வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புகுமுக மாணவர்களுக்கான போதைப்பொருளின் பாதிப்புகள் தொடர்பான செயலமர்வொன்று நேற்று (02.12.2016) வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இந் நிகழ்வில் சுமார் 200 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக ஜனாதிபதி செயலணி அதிகாரிகள் , வளவாளர்கள் மற்றும் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந் நிகழ்வில் போதைப்பொருள் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பேராசிரியர் சிறிசேன, வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், உதவி அரசாங்க அதிபர் என்.கமலதாசன், யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
எந்தவொரு உயிரினத்திற்கும் பிறப்பு இருந்தால் இறப்பும் இருக்கும். இது தான் இயற்கையின் நீதி.
மனிதனின் இறப்பு என்பது பல விதமாக நடக்கும். இறந்த பின்னர் மனிதன் என்னவாகிறான், அவன் ஆன்மா என்னவாகிறது, இதற்கு பெரும்பாலான மக்களுக்கு விடை தெரிய வாய்ப்பில்லை.
இறந்தவர்கள் திரும்ப உயிர் பெற்று வந்து, நான் இறந்தவுடன் இப்படி இருந்தேன் என கூறுவதை கேள்விப்பட்டதுண்டா?
அப்படிப்பட்ட உண்மை அனுபவத்தை அனுபவித்தவர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள் தெரியுமா? அவர்களின் விசித்திர அனுபவத்தை நீங்களே கேளுங்கள்,
கடந்த 2011 ஆம் வருடம். பிரித்தானியா நாட்டில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் இதய நோய் காரணமாக ஒரு நோயாளியை ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சை பார்த்து கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.
அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்களில் முயற்சியால் அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் மயக்கத்திலிருந்து அவர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கேட்பவர்களை நடுநடுங்க வைத்தது.
அதாவது, மாரடைப்பு ஏற்பட்டவுடன் தன் உடலிலிருந்து தான் வெளியில் வந்ததாகவும், இந்த அறையின் ஓரத்தில் நின்று கொண்டு தனக்கு வழுக்கைத்தலை மருத்துவர் ஒருவர் சிக்கிச்சையளிப்பதை தானே பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
அவர் வீட்டிலிருந்து மயக்கநிலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் எப்படி அவர் சரியாக மருத்துவரை பற்றி கூறியுள்ளார் பார்த்தீர்களா? அதான் ஆச்சரியம்!
இன்னொரு சம்பவம், கடந்த 1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு வந்து இதயதுடிப்பு நின்றவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இருந்தபோது, நடந்ததை பற்றி அவரே கூறுகிறார்
என் உடலைவிட்டு நான் அப்படியே மேலே போனேன், மருத்துவமனை மொட்டை மாடியில் ஒரு செருப்பும், பூக்களும் இருப்பது எனக்கு தெரிந்தது என அவர் கூறினார். அங்கு போய் மருத்துவர்கள் பார்த்த போது உண்மையிலேயே அங்கு அந்த பொருட்கள் இருந்துள்ளது.
இது போல பல உண்மை சம்பவங்கள் உலகெங்கிலும் இங்கொன்றுமாக, அங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது சம்மந்தமாக மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த 101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப் பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம் கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர் இயங்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் விலங்குகள் அல்லது செடிகொடிகளை பார்த்தல், அவர்கள் அறைகளில் நடப்பது தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மறுபடி நடத்தல் போன்ற பல விடயங்களை தாங்கள் உணர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.
இப்படியான பல தனி மனித உதாரணங்கள், பல மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், இறந்தவர்கள் அதன் பின்னர் என்ன ஆவார்கள் என்பதை முற்றிலுமாக யாராலும் கணிக்கமுடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.
ஹேக்கர்கள் xHamster ஆபாச தளத்தின் 3,80,000 பயனர்களின் விவரங்ளை கைப்பற்றி வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆபாச தள பயனர்களின் தகவல்களை கைப்பற்றிய ஹேக்கர்கள், ஆயிரக்கணக்கான பயனர் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளனர்.
குறித்த தகவல்கள் சரியாக இருந்தால் இதன் மூலம் தளத்தை பயன்படுத்திய ஆண்கள் மற்றும் பெண்களின் அடையாளங்களை அம்பலப்படுத்தக் கூடும்.
