யாழில் கைதி சித்திரவதை செய்து கொலை : நான்கு பொலிஸாருக்கு பிடியாணை!!

murder

யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன் ஒருவரைக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்த போதே ஏனைய சந்தேக நபர்களான முன்னாள் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார உள்ளிட்டோரைக் கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ. ஆனத்தராஜ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த படுகொலை விவகாரம் தொடர்பில் ஏற்கனவே பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன் தர அதிகாரியான டப்ளியூ.டி. சோமதாஸ வீரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டார். இதன் போதே அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தர்விட்ட நீதிவான் ஏனைய சந்தேக நபர்களான சுன்னாகம் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார, ஆர்.எம்.ராஜபக்ஷ, ஜயந்த மற்றும் மயூரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்களை உடன் கைது செய்து மன்றில் ஆஜர் செய்த நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவன் தெற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராசா சுமன் என்ற நபர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார்.

களவு தொடர்பான வழக்கொன்றில் கைதுசெய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோதே இவர் உயிரிழந்தார்.இந்த நிலையில் சுமன் எனப்படும் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தில் வீழ்ந்து உயிரிழந்ததாக அப்போது பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது குறித்த நபர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதுடன் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டார் என்று அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சடலத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டமை பிரேத பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றத்தால் குற்றப் புலனயவுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இரகசிய பொலிஸ்துறையினரால் நடாத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இதுவொரு கொலை என நம்பக்கூடியவாறான சாட்சியங்கள் உள்ளதென குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சட்டமா அதிபர் திணைக்கத்திற்கு அறிவித்திருந்தனர். அவரின் ஆலோசனைக்கு அமைவாகவே சுன்னாகம் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அறுவர் மீது கொலை குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

23 ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிரபல நடிகை!!

act

மலையாள திரையுலகில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீலதாமேனன்.‘மிஸ் திருவனந்தபுரம்‘ பட்டமும் பெற்றிருந்த இவர், 200-க்கும் மேற்பட்ட டெலிவி‌ஷன் தொடர்களில் நடித்தார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உச்சத்தில் இருந்தபோது திடீரென உடல்நலம் பாதிக்கப் பட்டு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

ஸ்ரீலதாமேனனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அரிய வகை எலும்பு நோய் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.நோய் பாதிப்பு ஏற்பட்டதால் திரையுலகில் இருந்து விலகிய ஸ்ரீலதாமேனன் ஆஸ்பத்திரியில் தங்கி தொடர் சிகிச்சை பெற்றுக் கொண்டார். ஆண்டுகள் பல கழிந்த பின்பும் இவருக்கு நோய் குணமாகவில்லை. ஏராளமான பணம் செலவு செய்ததால் நெருக்கடிக்கு ஆளானார்.

இந்த தகவல் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு தெரிய வந்தது. அவர், ஸ்ரீலதாமேனன் மருத்துவச் செலவுக்கு உதவிசெய்தார். இதுபோல மலையாள நடிகர் சங்கமான அம்மாவும், ஸ்ரீலதா மருத்துவத்துக்கு பண உதவி செய்தது.

பலரது உதவியில் நடிகை ஸ்ரீலதாமேனன் 23 ஆண்டுகள் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அவருக்கு பூரண சுகம் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இவரது உயிர் பிரிந்தது. இறந்து போன ஸ்ரீலதா மேனனுக்கு 47 வயது ஆகிறது. இவரது கணவர் மது ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

வவுனியாவில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி!!

