மோப்ப நாயின் உதவியால் ஆபரணங்களை திருடிய பெண் சிக்கினார்!!

dog

கட்டுகஸ்தோட்டை – கலுகலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து ‘ரெஜீ’ என்ற மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகத்தின் பேரில் அயல் வீட்டுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து திருடிய தங்க ஆபரணங்களை குறித்த பெண் அக்குரனை பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் அடகு வைத்து பெறப்பட்ட பணத்தை மீட்டுள்ளனர்.

சந்தேக பெண் நேற்று மாலை கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

25000 ரூபா அதிகம் இல்லையா சார் என பொலிஸாரின் காலில் வீழ்ந்து மன்றாடிய சாரதி!!

25000

கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பஸ் சாரதிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வீதியின் சட்டங்களை மீறுவதற்காக விதிக்கப்பட்ட 25000 தண்டப்பணத்தை நீக்குமாறு கோரியே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

வெலிமடையில் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பணி பகிர்ஷ்கரிப்பின் மத்தியில் ஒரு நபர் பொலிஸ் அதிகாரிகள் சிலரின் காலில் விழுந்து “சார்… 25000 அதிகம் இல்லையா?” அதனை குறைக்குமாறு மன்றாடியுள்ளார்.

கணவரை சேர்ந்து வைக்கக்கோரி ரம்பா தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!!

ramba

கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடக்கோரி நடிகை ரம்பா தொடர்ந்த வழக்கை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் பிரபு நடித்த ‘உழவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமிக்கும் (39), இலங்கை தமிழரான இந்திரகுமாருக்கும் (47) கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்தனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரம்பாவுக்கும், அவரது கணவர் இந்திரகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார்.

இதையடுத்து சென்னை குடும்பநல நீதிமன்றில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும், ‘தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு 1.50 லட்சமும், தனது இரு மகள்களுக்கும் தலா 50 ஆயிரம் வீதம், ரூ.1 லட்சமும், ஆக 2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க தன் கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி சிவதாணு, விசாரணையை டிசம்பர் 3 ஆம் திகதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சிவதாணு முன்பு நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என்னுடைய கணவர் என்னுடன் தற்போது சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட்டப் படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ரம்பாவும், அவரது கணவரும், குழந்தைகளும் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அவர்களது சார்பில் அவர்களுடைய வழக்கு அறிஞர் ஆஜரானார்கள். ரம்பாவால் கோர்ட்டுக்கு வரமுடியவில்லை என்றும், அதனால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் ரம்பா தரப்பு வக்கீல் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 21 திகதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து இறுதிக்கட்ட சிகிச்சை : மரண செய்தியை மறுக்கும் அப்பல்லோ!!

jeya

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துள்ளது.

உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரது நிலைமை மோசமானது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகமும், மிக மிக மோசமாக உள்ளது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலும் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் இன்று மாலை காலமானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் இறுதிக்கட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாக மாலை 5.49 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் அப்பல்லோ தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் : சோகத்தில் தமிழகம்!!

jeya

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார்.

அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில் நேற்று மாலை திடீரென முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததோடு, அப்பல்லோ மருத்துவமனைக்கு முன்பாக அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.

மேலும் வதந்திகள் பரவியதை அடுத்து, பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இந்நிலையில் மருத்துவர்கள் முதலமைச்சருக்கு தீவிர சிகிச்சைப் அளித்து வந்தனர். தொடர் கண்காணிப்பில் ஜெயலிலதா வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்றைக்கு விரைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவனைக்குச் சென்ற அவர் பத்து நிமிடங்களில் மருத்துமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையில் முதல்வரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இன்றைய தினம் அப்பல்லோ நிர்வாகக் குழு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தான் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 194வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

 

வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (05.12.2016) காலை 8.30 மணிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார் (கண்ணன்) தலைமையில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணிஅகளங்கன் மற்றும் வர்த்தகர்கள், சமூகசேவையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நினைவு தூபிக்கான மலர்மாலை அணியப்பட்டதுடன் திருவருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணிஅகளங்கன் நினைவுரையினை வழங்கியதையடுத்து இன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இவ்வுருவச் சிலை 1997.04.04 அன்று நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0190 dsc_0194 dsc_0197 dsc_0199 dsc_0201 dsc_0204 dsc_0206 dsc_0211 dsc_0213 dsc_0214 dsc_0217 dsc_0218 dsc_0219 dsc_0224 dsc_0231 dsc_0234 dsc_0237

வவுனியாவில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத்தடை!!