குறித்த தகவல்களை தொழில்நுட்ப இணையதளமான மதர்போர்டு ஆய்வு செய்துள்ளது. அதில், அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 40 மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் அமெரிக்க, பிரித்தானியா, பிற நாடுகளின் அரசு மின்னஞ்சல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை xHamster ஆபாச தளம் மறுத்துள்ளது. பயனர்களின் தகவல்கள் ஏதும் கசிய வாய்ப்பில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.
எனினும் தொழில்நுட்ப இணையதளமான மதர்போர்டு, ஹேக்கர்கள் வெளியட்ட பட்டியிலிருந்த மின்னஞ்சலை பயன்படுத்தி xHamster ஆபாச தளத்தில் புதிய கணக்கை தொடங்க முயற்சி செய்துள்ளது.
ஆனால், குறித்த மின்னஞ்சல் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாக xHamster ஆபாச தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கசிந்த தகவல்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால், xHamster ஆபாச தளம் பயனர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் நபர் ஒருவர் கள்ளக் காதலியை கழுத்தை நெறித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் வெள்ளத்தாய் என்ற பெண் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
கணவனை பிரிந்து 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்த வெள்ளத்தாய்க்கும், அப்பகுதியை சேர்ந்த முருகன் என்ற நபருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
முருகனுக்கு திருமணம் ஆகி குடும்பம் சிவகிரியில் இருந்துள்ளது. இந்நிலையில், ஊரில் உள்ள குடும்பத்திற்கு தெரியாமல் முருகன் வெள்ளத்தாயுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், முருகனுக்கு வெள்ளத்தாய் மீது சந்தேகம் ஏற்பட்ட இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று வெள்ளத்தாயின் மகன் பள்ளிக்கு சென்ற நேரம் பார்த்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த முருகன் வெள்ளத்தாயை மின் வயரால் கழுத்தைக் இறுக்கி கொன்று தப்பியோடியுள்ளார். வீடு திரும்பிய மகன் தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவலறிந்த சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார் வெள்ளத்தாய் உடலை மீடடு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாகியுள்ள குற்றவாளி முருகனை தீவரமாக தேடி வருகின்றனர்.
சின்னத்திரையில் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் மதுரை முத்து, சொந்த வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்தக் கட்டப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவிலும் தன்னுடைய திறமையைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு மதிய இடைவேளையின்போது அவரிடம் பேசினோம்,
”எதுக்கு உங்க மேல இவ்வளவு வதந்தி?”
”அதுதான் எனக்கும் தெரியல. எது எப்படி இருந்தாலும், என்னைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். என்னோட முதல் மனைவியைப் பத்தியும் தெரியும். முதல் மனைவி பற்றிய சில தேவையில்லாத வதந்திகளை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவங்களுக்கு கடவுள் பக்தி அதிகம். கோயில் கோயிலா அடிக்கடிப் போவாங்க.
நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா, அவங்களுக்கு பக்தி விஷயத்துல ஈடுபாடு அதிகமா இருந்தது. அப்படி கோயிலுக்குப் போகும்போதுதான் விபத்து ஏற்பட்டிருக்கு. அவங்க மேல நான் அவ்வளவு பாசம் வச்சிருக்கேன். அதனாலதான் ஃபேஸ்புக்ல அவங்களப் பத்தி உருக்கமானப் பதிவு போட்டேன். என்னோட அம்மாவுக்கு 77 வயசாகுது. அவங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கு. அப்பாவுக்கு 85 வயசாகுது. அவருக்கு ஹார்ட் பிராப்ளம்.
இப்படி அவங்களப் பாத்துக்கிறதே கஷ்டமா இருக்கும்போது, இரண்டு பெண் குழந்தைகளையும் பார்க்க வேண்டியிருக்கு. உண்மையில், அதனால தான் திருமணம் பற்றி முடிவெடுக்க வேண்டியதாப் போச்சு. நான் ஃபேஸ்புக்ல முதல்ல போட்ட மாதிரி திருமணம் ஆனது உண்மைதான். என்னோட குழந்தைகளை பராமரிப்பதற்காகத்தான் அந்த முடிவை எங்க வீட்ல எடுத்தாங்க. நிறைய பேர் இதை தவறா எடுத்துக்கிட்டதால்தான் ஃபேஸ்புக்ல இருந்து அந்த போஸ்டை நீக்கிட்டேன்.”
”நீங்க இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் பற்றி?”
