில் ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்கு சென்ற போதே இவ்வாறு நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் வீட்டு வளவுக்குள் அமைந்திருந்த பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு அரசமரக் குழைகளை முறிக்க முற்பட்ட போதே கால்தடுக்கிப் பின்பக்கமாகக் கிணற்றில் விழுந்துள்ளார்.

அத்துடன், குழை வெட்டி வருவதாகச் சென்ற நிலையில் சுமார் ஒரு மணித்தியாலம் கழித்தும் அவரைக் காணாத காரணத்தால் இந்த பெண்மணியின் வயோதிபத் தாயாரும், சகோதரியும் இணைந்து வீட்டு வளவினுள்ளும், அயலிலும் தேடியுள்ளனர்.

குறித்த பெண்மணியின் சகோதரி தற்செயலாக வீட்டு வளவில் அமைந்திருந்த கிணற்றை எட்டிப் பார்த்த போது சகோதரி இறந்த நிலையில் கிணற்று நீரில் மிதந்துள்ளதுடன், சடலம் மீட்கப்பட்டள்ளதாக கூறப்படுகின்றது. இந்த பெண் 49 வயதையுடைய இரு பிள்ளைகளின் தாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாகக் கிராம சேவகர் ஊடாகச் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டதுடன், நேற்றிரவு 10.30 மணியளவில் மல்லாகம் நீதிமன்றப் பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார்.

மேலும், பதில் நீதவானின் உத்தரவுக்கமைய உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பெண்ணின் சடலம் நேற்று(04.02) பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை – தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தை முற்றுகையிட்ட தேனீக்கள்!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இப் போட்டியின் இடையில் தேன் பூச்சிகள் இடையூறு ஏற்படுத்தியுள்ளன. இதனால் போட்டி தற்காலிகமாக சிறிதுநேரம் இடைநிறுத்தப்பட்டது.

மைதானத்தை முழுமையாக சூழ்ந்து கொண்ட தேனீக்களால் இரு அணி வீரர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.