ரயில் மீது ஏறி செல்பி எடுத்த சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

selfi

ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் கூரை மீது ஏறி செல்பி எடுத்த சிறுவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் தற்போது மருத்துவமனையில் கவலைகிடமாக உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் காசிராஜன். இவரின் மகன் யுவராஜ் (17) இவர் தன் வீட்டருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் யுவராஜின் பெரியப்பா மகன் திருமணம் நெல்லையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள காசிராஜன் அவர் குடும்பத்துடன் நெல்லை வந்தார்.

யுவராஜ் தனது உறவுகாரர் மகன் பார்த்திபன் (15) என்பவருடன் நெல்லையை சுற்றி பார்த்து கொண்டிருந்தார். அப்போது இருவரும் நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்தார்கள்.

அப்போது ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் நிறுத்தப்படும் பிளாட்பாரத்தில் அவசரகால மீட்பு ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இதை பார்த்த யுவராஜ் அந்த ரயிலின் கூரை மீது ஏறி நின்று தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அதன் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார லைனை அவர் கவனிக்கவில்லை.

எதிர்பாராதவிதமாக யுவராஜின் கை மின்சார வயரில் பட அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். கருகிய நிலையில் உயிருக்கு போராடிய யுவராஜை அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள்

அங்கு கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இப்பவும் என்னை பார்க்க விட மறுக்கின்றனர் : கதறும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்!!

jeya

அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மருத்துவமனை கேட் முன்பு நின்று கொண்டிருக்கிறார்.

தீபா கடந்த முறை அப்போலோ சென்ற போதும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து தீபா கூறுகையில், “அத்தைக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டதுமே மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். முதல்வரின் அண்ணன் மகள் நான் என பொலிஸ் உயர் அதிகாரியிடம் தெரிவித்தும் என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை.

ரத்தபந்தமான என் அத்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள். எப்படியாவது அத்தையை பார்த்துவிட வேண்டும் என்று ஆசையில் காத்துகொண்டிருக்கிறேன்”. என்றார்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி : பிரான்ஸ் தமிழச்சி பரபரப்புக் குற்றச்சாட்டு!!

tamilachi

தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்லை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மோடி அரசு முனைப்பு காட்டி வருவதாக தமிழச்சி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில், “தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்” என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.

தமிழக மக்களின் பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து ஜெயலலிதாவை நேரடி தொலைக்காட்சியில் காட்ட உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு இயந்திரத்தின் செயற்பாட்டை காட்ட வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவை யாரிடமும் காட்டாத மர்மத்தின் நோக்கத்தை குறித்து இனி ஆராயத் தேவையில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால்…

ஜெயலலிதாவையும் அவருடைய இதயத்துடிப்பு இயந்திரத்தையும் காட்டுவதன் மூலம் “அம்மா உயிரோடுதான் இருக்கிறார்” என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுவின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாக நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

வியட்னாம் கடும் வெள்ளத்தில் 13 பேர் பலி!!

vietnam

வியட்னாமில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவம்பர் இறுதி தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பலரும் நிர்கதிக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ள நிவாரப்பணிகளை பல நாடுகளிடமிருந்து எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மீட்பு பணிகளில் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலை தொடர்ந்தும் நீடித்தால் வியட்னாமின் பாரிய பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் மதிப்பு அதிகரிப்பினால் இலங்கையில் ஏற்படவுள்ள நெருக்கடி!!

usd

டொலரின் மதிப்பு அதிகரிப்பதன் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரூபாயினை பாதுகாப்பதற்காக டொலர் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக வெளிநாட்டு இருப்புக்கள் குறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் இறுதியில் டொலரின் பெறுமதி 131 ரூபாவாக காணப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுவரையில் இலங்கையில் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்புக்கள் இருந்ததாகவும், தற்போது அது வரையில் 6 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டினுள் பாரிய நிதி நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயற்கையின் எச்சரிக்கை!!

jaffna

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அடுத்து வரும் சில சில வாரங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லி மீட்டர் வரையான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், வடகிழக்கு, கிழக்கு பகுதிகளில் கடுமையான இடி மற்றும் மின்னல் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாந்தோட்டை தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பகுதியும், புத்தளம் தொடக்கம் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதியும் கடும் கொந்தளிப்பாக காணப்படும்.

காற்றின் வேகமானது மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும். மாலை நேரங்களில் திடீர் சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் ஏற்பட்ட நடா புயலை அடுத்து வடக்கு மாகாணத்தில் வெப்பநிலை சடுதியாக 6 பாகை செல்சியஸ் வரை குறைந்துள்ளது. இதனால் வைரஸ் நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன.

இதேவேளை, நாடா புயல் தாக்கம் காரணமாக வடக்கில் 57 குடும்பங்களை 150க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு!!

jj

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவலால், மருத்துவமனையின் இரண்டாவது தளம் பரபரப்படைந்தது.

மாலை 5 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

மாலை 5.30 மணியவில், மூத்த அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அப்போலோ விரைந்தனர்.

மாலை 6 மணிக்கு, அப்போலோ மருத்துவமனை அருகே அ.தி.மு.க தொண்டர்களும், பெருந்திரளான தொண்டர்களும் குவிந்தனர்.

இரவு 7 மணி: அசாதாரணமாக சூழ்நிலையைத் தொடர்ந்து, தமிழக காவல்நிலையங்களுக்கு அப்போலோவில் இருந்து உத்தரவு வெளியானது.

இரவு 8 மணி : அ.தி.மு.க தொண்டர்கள் பெருந்திரளாக அப்போலோ முன்பு குவியத் தொடங்கினர். இரவு

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இரவு 9.00 மணிக்கு, அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இரவு 10 மணி : ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தனர்.

இரவு 11.30 மணிக்கு மும்பையில் இருந்து, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை விமான நிலையம் வந்தார்.

12.03 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார் ஆளுநர்.

12.15 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய ஆளுநர், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

அதிகாலை 1.00 மணி தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோவின் குவிந்து வருகின்றனர்.

ஆனால் உறவினர்களுக்கோ அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்து வரும் இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் மருத்துவமனை கேட் முன்பு நின்று கொண்டிருக்கிறார். தீபா கடந்த முறை அப்போலோ சென்ற போதும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுகுறித்து தீபா கூறுகையில்,

” அத்தைக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டதுமே மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். முதல்வரின் அண்ணன் மகள் நான் என போலீஸ் உயர் அதிகாரியிடம் தெரிவித்தும் என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. ரத்தபந்தமான என் அத்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள். எப்படியாவது அத்தையை பார்த்துவிட வேண்டும் என்று ஆசையில் காத்துக்கொண்டிருக்கிறேன்”. என்றார்.

அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி!!

apple-mirror

ஸ்மார்ட்போனை ஆக்கிரமித்து வந்த அப்பிள் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் தொழிநுட்ப கண்ணாடியை களமிறக்கியுள்ளது.

அப்படி என்ன தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் இருக்கின்றது? தற்போது தொழில்நுட்ப யுகத்தை ஆளும் அண்ட்ரொய்ட் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணாடியை நம் முகம் பார்க்க பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஸ்மார்ட் கண்ணாடி நேரம், வானிலை போன்ற அனைத்து நிகழ்வுகளையும் அறியும் வகையில் மினி கணணியாக செயல்படுகிறது.

இதில் ‘இன்டர்ஃபேஸ்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை ரபேல் டைமெக் என்பவர் உருவாக்கியுள்ளார்.

நம் கணணியில் இருப்பது போலவே ஐகான்கள் கண்ணாடியின் வல மற்றும் இடப்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஐ.ஒ.எஸ், அண்ட்ரொய்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தொடுத்திரையின் மூலம் இதனை பயன்படுத்த முடிகிறது.
இதன்மூலம் ஐகான்களை க்ளிக் செய்து மெசேஜ் படிப்பது, படம் பார்ப்பது, நியூஸ் பார்ப்பது, வீடியோ அமைப்புகள் போன்ற அனைத்து பயன்பாடுகளையும் உபயோகப்படுத்த முடிகிறது.

அப்பிள் ஐ.ஒ.எஸ் 10 இல் பயன்படுத்தப்பட்ட மென்பொருள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரபேல் கூறுகிறார்.

நம் செல்போன் லொக் ஆவதை போன்று இந்த ஸ்மார்ட் கண்ணாடியும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு லொக் ஆகி விடும். லாக் ஆகி விட்டால் ஸ்மார்ட் கண்ணாடி சாதாரண கண்ணாடி போல மாறிவிடும்.

பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் பிடல் கெஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை!!

santiago

அதிகாரத்தில் இருக்கும்போது பொது இடங்களில் தமது பெயரைப் பயன்படுத்துவது இலங்கையிலுள்ள எமக்கு பழக்கப்பட்ட ஒரு அரசியல் கலாசாரமாகும்.

ஆயினும், கியூபாவின் தன்னிகரில்லாத் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ முழு உலகத்திற்கும் முன்மாதிரியை வழங்கிவிட்டு உயிர்நீத்தார்.

நாட்டில் எந்தவொரு இடத்திற்கோ அல்லது வீதிக்கோ தன்னுடைய பெயரை சூட்ட வேண்டாம் என்ற இறுதிக் கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டப்படிப்பை பின்தள்ளிவிட்டு ஹவானா சுருட்டைக் கையிலேந்தி, சுரண்டப்பட்ட மக்களுக்காக 13 வருடகால புரட்சியை முன்னெடுத்து, 1959 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி மக்கள் குடியரசாக கியூபாவை உருவாக்கிய பிடெல் காஸ்ட்ரோ, அமெரிக்க கண்டத்தில் சோஷலிச கொள்கையை போஷித்த ஒரு அசகாய வீரராவார்.

ஒருமுறை 15 வருடகால சிறைத்தண்டனைக்கு ஆளாகிய சந்தர்ப்பத்தில், வரலாறு தம்மை விடுதலை செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தன்னிகரில்லா தலைவரின் அஸ்தி சான்டா பிஜேனியாவிலுள்ள வீரர்கள் மயானத்தில் புதைக்கப்பட்டபோது, இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட கெஸ்ட்ரோவின் கூற்றை உறுதிசெய்தனர்.

கெஸ்ட்ரோவின் இழப்பு, உலக அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒரு குறையாகும் என சுட்டிக்காட்டியுள்ள அரச தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக நிபுணர்கள், பிடெல் கெஸ்ட்ரோவிற்கு வரலாற்று ரீதியாக கிடைத்துள்ள உன்னத இடத்தை உறுப்படுத்தியுள்ளனர்.

அரச தலைவராக அன்றி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் அதனைமுன்னிட்ட உன்னிப்பாக கவனம் செலுத்திய சிரேஷ்ட மனிதராக கெஸ்ட்ரோ இன்று வீரர்கள் மயானத்தில் இளைப்பாறுகின்றார்.

அமெரிக்க களஞ்சியசாலை களியாட்ட நிகழ்வில் தீ அனர்த்தம் : பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு!!

 
அமெரிக்க ஓக்லான்ட் பிராந்தியத்திலுள்ள களஞ்சியசாலையில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 11:30 மணிக்கு தீ ஏற்பட்ட வேளை அந்தக் களஞ்சியசாலையில் 50 முதல் 100 வரையானோர் இருந்ததாக பிராந்திய தலைமை தீயணைப்பு உத்தியோகத்தரான தெரேஸா டெலோச் றீட் தெரிவிக்கிறார்.

குறிப்பிட்ட கட்டடத்தில் தீ அணைப்பு உபகரணங்கள் எதுவும் இருக்கவில்லை என்பதுடன் தீ ஏற்பட்ட வேளை அது தொடர்பில் எச்சரிக்கை செய்யும் ஒலியும் எழுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அந்தப் பண்டகசாலையில் தளபாடங்கள் நிறைந்த ஓவியர்களின் கலைக்கூடங்கள், ஓவிய மாதிரிகள் மற்றும் ஏனைய பொருட்கள் குவந்திருந்தமையால் தீயணைப்புப் படைவீரர்கள் தீயை கட்டப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பண்டகசாலையின் இரண்டாம் மாடியில் களியாட்ட நிகழ்வு இடம்பெற்ற நிலையில் அந்த மாடியிலிருந்து வெளியேறுவதற்கு மரத்தாலான படிக்கட்டுகள் மட்டுமே இருந்தாக தீயணைப்புப் படைவீரர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ‘ஓக்லாண்ட்டின் பிசாசுக் கப்பல்’ என அழைக்கப்படும் அந்தக் கட்டடம் கட்டட நிர்மாண விதிகளுக்கு அமையவா நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேற்படி கட்டடம் அனுமதி பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே நகர சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் அது தொடர்பில் அந்த சபை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

This photo taken from video provided by @Oaklandfirelive shows the scene of a fire in Oakland, early Saturday, Dec. 3, 2016.   The blaze began at about 11:30 p.m. on Friday during a party at a warehouse in the San Francisco Bay Area city.  Several people were unaccounted for.   Oakland Fire Department posted several messages throughout the night on its Twitter social media network account, including the latest one in the morning saying that fire crews would remain on the scene for several more hours to extinguish hot spots(@Oaklandfirelive via AP)

This photo provided by @seungylee14  shows the scene of a fire in Oakland, early Saturday, Dec. 3, 2016.   The blaze began at about 11:30 p.m. on Friday during a party at a warehouse in the San Francisco Bay Area city.  Several people were unaccounted for.  (@seungylee14 via AP)

A firefighter carries a hose towards a smoldering building after a fire tore through a warehouse party early Saturday, Dec. 3, 2016 in Oakland.   Oakland fire chief Teresa Deloche-Reed said many people were unaccounted for as of Saturday morning and authorities were working to verify who was in the cluttered warehouse when the fire broke out around 11:30 p.m. Friday. (AP Photo/Josh Edelson)

Firefighters assess the scene where a fire tore through a warehouse party early Saturday, Dec. 3, 2016 in Oakland.  The blaze began at about 11:30 p.m. on Friday during a party at a warehouse in the San Francisco Bay Area city.  Several people are unaccounted for. (AP Photo/Josh Edelson)

அவதானம் : தொடர் மழை காரணமாக டெங்கு தொற்று அதிகரிப்பு!!

dengu

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் தொடர் மழையினால் டெங்கு நோயாளர் தொகை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியமுள்ளதாகவும் கடந்த 11 மாதக்காலப்பகுதியில் 47182 டெங்கு நோயாளர்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அதிக தொகையிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இணங்கானப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 11 மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலும் 47182 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் குறித்த டெங்கு நோயில் பாதிக்கப்பட்டு 76 பேர் இதுவரையில் இறந்துள்ளனர். மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14376 டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 6000 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 3088 கண்டியில் 3754 பேரும் காலி மாவட்டத்தில் 2394 பேரும் டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026 பேரும் குருணாகலையில் 2286 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 2729 மற்றும் கேகாலையில் 1357 பேரும் பதுளையில் 1032 டெங்கு நோயாளர்களும் இணங்கானப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெங்கு நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டால் மற்றும் 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியான காய்ச்சல் இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசணையை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை ஆரம்பமாகின்றது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை : 7 இலட்சம் மாணவர்கள் தோற்றவுள்ளனர்!!

ol

க.பொ.த (சாதாரண தர) பரீட்சை நாளை செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 7 இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் 5669 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி வரைக்கும் நடத்தப்படவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 65 ஆயிரத்து 524 ஆசிரியர்கள் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியூ .ஜே புஷ்பகுமார ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

க.பொ.த (சாதாரண தர) பரீட்சை நாளை செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 7 இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் 5669 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதற்கான ஏற்பாடு பூர்த்திய செய்யப்பட்டுள்ளன.

நாளை ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி வரைக்கும் நடத்தப்படவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 65 ஆயிரத்து 524 ஆசிரியர்கள் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளனர்.

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 8 மணிக்கு முன்பு பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும். பரீட்சை நிலையத்திற்கு வரும் மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுசீட்டு கொண்டு வர வேண்டியது கட்டாயமாகும். பரீட்சைக்கு வரும் போது பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சரியாக உள்ளதாக என்பதனை சரிபார்த்து கொள்ள வேண்டும். தாம் விண்ணப்பித்த விடயதானங்கள், பரீட்சை நிலையங்கள், பழைய அல்லது புதிய பாடத்திட்டம் போன்ற அம்சங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

பரீச்சார்த்தர்கள் பரீட்சை நிலையத்திற்கு கையடக்க தொலை பேசி பாவனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீட்சையின் போது மோசடிகள் முற்றாக தடை விதிக்கப்படுவதுடன் , மோசடிகளில் ஈடுப்படும் மாணவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும். மோசடிகளில் ஈடுப்படும் மாணவர்கள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கு முறையீடு செய்ய முடியும்.

பரீட்சை சம்பந்தப்பட்ட முறையீடுகள் தொடர்பில் கண்காணப்பதற்கு விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் வலய பரீட்சை நிலையங்களுக்கான கண்காணிப்பு குழு தற்போது தயார் நிலையில் உள்ளது.

ஏதாவது பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறு நபர் பரீட்சைக்கு தோற்றுவதனை கண்டறிந்தால் உடனே பரீட்சை நிலையத்தில் வைத்தே குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்படுவர்.

பரீட்சை தொடர்பில் மேலதிக தகவல்களையோ அல்லது முறையீடுகள் செய்வதாயின் கீழ் வரும் தொலைபேசி இல்லங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் பிரிவு இலக்கம் 1911, பாடசாலை பரீட்சை செயற்பாட்டு பிரிவு 011 2784208,011 2784537 ,0113188350,0113140314 ஆகிய தொடர்பு கொள்ள முடியும். பொலிஸ் தலைமையகத்திற்கு தொடர்பு கொள்வதாயின் 0112421111 அல்லது பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119 க்கு தொடர்பு கொள்ள முடியும்.

நிலவில் இறங்கியவருக்கு நேர்ந்த கதி!!

moon

நிலவில் இரண்டாவதாக கால்பதித்த பஸ் ஆல்டிரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தென் துருவத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

86, வயதாகும் முன்னாள் விண்வெளி வீரரான இவர், தனியார் சுற்றுலா குழுவில் ஒருவராக அண்டார்டிகாவிற்கு விஜயம் செய்துள்ளார். உடல்நிலை சரியில்லாததை அடுத்து, தென் துருவத்திலிருந்து 1300 கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள அமெரிக்க ஆய்வு மையத்திற்கு விமானம் மூலம் ஆல்ட்ரின் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுற்றுலா நிறுவனம் அவரின் உடல்நிலை மருத்துவரின் கண்காணிப்பில் ஸ்திரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

தான் இந்த தென் துருவக் குளிரி்லிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அளவுக்கு உடைகள் இல்லாமல் இருக்கக்கூடும் என்று இந்தப் பயணம் பற்றி ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் ஆல்ட்ரின் ட்விட்டரில் ஜோக் அடித்திருந்தார்.

இத்தாலி, நியூசிலாந்து பிரதமர்கள் பதவி விலகல்!!

prime

இத்தாலியின் தற்போதைய அரசியலமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் குறித்து நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும் தோல்வியடைந்ததால், இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி பதவி விலகியுள்ளார்.

நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவாக எந்த வாக்கும் பதிவாகவில்லை என்ற தரப்பு மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் முன்னதாக தெரிவித்தன.

இத்தாலி பிரதமர் மேட்டியோ ரென்சி பரிந்துரைத்த மாற்றங்கள் மத்திய அரசை வலுப்படுத்தி, செனட் என்கிற நாடாளுமன்ற மேலவையை பலவீனப்படுத்தும்.

ஆனால், ரென்சியின் சொந்த கட்சியிலுள்ள சிலர் உள்பட பலர், இந்த மாற்றங்கள் பிரதமருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கும் என்று வாதிட்டுள்ளனர்.

இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகள், ஆட்சிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வந்த ஃபைவ் ஸ்டார் அமைப்பு தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாகும்.

இதேவேளை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயும் தமது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய போவதாக தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

-பீபீசி-

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!(படங்கள்)

வ/புளியங்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவமும், பெற்றோர் தினவிழாவும் 2016.12.02 வெள்ளிகிழமையன்று கல்லூரியின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள்  ம. தியாகராஜா அவர்களும்,  செ.மயூரன் அவர்களும் வருகை தந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.  கிராம சேவையாளர் திருமதி.உ.பிரதீபா அவர்களும், வ/புளியங்குளம் ஆரம்ப. பாடசாலை அதிபர் திரு.சு.சிவராஜா, புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி(OIC), வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு.சுந்தரலிங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்க. செயலாளர் திரு.பா.ஜெகநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15219653_1721454924839293_2369256941778551318_n 15219565_1721454661505986_3876755282256084628_n 15203139_1721454858172633_2328180596658240800_n unnamed 15338660_1721456361505816_5905167058776776755_n 15326456_1721454708172648_5537668668304954605_n img_7470 15326409_1721456621505790_5196567226278115763_n 15317737_1721456071505845_2173733529481293605_n 15267557_1721456001505852_8039206666389857743_n

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு அமைச்சர் சத்தியலிங்கத்தால் குடிநீர் இயந்திரம்!!

 
சிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் “சுத்தமான குடிநீரை சிறுவயதிலிருந்தே பருகுவோம்” செயற்திட்டத்தின்கீழ் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் வடிகட்டும் குடிநீர் இயந்திரத்தொகுதி வடக்குமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கத்தால் நேற்று முன்தினம் (02.12.2016) மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

உலகளாவிய ரீ தியில் நோய்களின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அண்மைக்காலமாக இலங்கையில் சிறுநீரக நோயின் தாக்கத்தினால் பலர் பாதிப்படைந்து வருகின்றனர்.

இலங்கையில் அதிகமாக நாட்பட்ட சிறுநீரக நோயின் பாதிப்புடையோர் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணம் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. அதிலும் மாகாணத்தில் வவுனியா மாவட்டம் முதன்மையான மாவட்டமாக காணப்படுகின்றது.

நாட்பட்ட சிறுநீரக நோயின் தாக்கத்திற்கான காரணம் மருத்துவரீதியில் சரியாக கண்டறியப்படாவிடினும் குடிநீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகமாக காணப்படுவதும் ஒருகாரணமாக கருதப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் சிறுவயதிலிருந்தே சுத்தமான குடிநீரை பருகுவோம் எனும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலைகளில் இவ்வாறான குடிநீர் வடிகட்டும் இயந்திர தொகுதிகளை பொருத்துவதன்மூலம் வடிகட்டிய சுத்தமான குடிநீரை மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்தே வழங்குவதே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

கடந்த ஆறுமாதங்களில் வவுனியா மாவட்டத்தில் ஏழு பாடசாலைகளுக்ககு இவ்வாறான குடிநீர் இயந்தித்தொகுதிகள் அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கான குடிநீர்வடிகட்டும் இயந்திரத்திற்கு கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான “இமை பவுன்டேசன்” நிதியுதவி வழங்கியுள்ளது.

பாடசாலை அதிபர் திரு.சுபாஸ்க்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா வடக்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.சிறீஸ்கந்தராஜா, புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

1 img_7463 img_7468 img_7470 unnamed