 
வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அங்கிருந்து அகற்றும் பணியினை வவுனியா நகரசபையினர் இன்று (05.12.2016) முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலுள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராகவே இன்று காலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றி வருவது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபாரனை தொடர்பு கொண்டு கேட்டபோது,

அண்மைகாலமாக நடைபாதையயில் வியாபாரம் மேற்கொண்டு வருவபர்களை அங்கிருந்து வெளியேறுமாறு முன்னறிவித்தல் வழங்கப்பட்டு வந்துள்ளது. நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமான மணிக்கூட்டக் கோபுரத்திற்கு முன்பாக அல்லது வவுனியா நகரசபைக்கு எதிரே அமைக்கப்பட்ட இடங்களில் அவர்கள் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மாறாக பொதுமக்கள் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்கள் பெரிதும் அசௌகரிங்களுக்கள்ளாகி வருகின்றமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இந்நடவடிக்கைகள் பொலிசாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

1 20161205_104941 20161205_105002 20161205_105023 20161205_105112 dsc_0184 dsc_0185 dsc_0186 dsc_0187 dsc_0188 dsc_0189 dsc_0190 dsc_0191 dsc_0193 dsc_0199

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் : அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது!!

jeya

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ம் திகதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனால் லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து கூறிவந்தார்.

அத்துடன அப்பல்லோ போய்விட்டு வந்த அதிமுக தலைவர்களும், ஜெயலலிதா நன்றாக குணமடைந்துவிட்டார், வீடு திரும்புகிறார் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது.

இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ரத்தநாள அடைப்பைப் போக்கும் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாகிவிட்டது எனவும் கூறியிருந்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதிமுக தலைமை அலுவலகத்திலேயே கூட அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

பின்னர் மாலை 5.45 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருவதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனை இதை உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் காவலராக விளங்கிய எங்கள் தலைவியை நாங்கள் இழந்துவிட்டோமே என கண்ணீரும் கம்பலையுமாக அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூடியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

press

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?

ears

பொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும் போது, காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை, குளித்து முடித்ததும் சுத்தம் செய்துவிடுவார்கள்.

சிலருக்கு காதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்த பிறகு ஏதோ ஒரு புதிய உணர்வு தோன்றியது போலவும், சப்தங்கள் நன்றாக கேட்பது போன்றும் உணர்வார்கள்.

ஆனால், நமது காதில் உண்டாகும் அந்த மெழுகு போன்ற அழுக்கை நீக்க வேண்டாம். ஏனெனில் அதுதான் காதின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே நமது காதில் உள்ள மெழுகு போன்ற அழுக்கை சுத்தம் செய்ய கூடாது என்பது உண்மையாகும்.

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக் கூடாது என்பதற்கு என்ன காரணம்?

நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருளானது, கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் மூலம் உருவாகிறது.
நாம் அனைவரும் அழுக்கு என்று நினைத்து சுத்தம் செய்து அகற்றும் இந்த மெழுகு போன்ற பொருள் தான் நமது காதினை பாதுகாக்கும் காவலனாக இருக்கிறது.

நாம் அதிக சப்தம் மற்றும் பாடல்கள் கேட்பதால், நமது காதை அது வலுவாக பாதிக்கும். எனவே அதிக சப்தம் மற்றும் பக்டீரியா போன்றவற்றிடம் இருந்து நமது காதை காக்கும் தடுப்பானாக இந்த மெழுகு போன்ற பொருள் பயன்படுகிறது.

பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி காதினை சுத்தம் செய்வதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக படர்ந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே இந்த முறையை நாம் முதலில் நிறுத்த வேண்டும்.
காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருள் அதிகரிக்கும் போது, காதின் மேல் பகுதியில் வெளிப்புறங்களில் தோன்றும். அப்போது மட்டும் காதின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய பஞ்சு, துணி, தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை குச்சி, தீக்குச்சி போன்ற ஆபத்தான பொருட்களை பயன்படுத்தி நமது காதை சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால், காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான சவ்வு பகுதி பாதிக்கப்படுகிறது.

மற்றுமொரு அதிரடி வசதியினை அறிமுகம் செய்தது யூடியூப்!!

youtube

வீடியோக்களை ஒன்லைனில் பகிர்ந்துகொள்ளும் வசதியினை தரும் யூடியூப் தளமானது பல வசதிகளையும் பயனர்களுக்கு தருகின்றது. இவற்றில் நேரடி ஒளிபரப்பினை செய்யும் வசதியும் பிரதானமாகக் காணப்படுகின்றது.

