போருக்கு முன்னரான காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறந்த சுகாதார சேவை தற்போது இல்லை : ப.சத்தியலிங்கம்!!

 
போருக்கு முன்னரான காலத்தில் வடக்கில் வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் வலுவான நிலையில் காணப்பட்டதால் சிறந்த சுகாதார சேவையை வழங்கக்கூடியதாக இருந்ததெனவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தற்போது அவ்வாறான ஒரு நிலை இல்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை நேற்று முன்தினம் (03.01.2017) திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கிலுள்ள சுகாதார தேவையானது ஏனைய பிரதேசங்களை விட அதிகமானதெனக் குறிப்பிட்ட அவர் அவற்றை நிவர்த்திப்பதற்கு ஆளணி பற்றாக்குறை பெரும் தடையாக உள்ளதென்றும் நிதியொதுக்கீடும் போதுமானதாக இல்லையென்றும் குறிப்பிட்டார்.

யுத்தத்தால் அங்கவீனமடைந்த மற்றும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வடக்கில் வாழ்கின்றனர் என சுட்டிக்காட்டிய அமைச்சர் இவர்களின் நலன் கருதி பல புதிய சுகாதார திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வசதியற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!!

 
வவுனியா நந்துமித்தகம பகுதியிலுள்ள வசதியற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இப்பகுதியில் கடந்த யுத்தகாலத்தில் இடம்பெற்ற இடப்பெயர்வின் பின்னர் திரும்பவும் வந்து மீள் குடியேறிய பொதுமக்களில் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தலைமையில் 10 குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் நல்லின மாடுகள் வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான நிதியுதவியினை நுகேகொட ஸ்ரீ தம்மாராம விகாராதிபதி யூ.கே.போகம்பேவினால் வழங்கிவைக்கப்பட்டது.

நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக நாளை(06.01.2017) முதல் கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது.

காலை 8 மணித்தொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் 5 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்கு 5 மில்லியன் டொலர் செலவாகுவதாக அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

அத்தோடு நெதர்லாந்து அரசின் கண்காணிப்பின் கீழ் சீன நிறுவனம் ஒன்று இதன் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க கூறியுள்ளார்.

இந்த புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற விமான ஓடுப்பாதை 3,335 நீளமும் 45 மீற்றர் அகலமும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை தொடக்கம் 4 மாதங்களுக்கு இவ்வாறு விமான நிலையம் 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலங்களாக மாற்ற பேச்சுவார்த்தை!!

தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலமாக மாற்றியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய தொழிலாளர் பேரவையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க குறிப்பிட்டார்.

எனினும் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் கூறினார்.

பிரசவத்தின்போது நேரடி வர்ணனைகள் சகிதம் பேஸ்புக் மூலம் வீடியோ வெளியிட்ட பெண்!!

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தான் குழந்தை பிர­ச­விப்­பது தொடர்­பாக நேரடி வர்ணனைகளுடன் பேஸ்புக் மூலம் வீடியோ வெளி­யிட்­டுள்ளார்.

சாரா ஜேன் ஜங்ஸ்ட்ரோம் எனும் இப் பெண் கடந்த மாதம் குழந்­தை­யொன்றை பிர­ச­வித்தார். தனது வயிற்­றி­லுள்ள பனிக்­குடம் உடைய ஆரம்­பித்­த­வுடன் இவர், பேஸ்புக் வீடியோ மூலம் வர்ணனை செய்து வீடியோவை ஆரம்­பித்தார்.

24 மணித்­தி­யா­லங்­களில் 5 வீடி­யோக்­களை சாரா ஜேன் வெளி­யிட்டார். இவற்றில் நேரடி வீடி­யோக்­களும் அடங்கும். இவ்­ வீ­டி­யோக்­களை 206,000 பேர் நேர­டி­யாக பார்­வை­யிட்­டுள்­ளனர்.

தனது பிர­ச­வ­வலி குறித்து தெரி­வித்த சாரா ஜேன், “பிறப்புக் குழாய் வழி­யாக குழந்தை வந்­து­கொண்­டி­ருக்­கி­றது” என்­பது போன்ற விப­ரங்­க­ளையும் தெரி­வித்தார்.

அப்­போது தனது கணவர் மற்றும் மகன் ஆகியோர் வீட்டில் என்ன செய்­து­ கொண்­டி­ருக்­கின்­றனர் என்­ப­தை யும் சாரா ஜேன் கூறினார்.

35 வய­தான சாரா ஜேன், விளம்­பர முகவர் நிறு­வ­ன­மொன்றின் பணிப்­பாளர் ஆவார். தனது 3 ஆவது குழந்தை பிறந்­த­போதே இவர் மேற்­படி வீடி­யோக்­களை வெளி­யிட்­டுள்ளார்.

