பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் தலையை மொட்டையடித்த கணவர்!!

mottai

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் தலையை கணவர் மொட்டையடித்துள்ள கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரஷித் மற்றும் நாணு ஆகிய இருவருக்கும் திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த நாணுவுக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.

இதனால், ரஷித் மற்றும் அவரின் தாயாருக்கு ஆத்திரம் வந்துள்ளது. மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளாயே எனக்கூறிய இவர்கள், நாணுவின் தலையை மொட்டையடித்துள்ளனர். மேலும் பெண் குழந்தை பாலுக்காக அழும் போது, நானுவை பால் கொடுக்க அனுமதிக்காமல் சித்தரவதை செய்துள்ளனர்.

இதனால், தனது கணவர் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாணு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் நாணுவின் தாயாரோ, எனது மகள் அவளின் கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று கருதி புகாரினை வாபஸ் வாங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ரஷித் மற்றும் அவரின் தாயாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அறிவுரை வழங்கியுள்ளனர் பொலிசார்.

சமீபத்தில் மும்பையில் மாமியார் ஒருவர் தனது மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்தார் என்பதற்காக கார் ஒன்றினை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் மற்றும் முச்சக்கரவண்டி சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்!!

bus-strike

போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை நீக்குமாறு வலியுறுத்தி இன்று (01.12.2016) நள்ளிரவில் இருந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பஸ் மற்றும் முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கடுவலை பஸ்தரிப்பு நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சர் நேற்று சில தொழிற்சங்கங்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

பலத்த சூறாவளிக் காற்றின் முற்றுகைக்குள் யாழ்.குடாநாடு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!!

jaffna

யாழ். குடாநாட்டில் இன்று வியாழக்கிழமை(01.12.2016) அதிகாலை முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறதுடன் கடும் குளிருடனான காலநிலையும் காணப்படுகிறது.

பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
சூறாவளி காரணமாகப் பல இடங்களிலும் பயன்தரு மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளன. அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இலங்கையின் திருகோணமலையிலிருந்து 720 கிலோ மீற்றர் தொலைவில் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இலங்கையின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவனின் கழுத்தறுத்து கொன்ற மனைவி : அதிர்ச்சிக்குள்ளாக்கும் காரணம்!!

murder

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை மனைவியே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை வடபழனி பக்தவச்சலம் நகரில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது மனைவி பாரதி. இந்நிலையில், தனது சக ஊழியருடன் கோபாலகிருஷ்ணனின் மனைவி பாரதிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்துள்ளார் கோபாலகிருஷ்ணன். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாரதியும் அவரது கள்ளக் காதலன் கார்த்திக் ரவிந்தரனும் கோபாலகிருஷ்ணனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினர்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு கோபாலகிருஷ்ணன் உறங்கிய உடன் கார்த்திக்கை பாரதி அழைத்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி கோபாலகிருஷ்ணனின் கழுத்தை அவர்கள் கத்தியால் அறுத்து கொன்றுள்ளனர்.

பின்னர் அதனை மறைப்பதற்காக கொள்ளை அடித்துவிட்டு கோபாலகிருஷ்ணனை மர்ம நபர்கள் கொன்றுவிட்டு சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக வீட்டில் இருந்த நகைகளை கார்த்தி திருடிச் செல்வது போன்று அவர்கள் நாடகம் ஆடினர். ஆனால் வடபழனியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் சிக்கி, விசாரணையின்போது முன்னுக்கு பின்பேசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் கார்த்திக்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற பொலிசார் அங்கு பாரதி மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!!

karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதி கடந்த சில வாரங்களாக தட்டம்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவில் இருந்து காய்ச்சல் அதிகமாக இருப்பதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

கருணாநிதியுடன் ராஜாத்தி அம்மாள் பொன்முடி, ஸ்டாலின் மனைவி துர்கா, ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது உள்ளதாகவும் மேலும் அவருக்கு நீர்சத்து மற்றும் ஊட்டசத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் கருணாநிதி இருப்பார் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

500 ரூபாயில் திருமணத்தை முடித்த காதல் ஜோடி!!(வீடியோ)

wedding

ராஜாஸ்தானைச் சேர்ந்தவர் ஆசிஷ் வஷ்டா, பஞ்சாபை சேர்ந்தவர் சலோனி இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு முசோரி லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐஏஎஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பயிற்சி நிறைவு பெற்ற பின்னர் தற்போது மத்தியபிரதேச மாநிலம் கோகத்தில் ஆசிஷ் வசிஷ்டா துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார், தெலுங்கானா மாநிலம் விஜயவாடாவில் சலோனி துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் ஒத்துழைப்போடு கடந்த திங்கட் கிழமை மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் மாலை மாற்றிக்கொண்டு பதிவுத் திருமணமாக நடந்துள்ளது.