”அவங்க பேர் நீத்தி. என் மனைவியோட பெஸ்ட் பிரண்ட் இவங்க. இப்போ மதுரையில பல் மருத்துவரா இருக்காங்க. சின்ன வயசுலயே அவங்க அப்பா, அவங்கள விட்டுச் சென்றதால, அம்மா வளர்ப்புல வளர்ந்தாங்க.
அதனாலயே அவங்களுக்கு, ‘நம்மள மாதிரி இந்த குழந்தைகளும் பாசம் இல்லாம வளர்ந்துடக்கூடாது. அவங்கள பாத்துக்கிறதுக்காகவாவது திருமணம் செய்துக்கிறேனு’ சம்மதிச்சாங்க. அவ்வளவு படிப்பு, வசதி இருந்தும் மனித நேயத்தோடு ஏத்துக்கிட்டதுதான் பெரிய விஷயமா நான் பார்க்கிறேன். என்னோட முதல் மனைவி லேகா என்கின்ற வைய்யம்மாள் உயிரோட இருக்கும்போதே அடிக்கடி இரண்டு குழந்தைகளும் இவங்க வீட்டுப் போகும். அவங்களும் எங்க குழந்தைகள் மேல ரொம்ப பாசம் வச்சிருந்தாங்க.
இப்போ அவங்கள திருமணம் செய்து கொண்ட பிறகு, என்னோட இரண்டாவது பொண்ணு முத்ரா கிளாஸ் பர்ஸ்ட் வந்திருக்காங்க. முதல் பொண்ணு யாழினியும் இரண்டாம் வகுப்புல நல்லாப் படிக்கிறாங்க. இரண்டு பேருக்குமே வீட்ல டியூசன் சொல்லித் தராங்க நீத்தி.”
”எப்படி தொடர்ந்து உங்களால இவ்வளவு ஜோக்ஸ் எடுக்க முடியுது?”
”எந்நேரமும் இதே நினைவா தான் இருக்கும். புதுசுப் புதுசா கிரியேட் பண்ணிட்டே இருப்பேன். எப்பவும் ஒரு மனுஷனை உயிர்ப்போடு வைக்கிறது கிரியேஷன் தான். அதை கத்துத் தர முடியாது. ஒவ்வொருத்தருக்கும் அதுமேல ஈடுபாடு அதிகம் இருக்கணும்.
மேலும், எந்த துறையா இருந்தாலும் சரி, அதுல எதாவது ஒரு வித்தியாசத்தை காண்பிக்கணும். அப்பதான் மக்கள் ஏத்துப்பாங்க. இதுவரைக்கும் 320 ஸ்டான்ட் அப் காமெடிகள் பண்ணியிருக்கேன். 60 க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியிருக்கேன். என்னாலயே எது மொக்கை, எது நல்லதுனு டிசைட் பண்ண முடியும். அதனால நானும் ரசிக்கிற விஷயத்தைத்தான் மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கிறேன்.”
”அப்போ ரொம்ப பிஸியா இருக்கீங்களா?”
”நான்கு வருஷமா பட்டிமன்ற நடுவரா இருந்திருக்கேன். அதே சமயத்துலதான், சன் டிவி ‘சன்டே கலாட்டா’வுலயும் நடிச்சிட்டு இருந்தேன் இப்போ, சன் டிவில ‘காமெடி ஜங்ஷன்’, ஆதித்யாவுல, ‘ஆதித்யா திருவிழா’ என ஓய்வில்லாம ஓடிட்டு இருக்கேன்.”
”சினிமாவுல நிறைய படங்களில் கமிட் ஆகியிருக்கீங்களாமே?”
”சினிமாவுல இயக்குநராகணும் என்பதுதான் மிகப்பெரிய ஆசை. 2005 ல் விஜய் டிவி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில டைட்டில் வின்னரா வந்தேன். முதன் முதல்ல ஸ்டான்டப் காமெடியனா வந்தது நான் தான். இப்போ சினிமாவுல நடிகனா மாறியிருக்கேன். இப்போ வெள்ளித்திரையில நான்கு படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். ‘
இவன் ஏடாகுடமானவன்’, ‘ரோஸ் கார்டன்’, ”தண்ணி வண்டி’, ‘ஒரு தலை காதல்’ இந்த நான்கு படங்களும் பண்ணிட்டு இருக்கேன். இது மட்டும் இல்லாம பெயர் வெளியிடப்படாம இருக்கும் சில படங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரத்துல வெளியாகவுள்ள இந்த படங்கள் மூலமா நல்ல நகைச்சுவை நடிகனா என்னை நீங்க பார்க்கலாம்.”
