நகரும் படிக்கட்டில் பயணிப்பது கவனம் : கை தவறியதால் பலியானது கைக் குழந்தை!!

1

30 அடி உயரத்தில் பாட்டியின் கை தவறியதால் 4 மாதக் கைக் குழந்தை பலியான சம்பவம் அனைவரின் மனதினை பாதித்துள்ளது.

சீனாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கையில் குழந்தையினை ஏந்தியவாறு நகரும் படிக்கட்டில் கீழே இறங்க சென்ற பாட்டி தன்னுடைய நிலை தடுமாறவே கையில் இருந்த குழந்தையினை தவறவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் சிசிரிவி காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி விவசாயி பலி : மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

minnal

முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விவசாயி ஒருவர் இன்று மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பலியானதுடன் மற்றுமொரு விவசாயி காயமடைந்துள்ள நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள மல்லாவிப்பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த திருநகர் மல்லாவியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (வயது- 62) என்ற விவசாயியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவரது சடலம் மல்லாவி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அவருடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மற்றுமொரு விவசாயியான வளநகர் மல்லாவியைச் சேர்ந்த செல்லையா வசந்தகுமார் (வயது 55) என்பவர் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கோணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி!!

sl

நேற்று இடம்பெற்ற சிம்பாபேவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

இதில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிம்பாபே அணி சார்பில் எந்தவொரு வீரரும் அரைச்சதம் கூட பெறவில்லை என்பதோடு, அந்த அணிக்காக பீற்றர் மூர் அதிகபட்ச ஓட்டமாக 47ஐ பெற்றுக் கொடுத்தார்.

இந்தநிலையில் சிம்பாபே 41.3 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப்பிடித்து 154 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் அசல குணசேகர மூன்று விக்கெட்டுக்களையும், நுவன் குணசேகர, சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதற்கமைய இலங்கைக்கு 155 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 24.3 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த நிலையில் 155 ஓட்டங்களை விளாசிய இலங்கை வெற்றியைத் தனதாக்கியுள்ளது.

இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 78 ஓட்டங்களையும் நிரோஷான் டிக்வெல 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தேநீர் ஒரு கோப்பையின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!!

tea

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக அனைத்து உணவுப் பொருட்களினது விலைகளையும் 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தேநீர் ஒரு கோப்பையின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

உணவகங்களில் தாயரிக்கப்படுகின்ற அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் தொழில் புரியும் வர்க்கத்தினரின் விருப்புக்குரிய பருப்பு ஒரு கோப்பையின் விலையையும் அதிகரிக்கவுள்ளதாக அசேல சம்பத் குறிப்பிட்டார்.

பருப்பின் விலை கடைக்கு கடை மாறுபடுவதன் காரணமாக, பருப்பு ஒரு கோப்பையின் விலை 5 தொடக்கம் 10 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

 
வவுனியா குளுமாட்டுசந்தியில் நேற்று (14.11.2016) காலை 8.00 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றியது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எரிபொருள் ஒழுக்கு காரணமாக குளுமாட்டுச்சந்தியில் திடீரென தீப்பற்றியது.

தீப்பற்றியதை அறியாத முச்சக்கரவண்டியின் ஓட்டுனர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தார். மக்கள் முச்சக்கரவண்டி தீப்பற்றியுள்ளது என கூச்சலிட்டதுடன் சாரதி முச்சக்கரவண்டியிருந்து பாய்ந்துள்ளார்.

உடனே பொதுமக்கள் உதவியிடன் அருகே காணப்பட்ட குளத்தில் முச்சக்கரவண்டியினை தள்ளி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

1 dsc_0552 dsc_0553 dsc_0555 dsc_0556 dsc_0557 dsc_0562

வவுனியாவில் மூங்கில் செயற்றிட்டம் ஆரம்பித்துவைப்பு!!

 
வவுனியா பெரியார்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (13.11.2016) காலை 10 மணிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் மூங்கில் கன்றுகள் நாட்டும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட மூங்கில் கன்றுகள் இலங்கையில் முதற்தடவையாக வவுனியாவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பில் 1000 மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.