 
வவுனியா தோணிக்கல் லக்கபான வீதியில் நேற்று (09.10.2016) அதிகாலை முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா தோணிக்கல் லக்சபான வீதியில் நேற்று (09.10.2016) இரவு 9 மணிக்கும் இன்று (10.10.2016)அதிகாலை 3 மணிக்குமிடையில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா தோணிக்கள் ஶ்ரீ லக்ஷ்மி வீதியை சேர்ந்த தம்பிமுத்து குணசேகரம் (46) என்பவருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியே தீப்பிடிப்புக்கு உள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டி உரிமையாளரால், முச்சக்கரவண்டி விஷமிகளால் திட்டமிட்டு தீக்கிரையாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸார் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதா அல்லது முச்சக்கர வண்டியின் மின்னொழுக்கினால் தீப்பிடித்ததா என்று இரசாயண பகுப்பாய்வு அறிக்கையின் பின்பே தெரிவிக்கமுடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் விபத்துத் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் செனரத் தலைமையிலான குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

1 image-0-02-06-3dcc714043d6e25980b13beac29ddd32fd86dce998620614bfe02cb6cd3a3d78-v image-0-02-06-5c309a459f64c546dcdbbd01275ca3ae9cf804ccd64e1132ee6f20518922273c-v image-0-02-06-352d27cd702e501cee52820eb15419a59df00b6b348ab4c2069eebf079ac8891-v image-0-02-06-470a926f5c78677b9600d55751a1c95757b29658717b7c676ae12ee75aed2a1b-v image-0-02-06-19183960dfd1acff4e1612d3a555d24cffaec7dcc2d088b728327591c8c5219e-v

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சசிகலாவை துரத்த வேண்டும், புஷ்பா அழைப்பு!!

jeya

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சசிகலா மற்றும் உறவினர்களை துரத்த அதிமுகவினர் முன்வர வேண்டும் என்று ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து யாருக்குமே தெரியவில்லை.

ராகுல் காந்தி, ஸ்டாலின் போன்றவர்களுக்கும் கூட தெரிவிக்கப்படவில்லை. அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து போயுள்ளனர். அதிமுக தொண்டர்கள் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனைக்குள் நுழைந்து சசிகலாவையும் அவரது உறவினர்களையும் வெளியேற்றத்தான் போகின்றனர்.

இவர்கள் யார் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை மறைப்பதற்கு? நிச்சயம் அவர்களை அதிமுக தொண்டர்கள் துரத்தத்தான் போகின்றனர். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.

ஐந்து மாதமாக சடலத்துடன் வசித்து வந்த நபர் : காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்!!

body

அமெரிக்காவில் ஐந்து மாதத்துக்கு முன்னர் இறந்து போன தனது பாட்டியுடன் அவரது பேரன் வசித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிரிஸ்டோபர் (30) என்பவர் தனது பாட்டியான Erika Kraus-Breslin (85) உடன் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கிரிஸ்டோபரின் தாய் வேறு ஒரு ஊரில் வசித்து வந்துள்ளார், அடிக்கடி வீட்டு தெருவில் நடமாடும் முதிய பெண்மணி Erika பல மாதங்களாக வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார்.

இது அவரது வீட்டின் அருகே இருப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் அதிகம் அடிக்கவே அருகில் இருந்தவர்கள் இது பற்றி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே அந்த முதிய பெண்மணி Erika சடலமாக சாக்கு பையில் இருந்துள்ளார். சடலத்தை மீட்ட பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கிரிஸ்டோபரை கைது செய்தனர்.

விசாரணையில் கிரிஸ்டோபர், என் பாட்டி கடந்த மே மாதம் இறந்து விட்டார். எங்கே இதை வெளியில் சொன்னால் என்னை இந்த வீட்டை விட்டு காலி செய்ய சொல்லி விடுவார்களோ என அஞ்சி தான் அதை வெளியில் சொல்லவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையில், அந்த முதிய பெண்மணி Erika இயற்கையாக இறந்தாரா அல்லது வேறு காரணமா என அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் காண்போரை முகம் சுழிக்க வைத்த காதல் ஜோடி!!

lovers

தமிழகத்தின் கோவை ரயில் நிலையம் அருகே நேற்றிரவு இளம் காதல் ஜோடி, மது போதையால் நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றுள்ளனர்.

