சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இவர் படங்கள் கடந்த வருடம் ரஜினி முருகன், ரெமோ இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் இப்படத்திற்காக கடந்த வருடத்தின் சிறந்த நடிகர் என்ற விருது இவருக்கு கிடைத்துள்ளது. இந்த விருது விழாவை Mgr Sivaji Academy நடத்தியது.இந்த விருதினை சிவகார்த்திகேயனுக்கு சிவகுமார், பாரதிராஜா ஆகியோர் வழங்கினார்கள்
கௌதம் மேனன், சூர்யா கூட்டணியில் வாரணம் ஆயிரம், காக்க காக்க ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக துருவ நட்ச்சத்திரம் என்ற படத்தில் இணைவதாக இருந்து பிரிந்தனர்.
இதற்கு சூர்யா ஓர் அறிக்கை கூட வெளியிட்டார், இதற்காக கௌதம் மேனன் கூட பல இடங்களில் வருத்தப்பட்டார், நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா ‘நான் அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்க கூடாது’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர், முதலில் இதில் சமந்தா நடிப்பதாக இருந்தது.ஒரு சில பிரச்சனைகளால் சமந்தா விலக, தற்போது அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் நெடுஞ்சாலை தன்னாமுனை என்ற இடத்தில் நேற்று (03) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தள்ளார்.தன்னாமுனை களப்பு வீதியைச் சேர்ந்த வடிவேல் அன்னலெட்சுமி (வயது 72) என்பரே இவ்வாறு உயிரிழந்தள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வழமையாக இரவு நேர உணவுக்காக இந்த மூதாட்டி கடையில் இடியப்பம் வாங்கச் செல்வதுண்டு.அதேபோன்று செவ்வாய்க்கிழமை இரவும் தனது வீட்டிலிருந்து கடைக்கு இடியப்பம் வாங்கச் செல்லும் போது நெடுஞ்சாலையைக் கடந்துள்ளார்.
அப்போது ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுண்டுள்ளார்.படுகாயமடைந்த மூதாட்டி உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் குறிப்பிடப்பிட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையர்கள் சென்ற கப்பல் ஒன்று நியூசிலாந்து கடற்பரப்பில் வைத்து, வனுவாட்டு (Vanuatu) சுங்க அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கப்பலின் தோற்றத்தை அடையாளம் காண தவறியமையினாலேயே குறித்த கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இருந்து கடல்மார்க்கமாக வருகை தந்த கப்பலே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.ஐந்து மாலுமிகள் மற்றும் கெப்டன் உள்ளிட்டவர்கள் குறித்த கப்பலில் பயணித்துள்ளனர். அவர்கள் ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் என்றும் சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கப்பலை புதிய உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக தாம் செல்வதாக மாலுமிகள் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த கப்பல் 20 வருடங்கள் பழமையானது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.போ Kava Export நிறுவனத்தின் உரிமையாளர் Paul Oktenனிடம் இருந்து குறித்த கப்பல் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஜனவரி 8ஆம் திகதியளவில் நாடளாவிய ரீதியில் பல வேலைத் திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாகவும், அதன்படி சுமார் இருபதாயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியவில் வாகன உற்பத்திச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த 20,000 வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையில் நாம் திருப்திப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கவே நாம் விரும்புகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், 2020ஆம் ஆண்டு இலங்கை முழுதாக வறுமையிலிருந்து விடுபடும் நாடாக மாற்றமடையும் என்று பிரதமரும் ஜனாதிபதியும் தெரிவித்திருக்கும் நிலையில், இளைஞர் யுவதிகளுக்கு பிரதமர் கொடுத்துள்ள இந்த செய்தி முதல்படியாக காணப்படுகின்றது.
அண்மையில் “இலங்கையில் இனி அடிப்படைச் சம்பளம் ஆகக் குறைந்த சம்பளம் 40 ஆயிரமாகக் காணப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும்” என்று பிரதமர் தெரிவித்திருந்த கருத்து அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் ஆகும்.
முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி மீது வீட்டுசுவர் சரிந்து விழுந்து சுயநினைவிழந்த நிலையில்(கோமா) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பூதன்வயல் கிராமத்தை சேர்ந்த இராசேந்திரம் மதி (வயது9) என்னும் சிறுமியே இவ்வாறு பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறுமி தாயை இழந்து, மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து வந்துள்ள நிலையில் இவ்வாறான துயரம் நிகழ்ந்துள்ளதாக அந்த ஊர்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொழும்பு வீதிகளில் பயணிக்கும் சீனாவுக்கு சொந்தமான வாகனங்களினால் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான பொருட்கள் கொண்டு செல்லும் பெரிய அளவிலான டிப்பர் வாகனங்களால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த வாகனங்கள் முறையாக போக்குவரத்து அனுமதி பத்திரம் இன்றி பிரதான வீதிகளில் பயணிப்பதாக தெரிய வந்துள்ளது.இந்த வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இலங்கையில் பயண நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தில் அனுமதி பத்திரமேனும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் குறித்த டிப்பர் வாகனங்கள் எவ்வித காப்புறுதி நிறுவனத்தின் கீழும் பதிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.சைனா ஹாபர் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாகனங்கள் பிரதான வீதிகளில் பயணிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் இதன் ஊடாக வீதிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலையென அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டின்பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை பொலிஸார் இந்த யுவதியை இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்பை அடுத்து பதுளைக்கான புகையிரதத்தின் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.எனினும் எவ்வித சந்தேகப்பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. இதனையடுத்து அடையாளம் காணப்பட்ட யுவதியை விசாரணை செய்தபோது தமது நண்பரான இளைஞர் மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்ய குறித்த புகையிரதத்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காகவே தாம் அவ்வாறு செய்ததாக யுவதி தெரிவித்திருந்தார்.இந்தநிலையிலேயே யுவதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சில் 12 வயது சகோதரர்கள் இருவர் சக வயது சிறுமி ஒருவரை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Belfort நகரத்திலேயே குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியை சேர்ந்த சகோதரர்கள் அண்டை வீட்டில் உள்ள சிறுமி ஒருவரை சில மாதங்களாக தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது, இருவரும் தாங்கள் செய்த குற்றத்தின் தன்மையை உணர்ந்துள்ளனர். ஆனால், சிறுமி அதற்கு ஒப்புக்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களின் வயது காரணமாக, வழக்கை பாலியல் தாக்குதல்கள் என நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு மண் தான் காரணம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் குஸ்மாவதி(78). இவர் தன்னுடைய 15 வயதில் இருந்து மணல் மற்றும் கிராவல் போன்றவற்றை சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை எந்த ஒரு பாதிப்பும் வரவில்லை என்பது தான் ஆச்சரியமே.
இது குறித்து குஸ்மாவதி கூறுகையில், தான் கடந்த 63 வருடங்களாக மண் மற்றும் கிராவல் போன்றவற்றை தான் சாப்பிட்டு வருகிறேன். இதைத் தான் விரும்பி உண்ணுகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.
மணல் மற்றும் கிராவல் உண்ணுவதால் தனக்கு வயிற்று வலியோ மற்றும் பல் வலியோ போன்றவை வந்ததில்லை என்று கூறியுள்ளார். தன்னால் கடினமான கல்லை கூட கடித்து சாப்பிட முடியும், அதனால் தனக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறியுள்ளார்.
பண்ணைத் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் அனுதினமும் 2 கிலோ மணல் சாப்பிட்டு வருவதாக கூறியுள்ளார். இது நாள் வரை அவர் மருத்துவரை சந்தித்ததே கிடையாது என்றும் தன்னுடைய இந்த ஆரோக்கியதிற்கு மணல் தான் காரணம் என கூறியுள்ளார்.
மேலும் அவர் இதை தன்னுடைய 15 வயதில் சாப்பிட ஆரம்பித்ததாகவும், அப்போது வயிறு வலித்ததாகவும், அதன் பின்னர் பழகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தான் மணல் சாப்பிடுவதைப் பார்த்து தன் பேரக்குழந்தைகள் மணல் விரும்பி ஆகிவிட்டதாகவும், இது ஒரு போதை என்று தன்னை மருத்துவமனைக்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார். தான் நன்றாக இருக்கிறேன், தான் ஏன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வயதிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு மணல் மற்றும் கிரவல் தான் காரணம் என்று அடித்து கூறுகிறார் குஸ்மாவதி.
பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நூதன முறை திருப்பூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் பின்பற்றப்படுகிறது.
திருப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டண கழிப்பறை இருந்தாலும், சிலர் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கின்றனர்.
இதனால், பேருந்து நிலைய வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசி, பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் பிரதமரின், “துாய்மை இந்தியா” திட்டத்தில், பேருந்து நிலைய கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்,பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களுக்கு மைசூர் பா வழங்கி, ‘இனி இத்தகைய செயலில் ஈடுபட கூடாது’ என அறிவுறுத்தினர்.
இதுமட்டுமின்றி புதிய வழியை கையாண்டுள்ளனர். திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களே, இனி அதை சுத்தம் செய்ய வேண்டும். அவர்களுக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
அதன் அருகிலேயே டேபிளில் பூ மாலை, துடைப்பம், பக்கெட், தண்ணீர் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டிருந்தது.