யாழ். கோப்பாயில் கொட்டும் மழையைப் பயன்படுத்தி நேற்று அதிகாலை கத்தி முனையில் இளம் தம்பதிகளை அச்சுறுத்தி 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
ஏழு பவுண் தாலிக் கொடி உட்பட சங்கிலி, காப்பு, மோதிரம் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று அதிகாலை யாழ்.கோப்பாய் மத்தி அண்ணமார் கோவிலடியிலுள்ள வீடொன்றின் முன்னாள் வெளிச்சம் வருவதைக் கண்ட வீட்டிலிருந்தவர்கள் கள்ளன்…. எனக் கத்தியவாறு வீட்டின் முன்னாலுள்ள மின்குமிழை எரிய விட்டுள்ளார்கள்.
வீட்டின் பின்பக்கத்திலிருந்து முன்னரே எடுத்து வைத்திருந்த ஆயுத்தைக் கொண்டு முன்கதவையுடைத்து உள்ளே நுழைந்த கள்ளர்கள் வாள் மற்றும் கொட்டன்களுடன் வீட்டிலிருந்தவர்களைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.
வீட்டிலிருந்தவர்களை சமையலறைக்குள் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள் கணவரின் தாயைத் தாக்கியதுடன், கணவரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.
இதன் போது வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையிட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஐந்து பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டுக் கும்பலில் ஒருவருக்குச் சுமார் 65 வயதிருக்கும் எனவும், ஏனைய நான்கு பேரும் இளைஞர்கள் எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களில் மூவர் முகமூடி அணிந்திருந்ததாகவும், இருவர் முகமூடி அணியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
டிசம்பர் 3 (December 3) கிரிகோரியன் ஆண்டின் 337 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 338 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 28 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
2007 – இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்
1592 – “எட்வேர்ட் பொனவென்ச்சர்” என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (Collector) நியமிக்கப்பட்டார்.
1800 – மியூனிக் அருகில் ஹோஹென்லிண்டென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர்.
1818 – இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21வது மாநிலமானது.
1854 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
1903 – சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.
1904 – வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1912 – பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, மற்றும் சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.
1917 – 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.
1944 – கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
1967 – தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
1971 – இந்திய-பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.
1973 – வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1976 – ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார்.
ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1978 – வேர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
1984 – இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர்.
150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1989 – மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
1997 – நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
1999 – செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது.
14 வயதான பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 9ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சின்னாபடுவ பிரதேசத்தினை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மதுரன்குலிய பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவி தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மன்னார் கடலோரத்தில் நேற்று (02.12.2016) இறந்த நிலையில் கடற்பன்றி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மிகப் பெரியகடல் மலைப் போல கரை ஒதுங்கிய கடற் பன்றியை கடற்படையினர் அப்புரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கே உரித்தான 08 கடற்பன்றிகளில் பாதி அழிவடைந்து விட மிகுதியும் தற்போது அழிவை எதிர் நோக்கியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கடற்பன்றிகளை காண்பதற்கே அரிதாகவுள்ள நிலையில், இவற்றின் அழிவு இலங்கைக்கு மிகப் பெரும் இழப்பு என மன்னார் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடந்த மாதம் மன்னார் கடலோரத்தில் இதே போன்ற பாரிய கடற்பன்றி ஒன்று இறந்த நிலையில், கரை ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கொலம்பியாவில் 75 பேரின் உயிரை காவு கொண்ட விமான விபத்து தொடர்பில் பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், குறித்த விமானத்தில் விமானியாக தனது முதல் பயணத்தை ஆரம்பித்த 29 வயதான Sisy Arias என்ற பெண் தொடர்பிலான செய்திகள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் விமானி விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானியாக தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கும் இன்றைய நாள் தனக்கு மிகவும் அதிஷ்டமான நாள் என குறித்த பெண் விமானி அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விமானியாக தனது முதல் பயணத்தை ஆரம்பித்த குறித்த பெண்ணுக்கு அது கடைசி பயணமாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற தலைப்பில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் நான்காவது பகுதி இது.
