ஆபிரிக்க நாடுகள் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிகளவான மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.
இவ்வாறு ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்ளும் போது அது அவர்களின் வாழ்வின் இறுதி முடிவாக கூட அமைந்து விடுகின்றது.
இந்நிலையில், ஆபத்தான கடல் பயணங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அகதிகளின் வருகையினை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.
இவ்வாறான நிலையில், அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றிவந்த படகு ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து 1800 பேரை நேற்று பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இத்தாலிய கடலோர பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
இதன் போது கைக்குழந்தை ஒன்று கடலில் இருந்து மீட்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தளங்களில் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகின்றது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆபத்தான கடல் பயணங்கள் மூலம் சுமார் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த ஆண்டு அலன் குர்தி என்னும் சிறுவன் இவ்வாறு உயிரிழந்தமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தான், லாகூர் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றி வளைப்பு நடவடிக்கையொன்றின் போதே அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின் பக்ரிகா மாநிலத்தில் ஆப்கான் மற்றும் நேடோ இராணுவத்தினர் இணைந்து இந்த விஷேட சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர் க்வாரி அஜ்மால் என அடையாளம் காணப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது, மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
க்வாரி அஜ்மால் பஞ்ஜாக் நகரில் வாழ்ந்து வந்துள்ளதாகவும், அவர் லஷ்கரி ஜான்க் வீ பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை ஏற்றி சென்ற பஸ் மீது லாகூர் நகரில் வைத்து 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருந்தது. லாகூர் கடாபி மைதானத்திற்கு அருகிலேயே இந்த பயங்கரவாத தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, சமிந்த வாஸ், திலான் சமரவீர, அஜந்த மென்டீஸ், சுரங்க லக்மால் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பலாங்கொடை, மாதம்பாகம ரயில் நிலையத்தில் ரயில் மிதிபலகையில் பயணித்த சீன நாட்டு யுவதி ஒருவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மிதிபலகையில் இந்த யுவதி பயணித்தபோது மிதிபலகையில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
25 வயதான சீனாவைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவருடன் மேலும் சில சீன பிரஜைகள் ரயிலில் பயணித்துள்ளதுடன், அவர்கள் இன்றிரவு தமது நாட்டுக்கு புறப்பட்டுச் செல்ல இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பலப்பிட்டிய மேலதிக நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அப்பிள், கூகுள், சம்சங் போன்ற நிறவனங்கள், மொபைல் வேலெட்களை ஆப்பிள் பே, கூகுள் வொலெட் (Google Wallet) மற்றும் சம்சங் பே (Samsung Pay) என பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற உதவுகிறது.
அந்த வகையில் தற்போது வட்ஸ் அப் மூலமும் பணம் அனுப்பும் புதிய வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
கூகிள் ப்ளே ஸ்டோரில் ப்ரீசார்ஜ் அப்பை (Freecharge App) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் நம் மொபைல் எண் கொண்டு சைன்-அப் செய்து அதில் நம்முடைய வங்கிக் கணக்கிலக்கம் பற்றிய தகவலை சேமிக்க வேண்டும்.
பின்னர் நமது போனின் திரையில் வலது பக்கத்துக்கு அடியில் உள்ள More என்ற பட்டனை அழுத்தவும். இதை கிளிக் செய்தவுடன் Free Charge On Whats App என்ற அப்ளிகேஷனை கிளிக் செய்யவும், அதில் எனேபிள் பட்டனை க்ளிக் செய்து விபரத்தை குறிப்பிட வேண்டும்.
பின் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதை என்ட்டர் செய்ய வேண்டும், உதாரணமாக, ரூ.100 அனுப்ப வேண்டுமெனில் 100FC என குறிப்பிட்டு, வட்ஸ் அப் மூலமாக contact ஐ தெரிவு செய்ய வேண்டும். அதன் பின் பணபரிமாற்றம் நிகழும். இப்படி சுலபமாக வட்ஸ் அப் மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டில் டொயோட்டா நிறுவனம், ‘கிரோபோ மினி’ என்ற நான்கு அங்குல உயரமுள்ள குழந்தை ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘கிரோபோ மினி’ ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார், ஜப்பானில் குழந்தை இன்றி தனிமையில் வாடுபவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் கிரோபோ மினி உருவாக்கப்பட்டிருப்பதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.
இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது, சிரிக்கிறது, அழுகிறது. குழந்தை போன்று தடுமாற்றத்துடன் நடக்கிறது.
பலருடைய செல்ல ரோபோவாக வளம் வரப்போகும் இந்த குட்டி ரோபோ, அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கண்ணீர் என்பது ஆணுக்கு வேண்டுமானால் காரியங்களை சாதித்துக்கொள்ளும் கருவி போலவும், எதிரே இருப்பவரை வீழ்த்தும் ஆயுதம் போலவும் இருக்கலாம்.
பெண்ணைப் பொறுத்தவரையில் அவளின் கண்ணீர் என்பது அவளுடைய உண்மையின் மெய்ப்பாடு. அவள் மனதின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவளுக்குத் தெரிந்த செயல்பாடு.
