உடற்பயிற்சிகள் இல்லாமல் உடல் பருமனைக் குறைப்பது எப்படி?

fat

தினமும் வேலைக்குச் செல்லும் சிலரால் அதிக வேலை செய்வதால் ஏற்படும் அசதியின் காரணமாக உடற்பயிற்சிகள் செய்யமுடியாமல் போகிறது.

இதனால் உடல் பருமன் அதிகரித்து விடுகிறது, எனவே உடல் பருமனைக் குறைக்க வேறு வழியே இல்லையா என்று பலரும் வருத்தத்தில் இருப்பார்கள். இனிமேல் உடல் பருமன் பற்றிய கவலையை விடுங்கள்.

உடற்பயிற்சிகள் செய்யாமல் இயற்கையான முறையில் மிகவும் எளிமையாக அதிக உடல் பருமனைக் குறைக்க டிப்ஸ் இதோ..

நம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில், பொரிக்கப்பட்ட உணவுகள், கடைகளில் பல முறைகள் பயன்படுத்திய எண்ணெயில் தயாரிக்கப்படும் சிப்ஸ், இது போன்ற கெட்ட கொழுப்புகள் அதிகமாக கலந்துள்ள உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

தினமும் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் நம் உடம்பில் உள்ள பல்வேறு நோய்கள் மற்றும் கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது.

நம்முடைய அன்றாட உணவுகளில் தினமும் அதிக புரதச் சத்துக்கள் கொண்ட உயர் ரக புரத உணவுகளான மீன், முட்டை, சீஸ், பனீர் ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிகக் விடாமல் தடுக்கிறது.

நாம் தினமும் சமைக்கும் போது ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். இதிலுள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

தினமும் நன்றாக சிரிப்பதால் நம் உடலின் ஒட்டுமொத்த தசைகளும் இயங்குகின்றன. இதனால் மன அழுத்தம் விலகி, கெட்ட கொழுப்பை குறைந்து, வளர்சிதை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது.

வாரம் ஒருமுறை நட்ஸ்களை ஒரு கப் அளவு சாப்பிட்டு வந்தால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து, எப்போதும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

கலக்சி நோட் 7 உற்பத்தியை நிறுத்தியது சம்சுங்!!

samsung

சம்சுங் நிறுவனத்தின் கலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிவதாக தொடர் புகார்கள் வருவதால் அதன் உற்பத்தியை சம்சுங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

உலகில் உள்ள முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் சம்சுங் முக்கியமான இடத்தில் உள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கலக்சி நோட் 7 போன்கள், சார்ஜ் போடும் போது திடீரென்று தீப்பிடித்து எரிவதாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அப்படி புகார் கூறிய வாடிக்கையாளர்களுக்கு அதே ரக மாடலில் வேறு போனை நிறுவனம் தர அதுவும் தீ பிடித்து வெடிப்பதாக புகார் எழுந்தது.

பேட்டரி பிரச்சனையால் தான் அது சூடாகி வெடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2.5 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பி வருவதால் சம்சுங் நிறுவனம் செய்வதறியாது திகைத்து வருகிறது.

இந்த பிரச்சனை தொடர்வதால் தற்காலிகமாக கலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன்களை சம்சுங் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக Yonhap News Agency அறிக்கை கூறியிருக்கிறது. இந்த செய்தியை சாம்சங் நிறுவனம் மறுக்கவில்லை என்பது முக்கியமான விடயமாகும்.

The Consumer Product Safety Commission என்னும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அமைப்பு இது குறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் குரோமின் புதிய பதிப்பு!!

google_chrome

கூகுள் குரோம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தனது அடுத்த பதிப்பில் மெமரி பயன்பாடு குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

கூகுள் குரோம் எப்போதும் மெமரியை அதிகம் எடுத்து கொள்ளும் வல்லமை வாய்ந்ததாகும். குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ர் எட்ஜ்களில் நாம் பத்து தளங்களை ஓப்பன் செய்தால் அதில் குரோம் தான் அதிக மெமரியை இழுக்கும்.