ஆண், பெண் பேதமின்றி இருவரும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.

கோவை ரயில் நிலையித்தில் காதல் ஜோடிகள் மதுமயக்கத்தில் தள்ளாடியது காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

அப்போது, அந்த இளம்பெண் சுவற்றில் மோதி கீழே விழந்துள்ளார், இதனால் அப்பெண்ணை வாகன ஓட்டுநர்கள் தூக்க முயற்சிக்கையில், காதலன் அவர்களோடு சண்டையிட்டுள்ளான்,

அதன்பிறகு அந்த ஜோடிகள் தள்ளாடியபடி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

நடிகர் சாந்தனுவிடம் பொலிஸ் அடாவடி!!

santhanu

நடிகர் சாந்தனு பொலிஸ் அதிகாரி ஒருவர், அடாவடியில் ஈடுபட்டதால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் எனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த பொழுது எங்கள் காரை பொலிசார் ஒருவர் நடுரோட்டில் மடக்கி ரகளையில் ஈடுபட்டார்.

மேலும், தரக்குறைவாக பேச ஆரம்பிக்கவே நான் அங்கிருந்து காரை எடுத்து வந்துவிட்டேன்.

அந்த பொலிசார் பெயர் தெரியவில்லை, ஆனால் அவர் மது அருந்தியிருந்தது போல இருந்தது என தெரிவித்துள்ளார்.

தேனிலவை பாழாக்கினால் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறலாம்!!

first

திருமணமான எந்தவொரு தம்பதியருக்கும் தேனிலவு என்பது வாழ்வில் என்றைக்கும் நினைத்து நினைத்து, மனதில் இன்பம் அடைகிற சுகமான அனுபவமாக அமையும்.

ஆனால் அதுவே கசப்பான அனுபவமாக அமைந்தால்? அப்படித்தான் டெல்லியை சேர்ந்த அனுப் சர்மாவுக்கு (தம்பதியர் பெயர் மாற்றி தரப்பட்டுள்ளது.) மனைவி தீப்தியுடனான அனுபவம் அமைந்து விட்டது.

இந்த தம்பதியருக்கு 2004ம் ஆண்டு, ஜனவரி மாதம் திருமணமானது. திருமணமான மறுநாளே சிம்லாவுக்கு தேனிலவு சென்றார்கள். ஆனால் அந்த தேனிலவு அனுப் சர்மாவுக்கு இனிக்கவில்லை. காரணம், மனைவி அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவரை அவமதிக்கிற வகையில் மனைவி குற்றம் சாட்டி இருக்கிறார்.

தொடர்ந்து 3 மாத காலம் அவர்கள் இணைந்து வாழ்ந்தாலும்கூட, அது பிரச்சினைகளுடன்தான் நகர்ந்திருக்கிறது. 3 மாதங்கள் கழிந்த நிலையில், அந்த பெண், தனது கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து கணவர் மீதும், கணவர் குடும்பத்தினர் மீதும் போலீசில் புகார் செய்தார். ஆனால் கணவர், நல்லிணக்கம் ஏற்படுத்தி, மீண்டும் அவருடன் இணைந்து வாழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இப்படிப்பட்ட மனைவியோடு இனி வாழ்ந்து பயன் இல்லை என அவர் முடிவு செய்து, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் அந்த பெண் அதை எதிர்த்தார்.

இறுதியில், அந்த பெண்ணிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதை எதிர்த்து அந்த பெண், டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பிரதீப் நந்திரஜாக், பிரதீபா ராணி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து, பாழான தேனிலவும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி மனதளவில் கொடுமை செய்துள்ளதும் அந்த பெண்ணிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் என்பதற்கு உகந்த காரணங்கள் ஆகி உள்ளன என தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பின் சாராம்சம் வருமாறு:-

