கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் கெஸ்ட்ரோ காலமானார்!!

fidel-castro

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனிஸ் புரட்சித் தலைவருமான பிடேல் கெஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார்.

உள்ளூர் நேரப்படி இன்று இரவு 07 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஃபிடல் காஸ்ட்ரோ, வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை மரணம் அடைந்தார்.

மிக நீண்ட காலம் அந்த நாட்டு ஜனாதிபதியாக பதவி வகித்த பிடல் கெஸ்ட்ரோ, கடந்த 2008ம் ஆண்டு ஆட்சியை தனது சகோதரனான ராவுல் கெஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற்றார்.

1920ம் ஆண்டு தென் கிழக்கு கியூபாவின் ஒரியன்டே மாகாணத்தில் பிறந்த பிடெல் கெஸ்ட்ரோ, கியூபாவில் புரட்சி மூலம் 1959ல் ஆட்சி அதிகாரத்தை ஃபிடல் காஸ்ட்ரோ கைப்பற்றினார்.

1959 முதல் 1976ம் ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக இருந்து பின்னர் 1976ம் ஆண்டு அந்த நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

கியூபா ஒரு கம்யூனிச தேசமாக உயிர்த்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், பிடல் கெஸ்ட்ரோ.

அமெரிக்க கண்டத்தில் கம்யூனிச ஆட்சி நடைபெறும் ஒரே நாடு கியூபா என்பது குறிப்பிடத்தக்கது. பிடல் கெஸ்ட்ரோ இல்லையென்றால், கியூபா அமெரிக்காவின் ஒரு மாநிலமாகவே இருந்திருக்கும்.

பொய் சொல்வதை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியுமா?

lie

உலகில் மனிதர்களாக பிறந்த யாராலும் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாது. ஏதோ ஒரு சந்தர்பத்திற்காக பொய் கூறும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

அந்த வகையில் ஒருவர் பொய் பேசுகிறாரா என்பதை அவரது முக பாவனை, உடல்மொழி, மற்றும் கண் அசைவுகளை வைத்து நாம் சாதரணமாக கண்டறிந்துவிடலாம்.

ஆனால் இது குறித்து ஆராய்ச்சிகள் செய்த போது, ஒருவரது மூக்கை வைத்து, அவர் பொய் சொல்கிறார்களா? அல்லது இல்லையா? என்பதை மிகவும் எளிமையாக தெரிந்துக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கிரானாடா பல்கலைகழகத்தின் உளவியல் துறையினர்கள், பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்று நடத்திய ஆய்வில், பொய் சொல்பவர்களின் மூக்கு புடைக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

பொய் சொல்லும் போது மூக்கு புடைப்பது ஏன்?

பொய் பேசும் போது நமது உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் மூளையின் அடிப்படைக் கூறாக கருதப்படும் இன்சுலாவின் செயல்பாடு ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். எனவே இந்த மாற்றங்களின் வெளிப்பாட்டினால், நம்முடைய மூக்கு புடைக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்த ஆய்வின் போது, பொய் சொல்பவர்களின், மூக்கு அதிகமாக புடைக்கச் செய்து, கண்ணில் இருக்கும் தசைகள் எழுச்சி அடைகின்றன. எனவே இந்த மாற்றத்திற்கு, ஆய்வாளர்கள் பின்னாக்கி எஃபெக்ட் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

நமது உடலின், உணர்வுகளால் ஏற்படும் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்டறியும் தெர்மோகிராபி என்ற சோதனை முறையை பயன்படுத்தி நடத்திய ஆய்வின் போது, பொய் சொல்லுபவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்பட்டது.

இதன் மூலம், உண்மையை மறைத்து ஒருவர் பொய் கூறும் போதும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களின் மனதில் அதிகரிப்பதால், அவருடைய இயல்பு நிலை மாறி இன்சுலா தாறுமாறாக செயல்படுவதால், மூக்கு புடைப்புகள் அதிகமாக ஏற்படுகிறது என்று இந்த ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

முதல் போட்டியில் ஒரே குத்தில் உயிரிழந்த குத்துச் சண்டை வீரர்!!

sp

பிரித்தானியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் 22 வயது குத்துச்சண்டை வீரர் நாக் அவுட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலந்தை சேர்ந்த Kuba Moczyk என்ற வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார், இது அவர் பங்கேற்ற முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Great Yarmouth நடைபெற்ற போட்டியில் Kuba Moczykக்கு எதிராக 17வயது வீரர் களமிறங்கியுள்ளார்.

போட்டியின் கடைசி சுற்றில் Kuba Moczyk நாக் அவுட் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Kuba Moczyk மூளையில் இரத்தம் வடிவதால் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், Kuba Moczyk சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஹெவிவெயிட் சாம்பியன் டைசன் ப்யூரி கூறியதாவது, Kuba Moczyk உயிரிழந்த செய்தி தன்னை அதிர வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Kuba Moczyk உடலுக்கு குத்தச்சண்டை வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

என்னை யாராவது காப்பாற்றுங்கள் : என் தோழியும் கொல்லப்பட்டுவிட்டாள் : 7 வயதுச் சிறுமியின் கண்கலங்க வைக்கும் பதிவுகள்!!

dead

சிரியாவின் அலெப்போ நகரில் வான்வழி தாக்குதல் காரணமாக, தன் தோழி கொல்லப்பட்டுவிட்டாள், தானும் பயந்து கொண்டு கட்டிலுக்கு அடியில் மறைந்துள்ளேன் என 7 வயது சிறுமியின் டுவிட்டர் அனைவரையும் கண்கலங்க வைப்பது போல் இருந்துள்ளது.

