43000 முறை பலாத்காரம் செய்யப்பட்ட16 வயதுச் சிறுமி!!

abused

மெக்ஸிகோ நாட்டில் 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் பொலிஸ், நீதிபதி, பாதிரியார் உள்ளிட்ட பல நபர்களால் 43,000 முறைக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த Karla Jacinto என்ற இளம்பெண் இந்த கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் சிறுமிக்கு 12 வயதாக இருந்தபோது வறுமையின் காரணமாக பெற்றோர் சிறுமியை ஒரு கும்பலிடம் விலைக்கு விற்றுள்ளனர்.

மெக்ஸிகோவில் உள்ள Guadalajara என்ற நகருக்கு கடத்தப்பட்ட அச்சிறுமி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளார்.

12 வயது முதல் 16 வயது வரை சிறுமியை 43,000 ஆண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் 30 ஆண்கள் என 4 ஆண்டுகள் சிறுமியின் வாழ்க்கை இப்படியே கழிந்துள்ளது.

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பாதிரியார்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு ஆண்களும் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் அவல நிலை வெளியே வரத்தொடங்கியதும் கடந்த 2008ம் ஆண்டு அவர் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது 24 வயதை அடைந்துள்ள அப்பெண் தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் வாட்டிகன் சென்று போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பாலியல் தொழிலில் பெண்கள் கட்டாயப்படுத்தி ஈடுப்படுத்தப்படுவதை தடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

abuse2

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தை காலமானார்!!

adaikalanathan-father

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தந்தை இன்று (04.12.20160) ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ் வைத்திய சாலையில் காலமானார்.

செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் (வயது 83),திடீர் சுகவீனம் காரணமாக இன்று அதிகாலை மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மாலை 3.30 மணியளவில் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை, செல்வம் அடைக்கலநாதன் உறுதிப்படுத்தியுள்ளதோடு இறுதி கிரிகைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் ஒரு சிறந்த சித்த வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் விநாயகர் ஆலய பிரதிஸ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலை திரைநீக்கமும்(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் இன்று 04.12.2016  ஞாயிற்றுக்கிழமை புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலையின் திரைநீக்க நிகழ்வும்  கல்லூரி அதிபர் திருமதி. நடராஜாவின் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையின் புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தை ஓய்வுபெற்ற முன்னாள் சைவபிரகாச மகளீர் கல்லூரி அதிபர்  உமா இராசையா அவர்கள்  ஆலயத்தின் பெயர்பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு  அகிலாண்டேஸ்வரி அருளகத்தின்  அனுசரணையோடு உருவாக்கபட்ட சரஸ்வதி சிலையினை வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத  அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலின் அறங்காவலர் சபையின் செயலாளரான திரு.ஆ. நவரட்ணராஜா  திரைநீக்கம் செய்து வைத்தார்.

மேலும்  விநாயகர் ஆலயம்  மற்றும் சரஸ்வதி சிலை என்பவற்றுக்கான சுற்றுவேலி குகதாசன் குடும்பம் (குகன்மோட்டர்ஸ்) அனுசரணை வழங்கப்பட்டதுடன் அதற்கான பெயர்பலகையினை திரு பொன்னம்பலம் சாந்தகுமார் அவர்களினால் திரைநீக்கம்  செய்து வைக்கபட்டது.

மேற்படி நிகழ்வில் பாடசாலையின் புதிய அதிபர் திரு.பூலோகசிங்கம்  மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்   வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர்கள்  ஆசிரியர்கள்  மாணவர்கள் எனப்  பலரும் கலந்து கொண்டனர்.

dsc_0004 dsc_0007 dsc_0021 dsc_0025 dsc_0030 dsc_0031 dsc_0034 dsc_0046 dsc_0054 dsc_0060 dsc_0062 dsc_0065 dsc_0066 dsc_0070 dsc_0071 dsc_0083 dsc_0084 dsc_0087 dsc_0090 dsc_0092 dsc_0097 dsc_0098 dsc_0099 dsc_0101 dsc_0103 dsc_0106 dsc_0107 dsc_0108 dsc_0112 dsc_0113 dsc_0115 dsc_0116 dsc_0117 dsc_0127 dsc_0129 dsc_0132 dsc_0136 dsc_0144 dsc_0148

வவுனியாவில் மறைந்த புரட்சியாளர் பிடல் கஸ்ரோவிற்கு அஞ்சலி நிகழ்வு!!