இந்த வழக்கு ஒரு விதிவிலக்கான வழக்கு. 30 வயது கடந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியரின் திருமண வாழ்க்கை, தொடங்கியதில் இருந்தே சரியாக அமையவில்லை. தேனிலவின்போது கணவர், திருமண வாழ்வின் பந்தத்தை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருந்தார். ஆனால் மனைவி எதிர்த்து நின்றிருக்கிறார். அதன்பின்னும் கணவருக்கு மனைவி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் மீதும், அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினர் மீதும் அவமதிப்பு ஏற்படுத்தத்தக்க குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

ஒரு பெண்ணின் அத்தகைய நடத்தை, சித்ரவதைதான். அதையெல்லாம் ஒரு மனிதர் தாங்கிக்கொள்வது சாத்தியம் இல்லை.

திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதற்காக விவாகரத்துக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, எத்தனையோ அவமதிப்புகளை தாங்கிக்கொண்டு கணவர், மிகவும் பொறுமை காட்டி உள்ளார்.

கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் அந்த பெண் சுமத்தியுள்ள வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இல்லை.

பெற்றோரால் நிச்சயித்து நடக்கிற திருமணங்களில், அதுவும் திருமணங்களில் இணைகிற மணமக்களின் வயது 30-ஐ கடந்து விடுகிறபோது, கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள, புரிந்து கொள்ள ஏற்ற காலம், தேனிலவு காலம்தான். ஆனால் இந்த வழக்கு அதில் விதிவிலக்காக அமைந்துள்ளது. சிம்லாவுக்கு தேனிலவுக்கு சென்றவர்கள் கசப்பான நினைவுகளுடனும், பாழான தேனிலவு அனுபவங்களுடனும் திரும்பி உள்ளனர்.

எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கணவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

19 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஓரிரு வார்த்தைகள் பேசிய ஜெயலலிதா!!

jeyalalithaa

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் விரைவாக குணமடைந்து வருவதாகவும், இன்று அவர் ஒருசில வார்த்தை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ம் திகதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வைத்தியர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு இடையே, கடந்த மாதம் 30–ம் திகதி லண்டன் வைத்தியர் ரிச்சர்டு ஜான் பீலேவும் சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். தொடர்ந்து, டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வைத்தியர்கள் குழுவும் அவருடன் வந்து இணைந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது.

வைத்தியர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்கவும், சீரான சுவாசம் மேற்கொள்ளவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று அப்பல்லோ வைத்தியசாலை வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், நேற்று 18–வது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்ந்து வைத்தியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வைத்தியர்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். அவரை தொடர்ந்து, லண்டன் வைத்தியர் ரிச்சர்டு ஜான் பீலேவும் நேற்று காலை புறப்பட்டு சென்றார். அவர் இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சையை தொடருவார் என தெரிகிறது.

அதே நேரத்தில், டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வைத்தியர்களில் ஒருவரான கில்நானி நேற்று இரவு 09.00 மணிக்கு சென்னை வந்தார். அவர் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்.

இவ்வாறு சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் அரசியல் கட்சி தலைவர்களும், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தெரிந்துகொள்வதற்காக தினமும் அப்பல்லோ வைத்தியசாலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்றும் பல அரசியல் தலைவர்கள் அங்கு சென்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும். அவர் ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

திருமணமான நாளே மனைவியின் தோளில் உயிர் விட்ட கணவரின் சோகக் கதை!!

11

குருநாகல் – இப்பகமுவ பகுதியில் திருமணமாகிய அடுத்த நாளே மணமகள் தோளில் விழுந்து மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வருடமாக காதலித்த தன் மனைவியை கரம் பிடித்த அந்த மணமகன் இசுறு சம்பத்(25) தான் சோர்வாக இருப்பதாக உணர்ந்துள்ளார்.

பின்னர் குறித்த மணமகன் இறுதியாக தனது மனையிவியின் தோள் மீது சாய்ந்து மயக்கமுற்றவர் போல் இருந்துள்ளார்.