சிரியாவின் தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை கைப்பற்றுவதற்காக சிரியாவின் அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி போர் ஏற்படுகிறது.

இதில் பெரும்பாலான பகுதிகளை அரசு படைகள் கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபாத் தனது டுவிட்டர் பக்கத்தில் சில உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.

அதில், அலெப்போவில் இருந்து மதிய பானாவின் வணக்கம் என்றும் போரை மறப்பது குறித்து நான் படித்து வருகிறேன்.

தயது செய்து என்னை யாராவது இப்பொழுது காப்பாற்றுங்கள். நான் கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டிருக்கிறேன் என்று டுவிட் போட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து என் அன்புக்குரிய உலகே, நான் இன்றிரவு அழுதுகொண்டிருக்கிறேன், என்னுடைய தோழி இரவு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டாள்.

என்னால் அழுவதை நிறுத்த முடியவில்லை. எனது நண்பர்களே இது நிலா அல்ல. குண்டு கீழே விழுந்து கொண்டிருக்கிறது.

இன்றிரவு எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நான் அச்சத்தில் மூழ்கியுள்ளேன் ஏன் அவர்கள் எங்கள் மீது குண்டுகளை வீசி அப்பாவி மக்களை தினமும் கொல்கிறார்கள் என மிகுந்த வேதனையுடன் போடப்பட்டுள்ள டுவிட் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் விமான தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்கு சிறுமி பானா சென்று அந்த இடங்களைப் பற்றி சொல்வது போல் பல வீடியோ பதிவுகளையும் பதிவிட்டுள்ளாள். இவரின் டுவிட்டர் பக்கத்தை இவருடைய தாயார் பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

500 ரூபாயில் நடைபெற்ற அதிசயத் திருமணம்!!

wedding

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இந்தியாவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் சிரமப்படுவது மட்டுமல்லால் கோலாகலமாக நடத்தவேண்டும் என்று திட்டமிடப்பட்ட திருமணத்தையும் மிகவும் எளிய முறையில் நடத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சமீபத்தில் அப்படி ஓரு திருமணம் தான் நடந்துள்ளது. குஜராத்தை சேர்ந்த தம்பதியினர் தங்கள் திருமணத்தை கோலாகலமாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், பணத்தட்டுப்பட்டால் 500 ரூபாயில் தங்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்கள். திருமணத்தில் மணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்கு தேநீரும், தண்ணீரும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கர்நாடாக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகளுக்கு 650 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தாய், தந்தையை வெட்டிக் கொன்ற சந்தானம் : அதிர வைக்கும் பின்னணிக் காரணம்!!

murder

தமிழகத்தில் மகன் ஒருவன் தனது தாய், தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில், ஓய்வு பெற்ற தாசில்தார் மகாலிங்கம் தன் மனைவி சுசிலா, மகன் சந்தானுத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மகாலிங்கம் சுசிலா இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகன் சந்தானம் தான் சொத்துத் தகராறு காரணமாக இருவரையும் வெட்டிக் கொன்றதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள சந்தானத்தை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

அகதிகளுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை!!

aus

அவுஸ்திரேலியாவுக்கு கள்ள படகில் சட்டத்திற்கு புறம்பாக அகதிகள் யாரும் வரக்கூடாது என அந்நாட்டின் எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் பொற்றெல் எச்சரித்துள்ளார்.

அவுஸ்திரேலியா – அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தும் ஒப்பந்தம் இடமளிக்காது என அந்நாட்டு அரசு ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது.

மீண்டும் இதே போன்ற எச்சரிக்கை அறிக்கையை அவுஸ்ரேலியா அரசு அதன் தளபதி பொற்றெல் மூலம் விடுத்துள்ளது. அதில், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை யாரும் மீறக் கூடாது.

முன்பை விட அவுஸ்திரேலியாவின் ஏற்பாடுகள் பலமாக உள்ளதால் சட்ட விரோதமாக கள்ள படகில் யார் வந்தாலும் எங்களின் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இது இந்தோனேசியா, மியான்மர், ஈராக் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு பொருந்தும் என எச்சரிக்கை அறிக்கையில் உள்ளது

மேலும், சட்ட விரோதமாக படகில் யாராவது வர முயற்சித்தால் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறும் அவர்கள் கனவு ஒரு போதும் நிறைவேறாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது

ஜெயலலிதா இரண்டு மாதங்களாக பேசவில்லை என்பது அம்பலம்!!

jeyalalitha

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா,தற்போது பேசத் தொடங்கி உள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி, நேற்று தெரிவித்தார். இதன் மூலம், இரண்டு மாதங்களாக அவர் பேச முடியாத நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக, செப்., 22ம் திகதி இரவு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க, லண்டன் மற்றும் சிங்கப்பூர் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். டில்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை டாக்டர்களும், அப்பல்லோ மருத்துவமனை வந்து, சிகிச்சை அளித்தனர்.

முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, கவர்னர், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வந்து சென்றனர்; அவர்களில் யாரும் முதல்வரை சந்திக்கவில்லை.

3தொகுதி தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட, அங்கீகாரக் கடிதத்தில், முதல்வர் கைரேகை இடம்பெற்று இருந்தது.இதன் மூலம், முதல்வர் கையெழுத்திட முடியாத நிலையில் இருப்பது தெரிய வந்தது.

நவ., 4ம் திகதி, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி, பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவரை சுற்றி, என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்.’உடல் நிலை முன்னேற்றத்தையும், அறிந்து கொள்கிறார். அவர் அனைத்தையும் அறிந்து கொள்வது, மகிழ்ச்சி அளிக்கிறது’ என, கூறியிருந்தார்.

மீண்டும், 13ம் திகதி, பிரதாப் ரெட்டி கூறும் போது, ‘முதல்வருக்கு, தொற்றுநோய் முற்றி லும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது, ‘பிசியோதெரபி’ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் உடல் அளவிலும், மனதளவிலும் திடமாக இருக்கிறார். வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார். அவர் புத்துணர்ச்சி பெற வேண்டி உள்ளது. அதற்காகவே, மருத்துவமனையில் உள்ளார்’ என, தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில், நேற்று பிரதாப் ரெட்டி கூறியதாவது:முதல்வருக்கு ஏற்பட்ட, நோய் தொற்று முற்றிலும் குணமாகி விட்டது. உடல் நலம் நன்றாக உள்ளது. தற்போது, அவர் நடப்பதற்கு, பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வர் அறை மாற்றப்பட்டது உண்மை தான்.

எனினும், சிகிச்சையில் மாற்றமில்லை. அவரது வசதிக்காக, அறை மாற்றப்பட்டது. அவர், 90 சதவீதம் சுயமாக சுவாசிக்கிறார். சில நிமிடங்கள், ‘ஸ்பீக்கர்’ பயன்படுத்தி பேசுகிறார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும், சிறப்பாக செயல்படுகின்றன. அவர் வீடு திரும்பும் தேதி, முடிவு செய்யப்படவில்லை. எப்போது வீடு திரும்ப விரும்புகிறாரோ, அப்போது போகலாம். அவர் மன வலிமை கொண்டவர்.

இது, அவரது உடல்நிலை வேகமாக முன்னேற உதவியது. வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ள, அவரை ஊக்குவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இதுவரை, ‘ட்ரெகோஸ் டோமி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதாவது, தொண்டை குழாயில், மூச்சு குழாய் பொருத்தி, செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது, குழாய் அகற்றப்பட்டாலும், அவரால் முழுமையாக பேச முடியவில்லை. எனவே, ஸ்பீக்கர் மூலம் பேசுகிறார் என, முதன் முதலாக, பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், இரண்டு மாதங்களாக, அவர் பேச வில்லை என்பது தெரிகிறது.

மேலும், அவர் நடப்பதற்கு, பிசியோதெரபி பயிற்சி அளிக்கப் படுவதாக தெரிவித்துள்ளார்; அதிலிருந்து, அவர் இன்னமும் நடக்க முடியாத நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், முதல் வரின் உடலநிலை குறித்து உண்மையானதகவல்கள் சரிவர வெளியாகவில்லை; வெளியிடப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

-தினமலர்-

ஏண்டி உன்னை அம்மணமா நிக்க வச்சு விசாரிச்சாத்தான் பிடிக்குமோ : நளினி மீதான சித்திரவதையின் உச்சக்கட்டம்!!

nalini

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் இரண்டாவது பகுதி இது!

‘ஏண்டி உன்னை அம்மணமா நிக்க வச்சு விசாரிச்சாத்தான் பிடிக்குமோ’ என்று சொல்வதே அப்போதைக்கு அவர்களிடம் இருந்த ஓரளவு நாகரிகமான வார்த்தை எனலாம்.

அதைவிட இன்னும் கொச்சையாக இருந்தன அந்த அதிகாரியின் வார்த்தைகள். மனநிலை பலகீனமானவர்கள் கேட்டிருந்தால், உயிரை விட்டிருப்பார்கள்.

அந்த வார்த்தைகள் எந்த மனிதனது சுயமரியாதை உணர்ச்சிகளையும் சூடு, சுரணைகளையும் வேருடன் பிடுங்கி எறிந்துவிடும்.

அவர்களின் சொல்லுக்கு ஆடுகிற தலையாட்டி பொம்மையாக, நடைபிணமாக மாற வேண்டும். அதற்குத் தடையாக இருந்தது என்னிடம் இருந்த அடிப்படை சுபாவங்கள்தான். அதை அழித்துவிட இப்படி அருவருப்பான சித்ரவதைகள் மூலம் முயற்சிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஒரு பிள்ளைத்தாச்சிப் பெண் ஆசைப்பட்டு சாப்பிடுகிற எந்தச் சாப்பாட்டையும், என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. என் வயிற்றில் இருக்கும் குழந்தைதான் அப்போது எனக்கு முக்கியமாகப்பட்டது.