நான் சொன்னதை மிக நிதானமாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. அவசியம் என்றால் மட்டுமே கேள்வி கேட்டார்.
அப்போதுதான் எனக்கொரு மன உறுத்தல் இருந்தது. என்னைப் பற்றியும் என் கணவரைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோமே, என் கணவருடன் தூக்குமர நிழலில் இருக்கும் மற்ற இருவரைப் பற்றியும் பேசவேண்டும், அவர்களும் குற்றமற்றவர்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிவிட வேண்டும் என்று அவர்களைப் பற்றி பேசினேன்.
அதை அவர் விரும்பவில்லை. அவர்களும் நிரபராதிகள்தான் என்று சொல்ல வந்தேன். ஒரு தேசத்தின் மிகப்பெரிய தலைவர், முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு, இவ்வளவு மோசமாகவா விசாரணை நடத்தப்பட்டது? என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும் அவரது கோபம் இருந்திருக்கலாம்.
எங்களின் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நீண்டது. 50 நிமிடங்கள் வரை நான் சொன்ன விளக்கத்தை எல்லாம் உள்வாங்கிக் கொண்டே சின்னச் சின்னக் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
நான் பேசி அவர் கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவருக்கு வேண்டிய விளக்கங்களை, சந்தேகங்களைப் பெற்றுக்கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் பார்க்காமல், என்னிடம் வந்தார்.
என்னைச் சுதந்திரமாகப் பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்தார். தேவையான இடங்களில் மட்டுமே குறுக்கிட்டுப் பதில் பெற்றார். மற்றபடி என்னை முற்றாகப் புறக்கணித்து விடவில்லை என்பதே அவரின் மேலான குணத்தைக் காட்டியது.
எல்லாமும் பேசி முடித்து அவர் கிளம்பிய போது, மேடம், நீங்கள் நல்லபடியாக வீடு போய் சேர்ந்தீர்கள் என்ற செய்தி எனக்கு வரும் வரை நான் சாப்பிடாமல்தான் இருப்பேன். நல்லபடியாக சென்றடைந்தீர்கள் என்ற தகவல் வந்த பிறகே சாப்பிடுவேன். அதனால், நீங்கள் நல்லபடியாக சென்றடைந்தேன் என்ற தகவலை எனக்கு கிடைக்க வழி செய்தால் எனக்கு நிம்மதி’ என்று நான் கூறியபோது அவரும் சாந்தமான முகத்தோடு, ஒன்றும் பிரச்னை இல்லை. அப்படியே செய்கிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பிப் போனார்.
நான் இப்படிக் கேட்டதற்கு எனது 17 வருடகால வலியே காரணம். போகிற போது தற்செயலாக ஏதாவது அவருக்கு நடந்தாலும் அந்தப் பழி என்னை வந்து சேர்ந்து விடும் என்ற பயம் என்னை கவ்விக்கொண்டிருந்தது. அப்படி மீண்டும் ஒரு பழி வருவதை தாங்கும் சக்தி துளி அளவும் இல்லை. ஏற்கெனவே நடைபிணமாக உள்ளோம். இனி என்ன இருக்கிறது?
சொன்னபடியே அடுத்த நாள் மதியம் நான் உணவை மறுத்து இருந்தேன். அந்தத் தகவல் சிறை அதிகாரிக்குப் போனது. அவர் டெல்லி வரை தொடர்பு கொண்டு விசாரித்து, மேடம் நல்லபடியாக வீடு போய் சேர்ந்திருக்கிறார் என்ற தகவலை மாலையில் கூறி அனுப்பினார். அதன் பிறகுதான் நான் இரண்டாவது நாளன்று இரவு உணவைச் சாப்பிட்டேன்.
இந்தச் சந்திப்பை பற்றி நான் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. வக்கீலையும் அம்மாவையும் வரவழைத்து அவர்களிடம் மட்டும் சொல்லி வைத்தேன். அவர்களும் அதை வேறு யாரிடமும் கூறவில்லை. கமுக்கமாகவே வைத்திருந்தார்கள்.
பிரியங்கா அவர்கள் சந்தித்து சென்ற பிறகு 11 நாள் கழித்து தான் என் கணவர் என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இதைச் சொன்னேன். ஒரு மாதம் கழித்து வேறு ஒரு வழக்கறிஞர் மூலம் அந்தத் தகவல் பரப்பப்பட்டது. அதன் பிறகு எங்கள் சந்திப்பின் சாதக பாதகம் பற்றி மீடியாக்கள் விதம் விதமாக எழுதித் தள்ளின.
