சவுதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே இவர்களுக்கு இந்த கொடூர தண்டணையை சவூதி அரசு கொடுத்துள்ளது. இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா சாந்தசோலையில் வசித்து வரும் பெண் அரச ஊழியர் ஒருவருக்கு இன்று பதிவுத்தபாலில் வந்த சாரதி அனுமதிப்பத்திரம் கவர் திறந்த நிலையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் அரச ஊழியர் ஒருவருக்கு போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் திறந்த நிலையில் அரச ஊழியரின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் உறவினரிடம் தபால் ஊழியரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அரச ஊழியர் இன்று அலுவலகத்திற்குச் சென்ற காரணத்தினால் தபாலை ஊழியர் அருகிலுள்ள உறவினர் வீட்டில் ஒப்படைத்துள்ளார்.
தபால் ஊழியரிடத்தில் திறந்த நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளது என்று வினவிய போது முகவரி தெரியவில்லை, பல இடங்களில் விசாரித்த போதும் முகவரியை தெரிந்து கொள்ள முடியவில்லை.
எனவே சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ள புகைப்படத்தினைப் பார்த்து குறித்த நபரை இனங்கண்டு கொண்டுள்ளதாக தபால் ஊழியர் பதில் அளித்துள்ளதாக சாரதி அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொண்ட உறவினர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு பல தபால்கள் முதலில் அனுப்பி வைக்கப்பட்டு அவை கிடைத்துள்ளதாக பெண் அரச ஊழியர் தெரிவித்துள்ளார்.
மேலும், முகவரி தெரியாவிட்டால் பதிவுத்தபாலினை திருப்பி அனுப்பிவைக்கவும் என்று தபாலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் உடாவில் இரட்டையர்களான பாவ்டியும் ப்ராக் ஷாஃபும் தங்கள் அறையில் விளையாடிக்கொண்டிருந்த போது அலுமாரிக்கடியில் சிக்கிய தம்பியை காப்பாற்ற துடித்த இரண்டு வயது அண்ணன் பாவ்டி ஷாஃப், அலுமாரியை சுற்றிவந்து பார்த்து சில நொடி நிதானமாக யோசித்து இறுதியில் அதைத் தூக்கி தம்பியை காப்பாற்றினார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அவர்களின் அறையில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கெமராவில் பதிவாகின.
இருவருமே காயங்களின்றி தப்பினாலும் இந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துபோனதாக இவர்களின் தாய் தெரிவித்தார்.
இந்த காட்சிகளை வெளியிட பெரிதும் தயங்கினாலும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படும் என்பதனால் தயக்கத்துடனே இதை வெளியிடுவதாக இந்த இரட்டையரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த அலுமாரியை ஆணிகள் மூலம் சுவரோடு இணைத்து விழாமல் செய்திருப்பதாகவும் மற்ற பெற்றோரையும் அப்படி செய்யும்படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 105 வயது முதியவர், 1 மணி நேரத்தில் 22.5 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
ராபர்ட் மர்ச்சான்ட் எனும் குறித்த முதியவர் தனது 40 ஆவது வயது முதலே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். அன்றிலிருந்து சைக்கிளோட்டத்தில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார்.
இவர் தனது 102 ஆவது வயதில் 1 மணி நேரத்தில் 26.9 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளோட்டிக் கடந்தார்.
100 ஆவது வயதில் 4 மணி 27 நிமிடத்தில் 100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். இதற்காக 6 மாதங்கள் பிரத்தியேக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து சாதனைகள் படைத்து, சாதனைக்கு வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்து வருகிறார்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (05.01.2017) காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பாலசூரிய கருணரட்ன என்ற 52வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இன்று காலை 9 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார். சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அப்பிள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாய் இருக்கிறதோ அவ்வளவு நன்மைகளையும் தருகிறது. தினமும் அப்பிள் சாப்பிட்டால் போதும் எந்த நோய்களும் உங்களிய நெருங்காது என்பது 100 சதவீதம் உண்மை. அதிலுள்ள விட்டமின் , மினரல்கள் மற்றும் ஆன்டி அக்ஸிடென்டுகள் உடலுக்கு மிகவும் நன்மைகள் அளிக்கக் கூடியவை.
அப்பிளின் தோலில் இருக்கும் சத்துக்கள் உடலில் அனைத்துவிதமான நோய் எதிர்ப்பு செல்களையும் தூண்டுகின்றன. அதுவும் க்ரீன் அப்பிளில் உள்ள சத்துக்கள் சிவப்பு அப்பிளை விட அதிகம் என கூறுகின்றனர்.
மலச்சிக்கலை குணப்படுத்தும்
க்ரீன் அப்பிளின் தோல் மற்றும் சதைப்பகுதிகளில் அதிக அளவு நார்சத்துக்கள் உள்ளன. இவை குடலின் இயக்கத்தை நெகிழ்வுபடுத்துகின்றன. தினமும் அப்பிளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை ஏற்படாது.
