18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்தத் தடை!!

chi

சீனாவில் இணையத்தள விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் பலரும் அடிமையாகி வருகின்றனர். சுமார் 23% சிறுவர்கள் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையானதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் சைபர்பேஸ் துறையினர் நள்ளிரவு தொடங்கி காலை 8 மணி வரை சிறுவர்கள் இணையம் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

இரவில் விளையாட வருபவர்கள் தங்களது வயது குறித்த ஆவணங்களை இணையத்தள விளையாட்டு நடத்துபவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் இந்த மாத இறுதிவரை கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் சைபர்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையத்தள விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.

இலங்கையில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் அதிகரிப்பு!!

hiv

நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்தார் .

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களிலேயே குறித்த பத்து விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர் ,

நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் குறித்த பத்து விகிதம் அதிகரித்துள்ளது . இதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் எச்.ஐ.வி. தொற்றுள்ள 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 170 பேரில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் . எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமைக்கு காரணம் நாம் தொடர்ச்சியாக எச்.ஐ.வி. குறித்த பரிசோதனைகள் நாடளாவிய ரீதியில் துரித கதியில் மேற்கொண்டு வந்தமையே .இனிவரும் காலங்களிலும் நடமாடும் சேவைகளை நடத்தி எச்.ஐ.வி. குறித்த பரிசோதனைகள் சாதாரண மக்களிடம் மேற்கொள்ள திட்டமிட்டிருகின்றோம்.

விஷேடமாக விபச்சாரிகள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள், போதைப் பொருள் பயன்படுத்துவோர் பெருமளவில் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் . இவ்வாறாக பரிசோதனைகளை துரிதபடுதுவதன் மூலம் நாட்டில் எச்.ஐ.வி. பாவனையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எச்சரிக்கை : கேலக்சி நோட் 7 செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்!!

note7

இத்தாலி நாட்டில் சமீபத்தில் ஒருவர் கடந்த மாதம் தனது சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போனின் பட்டரியை ரீசார்ஜ் செய்தபோது அந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது.

இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் அவுஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை ஆன் செய்வது மற்றும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு வலியுறுத்தியது.

தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங்சின் புதுரக போன் வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் போன்களை அந்நிறுவனம் திரும்பப்பெற்றது. புதிய போன்களின் விற்பனையையும் நிறுத்தி வைத்தது.

அவுஸ்திரேலியாவில் சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களும் திரும்பப்பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, விமானத்தில் அந்த குறிப்பிட்ட ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது.

பேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ’சாம்சங் கேலக்சி நோட் 7’ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நாட்டு மக்களை எச்சரித்தது.

அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களை திரும்பப் பெற்றுகொள்வது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பை சாம்சங் நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், திரும்பப் பெறப்படும் போன்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன? என்பது தொடர்பாக அந்நிறுவனம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், குறைபாடு கொண்ட கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களுக்கு மாற்றாக புதிதாக மாற்றித் தரப்பட்ட இதேவகை போன்களும் தீபற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இவ்விவகராம் தொடர்பாக விசாரித்துவரும் சாம்சங் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களின் விற்பனை மற்றும் குறைபாடு கொண்ட தயாரிப்புக்கு பதிலாக வேறு செல்போன்களை மாற்றித் தருவதை நிறுத்தி வைக்குமாறு உலகில் உள்ள எங்களது முகவர்களை அறிவுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தவகை போன்களை பயன்டுத்தி வரும் வாடிக்கையாளர்களும், குறைபாடுகளுக்காக மாற்றாக புதிய போன்களை பெற்ற வாடிக்கையாளர்களும் தங்களது செல்போன்களை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவும் அபாயம்!!

zica

ஆசிய நாடுகள் முழுவதும் ஸிகா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸிகா வைரஸ் தொற்று பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை கொசுவினால் இந்த நோய் பரவுகிறது.