இந்நிலையில் கூகுள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்து வரும் குரோம் 54 பிரவுசரில் மெமரி குறைவான அளவே இழுக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக குரோமில் பணிபுரிபவர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

இது சம்மந்தமான கூகுள் டிவிட்டர், ரெட்டிட், இம்கர் போன்ற வலைதளங்களில் செய்த பயிற்சி ஆராய்ச்சியில் பாதிக்கு பாதி அதாவது 50 சதவீதம் மெமரி குறைவாக பயன்பாட்டில் குறைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த முறையானது டிசம்பர் 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவியை அடியாள் வைத்து கொன்ற கணவன்!!

dead

கனடாவில் மனைவியை அடியாள் மூலம் கணவன் கொலை செய்ததை தொடர்ந்து இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Cloverdale என்ற நகரில் Amanpreet Bahia மற்றும் Baljinder Singh Bahia(33) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிலும் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், மனைவியுடன் வாழ்க்கையை தொடர நினைக்காத கணவர் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனை ஒரு அடியாள் மூலம் செய்ய தீர்மானித்துள்ளார். Eduard Baranec என்ற நபரையும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

திட்டங்கள் அனைத்தும் தயாரான நிலையில், கடந்த 2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வீட்டில் உள்ள சமையல் அறையில் மனைவி அடியாள் மூலம் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.

கொலை நிகழ்ந்த 4 ஆண்டுகள் ஆன பின்னரும் கொலையாளியை பொலிசாரால் நெருங்க முடியவில்லை.

ஆனால், விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் கடந்த 2011ம் ஆண்டு கணவரையும் அடியாளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல்வேறு கட்டமாக நடைபெற்று வந்த விசாரணையின் இறுதியில் கணவர் மற்றும் அடியாள் தான் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இருவரையும் பரோலில் வெளியே விடக்கூடாது எனவும் நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

வயதான பெண்ணைத் தாக்கும் காப்பக பொறுப்பாளர் : நெஞ்சை பதறவைக்கும் காணொளி!!

attack

தைவானில் காப்பக பொறுப்பாளர் ஒருவர் தனது பொறுப்பில் உள்ள வயதான பெண்மணி ஒருவரை தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அந்த பொறுப்பாளர் வயதான பெண் மணி ஒருவரை தலையில் சரமாரியாக அடிக்கிறார்.

பயந்து போன அவர் தள்ளாடிய படியே கட்டில் கம்பியை பிடித்தவாறு மெதுவாக நகர்ந்து செல்கிறார்.

எழுந்து நடக்க கூட முடியாத நிலையில், அவர் அந்த வயதான பெண்ணை மீண்டும் கட்டிலில் ஏறி படுத்துக்கொள் என அடிக்கிறார்.

பேஸ்புக்கில் வைரலாகி வரும் இந்த அதிர்ச்சி வீடியோவை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

“இதோ நகரத்தில் ஒரு இடம். இது போன்று உங்களுக்கும் நடக்கலாம்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த நபருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

3 மாத கர்ப்பிணியான இளம் பெண் படுகொலை : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

lady

உத்தர பிரதேசத்தில் இணை நீதிபதியாக பணியாற்றி வரும் 3 மாத கர்ப்பிணி மனைவியை கருக்கலைப்பு செய்ய மறுத்ததற்காக கொலை செய்ததாக பொலிசாரிடம் அவர் கணவர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் சர்கியூட் ஹவுஸ் காலனியில் கணவர் மனு அபிஷேக் உடன் வசித்து வந்தவர் பிரதீபா கவுதம். இவர் கான்பூர் நகரில் இணை நீதிபதி பணியில் இருந்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரியில் இரு குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக இவர்களது திருமணம் நடந்துள்ளது. தற்போது பிரதீபா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து கணவர் அபிஷேக் கான்பூர் வந்துள்ளார். அங்கு தனது மனைவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார் என அவர் பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரதீபாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. அவரது கைகள் மற்றும் கால்களில் காயத்திற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. அவர் தடியால் தாக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

அவரை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு பின்னர் மின் விசிறியில் தொங்க விட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே பிரதீபாவின் கணவர் மனு அபிஷேக்கின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் பதிவுகளை ஆராய்ந்த பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அபிஷேக்கை கைது செய்துள்ளனர்.

அபிஷேக் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோரிடமும் பிரதீபாவின் வீட்டு பணியாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது. கர்ப்பிணியான மனைவியை கருக்கலைப்பு செய்யும்படி அபிஷேக் கூறி வந்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் சமீபத்தில் இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அபிஷேக் விசாரணை அதிகாரிகளிடம் கூறும்பொழுது, கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லி சென்ற பிரதீபா அதன்பின் கான்பூருக்கு திரும்பியுள்ளார்.