மோசமான நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கும் 23 வகையான மருந்துகள் போதையேற்றும் மாத்திரையாக விற்பனை செய்வதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்த வியாபாரம் சர்வதேசத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் விற்பனையாளர்களின் வலையமைப்பாக செயற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வர்த்தகத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காரணத்தினால் இந்த மாத்திரைகள் நோயாளிகளுக்கு அவசியமான அளவு மாத்திரம் அரசு மருந்தக மருத்துவம் வழங்கும் பிரிவு வழங்கியுள்ளது.
அரச வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக தனியார் வைத்தியசாலைகளுக்கும் அந்த மாத்திரைகளை வழங்கும் நடவடிக்கை அரசாங்க மருந்தகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்த மாத்திரைகள் வழங்குதல் மற்றும் அவை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதா என இரண்டு மாதத்திற்கு இரண்டு முறை குறித்த சபையினால் கண்கானிக்கப்பட்டு அறிக்கை பெற்றக் கொள்ளப்படுகின்றது.
இந்த மாத்திரை கொடூரமான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு வலி நிவாரணியாக வழங்கப்படுவதாகும்.
இந்த மாத்திரை இந்த நாட்டில் தயாரிக்கப்படாது. வெளிநாடுகளில் இவை தயாரிக்கப்பட்டு பல்வேறு முறையில் மோசடியான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
போதைப்பொருளாக உரிய அளவினை அதிக அளவு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
விசேடமாக B வகை மாத்திரை மற்றும் III குழுவிற்கான இந்த மாத்திரை மேற்கத்திய மாத்திரையாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
விசேடமாக ட்ரெமடோல் என்ற பெயருடைய மாத்திரை வகை எல்ட்ரோசோலா, CNS என்ற சுவாச கட்டமைப்பிற்கு தொடர்புடைய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்தாகும். அத்துடன் கொடூரமான மனநோய்களுக்காக வழங்கப்படும் 23 வகை மாத்திரைகள் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகின்றதென தெரியவந்துள்ளது.
மேலும் இருமலுக்கு வழங்கப்படும் பானி போன்ற மருந்தினை போதைப்பொருளாக அதிகம் பயன்படுத்தப்பட்டமையினால் தற்போதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற வைத்திய அறிக்கைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் இந்த மாத்திரைகள் தபால் ஊடாக கொண்டு வரும் நடவடிக்கை பொதுவாக மேற்கொள்ளப்படுவதாக சில நாட்களுக்கு முன்னர் 70 ஆயிரம் மாத்திரைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இந்த மாத்திரைகள் மருந்தாக வழங்கப்படுவதனை விடவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை, வியாபாரி தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி பொதுச் சந்தையில் கீரை விற்றுக்கொண்டிருந்த சிறுமி மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வறுமையின் காரணமாக குறித்த சந்தையில் மலிவு விலையில் கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட 14 வயது மதிக்கத்தக்க சிறுமியை அவருக்கு அருகிலே கீரை வியாபாரம் செய்துகொண்டிருந்த மற்றுமொரு வியாபாரி தாக்கியுள்ளார்.
தான் விற்கும் விலையினை விட குறைவான விலையில் கீரை விற்பனை செய்தமையால் குறித்த சிறுமி தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலில் முகத்தில் பலமாக காயமடைந்த குறித்த சிறுமி சாவகச்சேரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்சுங் நிறுவனம் தனது சொந்த Air-pod போன்ற சாதனத்தை தயாரித்து வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. Earbuds என்ற பெயரில் அந்நிறுவனம் புதிய Wireless ஹெட்போன்களைத் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் கிடைத்திருக்கும் தகவல்களின் படி, புதிய கலக்ஸி S8 ஸ்மார்ட்போனுடன் Earbuds சாதனத்தை சம்சுங் வெளியிடும் என கூறப்படுகிறது.
அப்பிள் Air-pod சாதனத்திற்கு போட்டியாக சம்சுங் நிறுவனம் இதனை அறிமுகம் செய்யவுள்ளது.
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி, புதிய Wireless இயர்போன்கள் கலக்ஸி S8 ஸ்மார்ட்போன்களுடன் வெளியிடப்படுமா அல்லது தனியே விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
இதனால் புதிய ஸ்மார்ட்போனில் 3.5 mm ஹெட்போன் ஜக் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
அத்துடன், சம்சுங் Earbuds இல் ஹர்மன் தொழில்நுட்பம், Air-podகளில் அண்ட்ரொய்ட் சின்க் அம்சம் வழங்கப்பட்டதைப் போன்ற விசேட அம்சம் சம்சுங் Earbuds களிலும் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஒருவேளை சம்சுங் Earbuds வெளியிடப்பட்டாலும், இது அந்நிறுவனத்தின் முதல் சாதனமாக இருக்காது. ஏற்கனவே சம்சுங் கியர் ஐகான்X என்ற ஹெட்போன்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.