ஐஏஎஸ் ஆன இருவரும் தங்களுடைய திருமணத்தை வெகு விமர்ச்சியாக கொண்டாடி இருக்கலாம். ஆனால் எந்த ஒரு வெற்று விளம்பரம் இல்லாமலும், ஆடம்பரம் இல்லாமலும் வெறும் 500 ரூபாயில் தங்களுடைய திருமணத்தை முடித்துள்ளனர்.

மேலும் தற்போது ரூபாய் நோட்டு தடையினால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டில் பலரும் சிக்கன திருமணம் நடத்தி வருகின்றனர்.

இதில் நாமும் ஒரு முன்னுதாரணமாக இருப்போம் என்பதற்காக வெறும் 500 ரூபாயில் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

பெண்களை ஹோட்டல் அறைக்குள் அழைத்துவந்த இரு பங்களதேஷ் வீரர்களுக்கு அபராதம்!!

bang

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களான அல்- அமின் ஹுசைன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோருக்கு ஒழுங்கு விதிகளை மீறிய குற்றசாட்டுக்காக 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்குள் பொழுதுபோக்கு பெண் விருந்தினர்களை அழைத்துவந்துள்ளதால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களதேஷ் பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டுடிருக்கும் நிலையில், இவர்களுக்கு நேற்று குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பங்களதேஷ் கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்வாறான ஒழுங்கு விதிகளை மீறும் செயற்பாடுகளில் இனிமேலும் ஈடுபட்டால், கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என பங்களதேஷ் கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.

சாரதிகளுக்கு 25000 ரூபா தண்டப்பண தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை : அரசாங்கம் உறுதி!!

fine

போக்குவரத்து விதிகளை மீறும் ஏழு விதமான குற்றங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்படமாட்டாது. இதில் திருத்தம் கொண்டுவரவும் மாட்டோம். உரிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு இந்த சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

உண்மையில் இவ்வாறு ஏழு விதமான போக்குவரத்து குற்றங்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்குமாறு பரிந்துரையை முன்வைத்ததே நான்தான் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன அங்கு மேலும் குறிப்பிடுகையில்:

நாட்டில் பாரியளவில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன. அதிகளவில் மரணங்களும் இடம்பெறுகின்றன. அதுமட்டுமன்றி இடம்பெறுகின்ற விபத்து சம்பவங்களினால் அதிகளவானோர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் அரசாங்கம் பாரிய செலவை பொறுப்பேற்கவேண்டியுள்ளது.

இந்நிலையில் எவ்வகையிலாவது அதிகரித்து செல்கின்ற விபத்து சம்பவங்களை குறைக்கவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது. அதனால்தான் இவ்வாறு முக்கியமான ஏழு குற்றச்செயல்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். இந்த 25 ரூபா தண்டப்பணத்தை விதிக்குமாறு கூறியதே நான்தான்.

வலதுபக்கத்தில் முந்திச்செல்லுதல், குடிபோதையில் வாகனத்தை செலுத்துதல் போன்றவற்றுக்கு இந்த தண்டப்பணமும் போதுமானதல்ல. இதனைவிட அதிகரிக்கவேண்டும். மக்களுக்கு எம்மை தெரியும். மக்கள் இதனை விரும்புகின்றனர். எனவே இதில் எந்த மாற்றமும் ஏற்படாது. 25000 ரூபா தண்டப்பணத்தில் எந்த குறைப்பும் செய்யப்படமாட்டாது. இது தொடர்பான சட்டமூலம் திருத்தப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

மக்கள் எங்களுடன் இருக்கின்றனர். தற்போது இந்த தண்டப்பண அதிகரிப்பை எதிர்த்து பஸ் சேவையில் ஈடுபடுவோர் வேலைநிறுத்தம் செய்ய வுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு மக்களே பதிலளிக்கவேண்டும்.

