சிறுவர்களிடையே இணையதள மோகத்தைக் குறைக்கும் நோக்கில் நடுநிசிக்குப் பிறகு இணையதள விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க சீன அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
சீனாவில் சுமார் 75 கோடி பேர் இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இணையதளத்தை பொழுதுபோக்கு சேவைகளுக்கும், ஆன்லைன் விளையாட்டுகளுக்குமே பயன்படுத்துவதாக ஆய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றது.
இவர்களில் 23 சதவீதம் பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் சீன இணையதள பயன்பாடு குறித்த அரசின் தகவலறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தால், 18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை இணையதள விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்கள் தடை செய்ய வேண்டி வரும்.
இந்த சட்ட நடைமுறை குறித்து இம்மாத இறுதிவரை மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. அதன்பின்னர், இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன அரசின் இந்த முடிவிற்கு இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அரசியல் வரலாற்றில் தற்போது காணப்படும் மிகப்பெரியபுள்ளி ஜெயலலிதா இவர் கடந்த சில வாரங்களாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்த நேரத்தில் இவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. அதே போல் அவர் நிகழ்த்திய நிறைய சாதனைகளும் இந்த நேரத்தில் தான் வெளிவருகின்றது.
1995 செப்டம்பர் மாதம் 7ம் திகதி தான் அவ்வாறான ஓர்நிகழ்வும் இடம்பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக தனது வளர்ப்புமகன் சுதாகரனுக்கு திருமணத்தை நிகழ்த்திவைத்தார்.
50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் “போயஸ்” இல்லத்தில் இருந்து, திருமணம் நடந்த மைதானம் வரையிலான பாதையில் சீரியல் செட் அலங்காரங்கள், கட் – அவுட்கள், சாலை நெடுக அலங்கார வரவேற்பு மேடைகள் என திருமண விழா கலைகட்டியது.
இந்த நிகழ்வு ஜெயலலிதாவின் பெயரை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறச்செய்ததாம்.
வியட்நாமை சேர்ந்த 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது கணவரை சீனாவில் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவில் வைத்தியசாலை ஒன்றுக்கு 40 வயது மதிக்கத்தக்க நபரொருவருடன் வந்த 12 வயது சிறுமியின் வயிறு பெரியதாக இருந்துள்ளதுடன், மேலும் அவரது வயிற்றில் சில காயங்களும் இருந்துள்ளது.
அச்சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள்,குறித்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதோடு அச்சிறுமியின் கரு ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஆனால் குழந்தையாகிய இவள் கருவுற்றிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என கருதி வைத்தியசாலைக்கு பொலிஸாரை வரவழைத்துள்ளனர்.
இதையறிந்த அச்சிறுமியின் கணவரான 40 வயது மதிக்கத்தக்க நபர், நீங்கள் தேவை இல்லாத கேள்விகளை எழுப்புகிறீர்கள், அவளை சோதனை மட்டும் செய்தால் போதும், எனது தனிப்பட்ட விடயத்தில் தலையிட தேவையில்லை என வைத்திய ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்நபரிடம் விசாரணை நடத்தியதில், அச்சிறுமி சீன நாட்டை சேர்ந்தவர் கிடையாது என்றும் வியட்நாமிலிருந்து விலைக்கு வாங்கி குறித்த நபர் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அந்நபரை கைது செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியக் கடற்கரையொன்றில் அழுகிய நிலையில் கரையொதுங்கிய உடலொன்று, கடற்கன்னியின் உடல் என சிலர் கூறுகின்றனர்.
இடுப்புக்கு மேல் மனித உடலையும் இடுப்புக்கு கீழ் மீன் போன்ற தோற்றத்தையும் கொண்ட ‘கடற்கன்னிகள்’ குறித்து புராதன கதைகள் பல நாடுகளின் இலக்கியங்களில் உள்ளன.
பல திரைப்படங்களிலும் கடற்கன்னிப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், உண்மையில் கடற்கன்னி என்பது ஒரு கற்பனை உயிரினமே எனக் கருதப்படுகிறது. இதுவரை கடற்கன்னி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால், இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியிலுள்ள நோர்போல்க் கவுன்ரியின் கிரேட் யார்மௌத் கடற்கரையில் அண்மையில் ஒரு விசித்திர உயிரின எச்சம் கரையொதுங்கியுள்ளது.
சேதமடைந்த மனித தலை போன்ற தோற்றத்தையும் மீனின் வால் போன்ற அமைப்பையும் இது கொண்டுள்ளது.
இது கடற்கன்னியின் உடல்தான் என சிலர் கூறுகின்றனர். ஆனால், இது இறந்த ‘சீல்’ (கடல் நாய்) விலங்கொன்றின் உடல் என வேறு சிலர் கூறுகின்றனர்.
ஏமன் நாட்டில் முன்னணி போராளியின் உறவினரின் இறப்பை தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டவர்கள் மீது, அந்நாட்டின் விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் 500 பேர் படுகாயமடைந்தனர்.
ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகள் குழுவை சேர்ந்தவரின் இறுதி அடக்கத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது, சவுதி தலைமையிலான கூட்டுப்படை விமான தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த மனிதநேயமற்ற தாக்குதல்மீது உரிய விசாரணை நடத்தவும், இனியும் இதுபோன்ற தாக்குதல் தொடராதிருக்க சர்வதேச சமுதாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த கண்காணிப்பகம் வலியுறுத்தி உள்ளது.
ஏமன் தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ஏமன் அரசாங்கம் சண்டையிட்டு வருகிறது.
ஏமன் அரசிற்கு சவூதி தலைமையிலான கூட்டணி படையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (06.010) வியாழக்கிழமை 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது .
மேற்படி ஆலய பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று காய்கறி,மற்றும் பழங்களை கொண்டு சாத்துபடி செய்து ஸ்ரீ தேவி பூதேவி சமேத மகா விஷ்ணுக்கு விசேட அபிசேகம் ஆராதனைகள் இடம்பெற்று இரவு மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து யானை வாகனத்தில் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
மாதகலை பிறப்பிடமாகவும் வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பொன்னம்பலம் சரவணமுத்து அவர்கள் 07.10.16 அன்று காலமானார்.
அன்னார் காலம்சென்ற புஸ்பவதியின் அன்புக் கணவரும் சரோஜினிதேவி, கலாவதி ஆகியோரின் அன்பு தந்தையும்
இராகவதாசன், நிகோலஸ் ஆகியோரின் மாமனாரும்
றகீதன், நிக்ஸன், சாருகேசன், நோயலா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.10.16 (ஞாயிற்றுக்கிழமை) தட்சனாங்குளம் இந்துமைதானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பேரப்பிள்ளைகள்
வீட்டு முகவரி
இராசதுரை வீதி,
வைரவபுளியன்குளம்,
வவுனியா.
சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால்,
கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் நேருக்கு நேராகநின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
ஜெ.மயூரசர்மா
கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேராக நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இருபக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேராக அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரகத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேராநின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால், நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்), மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது.
இதை கவனித்த நாரதர், இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, இராவணன் நவக்கிரஹங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது இராவணனிடம் நாரதர், இராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, இராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.
தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் இராவணன் பிடிவாதமாக இருக்கனே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. இராவணன் தனது காலால் சனியை மார்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது. அது முதல் இராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுனூடாக பயணித்த மோட்டார் சைக்கிளுடன் குருமன்காட்டு சந்திக்கு அருகாமை அண்மிக்கும்போது வவுனியா மன்னார் பிரதான வீதிக்கு குருக்கு வீதியொன்றிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட வேளை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளிலும் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு கால் முறிந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் துரித விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இன்று காலை கொழும்பை வந்தடைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிக்கொப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.
இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர்.
இதனையடுத்து இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.நடராஜன் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோரை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (06.010) வியாழக்கிழமை 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது .
மேற்படி ஆலய பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று ஸ்ரீ தேவி பூதேவி சமேத மகா விஷ்ணுக்கு விசேட அபிசேகம் ஆராதனைகள் இடம்பெற்று இரவு மணியளவில் வசந்தமண்டப பூஜையின் பின் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
அனுராதபுர மாவட்டம் கெக்கிராவை பகுதியில் விசித்திரமான கோழி ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு கோழி இரண்டு கால்களுடன் உள்ளமை வழமை. எனினும் கெக்கிராவையில் நான்கு கால்களுடன் கோழி ஒன்று காணப்பட்டுள்ளது.
கெக்கிராவை கனேவல்பொல, முஸ்லிம் கிராமம் ஒன்றில் நான்கு கால்களை கொண்ட கோழி ஒன்றின் புகைப்படங்களில் இணையத்தளங்களில் சேர்க்கப்பட்ட பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த கோழிக்கு பிறப்பு முதலே நான்கு கால்கள் உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பிரொய்லர் வகையிலான இந்த கோழி அந்த பிரதேசத்தை சேர்ந்த நசீரா என்பவரின் வீட்டில் வளர்ந்து வருகின்றது.
இந்தியாவில் மத சம்பிரதாயத்தின் வழக்கப்படி தொடர்ந்து 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜைன மத வழக்கப்படி, இவ்வுலகில் வாழ விரும்பாத முதியோர்கள் அன்னம், தண்ணீர் அருந்தாமல் உண்ணாநிலையை கடைபிடித்தும், தவக்கோலம் பூண்டும் ’சவ்மாஸா’ அல்லது ‘சந்த்தாரா’ எனப்படும் ஜீவசமாதி நிலையை அடைவதுண்டு.
இதற்கு சட்டம் அனுமதி அளிக்காத நிலையில், இதன்படி உலக வாழ்வை துறக்க 13 வயது சிறுமி முடிவு செய்தார்.
அதன்படி, திருமண பெண் போல அலங்காரம் செய்து கொண்டு தங்கமுலாம் பூசப்பட்ட ரதத்தில் அமர்ந்து ஊர்வலமாக வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
68 நாள் உண்ணாவிரதத்தை தெலுங்கானா அமைச்சர் பத்மா ராப் கவுட் முன்னிலையில் முடித்துக் கொண்டார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
’பால தபஸ்வி’ (குழந்தை தவயோகி) என்ற பட்டத்துடன் மரணம் அடைந்த ஆராதனாவின் இறுதி ஊர்வலத்தில் 500-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், தந்தையின் நகைக்கடையை பிரபலப்படுத்தவே ஆராதனா இந்த விஷப்பரீட்சையீல் ஈடுபட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகிவரும் நிலையில், சிறுமியின் மரணம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
சென்னையில் பள்ளிச்சிறுமி ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளங்கோ- சிலம்பரசி தம்பதியின் 9 வயது மகள் லோகமித்ரா. இவர் சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் செயல்பட்டு வரும் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று பிற்பகலில் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவருக்கு வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிகிச்சை பலனில்லாமல் சிறுமி மரணமடைந்துள்ளார்.
ஆனால் சிறுமி லோகமித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், பெற்றோர்களிடம் கூட தெரிவிக்காமல் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் பள்ளி முதல்வர் அமல்ராஜ், பள்ளி மேலாளர் பார்த்திபன், கண்காணிப்பாளர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லா மருத்துமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
சுவாச சிகிச்சையை மருத்துவர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர். நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊட்டச்சத்தும், பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.