யாழ். குடா நாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார்.
குடா நாட்டின் காலநிலை நிலவரம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
தெற்மேற்கு வங்க கடலில் உருவான ‘நடா’ சூறாவளி தற்சமயம் காங்கேசன்துறையில் இருந்து வடக்கே 200 கி லோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இது தமிழகத்தின் வடக்கு பக்கமாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் 30 கிலோ மீற்றர் தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகம் வரையில் காணப்படும் எனவும் தற்போது வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் அதிகாரிக்கலாம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆழம் கூடிய பகுதிகளில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் இருக்கும் எனவே கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகின்றார்கள்.
எனினும், நேற்று மாலை 16.8 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்ட குடா நாட்டின் வெப்ப நிலையாது. தற்சமயம் 19.8 பாகை செல்சிஸ் ஆக காணப்படுகின்றது. இதனால் குளிர் அதிகமாக காணப்படும் எனவும் இது தொடருமாக இருந்தால் ஆபத்து எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்சமயம் காற்று தரையில் 26 கிலோ மீற்றர் வேகத்தில் வீசி வருகின்றது. நேற்று மாலை தொடக்கம் இன்றைய தினம் காலை 8.30 மணி வரையில் 35 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதில் பருத்தித்துறை- வல்லிபுரம் பகுதியில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்ஸின் மனைவி அம்ருதா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து ஆட்டம் போட்டதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஹை-ஹீல்ஸ் செருப்பு அணிந்து, முட்டிக்கு மேல் வரையிலான ஒரு குட்டை ஆடையை போட்டுக்கொண்டு அமிதாப்புடன், அம்ருதா ஆடும் காட்சியை அமிதாப் தனது டிவிட்டர் கணக்கில் ஷேர் செய்துள்ளார்.
ஆனால் ஒரு முதல்வரின் மனைவியாக இருந்து கொண்டு, அவர் இவ்வாறு நடந்துகொண்டது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
பெண்ணியவாதி எழுத்தாளர் ஷோபா டே, அம்ருதாவுக்கு சபாஷ் கூறியுள்ள நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர், ரூபாய் நோட்டுக்காக மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது, அதனால் பலன்பெற்றவர்கள் ஆடிக்கொண்டுள்ளார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.
வவுனியா ஹொரவப்பத்தானை வீதி மத்திய சந்தைக்கு அருகே இன்று (01.12.2016) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்து இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
சாயி சிறுவர் இல்லத்துக்கு சொந்தமான பேரூந்து ஹொரவபொத்தான வீதி வழியாக சென்றுகொண்டிருந்த போது மத்திய சந்தைக்கு அருகே முச்சக்கர வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை முச்சக்கர வண்டி தடம்புரண்டு பேரூந்தின் முன் மோதியதியதாலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த நவநீதராசா(45), மரியதாஸ்(65) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விபரங்களை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விலங்கினங்களை அறவே பிடிக்காது எனக்கூறி வெறுத்து ஒதுக்கும் மனிதர்களிடம், நாங்களும் உங்களை போன்று உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு உயிரினம் தான் என சொல்லாமல் சொல்லியுள்ளது ஓரங்குட்டான் குரங்கு.
இங்கிலாந்தில் உள்ள உயிரியில் பூங்காவிற்று கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் சென்றுள்ளார்.
அங்கு விலங்கினங்களை ரசித்துக்கொண்டிருந்த அவரது பார்வை, கண்ணாடிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஓரங்குட்டான் குரங்கு மீது பட்டுள்ளது.
கண்ணாடிக்கு மிக அருகில் சென்ற அந்த கர்ப்பிணி பெண், தனது வயிற்றினை தடவிக்கொண்டு குரங்கினை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, கர்ப்பிணியின் வயிற்றினை உற்றுநோக்கிய குரங்கின் முகத்தில் ஒருவித மாற்றம் தென்பட்டது.
பின்னர், அக்குரங்கு மெதுவாக நெருங்கி வந்து கர்ப்பிணியின் வயிற்றில் முத்தமிட்டு சென்றது. இந்த காட்சி அங்கிருந்தவர்களின் இதயத்தை உருக்கியுள்ளது.