பிர­சவம் தொடர்­பாக ஏனைய கர்ப்­பி­ணிகள் தெரிந்­து­கொள்­வ­தற்கு உதவும் நோக்குடனேயே தனது பிரசவத்தின்போது வீடியோ வெளியிட தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார்.

நடுவீதியில் பெண்ணுக்கு நடந்த கொடுமை : அதிர்ச்சிக் காணொளி!!

இரவு நேரத்தில் தனியாக வரும் பெண்ணிடம் பாலியல் ரீதியான அத்துமீறல்களில் ஈடுபட்ட இருவரை காட்டும் காணொளி வெளியாகி இந்தியாவில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் நவநாகரிக நகரமாக கூறப்படும் பெங்களூர் நகரின் கிழக்கு பகுதியான கம்மனஹள்ளி என்ற குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி, அருகில் உள்ள தனது வீட்டிற்கு தன்னந்தனியாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவன் அந்தப் பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்த முயல்கிறான்.

சுற்றிலும் வீடுகள் நிறைந்துள்ள அந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களின் வாயிலாக வைரலாக பரவி வருகிறது.

சில வருடங்களுக்கு முன் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, இந்திய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தியதாக கூறி வரும் நிலையில் மேற்கண்ட சம்பவம் இடம் பெற்றிருப்பது சர்வதேச ரீதியில் பாரிய விமர்சனத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் பஸ் கொத்மலையில் விபத்து 18 பேர் காயம்!!

நேபாளத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளின் பஸ் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் 18 பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

கொத்மலை மகாவெலிசாய விகாரையை தரிசித்துவிட்டு கம்பளை பக்கமாக செல்லும் போது கொத்மலை அணைக்கட்டு பிரதேசத்தில் பஸ் வீதியை விட்டு விழகி வீதி ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பஸ்ஸில் சுற்றுலா பயணிகள் 23 பேரும் சாரதி ஒருவரும் பஸ் நடத்துனர் ஒருவருமாக 25 பேர் இருந்துள்ளனர். காயமடைந்த 18 பேரில் 5 நேபால பிக்குமார்களும் ஒரு வியட்நாம் பிக்கும் 09 பெண்களும் 03 ஆண்களும் அடங்குகின்றனர்.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அணி தலைவர் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தலைவர் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

டோனி அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பிலும் குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிக்கான தேர்வில் டோனி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டோனி அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதை தொடர்ந்து விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளுக்கும் அணி தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா கற்குழியில் மீண்டும் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!!

வவுனியா கற்குழி பகுதியில் நேற்று (04.01.2017) இரவு 09.50 மணியளவில் வாள் வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் புரிந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

புதுவருட தினத்தன்று வவுனியா, கற்குழி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.

இவ் வாள் வெட்டுச்சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சையின் பின்னர் நேற்று (04.01.2017) மாலை வீடு திரும்பியதையறிந்த சிலர் இரவு 9.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்து சிகிச்சையின் பின் வீடு திரும்பியவரை தாக்க முயன்றுள்ளனர்.

குறித்த வீட்டார் குக்கூரலிட்டு சத்தமிட்டமையினால் முச்சக்கரவண்டியில் வந்த நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா றம்பைவெட்டி கிராமத்தில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

 
வவுனியா றம்பைவெட்டி கிராமத்தில் வீட்மைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(04.01.2017) காலை இடம்பெற்றது.

வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் ஓர் கட்டமாக வவுனியா மாவட்டத்தில் றம்பைவெட்டி கிராமத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

ஒவ்வென்றும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படவுள்ள இவ் வீடுகள் எதிர்வரும் யூன் மாதத்திற்குள் பூரணப்படுத்தப்படவுள்ளதாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீளக்குடியேறிய மற்றும் புதிதாக குறியேறியுள்ள மக்களின் வீட்டுத்தேவையை கருத்தில் கொண்டு அமைக்கப்படும் இவ் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வீட்மைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் தயானந்த, தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் திருமதி வி.குரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் உறவினர் எனத் தெரிவித்து யுவதியுடன் பாலியல் துஷ்பிரயோகம் : மூன்று பிள்ளைகளின் தந்தை கைது!!

வவுனியா ஆசிகுளம் பகுதியில் (01.01.2017) அன்று 18 வயதுடைய யுவதியை பாலியல் துஷ்பியோகம் செய்த வெளிநாட்டுப் பிரஜையான 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கடந்த 9ம் மாதத்திலிருந்து குறித்த யுவதியின் தாயுடன் உறவினர் என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருந்துள்ளார்.

