30 வருடங்களாக வீட்டுக்கு வெளியே செல்லாத 43 வயதான ஜேர்மனிய நபர்!!

german

ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத் எனும் நகருக்கு அருகிலுள்ள பிரெயன்பெல்ஸ் எனும் கிராமத்தில் இத்தம்பதியினர் வசிக்கின்றனர்.

இத் தம்பதியின் மகனுக்கு தற்போது 43 வயதாகிறது. அந்நபர், 13 வயதில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தார்.

அதன்பின் ஒருபோதும் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த வருடம் உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதையடுத்து அந் நபரை பொலிஸார் வீட்டிலிருந்து வெளியேற்றி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

வீட்டுக்கு வெளியே செல்வதை அவர் விரும்பவில்லை என அந்நபரின் தாயார் தெரிவித்துள்ளார்.

பிரபு தேவாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் தமன்னா!!

tamanna

பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நேற்று (07) வெளியானது.

இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

இந்நிலையில், தர்மதுரை உள்ளிட்ட தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத தமன்னா, தேவி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபுதேவாவுடன் அதிகம் பங்கேற்றார். மேலும், தேவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா, தமன்னாவைப் புகழ்ந்து தள்ளினார்.

தமன்னாவின் நடனத்தை வெகுவாக புகழ்ந்தார். இதைக்கேட்டு அங்கேயே தமன்னா ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

இந்த சம்பவங்களையடுத்து பிரபுதேவாவும், தமன்னாவும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் உறுதிபட கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவை பிரபுதேவா பிரிந்த பிறகு, அவரை பல நடிகைகளுடன் தொடர்ப்புபடுத்தி கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால், இதுவரை தமன்னாவை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியானது இல்லை. இதுவே முதல் முறை.

இந்நிலையில், தமன்னா பிரபுதேவாவுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கண்ணுக்கு புலப்படாத தொலைக்காட்சிப் பெட்டியை அறிமுகம் செய்தது Panasonic!!

tv

உலகத் தரம் வாய்ந்த இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து சந்தைப்படுத்தும் Panasonic நிறுவனம் தற்போது மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சியை செய்துள்ளது.

அதாவது செயற்படாத நிலையில் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டியை வடிவமைத்துள்ளது.

இத்தொலைக்காட்சிப் பெட்டியானது முற்றிலும் ஒளியினை ஊடுபுகவிடக்கூடிய கண்ணாடியைப் போன்றே காணப்படும்.

காட்சிகள் புலப்படும்போது மட்டுமே இது ஒரு தொலைக்காட்சிப் பெட்டி என்று அறியக்கூடியதாக இருக்கும்.

தற்போது காணப்படும் LED தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான OLED திரையினைக் கொண்டே இந்த தொலைக்காட்சிப் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது முற்றுமுழுதாக மேம்படுத்தப்படுவதற்கு இன்னும் மூன்றாண்டு காலம் அல்லது அதற்கு மேல் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த தொலைக்காட்சிப் பெட்டி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தாயகம் திரும்பும் 30 இலங்கை அகதிகள்!!

sl

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் 30 பேர் நாடு திரும்பவுள்ளனர்.

குறிதை்த அனைவரும் எதிர்வரும் 18ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த அமைச்சரின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளதாவது, இலங்கையிலிருந்து சென்று அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்களை படிப்படியாக மீண்டும் அழைத்து வரப்படுகின்றனர்.

அதன் பிரகாரம் மதுரையிலுள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 30பேர் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் தயாகம் திரும்பவுள்ளனர்.

இவர்களில் 13 ஆண்களும், 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறு நாடு திரும்பவுள்ள அகதிகள் திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் மீளவும் குடியேற்றப்படவுள்ளனர்.

அத்துடன், தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தேவையான இலவச விமான பயணச் சீட்டுகள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படவுள்ளது.

மேலும், அவர்களுக்கான ஆரம்பகட்ட வாழ்வாதார உதவிகளும் வழங்குவதற்கு அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலில் விழுந்து கதறினேன் : பிரித்தானியப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

abuse

பிரித்தானியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் 58 வயதுடைய பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் Workington நகரின் Cumbria என்ற இடத்தில் 58 வயதான பெண் ஒருவர் தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அவரை தொடர்பு கொண்ட 18 வயதேயான இளைஞன் ஒருவன் ஆள்நடமாட்டம் இல்லாத அந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு அவரை கீழே தள்ளி பாலியல் தாக்குதலை நடத்தியுள்ளான்.