இந்த விடயத்தில் மக்களும் தலையிடவேண்டும். ஏதோ ஒரு இடத்தில் அந்த இடத்திற்கு பிரவேசிக்கவேண்டியுள்ளது. தொடர்ச்சியாக விபத்துக்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. விபத்து சம்பவங்கள் பாரியளவில் அதிகரிக்கின்றன. எனவே தண்டப்பணத்தை குறைக்க முடியும் என யாரும் எண்ணவேண்டாம். அது குறைக்கப்படமாட்டாது.

பேஸ்புக் மெஸெஞ்சரில் Instant Games அறிமுகம்!!

fb

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் வழங்கும் தகவல் பரிமாற்ற சேவையான மெஸெஞ்சரில் 17 வகையான புதிய விளையாட்டுக்கள் (Instant Games) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விளையாட்டுக்கள் அனைத்தையும் புகழ்பெற்ற பழைய நிறுவனங்கள் மற்றும் இந்த துறைக்கு புதியவர்கள் எனக் கருதப்படும் வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதற்காக புதிய ஐகான் ஒன்று பேஸ்புக் மெஸெஞ்சரின் புகைப்படங்கள் மற்றும் ஸ்டிக்கர் கமெண்ட்டுகள் அருகிலேயே அமைந்துள்ளது.

இந்த விளையாட்டுகள் அனைத்தும் புதிய ஹெச்.டி.எம்.எல் 5 மொபைல் வெப் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால் எந்த ஒரு திரையிலும் தொட்டவுடன் விரைவில் தோன்றுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி, பேஸ்புக்கில் நேரம் செலவிடுபவர்களில் 15 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் விளையாட்டுக்களில் அதிக நேரம் செலவிடுவதாகத் தெரிய வந்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!!

bus

போக்குவரத்து துறையிலுள்ள சில தொழிற் சங்கங்கள் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன.

இரண்டு பஸ் சங்கங்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சம்மேளன தலைவர் அஞ்சன பிரியன்ஜன பிரியந்தஜித் தெரிவித்துள்ளார்.

தங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கொள்கலன் வாகன சாரதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் குமார ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்!!

aids

உலகளாவிய ரீதியில் அனைத்து நாட்டவர்களாலும் இன்று உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

எயிட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்நாள் உலகளாவிய ரீதியில் அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

எயிட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் உருவானது.

அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உலக அரங்கில் எயிட்ஸ் நோயை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்கள் மத்தியில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கிலேயே உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை 2016 ஆம் ஆண்டிற்கான எயிட்ஸ் மாநாடு தென்கொரியாவின் டேர்பன் நகரில் முன்னெடுக்கப்படுகின்றது.

எயிட்ஸ் தொடர்பிலான விழிப்புணர்வை சமூகங்களிடையே ஏற்படுத்துவது உள்ளடங்கலாக 6 எண்ணக்கருக்களுடன் இம்முறை எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் நால்வர் படுகாயம்!!

 
வவுனியா குழுமாட்டுச்சந்தியில் இன்று (30.11.2016) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

நெளுக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் வேப்பங்குளத்திலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் பெண் உட்பட நால்வர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இவ் விபத்து தொடர்பாக மேலதிக தகவல்களை அறியமுடியாது உள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பொதுமகன் ஒருவரிடம் வினவியபோது..

பாரிய பாட்டுச் சத்தத்துடன் வேகமாக முச்சக்கரவண்டியொன்று சென்று கொண்டிருந்தது. தீடீரென பாளார் என ஒரு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் இரு முச்சக்கரவண்டிகளும் விபத்துக்குள்ளாகி ஒரு முச்சக்கரவண்டி தடம்புரண்டு கிடந்தது. உடனே பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தாக தெரிவித்தார்.

dsc_0143 dsc_0145 dsc_0146 dsc_0147 dsc_0148 dsc_0149 dsc_0150 dsc_0152 dsc_0153 dsc_0162 dsc_0163 dsc_0171 dsc_0172 dsc_0174 dsc_0175 dsc_0181 dsc_0187

வவுனியாவில் கிராமசேவையாளர் ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது!!