அதன் பின்னர் ஆசிகுளம் பகுதியில் கடந்த 28.12.2016 அன்று வீடு ஒன்று வாடைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டு அப்பகுதியில் வசித்துவந்த நிலையில் குறித்த யுவதி அம்மம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.

எனினும் தாய் சென்று தன்னுடன் புதுவீட்டில் வந்து வசிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து 01.12.2017 அன்று குறித்த யுவதி தாயுடன் ஆசிகுளத்தில் வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட வீட்டில் வசிப்பதற்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பஸ்தருடன் உறவினர் என்ற அறிமுகத்துடன் கடந்த 9ம் மாதத்திலிருந்து யுவதியும் நெருங்கிப்பழகி வந்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று இரவு 7மணியளவில் குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அங்கு சென்ற பொலிசார் குறித்த வெளிநாட்டு குடும்பஸ்தர், யுவதியின் தாயார் என இருவரையும் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் தாயின் உடல் நிலையினைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுவித்துள்ளதாகவும் குறித்த இளைஞரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வரலாற்றில் முதன் முறையாக ஊர் அறிய திருமணம் செய்த திருநங்கை!!

இந்தியாவில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் ஊர் அறிய திருமணம் செய்த சம்பவம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த Madhuri Sarode என்ற திருநங்கை, ஜே குமார் சர்மா என்ற ஆண்ணை மணந்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பேஸ்புக்கில் பழகி வந்த இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் 28ம் திகதி உள்ளுர் கோவிலில் இருவரின் திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில், சர்மாவின் சகோதரி மற்றும் மைத்துனன் கலந்துக்கொண்டுள்ளனர். ஆனால், சர்மாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு வரவில்லை.

இந்தியாவில் திருநங்கைகள் திருமணத்தை பதிவு செய்து ஏற்கும் வகையில் இதுவரை சட்டம் ஏதும் இயற்றப்படாத நிலையில், இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என Madhuri Sarode தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ஜோடிகளை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

அதிக எடையே ஆரோக்கியமானது!!


டென்மார்க்கில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து, அதிக எடை BMI சுட்டிகொண்டவர்கள், குறைவான எடையுள்ளவர்களிலும் ஆரோக்கியமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.இதற்கென 100,000 பேர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதிலிருந்து முன்னைய ஊகங்கள் அதாவது ஆரோக்கியமான BMI சுட்டி, நீண்ட கால வாழ்க்கைக்கு சமம் என்ற கருத்துக்கள் மேல் கேள்விக்குறி எழத்தான் செய்கிறது.ஆனாலும் இதுதான் முதல் தடவையல்ல, இதற்கு முன்னரும் பல ஆய்வுகள் உடல் எடை சிறிது அதிகரிப்பதால் ஆரோக்கியத்திற்கு எவ்வித பங்கமும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றன.

இவ் ஆய்வு டென்மார்க்கிலுள்ள வைத்தியப் பல்கலைக்கழகம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.கிட்டத்தட்ட 100,000 இற்கும் மேலானவர்களின் மருத்துவ தகவல்கள், 15 வருடத்தினர் ஒரு குழுவாக மொத்தம் மூன்று குழுக்களாக ஆராயப்பட்டது.நாற்பது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வின்படி, 1976 – 2013 காலப்பகுதிகளில் BMI சுட்டி குறைவானவர்களில் இறப்பு வீதம் அதிகரித்துள்ளமை இனங்கானப்பட்டது.

BMI சுட்டி18.5 – 24.9 க்குட்பட்டவர்கள்சராசரி அல்லது ஆரோக்கியமானவர்களாகவும், BMI சுட்டி 25 – 29.9 வரையானவர்கள் அதிக எடையுடையவர்களாகவும், BMI சுட்டி 30 அல்லதுஅதற்கு மேலானவர்கள் அதிக பருமன் உடையவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

அதேநேரம் இக்காலப்பகுதியில், அதிக பருமன் உடையவர்களிலும் அதாவது BMI சுட்டி 30 ற்கு அதிகமானவர்களிலும் இறப்பு வீதம் அதிகரித்தமை இனங்கானப்பட்டது.இவ் ஆய்வின் போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் நோய் நிலைமைகள், வயது, பால், பொருளாதார நிலைமைகள் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது.

செல்வம் கொழிக்க வைக்கும் மூன்று வழிகள்!!


பொருள் இல்லாதவனை சுற்றம், குடும்பம் என யாரும் வேண்டார் என்பது பாரதி பாடல்.அதற்கமைய செல்வம் ஒரு திறமை என்றால் அதை தக்க வைப்பதும் ஒரு திறமை தான். ஆனால் அதற்கு பலருக்கு வழிவகைகள் தெரியாது.பொதுவாகவே செல்வம் மூன்று வகைகளைக் கொண்டது என கூறப்படுகின்றது. லட்சுமி செல்வம், குபேர செல்வம், இந்திர செல்வம் என அவை அழைக்கப்படும்.