நாங்கள் வெளியிடாத இரகசியம் வேறு யாரால் தெரியத் தொடங்கியது; அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்றும் தெரியத் தொடங்கியது.பிரியங்கா அவர்கள் என்னைச் சந்தித்தது வேறு வேறு விஷயங்களை எல்லாம் முடிச்சுப்போட்டு பேச வைத்துவிட்டது.
அதில் முதலாவது அவர் என்னைச் சந்தித்த பிறகுதான், ‘நான் எதையோ சொல்லிவிட்ட பிறகுதான்’ இலங்கையில், இன அழிப்பு போர் தீவிரமடைந்து கோரமாக முடிந்தது என்று விஷமத்தனமானப் பிரசாரத்தை இங்கே சிலர் செய்தார்கள்.
இந்த உண்மை தெரியாத சிலரும் வலியின் காரணமாக என்னைத் தவறாகப் பேசினார்கள். சிலர் எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்று அவதூறு பரப்பினார்கள். சிலர் எனது விடுதலைக்கான ஆதரவினை முழுமையாகத் தடுத்து விடத் திட்டமிட்டு அந்தப் பழிகளை என்மீது சுமத்தி பிரசாரம் செய்தார்கள்.
அப்படி பிரசாரம் செய்தவர்கள் நான் அப்படி என்னதான் சொன்னேன் என்றும் சொல்லி இருக்கலாமே? அப்படி என்னதான் என்னிடம் இருந்தது? வெளியில் உள்ள அவர்களுக்குத் தெரியாத விஷயமா உள்ளே இருக்கும் எனக்குத் தெரிந்திருக்கப்போகிறது?
எங்களை 60 நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தார்கள். பல அதிகாரிகளிடம் பல தகவல்கள் இருந்திருக்கலாம். ஒரு வருடம் புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள், சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது, பிறகு பல்நோக்கு விசாரணை ஒன்று போடப்பட்டதே, அவர்களும் 15 வருடம் விசாரித்தபடி இருக்கின்றார்களே, இதிலெல்லாம் கிடைக்காத ஒரு தகவலுக்கா பிரியங்கா என்னைத் தேடி வந்திருக்கப் போகிறார்?
அவருக்கு ஏதோ ஒரு அவநம்பிக்கை இருந்திருக்க வேண்டும். நாங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை விரும்பிக் கொடுத்திருந்தோம் என்பதை அவர் நம்பவில்லை. பல ஆண்டுகளாக அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை அறிந்துகொள்வதற்காகக்கூட என்னை சந்தித்திருக்கலாம்.
சோனியாவை சந்தித்த பெங்களூரு ரங்கநாத் சொல்லாத தகவலையா நான் சொல்லி இருக்க முடியும்?இலங்கையில், இறுதி இன அழிப்புப் போர் 2007-ம் ஆண்டு வேகம் எடுக்கத் தொடங்கியது. அதற்கு முந்தைய ஆண்டே அந்தப் போருக்கு ‘ஆபரேஷன் பெக்கான்’ எனப் பெயரே வைத்து விட்டிருந்தார்கள். இதற்கு ஓராண்டு கழித்து 2008-ல்தான் இங்கே வேலூர் சந்திப்பு நடந்தது.
எனவே எனது சந்திப்புக்கும் இறுதிப் போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரியங்கா எதிர்பார்த்து வந்தது என்னிடம் இருந்து அவருக்குக் கிடைத்து இருந்தால், அவர் திருப்தி அடைந்து இருக்க வேண்டும், அவர் எனது விடுதலைக்கு வழிவகை செய்து இருக்க வேண்டும்.
ஆனால், எனக்கு சாதகமாக இருந்த சூழ்நிலைகள் அப்படியே எதிராக அல்லவா மாற்றப்பட்டு விட்டன. சிறையிலும் எனக்குத் திட்டமிட்ட துன்பங்கள் இழைக்கப்பட்டன. விடுதலையைத் தடுக்க பல பழிகள் சுமத்தப் பட்டன. சிறைக்குற்றம் என ஒரு வழக்கும் ஜோடிக்கப்பட்டது. பின்பு உயர் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.