ஆனால் பிரதீபாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு எதுவும் வரவில்லை. அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் டெல்லியில் இருந்து கான்பூர் சென்றேன். அங்கு வீட்டில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது என கூறியுள்ளார்.

சகோதரனுக்கு சிறுமியை இரையாக்கிய சகோதரி : அதிர்ச்சி சம்பவம்!!

abuse

ஐதராபாத்தில் ஒரு சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்க சகோதரனுக்கு உதவியுள்ள சகோதரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத், ஜரினகவை சேர்ந்தவர் அஜித் குமார் (19). இவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை 2 வருடமாக பின் தொடர்ந்து வந்துள்ளார்.

அந்த சிறுமிக்கு அவரின் சகோதரி நல்ல பழக்கம் என்பதால் அஜித் குமாரின் தொடர் தொல்லைகளை சிறுமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாருமில்லை என்று சிறுமியை அஜித் குமாரின் சகோதரி அழைத்துள்ளார்.

சிறுமியும் அதை நம்பி அவரது வீட்டிற்கு செல்ல, அங்கிருந்த அஜித் குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை அழைத்து வந்து அஜித் குமாரும், அவருடைய சகோதரியும் அவரது வீட்டில் விட்டுள்ளனர்.

மேலும், இது குறித்து வெளியே சென்னால் சிறுமியின் சகோதரனை கொன்றுவிடுவோம் என்று சிறுமியின் குடும்பத்தாருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இருப்பினும் அஜித் குமார் மீது சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், தலைமறைவாக உள்ள அஜித் குமாரை தேடி வருகின்றனர்.

வரட்சியான காலநிலை 13ம் திகதி மாற்றமடையும் : வளிமண்டலவியல் திணைக்களம்!!

varatchi11

நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை விரைவில் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாட்டில் நிலவி வரும் கடுமையான வரட்சியான காலநிலை எதிர்வரும் 13ம் திகதியுடன் மாற்றமடையும்.

13ம் திகதியின் பின்னர் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள், காலி மாத்தறை மாவட்டகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடும்.

நாட்டில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வரட்சியினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

சுமார் ஏழு லட்சம் வரையிலான மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் வசதியின்றி அல்லலுறுகின்றனர்.

போதியளவு மழை கிடைக்காத காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் திடீர் உடல் நலக்குறைவு பின்னணியில் பெரும் சதி : அதிர்ச்சித் தகவல்!!

jayalalithaa-jayaram

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் உடல் நலக்குறைவில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதுகுறித்து, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா எம்.பியும், சமீபத்தில் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டவருமான சசிகலா புஷ்பா இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

டெல்லியில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதாவே வந்து ஆட்சி செய்ய வேண்டும்.

அதை தான் அனைத்து மக்களும் விரும்புகிறார்கள். ஆனால், எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரான சசிகலா நடராஜன், அ.தி.மு.கவின் துணை பொதுச்செயலாளராக ஆக வேண்டுமென பேசிவருகிறார்.

அ.தி.மு.கவையும், தமிழக ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா நடராஜன் மற்றும் அவரது குழு சதி செய்து, செயல்பட்டு வருகிறது.

சசிகலா நடராஜன் கோஷ்டி கோடிகணக்கில் பணம் வைத்துள்ளது, இது குறித்து சி.பி.ஐ விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு நோயாளிக்கு அருகே யாரும் இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. வைத்தியர்கள்தான் நோயாளிக்கு பொறுப்பு. ஆனால் சசிகலா கோஷ்டியோ, தானாகவே போய் முதல்வரிடம் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பெரிய, பெரிய தலைவர்கள் எல்லாம், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோதும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஸ்டாலின், ராகுல் காந்தி என அனைவருமே அப்படியே திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

எனவே, அ.தி.மு.கவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் உடனடியாக வெளிவர வேண்டும். கட்சியை காப்பாற்ற முன்வர வேண்டும். என்னிடம் சில தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். .