தற்போது இவ் வசதியில் 4K வீடியோக்களையும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய வகையில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வசதி 360 டிகிரி வீடியோக்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 4K வீடியோக்களை பதிவேற்றும் வசதி தரப்பட்டிருந்த நிலையில் நேரடி ஒளிபரப்பிற்கு 4K வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றது.

இவ் வசதியானது கடந்த டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செக்கனுக்கு 60 பிரேம்கள் கொண்ட இவ் வீடியோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இனிமேல் உயர்தரம் கொண்ட நேரடி ஒளிபரப்புக்களை கண்டுமகிழ முடியும்.

இந்த ஆண்டு இறுதியோடு முடிவுக்கு வரும் வட்ஸ்அப் சேவை!!

whatapp

வட்ஸ் அப் இந்த ஆண்டு இறுதியோடு சில போன்களில் தனது சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, பிளக்பெரி ஓஎஸ் மற்றும் பிளக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60, அண்ட்ரொய்ட் 2.1 மற்றும் அண்ட்ரொய்ட் 2.2, விண்டோஸ் போன் 7, ஐபோன் 3GS / ஐஓஎஸ் 6 ஆகியவற்றில் அடுத்த ஆண்டு முதல் வட்ஸ் அப் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயங்குதளங்கள் முக்கியமானதாக இருந்தாலும், இந்த இயங்குதளங்கள் வாட்ஸ்அப் மேம்படுத்தல்களுக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தினாலே இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிளக்பெரி ஓஎஸ் மற்றும் பிளக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60 உள்ளிட்ட இயங்குதளங்களுக்கான சேவை அடுத்த ஆண்டு யூன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது வேற்றுகிரகவாசிகளின் விண்கலமா : ஆச்சரியத்தில் மூழ்கிய பிரித்தானிய மக்கள்!!

vinkalam

பிரித்தானியாவில் வேற்றுகிரவாசிகளின் விண்கலம் போன்று தோன்றிய பனிப்படலம் மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

பிரித்தானிய நாட்டில் வடகிழக்கு வேல்ஸ் பகுதியில் உள்ள டென்பிக்ஷைர் அருகே இருக்கும் டிரெமெய்ர்ச்சியான் கிராமத்தில் தான் இந்த அரிய காட்சி தென்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை வான்வெளியில் வேற்றுக்கிரகவாசிகள் பயன்படுத்தும் விண்கலத்தைப் போன்ற இந்த பனிக்குவியல் காணப்பட்டது.

அதிகாலை தனது செல்லநாயுடன் நடைபயிற்சிக்கு சென்ற ஹன்னா பிலான்ட்போர்ட் என்ற 33 வயது பெண் இந்த அழகிய காட்சியை புகைப்படமாக எடுத்துள்ளார்.

பனிக்காலங்களில் தரையில் இருந்து வெளியாகும் வெப்பமானது இப்படி மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் ஹன்னா சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

16 கோடிக்கு கற்பை ஏலம் விட்ட மகள் : அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

auction

ரோமானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பெற்றோர் வறுமையால் வாடிவருவதால் தனது கற்பை விலைக்கு விற்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது அவருடைய பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரோமானியா நாட்டை சேர்ந்த Alexandra Kefren(18) என்ற இளம்பெண் தான் இந்த அதிரடி ஏலத்தை அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் என்னுடைய பெற்றோர் மிகவும் வறுமையில் அவதியுற்று வருகின்றனர்.

வீட்டு வாடகை கட்டவில்லை என்பதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் உள்ளனர்.

எனது குடும்பத்தை காப்பாற்ற என்னிடம் போதிய பணம் இல்லை. ஆனால், 8,50,000 பவுண்ட்(16,06,38,059 இலங்கை ரூபாய்) வழங்க யாராவது முன் வந்தால் அவருக்கு எனது கற்பை விற்பனை செய்ய தயாராக உள்ளேன் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கற்பை ஏலம் விட இளம்பெண் முன் வந்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ‘பெற்றோர் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தால் தனது கர்ப்பையை விற்பனை செய்ய துணிந்திருப்பார்?’ என சிலர் அவரை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பெண்ணின் பெற்றோர் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘எங்கள் குடும்பம் வறுமையில் இல்லை. எங்கள் நாட்டு குடிமக்கள் சம்பாதிக்கும் சராசரி ஊதியத்தை விட 4 மடங்கு அதிகமாக நான் சம்பாதிக்கிறேன்.

சொந்த வீட்டில் இருக்கும் எங்களை யார் வெளியேற்ற போகிறார்கள்? எங்கள் மகள் ஏன் இப்படி ஒரு அவமதிக்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டார் என தெரியவில்லை.

