திருகோணமலை ஜமாலியா பகுதியில் 11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களான இரண்டு சிறுவர்களும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
ஜமாலியா கடற்கரையில் நின்று கொண்டிருந்த சிறுவனை குழுவாக சேர்ந்து சிலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
திருகோணமலை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இளைஞர் ஒருவர் ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
மாத்தறை – காலிதாச பகுதியில் நேற்று காலை மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், தண்டவாளத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசியில் உரையாடியவாறு திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த இளைஞனி தற்கொலை தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
அதில், “எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது… எனது வாழ்க்கையின் இறுதி நாள் இன்றாகும்” என பேஸ்புகில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
மேலும், தனது நண்பனுக்கு ரயில் பாதையில் எடுத்த செல்பியை அனுப்பியுள்ளார். அதில் “நான் இறந்ததை அறிந்தவுடன் பேஸ்புகில் பதிவு ஒன்றை போடவும்” என குறிப்பிட்டுள்ளார்.
கேக் வாங்குவதற்காக மாத்தறை பகுதிக்கு வந்த குறித்த இளைஞன் காதலில் ஏற்பட்ட மனவிரக்தி காரணமாகவே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இளம் யுவதிகள் இருவர் ஓமான் நாட்டில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
தத்தமது குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டிருந்த இரண்டு இளம் யுவதிகளும், செல்பி எடுக்க முயற்சித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வழுக்கி கீழே விழுந்ததையடுத்து, குறித்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் மற்றைய பெண் ஈடுபட்டுள்ளார். இதன்போது அந்த யுவதியும் கீழே விழுத்துள்ளார்.
இருவரும் நீர் இருக்கும் ஆழமான இடத்தில் விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த யுவதிகள் இருவரையும் காப்பாற்றி சுல்தான் கபூஸ் மருத்துவமனையில் அனுமதித்த போதும், ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
அந்நாட்டிலுள்ள இந்திய பாடசாலையில் கல்விப் பயிலும் ஒரு யுவதியும், தனியார் பாடசாலையில் கல்விப் பயிலும் அவரின் நண்பியுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடு வெட்டப்படும் நிலையத்தில் இன்று(09.10.2016) காலை சட்டவிரோதமான முறையில் மாடுகள் வெட்டப்படுவதாக தெரிவித்து அவ்விடத்திற்கச் சென்ற சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.லவன் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மாடுகளை மீட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று காலை 6 மணிக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.லவன் வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடுகள் வெட்டப்படும் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
எனினும் அங்கு பொது சுகாதார பரிசோதகர் இன்றி மாடுகள் வெட்டப்படுவதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது. எனினும் பொது சகாதார பரிசோதகருக்கு அழைப்பை ஏற்படுத்தி சம்பவ இடத்திற்கு வருமாறு பணித்துள்ளார்.
காவல் கடமையில் இருந்துள்ள காவலாளியிடம் மாடுகள் வெட்டப்படுவதை நிறுத்தமாறு தெரிவித்துள்ளார். வைத்திய அதிகாரியின் கருத்தினை உதாசீனம் செய்துவிட்டு ஏழு மாட்டில் ஐந்து மாடுகள் வெட்டப்பட்டுள்ளது.
ஆவணங்கள் இன்றியும் வைத்திய பரிசோதகரின் அறிக்கைகள் இன்றியும் மாடு வெட்டப்படுவதை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிரீஸ் நாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் உட்பட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டனர். துருக்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயேஇவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
தமது பிரதான தீவான ஏயீஜீனில் உள்ளுர் மக்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்து கிரீஸ் நாட்டில் அடைக்கலம் பெற்றுள்ள அகதிகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் போதே அகதிகளாக ஏற்க முடியாத குறித்த 65 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த 22 ம் தேதி மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார்.
நுரையீரலில் நீர் கோர்த்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது என மருத்துவர்கள் முடிவு செய்து அதற்கேற்ப சிகிச்சை அளித்தனர்.
செயற்கை சுவாசம் – கடந்த செவ்வாய்கிழமை வரை காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வென்டிலேட்டர் பொருத்தினர்.
இதன்மூலம் நுரையீரலுக்கும் இருதயத்திற்கும் அதிக பளு கொடுக்காமல் இருக்க செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நுரையீரலும் இருதயமும் சிரமமின்றி செயல்பட்டன.