தங்கள் அதிருப்தியை கூறுகிறார்கள். இனியாவது அவர்கள் தைரியமாக வெளிப்படையாக வெளியே வந்து பேச வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழகம் சார்பில் அனுப்பபடும் கடிதத்தில் இருக்கும் முதல்வரின் கையெழுத்தின் உண்மை தன்மையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்வர் கையெழுத்தில்லாமல் உள்ளாட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானால், அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதன் பின்னணியில் சதி இருக்கலாம் என சந்தேகிக்கிப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, இதற்கு என்ன காரணம் என்பது பற்றி சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய இருவருக்கு நேர்ந்த அவலம்!!

jeya

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவரை குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் திகதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விபரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது.

எனினும், அவரது உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து அ.தி.மு.க தரப்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக, அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் அளித்த முறைப்பாட்டின் பேரில் நாமக்கல்லை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ,நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்கமால் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மதுரையை சேர்ந்த மாடசாமி என்பவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர் மீதும் குற்றப்பிரிவு பொலிஸ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கைக்குழந்தையின் உயிரை பலி வாங்கிய துணி!!

baby

தாயின் கவனயீனத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.நவாலி தெற்கு பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சிவசெல்வன் கேசவி எனும் பிறந்து 45 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தாய் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு ஏணையில் குழந்தையை படுத்தி விட்டு சமையல் வேலைகளை செய்ய சென்றுள்ளார்.

இதன் போது ஏணைமீதிருந்த தூணி ஒன்று ஏணையில் படுத்துறங்கிய குழந்தை மீது வீழ்ந்ததில், குழந்தை மூச்சு திணறலுக்கு உள்ளாகியுள்ளது.

தாயார் சமையல் வேலைகளை முடித்து விட்டு குழந்தையை தூக்க சென்ற வேளை குழந்தை அசைவற்று இருந்ததை அவதானித்து உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், உயிரிழப்புக்கு மூச்சு திணறலே காரணம் என தெரிவித்துள்ளனர்.

கண்டியில் பாரிய குகையொன்று கண்டுபிடிப்பு!!

kukai

கண்டி, பதுளையை அண்மித்த பகுதியில் பாரிய குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டது. ரஜமாவத்தையில் உள்ள கந்தே சந்தி கெப்பிட்டியாவ பிரதேசத்தில் 30 அடி ஆழமான குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெப்பிட்டியாவ கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு நீர் விநியோக வசதிகளை வழங்குவதற்காக இங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குகைக்குள் செல்லக்கூடிய இரண்டு பாதைகள் உள்ளன. ஒரு பாதையில் எதுவித சிரமுமின்றி ஆயிரம் அடி தூரம் வரை செல்ல முடியும்.

அதிககூடிய வெப்பம், மூச்சு விடுவதில் உள்ள சிரமம் போன்ற காரணமாக அதிக தூரம் செல்ல முடியாத நிலை உள்ளதாக குகைக்குள் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த குகை தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்த புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் கைது!!

1

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு இளைஞனை பொலிஸார் அதிவேக துரத்தலின் பின்னர் கைது செய்த சம்பவம் செக் குடியரசில் இடம் பெற்றுள்ளது.

ஹைவிரோவ் எனும் நகரில், பொலிஸ் நிலையமொன்றுக்கு முன்னால் ஒரு நபர் நிர்வாண நிலையில் மோட்டார் சைக்கிளில் செல்வதை அவதானித்த பொலிஸார் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்நபரை பொலிஸார் துரத்திச் சென்றபோது அவர் மேலும் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்த ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அந்த மோட்டார் சைக்கிள் வாகனமொன்றின் மீது மோதி சரிந்தது. அதையடுத்து, மேற்படி நபர் அங்கிருந்து ஓடி மரமொன்றுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்.

எனினும், பொலிஸார் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவர் மது போதையில் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் 2 வருட கால சிறைத் தண்டனையை எதிர்நோக்குகிறார் என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

2

ஹெரோயினை விடவும் அதிகளவானோரை பலியெடுக்கும் அபாயகரமான வலிநீக்கி மருந்து!!

siddha1

பிரித்­தா­னி­யாவில் வலிநீக்கி மருந்­தான திர­மடோல், ஹெரோயின் போதைப்­பொ­ருளை விடவும் அதி­க­ள­வா­னோரின் உயிரை பலி­கொண்டு வரு­வ­தாக அந்­நாட்டு முன்­னணி நோயியல் நிபுணர் ஒருவர் தெரி­விக்­கிறார்.