மேலும், எங்களுடைய உறவினர் ஒருவர் மூலம் அவரை சமாதனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது லண்டன் நகரில் உள்ள அவர் தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும்.

எங்களின் வார்த்தைகளை மீறி கர்ப்பை பணத்தற்காக விற்பனை செய்தால், அவரை மீண்டும் மகளாக ஏற்க மாட்டோம்’ என பெற்றோர் வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : 35 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த நீதி!!

doctor

கனடாவில் பெண் மருத்துவர் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓண்டாரியா மாகாணத்தை சேர்ந்த Robert Badgerow(23) என்ற இளம்பெண் கடந்த 1981ம் ஆண்டு Hamilton நகரில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது பிறந்த நாள் நெருங்கி வருவதால் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க உணவகத்திற்கு சென்றுள்ளார்.

விருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு வீட்டிற்கு காரில் திரும்பிய அவர் வீட்டிற்கு செல்லவே இல்லை.

மறுநாள் காலையில் சாலை ஓரமாக அவரது சடலம் மட்டும் மீட்கப்பட்டது. மேலும், அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணைக்கு பிறகு அவரது உடலில் இருந்த ஆணின் விந்தணுவை சேகரித்த பொலிசார் Robert Badgerow என்ற நபரை 1998-ம் ஆண்டு கைது செய்தனர்.

ஆனால், ‘நாங்கள் இருவரும் நண்பர்கள். அவருடைய விருப்பத்துடன் மட்டுமே உறவு வைத்துக்கொண்டேன். இக்கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை’ என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு ராபர்ட் தான் கொலையாளி என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

சிறையில் 11 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகு தன் மீதான குற்றத்தை எதிர்த்து ராபர்ட் மேல் முறையீடு செய்தார்.

பின்னர், அவரது வழக்கு 2010, 2011, 2014 என 4 முறை விசாரணைக்கு வந்துள்ளது.

இறுதியாக வந்த விசாரணையில் ராபர்ட் தான் குற்றவாளி என்பது எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராபர்ட்டிற்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கனடா நாட்டு வரலாற்றில் ஒரு கொலை குற்றத்திற்காக ஒரே நபர் மீது 4 முறை மேல் முறையீடு விசாரணை நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைந்து போன சிறுவன் திருநங்கையாக வீடு திரும்பினார் : குடும்பத்தார் கதறல்!!

boy

தமிழகத்தில் சிறுவயதில் மாயமான மாணவன் ஒருவர் தற்போது திருநங்கையாக மாறி வீடு திரும்பியுள்ள சம்பவம் குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதி அருகே உள்ள இடையங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் சிறுவயதில் தன்னுடைய சித்தி வீட்டில் தங்கி தான் படித்து வந்துள்ளார்.

திடீரென்று கடந்த டிசம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு லட்சுமணன் மாயமானார். குடும்பத்தார் எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் வழக்கு பதிவு செய்து லட்சுமணன் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் லட்சுமணன் கறம்பக்குடி பகுதியில் உள்ள சில திருநங்கைகளுடன் அங்கிருந்த கடைகளில் கல்கி வசூல் செய்துள்ளார்.

இதைக் கண்ட பொலிசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தான் மும்பைக்குச் சென்று ஆபரேசன் செய்து திருநங்கையாக மாறி, அங்கேயே சிறிது காலாம் தங்கியதாகவும், அதன் பின்னர் தான் தமிழகம் வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதைக் கண்ட அவருடைய சித்தியான லட்சுமி தான் வளர்த்த மகன் லட்சுமணன் திருநங்கையாக மாறியதை கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.

கண்ணீருடன் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து பொலிசார் அவரை செல்வியுடன் அனுப்பி வைத்தனர். சிறுவயதில் மாயமானவர் திருநங்கையாக வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்ச்சியில் நடனப்பெண் சுட்டுக்கொலை : மணமகன்னின் நண்பனின் வெறிச்செயல்!!(வீடியோ)

dead

பஞ்சாப்பில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனப் பெண் வாலிபர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் மவுர் பகுதியில் நடந்த திருமணம் ஒன்றில் நேற்றிரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அப்போது திருமண நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் அதிக போதையில் இருந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் போதை தலைக்கேறியதும் மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர்களோடு சேர்ந்து ஆட முயற்சி செய்தார்.

அப்போது அவரை பலரும் தடுத்து மேடையில் ஏறக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இதனால் கடும் கோபமடைந்த அந்த வாலிபர் நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மேடையில் சரிந்து விழுந்து உயிருக்குப் போராடிய பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.