நம்மில் பலபேர் விலங்குகள் சரணாலயத்திற்கு செல்வதை விரும்புவதில்லை. ஆனால், பிறக்கவிருக்கும் குழந்தைக்கு முத்தமிட்டு, இந்த பூமியில் உயிரினங்களின் மதிப்பினை எடுத்துக்கூறியுள்ளது இந்த குரங்கு.
இதன் மூலம் பிறக்கவிருக்கும் குழந்தை, உயிரினங்கள் மீது அன்பு கொண்ட குழந்தையாக இருக்கும் என கர்ப்பிணி பெண் கூறியுள்ளார்.
ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களில் 315 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, தண்டப்பணம் அறவிடப்பட்டதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ஏ.ஜி.எஸ்.கே. செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
மதுவரித் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் 315 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
இதன்படி சட்டவிரோத அரச சாராயம் விற்பனை செய்தமை 11,
சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானம் விற்பனை 04,
அளவுக்கதிகமாக சாராயம் உடமையில் வைத்திருந்தமை 01,
சட்டவிரோதமாக அளவுக்கதிகமாக வெளிநாட்டு மதுபானம் உடமையில் வைத்திருந்தமை 01,
சட்டவிரோத கள்ளு விற்பனை 132,
சட்டவிரோதமாக கள்ளு உடமையில் வைத்திருந்தமை 06,
சட்டவிரோத புகையிலை உற்பத்தி பொருட்களை வைத்திருந்தமை 04,
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தமை 150,
மாபா எனப்படும் போதைப் பொருள் விற்பனை 02, கஞ்சா உடமையில் வைத்திருந்தமை 04 என 315 பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுவரி பரிசோதகர் எஸ்.சுரேஸ், மதுவரி காவலர்களான கே.துஸ்யந்தன், ஆர்.பி.திஸாநாயக்கா, சீ.டீ.சில்வா உள்ளடங்கிய எமது குழுவினரே குறித்த செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தனர் எனவும் மாவட்ட பொறுப்பதிகாரி செனவிரட்ன தெரிவித்தார்.
தற்போது வவுனியாவில் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதுடன், வெப்பநிலை 20 செல்சியல் அளவில் காணப்படுகின்றது.
இக் காலநிலை மாற்றம் காரணமாக இன்று (01.12.2016) மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலையானது வவுனியா மாவட்டத்திலுள்ள இரத்த அழுத்தத்திற்குட்பட்டவர்கள் (பிறசர்) தலையிடி, நெஞ்சு வலி என்பன ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறும் சூடான இடங்களில் இருக்குமாறும் சிறுவர்கள் குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் தலைக்கு தொப்பி (மப்ளர்), காலிற்கு கால் உறை என்பன அணிந்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறும்,
தேவையின்றி வெளியே சென்றுவருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அதேபோல வயதானவர்களும் கால நிலையினை தாங்கக்கூடியவாறு உடையணிந்து பாதுகாப்பாக இருக்குமாறும் வவுனியா மாவட்டத்திலுள்ளவர்கள் எப்பொழுதும் சூடான இடத்தில் இருந்து பழக்கப்பட்டுள்ளதால் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் இரண்டு தினங்கள் நீடிக்கும் எனவே பிறசர் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் எப்பொழுதும் சூடான நீரை அருந்துமாறும் இக்காலநிலை நீடிக்குமானால் மேலும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் மேலும் தெரிவித்தார்.
இன்று(01.12.2016) காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக வீதியால் சென்றுகொண்டிருந்த சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த 27 வயதையுடைய சச்சிதானந்தம் கஜந்தன் என்ற இளைஞர் மரம் முறிந்து விழுந்ததில் அதேயிடத்தில் பலியாகியுள்ளார்.
சாவகச்சேரி நீதிமன்ற வழக்கொன்றிற்காக உந்துருளியில் சென்றுவிட்டு திரும்பிச் செல்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழில் பலத்த காற்றுடன் தொடர்மழை பெய்துவருவதுடன் மக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகிய நாடா சூறாவளி முல்லைத்தீவில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் இந்தியாவின் தமிழகத்தை கடந்து செல்லும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சூறாவளி காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வெள்ளிக்கிழமை வரையில் கடும் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை மேல் , வட-மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘நானா’ சூறாவளி யாழ். மாவட்டத்தில் மையம்: மக்களை அவதானமாகச் செயற்படுமாறு கோரிக்கை..
