மனைவி, மகள்கள் உட்பட 11 பேரை கழுத்தறுத்து கொன்ற கொடூரன் : அதிர வைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் நபர் ஒருவர் மனைவி, மகள்கள உட்பட 11 பேரை கழுத்தறுத்து கொன்று தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்திலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

குடும்ப பாரத்தினால் 45 வயதான ஜமாலுதீன் தனது மனைவி மற்றும் 5 மகள்கள், சகோதரர்களின் மனைவிகள் என 11 பேரை பூச்சி மருந்தை கொடுத்து கத்தியால் கழுத்தறுத்து கொன்று பின்னர், அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், சம்பவயிடத்தில் இரண்டு கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மர்மநபர்கள் சிலர் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்னும் கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் புத்தளத்தில் மலர்ந்துள்ளது!!

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் புத்தளம் பிரதேசத்தில் மலர்ந்துள்ளது.

புத்தளம் – கியூல திவுலபிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் இந்த மலர் பூத்துள்ளது.

நன்றாக மலர்ந்திருக்கும் இந்த பூ தற்போது வாட ஆரம்பித்துள்ளது. உலகில் அதிகம் துர்நாற்றம் வீசக் கூடிய மலர் என இது கூறப்படுகிறது.

வவுனியாவில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

போதைப் பொருள் உடமையில் வைத்திருந்த ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உபபொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் வவுனியா, தவசிகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒரு கிராம் 625 மில்லிக்கிராம் மாபா எனப்படும் போதைப் பொருள், 755 கிராம் கேரளா கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

திருத்தப் பணிகள் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று 6ம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி வரை மூடப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் பயணிகள் பயணிக்கவுள்ள நேரத்திற்கு சுமார் 5 மணி நேரத்திற்கு முன்னதாகவே, விமான நிலையத்திற்கு வருகைத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்துக்கு நுழையும் வாயிலுக்கு அருகில் பயணிகளின் பொருட்களை கையளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவற்றை சோதிப்பதற்கான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், விமான நிலையத்தில் செயற்பட்டு வரும் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிரிவுகள் மேலதிகமாக அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த திணைக்களங்களில் பணியாற்றுவதற்கு மேலதிக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தனிமையில் அலைந்து திரிந்த தமிழ்ப் பெண்!!

கனாடா மார்கம் ஒன்ராறியோ, பகுதியில் தனிமையில் அலைந்து திரிந்த தமிழ்ப் பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர்.

80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு அந்நாட்டு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கோவான் வீதி டவுன்லி அவனியு மற்றும் ஹைகிளென் அவனியு பகுதியில் இருந்து குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண் தரையில் வீழ்ந்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் பொலிஸார், அவரின் பெயர் புவனேஸ்வரி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் எந்த பகுதியில் இருந்து வந்தார் என அறியும் முயற்சியில் அந்நாட்டு பொலிஸார் தீவிரமான ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பதிவு செய்யாது சோற்றுப் பொதிகளை விற்பனை செய்ய முடியாது!!

கொழும்பு நகரில் பதிவு செய்யாது சோற்றுப் பொதிகளை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுக்கு உட்படாது கொழும்பு நகரில் சோற்றுப் பொதிகளை விற்பனை செய்ய இந்த ஆண்டு அனுமதியளிக்கப்படாது. பதிவு செய்யாது சோற்றுப் பொதி விற்பனை முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையில் எவரும் சோற்றுப் பொதி விற்பனை செய்ய அனுமதி கோரவில்லை என கொழும்பு மாநகரசபையின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் சுமார் 300 சோற்றுப் பொதி விற்பனையாளர்கள் இருக்கின்றார்கள் எனவும் 2016ம் ஆண்டில் பதிவு செய்து கொண்டவர்கள், இந்த ஆண்டிலும் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரியுள்ளார்.

அனைத்து சோற்றுப் பொதிகளிலும் உற்பத்தியாளரின் பெயர், விலாசம், உற்பத்தி நேரம், திகதி மற்றும் பதிவிலக்கம் போன்ற விபரங்கள் உள்ளடக்கிய முத்திரையொன்று பொறிக்கப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நியதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

சசிகலா முதலமைச்சராவதற்கு 97 சதவீத மக்கள் எதிர்ப்பு!!

ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரானதற்கும், முதல்வராகும் முடிவுக்கும் பொதுமக்களிடையே கருத்துக் கணிப்பை சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஒன்லைன் மூலம் நடத்தியது.

இதன் முடிவு சசிகலாவுக்கு பாதகமாகவே வந்துள்ளதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இது குறித்து செந்தில் ஆறுமுகம் கூறுகையில்,

சசிகலா முதல்வராவதற்கும், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரானது தொடர்பாகவும் கடந்த டிசம்பர் 28ம் திகதி முதல் ஜனவரி 1ம் திகதி வரை கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம்.

அதன்படி ஒன்லைன் மூலம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பவர்களிடம் அவர்களின் வயது, மாவட்டம் உள்ளிட்ட விபரங்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதைப் பூர்த்தி செய்து விட்டு கருத்துக்கணிப்பில் பங்கேற்கலாம்.

இதில் சசிகலா முதல்வராவது, பொதுச் செயலாளராவது குறித்து இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன.

32 மாவட்டங்களிலிருந்து 3,090 பேர் கருத்துக்கணிப்பில் பங்கேற்று வாக்களித்துள்ளனர். இதில் 2,916 பேர், சசிகலா பொதுச் செயலாளரானதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது 94 சதவீதம். ஆதரவாக 174 பேர் மட்டுமே வாக்குப் போட்டுள்ளனர். இது 6 சதவீதம்.

அதுபோல முதல்வராவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2,984 பேரும், ஆதரவாக 106 பேரும் வாக்களித்துள்ளனர். 97 சதவீதம் முதல்வராகுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சென்னை, கோவை, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து அதிகம் பேர் வாக்களித்துள்ளனர்.

மேலும், நீலகிரி, பெரம்பலூர், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் குறைவான வாக்குப் பதிவாகி உள்ளது. 20 வயது முதல் 40 வயது வரை 72 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்றார்.

அல்கஹோல் புற்றுநோயை உண்டாக்கும் : ஆய்வில் தகவல்!!

நியூசிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வில் அல்கஹோல் காரணமாக மனித உடலில் 7 விதமான புற்றுநோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் உட்பட பல அமைப்புக்களின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புள்ளிவிபரங்களைத் தாண்டிய உண்மை பிணைப்பு புற்றுநோய்க்கும் மதுவுக்கும் இருப்பதையே இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், மலக்குடல், மார்பு ஆகிய 7 பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கு மதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

மது அருந்துபவர்களுக்கும் அருந்தாதவர்களுக்கும் இடையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள், புதிய வகையான புற்றுநோய்களில் 5 வீதமானவை அல்கஹோல் காரணமாக ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
மேலும், ஆண்டுக்கு 4.5 வீதமான இறப்புக்கள் ஏற்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தவிர அல்கஹோல் காரணமாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய வகை மார்பகப் புற்றுநோயுடன் அல்கஹோல் பாவனை தொடர்புபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பணக்காரர்களுக்கு இந்த அபாயம் அதிகம் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வளந்து வரும் நாடுகளில் மெதுவான அதிகரிப்பு தென்படுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருந்த ஆய்வொன்றில், குறிப்பாக பணக்கார நாடுகளில் 700,000 க்கும் அதிகமான புதிய வகை புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன், அந்த ஆண்டில் 366,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்தமை கண்டறியப்பட்டது.

விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் கறுப்பினப் பெண்!!

உலக வரலாற்றில் முதன்முறையாக, கறுப்பினப் பெண் ஒருவரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப நாஸா திட்டமிட்டுள்ளது.

நாஸாவின் விண்வெளி வீரர்களுக்கான பாடத் திட்டத்தின் 20வது வகுப்பில், கடந்த 2009ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டவர் ஜெனட் எப்ஸ். இவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் தொழில்நுட்ப வல்லுனராகப் பணிபுரிந்தவர்.

இவர் அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு, பிரபல விண்வெளி ஆய்வாளரான அன்ட்ரூ ஃபியுஸ்டல்லின் உதவியாளராகச் செல்லவுள்ளார்.

“சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் புதிதாக ஏதோவொரு விடயத்தைக் கண்டுபிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் ஜெனட்டும் நிச்சயமாக புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரி ஆவார்” என்று நாஸா அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை காலமும் அமெரிக்க-ஆப்பிரிக்கர்கள் சிலர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற போதிலும், விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றப் போகும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஜெனட் பெறவிருக்கிறார்.

ரஷ்ய எல்லையில் அமெரிக்க ராணுவம் : மீண்டுமொரு பனிப்போருக்கான அறிகுறியா?

 
பெல்டிக் நாடுகளின் எல்லையில் அண்மைக்காலமாக நேட்டோவை சேர்ந்த அதிகளவிலான அமெரிக்க தரப்பு விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும், பதிலுக்கு ரஷ்யா தனது படைகளை குறித்த பிராந்தியத்தில் குவித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

லிதுனியா மற்றும் எஸ்டோனிய உள்ளிட்ட பால்டிக் கூட்டனி நாடுகளிற்கு அவற்றின் அந்நிய நாடுகளிலிருந்து பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நேட்டோ அமைப்பு கூறிவந்தது. இந்நிலையில் அந்நாடுகளின் கிழக்கு எல்லையான ரஷ்ய எல்லைப் பகுதியில் நேட்டோவைச் சேர்ந்த அதிகளவிலான அமெரிக்க விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா ஊடுறுவியதாக குற்றங்கள் சுமத்தப்பட்ட நிலையில்தற்போது அதிரடிப்படைகளை ரஷ்ய எல்லைப்பகுதியில் குவித்துள்ளமை ஐரோப்பிய பிராந்தியத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நேட்டோ படைகளுக்கான கட்டுபாடுகளை அதிகரிக்க போவதாகவும் ரஷ்ய பெல்டிக் நாடுகளுக்கான உறவை பலப்படுத்துவதற்கு செயற்படவுள்ளதாகவும் கூறிவந்தார்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கிணங்க பெல்டிக் பிராந்தியத்தில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

2014 ஆம் தொடரப்பட்ட உக்ரைனின் கிரிமியா வகையான தாக்குதல் திட்டத்திலிருந்து தம்மை பாதுகாக்கவே அமெரிக்கப்படைகள் தமது நாட்டில் நிலைகொண்டுள்ளதாக லித்துவேனிய ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்iகியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பெல்டிக் நாடுகளுடன் ரஷ்யாவின் உறவை வலுப்பெறச் செய்வதாக கூறிவந்த நிலையில் தற்போது நேட்டோவின் அமெரிக்க அதிரடிபடையை பால்டிக் நாடுகளின் எல்லைப்பகுதியில் குவித்துள்ளமை மற்றும் ரஷ்யாவின் பதில் படைகுவிப்புகள் என்பவை மீண்டுமொரு பனிப்போரை உருவாக்குமோ எனும் அச்சத்தை ஐரோப்பிய பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

105 வயது திமிங்கிலம் மரணமா?

வடமேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுமார் 105 வயது திமிங்கலம் வாழ்ந்து வந்தது. இதை கிரான்னி என பெயரிட்டு கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள் அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தத் திமிங்கலம் யார் பார்வைக்கும் படாமல் இருந்துள்ளது. இதனால் ஆய்வாளர்கள் கவலையடைந்து அதை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஒரு வேளை அந்த திமிங்கலம் இறந்து போயிருக்கக் கூடுமோ எனவும் அச்சமடைந்துள்ளனர். காணாமல் போன திமிங்கலத்தை கடைசியாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவதானித்துள்ளனர்.

அந்த திமிங்கலம் மிகவும் கொடூரமானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் சிறந்த ஆண் மொடலுக்கான விருது இலங்கையருக்கு!!

2017ஆம் ஆண்டுக்கான ஏஷியா ஃபெஷன் விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஆண், பெண் மொடல்கள் உட்பட மூன்று பேர் விருது பெற்றுள்ளனர்.

சீனாவின் ச்சொங்கிங்கில் கடந்த 27ம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் அனைத்து கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை, இந்தியா, நேபாள் ஆகிய தெற்காசிய நாடுகளும் கலந்துகொண்டன.

இலங்கை சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் உட்பட, மேற்படி நாடுகளின் நவநாகரீக ஆடை, அணிகலன் உற்பத்தித் துறையின் பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட இலங்கை ஆண் மொடலான டிமரோன் கார்வலோ, பெண் மொடல் ஜெயமாலி எரங்கிக்கா விஜேசூரிய மற்றும் ஃபெஷன் பாடகியான நதிலி சமரசிங்க ஆகியோர், மேற்படி நிகழ்வில் சிறப்பாகப் பங்களித்தனர்.

இறுதி நிகழ்வின்போது, ஆசியாவுக்கான சிறந்த ஆண் மொடலாக இலங்கையின் டிமரோன் கார்வலோ தெரிவுசெய்யப்பட்டார். இது, இலங்கையின் ஃபெஷன் துறையின் முக்கியமான ஒரு அடையாளமாகக் கருதப்படக்கூடியது.

டிமரோன் உட்பட ஜெயமாலி, நதிலி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் லூ ச்சிங் வோங் ஆகியோர் ஆசியாவின் சிறந்த கலைஞர்கள் என்ற விருதுக்காக முன்மொழியப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜெய், அஞ்சலிக்கு கோலிவுட்டில் அடுத்த திருமணம்!!

கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி ஜெய் மற்றும் அஞ்சலி என்பது பலருக்கும் தெரியும். 3 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யபோவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தனது சித்தியின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹைதராபாத் சென்று தனியே வசித்து வந்த அஞ்சலி சில மாதங்களுக்கு முன் ஒன்று சேர்ந்தார்.

தற்போது தமிழில் மட்டும் ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் இவர் ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் சிறு ரோலில் நடித்துள்ளார்.
இன்னிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவுசெய்துள்ளார்களாம்.

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர்!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோ­த­ரியை நபரொருவர் இரண்­டா­வது திரு­மணம் செய்த சம்­ப­வ­மொன்று பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்­ளது.


இரண்டாவது மனைவியுடன் வசீர் அஹ­மது

பாகிஸ்­தானில் ஜம்பூர் எனும் ஊரில் வசிப்­பவர் வசீர் அஹ­மது(36). இவர் தன்­னு­டைய 13 வயது மக­ளை, தனது வீட்­டிற்கு அருகில் வசிக்கும் முஹ­மது ரம்­ஜா­ன் (36) என்­ப­வ­ருக்கு திரு­மணம் செய்து கொடுத்­துள்ளார்.


ஏதோ பண்­ட­மாற்றம் போல் அவர்கள் இரு­வரும், தங்கள் வீட்டு பெண்­களை மாற்றிக் கொண்ட விவ­காரம் பல­ரையும் அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது. இதில் முஹ­மது ரம்­ஜா­னுக்கு காது கேட்­காது மற்றும் வாய் பேச முடி­யாது. ஆனாலும், அவ­ருக்கு தன்­னு­டைய மகளை கொடுத்­துள்ளார் வசீம்.


இந்த விவ­காரம் பொலி­ஸா­ருக்கு தெரிய வரவே வசீர் மற்றும் ரம்­ஜானை அழைத்து சென்று விசா­ரணை செய்­த­தோடு, 16 வய­திற்­குட்­பட்ட பெண்ணை திரு­மணம் செய்­த­தற்­காக இரு­வ­ரையும் சிறையில் அடைத்­துள்­ளனர்.

ஆனால், அந்த பெண் தனக்கு 16 வயது ஆகி­விட்­டது என நீதி­மன்­றத்தில் நிரூ­பித்­த­தை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் விடு­தலை செய்­யப்­பட்­டனர். எங்கள் வீட்டுப் பெண்களை மாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

முதல், இரண்டாவது மனைவிமார் மற்றும் பிள்ளைகளுடன் வசீர் அஹ­மது

வவுனியா ஓமந்தை ஆலய திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!!

 
வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் கடந்த வருடம் (12.12.2016) அன்று இரவு திருடர்களால் உடைக்கப்பட்டு ஆலய மூலஸ்தானத்திலிருந்த வேல் உட்பட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

குறித்த ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு இச்சம்பவத்துடன் தொடர்புள்ள இரு சந்தேக நபர்களை இன்று (05.01.2017) கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஒமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் 153 பேருக்கு மரண தண்டனை!!

சவுதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே இவர்களுக்கு இந்த கொடூர தண்டணையை சவூதி அரசு கொடுத்துள்ளது. இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.