நுரையீரலில் ஏற்பட்ட தொற்றை குறைக்க முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல்வருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறு, நீரிழிவு நோய் இருந்ததால் அவருக்கு கவனமாக மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
லண்டன் டாக்டர் சிகிச்சை -இதற்காக, லண்டனிலிருந்து நுரையீரல் நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் பில்லே வந்திருந்தார். அவருடைய ஆலோசனையின்படி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வருக்கு அப்பல்லோவில் கொடுக்கப்படும் சிகிச்சைகளை ஏற்றுக்கொண்ட லண்டன் டாக்டர் அதில் சில மாற்றங்கள் மட்டும் செய்துள்ளார். நேற்று மாலை கூட ரிச்சர்ட் முதல்வரை பரிசோதனை செய்துள்ளார்.
கண் திறந்து பார்த்தார் -வென்டிலேட்டரில் இருந்த நேரத்தில் தொற்று ஏற்படலாம் என்று கருதி முதல்வரை பார்க்க எவரையும் அனுமதிக்கவில்லை.
வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டிருப்பதால் இயற்கை முறையில் உணவு எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும், அவரால் பேசவும் முடியாமல் இருந்தது. ஆனால், முதல்வர் சுயநினைவுடன் தான் இருக்கிறார். கண் திறந்து பார்த்தார்.
குழாய் மூலம் உணவு – வென்டிலேட்டரில் தொடர்ந்து இருந்தாலும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ‛டிரக்யா டோமி’ (Trechya Tomi) முறையில் குழாய் மூலம் இன்று (அக்., 8) வரை செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் அவருக்கு குழாய் மூலமே உணவு வழங்கப் படுகிறது.
மருத்துவர்கள் நம்பிக்கை – இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதேநிலை, நீடித்தால் இன்னும் ஒரு வாரத்திற்குள் முதல்வர் குணமடைந்து விடுவார் என நம்புகிறார்கள்.
முதல்வருக்கு சிகிச்சை அளிக்க வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (அக்.,7) திரும்பி சென்றனர். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் உடன் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார்.
இவ்வாறு அப்பல்லோ மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
நடப்பாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியினை ஒப்பிடும் போது, இந்த வருடத்தின் அந்த காலப்பகுதியில் பிரதான குற்றங்களில் அதிகமாக பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
தினமும் பதிவாகும் “டி” பிரிவு குற்றங்களாக கருதப்படும் மனித கொலை, பாலியல் குற்றங்கள், வீடுகளை உடைத்தல், கொள்ளை மற்றும் திருட்டு ஆகிய ஐந்தும் இந்த பிரதான குற்றமாக கருத்திற்கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியினுள் 6126 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எப்படியிருப்பினும் 2015ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியினுள் இந்த எண்ணிக்கை 5978ஆக காணப்பட்டுள்ளதென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 631 பிரதான குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில் 2015ஆம் ஆண்டில் குறித்த பிரதான குற்றச்சாட்டு 747ஆக காணப்பட்டுள்ளன.
செப்டெம்பர் மாதத்தினுள் 45 மனித கொலைகள் பதிவாகியுள்ள நிலையில் 22 பொலிஸ் பிரிவுகள் குறித்த கொலைகள் பதிவாகியுள்ளதாக குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகமான மனித கொலைகள் கம்பஹா பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ள நிலையில் அதன் எண்ணிக்கை 7ஆகும்.
பலவகையான சமூக வலைதளங்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் மிக அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமாக பேஸ்புக் விளங்குகிறது.
நம் பேஸ்புக் கணக்கு சில சமயம் ஹேக் (Hack) செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி நடந்தால் எப்படி நம் கணக்கை மீட்பது என்று சில எளிய வழிகளை பார்ப்போம்
நம் கணக்கை மீட்க முதல் விடயமாக கடவுச்சொல்லை (Password) மாற்ற வேண்டும். Home -) Account Settings -) General -) Password ஒப்ஷனை கிளிக் செய்து பழைய கடவுச்சொல்லை உறுதி செய்து பின்னர் புதிய கடவுச்சொல்லை சமர்ப்பிக்கவும்.
கடவுச்சொல்லை (Password) மாற்றி பின்பும் பேஸ்புக் கணக்கில் நுழைய முடியவில்லை என்றால் ,கடவுச்சொல்லின் ஹோம் பக்கத்துக்கு சென்று அதை ரீ-செட் செய்யவும். ரீசெட் செய்தால் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்ல் முகவரிக்கு ஒரு இணைப்பு வரும். அதை கிளிக் செய்து புதிய கடவுச்சொல்லை பதிவு செய்வதுடன் நம் கணக்கையும் மீட்கலாம்.