‘நானா’ சூறாவளியுடன்கூடிய மழைவீழ்ச்சியினால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்துள்ளார்.
நானா சூறாவளி தற்போது யாழ். மாவட்டத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக மழைவீழ்ச்சிஎதிர்வரும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ச்சியாக நீடிக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்.குடாநாட்டில் தற்போது மையம் கொண்டுள்ள சூறாவளியுடன் கூடிய காலநிலை தொடர்பாகச் சற்று முன்னர் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நானா சூறாவளியுடன் கூடிய காலநிலை காரணமாக மன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன் துறைக் கடற்பிராந்தியத்தில் மூன்று மீற்றர் உயரத்துக்கு கடல் அலை மேலெழும்பும் அபாயம் காணப்படுகிறது.
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் பாரிய அலைகளுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டுக் கடற்பரப்பிலிருந்து 200 கிலோமீற்றருக்கு அப்பால் வரை நானா சூறாவளியியுடன் கூடிய மழைவீழ்ச்சி காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை இன்றும்,நாளையும் தவிர்க்குமாறும் யாழ்.குடாநாட்டு மீனவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்..
இரண்டு நாட்களின் பின்னர் நானா சூறாவளி இந்தியாவின் இராமேஸ்வரத்தின் ஊடாகத் தென்னிந்தியா நோக்கி நகரும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளதாகவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி மேலும் தெரிவித்தார்.
இதனை யாழ் மாவட்ட அனரந்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி இன்று தெரித்தமை கூறிப்பிடதக்கது.
உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், அதிலிருந்து மீண்டு வாழ்க்கையில் சாதிக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் ஒரு இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான கதையை அவரே சொல்கிறார் கேளுங்கள்.
நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். தாய் தந்தையுடன் வசித்து வந்த எனக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவமனைக்கு செல்வது, மருந்துகள் சாப்பிடுவது என்றாலே பிடிக்காது. மிகவும் பயந்த சுபாவம் கொண்டவளாகவே நான் வளர்ந்தேன்.
நான் என் பெற்றோரிடம், எவ்வளவு வயதானாலும் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைக்கோ அல்லது அங்குள்ள ஆப்ரேஷன் தியேட்டருக்கோ செல்லவே மாட்டேன் என சிரித்து கொண்டு பல முறை கூறியுள்ளேன்.
ஆனால் என் வார்த்தைகள் என்னுடைய 18 வயது வரை மட்டுமே உண்மையாக இருந்தது. எனக்கு 18 வயதாக இருந்த போது என் வாழ்க்கையே மாற போகிறது என அப்போது எனக்கு தெரியாது.
என் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு இளைஞன் தினம் பள்ளிக்கு செல்லும் போது என்னை பின் தொடர்ந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினான்.
நான் அவன் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை, என் தந்தையை கொன்று விடுவேன் என்று கூட என்னை மிரட்டி பார்த்தான்.
ஆனால் எதையும் பொருட்படுத்தாத நான் என் படிப்பில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தேன்.
ஒருநாள் என் வீட்டு சமையலறையில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது ஜன்னல் அருகில் வந்த அந்த இளைஞன் கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து என் முகத்தில் ஊற்றிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டான்.
உலகத்தில் அப்படியொரு வலி இருக்குமா என எனக்கு தெரியவில்லை. ஆசிட் முகத்தில் பட்டவுடன் அப்படிப்பட்ட வலியால் அலறி துடித்து தரையில் புரண்டு அழுது கொண்டிருந்தேன்.
அருகில் இருந்த என் தந்தை ஆசிட் ஊற்றியவனை பிடிக்க ஓடினாரே தவிர என்னை மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்லவில்லை.
பிறகு வலியால் துடித்து கொண்டிருந்த என்னை சில மணி நேரம் கழித்தே மருத்துவமனையில் சேர்த்தார்கள். நேரம் அதிகமானதால் என் முகத்தை காப்பாற்ற முடியாது, முழுவதும் வெந்து விட்டது என்றார்கள் மருத்துவர்கள்.
மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டருக்கே போகக்கூடாது என சிறுவயதிலிருந்து வைராக்கியத்தோடு இருந்த எனக்கு 40க்கும் மேற்ப்பட்ட சர்ஜரி ஆப்ரேஷன் தியேட்டரில் செய்யப்பட்டது.