என்னைப் பட்டினி போட்டு, தாகத்துடன் தவிக்கவிட்டு, ரசிப்பதுகூட அவர்களது சித்ரவதைகளில் ஒன்றாக இருந்தது. இப்படி பட்டினி போட்டால், வயிற்றில் உள்ள குழந்தை இறந்து போகலாம். அதன் பிறகாவது என் மனதைக் கரைக்க முடியும். என் கணவரிடம் இருந்து என்னைப் பிரித்துவிட முடியும் என்ற தப்புக்கணக்கில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

சி.பி.ஐ கஸ்டடியில் இருந்த ஒவ்வொரு நாளும் நான் வேதனையை மட்டுமல்ல; கொடிய சித்ரவதையையும் அனுபவித்தேன். குறிப்பாக, கடைசி 20 நாட்களில் தினமும் என்னை இரவு, பகல் என்று தூங்கவே விடாமல் கொடுமைப்படுத்தினார்கள்.

ஒரு நாள், என்னை வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். எங்கெங்கோ சுற்றிக்கொண்டு, அடையாறு பகுதியில் உள்ள நவீன மருத்துவமனைக்கு அந்த வாகனம் சென்றது. ஒரு பெண் மருத்துவரின் வரவேற்பு அறையில் நிறுத்தி வைக்கப்பட்டேன்.

சில மணி நேரம் கழித்து உள்ளே அழைக்கப்பட்டேன். அந்த மருத்துவரால் நான் சோதனை செய்யப்பட்டேன். எனது உடலைப் பார்வையிட்ட அந்த மருத்துவரின் முகம் மாறத் தொடங்கியது. நிறைய இடங்களில் அடித்த காயமும் தழும்புமாக இருந்தது. என் கை, கால்களை விலங்கிட்டு வைத்திருந்ததால், அந்த இடமெல்லாம் சீழும், ரத்தமுமாகப் புண்ணாகி இருந்தது. மருத்துவருக்கு முகம் சுருங்கிப் போனது.

என் உடலைச் சோதித்த அவர், ‘கரு நன்றாக வளர்ந்து விட்டதும்மா. காலம் கடந்துவிட்டது. இப்போது அபார்ஷன் செய்தால் உன் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். என்ன படிச்சிருக்க? இதெல்லாம் உனக்குத் தெரியாதா?. ஏன் அபார்ஷன் பண்ணனும்னு சொல்ற?’ என்று எதார்த்தமாகக் கேட்டார்.

இதுதான் சரியான தருணம் என்று நான் அவரது கைகளை கால்களாகப் பிடித்துக் கொண்டு, அழுதபடியே நடந்தவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் உருக்கமாகக் கூறி முடித்தேன். ‘மேடம். இந்த குழந்தைக்காகத்தான். நான் இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து கலைத்து விடாதீர்கள்’ என இரு கரம் கூப்பி அழுதுபடியே வேண்டினேன்.

வெளியே நின்றிருந்த அதிகாரியை அழைத்த அந்த மருத்துவர், ‘இந்தப் பெண்ணின் கருவைக் கலைப்பதற்கான காலக்கெடு தாண்டிவிட்டது. இதற்குமேல் கருவை கலைப்பது டேஞ்சர். அந்தப் பெண்ணின் உடல் நிலையும் பலவீனமாக இருக்கிறது. அபார்ஷன் செய்தால் அவர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை. அவரது உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’ என்றார்.

அப்போது அந்த அதிகாரி, ‘இல்லைங்க மேடம். இது மிக முக்கியமான கேஸ். மொத்த ரகசியமும் இவளிடம்தான் இருக்கிறது. ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாள். அதற்குக் காரணம் இந்தக் கருதான். இதை கலைத்து விட்டால், எங்களுக்கு எளிதாக வழி கிடைத்துவிடும்’ என்று வாதாடினார்.

அதற்கு அந்த மருத்துவர், ‘நான் சொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள். என்னால் அப்படிச் செய்ய முடியாது. ஒரே நேரத்தில் இரண்டு கொலையைச் செய்வதாக மாறிவிடும். தெரியாமல் நடப்பது வேறு. தெரிந்தே செய்வது கொலை. நான் அதற்குத் தயாராக இல்லை’ என்றார்.

அதற்கு அந்த அதிகாரி, ‘நாங்கள் இதை விரும்பிச் செய்யவில்லை. இந்த வழக்கோட தன்மை அப்படிச் செய்ய வைக்கிறது’ என்றார். அதன் பிறகு இருவருக்கும், அதிக நேரம் விவாதங்கள் நடந்தன. ‘என்னால் முடியாது. நீங்கள் வேறு மருத்துவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அந்த மருத்துவர் சொன்னார்.

பிறகு இறுதியாக, ‘உங்கள் டிபார்ட்மென்டிலேயே ஒரு மருத்துவ மனையை உருவாக்கிக் கொள்ளுங்களேன். அங்கிருப்பவர்கள் உங்களின் உத்தரவை ஏற்றுச் செயல்பட வாய்ப்பிருக்கும்’ என்று சொல்லி கடுமையாகத் திட்டி , ‘தயவுசெய்து வெளியே சென்றுவிடுங்கள்’ என்றார்.

எனக்கு அந்தப் பெண் மருத்துவரின் துணிச்சலைக் காண பிரமிப்பாக இருந்தது. எனக்கு அந்தப் பெண் மருத்துவர் யார் என்றே தெரியாது. ஆனாலும், என் மனதில் தெய்வமாக நின்று விட்டார்.