இந்த சமுதாயத்தை பொறுத்தவரை, கண்ணீர் பெண்களுக்கு ஒரு ஆயுதம் என பரவலாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆயுதத்தை வைத்து பெண்கள் எத்தனை எதிரிகளை வீழ்த்தியிருக்கிறார்கள்? எத்தனை உறவுகளை தொலைத்திருக்கிறார்கள்? எத்தனை உறவுகளிடம் மண்டியிட்டு இருக்கிறார்கள்? என்பதை பெண்களின் கண்ணீர் மட்டுமே சொல்லும்.
ஒரு பெண் தனது கண்ணீரின் மூலம் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்கிறாள் என்றால், அது வெறும் கண்ணீர் சார்ந்த விடயமாக இருக்காது. அவளது உணர்வு சார்ந்த விடயமாகவே இருக்கும்.
தனது கண்ணீரை யார் முன் சிந்த வேண்டும் என்பதில் கூட பெண்கள் வரையறை வைத்திருப்பார்கள். ஒரு ஆணின் முன்னால் அழக்கூடாது என தனது மனதை இறுக்கமாக்கி கொண்டால், அதன்பின்னர் அந்த இறுக்கம் நலிவடைவது இயலாத காரியம்.
தனது கண்ணீரின் வலிமை மற்றும் அதில் உள்ள உண்மையை ஒரு பெண் மற்றுமே நன்கு அறிவாள். பல நேரங்களிலும் பெண்களின் கண்ணீர் அர்த்தமற்றது என புறந்தள்ளப்படுவதுண்டு.
தான் நேசிக்கும் ஆண், அவளது உணர்வுகளோடு விளையாடுகையில் பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிகொண்டு, அவனிடம் கேள்விகள் கேட்டு தன்னை வெளிப்படுத்துக்கொள்ள முடியாத நிலையில், கண்ணீரிடம் அடைக்கலம் ஆகிறாள்.
உணர்வுகள் கண்ணீராய் வெளிப்பட்ட பின்னரும் கூட, கண்ணீர் சம்பந்தப்பட்டவர் அவளை அவமதிக்கும்போது மௌனம் காத்து தன்னை மூடிக்கொள்கிறாள்.
தமிழ் இலக்கிய மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகியவை.
இந்த எட்டு வகையான வெளிப்பாடுகளிலும் அவள் துளியேனும் கண்ணீராகத் துளிர்த்துவிடுவாள். பெண்ணுக்கு அவளுடைய எந்த உணர்வாக இருந்தாலும் அதன் அடிப்படையான உண்மையைக் கண்ணீராகவே வெளிப்படுத்தத் தெரிகிறது.
ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத் எனும் நகருக்கு அருகிலுள்ள பிரெயன்பெல்ஸ் எனும் கிராமத்தில் இத்தம்பதியினர் வசிக்கின்றனர்.
இத் தம்பதியின் மகனுக்கு தற்போது 43 வயதாகிறது. அந்நபர், 13 வயதில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தார்.
அதன்பின் ஒருபோதும் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த வருடம் உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதையடுத்து அந் நபரை பொலிஸார் வீட்டிலிருந்து வெளியேற்றி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
வீட்டுக்கு வெளியே செல்வதை அவர் விரும்பவில்லை என அந்நபரின் தாயார் தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நேற்று (07) வெளியானது.
இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
இந்நிலையில், தர்மதுரை உள்ளிட்ட தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத தமன்னா, தேவி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபுதேவாவுடன் அதிகம் பங்கேற்றார். மேலும், தேவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா, தமன்னாவைப் புகழ்ந்து தள்ளினார்.
தமன்னாவின் நடனத்தை வெகுவாக புகழ்ந்தார். இதைக்கேட்டு அங்கேயே தமன்னா ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
இந்த சம்பவங்களையடுத்து பிரபுதேவாவும், தமன்னாவும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் உறுதிபட கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவை பிரபுதேவா பிரிந்த பிறகு, அவரை பல நடிகைகளுடன் தொடர்ப்புபடுத்தி கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால், இதுவரை தமன்னாவை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியானது இல்லை. இதுவே முதல் முறை.
இந்நிலையில், தமன்னா பிரபுதேவாவுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் 30 பேர் நாடு திரும்பவுள்ளனர்.
குறிதை்த அனைவரும் எதிர்வரும் 18ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அந்த அமைச்சரின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளதாவது, இலங்கையிலிருந்து சென்று அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்களை படிப்படியாக மீண்டும் அழைத்து வரப்படுகின்றனர்.
அதன் பிரகாரம் மதுரையிலுள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 30பேர் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் தயாகம் திரும்பவுள்ளனர்.
இவர்களில் 13 ஆண்களும், 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறு நாடு திரும்பவுள்ள அகதிகள் திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் மீளவும் குடியேற்றப்படவுள்ளனர்.
அத்துடன், தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தேவையான இலவச விமான பயணச் சீட்டுகள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படவுள்ளது.