அந்த வலி நீக்கி மருந்தை மருத்­து­வரின் சிபா­ரி­சுக்­க­மை­யவே வழங்க வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ள போதும் கறுப்புச் சந்தை மூல­மாக அந்த மருந்தை சட்­ட­வி­ரோ­த­மாக பெறு­வது அதி­க­ரித்து வரு­வ­தாக வட அயர்­லாந்தைச் சேர்ந்த நோயியல் நிபு­ண­ரான பேரா­சி­ரியர் ஜக் கிரேன் கூறினார்.

கடு­மை­யான வலி­களைத் தணி­விக்கும் இந்த மருந்­துக்கு பலரும் அடி­மை­யா­கி­யுள்­ள­தாக தெரி­வித்த அவர், அந்த மருந்தை ஏனைய மருந்­து­க­ளுடன் அல்­லது மது­பா­னத்­துடன் கலந்து பயன்­ப­டுத்தும் போது அது பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அவர் கூறினார்.

வட அயர்­லாந்தில் கடந்த வருடத்தில் மட்டும் அந்த மருந்து பாவ­னையால் 16 வயது சிறுமி மற்றும் 70 வயது வயோதிபர் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெண்கள் மீது கொண்ட அதிக மோகம் : இளைஞர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்!!

isis

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரிடம் இருக்கும் பாலியல் பெண்களின் மீது கொண்ட மோகம் காரணமாகவே இந்திய நாட்டு இளைஞர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பர்பானி பகுதியை சேர்ந்த நாசர், அலியாஸ் குவாடிர், பின் அபுபக்கர், யாபை ஷா ஆகிய 4 பேரும் ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக கடந்த 14 ஆம் திகதி சிரியா செல்ல முற்படுகையில் அவுரங்காபாத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து ஒரு போராளியாக மாற வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் செல்லவில்லை. மாறாக அங்கிருக்கம் பாலியல் பெண்களின் மீது கொண்ட மோகத்தால் அங்கு செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பும் தங்களிடம் இருக்கும் பெண்களை பயன்படுத்தி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.இதில் நாசன் என்பவரின் தொலைப்பேசியை ஆராய்ந்து பார்க்கையில், அவர் பாலியல் சம்பந்தமான தகவல்களையே அதிகம் தேடியுள்ளார். மேலும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய வலைதளங்களின் வாயிலாக பாலியல் பெண்களை பற்றி அறிந்துகொண்டுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பில் உள்ள பெண்களின் வயது மற்றும் அவர்கள் சம்பந்தமான பல கேள்விகளை கேட்டறிந்துள்ளார். மேலும் சமூகவலைதளத்தில் பெண்கள் சம்பந்தமான புகைப்படங்களையும் பார்த்துள்ளார்.

நாட்டில் கடும் வறட்சி : நீர்விநியோகத்தை 18 மணிநேரத்துக்கு கட்டுப்படுத்த தீர்மானம்!!

An Indian village boy runs through a parched field on World Water Day in Berhampur, Orissa state, India, Monday, March 22, 2010. Clean Water for a Healthy World is the theme for World Water Day 2010. (AP Photo/Biswaranjan Rout)

நாட்டில் நிலவும்கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதன்பிரகாரம் அவ்விரண்டு மாகாணங்களில் மாத்திரம் 2 இலட்சத்து 80 பேர் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வரட்சியான காலநிலை அதிஉச்சநிலையை அடைந்துள்ளமையினால் நாடு பூராகவும் இதுவரைக்கும் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 455 பேர் குடிநீர்தட்டுப்பாட்டினால் தத்தளித்து வருகின்றனர்.

இதேவேளை வரட்சியான காலநிலை காரணமாக நாடுபூராகவும் குடிநீர் விநியோகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம் ஒரு நாளைக்கு 18 மணிநேரத்திற்கு நீர்விநியோகத்தை மட்டுப்படுத்த நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபை தீர்மானித்துள்ளது.

எனினும் தற்போது நிலவும் மோசமான காலநிலை எதிர்வரும் 13 ஆம் திகதி மாற்றம் அடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பாதிப்புகளின் எண்ணிக்கை எந்த மட்டத்தில் காணப்பட்டாலும் நாடுபூராகவும் அதிகளவிலான வெப்ப நிலையும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகின்றன. அனைத்து பிரதேசங்களிலும் மக்களினால் தாங்க முடியாத வெப்பநிலை காணப்படுகின்றது. இவ்வாறான காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சததில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க கூடிய நிலைமை ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. மேலும் மின் விநியோகத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.