arrested

வவுனியாவில் கிராமசேவையாளர் ஒருவர் இன்று (30.11.2016) பிற்பகல் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா மூன்றுமுறிப்பு கிராமசேவையாளர் பிரிவில் கடமையாற்றி வந்த கிராமசேவையாளர் இன்று பிற்பகல் தனது அலுவலகத்தில் வைத்து கொழும்பிலிருந்து வந்த இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராமசேவையாளர் லஞ்சம் பெற்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட கிராமசேவையாளர் தற்போது வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டென்மார்க்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் குடியிருப்புக்கள்!!(படங்கள்)

 
டென்மார்க் கட்டுமான நிறுவனம் ஒன்று சூழலுக்கு உகந்த, விலை குறைந்த குடியிருப்புக்களை உருவாக்கி வருகிறது.

அநேகமான நகரங்களில் வாடகை முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது, வசதி இல்லாதவர்களுக்காகவே புதுமையான மிதக்கும் கண்டெய்னர் குடியிருப்புக்களை உருவாக்கியிருக்கிறார்கள். துறைமுகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குடியிருப்புக்களில் மாணவர்களே அதிகம் தங்கியிருக்கின்றனர்.

கண்டெய்னர் குடியிருப்பில் தங்கிய பிறகு, கணிசமாகச் சேமிக்க முடிகிறது. அறைகள் நவீனமாகவும் அனைத்து வசதிகளுடனும் இருக்கின்றன என இங்கு தங்கியுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கண்டெய்னரில் 12 பேர் வசிக்கக் கூடியதாக இந்த குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டென்மார்க் முழுவதும் 20 இடங்களில் 240 குடியிருப்புக்களை உருவாக்கி வருகிறோம். ஸ்வீடனில் 288 குடியிருப்புக்களுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

உலகம் முழுவதும் எங்கள் கண்டெய்னர் குடியிருப்புக்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என்கிறார் அர்பன் ரிகர் நிறுவனர் கிம் லோட்ரப்.

1 2 3 4 5 6 7

நெருங்கிவிட்ட இறுதி நாள் : இருண்ட கிரகத்தால் கதிகலங்கும் பூமி!!

moon

இது வரையில் பல தடவைகள் பூமி அழிந்து போகும் என பல்வேறு வகையான கருத்துகள் கூறப்பட்டது. 2012ஆம் ஆண்டும் இதே போன்றதொரு கதை பூதாகரமாக வெடித்தது.

ஆனாலும் மறுநாள் நல்ல பொழுதாகவே விடிந்தது முதல் உலக அழிவு தொடர்பில் பெரிதாக யாரும் நம்பிக்கை வைப்பதில்லை.

எனினும் மீண்டும் ஓர் தடவை அதே போன்றதொரு அச்சம் மேற்குலகத்தை தொற்றிக் கொண்டுள்ளது. இப்போது உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு அமைய மீண்டும் உலக முடிவு அச்சம் வலுவடைந்துள்ளது.

இருண்ட கிரகம் planet x nibiru என அழைக்கப்படும் ஓர் கிரகம் பூமி மீது மோத தயாராக எமது தலைக்கு மேலே சுற்றி வருகின்றது என பல கதைகள் ஆரம்பத்தில் கூறப்பட்டன.

இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி : விழிப்போடு இருக்குமாறு கோரிக்கை!!

High waves smash against the bank of Do Son beach in the northern port city of Hai Phong, Vietnam on Saturday July 17, 2010, as Typhoon Conson churns towards northern Vietnam. The typhoon that left dozens dead in the Philippines and two in China weakened to a tropical storm as it churned toward northern Vietnam on Saturday, smashing boats in its path and lashing the region with rain and wind. (AP Photo/Vietnam News Agency)

நாட்டில் சீரற்ற காலநிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக வளிமண்டல திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

திருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கம் சூறாவளியாக வலுபெற்று வடமேல் திசையில் யாழ். குடாநாட்டை அண்மித்து நகர்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த சீரற்ற காலநிலை நாளை நள்ளிரவு அளவில் சூறாவளி தமிழகத்தை நோக்கி நகரும். குறித்த தாழமுக்கத்தின் விளைவாக டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன.

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

இதேவேளை கடற்பரப்பிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் மக்களை விழிப்பாக இருக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.