Home -> Account Settings -> Apps க்குள் சென்று சந்தேகத்துக்குரிய சில அப் பயன்பாடுகளை நீக்கி விடலாம்.
ஹேக் தாக்குதலில் இருந்து காப்பாற்றி கொள்ள எப்போதும் இறுக்கமான பிரைவஸி செட்டிங்ஸ் மற்றும் வழக்கமான அடிப்படையில் கடவுச்சொல்லை (Password) புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
அனுமதிசீட்டு இன்றி ரயில்வே நிலையத்துக்குள் தம்மை அனுமதிக்காவிட்டால், ரயில் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்த இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியாவில் 10 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
44 வயதான சுரேஸ்குமார் துரைராஜா என்ற இலங்கையர் ஒருவரே இந்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதியன்று லிவர்பூல் நிலத்தடி ரயில் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து தொடர்ந்து நடாத்தப்பட்டு வந்த வழக்கின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சுரேஸ்குமார் என்பவர் தமக்கு அகதி அந்தஸ்து கிடைக்காத காரணத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று விடயம் வெளியானது.
எனினும் குண்டுதாக்குதல் என்ற சொல்லை பொறுத்தவரை அது தற்போதைய சூழ்நிலையில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும். எனவே குற்றம் சுமத்தப்பட்டவருக்கு 10 மாத சிறைத்தண்டனையை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியிலில் இந்தியாவிடமிருந்து நம்பர் 1 இடத்தை விரைவில் பாகிஸ்தான் பறிக்கும் என அந்த அணியின் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் அணித்தலைவருமான இன்ஜமம் அல் ஹக் தெரிவித்துள்ளார்.
இன்ஜமம் அல் ஹக் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுடன் கடந்த 2007ம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டி தொடர்களில் பங்கேற்பதை இந்தியா தவிர்த்து வருகின்றது. இதுமிகவும் வருத்தமான விஷயம்.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடாமலேயே டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தை பிடித்தது.
ஆனால் இந்திய அணியோ வெளிநாடுகளில் பங்கேற்ற போட்டிகளில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியை விட குறைவான வெற்றியையே பெற்றது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 13 டெஸ்ட் போட்டி இந்திய அணி அதன் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அணியோ கடந்த 2009ம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் போட்டிகளில் விளையாடியது இல்லை. இருப்பினும் நாங்கள் முதலிடத்தை பிடித்தோம், ஆனால் அதை இந்தியா பறித்து விட்டது.
எங்கள் அணியில் மிகத் திறமையான வீரர்கள் உள்ளனர். எங்களுக்கு ஒரு நாள் தொடர், டி20 தொடர்களில் விளையாடும் அளவிற்கான திறமையான இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர்.
விரைவில் இந்தியாவிடம் உள்ள நம்பர் 1 இடத்தை நாங்கள் தட்டி பறிப்போம் என இன்ஜமம் அல் ஹக் தெரிவித்துள்ளார்.
துருக்கி மக்களின் அன்பை வென்ற “டொம்பிலீ“ என்ற பூனையை நினைவுகூரும் வகையில், அந்நாட்டின் இஸ்தம்புல் நகரில் பூனைக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
டொம்பிலீ துருக்கி மக்கள் மத்தியில் மாத்திரமல்ல உலக மக்களின் கவனத்தை பெற்றிருந்தது. இந்த பூனையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தமை இதற்கு காரணம்
டொம்பிலீ ஒரு கனவானை போல் ஒரு பக்கமாக சாய்ந்து அமர்ந்திருக்கும். பூனை இருந்த இடத்தில் அது அமர்ந்திருந்ததை போலவே சிலையும் வடிக்கப்பட்டுள்ளது.
டொம்பிலீ கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்து போனது. அது இறந்த செய்தியை அறிந்த இணையத்தளங்களை பார்வையிடும் நபர்கள் அதற்கு சிலையை வைக்குமாறு துருக்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
17 ஆயிரம் துருக்கி மக்களின் கையெழுத்துடன் கிடைத்த கடிதம் ஒன்றை அடுத்து துருக்கி அரசாங்கம் இந்த பிரபல பூனைக்கு சிலையை அமைத்தது.