எலும்புகளுக்கு பலம்
க்ரீன் அப்பிளில் அனைத்து முக்கியமான மினரல்களும் உள்ளன. கல்சியம் , பொஸ்பரஸ், காப்பர், மெக்னீசிய, போன்ற சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவைகளாகும். இது தைராய்டு ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
குடல் புற்று நோயை தடுக்கும்
க்ரீன் அப்பிள் குடலிலுள்ள பாதிப்புகளை சரிசெய்கிறது. அதிலுள்ள சக்திவாய்ந்த அன்டி அக்ஸிடென்ட் குடலில் தங்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்களை அகற்றி குடல் இயக்கத்தை பலப்படுத்துகிறது. முக்கியமாக குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை தூண்டும்:
உடலின் மிக முக்கிய செயல்பாடான வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறதி. ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.
கெட்ட கொழுப்பை குறைக்கிறது
இதய தமனிகளில் அடைக்கும் கொழுப்புகளான LDL – என்ற கெட்ட கொழுப்பை குறைக்கச் செய்கிறது. நல்ல கொழுப்பான HDL – ஐ அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்தும்.
அல்சைமர் நோயை தடுக்கும்
மனம் பிறழ்ந்து அல்லது ஞாபக சக்தியை முழுக்க மழுங்கடிக்கும் அல்சைமர் நோயை வயதான பின் வர விடாமல் தடுக்கும் பண்புகளைக் கொண்டது இந்த க்ரீன் அப்பிள்.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கல்லீரல்
நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. அதனை முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இதனால் கிருமிகள் தாக்குவது குறையும். ஆரோக்கியமாக திகழ்வீர்கள். அதுபோல் கல்லீரலை பலப்படுத்துகிறது, அன்றாடம் தங்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றிலுள்ள என்சைம்களை நன்றாக தூண்டுகிறது.
ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப் பூமியிலிருந்து அழிந்துபோன பசு இனம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
Auroch எனும் இப் பசு இனமானது ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் காணப்பட்டது. இறுதியாக போலந்து நாட்டில் உள்ள Jaktorow வனப்பகுதியில் காணப்பட்ட போதிலும் 1627ம் ஆண்டில் முற்றாக அழிவடைந்துள்ளது.
இப் பசுக்கள் 7 அடி உயரம் வரையில் வளரக்கூடியதாகவும், 1,000 கிலோ கிராம்கள் எடை கொண்டதாகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இனப் பசுக்களின் DNA ஐ ஆதாரமாகக் கொண்டு கடந்த 2009ம் ஆண்டு முதல் அதே இனப் பசுக்களை தோற்றுவிக்கும் முயற்சியை ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு ஒன்று முன்னெடுத்து வந்துள்ளது.
இக் குழுவானது தற்போது குறித்த முயற்சியில் வெற்றியின் விழிம்பை எட்டியுள்ளதாகவும், விரைவில் இப் பசுக்கள் உருவாக்கப்பட்டுவிடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ்கெய்ல் தன் மனைவியுடன் எல்லை மீறி போட்ட ஆட்டம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் தன் அதிரடி ஆட்ட்டதால் திரும்பி பார்க்க வைத்தவர் கெய்ல். இவர் அவ்வப்போது தான் செய்யும் குறும்பு நிலைகளை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வருவார்.
சமீபத்தில் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக கெய்ல் St. Kitts பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தான் செய்திருந்த வித்தியாசமான மேக் அப் முறைகளை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து அது தொடர்பான நிகழ்ச்சியின் போது தன் மனைவி Natasha Kerridge உடன் ஆட்டம் போட்டுக் கொண்டே சென்றார்.
அதில் அவர் செய்தது கொஞ்சமல்ல, இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளதால், சமூகவலைத்தளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மலேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து 23 ஆயிரம் மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், டெரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையால் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரெயில் போக்குவரத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் கனமழை பெய்து வருவதால் 30க்கும் மேற்பட்ட கிராமத்திற்கான சாலைகள் முடங்கி உள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 139 நிவாரண முகாம்கள் மூலம் உணவு, நீர் மற்றும் மருத்துவ உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மழை வெள்ளத்தால் உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பிரேசில் கடற்கரை ஒன்றில் மாலை நேரம் காற்று வாங்க சென்ற இளம்பெண் ஒருவர் பின்னல் தாக்கி படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் சாவோ பாலோ மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கடற்கரை ஒன்றில் குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தின் போது மாலை வேளையில் குறித்த இளம்பெண் கடற்கரை ஓரம் காலார நடக்க வேண்டும் என எண்ணி சென்றுள்ளார்.
வானிலை மிக மோசமாக இருந்துள்ள நிலையில் அடிக்கடி மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதுமாக இருந்துள்ளது.
இருப்பினும் குறித்த இளம்பெண் கடற்கரையில் நடந்து நின்றுள்ளார். அவர் நின்றிருந்த பகுதியின் அருகாமையில் வேறு சிலரும் கடற்கரை காற்றை ரசித்தபடி நின்றிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென்று முளைத்த மின்னல் ஒன்று 25 வயதேயான அந்த இளம்பெண் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதனால் சுருண்டு விழுந்த அந்த பெண்ணுக்கு உடலெங்கும் பல இடங்களில் கருகியுள்ளது.