லட்சுமி செல்வம்

பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள் என்பது ஐதீகம்.

இந்த மகாலட்சுமி தான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கியதும்,. கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்ததும் லட்சுமி தான்.

ஏழு தலைமுறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும்.

இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல இருந்தாலும், இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும் என்பது ஐதீகம்.

குபேர செல்வம்

குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, குபேரன் தன் செல்வத்தை இழந்தான். மன அமைதி வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான்.

சிவபெருமான் அன்னை பார்வதி தேவியுடன் அவனுக்கு காட்சி அளித்தார். தேவியின் பேரழகில் மதி மயங்கி அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அகிலாண்ட நாயகியின் பேரொளியால் அவனது இடது கண் வெடித்து தெறித்தது. குபேரன் மனம் வருந்தி பார்வதி தேவியிடமும், சிவபெருமானிடமும் மன்னிப்பு கேட்டான். அறியாமல் செய்த பிழைக்காக சிவனும், பார்வதியும் குபேரனை மன்னித்தார்கள்.

மகாவிஷ்ணுவின் மனைவி யான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.

இதன்படி, குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.

இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.

இந்திர செல்வம்

போகி என்ற பண்டிகையை இந்திரனை முன் வைத்தே கொண்டாடுகிறோம். தேவர்களின் தலைவரும், கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரனுக்கு பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை அடையாளங்கள் ஆகும்.

இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது.

இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்.

பெண்ணுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் விளக்கமறியலில்!!

பதுளையில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றில் பெண்ணுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.மக்கள் நெரிசலுக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் திருமணமான பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டமையால் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்த பெண்ணின் கணவருடன் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அதன் பின்னர் குறித்த இளைஞர் தான் மருத்துவ மாணவர் என விவரித்துள்ள நிலையில், குறித்த பெண்ணின் கணவரையும் தாக்கியுள்ளார்.குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் ருவண்திக்கா மாரசிங்க உத்தரவிட்டுள்ள நிலையில், சந்தேக நபரான மருத்துவ மாணவர் ஹாலிஎல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பதுளை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக சார்ஜென்ட் ரத்நாயக்க சம்பவத்தை நீதிமன்றில் விளக்கியுள்ளார்.பதுளை மைதானத்தில் இடம்பெற்ற களியாட்டத்தில், மக்கள் நெரிசலுக்கு இடையில் சந்தேக நபர், பெண் ஒருவரின் பின் பகுதியை அழுத்தியுள்ளதாகவும், குறித்த பெண் இதனை தனது கணவரிடம் கூறியுள்ளார்.

கணவர் சந்தேகநபரிடம் விசாரிக்க சென்ற போது வாக்குவாதம் மோதலாக மாறியுள்ள நிலையில், சந்தேகநபர் கணவரை தாக்கியுள்ள நிலையில் அவர் தற்போது வரையில் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்”.. என பொலிஸ் சார்ஜென்ட் குறிப்பிட்டுள்ளார்.அதன் பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வட்ஸ் அப் மெசேஜால் காத்திருக்கும் பேராபத்து!!


வட்ஸ் அப்பில் வரும் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மெசேஜை திறந்த படிப்பதின் மூலம் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகள் இதுபோன்ற பிரபல மொபைல் அப்களின் மூலம் பேனில் வைரஸ்களை பரப்பி நமது தனிப்பட்ட தகவல்களை திருடிவருகின்றனர்.

சமீபத்தில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொலிஸ், இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை குறி வைத்து இது போன்ற மெசேஜ்கள் அனுப்படுகிறது.இந்த மெசேஜ்கள் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து வருவது போல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மெசேஜின் ஆவணத்தை திறப்பதின் மூலம், போனில் வைரஸ் எளிதாக நுழைந்து விடும். இது நடந்தால் நமது தனிப்பட்ட விவரங்கள், வங்கி விவரங்கள் எளிதாக திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.அன்ட்ரொயிட் போனிகளிலே இந்த பிரச்சனை அதிகமாக தோன்றுகிறது. தனிப்பட்ட விவரங்களை ஹேக் செய்யும் குற்றவாளிகள், இதன் மூலம் முக்கிய தகவல்கள் மற்றும் பணத்தை திருடுகின்றனர்.

இதுபோன்று வரும் சந்தேகத்திற்குரிய மெசேஜ்களை மக்கள் திறந்து பார்க்காமல் தவிர்க்குமாறு பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.மேலும், இதற்காக வட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ள புதிய பாதுகாப்பான வசதியை பயன்படுத்தி ஆவணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.