5 ஆண்­களை ஏமாற்றி திரு­மணம் செய்துகொண்ட 23 வயதுப் பெண்!!

ngs0_8146
ngs0_8146

23 வய­தான இளம் பெண் ஒருவர் நான்கு கண­வன்­க­ளுடன் வாழ்ந்து ஏமாற்றி விட்டு ஐந்­தா­வ­தாக ஒரு இளை­ஞனை திரு­மணம் செய்து வாழ்ந்த அதிர்ச்சி சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் தனியார் நிறு­வ­ன­மொன்றில் வேலை பார்த்து வரும் திருச்சி திரு­வெ­ரும்பூர் பகு­தியை சேர்ந்த அசோக் என்­பவர் அண்­மையில் மாலதி என்ற பெண்ணை காத­லித்து திரு­மணம் செய்து கொண்டார்.

இந்­நி­லையில் அந்த பகு­தியை சேர்ந்த வினோத் என்­பவர் மால­தியை தான் காத­லித்து திரு­மணம் செய்து­கொண்­ட­தா­கவும் அவரை தன்­னுடன் அனுப்பி வைக்க வேண்­டு­மெ­னவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் மால­தி­யிடம் நடத்­திய விசா­ர­ணையில் பல திடுக்­கிடும் தக­வல்கள் வெளிவந்­தன. திண்­டுக்கல் மாவட்­டத்தை சேர்ந்த மாலதி கடந்த 6 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஸ்டீபன் என்­ப­வரை காத­லித்து திரு­மணம் செய்து இரண்டு குழந்­தை­க­ளுக்கு தாயா­கி­யுள்ளார்.

இரு­வரும் ஒருநாள் வேளாங்­கன்­னிக்கு சென்­றி­ருந்தபோது, மால­திக்கு அங்கு டீக்­கடை நடத்தி வந்த நவ­நீதன் என்­ப­வ­ருடன் பழக்கம் ஏற்­பட்­டது. இதனால் அடிக்­கடி ஸ்டீப­னுடன் தக­ராறில் ஈடு­பட்டு வேளாங்­கன்­னி­யி­லுள்ள நவ­நீ­த­னுடன் தொடர்பு ஏற்­பட்டு அவ­ருடன் வாழ்க்கை நடத்­தி­யுள்ளார்.

வேளாங்­கன்­னியில் நவ­நீ­த­னுடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கும்­போது நாகையை சேர்ந்த ஒரு இளைஞருடன் மால­திக்கு பழக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அந்த இளை­ஞ­னுடன் ஓட்டம் பிடித்தார் மாலதி. இரு­வரும் திருப்பூர் சென்று ஒரு தனியார் நிறு­வ­னத்தில் வேலை பார்த்து வந்­தனர். அப்­போது அந்த பகு­தியை சேர்ந்த வினோத் என்ற இளை­ஞ­ருடன் மீண்டும் மால­திக்கு பழக்கம் ஏற்பட்டுள்­ளது.

இத­னை­ய­டுத்து நாகையை சேர்ந்த இளை­ஞரை ஏமாற்­றி­விட்டு வினோத்தை நான்­கா­வ­தாக திருமணம் செய்து கொண்டார் மாலதி. ஒன்­றரை ஆண்­டு­காலம் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் ஒருநாள் திருச்சி சம­ய­புரம் கோவி­லுக்கு சென்­றுள்ளார்.

அப்­போது அவர்­க­ளுடன் வினோத்தின் நண்பன் அசோக்கும் சென்­றுள்ளான்.
அப்­போது அசோக்­கிற்கும் மால­திக்­கு­மி­டையே தொடர்பு ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து மாலதி வினோத்தை பிரிந்து அசோ­க்குடன் அவ­ரது வீட்டில் ஒரு வாரம் தங்­கி­யி­ருந்தார். அப்­போது அந்த பகு­தியை சேர்ந்­த­வர்கள் அசோக்­கிற்கும் மால­திக்கும் திரு­மணம் செய்துவைத்துள்ளனர்.