அந்த தருணத்தில் வாழ்க்கையே முடிந்து விட்டது போல இருந்தது எனக்கு. ஆனாலும் ஒரு தன்னம்பிக்கை என் மனதில் இருந்து எட்டி பார்த்தது.
சிகிச்சை முடிந்து வீடு வந்தவுடன் Make Love Not Scars என்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் சேர்ந்து நடத்தும் அமைப்பை தொடர்பு கொண்டேன்.
பிறகு என் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. அவர்கள் கொடுத்த தன்னம்பிக்கையால் என் பள்ளி படிப்பை வெற்றிகரமாக என்னால் முடிக்க முடிந்தது.
பிறகு கணினி வகுப்புகளில் சேர்ந்து பல விடயங்களை கற்றேன். பிறகு ஒரு மருத்துவமனையில் ரிஜிஸ்டிரேஷன் பிரிவில் வேலை செய்தேன்.
Make Love Not Scars அமைப்பில் தற்போது முக்கிய உறுப்பினராக இருக்கும் நான் என் போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
பயந்த சுபாவமாக வளர்ந்த நான், இன்று நான் இந்த சமுதாயத்தில் பல சோதனைகளை கடந்து தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட பெண்மணியாக வாழ்ந்து வருகிறேன் என கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங், பாலிவுட் நடிகையும், தோழியுமான ஹசல் கீச்சை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
இதற்கான இந்திய அணி வீரர்கள் நேற்று முன்தினம் இரவே சென்று விட்டனர், அவர்களுக்கு கோக்டைல் பார்ட்டி வைக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியை வென்ற கையுடன் இந்திய வீரர்கள் அனைவரும் அங்கு சென்றதால் திருமண வீடே களைகட்டியது.
விராட் கோஹ்லி மட்டும் வழக்கம் போல தன்னுடைய பாணியில் யுவராஜ் சிங் மற்றும் மணமகள் ஹசால் கீச்சை வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க கூறியிருப்பார் போல் தெரிகிறது.
அதில் யுவராஜ்சிங், மணமகள் ஹசல் கீச் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் கையை உயர்த்திக் கொண்டு போஸ் கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்திய வீரர்கள் முரளி விஜய், பார்த்திவ் பட்டேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், நெக்ரா, முகமது கைப், கபில்தேவ் போன்ற பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில் யுவராஜ்சிங் சற்று தாடியுடன் காட்சியளித்தார். அவர், கறுப்பு வண்ண பண்டகாலா வகை ஜாக்கெட் அணிந்திருந்தார்.
ஹசல் கீச், ஸ்லீவ்லெஸ் பிளைன் பனாரஸ் பார்டர் போட்ட, வெள்ளை நிற லெகன்கா அணிந்திருந்தார். அவரது ஆடைகளில் கோடா வேலைப்பாடு அதிகம் செய்யப்பட்டிருந்தது.
இதில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி பைஜாமா போன்ற உடை அணிந்து வந்திருந்தார்.
இந்நிலையில் யுவராஜ்சிங்கின் திருமணம் இன்று சண்டிகரில் இருந்து சுமார் 40 கி.மீற்றர் தொலைவில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்ச்சியாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பிரான்சில் பெண் ஒருவர் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Reims நகரத்திலே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், டோனி என்ற 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த டோனியின் 19 வயதான தாய் கரோலின், 24 வயதான Loïc என்ற ஆணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
கரோலினின் வீட்டிற்கு வரும் Loïc தினமும் குழந்தையை அடித்து சித்திரவதை செய்துள்ளான். இதை கரோலின் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று Loïc அடி தாங்காமல் டோனி மயங்கி விழுந்துள்ளார். குழந்தை மயங்கி சில மணிநேரம் கழித்தே கரோலின் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலின் பல பகுதிகள் பயங்கர காயம் இருந்ததால் சந்தேகமடைந்த பொலிசார் கரோலினிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து கரோலின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதில் முக்கிய குற்றவாளியான Loïcவிற்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரோலினுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் Reims நகர மக்கள், டோனி வாழ்ந்த குடியிருப்பை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.