1 dsc_0500 dsc_0501 dsc_0503 dsc_0504 dsc_0505 dsc_0506 dsc_0507 dsc_0508 dsc_0512 dsc_0513 dsc_0516 dsc_0517 dsc_0520 dsc_0522 dsc_0523 dsc_0524 dsc_0525 dsc_0526 dsc_0527 dsc_0529 dsc_0533 dsc_0534 dsc_0536

 

இலங்கைக்கு அருகில் வரும் சூப்பர் மூன் இன்று இரவு காண தவறாதீர்கள்!

asd1

? இன்றிரவு கடந்த 68 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த முறை நிலா, மிக அருகில் தெரியும். 68 ஆண்டுகளுக்கு பின் வரும் இந்நிலவு, 30 சதவீதம் அதிக ஒளியுடனும், வழக்கமான நிலவைவிட இன்று தோன்றும் நிலவு 14 சதவீதம் பெரியதாக நம் கண்களுக்கு தெரியும்.

? இந்த நிகழ்வு கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வந்ததைவிட சிறப்பானதாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

? நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வுக்கு சூப்பர் மூன் எனப் பெயர். சூப்பர் மூன் என்பது முழு நிலவு அல்லது புது நிலவு என அழைக்கப்படுகிறது. இது இன்று 14ம் தேதி பவுர்ணமி நாளில் நடைபெறுகிறது. 68 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் நிலாவை இன்று மக்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

? பூமியைச் சுற்றி வரும் நிலா சுமார் 68 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பு+மிக்கு மிக அருகில் தெரியும்.

? சு+ப்பர் நிலவு நிகழ்வு ஏற்படும்போது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது.

? இன்று 30 சதவீதம் கூடுதலான ஒளியுடன் இந்த நிலவு தோன்றும் என்பதால் இன்றைய இரவு மிகவும் வெளிச்சமாக இருக்கும்.

? அதிக ஒளியுடன் இந்த நிலா தெரியும் என்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தோன்றும்.

? இதுபோன்ற சூப்பர் பவுர்ணமி நிலாவை, அடுத்ததாக, 2034ல் தான் பார்க்க முடியும்.

? இந்த அரிய நிகழ்வை தவறவிட்டால் இதனை காண இன்னும் 70 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் !

தவறாமல் பார்த்து மகிழ்ந்திடுங்கள் !!!

வவுனியாவில் மீண்டும் ஒருவார இடைவெளியின் பின் மழை!(படங்கள்)

வவுனியாவின் பலபகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக மாலை வேளைகளில் தொடர்ச்சியாக மழை  பெய்துவந்த நிலையில் மீண்டும்   ஒருவார இடைவெளியை தொடர்ந்து  நேற்று (13.11.2016) மழை  பெய்ய தொடங்கியுள்ளது .

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வவுனியா நகரம் மற்றும் ஓமந்தை, கனகராயன்குளம், செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசங்களிலும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

கடந்தவாரம் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில்மீண்டும்  இவாரமும் மழை பெய்ய தொடங்கியிருப்பதால் அவர்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது நிலவி வரும் காலநிலை தொடர்ச்சியாக இரண்டு மூன்று தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

dsc09386 dsc09387 dsc09388 dsc09389 dsc09390 dsc09391 dsc09392 dsc09393 dsc09394 dsc09395 dsc09396 dsc09397 dsc09398 dsc09399 dsc09400 dsc09401 dsc09402 dsc09403 dsc09404 dsc09405 dsc09406 dsc09407 dsc09408 dsc09409 dsc09410 dsc09411

 

 

 

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் கதிராளி சஞ்சிகை வெளியீடும்!!