இது தவிர அந்தச் சந்திப்புக்குப் பிறகு சிறையில், எனக்குத் திட்டமிட்ட உளவியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று நான் பைத்தியம் ஆகிவிட வேண்டும் அல்லது தற்கொலை செய்திட வேண்டும். இதனைக் குறிவைத்து விதம் விதமான இம்சைகள் என்மீது ஏவப்பட்டன.
சிறைமாற்றம் செய்யப்பட்டேன். அவதிப்பட்டேன். கணவரைச் சந்திக்க அனுமதி இல்லாது ஒரு வருடத்துக்கு மேல் அவதிப்பட்டேன். வாயும், வயிறும் அவிந்து போய் உணவு எடுக்க முடியாமல், பல மாதங்கள் அவதிப்பட்டேன். இப்படி எனக்கு ஆக வேண்டும் என ஏதோ ஒரு மாத்திரையை எனக்கான உணவில் கலந்து தினமும் கொடுத்துள்ளார்கள்.
இதனை ஒரு மனச்சாட்சி கொண்ட காவலர் என்னிடம் சொன்ன பிறகு அவர்கள் தருகிற உணவினை அப்படியே வாங்கி இரகசியமாகக் கொட்டிவிடுவேன். பழங்கள், பிஸ்கட்டுகள் மட்டும் சாப்பிட்டு பல மாதங்கள் கழித்தேன்.
இவை எல்லாம் ஏன் நடந்தன… எப்படி நடந்தன என்பதை வெளியுலகுக்கு சொல்லக்கூடப் பயந்து கொண்டிருந்தேன். ஆனால், இவை அனைத்தையும் சிறைத்துறைத் தலைவருக்கு அவ்வப்போது புகாராக நானும் என் கணவரும் அனுப்பி இருக்கிறோம்.
ஏதோ ஒரு வகையில், இந்தப் பெண் நிரபராதி என என்னைப்பற்றிப் பிரியங்கா நினைத்திருக்கலாம். இரகசியச் சந்திப்பை இந்தப் பெண் அம்பலப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை இருந்து அதனாலும் பார்க்க வந்திருக்கலாம். ஆனால், அந்தச் சந்திப்பு, மனித நேயச் சந்திப்பாகத்தான் பேசப்பட்டது.
இப்போது திரும்பிப் பார்க்கிறேன். அந்தச் சந்திப்பு நடந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்களுக்கு நல்லது ஏதும் நடக்கவில்லை. ‘என்னோட காயத்தை ஆற்றிக்கொள்ள நடந்த சந்திப்பு’ என அறிக்கை கொடுத்திருந்தார் பிரியங்கா.
ஒரு பேட்டியில், ‘அவரை மன்னித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அங்கே (வேலூர்) போனேன். போனபிறகுதான் அது தேவை இல்லை என்றாகிவிட்டது. அவரைச் சந்தித்தப் பிறகுதான் என் வேதனையும் நளினியின் வேதனையும் ஒன்றாக இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்’ என மூன்று வரிகளில் கூறியிருந்தார்.
ஆக என்னை ஏதோ ஒரு வகையில் நிரபராதி என்பதை உணர்ந்துள்ளார். அதே நேரத்தில், அவரால் வெளிப்படையாக என் விடுதலையைப் பேசவும் முடியவில்லை. இந்தியா, சி.பி.ஐ என்ற கட்டமைப்பு குலைந்து போய்விடக் கூடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்.அவரைப் போலவே அவரது சகோதரர் ராகுல் காந்தியும் சொன்னார்.
ஜார்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி பிரான்ஸிஸ் இந்துவார் வீட்டுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூற சென்றிருந்தார். அப்போது பிரான்ஸிஸினுடைய பிள்ளைகளிடம் பேசிய போது, ‘நானும் தீவிரவாதத்துக்கு என் தந்தையைப் பலி கொடுத்தவன் தான். அதன் வலி எனக்குத் தெரியும். அப்போது என்னுடைய வயது 19-தான். அதனால் உங்களின் வேதனை எனக்குப் புரிகிறது. துக்கத்தில் இருந்து மீண்டு வாருங்கள்’ என்று ஆறுதல் கூறினார்.