இந்நிலையில், ஆசிய நாடுகள் முழுவதும் ஸிகா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் ஸிகா போன்ற நுண் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சுகாதார நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று வெளியிட்டுள்ளது.

சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பெரும்பாலான தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பசுபிக் தீவுகளில் இந்த நோய் பாதிக்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸிகா நோய் பாதிப்பில் பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கு இன்னும் ஆராய்ச்சியாளர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் ஒவ்வொரு நாட்டிலும் 20-க்கும் அதிகமானோர் பாதிகப்பட்டுள்ளனர்.

மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி!!

fall

நிட்டம்புவ நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 09.00 மணி தொடக்கம் நாளை அதிகாலை 05.00 மணி வரையான காலப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் 16 வயதான வில்கமுவ – நாமினிஓய பகுதியைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் மின்னொழுக்கினால் கணணிகள் சேதம்!!

fire

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று (11.10.2016) மாலை ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக கணனிகள் சேதமாகியுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று மாலை 6 மணியளவில் செட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட மின்சாரம் கூடிக்குறைதல் காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலகத்திலுள்ள கணணி மற்றும் மின்விசிறி, சில மின்குமிழ்கள் சேதமடைந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் பகுதியில் மின்சாரம் சீரின்மை காரணமாகவே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதை அதிகாரிகள் சீர் செய்துதருமாறும் தெரிவித்துள்ளார்.

பாரிய சேதம் இடம்பெற்றிருக்க வாய்ப்புக்கள் இருந்தும் உடனடியாக பிரதேச செயலகத்தின் காவல் கடமையிலுள்ள ஊழியர்கள் பொலிசார் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் நிலைமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச செயலாளர் பாபா பயூன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை மக்களால் பிடிப்பு!!

 
இன்று (12.10.2016) அதிகாலை 5.30 மணியளவில் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட முதலையை கிராமவாசிகள் கட்டிவைத்துள்ளனர். அத்துடன் பொலிஸார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் வரும்வரை முதலையை கட்டி வைத்து கிராமத்தவர்கள் காவல் காத்து நின்றுள்ளார்.

அதேவேளை கடந்த 05.10.2016 காலை 7.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்த முதலை ஒன்று வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் முதலையினை பிடித்து கட்டி பொதுமக்கள் அற்ற காட்டுப்பகுதியில் விடுவித்தும் குறிப்பிடத்தக்கது.

1 image-0-02-06-0ba447f0b6f3ab3d5e42c79109767941ec5f204e98a0f9bf3fd5acd336ff357a-v image-0-02-06-16428563dd7360531cba7aad1569f7bba74f1f3896d3086361a1d0d8667f5399-v image-0-02-06-d750c65c88913d859661b166e9454239d6e73def045ca92424cdf8b03cf6585a-v image-0-02-06-ee273fe7c338f672e3737a4cc994281cd2dcb72b746f6c4492713fb14493d190-v

வவுனியா கூமாங்குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வதிவிட இல்லம் திறந்துவைப்பு!!

 
வவுனியா கூமாங்குளம் பகுதியில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான வதிவிட இல்லம் மற்றும் தொழிநுட்பப்பயிற்சி நிலையம் என்பன நேற்று காலை 9.30 மணிக்கு நிலையத்தின் இயக்குநர் சி.ஜெகதீஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வரோட் நிறுவனத்தின உதவி இயக்குநர் அருட்பணி கிறிஸ்ரி ஜோன், வைத்தியர் மதிவதனன், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் சமயத்தலைவர்கள், பொதுமக்கள், விஷேட தேவைக்குட்பட்டோர் என பலரும் கலந்து கலந்து கொண்டதுடன் வதிவிட இல்லத்தினை அதிதிகள் திறந்து வைத்தனர்.