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் கதிராளி சஞ்சிகை வெளியீடும் இன்று(12.11.2016) காலை 9.30 மணிக்கு ஜயாத்துரை மண்டபத்தில் பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் திரு. திருமதி த. திரேஸ்குமார், சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு. எம்.இராதகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

மற்றும் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், பொது அமைப்புக்கள், பழைய மாணவர்கள் சங்கப்பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டதுடன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பிரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கதிராளி சஞ்சிகையினை பாடசாலை அதிபர் வழங்க வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர், வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன் சிறப்புப்பிரதிகளும் வழங்கப்பட்டன.

dsc_0377 dsc_0378 dsc_0379 dsc_0380 dsc_0381 dsc_0382 dsc_0383 dsc_0385 dsc_0388 dsc_0390 dsc_0391 dsc_0392 dsc_0393 dsc_0394 dsc_0395 dsc_0396 dsc_0397 dsc_0398 dsc_0399 dsc_0400 dsc_0401 dsc_0402 dsc_0403 dsc_0404 dsc_0410 dsc_0411 dsc_0412 dsc_0413 dsc_0420 dsc_0421 dsc_0422 dsc_0425 dsc_0426 dsc_0430 dsc_0431 dsc_0432 dsc_0433 dsc_0434 dsc_0435 dsc_0438 dsc_0439 dsc_0440 dsc_0441 dsc_0442 dsc_0444 dsc_0448 dsc_0449 dsc_0450 dsc_0451 dsc_0452 dsc_0453 dsc_0454 dsc_0455 dsc_0456 dsc_0457 dsc_0458 dsc_0459 dsc_0460 dsc_0461 dsc_0462 dsc_0463

இடம் விட்டு இடம் நகர்கின்றது அவுஸ்திரேலியக் கண்டம் : விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்!!

aus1

தற்போது உள்ள ஏழு கண்டங்களும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து காணப்பட்டன என்பது புவியியலாளர்களின் கருத்து.

எனினும் காலநிலை மாற்றங்கள் காரணமாக பின்னர் அவை தனித்தனியாக பிரிந்ததாக கருதப்படுகின்றது.

இப்படியிருக்கையில் அவுஸ்திரேலியக் கண்டம் தொடர்ந்தும் தனது இடத்தை விட்டு நகர்ந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இக் கண்டமானது ஆண்டு தோறும் பல மில்லி மீற்றர்கள் வரை புவியின் மத்திய பகுதியில் இருந்து நகர்வது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஓர் ஆண்டு இரண்டு தடவைகள் இவ்வாறு நகர்வை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கடந்த 22 வருடங்களில் அவுஸ்திரேலியக் கண்டமானது 1.5 மீற்றர் நகர்ந்திருந்தமை இவ்வருட ஆரம்பத்தில் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அக் கண்டத்தின் அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றினையும் மாற்றிமைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே அக் கண்டம் ஆண்டுதோறும் நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

aus

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம் : வியப்பில் உலக நாடுகள்!!

 
அடுத்து வரும் காலங்களில் எரிபொருளுக்கு ஏற்படப் போகும் பற்றாக்குறை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.

அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றீடாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு வலுச்சேர்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளாலும் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் தூள் மற்றும் எல்கி பயன்படுத்தி ருஹுனு பல்கலைகழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தினால் புதிய எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டீசலுக்கு இணையான திறன் புதிய எரிபொருளில் உள்ளதாக விஞ்ஞான பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சிரேஷ்ட விரிவுரையாளர் சின்னா ரூபசிங்கவின் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பு முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

உலகம் முகம் கொடுக்கும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய எரிபொருள் காணப்படும் என இலங்கை விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

1 2 3

கிரீன் டீயால் ஆபத்து : மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

green-tea

இன்று உலகளவில் பல மக்கள் விரும்பி அருந்தும் பானமாக உள்ளது கிரீன் டீ. முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள், பின்னர் அது மெல்ல மற்ற நாடுகளுக்கு பரவியது.

கிரீன் டீயை முறைபடி அருந்தினால் மட்டுமே பலன்களை பெறலாம். கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

மூச்சு சம்மந்தமான பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது.

கிரீன் டீயை வெறும் வயிற்றில் எப்போது அருந்தவே கூடாது. ஏனென்றால், அது வயிற்றுக்கு தேவையில்லாத சங்கடங்களை கொடுக்கும்.
உணவு சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடித்தால் அது நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் ஊட்டசத்துகளை நம் உடலில் சரியாக சேர விடாது மற்றும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதிலும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதனால் எப்போதும் உணவு சாப்பிட்ட 30லிருந்து 45 மணி நிமிடங்கள் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.