அவர் ஒத்துழைக்க மறுக்கவே அவரது முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளான். ஒத்துழைக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.

முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் அவனிடம் அந்த பெண்மணி கதறியுள்ளார். இருப்பினும் அவன் அந்த பெண்ணை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளான்.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் அவனிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் அவன் அவரை விடவில்லை.

அந்த பெண் தனது முகத்தில் உள்ள ரத்தத்தை அவன் சட்டையில் துடைத்துள்ளார். இதுவே அவனை எளிதில் பிடிக்க எங்களுக்கு உதவியது என்று கூறியுள்ளார்.

பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அந்த இளைஞனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கு விருது!!

iswraya

முன்னாள் உலக அழகியும், பொலிவுட்டின் மிக பிரபலாமன நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டிற்கான பிரபலமான பெண்களுக்குக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

பொலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாபச்சனின் மருமகளும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அவுட்லுக் மேகசீன் நிறுவனம் பிரபல பெண்களுக்கான விருதை வழங்கியுள்ளது.

இது குறித்து ஐஸ்வர்யாராய் கூறியதாவது, அவுட்லுக் மேகசீன் 19 பிரபல பெண்கள் லிஸ்ட் வெளியிட்டதில் எனக்கு முதல் இடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு அவுட்லுக் மேகசீனுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், என்னுடைய மகள் ஆராதயா பச்சனைத்தான் நான் எனது வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஒரு வாரத்தில் முழுமையாக குணமடையக் கூடும் : அப்பலோ வட்டாரங்கள்!!

jeya

முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஒருவாரத்தில் முழுமையாக குணமடையக் கூடும் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார்.

நுரையீரலில் நீர் கோர்த்ததால் மூச்சு திணறல் இருந்தது. இதற்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என பலரும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவுக்கான சுவாச கோளாறு சிக்கல் சிகிச்சை பலனளித்து வருவதாக கூறப்படுகிறது.

நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் முதல்வரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. சர்க்கரை, இரத்த அழுத்தத்தின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து குழாய் மூலமே உணவு வழங்கப்படுகிறது.

தற்போதைய நிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்துக்குள் முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து விடுவார் என்கின்றன அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள்.

பாலியல் தொந்தரவு செய்த 70 வயது மாமனாரை கொலை செய்த மருமகள்!!

murder

கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் 50 வயதான மருமகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த 70 வயது மாமானாரை மருமகள் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன்பழகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). சில வருடங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து போனார்.

தனது மகன், மகளுடன் மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார் தமிழ்ச்செல்வி. கந்தசாமி கடந்த 30 ஆம் திகதி வீதியோரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது வீதி விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தது சேத்தியாதோப்பு பொலிஸ் . ஆனால் இது விபத்து அல்ல. இவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் முறைப்பாடு அளித்தனர்.

இதையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து கொலை கந்தசாமியை கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தமிழ்ச்செல்வியைப் பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், கந்தசாமி அவ்வப்போது மது அருந்தி வந்து தனக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30 ஆம் திகதி அவரின் தொந்தரவு அதிகரித்தது.

அப்போது வீட்டில் இருந்த கட்டையால் அடித்து விட்டேன். இதில் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன். அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்ந்து நள்ளிரவில் வீதியோரம் விபத்தில் அடிபட்டு இறந்தது போல உடலைப் போட்டோம்.

மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப்பாற்றிக கொள்ள எனக்கு வழி தெரியவில்லை. எனவேதான் கட்டையால் அடித்தேன். அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார் .

கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் 50 வயதான மருமகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த 70 வயது மாமானாரை மருமகள் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன்பழகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). சில வருடங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து போனார்.

தனது மகன், மகளுடன் மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார் தமிழ்ச்செல்வி. கந்தசாமி கடந்த 30 ஆம் திகதி வீதியோரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது வீதி விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தது சேத்தியாதோப்பு பொலிஸ் . ஆனால் இது விபத்து அல்ல. இவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் முறைப்பாடு அளித்தனர்.

இதையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து கொலை கந்தசாமியை கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தமிழ்ச்செல்வியைப் பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், கந்தசாமி அவ்வப்போது மது அருந்தி வந்து தனக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30 ஆம் திகதி அவரின் தொந்தரவு அதிகரித்தது.

அப்போது வீட்டில் இருந்த கட்டையால் அடித்து விட்டேன். இதில் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன். அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்ந்து நள்ளிரவில் வீதியோரம் விபத்தில் அடிபட்டு இறந்தது போல உடலைப் போட்டோம்.

மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப்பாற்றிக கொள்ள எனக்கு வழி தெரியவில்லை. எனவேதான் கட்டையால் அடித்தேன். அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார் .

400 வருடங்களின் பின்னர் ஏற்படவுள்ள பேரழிவு : இலங்கையை பாதிக்குமா?

dark-sky

சுமார் 400 வருடங்களில் ஏற்படாத அளவு பயங்கர பேரழிவு ஒன்று ஏற்பட வாய்புள்ளதாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுனாமி போன்றதொரு பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கனமழை, வெள்ளம் என்பன ஏற்படவுள்ளதாக ஆற்காட்டி பஞ்சாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வருட இறுதிக்குள் பல தடவைகள் சூறாவளியுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மழையை ஜலப்பிரலயம் என்று குறிப்பிடும் மேற்படி ஜோதிடர், சென்னை, நெல்லை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் கோயமுத்துார் போன்ற பகுதிகள் பலத்த பாதிப்பை எதிர்நோக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்மித்த கடற்கரைகளில் அலைகள் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் வழமைக்கு மாறாக பயங்கரமானதொரு நிலை காணப்படுவதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் தாழமுக்கம் மற்றும் புயல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால், அது இலங்கையையும் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் முன்கூட்டியே இவ்வாறான ஒரு அறிவுறுத்தலை விடுப்பதாக குறித்த தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்!!

untitled-1

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டி அதிமுக தொண்டர்கள் அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் புது கூரைப்பேட்டையைச் சேர்ந்த கணேசன் என்ற அதிமுக தொண்டர் முதல்வர் உடல் நலம் குறித்து தொடர்ந்து வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அவர் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி தீக்குளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் அருகிலுள்ள விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு : வில்லனான ஜடேஜா!!

penaly-5-runs

கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அரிய நிகழ்வாக நியூசிலாந்து அணி களமிறங்கும் போதே 5 ஓட்டங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 557 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி (211) இரட்டை சதமும், ரஹானே (188) அபார சதமும் எடுத்தனர்.

இந்திய அணி டிக்ளேர் செய்வதற்கு முன்னதாக இந்திய வீரர் ஜடேஜா, ஆடுகளத்தின் நடுவே ஓட்டங்கள் எடுக்க ஓடினார்.

இதைபார்த்த நடுவர் ஆடுகளத்தை சேதப்படுத்த கூடாது என்று அவரை எச்சரித்தார். ஆனால் இதை காதில் வாங்கிக் கொள்ளாத ஜடேஜா ஆடுகளத்தின் மத்தியில் மீண்டும் ஓடினார்.

இதனால் ஆடுகளத்தை சேதப்படுத்தியதாக நடுவர் நியூசிலாந்து அணிக்கு இலவசமாக 5 ஓட்டங்களை வழங்கினார். இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடும் போது இலவசமாக கிடைத்த 5 ஓட்டங்களுடன் தொடங்கியது.

2வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் பெற்றுள்ளது. குப்தில் (17), டாம் லாதம் (6) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவை கதி கலங்கவைத்த தென்னாபிரிக்க அணி!!

South Africa's bowler Tabraiz Shamsi (C) celebrates after taking a wicket during the fourth One Day International (ODI) between South Africa and Australia at the St. George's Park cricket stadium on October 9, 2016 in Port Elizabeth. / AFP / MICHAEL SHEEHAN (Photo credit should read MICHAEL SHEEHAN/AFP/Getty Images)

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் 3 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் 4வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அபாட் பந்துவீச்சில் திணறியது. இதனால் அந்த அணி 36.4 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ஓட்டங்களே பெற்றது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் (50), மாத்யூ வாடே (52) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் அபாட் 4 விக்கெட்டையும், ஷமிஸி 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா 35.3 ஓவரிலே இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணி சார்பில் டுபிளசி 69 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ள தென்னாபிரிக்க அணி இந்த வெற்றியின் மூலம் 4-0 என முன்னிலையில் உள்ளது.