42

கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் புரட்சியாளருமான பிடல் கஸ்ரோவிற்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு புதிய ஜனநாயக மக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களுக்கான செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் வவுனியா நகரசபை விருந்தினர் மண்டபத்தில் இன்று(04.12.2016) அனுஸ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் எழுத்தாளர் கே.கே.அருந்தவராஜா, புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன், தோழர் இரா.இராஜேஸ்வரன், தோழர் கா.மகேந்திரன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் பூ.சந்திரபத்மன், தோழர் ஜீ ந்தீசன், புதிய சிந்தனை பெண்கள் வலையமைப்பின் தலைவி நி.பிரவீனா ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர்.

இவ் அஞ்சலி நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் மறைந்த இரும்பு மனிதன் பிடல் கஸ்ரோவின் அஞ்சலிக் கூட்டம்!!

43 44 45 46

வவுனியாவில் நடைபெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்!!

31

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்ட செயற்குழு கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று(04.12.2016) ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் வன்னிமாவட்ட அமைப்பாளருமான கே.கே.மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

இதேவேளை வவுனியா மாவட்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் 25 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கட்சியின் மாவட்ட மட்ட செயற்பாடுகள், உள்ளூராட்சி சபையை எதிர்கொள்ளும் முறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் சுதந்திரகட்சியின் இளைஞர் அணி உறுப்பினரும் மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவருமான எஸ்.ஆனந்தராஜா, ஜனாதிபதி அலுவலக இணைப்பாளர்களான ஜகத்கமல்கொட, எஸ்.பத்மநாதன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

32 33 34

இணையதளங்களில் வைரலாகும் ஜெயலலிதாவின் புகைப்படம்?

jeyalitha

அப்பல்லோவில் அம்மா என்ற தலைப்பில் அவர் சிகிச்சை பெறும்போது எடுக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த இருநாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு செவிலியின் கையைப் பிடித்தவாறு ஜெயலலிதா கட்டிலின்மீது அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும், தலையில் கட்டுடன் அவர் படுத்திருப்பது போன்ற மற்றொரு புகைப்படமும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், இது போட்டோ ஷாப் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்ட வேறொரு நோயாளியின் புகைப்படம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் அதேவேளையில் காட்டுத்தீப்போல் சில தேவையற்ற வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

நீராடச் சென்ற சிறுவன் பரிதாபமாக மரணம்!!

boy-dead

நண்பன் ஒருவருடன் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணையடியில் தளவாய் என்ற இடத்தை சேர்ந்த தயானந்தன் மிறோஜன் (வயது 12) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணையடியில் உள்ள உறவினர்களின் வீட்டில் சில காலமாக வசித்து வந்த சிறுவன், பிரிதொரு சிறுவனுடன் நேற்று (03.12.2016) நீராடச் சென்ற நிலையிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கிராம மக்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்திய சாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் மடியில் உயிரை விட்ட கணவர் : உதவி செய்யாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்!!

dead

தமிழகத்தில் வங்கியில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாட்டில் கும்பகோணத்தை அடுத்து பாபநாசம் என்ற பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக ஏராளமானோர் வரிசையில் நின்றுள்ளனர்.

அவ்வரிசையில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன என்ற 75 வயது முதியவர், தன் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக தன் மனைவியுடன் நின்றுள்ளார்.

வரிசையில் ஏராளமானோர் நின்றதால் அவர்களுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து வரிசையில் கால்கடுக்க நின்ற சுப்பிரமணியன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்துள்ளார்.

அருகில் நின்ற அவரது மனைவி தையல்நாயகி, கணவரை தன் மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கூப்பிட்டுச் செல்ல உதவுமாறு அங்கிருந்த பொதுமக்களிடம் கதறியுள்ளார்.

ஆனால் அங்கிருந்த பொதுமக்களோ முதியவரின் உயிரை பொருட்படுத்தாமல் வங்கியில் பணம் எடுப்பதிலேயே குறிக்கோளாக இருந்துள்ளனர். மேலும் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனரே தவிர உதவிக்கு யாரும் முன்வரவில்லை.