இதேபோல் தூங்க செல்லும் முன்னர் கிரீன் டீ அருந்தவே கூடாது.

முக்கிய விடயமாக ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேலே கிரீன் டீ பருகுவது ஆபத்து என கூறும் மருத்துவர்கள் அப்படி அதை விட அதிகம் அருந்தினால் கல்லீரல் பாதிக்கபட நிறைய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

பிச்சைக்காரனுக்கு 1 கோடி கொடுத்த செல்வந்தர்!!

An employee counts Indian currency notes at a cash counter inside a bank in Kolkata June 18, 2012. The Indian rupee gained in early trade on Monday as risk assets rallied after Greece elections gave a slim majority to pro-bailout parties, with the focus shifting to the central bank policy decision later in the day. REUTERS/Rupak De Chowdhuri (INDIA - Tags: BUSINESS)

 

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்துள்ளது ஏழை, பணக்காரர்கள் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

கைகளில் பணத்தினை வைத்துக்கொண்டு ஏழை மக்கள் உணவுக்காக திண்டாடினால், வீடுகளில் பதுக்கி வைத்திருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை எவ்வாறு வங்கிகளில் மாற்றுவது என்று செல்வந்தர்கள் திண்டாடி வருகின்றார்கள்.

வருகிற டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் இரு நோட்டுகளும் இந்திய மக்களிடம் இருந்து விடைபெறுகின்றன. மொத்தம் 50 நாட்களே கொடுக்கப்பட்டுள்ள இந்த காலக்கெடு கருப்பு பண முதலைகளுக்கு பற்றவே பற்றாது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக வங்கிகளில் பெரும் தொகையை கொடுத்து மாற்றினால் சிக்கிகொள்ள வாய்ப்பிருப்பதால் என்ன செய்வது என்ற தெரியாமல் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள் செல்வந்தர்கள்.

அப்படி ஒரு வழியாக 100 ரூபாய் நோட்டாக மாற்றினாலும், அவ்வளவு பெரிய தொகையை வைப்பதற்கு இடமும் இல்லை என்பதால் கையில் பணத்தை வைத்துக்கொண்டு விட்டத்தை பார்க்கும் நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

500 மற்றும் 1000 ரூபாய் வைத்திருந்தால் நீயெல்லாம் பணக்காரன் என்று சொல்லிய நாட்கள் கடந்து, 10, 50 ரூபாய் வைத்திருந்தால் தான் நீயெல்லாம் பணக்காரன் என்று சொல்லும் நிலை வந்துவிட்டது.

இன்று, உத்திரப்பிரதேசத்தின் பரேலியில் சாலையோரம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

தீ வைத்து எரிக்கப்பட்ட ரூபாய் பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. ஒரு செல்வந்தர் தன்னிடம் உள்ள பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றவும் முடியாமல், உண்டியலில் செலுத்தவும் முடியாமல் ஒரு கோடியை வழியில் சென்ற பிச்சைக்காரனுக்கு கொடுத்துள்ளாராம்.

இப்படி ஒரு கோடியை பிச்சைக்காரனுக்கும், தன்னிடம் வேலைபார்ப்பவர்களுக்கு கொஞ்சம் தொகையும் கொடுத்து தன்னிடம் உள்ள தொகையின் அளவை குறைத்து, எஞ்சிய தொகையை வங்கியில் கொடுத்து மாற்றியுள்ளாராம்.

ஆக மொத்தத்தில் இருவரும் ஒரு கருப்பு பண முதலை ஆவார். எங்கே தானும் கருப்பு பண வரிசையில் சிக்கிவிடுவோமா என்ற அச்சத்தில் இப்படி தன்னிடம் உள்ள தொகையை கரைத்துள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கு ஜனவரி மாதம் கைக்கணனிகள் வழங்கப்படவுள்ளன!!

tabs

கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவ மாணவியருக்கு ஜனவரி மாதம் முதல் கைக்கணனி (டெப்) வகைகள் வழங்கப்படவுள்ளன.