தற்போது மாலதியின் திருமண கதைகளை அறிந்த வினோத்தும், அசோக்கும் அவரை ஏற்க மறுத்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மாலதிக்கு அறிவுறை கூறி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னாள் கணவரினால் கடுமையாகத் தாக்கப்பட்ட பிரேஸில் முன்னாள் அழகுராணி!!

 
பிரே­ஸிலின் முன்னாள் அழ­கு­ரா­ணி­யொ­ருவர், தனது முன்னாள் கண­வ­ரினால் கடு­மை­யாகத் தாக்கப்பட்ட நிலையில், காய­ம­டைந்த முகத்­துடன், தான் எதிர்­கொண்ட வன்­முறை குறித்து கூறும் வீடியோவொன்றை இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ளார்.

ரெனாட்டா லுஸ்­டோசா எனும் இந்த யுவதி, பிரே­ஸிலில் நடை­பெற்ற பல்­வேறு அழ­கு­ராணி போட்டிகளில் வெற்­றி­யீட்­டி­யவர். 2007 ஆம் ஆண்டில் மிஸ் பஹியா அழ­கு­ராணி போட்­டியில் முத­லிடம் பெற்ற அவர், 2011 ஆம் ஆண்டில் மிஸ் பியாயு அழ­கு­ராணி போட்­டி­யிலும் முத­லிடம் பெற்­றமை குறிப்பிடத்­தக்­கது.

தற்­போது 27 வய­தான ரெனாட்டா லுஸ்­டோசா, மொட­லா­கவும் அழ­குக்­கலை நிபு­ண­ரா­கவும் பணியாற்றிவந்தார். தனது அழ­கினால் ஏரா­ள­மா­னோரை கவர்ந்த ரெனாட்டா, தனது முகத்தில் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்­படும் வீடி­யோவை சில தினங்­க­ளுக்கு முன் வெளி­யிட்டார்.

தனது முன்னாள் கணவர் தன்னைக் கடு­மை­யாக தாக்கி காய­மேற்­ப­டுத்­தி­ய­தாக அழு­து­கொண்டே அவ் ­வீ­டி­யோவில் ரெனாட்டா கூறினார். தமது இரு வய­தான மகனின் முன்­னி­லையில் இத்­ தாக்­குதல் இடம்­பெற்­ற­தா­கவும் தெரி­வித்தார்.

அற்­ப­மான விட­யத்­துக்­காக நான் மீண்டும் உடல் ரீதி­யான வன்
மு­றைக்­குள்­ளானேன். யார் மீது தவறு என்­பது முக்­கி­ய­மல்ல, ஒரு பெண்ணை ஆண் ஒருவர் தாக்குவதை எத­னாலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது. இந்தத் தாக்­கு­தல்கள் அனைத்தும் எனது மகனின் முன்னிலையில் நடந்­தன.

அனைத்­தையும் அவன் பார்த்தான்’ என ரெனாட்டா தெரி­வித்தார். ‘இந்த மாதி­ரி­யான ஓர் இராட்­ச­தனை நான் என்ன செய்ய முடியும்? பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று முறைப்­பாடு செய்தால், அவரை பொலிஸார் துரத்தி, கைது செய்­வார்கள்.

ஆனால். மறுநாள் அவர் விடு­த­லை­யா­கி­வி­டுவார். என்னை கொல்­லப் ­போ­வ­தாக மில்­லியன் கணக்கான தட­வைகள் அவர் கூறி­யுள்ளார். அவர் இப்­படி செய்யக்கூடும் என்­பதில் எனக்கு சந்­தேகம் இல்லை.