நீண்ட நேரத்திற்கு பிறகு வங்கி ஊழியர்கள் அழைத்த பிறகு அங்கு வந்த 108 மருத்துவக்குழுவினர், முதியவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். வங்கிக்கு பணம் எடுக்க வந்த இடத்தில் மனைவியின் மடியில் முதியவர் உயிர்விட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்வு!!

rice

நாட்டில் அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையில் அரிசியின் விலை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கொழும்பு புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை கடைகளில் நடத்திய ஆய்வு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரணமாக பயன்பாட்டுக்கு உகந்த அரிசி ஒரு கிலோவின் விலை 90 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு கிலோ அரிசியின் விலை 60 ரூபாவாக காணப்பட்டது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் சந்தையை கட்டுப்படுத்தி வரும் காரணத்தினால் விலைகள் இவ்வாறு உயர்வடைந்துள்ளன.

பாரிய அளவிலான அரிசி வியாபாரிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அரிசியின் விலையை குறைக்க முடியும் என சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மணிக்கு 76 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் முதலாவது இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்!!

m1

அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று மிகவும் முன்னேற்றமான மற்றும் பாதுகாப்பான இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிர்கால மோட்டார் சைக்கிள் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்த பின்னர் 300 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்க கூடியது என்பது சிறப்பம்சமாகும்.

மேலும் மணிக்கு 76 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

ஜோஹெம்பர் ஜே என பெயரிடப்பட்டுள்ள இந்த இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விலை 31 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களாகும்.

மூன்று மணிநேரத்தில் மோட்டார் சைக்கிளை முற்றாக சார்ஜ் செய்ய முடியும் என்பதும் விசேட அம்சமாகும்.

m2 m3

காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க உதவிய இலங்கையர்!!

A woman writes a message on a board for passengers onboard missing Malaysia Airlines Flight MH370 and their family members, at Dataran Merdeka in Kuala Lumpur March 22, 2014. Two weeks after the airliner went missing with 239 people on board, officials are bracing for the "long haul" as searches by more than two dozen countries turn up little but frustration and fresh questions. REUTERS/Samsul Said (MALAYSIA - Tags: DISASTER TRANSPORT)

 

மலேசியாவிலிருந்து சீனாவின் தலைநகர் நோக்கி சென்ற எம்.எச்.370 பயணிகள் விமானம் வான்பரப்பில் காணாமல் போயிருந்தது. காணாமல் போன விமானத்தை தேடி பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டர்.

தற்போது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானதுடன் விமானத்தின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எம்.எச்.370 மலேசிய விமானத்தின் பாகங்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கையின் கடல்சார் விஞ்ஞானி ஒருவர் உதவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சரித்த பட்டிஆராச்சி என்ற அவர் மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

மாதிரிகளை பயன்படுத்தி அவர் மேற்கொண்ட ஆய்விற்கமைய எம்.எச்.370 மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்க கூடிய பிரதேசம் தொடர்பில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் பட்டிஆராச்சி கண்டுபிடித்து, வெளியிட்ட தகவல்களுக்கமைய ரீயூனியன் தீவில் விமானத்தின் பறக்கும் பாகம் கிடைத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் அந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு சிதைந்த பாகங்கள் கிடைக்கும் பிரதேசம் மாத்திரம் இன்றி ரீயூனியன் தீவிற்கு குறித்த பாகங்கள் வந்து சேறும் காலத்தை உட்பட சரியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் ஒரு வருடத்திற்கு பின்னர் எம்.எச்.370 மலேசிய விமானத்திற்கு என்ன நடந்ததென தேடிச் சென்ற ஆய்வு பணியாளரான அமெரிக்க நாட்டை சேர்ந்த பிலேன் கிப்ஸனுக்கு, மடகாஸ்கர் கடலோரத்தில் விமானத்தின் ஒரு பாகம் கிடைத்துள்ளது. எனினும் அந்த பாகம், பேராசிரியர் பட்டிஆராச்சி வழங்கிய தகவலுக்கமையவே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2014ம் ஆண்டு மார்ச் மாதம் 227 பயணிகள் உட்பட 239 பேருடன் பயணித்த, மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் காணாமல் போயிருந்தது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக மலேசிய பிரதமர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியில் சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நடந்த பரிதாபம்!!

capture

ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவருக்கு தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு சென்றுள்ளார்.