புதிய வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் உயர் தர மாணவர்களுக்கு டெப்கள் வழங்கப்படவுள்ளன.

சுமார் இரண்டு லட்சம் டெப்கள் வழங்கப்பட உள்ளதாகவும் ஜனவரி மாதம் முதல் டெப்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் உயர்தர மாணவர்கள் ஒரு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் மாணவர்களுக்கும், இருபத்து எட்டாயிரம் ஆசிரியர்களுக்கும் டெப்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலவச சீருடை, புத்தகங்களுக்கு மேலதிகமாக இலவசமாக டெப்களை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முதல் தெற்காசிய வலய நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றியால் ஐரோப்பாவுக்கு ஆபத்தென எச்சரிக்கை!!

In this Sept. 30, 2015, photo, Republican presidential candidate, businessman Donald Trump talks during a campaign stop in Keene, N.H. After seven years of the political drama known as "Obamacare," you might think voters would be tired of big ideas for revamping health care. If so, the presidential candidates seem to have missed the memo. Trump says his replacement plan would be different. He’d make sure everybody in the country is covered, something not even Obama accomplishes. Trump says he’d make a deal with hospitals, and most people would still have private coverage. (AP Photo/Steven Senne)

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளமை ஐரோப்பாவுக்கு ஆபத்தென எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Jean-Claude Juncker இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் வருகை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உறவுகளுக்கு “அடிப்படை மற்றும் கட்டமைப்புரீதியாக” பாதிப்பை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஐரோப்பா என்றால் என்ன? அது எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாம் கற்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

லக்சம்பேர்கில் இடம்பெற்ற செயலமர்வில் இந்த விடயங்களை Juncker குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பிற்கு தெரியாத உலக சுற்றுலாக்களுக்காக இன்னும் இரண்டு வருடங்கள் வீணாகும் என ஆணையத் தலைவர் கணித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கருத்துக்கள் முரண்பாடாக இருந்ததுடன் அமெரிக்க தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அது மேலும் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவின் பிரதான நகரங்கள் வன்முறை தேசமாக மாறியுள்ளது.

முகத்தை காட்ட மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு 49 லட்ச ரூபாய் அபராதம்!!

muslim

இத்தாலியில் நாடாளுமன்ற மேயர் இஸ்லாமிய பெண்ணின் முகத்தில் உள்ள முக்காடை கழட்ட சொல்லியும் அப்பெண் அதை கழட்டாததால் அந்த பெண்ணுக்கு €30,600(ரூ.4914,366 இலங்கை மதிப்பீட்டின்படி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் இளைஞர்களுக்கான பாராளுமன்றம் நடைபெறுவது வழக்கம். அதில் பல இளைஞர்கள் கலந்து கொண்டு பேசி தங்கள் வாதங்களை மேயரிடம் முன்வைப்பார்கள்.

அதன் படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் ஒருவர் பேசிக் கொண்டிருக்க அதை அவரின் தாய், பார்வையாளர்கள் வாயிலில் அமர்ந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தார்.

இஸ்லாமிய பெண்ணான அவர் தனது முகத்தை வெளியில் காட்டாமல் கருப்பு துணியால் ஆன முக்காடை முகத்தில் அணிந்திருந்தார்.

அதை பார்த்த குறித்த நாடாளுமன்ற மேயர் முகத்தை மூடி கொண்டு இங்கு அமர கூடாது, அந்த முக்காடை கழட்டுமாறு கூறியுள்ளார்.

இப்படி பல முறை மேயர் சொல்லியும் அந்த பெண் அதை செய்ய மறுத்துள்ளார்.

இதனால் மேயர் ஆணைக்கிணங்க அந்த பெண் பொலிசாரால் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

பின்னர் நீதிமன்றத்தில் அவர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் அவருக்கு சிறை தண்டனை தளர்த்தப்பட்டு, அபராத தொகையாக €30,600 கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.