நான் ஏற்­கெ­னவே தாக்­கப்­பட்டு­ விட்டேன். இது குறித்து பொலி­ஸா­ரிடம் முறை­யி­டு­வ­தில்லை என தீர்மா­னித்­துள்ளேன். நான் தாக்­கப்­பட்­டுள்ளேன்… தாக்­கப்­பட்­டுள்ளேன்’ என அவ்­ வீ­டி­யோவில் ரெனாட்டா மேலும் கூறினார் ரெனாட்டா, ஹென்றிக்.

எனினும், இவ்­ வீ­டி­யோவை பார்­வை­யிட்­ட­வர்கள், வீட்டு வன்­மு­றைகள் தொடர்­பான விசா­ரிக்கும் அதிகா­ரி­க­ளுக்கு இத் ­த­க­வலை தெரி­வித்­தனர். அதன்பின்னர் தனது மனதை மாற்­றிக்­கொண்ட ரெனாட்டா பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார்.

வீட்டில் தான் தாக்­கப்­பட்ட விட­யத்தை அம்­ப­லப்­ப­டுத்­திய ரெனாட்­டாவை துணிச்­ச­லான பெண் என ஊட­கங்கள் பாராட்­டி­யுள்­ளன. ரெனாட்­டாவை பின்னர் மருத்­து­வர்கள் பரி­சோ­தித்­த­துடன், தாக்­குதல் தொடர்­பாக பொலி­ஸா­ரிடம் அவர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக முறைப்­பாடு செய்தார்.

பொலிஸ் அதி­கா­ரி­யான அன்ட்­ரெஸா கார்­வெல்ஹோ இது தொடர்­பாக கூறு­கையில், ‘எமக்கு மேற்­படி வீடியோ கிடைத்­த­வுடன், ரெனாட்டா ஏற்­கெ­னவே முறைப்­பாடு எதுவும் செய்­துள்­ளாரா என நாம் எமது பதி­வு­களை ஆராய்ந்தோம். அவ்­வா­றான முறைப்­பாடு எதுவும் காணப்படவில்லை.
அதன்பின் நாம் அவரை விசாரணைக்கு அழைத்தோம்’ என்றார். இதேவேளை, தான் தவறு எதுவும் செய்யவில்லை என ரெனாட்டாவின் முன்னாள் கணவரான ஹென்றிக் தெரிவித்துள்ளார். தான் நிரபராதி என்பதை ஹென்றிக் நிரூபிப்பார் என ஹென்றிக்கின் சட்டத்தரணி கூறியுள்ளார்.

a1 a2 a3 a4

ரெனாட்டா வெளி­யிட்ட வீடி­யோ:

இரத்தத்தை காதலன் சுவை பார்ப்பதற்கு அனுமதித்த பின் காதலனை கத்தியால் குத்திய பெண்!!

This undated photo provided by the Greene County Sheriff's Office in Springfield, Mo., shows Victoria Vanatter of Springfield, Mo. Police say Vanatter allowed her intoxicated boyfriend to drink her blood then stabbed the wannabe vampire during a subsequent argument on Nov. 23, 2016. Vanatter pleaded not guilty Monday, Nov. 28 to charges of first-degree domestic assault and armed criminal action. (Greene County Sheriff's Office via AP)

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், தனது உடலை கத்­தியால் கீறி தனது இரத்­தத்தை காதலன் சுவை பார்ப்­ப­தற்கு அனு­ம­தித்த பின்னர், வாக்­கு­வாதம் ஒன்­றை­ய­டுத்து காதலனை குத்தி படுகாயப்படுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மிசோரி மாநி­லத்தின் ஸ்பிரிங்பீல்ட் நகரைச் சேர்ந்த விக்­டோ­ரியா வனாட்டர், எனும் இந்த யுவ­தியும் அவரின் காத­லனும் இரத்தம் உறிஞ்சும் வாம்­ப­யர்கள் பற்றி பேசிக் கொண்­டி­ருந்­த­னராம்.