1 dsc_0279 dsc_0282 dsc_0283 dsc_0284 dsc_0285 dsc_0286 dsc_0287 dsc_0289 dsc_0290 dsc_0294 dsc_0297 dsc_0298 dsc_0299 dsc_0300 dsc_0301 dsc_0304 dsc_0306 dsc_0320 dsc_0321 dsc_0323 dsc_0324 dsc_0332 dsc_0335

வவுனியா செட்டிகுள பிரதேச செயலகத்தில் சற்றுமுன் தீவிபத்து!

fire

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இன்று (11.10.2016) மாலை 6 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பிரதேச செயலகத்தின் மேல்மாடி பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த 50ற்கும் மேற்பட்ட செட்டிகுள பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன் மேல்மாடி பகுதியில் இருந்த சில ஆவணங்கள் எரிந்துள்ளதாகவும் மின்னொழுக்கே இதற்கு காரணமாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா பூந்தோட்டத்தில் முச்சக்கரவண்டி விபத்து : சாரதி படுகாயம்!!

 
வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் பிரதான வீதியில் இன்று (11.10.2016) பிற்பகல் 5.40 மணியளவில் ஏற்ப்பட்ட முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

மகாறம்பைக்குளத்திலிருந்து பூந்தோட்டம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பூந்தோட்டத்திலிருந்து மகாறம்பைக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலிலுக்கு வழிவிட்ட சமயத்தில் வீதியினை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

1 image-0-02-06-2f089438d0133ff0edd6a92b8005da93333f747571d4ea82f05a0dde73849a9f-v image-0-02-06-7ae3445effd15c00274522b582ee9afca70070c8d79582524bce568e5116728e-v image-0-02-06-d62d1e2022b064cdf4d9eaba160875bbe589911cc7e2cd10f5f707e42da940b3-v

வவுனியா தெற்கு வலய கல்விப் பணிமனையின் ஆரம்பக் கல்விப் பிரிவின் சிறுவர்தின நிகழ்வுகள்!(படங்கள்)

வவுனியா தெற்கு கல்வி வலய ஆரம்பக்கல்விப்பிரிவின் சிறுர்வர் தினநிகழ்வுகள் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி CSM தேவசேனா தலைமையில் இறம்பைக்குளம் மகளீர் .வித்தியாலயத்தில்  நேற்று (10.10.2016)  நடைபெற்றது .

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வலயக்கல்விப்பணிப்பாளார் திரு.முத்து.இராதாகருஸ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.M.P.நடராஜ் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டடு சிறப்பித்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட நிலையில் முதல் பத்து இடங்களையும் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு. முத்து.இராதாகிருஸ்ணன்,கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.M.P நடராஜ் ஆகியோர்களால் வெற்றிக்கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

மேற்படி  நிகழ்வில்  ஆரம்பகல்வி  மாணவ மாணவிகளின் பொம்மலாட்டம்,பேச்சு,நடனம் பாட்டு போன்ற கலைநிகழ்வுகளும் விழாவை அங்கரித்தன.

படங்கள் :  தம்பிபிள்ளை சுதன்

 
14600780_580912632110258_197876876_o

14610819_580912708776917_1841805423_n

14614337_580912985443556_338549305_o-1

14614337_580912985443556_338549305_o

14614507_580911845443670_161043575_o

14647382_580865582114963_534694005_o

வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் விபத்தில் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)

 
கொழும்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருக்கும்போது இன்று (11.10.2016) அதிகாலை 4.30 மணியளவில் மகோ பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் மற்றும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன்(19), ஆகியோர் பயணித்த வாகனம் இன்று அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தவேளை மகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனொமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய வவுனியா பொது வைத்தியசாலையின் டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமார் (49) என்பவரும், அவருடைய சகோதரியின் மகளாகிய சிவதுர்க்கா சத்தியநாதன்(19) ஆகிய இருவருமே முதலில் இறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

மாகோ வைத்தியசாலையில் பொலிசாரினால் கையளிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரினதும் சடலங்களை குருணாகலை வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இவர்களின் வாகன சாரதியான சிவநாதன் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 2 3 4