ஏதோ நடக்கின்றது என உணர்ந்து கொண்ட மனைவி, திடீரென கூச்சலிட்டு அனைவரையும் அழைத்து மணமகனை அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சோர்வு, தூக்கமின்மை, பசி காரணமாக மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனின் இந்த மரணம் மணமகள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் வெட்டி கொலை!!

1

ஹம்பாந்தோட்டை மாவட்டம் அங்குனுகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், இதில் தந்தையும் மகனுமே உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள் தனியாக வீட்டில் இருந்த போது இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு தனிப்பட்ட தகராறே காரணம் எனவும் அறியமுடிகின்றது.

மேலும் குறித்த சம்பவத்தின் போது தாயும் மற்றுமொரு மகனும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இனங்கண்டு கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 3

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிகழ்வுகளை நடத்த தயார் : SP பாலசுப்ரமணியம்!!

 
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நிகழ்களை நடாத்துவதற்கு தயாராக உள்ளதாக தென்னிந்திய பிண்ணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினர்களும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தென்னிந்திய பிண்ணிப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்வின் கோட்டலில் நேற்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்த சிறார்களுக்காக இசை நிகழ்ச்சியை இலவசமாக நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்பீர்களா? என ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எஸ்.பி.வி பாலசுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் இருந்து செல்கின்றேன். இங்கு உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகளை இலவசமாக நடாத்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் அந்த நிகழ்ச்சியானது, எதற்காக பயன்பட வேண்டுமோ அதற்காக முழுமையாக பயன்பட வேண்டும். இவ்வாறான முயற்சிக்கு நாங்கள் நிச்சயமாக பங்களிப்பு வழங்குவோம்.

ஆனால் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்கு பல குழுக்கள், நிறுவனங்களும் உள்ளது. ஒவ்வொருவரைக் குறை சொல்லிக் கொண்டு இருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டும்.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் குறைகூறுவதை நிறுத்த வேண்டும். இவ்வாற நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது, அனைத்து கழகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான நிகழ்களை இங்கு நடாத்துவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். இவ்வாறான நிகழ்வுகளை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் ஒன்றிணைந்து வாருங்கள், ஒன்று சேர்ந்து நடாத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 2 3

வவுனியா நெளுக்குளத்தில் மாணவர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம்!!

 
வவுனியா நெளுக்குளம் பாடசாலைக்கு முன்பாக இன்று (10.10.2016) காலை 7.00 மணி முதல் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலையின் பழைய மாணவர்களால் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..

அவ் ஐந்து கோரிக்கை பின்வருமாறு..

1.அமைக்கப்படும் அதிபர் விடுதியினை உடனடியாக நிறுத்தவும்.

2.ஒதுக்கப்பட்ட நிதியினை பூரணமாக பாடசாலைக்கு பயன்படுத்த வேண்டும்.

3.பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகத் தெரிவு இடம்பெற வேண்டும்

4.பழைய மாணவர்சங்க நிர்வாகத் தெரிவு இடம்பெற வேண்டும்.

5.பாடசாலை நலனுக்காக பாடுபடும் ஆசிரியர்கள்,பாடசாலை ஊழியர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதை நிறுத்த வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30க்கு மேற்ப்பட்ட பழைய மாணவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்கள், பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

1 dsc_0237 dsc_0238 dsc_0240 dsc_0243 dsc_0246 dsc_0248 dsc_0250 dsc_0254 dsc_0256 dsc_0258 dsc_0259 dsc_0262 dsc_0264 dsc_0267 dsc_0268 dsc_0271 dsc_0272 dsc_0277

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய நான்காம் நாள் உற்சவம் (படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா   (06.010) வியாழக்கிழமை  11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று  வருகின்றது.