துருக்கியில் 9 வயது சிறுமி மன அழுத்தம் காரணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Izmir மாகாணத்தை சேர்ந்த Y.K. என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவிற்கு எதிராக இரண்டு நாட்களில் சிறுமி சாட்சியம் தர இருந்த நிலையில், இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில், சிறுமி தனது நண்பரின் 56 வயது தாத்தாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து சிறுமி உடனே பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர், பொலிசாருக்கு தகவல் அளிக்க அவர்கள் குற்றவாளி தாத்தாவை கைது செய்துள்ளனர்.
பின்னர், தாத்தா பிணையில் வெளிவர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், நடந்த சம்பவத்தை நினைத்தும், நீதிமன்ற விசாரணையில் தாத்தாவிற்கு எதிராக ஆதாரம் கொடுக்க இருப்பதை நினைத்து நினைத்தும் குறித்த சிறுமி மன அழுத்தத்தில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமி தந்தை கூறியதாவது, குறித்த சம்பவத்தினால் என் குழந்தையே உயிரிழந்து விட்டாள். குற்றவாளி தண்டிக்கப்படுவதை பார்க்க நான் என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் குடிக்க தண்ணீரின்றி பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத குழு கட்டுபாட்டிலிருக்கும் மோசூல் நகர மக்களே இவ்வாறு அவதிப்பட்டு வருகின்றனர். Hasansham அகதி முகாமிலே குறித்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இருக்கும் மெலிந்த குழந்தைகளில் ஒருவருக்கு 2 வயதும் மற்றொருவருக்கு 9 வயதும் ஆகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய் கூறியதாவது, இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இராணுவ படைக்கும், ஐ.எஸ் குழுவிக்கும் இடையில் நடந்த சண்டையின் போது மோசூல் நகரில் உள்ள 650,000 குடியிருப்பாளர்கள் நீர் வழங்கும் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது, குறித்த இடத்தில் போர் சூழல் நிலவுவதால் குறித்த குழாயை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மோசூல் நகரில் இருக்கும் மக்கள் குடிக்க தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
மின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16 உடைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் மாற்றி கின்னஸ் சாதனை படைத்தார். மின்னின் இந்த சாதனையை மற்றொரு மலேசிய பெண்ணான சில்வியா லிம் 1 நிமிடத்தில் 18 ஆடைகள் மாற்றியதன் மூலம் முறியடித்துள்ளார்.
இதனால் சற்றும் மனம் தளராத மின் தற்போது 1 நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மின்னின் பெயர் மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் சுமார் ஐந்து ஆண்டு காலமாக தூக்கத்தில் இருக்கும் காதலிக்காக, காதலன் ஒருவர் தற்போது வரை காத்திருக்கும் சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Stockport – Cheshire பகுதியைச் சேர்ந்தவர் Beth Goodier (22). இவருக்கு Dan (22) என்ற காதலன் உள்ளார். Beth Goodier க்கு 17 வயது இருக்கும் போது தூக்கம் தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளது. அன்று முதல் நாள் ஒன்றுக்கு சுமார் 22 மணி நேரம் தூக்கத்திலே கழித்து விடுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், Beth Goodier க்கு Kleine-Levin Syndrome (KLS) என்ற ஒரு வித தூக்கம் தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளதாகவும், இது அரிதான ஒன்று எனவும், இது தொடர்பாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து அவரின் தாயார் கூறுகையில், இந்த நோயின் தாக்கம் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் தன் மகளுக்கு ஏற்பட்டதாவும், அவள் தன்னுடைய வாழ்நாளில் சுமார் 75 சதவீதம் தூங்கியே வீணடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அவள் நாள் ஒன்றுக்கு 22 மணிநேரம் தூங்குவதாகவும், இடைப்பட்ட நேரத்தில் எழுந்து சிறிதளவு உணவு எடுத்துக் கொண்டு மீண்டும் உறங்கிவிடுவாள் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவளுக்கு 16 வயது இருந்த பொழுது சுமார் 6 மாதங்கள் வரை அவள் தூங்கிவிட்டாள் என்றும் அதன் பின்னரே அவள் சுய நினைவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
அவரின் காதலனான Dan ஒரு ஆரம்ப பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அவர் ஒரு நல்ல மனிதன் என்றும், அவருக்காகவே இவள் விரைவில் குணமடைய வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பிரித்தானியாவில் இது போன்று 100க்கும் மேற்பட்டோர் வித்தியாசமான நோயினால் தாக்கப்பட்டு அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது.