அக்டோபரில் பூமி அழியுமா : அதிர்ச்சியூட்டும் புதிய புத்தகம்!!

மிகப்பெரிய மர்மமான கிரகம் ஒன்று, நம் பூமி கிரகத்தோடு மோதி தகர்க்கப்போவதால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நம் உலகம் அழியப்போகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.

பிளானட் எக்ஸ் – தி 2017 அரைவல்´ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட் மேட், பூமியை விட பலமடங்கு பெரிதாக உள்ள அந்தக் கோள் பூமியை நோக்கி பல ஆண்டுகளாக பயணித்து வருவதாகவும், எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் பூமியின் மீது மோதும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நட்சத்திரம், பிளானட் எக்ஸ் என்று அழைக்கக்கூடிய ´நிபிரு´ உட்பட ஏழு கோளப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் கிரகங்கள் பெரிய மற்றும் நீல நிறத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிபிருவை சில நேரங்களில் பிளானட் எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது, அது நமது சூரிய மண்டலத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு கிரகம் ஆகும்.

கனமான கிரகமான நிபிரு, ஈர்ப்பு விசையின் ஆதிக்கத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மற்ற கிரகங்களின் சுற்று வட்டப் பாதைகளில் இடையூறுக்கு உள்ளாகியுள்ளது.

ஈர்ப்பு விசையின் காரணமாக சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பைனரி நட்சத்திரம், இந்த ஆண்டு அக்டோபர் மாத்ததில் நமது கிரகத்துடன் மோதும்,

ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று டேவிட் மேட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில். இந்த நட்சத்திரத்தின் கோணங்கள் பூமியை நெருங்கிக் கொண்டிருப்பதால் இதை கண்டுபிடிக்க கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்த நட்சத்திரம், நம் சூரிய குடும்பத்தில் சூரியன் செல்லும் மார்க்கமாக செல்லவில்லை, ஆனால் ஒரு சாய்ந்த கோணத்தில் தென் துருவம் வழியாக நம் கிரகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று ´பிளானட் எக்ஸ் – தி 2017 அரைவல்´ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட் மேட் குறிப்பிட்டுள்ளார்.

-தினகரன்-

இப்படித் தான் வாழத்தான் ஆசைப்படுறோம் : வெட்ட வெளிச்சமாக்கிய சவுதிப் பெண்கள்!!

உலகளவில் இஸ்லாமிய பெண்களின் சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கும் வகையில் புரட்சிகரமான பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

குறிப்பாக சவுதி அரேபியாவில் ஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் Majedalesa – Hwages என்ற தலைப்பில் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பாடலில், பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் சுதந்திரமாக கார் ஓட்டுகின்றனர். கூடைப்பந்து விளையாடுகின்றனர், ஸ்கேட்டிங் செல்கின்றனர், ஆனந்தமாக நடனம் ஆடுகின்றனர்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்பின் உருவப்படம் பாடலின் சில காட்சிகளில் தோன்றுகிறது.

அருமையான இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை இதுவரை சுமார் 31 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் எனக் கதறும் பெற்றோர் : நெஞ்சை உருக வைக்கும் காரணம்!!

இந்தியாவில் பெற்ற மகனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் உருக வைத்துள்ளது.

ஆக்ராவை சேர்ந்த விபின் என இளைஞர் இரத்த சோகை (aplastic anaemia) நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்காக பெற்றோர் பணம் செலவழித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.

இந்நிலையில் ஏழை பெற்றோர் மாநில முதல்வர், பிரதமர், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை கழுதியுள்ளனர். அதில், மகனின் சிகிச்சை செலவுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லையெனில் அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்குமாறு கோரியுள்ளனர். இந்நிலையில், பலர் கண்டிப்பாக அரசாங்கம் சிகிச்சைக்காக உதவி செய்யும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

6 வயதில் திருமணம் 13 வயதில் கர்ப்பம் : உலக குழந்தைகளின் அவலம்!!

உலகளவில் குழந்தைகள் திருமணம் நடக்கும் நாடுகளில் நைஜீரியா, சாட், மாலி, சோமாலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தான் முன்னணியில் உள்ளது என அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் 15 வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதன் எண்ணிக்கை 12,000 ஆகும் என தெரியவந்துள்ளது.

மேலும், 2017 ஆம் ஆண்டில் 15 மில்லியன் பள்ளிக்குழந்தைகள் திருமண செய்துகொள்ளும் நிலையில் உள்ளனர் என இந்த நிறுவனம் முன்கூட்டியே அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை திருமணங்கள் நடைபெறுவதற்கு முதல் காரணமாக முன்வைக்கப்படுவது, மேலே கூறப்பட்டுள்ள நாடுகளில் நடைபெறும் “போர் மற்றும் வறுமை” ஆகும்.

பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளை பராமரிக்கப்பட முடியாத காரணத்தால் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக, இளம் வயது குழந்தைகளை கடத்தி செல்லும் குழந்தைகள் அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துகின்றனர்.

மேலும் குழந்தைகளின் பெற்றோர்களை தீவிரவாதிகள் கொன்றுவிடுவதால் அக்குழந்தைகள் தீவிரவாதிகளையே திருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் 6 வயது சிறுமி ஒருவர் தனது 40 வயது இருக்கும் நபரை கடன் பிரச்சனைகளுக்காக திருமணம் செய்துகொண்டார். மேலும் ஏமன் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி தனக்கு திருமணம் நடைபெற்ற அன்று ஏற்பட்ட உதிரப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளார்.

Syrian Sahar (13) என்ற 13 வயது சிறுமி தனக்கு திருமணம் நடைபெற்ற அதே ஆண்டிலேயே கர்ப்பம் தரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சிறுவயதிலேயே திருமணம் செய்துகொள்வதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

எனது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் நரகம் போன்று இருந்தது. ஆனால் காலம் செல்ல அந்த வாழ்க்கைக்கு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.

என்னைபோன்று யாரும் இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதையே நான் விரும்புகிறேன். குறைந்தது 20 வயதில் தான் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த குழந்தைகள் திருமணத்தில் கொடுமையான விடயம் என்னவென்றால், கிராமப்புறங்களில் ஆடு மாடுகளுக்காக இளம் வயது குழந்தைகள் பேரம் பேசி விற்கப்படுவதுதான். இதுபோன்று விற்கப்படும் குழந்தைகள் அந்த செல்வந்தர்களின் ஆசை மனைவிகளாக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் திருமணத்தி ஒழிப்போம் என 144 நாடுகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டாலும், இன்றுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே நிலை தொடர்ந்துகொண்டு சென்றால், வருகின்ற 2030 ஆம் ஆண்டில் 700 மில்லியன் குழந்தைகள் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த எண்ணிக்கையானது 2050 ஆம் ஆண்டில் 1.2 மில்லியன் ஆகும் என இந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

யாழில் நீண்ட நாள் பகை வாள்வெட்டில் முடிந்தது : 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ் சுழிபுரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் நிலவிய நீண்ட நாள் பகை நேற்றுமுன்தினம் வாள்வெட்டு மற்றும் அடிதடியில் முடிந்ததால் இரு குடும்பங்களையும் சேர்ந்த 8பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கொலைச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதாகி கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பிணையில் விடுதலையாகி வந்துள்ளார்.

இந்நிலையில் பிணையில் வந்த சந்தேக நபரின் குடும்பத்துக்கும் கொலையானவரின் குடும்பத்துக்குமிடையில் கடந்த திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு தொடர்பில் கொலையானவரின் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமைவட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டுக்கமைய நேற்று முன்தினம் புதன்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினர்கள்பொலிஸ்நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பொலிஸ் நிலையம் செல்வதற்காக வந்த கொலையானவரின் குடும்பத்தைச்சேர்ந்த சகோதரர்கள் இருவரை வழிமறித்த சந்தேகநபர் உட்பட்ட 4பேர் கொண்ட கும்பல் செல்லையா வினோதரன் (வயது 19) என்பவரை வாளின்பிடியால் கடுமையாகத் தாக்கியதில் அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதன்போது சுதாதரித்துக்கொண்ட தமையன் தனது தம்பியாரைக்காப்பாற்றுவதற்காக வாள் கும்பலுடன் போராடியுள்ளார்.

இதன் போதுஅவர்களிடம் வாளைப் பறித்த தமையன் 4 பேரையும் வெட்டியதாகபொலிஸ் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த சந்தேக நபருடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்குறித்த வாளால் வெட்டியவரின் வீட்டிற்குச் சென்றுதாக்குதல் நடத்தியதில் இரு தரப்பிலும் மூவர்கல் தாக்குதலுக்குள்ளாகினர்.

இச் சம்பவத்தில் சுழிபுரத்தினைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான சந்திரசேகரம்சதீஸ்குமார் (வயது-28), அவரது தந்தையான அரியகுட்டி சந்திரசேகரம் (வயது-48),உதயசூரியன் சூரியகாந்தன் (வயது-32) அவரது சகோதரரான உதயசூரியன் இமையகாந்தன்(வயது-26), கதிரவேலு கோவிந்தசாமி (வயது-57) மற்றும் அதே இடத்தினை சேர்ந்தஇளைஞர்களான செல்லையா வினோதரன் (வயது 19) அவரது சகோதரான செல்லையா கிரிதரன்(வயது-31) செல்லையா திருக்குமார் (33), செல்லையா யசோ(வயது -25) படு காயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் சங்கானை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்துபொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் நேற்றும் பதட்டமான நிலைகாணப்பட்டதாக தெரியவருகிறது.

பிரபல ரவுடி காதலியுடன் வாழ்ந்த வாழ்க்கை : அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது!!

சென்னை பொலிசாருக்கு பல நேரங்களில் சவாலாக விளங்கி வந்தவர் நீராவி முருகன் (36). தூத்துக்குடியை சேர்ந்த இவர் மீது 45க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

துரைப்பாக்கத்தில் தனியார் பள்ளி ஆசிரியை வேலத்திடம் செயின் பறித்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரை பொலிசார் கடந்த மாதம் கைது செய்தார்கள்.

தற்போது சிறை கம்பி எண்ணி கொண்டிருக்கும் நீராவி முருகனை பற்றி தெரியாத ஒரு விடயத்தை பற்றி பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

நீராவி முருகனுக்கு கடவுள் பக்தி அதிகமாம். முன்னர் அவன் வேறு குற்றசெயலில் ஈடுப்பட்டு தலைமறைவாக இருந்த போது ஆந்திர மாநிலத்தின் ரேணிகுண்டாவில் தன் காதலி ரேவதி வீட்டில் இருந்துள்ளார்.

அங்கு அவரை பொலிசார் பிடித்த போது மொட்டை தலையுடன் இருந்துள்ளான். அதற்கான காரணம் கேட்டதற்கு தனக்கு சாமி நம்பிக்கை அதிகம் என்றும் இது திருப்பதி கோவிலில் தன் காதலியுடன் போன போது போட்ட மொட்டை எனவும் இது தன் பாவத்தை கழிக்க என அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், செயின் பறிக்கும் போது அடையாளம் தெரியாமல் இருக்க அடிக்கடி தன்னுடைய கெட்டஅப்பை மாற்ற மொட்டையடிப்பதும் இவர் வழக்கமாம்.

ஏற்கனவே கணவனை இழந்த ரேவதியுடன் தாலி கட்டாமல் கணவனாக நீராவி முருகன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன் : இரு வாரங்களுக்குப்பின் சடலம் உறவினர்களிடம்!!

பிரான்ஸில் மரணமடைந்த இந்திய இளைஞரின் உடல் 14 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை சொந்த ஊரான திருநறையூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் மணிமாறன் (வயது 27) என்ற தமிழ் இளைஞரின் உடலே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திருநறையூர் சிவன் கோயில் சன்னதி தெருவைத் சேர்ந்தவர் விவசாயி தங்கவேலுவின் மகனே மணிமாறன்.

மணிமாறன் பி.இ. படித்துவிட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டுக்கு எம்.எஸ் (மாஸ்டர் ஆப் சயின்ஸ்) படிக்கச் சென்றுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் படிப்பு முடிந்துவிட்ட நிலையில், அங்கு உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 23ஆம் திகதி பிரான்ஸ் நாட்டில் மர்ம நபர்களால் மணிமாறன் கொலை செய்யப்பட்டார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து மணிமாறனின் உடல் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்துள்ளது.

மணிமாறனின் சடலத்தைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா ஏ9 வீதி இலங்கை போக்குவரத்துச் சபைக் காரியாளத்திற்கு அருகே இன்று (06.01.2016) மாலை 4 மணியளவில் பட்டா ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து மதகுவைத்தகுளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் மாற முற்ப்பட்ட சமயத்தில் வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பட்டாரக வாகனத்தில் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் இப்படியும் ஒரு சம்பவம் : கிணற்றைக் காணவில்லையென முறைப்பாடு!!

வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பேகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று இடப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது..

கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா நகரசபையினால் பொதுமக்கள் பாவனைக்காக வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பேகடுவ சிலைக்கருகில் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அந்த கிணறு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

இவ் விடயம் தொடர்பாக நகரசபைச் செயலாளரை தொடர்பு கொண்டபோது சம்பவம் உண்யென்றும் இதன் அருகிலிருக்கும் வியாபார நிலையங்களில் யாரேனும் ஒருவர் இதனை இரகசிய முறையில் பாவிக்கின்றார்களா என்ற சந்தேகம் கொள்வதாகவும் எனினும் இது சட்டவிரோத குற்றமெனவும் தாம் இதற்குரிய சட்ட நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழாய்கிணற்றை மறைத்து தமது சொந்த பாவனைக்கு பயன்படுத்துபவர்கள் மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுப்பதுடன் நஷ்ட ஈட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் செல்லும் பிரதான வீதியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தின் அவலநிலை!!

 
வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து மெனிக்பாம் செல்லும் பிரதான வீதியிலிருக்கும், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் பாடசாலை பகுதியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தின் இன்றைய நிலைதான் இது.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இப்படியாக காட்சியளித்துக்கொண்டிருக்கின்றது. குறித்த வீதியினைப்பயன்படுத்தி செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்றுவருகின்றார்கள்,

அருவித்தோட்டப் பாடசாலையில் 538 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள், இப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள், மாணவர்கள் இப்பேரூந்து தரிப்பிடத்தில் மழை, வெய்யில் நேரங்களில் காத்திருக்கின்ற நிலையில் இல்லை.

பலரிடம் இது தொடர்பில் முறையிட்டும் இன்று வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவலில்லை என்று இப்பகுதியிலுள்ள கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

தன்னை ஏளனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த வீர மங்கை!!

யாஸ்மீன் மானக் என்ற பெண், பொடி பில்டிங்கில் அசத்தி இந்தியாவின் இரும்பு பெண் என்று நிரூபித்து, தனது உருவ தோற்றத்தை வைத்து அசிங்கமானவள் என்று கிண்டல் செய்தவர்களுக்கு தக்க அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பெரும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளார்.

யாஸ்மீன் தனது சிறுவயதில் எடுத்துக் கொண்ட ஒரு தவறான மருந்து அவரை உடல் மற்றும் உடல் தோற்றம் ரீதியாக முற்றிலும் அவர் ஒரு ஆண் தோற்றத்தை அடைந்தார். இதனால் இவரின் வாழ்க்கையில் பல இடங்களில் இவரைப் பற்றிய ஏளனம் பேச்சுக்களை கேட்கும் நிலை ஏற்பட்டது.

எனவே தன்னம்பிக்கையை இழந்த யாஸ்மீன் மீண்டும் தன்னம்பிக்கை பெற ஜிம்மிற்கு சென்று கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்டு, பொடி பில்டிங்கில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தார்.

பின் யாஸ்மின் 300 ஆண்கள் பொடி பில்டிங்கில் சாதித்தது மட்டுமின்றி, சொந்தமாக ஒரு ஜிம்மும் நடத்தி, அதில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இவ்வாறு பல திறமைகளை கொண்ட யாஸ்மீன் தொழிலதிபர், ஃபிட்னஸ் இன்ஸ்ட்ரக்டர், பொடி பில்டர், பைக்கர் என தனது அழகான திறமைகளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற மிஸ். ஆசியா பொடி பில்டிங் போட்டியில், கலந்துக் கொண்ட யாஸ்மீன், வெற்றி பெற்று, வெண்கல பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.

மேலும், யாஸ்மீன் மானக் கடந்த 2016ம் வருடம் நடைபெற்ற பொடி பில்டிங் ஃபெடரேஷன் நடத்திய மிஸ் இந்தியா போட்டியிலும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3!!

அப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது.

இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.

Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமைக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு தயாராகிவிட்டது.

இந் நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத் தகவலை Digitimes சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

மூன்றாம் தலைமுறையாக வெளிவரவுள்ள இக் கடிகாரமானது வடிவமைப்பில் முன்னைய தலைமுறையினை ஒத்திருந்த போதிலும் புதிய அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் மேலதிக சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாடசாலைச் சிறுமியை கும்பலாக பலாத்காரம் செய்த நான்கு சிறுவர்கள்!!

பிரித்தானியாவில் பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு சிறுவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Workington, Cloffocks பகுதியிலே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவம் தொடர்பாக கும்ப்ரியா நகரத்தை சேர்ந்த 13 வயதுடைய மூன்று சிறுவர்களும், 14 வயதுடைய ஒரு சிறுவனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3ம் திகதி இரவு 7 மணிக்கு loffocks கார் பார்க் அருகே உள்ள புல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, சிறுவர்களை கைது செய்துள்ள பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்த தகவலறிந்த பொதுமக்கள் உடனே தொடர்புக்கொள்ளும் படி பொலிசார் அறிவித்துள்ளனர்.

8 வயது சிறுமியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரன்!!

பெரு நாட்டில் 8 வயது சிறுமியை கொலை செய்து சூட்கேசிஸ் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டின் ஜுனின் மாகாணத்தில் உள்ள Huancayo பகுதியைச் சேர்ந்தவர் Edith Paitan Quincho (8). இவர் அங்குள்ள San Francisco de Asis என்ற பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அச்சிறுமி தன்னுடைய பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அப்பகுதியின் தேசிய பல்கலைக்கழகத்தில் சூட்கேஸ் ஒன்றை கண்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் அதனை சோதனை செய்து பார்த்த போது, சிறுமியின் உடல் அதில் இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதி தொடர்பாக பொலிசார் சிறுமியை கொலை செய்த கொலையாளியை தீவிரமாக தேடிவருகின்றனர். கொலையாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு £4,800 பவுண்ட் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், எந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவள் நடனம் ஆட சென்று விடுவாள். ஆனால் தற்போது நான் என்ன கூறுவது என்று கண்ணீர் விட்டு கதறிய தாயின் செயல் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கணவரை கொன்றது எப்படி : கள்ளக்காதலால் வந்த வினை : இளம்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னை மேடவாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 25), இவர் பிரபல வணிக வளாகம் ஒன்றில் எலக்ட்ரிக்கல் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மிக கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவதினத்தன்று இரவு 11.30 மணியளவில் மர்ம கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்ததாகவும், அறிவழகனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டதாகவும் பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

தடுக்க சென்ற அறிவழகனின் மனைவி சுரோகாவுக்கும் கத்தி குத்து விழுந்தது, இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர், அதற்கு சுரேகா, புத்தாண்டு தினத்தன்று சிலர் எனது வீட்டருகில் மது அருந்திக் கொண்டிருந்தனர், இதனை என் கணவர் தட்டிக்கேட்டார். உடனே கோபமடைந்தவர்கள் என் கணவரை குத்தி விட்டு தப்பியோடி விட்டனர் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு யாரும் வந்து சென்றதாக தெரியவில்லை என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர், எனவே சுரேகாவிடம் மீண்டும் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போது அவர், அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவரை காதலித்து வந்ததும், கள்ளக்காதலன் உடன் சேர்ந்த அறிவழகனை தீர்த்துக் கட்டியதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர், சுரேகா அளித்துள்ள வாக்குமூலத்தில், கணபதியுடன் தொடர்பு ஏற்பட்டவுடன் அறிவழகனுடன் வாழப்பிடிக்கவில்லை.

அடிக்கடி சந்தேகப்பட்டார், இதுபற்றி கணபதியிடம் கூறியதும் கணவரை கொன்றுவிட்டு சந்தோஷமாக வாழலாம் என கூறினார்.

இதன்படி மது அருந்திய வாலிபர்கள் மீது பழியை போட்டுவிடலாம் என திட்டம் தீட்டினோம், அன்றிரவு 11.30 மணியளவில் கணபதி என் வீட்டுக்கு வந்தார்.

ஆழந்த உறக்கத்தில் இருந்த என் கணவரை தலையணையால் அமுக்கினோம், சத்தம் போட்டுவிடுவார் என்ற பயத்தில் கத்தியால் குத்தினோம்.

பின்னர் சடலத்தை வெளியே தூக்கி வீசியதுடன், மது குடித்தவர்களே கொலை செய்துவிட்டதாக தெரியவேண்டும் என்பதற்காக காலி மதுபாட்டில்களை சடலத்திற்கு அருகில் வீசினோம்.

அடுத்து கணபதி தப்பிச்சென்றுவிட்டார், நான் சமையலை சென்று கத்தியால் என் கையை வெட்டிக் கொண்டோம், இதனால் பொலிசுக்கு சந்தேகம் வராது என நம்பினோம், கடைசியில் மாட்டிக் கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

மனைவி, மகள்கள் உட்பட 11 பேரை கழுத்தறுத்து கொன்ற கொடூரன் : அதிர வைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் நபர் ஒருவர் மனைவி, மகள்கள உட்பட 11 பேரை கழுத்தறுத்து கொன்று தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்திலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

குடும்ப பாரத்தினால் 45 வயதான ஜமாலுதீன் தனது மனைவி மற்றும் 5 மகள்கள், சகோதரர்களின் மனைவிகள் என 11 பேரை பூச்சி மருந்தை கொடுத்து கத்தியால் கழுத்தறுத்து கொன்று பின்னர், அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், சம்பவயிடத்தில் இரண்டு கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மர்மநபர்கள் சிலர் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்னும் கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.