இலங்கையில் சீனப் பெண்ணுக்கு எமனாக மாறிய செல்பி!!

selfi

காலி – அம்பலாங்கொட பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சீனப்பெண் (25) ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், புகையிரத மிதி பலகையில் நின்று கொண்டு செல்பி எடுத்த காரணத்தினாலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு குறித்த சீனப் பெண் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வேளையில், புகையிரதம் அம்பலாங்கொட மாதம்பை நிலையத்தை அடைந்ததை அடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.

ஓமனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை பெண்கள் நீரில் மூழ்கி பலி!

ஓமன்,மஸ்கட் Ain Garziz பகுதியில் மூழ்கி இரண்டு இலங்கை பெண்கள் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு பெண்களின் குடும்பத்தினரும் சுற்றுலா மேற்கொண்டிருந்த போது இரண்டு பெண்களும் செல்பி எடுக்க முயற்சித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் குறித்த பெண்கள் இருவரும்,செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வழுக்கி கீழே விழுந்துள்ளார்.குறித்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் மற்றைய பெண் ஈடுப்பட்டுள்ளார் இதன் பிறகு இருவரும் நீர் இருக்கும் ஆழமான இடத்தில் விழுந்து விட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு குறித்த பெண்கள் இருவரையும் வெளியே இழுத்து சுல்தான் கபூஸ் மருத்துவமனைக்கு அனுமதித்ததை அடுத்து அவர்கள் இறந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் சாலஹா இந்திய பாடசாலையில் கல்விப் பயிலும் Ruwane Delsara Herath Samaraweera என்றும்,மற்றைய பெண் சாலஹா உள்ளூர் தனியார் பாடசாலையில் கல்விப் பயிலும் Zainab என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் அறைக்குள் மருத்துவர் வேடத்தில் மர்ப நபர் : வைத்தியசாலையில் பரபரப்பு!!

appalo

பிரதமர் மோடி அவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் ஆழ்ந்த நட்பும், சகோதரன், சகோதரி என்கிற உறவும்,நல்ல புரிதலும் உண்டு. எந்த காலகட்டத்திலும் இருவரின் அன்புக்கும் பாசத்திற்கும் பிரிவு வந்ததே இல்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆயிரம் வேலைகளிலும் தனது சகோதரி ஜெயலலிதா மேல் தனி கவனம் வைத்திருப்பவர் மோடி. முதல்வரின் உடல்நிலை குறித்து சமூக விரோதிகள் தினம் தினம் வதந்திகளைப் பரப்பி வரும் வேலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர், ராகுல் காந்தி அப்போலோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் முதல்வரின் உடல் நலம் விசாரித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்வரின் நண்பர் மோடி வரவில்லை எனும் குற்றச்சாட்டை சில விஷமிகள் பரப்பினர்.

ஆனால் நேற்று வெளியான ஒரு புலனாய்வு வார இதழில் முதல்வரின் உடல்நிலை பற்றி அறிவதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்களுடன் பிரதமரின் உளவுப் பிரிவு அதிகாரியும் ஒருவராக வந்து முதல்வரைப் பார்த்துச்சென்றார் என்று எழுதப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வெடிப்பு சம்பவம் : RPG குண்டுகள் மீட்பு!!

 
வவுனியாவில் நேற்று இரவு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, அலகல்ல, அலுத்கம பிரதேசத்தின் காட்டுப் பகுதியிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று காலை அங்கு சென்ற பிரதேச மக்களுக்கு இரண்டு RPG குண்டுகளை காண முடிந்துள்ளன.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த இடத்திற்கு இரண்டைபெரியகுளம் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை வெடிகுண்டு அகற்றல் பிரிவினர் சென்றதோடு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு RPG குண்டுகள் கிடைத்த இடத்தில் தீப்பற்றி எரிந்துள்ளமை காணமுடிந்துள்ளது. மற்றொரு RPG குண்டு வெடித்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

1 2 3 4

திருகோணமலையில் 11 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 2 சிறுவர்கள் கைது!!

abused

திருகோணமலை ஜமாலியா பகுதியில் 11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான இரண்டு சிறுவர்களும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஜமாலியா கடற்கரையில் நின்று கொண்டிருந்த சிறுவனை குழுவாக சேர்ந்து சிலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.