அப்போது அந்தப் பிரான்ஸிஸின் பிள்ளைகள், ‘எங்கள் தந்தையைக் கொன்றவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம். நீங்கள்….?’ என்று கேட்க, ‘நானும் உங்களைப் போலத்தான். அந்தக் கொலையாளிகளை நான் என்றைக்கோ மன்னித்து விட்டேன்’ என்று பட்டென்று பதில் கூறியிருக்கிறார் ராகுல்.
இந்தச் செய்தி 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவலாக வெளிவந்தது. அதன் பிறகும் ஆறு ஆண்டுகள் கடந்திருக்கிறது. ஆனாலும் எங்களை விடுவிக்க விருப்பமின்றியே இருக்கிறார்கள்.
இதையெல்லாம் சுட்டிக்காட்ட காரணம், பிரியங்காவின் சந்திப்பு எங்களை விடுதலை செய்வதற்கானது அல்ல. வேறு அரசியல் காரணங்களுக்கானது என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது.
(சிவராஜனை சி.பி.ஐ ஏன் பிடிக்கவில்லை என்பது பற்றி அடுத்த இதழில்)
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதான சிறுவனின் பாதுகாப்பு இல்லத்தடுப்பு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
6 வயதான சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த16 வயது சிறுவன் மீண்டும் நேற்று மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து குறித்த சிறுவனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்குமாறு நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லையென பெற்றோர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கமைவாக பொலிஸாரும் பொது மக்களும் சேர்ந்து தேடுதல் நடத்திய போது சிறுமி காட்டுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை தெரிந்ததே.
இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கிய இடத்தில் உள்ளவர் நடிகர் தனுஷ். தற்போது இவர் படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என பலரும் ஆர்வம் காட்டுகின்றார்கள். கெளதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்நிலையில், தன் அப்பா கஸ்தூரி ராஜா, ராஜ்கிரணை வைத்து முதல் படத்தை இயக்கியது போல தனுஷும் அவரை வைத்து தான் இயக்கும் முதல் படத்தை வெளியிட இருக்கிறார்.
‘பவர் பாண்டி’ எனும் இந்த படத்தில் முக்கிய ரோலில் பிரபல டி.வி தொகுப்பாளர் டிடி எனும் திவ்ய தர்ஷினியும் நடிக்கிறாராம்.
ஒரு சில படங்களில் சிறு ரோலில் நடித்து விட்டு டி.வி க்கே சென்ற டிடி தற்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்.
பூமியில் தான் வாழ்வதற்காக மனிதன் உருவாக்கிய அனைத்துப்பொருட்களின் மொத்த அளவு 30 இலட்சம் கோடி டன் (தொன்) என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
லீஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் வில்லியம்ஸ் தலைமையில் அமைந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
பூமியில் மனிதர்கள் உருவாக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரே சொல்லில் “டெக்னோஸ்ஃபியர்’ என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த டெக்னோஸ்ஃபியரில் வீடுகள், ஆலைகள், கணினி, செல்பேசி, வாகனம், கழிவுப்பொருட்கள் வரை மனிதன் உருவாக்கிய எல்லாமே அடங்கும்.
இவற்றின் தற்போதைய மொத்த எடை சுமார் 30 இலட்சம் கோடி டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சராசரியாக, பூமியின் ஒவ்வொரு சதுர மீட்டர் மேற்பரப்பிற்கும் 50 கிலோ எடை கொண்ட பொருளை மனிதன் உருவாக்கியுள்ளான்.
இன்னும் தொடர்ந்து உண்டாக்கி வருவதால் இது மேலும் கூடவே செய்யும்.
ஆனால், இயற்கையில் உள்ள இலை, மரம் போன்ற பொருட்கள் தாமாக மறுசுழற்சி செய்துகொள்வது போல, மனிதன் மறுசுழற்சி செய்வதில் மிகவும் பின்தங்கியுள்ளான் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வு முடிவுகளை “ஆந்த்ரோபோசீன்’ ஆய்விதழ் வெளியிட்டுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில், மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு தினங்களில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டதாகவும் இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
எனினும், ஒரு வாரத்திற்குள் தீர்வு எட்டப்படாவிடின், கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களையும் மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தனியார் பஸ் ஊழியர்கள் தாம் முன்னெடுத்து வந்த பணிப் பகிஸ்கரிப்பை கைவிடத் தீர்மானித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பிரச்சினை குறித்து கலந்துரையாட ஜனாதிபதி இணங்கியுள்ளதையடுத்தே அவர்கள் இந்தத் முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.