அன்று அவர் துணிந்து கருக் கலைப்பை செய்திருந்தால், அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்து படித்து, இன்று லண்டனில் ஒரு மருத்துவராக மாறி இருக்கமுடியாது. நானும் இப்படி எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். இருவருமே செத்துப் போயிருப்போம்.

அதனால்தான் சொல்கிறேன். அந்தப் பெண் மருத்துவர் எனக்குத் தெய்வமாகத் தோன்றினார். இன்றும் எனது தினசரிப் பிரார்த்தனையில் அவருக்காகவும் வேண்டிக் கொண்டு வருகிறேன். அவரும், அவரது குடும்பத்தாரும், நீடூடி வாழ வேண்டும்.

அதன்பிறகு எனக்கு நடந்த விசாரணைகள் எல்லாம் மோசமாகத் தொடர்ந்தன. என் கருவைக் கலைத்துவிட வேண்டுமென, இவ்வளவு மெனக்கெட்ட வர்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்ற பயம் என் உறக்கத்தைக் கெடுத்தது. தூங்கும்போது, பக்கவாட்டில் கூனிக் குறுகி, கைகளால் வயிற்றைப் பாதுகாத்த வண்ணமே படுப்பேன். நான் தூங்கும்போது ஏதாவது ஊசியைப் போட்டுவிட்டால் என்னாவது என்ற பயம்.

விசாரணைக்கு என வந்த அதிகாரிகளுக்கு ஒரு வெறியும், மோகமும் இருந்தது. பதவி உயர்வு என்ற வெறியும், ஊதிய உயர்வு என்ற மோகமும்தான் அது. அதே நேரத்தில் எல்லா அதிகாரிகளும், காவலர்களும் பதவி வெறியில் இருந்தார்கள் எனக் கூற முடியாது.

எனது தாலியை அறுத்தெறிந்தவர்தான் தலைமைப் புலனாய்வு அதிகாரியான ரகோத்தமன். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் மனசாட்சி உள்ளவராகவே நடந்து கொண்டார். எனக்கு ஏதும் நடந்துவிடக் கூடாது என பகல் முழுவதும் தன் பார்வையில் வைத்திருப்பார். எனக்கும், என் கணவருக்கும் நடந்த சித்ரவதைகள் பெரும்பாலும் அவர் இல்லாத நேரங்களில் நடந்தன. சிலவற்றை அவரால் தடுக்க முடியவில்லை.

அவருக்கும் மேலாக ஒருவர் உத்தரவிட்டுக் கொண்டு இருக்கும்போது பாவம் அவரால் என்னசெய்ய முடியும்? என்னைக் கடைசியாகத் தொடர்ந்து 20 நாட்கள் சித்ரவதை செய்து, விசாரித்த 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் தியாகராஜனும் ஒருவர். மிக மோசமான சித்ரவதையைக் கையாண்டவர். நான் கைகூப்பி கதறியபடி அவரது காலில் விழப்போனேன். பட்டென்று என் மார்பில் அடித்த வேகத்தோடு, என் சுடிதார் துப்பட்டாவை அப்படியே பிடித்து இழுத்தார். அவர் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை.

‘இது தொடக்கம்தான். வெளியே பையன்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உன்னை நிர்வாணமாக்கி விட்டு, வெளியே போய்விடுவேன். பிறகு என்ன நடக்கும் என்று புரிகிறதா?’ என முறைத்தார். மேலும் ஒரு அடி முன்னே வந்து, சுடிதார் துணி மீது கை வைத்து இழுத்தார். அது கிழியத் தொடங்கியது. அதற்கு மேலும் என்னால் நிற்க முடியவில்லை. படாரென்று விழுந்துவிட்டேன். ’சார் வேண்டாம். நீங்கள் சொல்கிறபடியெல்லாம் கேட்கிறேன் சார். என்னை எதுவும் செய்யாதீங்க’ என்று கதறியபடியே அவருடைய காலில் விழுந்து விட்டேன்.

அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவர். பேசாமல் சென்று அவரது நாற்காலியில் அமர்ந்துவிட்டார். பிறகு, கணினியில் ஏற்கெனவே தட்டச்சு செய்து வைத்திருந்த, தாள்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு தாளாக எடுத்து, அதில் என்ன எழுதப்பட்டிருந்ததோ அதை தன் கைபட எழுதிக் கொண்டிருந்தார். அதில் உள்ளதை அப்படியே எழுதினால், முழுக்க முழுக்க அவர்களாகவே எழுதிய போலி வாக்குமூலம் எனத் தெரிந்துவிடும் என நினைத்து, அவ்வப்போது என்னிடமும் சில வார்த்தைகளை, நிகழ்வுகளைக் கேட்டு அதையும் குறுக்கே சேர்த்துக்கொண்டு வந்தார்.

அதாவது, பல பொய்களுக்கு மத்தியில், ஒரு உண்மையைப் போட்டு எழுதி வந்தால், மொத்தமும் உண்மையாகி விடும் என்பார்களே அப்படி. தடா சட்டப்படி, ஒருவர் மனம் உவந்து கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து, மற்ற கைதிகளுக்கானத் தண்டனையையும் வாங்கித் தரமுடியும். இது எனக்கு அப்போது தெரியாது. அவர் விருப்பப்படியே தயாரித்த வாக்குமூலத்தில் என் கையொப்பங்களை வாங்கிக் கொண்டார்கள். சி.பி.ஐ கஸ்டடியில் வைத்திருந்த 60 நாட்களும் இப்படிச் சித்ரவதைகளோடுதான் கழிந்தன.