மேற்படி ஆலய பிரம்மோற்சவத்தின் நான்காம்   நாளான நேற்று(09.10.2016)     அம்புலி அல்லது பௌர்ணமி சந்திரன் அலங்காரத்தில் சாத்துபடி செய்து  ஸ்ரீ தேவி பூதேவி சமேத  மகா விஷ்ணுக்கு விசேட  அபிசேகம் ஆராதனைகள் இடம்பெற்று இரவு  மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து  யானை வாகனத்தில்  உள்வீதி மற்றும்  வெளிவீதி  வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .

14492386_1327242383962378_7730135148259141409_n 14590285_342713249398017_483615881862878011_n 14606295_342712996064709_5099012343868728797_n 14606478_342713029398039_3059583350077865429_n 14666177_1327242463962370_7722706147442002910_n 14666297_1327242433962373_5589939782712183670_n

வவுனியா புளியங்குளம் இந்துக் கல்லூரியில் சரஸ்வதி சிலை திறந்து வைப்பு !(படங்கள்)

வ/புளியங்குளம் இந்துக்கல்லூரியில் சரஸ்வதி சிலை திறப்பு விழா நிகழ்வு நேற்று (2016.10.09) இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ மயூரன், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோ, சிவன் பவுண்டேசன் ஸ்தாபகர் திரு. கணேஸ் வேலாயுதம், ஆசிரியர் நிலைய முகாமையாளர் திரு.சு.ஜெயச்சந்திரன், புளியங்குளம் ஓய்வுநிலை கிராம சேவையாளர் திரு. யோகராசா, மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவர்களுடன், ரூபா மூன்று இலட்சம் ( 300,000/=) பெறுமதியான சிலையினை தனது துணைவியாரின் ஞாபகார்த்தமாக அமைத்துத் தந்த லண்டனில் வசிக்கும் திரு.கணேசநாதன்(திரு) அவர்களும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். பெறுமதியான அன்பளிப்பினை வழங்கிய நல்லுள்ளத்திற்கும், நிகழ்விற்கு வருகைதந்த அனைவருக்கும் கல்லூரிச் சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

14520581_1690082294643223_1531698297343986855_n 14525143_1690083317976454_6912945133823138244_o 14542448_1690083067976479_636149135718543127_o 14556654_1690082551309864_5403951421174594681_o 14567425_1690083397976446_3079935542541439077_o 14570637_1690082487976537_5764265370832783392_o 14589874_1690082344643218_6002887263436927014_o 14589902_1690082601309859_7476881845877321677_o 14601103_1690082924643160_8271237230291107098_n 14612424_1690082851309834_6240111862143361071_o 14615660_1690082651309854_8382937929204996753_o 14633549_1690082977976488_1555716503261466315_o

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் நவராத்திரி கால ஆன்மீக சொற்பொழிவுகள்!

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே ஆன்மீக நல்லறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் நவராத்திரி காலத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் இரண்டாவது வருடமாகவும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு அங்கமாக 05.10.2016 புதன் கிழமையன்று சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் s.s. வாசன் அவர்களினால்”பல்லுயிர் ஓம்புதல்”என்ற தலைப்பில் சொற்பொழிவு இடம்பெற்றது.

தொடந்து 5.10.2016 வியாழக் கிழமை வ/பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் வித்தியாரத்னா திரு.ஈ.எஸ்.வரதன் அவர்கள்”வாழும் வழி” என்னும்பொருளில் உரை நிகழ்த்தினார்.

07.10.2016,வெள்ளிக்கிழமை அன்று வவுனியா பிரதேசசெயலகத்தின் கலாசார உத்தியோகத்தர்,பண்டிதர் வீ.பிரதீபன் “ஆயகலைகள்” என்னும் பொருளில் உரை நிகழ்த்தினார். 10.10.2016 திங்கட்கிழமையன்று ஆசிரியர் திரு.த.சுதன் அவர்கள் “உள்ளக்கமலம்” என்னும்பொருளில் உரைநிகழ்த்தஉள்ளார்.

14585721_580143625520492_38099512_o 14585740_580143542187167_1867303543_o 14614388_580143945520460_1872781967_o