மேலும், அவர்களுக்கான ஆரம்பகட்ட வாழ்வாதார உதவிகளும் வழங்குவதற்கு அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் 58 வயதுடைய பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் Workington நகரின் Cumbria என்ற இடத்தில் 58 வயதான பெண் ஒருவர் தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அவரை தொடர்பு கொண்ட 18 வயதேயான இளைஞன் ஒருவன் ஆள்நடமாட்டம் இல்லாத அந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு அவரை கீழே தள்ளி பாலியல் தாக்குதலை நடத்தியுள்ளான்.
அவர் ஒத்துழைக்க மறுக்கவே அவரது முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளான். ஒத்துழைக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.
முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் அவனிடம் அந்த பெண்மணி கதறியுள்ளார். இருப்பினும் அவன் அந்த பெண்ணை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளான்.
இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் அவனிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் அவன் அவரை விடவில்லை.
அந்த பெண் தனது முகத்தில் உள்ள ரத்தத்தை அவன் சட்டையில் துடைத்துள்ளார். இதுவே அவனை எளிதில் பிடிக்க எங்களுக்கு உதவியது என்று கூறியுள்ளார்.
பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அந்த இளைஞனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உலக அழகியும், பொலிவுட்டின் மிக பிரபலாமன நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டிற்கான பிரபலமான பெண்களுக்குக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
பொலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாபச்சனின் மருமகளும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அவுட்லுக் மேகசீன் நிறுவனம் பிரபல பெண்களுக்கான விருதை வழங்கியுள்ளது.
இது குறித்து ஐஸ்வர்யாராய் கூறியதாவது, அவுட்லுக் மேகசீன் 19 பிரபல பெண்கள் லிஸ்ட் வெளியிட்டதில் எனக்கு முதல் இடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு அவுட்லுக் மேகசீனுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், என்னுடைய மகள் ஆராதயா பச்சனைத்தான் நான் எனது வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் 50 வயதான மருமகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த 70 வயது மாமானாரை மருமகள் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன்பழகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). சில வருடங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து போனார்.
தனது மகன், மகளுடன் மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார் தமிழ்ச்செல்வி. கந்தசாமி கடந்த 30 ஆம் திகதி வீதியோரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது வீதி விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தது சேத்தியாதோப்பு பொலிஸ் . ஆனால் இது விபத்து அல்ல. இவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் முறைப்பாடு அளித்தனர்.
இதையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து கொலை கந்தசாமியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தமிழ்ச்செல்வியைப் பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், கந்தசாமி அவ்வப்போது மது அருந்தி வந்து தனக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30 ஆம் திகதி அவரின் தொந்தரவு அதிகரித்தது.
அப்போது வீட்டில் இருந்த கட்டையால் அடித்து விட்டேன். இதில் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன். அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்ந்து நள்ளிரவில் வீதியோரம் விபத்தில் அடிபட்டு இறந்தது போல உடலைப் போட்டோம்.
மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப்பாற்றிக கொள்ள எனக்கு வழி தெரியவில்லை. எனவேதான் கட்டையால் அடித்தேன். அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார் .
கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் 50 வயதான மருமகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த 70 வயது மாமானாரை மருமகள் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன்பழகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). சில வருடங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து போனார்.
தனது மகன், மகளுடன் மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார் தமிழ்ச்செல்வி. கந்தசாமி கடந்த 30 ஆம் திகதி வீதியோரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது வீதி விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தது சேத்தியாதோப்பு பொலிஸ் . ஆனால் இது விபத்து அல்ல. இவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் முறைப்பாடு அளித்தனர்.
இதையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து கொலை கந்தசாமியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தமிழ்ச்செல்வியைப் பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், கந்தசாமி அவ்வப்போது மது அருந்தி வந்து தனக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30 ஆம் திகதி அவரின் தொந்தரவு அதிகரித்தது.
அப்போது வீட்டில் இருந்த கட்டையால் அடித்து விட்டேன். இதில் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன். அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்ந்து நள்ளிரவில் வீதியோரம் விபத்தில் அடிபட்டு இறந்தது போல உடலைப் போட்டோம்.
மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப்பாற்றிக கொள்ள எனக்கு வழி தெரியவில்லை. எனவேதான் கட்டையால் அடித்தேன். அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார் .
சுமார் 400 வருடங்களில் ஏற்படாத அளவு பயங்கர பேரழிவு ஒன்று ஏற்பட வாய்புள்ளதாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுனாமி போன்றதொரு பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கனமழை, வெள்ளம் என்பன ஏற்படவுள்ளதாக ஆற்காட்டி பஞ்சாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வருட இறுதிக்குள் பல தடவைகள் சூறாவளியுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையை ஜலப்பிரலயம் என்று குறிப்பிடும் மேற்படி ஜோதிடர், சென்னை, நெல்லை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் கோயமுத்துார் போன்ற பகுதிகள் பலத்த பாதிப்பை எதிர்நோக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்மித்த கடற்கரைகளில் அலைகள் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் வழமைக்கு மாறாக பயங்கரமானதொரு நிலை காணப்படுவதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் தாழமுக்கம் மற்றும் புயல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால், அது இலங்கையையும் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் முன்கூட்டியே இவ்வாறான ஒரு அறிவுறுத்தலை விடுப்பதாக குறித்த தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.