எங்கள் எல்லோரிடமும் வாக்குமூலம் வாங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன், 22 ஆண்டுகள் கழித்து ‘நான் நீதிப்பிழை செய்துவிட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை நான் எழுதியபோது ‘எதற்கு எனத் தெரியாமல்’ என்ற வார்த்தையை எழுதாமல் விட்டுவிட்டதாக தியாகராஜன் சொல்லி இருக்கிறார். சுற்றி வளைத்து தன்னை ஒரு நேர்மையான அதிகாரி போன்று காட்டிக்கொள்ள அவர் ஆசைப்படுகிறார்.

தியாகராஜன் பேட்டி கொடுத்ததாக, ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பேட்டியில், ‘1991 மே மாதம் 7-ம் தேதிக்கு முன்பாக ஒரே ஒரு பெண்ணைத் தவிர வேறு யாருக்கும் ராஜீவ் காந்தி கொலைச் சதி பற்றித் தெரிந்திருக்கவில்லை என்பதற்கு வயர்லெஸ் செய்திகள் ஆதாரமாக உள்ளன’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.

ஒரு பெண்ணைத் தவிர’ என்று குறிப்பிடும்போது அங்கே என் புகைப்படத்தை இடைச்செருகல் செய்து காட்டுகிறார்கள். நளினியாகிய என்னிடம் இருந்து புலிகளின் தலைமைக்குத் தகவல் போயிருப்பதாகக் காட்சி அமைப்பை உருவாக்கிக் காட்டி இருக்கிறார்கள். இது எப்படியான விஷமத்தனம்.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஆவணங்கள், குற்றவாளிகளின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், மேல் முறையீட்டை எடுத்து நடத்திய உச்ச நீதிமன்றம் ஆகிய அனைத்திலும், எந்த இடத்திலும் அப்படி ஒரு தகவலை, செய்தியைச் சொல்லவே இல்லை. ஜெயின் கமிஷன் விசாரணையிலும் சரி, வர்மா கமிஷன் அறிக்கையிலும் சரி அப்படி எந்த ஒரு குறிப்புமே இல்லை.

சிவராஜன் வன்னிக்கு அனுப்பியதாகச் சொல்லும் அந்த வயர்லெஸ் உரையாடலில் ‘தமிழகத்தில் சிவராஜன், தணு, சுபா ஆகிய 3 பேரைத் தவிர வேறு யாருக்கும் கொலைச் சதித்திட்டம் தெரியாது’ என்றுதான் இருக்கிறது. இதைத்தான் உச்ச நீதிமன்றமும் தன்னுடைய தீர்ப்பில் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

எந்த இடத்திலும் கொலைச் சதி பற்றிய தகவல் நளினியாகிய எனக்குத் தெரிந்திருந்ததாகவே கூறப்படவில்லை. ஆனால் நான் கால் நூற்றாண்டு காலமாக எல்லாத் துன்பங்களையும் அனுபவித்துவிட்டேன்.

இந்த நிலையில்தான், பிரியங்கா என்னைச் சந்திக்க வந்தார். அவர் வரும் வரை யார் வரப்போகிறார்கள் என்றும் தெரியாது. வந்தபிறகும் இவர்தான் பிரியங்கா என்றும் தெரியாது!-

அது பற்றி அடுத்த இதழில்…

‘‘முருகனே நளினியிடம் பேசி அனுமதி வாங்கித்தந்தார்!”

இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கும் பத்திரிகையாளர் பா.ஏகலைவன், ‘‘2010-ம் ஆண்டு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். அவரைப் பார்க்க, நானும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியும் வேலூர் சிறைக்குச் சென்றிருந்தோம்.

அப்போதுதான், ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேரையும் நேரில் சந்தித்தேன்.

அந்த நேரத்தில், இந்த வழக்கில் வெளியில் தெரியாமல், புதைந்துகிடக்கும் பல விஷயங்களை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

இதில் முதல் குற்றவாளியாக இருக்கும் நளினியின் தரப்பு இதுவரை வெளியிலேயே வரவில்லை. அதனால், நளினியின் தரப்பில் இருந்து இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்றும் நினைத்தேன்.

என்னுடன் பேசிக்கொண்டிருந்த முருகனும், தனக்கும் இப்படி ஒரு எண்ணம் இருப்பதாக தெரிவித்தார். புத்தகம் எழுத முடிவானது. நளினியிடம் பேசி முருகனே அதற்கு அனுமதியும் வாங்கினார்.

முருகன் நளினி மூலமாக சொன்ன வாய்வழித் தகவல், பலநூறு பக்கங்களைக் கொண்ட அவர்களின் வழக்கு ஆவணங்கள் உள்ளிட்டவைதான் இந்தப் புத்தகத்துக்கு மூலம்.

சமயங்களில் நான் முருகனிடம் இருந்து விவரங்களைப் பெற முடியாத நேரத்தில், வேலூரைச் சேர்ந்த தம்பி கி.டி.சரவணன், ஈரோட்டைச் சேர்ந்த தம்பி பேரறிவாளன் ஆகியோர் முருகனிடம் இருந்து விவரங்களைப் பெற்றுத் தந்தனர்.