வவுனியாவில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

 
வவுனியாவில் இன்று (11.10.2016) காலை சர்வதேச சிறுவர் தினத்தில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு கோரி பெண்கள் அமைப்புக்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

சிறுவர்கள் தினத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறும், வித்தியா, ஹரிஸ்ணவி போன்ற மாணவிகளுக்கு நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு கோரி இன்று (11.10.2016) காலை வவுனியா தபாலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதில் பெண்கள் அமைப்புக்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

1 dsc_0319 dsc_0324 dsc_0329 dsc_0333 dsc_0334 dsc_0336 dsc_0338 dsc_0341 dsc_0344 dsc_0346 dsc_0347 dsc_0349 dsc_0350 dsc_0356 dsc_0360 dsc_0362

வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் விபத்தில் பலி!!

vavuniya-accident
கொழும்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருக்கும்போது இன்று (11.10.2016) அதிகாலை 4.30 மணியளவில் மகோ பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் மற்றும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன்(19), ஆகியோர் பயணித்த வாகனம் இன்று அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தவேளை மகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனொமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய வவுனியா பொது வைத்தியசாலையின் டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமார் (49) என்பவரும், அவருடைய சகோதரியின் மகளாகிய சிவதுர்க்கா சத்தியநாதன்(19) ஆகிய இருவருமே முதலில் இறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

மாகோ வைத்தியசாலையில் பொலிசாரினால் கையளிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரினதும் சடலங்களை குருணாகலை வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இவர்களின் வாகன சாரதியான சிவநாதன் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான முழுமையான செய்திக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு பகவான் ரூபாய் நோட்டு அலங்காரத்துடன் ஐந்தாம் நாள் உற்சவம் (படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா   (06.010) வியாழக்கிழமை  11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று  வருகின்றது.

மேற்படி ஆலய பிரம்மோற்சவத்தின் நான்காம்   நாளான நேற்று(10.10.2016)     சொர்ண அலங்காரத்தில் ரூபாய் நோட்டுகளால்  சாத்துபடி செய்து  ஸ்ரீ தேவி பூதேவி சமேத  மகா விஷ்ணுக்கு விசேட  அபிசேகம் ஆராதனைகள் இடம்பெற்று இரவு  மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து  யானை வாகனத்தில்  உள்வீதி மற்றும்  வெளிவீதி  வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .

படங்கள்: ஜெ.மயூர சர்மா

14600640_1145296925524471_450555431_o 14614202_1145314525522711_1219634196_o 14618798_1145314615522702_2004639197_o 14625648_1145301242190706_1506654764_o 14628176_1145096462211184_1290015640_n 14646695_1145096315544532_850714802_o 14647196_1145297065524457_651514577_o 14647402_1145301665523997_1048394837_o 14657823_1145300672190763_454024662_n 14672863_1145298988857598_66056985_o 14677905_1145096298877867_2013097206_o 14678047_1145296978857799_864286406_o 14686324_1145300675524096_540846276_n

வவுனியா யுனிபைட் விளையாட்டுக்கழகம் வடமாகாண சம்பியன் பட்டத்தை வென்றது!!

 
2016ம் ஆண்டுக்கான இலங்கை துடுப்பாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட டிவிசன் 3 போட்டியின் இரண்டாம் கட்டப்போட்டியில் வவுனியா யுனிபைட் கழகம் மாகாணமட்ட ரீதியில் சம்பியன் பட்டத்தினை வென்றது.

கடந்த (08.10.2016) தம்புள்ளை சர்வதேச கிரிக்கேட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணியினரான St Judes இனை 7 விக்கட்டுக்களால் வவுனியா யுனிபைட் கழகம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-7e0807b26d641c2f959985613999197f3d42216bbb8855f4d999f40491815627-v image-0-02-06-94c1dd8c2c9522b6a203dcb5e5b27d5447f7f4097185916088ec243d67c7013e-v image-0-02-06-00104ab8f2239d8fb4b4f0cde7db2da9891d39bfe317380bc82c8a335128414d-v