மட்டுமின்றி மின்னல் தாக்கிய அந்த நொடியிலேயே அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக சுற்றும் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மின்னல் நேரடியாக ஒருவர் மீது தாக்குவது அரிதிலும் அரிது. ஆனால் எதிர்மறையாக தாக்கும் வாய்ப்புகள் அதிகம். மின்னல் தாக்கும் போது பொதுவெளியில் தனியாக நின்றால், மரங்களின் அருகாமையில் நின்றால் என குறிப்பிட்ட காரணிகளால் மட்டுமே மின்னல் தாக்கி பாதிப்பு ஏற்படும் எனறு அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்கள் மீது பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவித்து 250 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்திருக்கிறது. மேலும் 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்தும் பணப்பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில், டிசம்பர் 31ம் திகதி நாடு முழுவதும் இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் நடத்தின.
சென்னையில் இடதுசாரி அமைப்புகளில் ஒன்றான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். சென்னை மேடவாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும், இன்ஸ்பெக்டர் ரவி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் உடல்களை வேண்டுமென்றே தொட்டு ஈனப் பிறவியாக செயல்பட்டிருக்கிறார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அடக்குமுறை குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.
2008ஆம் ஆண்டுடன் இலங்கையை விட்டு அகதியாக கனடாவிற்கு சென்று அங்கேயே இல்லற வாழ்வில் இணைந்துவிட்ட பெண் ஒருவர் தற்போது கனேடிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இவரின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று இங்கைக்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் எனவும் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர் எனவும் தெரியவந்துள்ளது.
இத்தம்பதியினருக்கு என இரு குழந்தைகள். குழந்தைகளையும் கணவரையும் விட்டு குறித்த பெண் நாடுகடத்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குழந்தைகளுக்கும், பெண்ணின் கணவருக்கும் கனேடிய குடியுரிமை உள்ளது. கனடாவில் பல தசாப்தங்களுக்கும் மேல் வாழ்ந்து வரும் தமிழ் சமூக மக்களிடையே இது போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இன்னமும், இல்லாமல் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ பொதுவான அமைப்புகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் இருக்கின்ற போது முன் கூட்டியே இது தொடர்பான ஆலோசனைகளை யாரிடமும் கேட்காமல் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் அவதிக்கு உள்ளாகியுள்ளது.
அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்பப்படுவதென்பது கனடாவில் அரிதான கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமே.
இருப்பினும் சம்பந்தப்பட்ட இந்தத் தம்பதியினர் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கும், பொது அமைப்புக்களுக்கும், தமிழ் அகதி மக்களின் விடயத்தில் உதவி புரியத் தயாராக இருக்கும் சட்டத்தரணிகளுக்கும் முன்னரே தெரியப்படுத்தியிருந்தால்.,
நிச்சயமாக விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும், பிரதமர் அலுவலகத்துடனும் பேச ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து இலங்கை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இதுவரையில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் படுகொலை வழக்கின் குற்றவாளியான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் துணைப் பொலிஸ் பரிசோதகரான பீ.ஏ. லக்மின இந்திக்க பமுனுசிங்க என்பவரே இவ்வாறு பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவர் பல்கலைகழககத்தின் முதலாம் ஆண்டு கல்வியை பூர்த்தி செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
பட்டக் கற்கைநெறியின் எஞ்சிய ஆண்டுகளுக்கான விரிவுரைகளில் பங்கேற்க அனுமதியளிக்குமாறு லக்மின இந்திக்க சிறைச்சாலை அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னரும் சுய முயற்சியில் இவ்வாறு பட்டக் கற்கைநெறி ஒன்றை பூர்த்தி செய்தiமை ஏனைய கைதிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது என வெலிக்கடைச் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரபல வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எவரும் இவ்வாறு இதற்கு முன்னர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்றுக்கொண்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் லக்மின என்ற பட்டம் பெற்றுக் கொண்ட மரண தண்டனைக் கைதி பங்கேற்பார் என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
போருக்கு முன்னரான காலத்தில் வடக்கில் வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் வலுவான நிலையில் காணப்பட்டதால் சிறந்த சுகாதார சேவையை வழங்கக்கூடியதாக இருந்ததெனவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தற்போது அவ்வாறான ஒரு நிலை இல்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை நேற்று முன்தினம் (03.01.2017) திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கிலுள்ள சுகாதார தேவையானது ஏனைய பிரதேசங்களை விட அதிகமானதெனக் குறிப்பிட்ட அவர் அவற்றை நிவர்த்திப்பதற்கு ஆளணி பற்றாக்குறை பெரும் தடையாக உள்ளதென்றும் நிதியொதுக்கீடும் போதுமானதாக இல்லையென்றும் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் அங்கவீனமடைந்த மற்றும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வடக்கில் வாழ்கின்றனர் என சுட்டிக்காட்டிய அமைச்சர் இவர்களின் நலன் கருதி பல புதிய சுகாதார திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.