புத்தகம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பிறகு, வழக்கறிஞர் புகழேந்தியின் மூலம் சில தகவல்கள் மற்றும் பெயர் விவரங்களை உறுதிப்படுத்தினேன்.

அதன்பிறகு, இந்தப் புத்தகம் நளினிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவர் அணிந்துரை வழங்கினார். மொத்தமாக, என்னுடைய 6 ஆண்டுகால உழைப்பின் விளைவாக இப்போது புத்தகம் முழுமை அடைந்துள்ளது” என்றார்.

-விகடன்-

நோர்வேயில் இலங்கை தமிழர்கள் செய்த காரியம் : போலீசார் அதிரடி!!

norway

நோர்வேயில் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட 76 இலங்கை தமிழர்கனை அந்நாட்டு பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நோர்வேயில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி குறித்த அனைவரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், துப்பரவு தொழில் செய்யும் 34 வயதுடைய பிரதான சந்தேக நபர் கடுமையாக உழைத்து முன்னேறிவரும் ஒருவராக தன்னை அடையாளம் காட்டி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நபர் 6 பேருடன் இணைந்து நோர்வேயில் வாழும் இலங்கை தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி சுமார் 160 – 200 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மோசடி செய்த தொகை இதனை விட பலமடங்கு இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், மோசடியுடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காண்பது கடினமான காரியம் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தலைநகர் ஒஸ்லோவிற்கு அருகில் துப்பரவு தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இலங்கை தமிழ் ஒருவரின் ஆண்டு வருமானம் குறித்து 2014ஆம் ஆண்டு வருமான வரி திணைக்களத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையர் சிலரின் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட அந்நாட்டு பொலிஸார் கடந்த 2 ஆண்டுகளாக கண்காணித்து வந்துள்ளனர்.

இவர்களை கண்காணித்து வந்ததில் முக்கிய 6 நபர்கள் மற்றும் பல தமிழர்களின் பெயரில் இவ்வாறு மோசடிகளை செய்து சொகுசாக வாழ்வதும், இதன் பின்னல் உள்ள மோசடியும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே, சில தமிழ் இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் விரும்பியோ விரும்பாமலோ குறித்த நிறுவனங்களில் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முக்கிய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளனர் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தையடுத்து சுமார் 7 இளைஞர்கள் தற்காலிக வேலை அனுமதியை இழந்துள்ளதுடன், புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் முன் இந்த மோசடி நிறுவனங்களில் வேலைசெய்த பலரது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள மாணவனை தாக்கி கையில் தமிழ் என பிளேடால் எழுதிய நபர்கள்!!

attack

தலவாக்கலையில் உள்ள பிரபல சிங்கள பாடசாலை ஒன்றின் மாணவனை இந்தெரியாத நபர்கள் தாக்கி அம் மாணவனின் கையில் தமிழ் என ஆங்கில எழுத்துக்களால் பிளேட் ஒன்றினால் கீறியுள்ளனர்.

தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த தரம் பத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு அருகில் காணப்படும் சுரங்கப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெற்றோர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

10 11 12 13

மன்னாரில் பாரிய பஸ் விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

accident

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார், பேருந்து ஒன்று இன்று இரவு (25) மன்னார் பிரதான பாலத்திற்கருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச பேருந்து ஒன்றின் சாரதிக்கும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட போட்டி தன்மை காரணமாகவே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி உட்பட 07 பேர் வரையில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் போட்டி தன்மை ஏற்பட்டு வருகின்றமையினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

a1 a2

பின்லாந்தில் வீதிகளுக்கு Emoji, Meme போன்ற சமூக வலைத்தள வார்த்தைகளின் பெயர்கள்!!

emojis

Emoji, Meme போன்ற சமூக வலைத்தளங்களில் பாவிக்கப்படும் வார்த்தைகளை வீதிகளின் பெயர்களாக வைக்க பின்லாந்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெற்கு பின்லாந்தில் உள்ள ஒரு நகரத்தில் இரண்டு புதிய சாலைகளுக்கு Emoji Street மற்றும் Meme Street எனப் பெயரிடலாமா என்று விவாதம் நடைபெற்று வருகிறது.

பின்லாந்தில், மேற்கு ஹெல்சிங்கி நகரத்திற்கு அருகில் உள்ள லோஹ்யா என்ற பகுதியில் ஒரு புதிய வர்த்தக மண்டலத்தை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக Emojikatu மற்றும் Meemikatu என்ற பின்னிஷ் மொழியில் உள்ள பெயர்களை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு நகரத் திட்டமிடல் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. தற்போது, உள்ளூர் மக்களிடம் அவர்களின் கருத்துக்களை நகர கவுன்சில் கேட்டுள்ளது.

எதிர்காலத் தலைமுறையினர் 21 ஆம் நூற்றாண்டைப் பற்றிய உணர்வைப் பெற, தெருக்களுக்கு நவீன பெயர்களை சூட்ட வேண்டும் என நகரத் திட்டமிடல் குழு விரும்புகிறது என கட்டிடக்கலை நிபுணர் மற்றும் நகரத் திட்டமிடல் குழுவைச் சேர்ந்த யுஹா ஆன்டிலா கூறியுள்ளார்.