அதன்பின் தனது உடலை கத்­தியால் கீறி, தனது இரத்­தத்தை காதலன் சுவைத்துப் பார்ப்­ப­தற்கும் விக்­டோ­ரியா அனு­ம­தித்தார் என பொலி­ஸாரின் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

எனினும், பின்னர் விக்­டோ­ரி­யா­வுக்கும் மது­போ­தை­யி­லி­ருந்து அவரின் காத­ல­னுக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. இதன்­போது, ஆத்­தி­ர­ம­டைந்த விக்­டோ­ரியா வனாட்டர், தனது காத­லனை கத்தியால் குத்­தினார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இச்­ சம்­ப­வத்தில், விக்­டோ­ரி­யாவின் காத­ல­னுக்கு முதுகில் காயங்கள் ஏற்­பட்­டன. இதை­ய­டுத்து, அவ­சர சேவைப் பிரி­வி­னரால் மேற்­படி இளைஞன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

விக்­டோ­ரி­யாவை பொலிஸார் கைது செய்­தனர். அவரை 150,000 டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளார்.

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!!

batti

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து குதித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.

நோய்வாய்ப்பட்டு நேற்றைய தினம் இரவு 9 மணியளவில் வைத்தியசாலையில் இருந்த நிலையில் இவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாமாங்கத்தைச் சேர்ந்த தி.சிவதாஸ் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் பொதுமக்களால் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த சம்பவம் கொலையா? தற்கொலை? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டம்!!

 
வவுனியா பொது வைத்தியசாலையில் கடமைபுரியும் ஆண் தாதிய உத்தியோகத்தர் மீது நேற்று இரவு (01.12.2016) வைத்தியசாலையின் விடுதியிலுள்ள வளவிற்குள் வைத்து தலைக்கவசம், ஜக்கட் அணிந்து இனந்தெரியதாக நபர் ஒருவர் பின் தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் வைத்தியசாலையின் உன்னதமான சேவையினை வழங்கும் தாதியர் மீது தாக்குதல் நடத்தியதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் சிலரும் இணைந்து இன்று 02.12.2016 மதியம் 12 மணியளவில் உணவு இடைவேளையின் போது தமது எதிர்ப்பினை தெரிவித்து வைத்தியசாலையின் முன் வழியாக பேரணியாக சென்று கண்டி வீதியால் பின் வாசல் வழியாக வைத்தியசாலையினை சென்றடைந்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான ஆண் தாதிய உத்தியோகத்தர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

பொலிசார் விசாரணைகள் மேற்கொள்ளாத பட்டசத்தில் தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும் இன்றை போராட்டத்தில் கலந்து கொண்ட தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

1 dsc_0002 dsc_0003 dsc_0007_1 dsc_0008 dsc_0014 dsc_0015_1 dsc_0017 dsc_0018 dsc_0022 dsc_0025_1 dsc_0026 dsc_0028_1 dsc_0030 dsc_0032 dsc_0033

வவுனியா வைத்தியசாலை ஆண் தாதி ஒருவர் மீது மர்ம நபரொருவரால் தாக்குதல்!!

hospital

வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் பிரதான ஆண் தாதி ஒருவர் மீது மர்ம நபரொருவரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

ஆண் தாதியர் விடுதியில் இருந்து தனது கடமைக்கு செல்லுமுகமாக விடுதியை விட்டு வெளியில் வரும்போது முழுமையான தலைக்கவசம் மற்றும் ஜக்கட் அணிந்திருந்த மர்ம நபரொருவராலேயே மேற்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாதிக்கப்பட்ட ஆண் தாதியான மினேஷ்(30) என்பவர் தன்னை தொடர் தாக்குதலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக வீதியில் ஓடி வைத்தியசாலையின் மதிலை கடந்து வைத்தியசாலைக்குள் நுழைந்துள்ளார்.

இத்தாக்குதல் எதனால் இடம்பெற்றதென்பது தெரியவில்லை. மேலும் பொலிஸில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகை வைத்திருப்பதற்கும் கட்டுப்பாடு விதிப்பு : புதிய அறிவிப்பினால் மக்கள் மத்தியில் பரபரப்பு!!

jewel

இந்தியாவில் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பணம், வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பணம், வருமான வரி கட்டிய பணத்தில் தங்கம் வாங்கியிருந்தால், வரி விதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கம்:

புதிய வருமான வரிசட்டத்தில், நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. வருமான வரி சட்டம் 1961 ன் கீழ் பழைய வரிகளே தொடரும். வருமானத்துறை சோதனையின் போது, கூடுதல் தங்கத்திற்கு 60 சதவீத வரி விதிக்கப்படும்.

முன்னர் 30 சதவீதமாக இருந்த வரி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தின்படி திருமணமான பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 31.25 பவுன் நகை வைத்திருக்கலாம். ஆண்கள் 12.5 பவுன் நகை வைத்திருக்கலாம்.

இந்த நகைகள், கணக்கு காட்டிய பணத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால், விவசாய வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டிருந்தால் வரி விதிக்கப்படாது. பாரம்பரிய நகைகளுக்கும் வரி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை தாக்கியுள்ள காற்று மாசுபாடு!!

china

சீனாவில் காற்று மாசுபாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், கார்களை இயக்க தடை விதிப்பது, பல்வேறு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடுவது என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், சீனா தலைநகர் பீஜிங்கில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தற்போது அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சீனாவின் நான்கு படிநிலை வானிலை எச்சரிக்கை அமைப்பில் ஆரஞ்சு என்பது இரண்டாவது பெரிய எச்சரிக்கை குறியீடு ஆகும்.

ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் கட்டுமான பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அதிக அளவில் வெளியே நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பீஜிங் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நகரில் சூழ்ந்துள்ள புகை மூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலைக்குள் கலைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றேன் : நடிகை பாபிலோனா!!

babilona

பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனா மந்திரவாதியிடம் சிக்கியிருப்பதாகவும், அவரை மீட்க வேண்டும் என்றும் அவரது பாட்டி நேற்று முன்தினம் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை பாபிலோனா கூறும்போது, எனது பாட்டி கொடுத்த புகார் மனு பொய்யானது, அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனது கணவர் சுந்தருடன் நான் மகிழ்ச்சியாக வாழ்கின்றேன். 6 நாட்களுக்கு முன் எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளதால் என்னால் நடக்க முடியவில்லை. இதனால் என்னுடைய புகார் மனுவை எனது கணவர் சுந்தர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுப்பார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று பகல் 12 மணியளவில் பாபிலோனாவின் கணவர் சுந்தர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று பாபிலோனா கையெழுத்திட்ட மனு ஒன்றை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..

கடந்த சில ஆண்டுகளாக எனது பாட்டி கிருஷ்ணகுமாரியோடு நான் வாழ்ந்து வந்தேன். அவர் தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். இதனால் எனது பாட்டியின் கொடுமையிலிருந்து மீண்டு, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி சுந்தரை நான் திருமணம் செய்துகொண்டேன். எனது திருமண செய்தி பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வந்தன.

எனது திருமணத்தை எனது பாட்டி ஏற்கவில்லை. இதனால்தான் எனது கணவரை மந்திரவாதி என்று கூறி அவரது பிடியில் சிக்கியிருப்பதாக எனது பாட்டி தவறான புகார் மனு கொடுத்துள்ளார். எனது கணவர் மற்றும் குழந்தையுடன் நான் மகிழ்ச்சியாக வாழ்கின்றேன். தவறான புகார் கொடுத்த எனது பாட்டி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற மனு விருகம்பாக்கம் பொலிஸ் நிலையத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனாவின் கணவர் சுந்தர் நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..

நான் உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்) வடிவமைத்து கொடுக்கும் தொழில் செய்கின்றேன். எனது ஆலோசனையின் பேரில் எனது மனைவி பாபிலோனா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இனிமேல் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார்.

ஆனால் பாபிலோனா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவரது பாட்டி விரும்புகின்றார். அதனால்தான் என்னை பற்றியும், பாபிலோனா பற்றியும் தவறான புகார் கொடுத்துள்ளார். என்னிடமிருந்து பாபிலோனாவை பிரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த முயற்சி பலிக்காது என்று அவர் தெரிவித்தார்.

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புதுமை நூல் வெளியீடும்!(படங்கள்)

கடந்த 30.11.2016 புதன்கிழமை  வ/ புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் “புதுமை”இதழ் வெளியீட்டு விழாவும்  பாடசாலையின் அதிபர் திருமதி கமலா சொக்கலிங்கம் தலைமையில்  மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் சாதனை மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களுடன் புதுமை  இதழ் -06 , 07 வெளியிடப்பட்டுள்ளது.

15192581_2148683325355815_5380111380883813356_n 15192797_2148681228689358_7599226134970407724_n 15193515_2148681595355988_1916724601817840383_n 15193532_2148681855355962_6381626192562404139_n 15203226_2148680785356069_8488562030683532676_n 15220000_2148684822022332_6535150132770429538_n 15242015_2148680808689400_7422638400704902680_n 15253427_2148681918689289_246316038100157739_n 15267966_2148681482022666_8335978342124476248_n 15284800_2148681755355972_2409026412814952280_n 15284932_2148682918689189_1568275175354097089_n 15317984_2148683775355770_9142366910048729482_n 15319162_2148681425356005_8824973978553915272_n 15319302_2148680655356082_5365925447770499190_n 15326556_2148681078689373_7417808295003985192_n 15327260_2148684122022402_7530888833369109394_n

வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் ஒளிவிழா!(படங்கள்)

வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் ஒளிவிழா  30.11.2016  புதன்கிழமை  பாடசாலையின்பிரதான  மண்டபத்தில் அதிபர் திரு .கோ. குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில் அருட்தந்தை  அ.விமலநாதன்(பாடசாலையின் பழைய மாணவர்)   பிரதம விருந்தினராகவும்  சிறப்பு விருந்தினராக ஓமந்தை பங்குதந்தை சூ.லக்கொன்ஸ் பிகிராடோ , திருமதி.சு.ஜெயகீசன் (பிரதி கல்விபணிப்பாளர் வவுனியா வடக்கு வலயம் )சிறப்பு விருந்தினராகவும் அருட் சகோதரி ரேவதி சவிரி (உள ஆற்றுப்படுத்துனர் )கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

15181412_1155205937926060_447760273282575232_n 15192744_1155205904592730_1702415762699910754_n 15193514_1155205784592742_233659443762803337_n 15202609_1155205691259418_2249817154855602572_n 15202623_1155205744592746_1432952822369565683_n 15203187_1155205057926148_6104616620280958022_n 15220131_1155205017926152_6307790542874049345_n 15267572_1155205451259442_4962081770529717866_n 15284868_1155205364592784_1815962239191987903_n 15317863_1155205391259448_12377043248262023_n 15326554_1155205304592790_8631681034522616870_n 15327419_1155205547926099_3223854449070988832_n

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்  வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016  நிகழ்வு  பழைய  மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்எதிர்வரும் 04.12.2016  சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது .

மேற்படி நிகழ்வில் பழைய மாணவிகள் தங்களது குடும்பத்துடன் வருகைதந்து இராப்போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

og

வடக்கில் மதுபாவனை அதிகரிப்பு : தனி நபரின் நுகர்வு 5.7 லீற்றர்!!

alcacol

வடக்கில் மதுபாவனை 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மேலும் 2015 ஆம் ஆண்டு தனி நபரின் மதுபான நுகர்வு 5.7 லீற்றர் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வாய்மூல வினாவுக்கான நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஜினி – விஜய் திடீர் சந்திப்பு!!

rajani

பரதன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் “பைரவா”. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். “பைரவா” படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாள் படப்பிடிப்பு சென்னை எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடந்து முடிந்தது.

படப்பிடிப்பு நிறைவு நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியின் ‘2.0’ படப் பிடிப்பும் இதே இடத்தில் நேற்று நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதை அறிந்ததும் விஜய் ‘2.0’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று ரஜினியை சந்தித்தார். இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். ரஜினி ‘2.0’ படத்தில் வரும் ‘கெட்-அப்’பில் இருந்தார். எனவே, புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.

விஜய் ஏற்கனவே ரஜினியின் “அண்ணாமலை” படத்தை ‘ரீமேக்’ செய்யப் போவதாகவும், அதில் விஜய் நடிக்க விரும்புவதாகவும் முன்பு தகவல்கள் வெளியாகின. அது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது. இப்போது ரஜினியை விஜய் திடீர் என்று சந்தித்து பேசி இருப்பதால் “அண்ணாமலை” ரீமேக் அனுமதி தொடர்பாக அவர் பேசி இருக்கலாம் என்று மீண்டும் ரசிகர்களி டம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கைக் குழந்தையை கொடூரமாகக் கொன்ற தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

baby

பிறந்து ஒன்பது வாரங்களேயான குழந்தையை சுவற்றில் மோதியும், குழந்தையின் தொண்டையில் விரலால் அழுத்தியும் கொலை செய்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்கா நாட்டின் St. Louis நகரில் வசித்து வருபவர் Robert Burnett (19), இவர் மனைவி Megan Hendrix (20) இவர்களுக்கு Jax என்னும் பிறந்து ஒன்பது வாரங்களான குழந்தை ஒன்று உள்ளது.

குழந்தை Jaxக்கு பிறக்கும் போதே எலும்பு சம்மந்தமான மற்றும் மூளையில் இரத்த கசிவு பிரச்சனையும் இருந்துள்ளது. சம்பவத்தன்று, குழந்தை Jax வீட்டில் ஓயாமல் அழுது கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்த Robert குழந்தையின் அழுகையை சகிக்க முடியாமல் கொடூரமான ஒரு விடயத்தை கையாண்டுள்ளார். அதாவது குழந்தையை பயமுறுத்த அவன் தொண்டையில் தன் விரல்களை வைத்து அழுத்தியுள்ளார்.

பின்னர் குழந்தையை சுவற்றில் தூக்கி அடித்துள்ளார். இதில் குழந்தை மயங்கி விழ, Robert பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு நபர் அங்கு யதேச்சியாக வந்து குழந்தை மயங்கியிருப்பதை பார்த்து உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் குழந்தை உயிரிழந்து விட்டது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் செல்ல அவர்கள் Robert மற்றும் Meganயை கைது செய்துள்ளார்கள்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், குழந்தை என்றும் பாராமல் Robert கொடூரமான செயலை செய்துள்ளார். அந்த செயலை அருகிலிருந்தும் தடுக்காததால் குழந்தையின் தாய் Megan யும் கைது செய்துள்ளோம்.

மேலும், அவர்கள் மனநிலை கோளாறு உள்ளவர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து தற்போது தீவிரமான விசாரணையில் இறங்கியுள்ளோம் என பொலிசார் கூறினார்கள்.

நாடா புயல்காற்றில் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி சரிந்தது!!

 
நாடா புயல்காற்று எனக் கூறப்படும் புயல் காற்று ஒன்று இன்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை திடீரென்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று (01) காலை காலை எட்டு முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்பட வில்லை என கூறப்படுகின்றது.

தரம் ஆறு தொடக்கம் உயர் தரம் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில் கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்ப்பட்ட பிரதேச மாணவர்களை அதிகமாகக் கல்விகற்று வருகின்றனர்.

மேலும், இந்த சீரற்ற காலநிலை தொடருமாக இருந்தால் ஆபத்து அதிகரிக்கும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

10 11 12