பிரபல கல்லூரியில் கல்விகற்கும் 14 வயதுடைய மாணவர் ஒருவர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இணையத்தளத்தில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இந்த தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கோடீஸ்வரர் : டெக்ஸி சாரதியின் வங்கிக் கணக்கில் 9800 கோடி ரூபா வைப்பீடு!!

taxi-driver

இந்தியாவைச் சேர்ந்த டெக்ஸி சாரதி ஒருவர், தனது வங்கிக் கணக்கில் 9800 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான தொகை வைப்பிலிடப் பட்டுள்ளதாக அவரின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் காட்டப் பட்டுள்ளதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி யடைந்தார். ஆனால், அப் பணத்தை அவர் அனுபவிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வாடகைக் கார் சாரதி யான பல்விந்தர் சிங், பாட்டியாலா ஸ்டேட் வங்கியின் கிளையொன்றுக்குச் சென்று பணப்பரிமாற்றம் செய்த பின்னர் வீடு திரும்பினார்.

அதன்பின் அவரின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் நிலுவை மீதியை பார்வை யிட்டபோது, அவரின் கணக்கில் 98,05,95,12,231 இந்திய ரூபா, அதாவது சுமார் 9,800 கோடியே 95 இலட்சம் இந்திய ரூபா (21256 கோடி இலங்கை ரூபா) வைப்பிலிடப்பட் டுள்ளதாக அதில் காட்டப் பட்டிருந்தது. தனது கணக்கில் பொதுவாக சுமார் 3,000 ரூபாவே மிகுதியாக இருக்கும் என பல்விந்தர் சிங் கூறுகிறார்.

இந்நிலையில், 98 பில்லியன் ரூபா மிகுதியாக உள்ளதாக காட்டப் பட்டுள்ளதால் குழப்பமடைந்த பல்விந்தர் சிங், மறுநாள் குறித்த வங்கிக் கிளைக்குச் சென்று விசாரித்தார்.

ஆனால், அங்கு அவருக்கு ஒரு கோடி ரூபாவும் கிடைக்கவில்லை. மாறாக புதிய கணக்குப் புத்தகமொன்றை வங்கி அதிகாரிகள் வழங்கினராம்.

அந்த வங்கியின் முகாமையாளர் சந்தீப் கார்க் இது தொடர்பாக கூறுகையில், ஊழியர் ஒருவரின் தவறினால் இந்த குழப்பம் ஏற் பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பல்வீந்தர் சிங்கின் கணக்கில் வைப்புத் தொகையை 200 ரூபாவை பதிவு செய்வதற்காக 11 எண்கள் கொண்ட, வங்கியின் பொதுக் கணக்கு இலக்கத்தை வைப்புத் தொகையாக ஊழியர் ஒருவர் பதிவு செய்து விட்டதாக வங்கியின் முகாமையாளர் சந்தீப் கார்க் தெரிவித்துள்ளார்.

3 வயதான இரட்டையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த தாய்லாந்து பெற்றோர்!!

w1

தாய்­லாந்தைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் தமது இரட் டைப் பிள்­ளை­க­ளான 3 வய­தான சிறு­வ­னுக்கும் சிறு­மிக்கும் திரு­மணச் சடங்கு வைத்­துள்­ளனர்.

இத்­ தி­ரு­மணச் சடங்கை நடத்­தா­விட்டால் இவர்­களில் ஒருவர் இறந்­து வி­டுவார் என பெற்றோர் நம்புவதே இதற்குக் காரணம்.

இச்­ சி­றார்கள் முன்­பி­றவில் தம்­ப­தி­யி­ன­ராக இருந்­த­தா­கவும் நம்­பப்­ப­டு­கி­றது. இவர்கள் இரட்டைச் சகோ­த­ர ­ச­கோ­தரி­யாக மறு­பி­றவி எடுத்­துள்­ளனர்’ என மேற்­படி இளம் மண­மகன் மற்றும் மணமகளின் தாயான சசி ஹரின்­மேக்­கா­வனித் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், இவர்கள் இரு­வ­ருக்கும் திரு­மணம் செய்து வைக்­கா­விட்டால், இவர்­களில் ஒருவர் இறந்து­வி­டுவர் என கூறப்­பட்­டதால் இத்­ தி­ரு­மணம் நடத்­தப்­பட்­ட­தா­கவும் சசி ஹரின்­மேக்­கா­வனித் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி சிறார்­க­ளுக்கு 3 வரு­டங்கள் மற்றும் 4 மாத வய­தா­கு­கி­றது. தாய்லாந்தின் அங்தோங் மாகாணத்தில் பாரம்பரிய முறைப்படி இத் திருமண வைபவம் நடைபெற்றது.

w2

2016 உலக அழகுராணிப் போட்டியில் தனக்கு வாக்களிக்குமாறு கோருகிறார் இலங்கை அழகுராணி அம்ரிதா!!