எங்களது பகுதியில் உள்ள செடி, மரம் மற்றும் பறவைகளின் பெயர்கள் என எல்லாப் பெயர்களையும் சூட்டியாகிவிட்டது. நவீன காலத்தைப் பற்றி பேசும்பொருளான ஒன்றின் பெயரை வைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என அவர் எம்.டி.வி. செய்தி இணையத்தளத்திடம் கூறியுள்ளார்.

உள்ளூர் மக்கள் லோஹ்யா திட்டத்தை எதிர்க்காவிட்டால், புதுவருட பிறப்பின் போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். ஆனால், சில பின்லாந்துவாசிகள் ட்விட்டர் தளத்தில், பாரம்பரியம் அல்லாத பெயர்களை வைப்பது சரியானதா என்று விவாதித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷிற்கு உத்தரவு!!

danush

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என தம்பதியர் உரிமை கொண்டாடி வரும் நிலையில், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி, இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என உரிமை கொண்டாடி வருகின்றனர்.

தனுஷின் உண்மையான பெயர் கலைச்செல்வன் எனக் கூறும் அந்த தம்பதியர், தனுஷ் திருப்பத்தூரில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடிக்கும் ஆசையில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தருமாறு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017ம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் தனுஷிற்கு உத்தரவிட்டுள்ளது.

5,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு!!

city

எகிப்து நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு நகரத்தை உள்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நகரம், வீடுகள், கருவிகள், மண்பானைகள், மிகப்பெரிய அளவிலான கல்லறைகள் போன்றவற்றை கொண்டுள்ளன. இந்த நகரம் நைல் நதிக்கும் அபிடாஸ் நகரத்துக்கும் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரத்தில் அதிகாரிகளும், கல்லறை கட்டுமான கலைஞர்களும் வாழ்ந்திருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். புனித நகரம் என கருதப்படுகிற பழைய தலைநகரமான அபிடாஸ் நகரத்தில் அரச குடும்பத்துக்கு கல்லறை கட்டுகிற பணியில் அவர்கள் இருந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

2011-ம் ஆண்டு எகிப்தில் ஹோஸ்னி முபாரக் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் அங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்து விட்டது.

அந்த நிலையை மாற்றி, சுற்றுலாப் பயணிகளை எகிப்து நோக்கி படையெடுக்க வைக்க இந்த கண்டுபிடிப்பு உதவும் என கூறப்படுகிறது.

பி.பி.சி. மத்திய கிழக்கு பகுதி ஆய்வாளர் ஆலன் ஜான்ஸ்டன், “இந்த நகரத்தை கண்டுபிடித்திருப்பது பற்றி கருத்து தெரிவிக்கையில், “இங்கு மிகப்பெரிய கல்லறைகள் காணப்படுவது சிறப்பானது” என குறிப்பிட்டுள்ளார்.

சம்பளத்துக்கு வரி கட்ட வற்புறுத்தும் நடிகைகள்!!

act

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகில் 10க்கும் மேற்பட்ட முன்னணி கதாநாயகிகள் உள்ளனர். ஒன்றிரண்டு படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த கதாநாயகிகள் பட்டியலில் 50க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். வளர்ந்த கதாநாயகிகள் பலரின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடும். படம் வெற்றி பெற்றால் சம்பள தொகை ஏறுவதும், தோல்வி அடைந்தால் இறங்குவதும் வழக்கம்.

ஆனால் நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரின் சம்பளம் மட்டும் ஏறுமுகமாகவே இருக்கிறது. நயன்தாரா 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கதாநாயகியாக அறிமுகமான புதிதில் இவரது சம்பளம் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வசூல் குவித்ததால் சம்பளம் மளமளவென உயர்ந்தது.

தற்போது ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘கைதி எண்.150’ படத்தில் நடிக்க அவரை அணுகி ரூ.3½ கோடி சம்பளம் தருவதாக பேசினார்கள். ஆனால் அவருடன் நடிக்க மறுத்து விட்டார்.

பழைய மாதிரி காதல் கதையம்சம் உள்ள படங்களை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறார். அவர் நடித்துக் கொண்டு இருக்கும் டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம் ஆகிய மூன்றுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்கள்.

இந்த படங்களில் பெரிய கதாநாயகர்கள் இல்லாததால் நயன்தாராவுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் தயங்கவில்லை.

அதிக சம்பளம் வாங்குவதில் நயன்தாராவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வாங்கி வந்த இவருக்கு தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘பாக்மதி’ தெலுங்கு படத்துக்கு ரூ.2¼ கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளது.

அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி படங்களில் வித்தியாசமாக நடித்து ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ள அனுஷ்கா சம்பளத்தில் நயன்தாராவை பின்னுக்கு தள்ள தீவிர முயற்சி எடுக்கிறார். ஆனாலும் இளம் ரசிகர்கள் நயன்தாராவுக்கு பெருமளவு இருப்பதால் அவரை முந்த முடியவில்லை.

1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதால் நயன்தாராவும், அனுஷ்காவும் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்துக்கு வரி கட்டி வெள்ளையாக தரும்படி நிபந்தனை விதித்து இருப்பதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.