21

2016 ஆம் ஆண்டின் உலக அழ­கு­ராணி (Miss World 2016) போட்டி அமெ­ரிக்­காவில் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.

இலங்­கையின் சார்பில் மிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா 2016 அழகு­ராணி அம்­ரிதா டி சில்வா பங்­கு­பற்­று­கிறார்.

இறுதிச் சுற்று எதிர்­வரும் 18 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. 116 நாடு­களின் அழ­கு­ராணிகள் இப் ­போட்டியில் பங்­கு­பற்­று­கின்­றனர்.

இப்­ போட்­டியில் பங்­கு­பற்றும் அழ­கு­ரா­ணி­களில் தமது அபி­மா­னத் ­துக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு இணையத்தளம் மூலம் மக்கள் வாக்­க­ளிக்­கலாம். இந்­நி­லையில், தனக்கு வாக்­க­ளிக்­கு­மாறு இலங்கை அழ­கு­ராணி அம்­ரிதா டி சில்வா கோரி­யுள்ளார்.

http://pageantsnews.com/vote-now-will-win-miss-world-2016/ எனும் இணை­யத்­த­ளத்தில் வாக்­கு­களை அளிக்க முடியும். இப் போட்டியில் பங்குபற்றும் அழகுராணிகள் சிலரை படங்களில் காணலாம்.

22 23 24

தூக்கம் குறைந்தால் இதயம் பாதிக்கும் : எச்சரிக்கிறது புதிய ஆய்வு!!

sleep

நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஏற்படும் தூக்கமின்மையின் விளைவாக இதயம் இயங்குவதில் பெரிய அளவில் பாதிப்பு நேரிடலாம் என புதிய மருத்துவ ஆய்வொன்றின் முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர், அவசர மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட 24 மணி நேர சேவைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் பெரும்பாலும் அன்றாடம் குறைந்த நேரமே தூங்க முடிகிறது.

ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டேனியல் கியூட்டிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேர சேவைப் பணியாளர்களில் குறைவான தூக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு இதய நோய் சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

போதிய தூக்கம் இல்லாததால், இதய பாதிப்புடன் இரத்த அழுத்தமும் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்கின்றது அந்த ஆய்வு முடிவு.

சராசரியாக 31.6 வயது கொண்ட 19 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

24 மணி நேரப் பணியில் ஈடுபடுவதற்கு முன்பும், அந்தப் பணி முடிந்து மூன்று மணி நேரம் தூங்கிய பிறகும் இவர்களிடம் இருந்து இரத்த மாதிரி, சிறுநீர் மாதிரி மற்றும் இரத்த அழுத்த அளவீடு ஆகியவற்றைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது.

குறைந்த அளவே தூங்கிய இவர்களுக்கு இரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வு தொடர்பாக கியூட்டிங் கூறும்போது, “தினசரி நீண்ட நேரம் பணியாற்றுபவர்களின் குறைந்த அளவிலான தூக்கத்தையொட்டி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முன்னோட்ட ஆய்வில், தூக்கக்குறைவு காரணமாக இதய பாதிப்புக்கான சாத்தியம் அதிகம் என்பது தெரியவந்தது.

இதைப்போலவே அதிக நேரம் பணிபுரியக்கூடிய இதர தொழிலைச் சேர்ந்தவர்களிடமும் நீண்ட கால அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

ஷிஃப்ட் அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வின் முடிவுகள் உறுதுணை புரிகிறது” என்றார் அவர்.

இந்த ஆய்வின் முடிவைப் பார்க்கும்போது, நீண்ட நேரம் பணிபுரிபவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுபவர்கள் போதுமான அளவில் தினமும் தூங்குவது அவசியம் என்பது அறிவுறுத்தப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.