ஹற்றனில் பச்சை நிறத்திலான அதிசய வகை வண்ணத்து பூச்சி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அபூர்வ வகையிலான வண்ணத்து பூச்சி இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வகை வண்ணத்து பூச்சிகள் இலைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன.
வண்ணத்து பூச்சிகள் இலையில் அமர்ந்திருக்கையில் அடையாளம் காண முடியாத வகையில் இலையை போன்று காட்சி தருவது சிறப்பம்சம்.
துருக்கியில் உள்ள Antalya கடற்கரைக்கு சுற்றுலா சென்ற பெண்மணி ஒருவர், Azur Air என்ற விமானத்தின் மூலம் துருக்கியில் இருந்து மொஸ்கோ நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
நீரிழிவு நோயாளியான இவர் இன்சுலின் மருந்தினை எடுத்துவர மறந்துவிட்டார். இந்நிலையில் விமானத்தில் வைத்து இவருக்கு திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டுள்ளது. விமான ஊழியர்கள் இவருக்கு மருத்துவ உதவி அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி இவர் இறந்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து விமான ஊழியர்கள், இவரது உடலை கட்டி பயணிகள் அமரும் சீட்டின் நடைபாதைக்கு இடையில் வைத்துள்ளனர்.
இதனைப்பார்த்த சகபயணி ஒருவர், ஒரு பிணத்தின் அருகில் என்னால் எவ்வாறு உட்கார இயலும் என கூறி அங்கிருந்து இடம் மாறியுள்ளார். அதன்பின்னர், உடனடி உதவி கருதி விமானம் வேமாக மாஸ்கோவில் தரையிறக்கப்பட்டது.
சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரை கொடுத்து தனது 3 வயது மகளை பெற்றோர் காப்பாற்றியுள்ளனர்.
சீனாவின் மேற்கு பகுதியில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள வெங்ஷூ நகரில் 6 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் பலர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்களின் மனதை உருக்கிய ஒரு காட்சி தென்பட்டது. சில கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது ஒரு இளம் ஆணின் உடல் மட்டும் தென்பட்டது. பின்னர் முழுமையாக அகற்றினர். அதையடுத்து அந்த ஆணின் உடலையொட்டி ஒரு பெண்ணின் உடலும் இருந்தது. அவர்கள் இருவருக்கும் இடையே 3 வயது சிறுமியின் உடலும் இருந்தது. ஆண் மற்றும் பெண்ணின் கைகள் அச்சிறுமியை அணைத்து பாதுகாத்த படியும் உடல்கள் கவிழ்ந்த நிலையிலும் கிடந்தன.
உடனே அந்த 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். ஆனால் அவர்களில் சிறுமி மட்டும் லேசான காயங்களுடன் உயிருடன் இருந்தாள். உடனே, அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயிர் பிழைக்க வைத்தனர். அவளது பெயர் வூ நிங்ஸி. கட்டிடம் இடிந்த போது அவளது பெற்றோர் இவளை காப்பாற்றுவதற்காக அவளை தனது கரங்களால் சுற்றி அணைத்து இடிபாடுகள் அவள்மீது விழாமல் காப்பாற்றியுள்ளனர்.
கடவுள் அருளால் அவளும் தீயணைப்பு படை வீரர்களால் கண்டு பிடிக்கப்பட்டு 15 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டாள். இக்காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி ஏராளமானவர்களின் மனதை கரைய செய்தது.
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கிற்கான ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் உயிருடன் வந்துள்ள சம்பவம் ஒன்று காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
கடந்த 8 ஆம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் மோதியதில் 21 வயதான இஷான் மஞ்சுல என்ற நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் குறித்த இளைஞரின் உறவினர்களினால் அவரின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நேற்று வெளியான அறிவித்தலின்படி குறித்த தகவல் தவறானது எனவும் உயிரிழந்துள்ளவர் வேறு ஒரு நபர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்ததாக தவறாக கூறப்பட்ட இளைஞர் இன்று காலி துறைமுகத்திற்கு உயிரோடு வந்துள்ளார்.
இறுதிச் சடங்கின்போது உயிருடன் வந்த இளைஞரினால் குறித்த பிரதேசத்தில் சற்று பரபரப்பு காணப்பட்டதுடன் குடும்பத்தினர் மத்தியில் ஒரு சங்கடமான நிலை ஏற்பட்டதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
மேலும், குறித்த விபத்தில் 22 வயதான காலி மஹமோதர சியம்பலா கஹாவத்தையை சேர்ந்த இளைஞரே உண்மையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் உள்ளாடையில் அதிநவீன கருவியை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தின் Sundern நகரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இங்கு கடந்த ஜீன் மாதம் நடந்த தேர்வில், 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார். அவரை பரிசோதித்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தன்னுடைய உள்ளாடையில் அதிநவீன கமெரா கொண்ட கருவியை பொருத்தியிருந்தார்.
இதன்மூலம் உதவி செய்யும் நபர்கள் வினாத்தாளை பார்க்க முடியும், இதற்கான விடைகளை பெறுவதற்காக காதினுள் ஹெட்போனையும் சொருகியிருந்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ள பொலிசார், இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள ஆலயத்தில் நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாத குருக்கள் தலைமையில்01.10.2016 தொடங்கி11.10.2016 வரையான பதினொரு நாட்கள் மிக சிறப்பாக இடம்பெற்றது.
பதினோராம் நாளான நேற்று (11.10.2016) விஜயதசமி தினமான நேற்று வித்தியாரம்பம் என்று சொல்லபடுகின்ற ஏடு தொடக்கல் நிகழ்வும் மாலையில் மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும் இடம்பெற்றது.
வவுனியாவில் இன்று(12.10.2016) காலை பொது அமைப்பக்களின் ஏற்பாட்டில் சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலிருந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணியானது கண்டி வீதி வழியாக மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பசார் வீதி வழியாக தினச்சந்தை சென்று அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகம் சென்று அரசாங்க அதிபர் எம்.பி.ரோகண புஸ்பகுமாராவிடம் ஜனாதிபதியிடம் கையளிக்கமாறு மகஜர் கையளிக்கப்பட்டது.
இன்றை ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினாகளான செ.மயூன், ம.தியாகராசா முன்னாள் மகாணசபை உறுப்பினர் எம்.பி. நடராஜ், முன்னாள் நகரசபை நகர பிதா சந்திரகுலசிங்கம், மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என நூற்றுக்கும் அதிகமானர்கள் கலந்து கொண்டனர்.
தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வவுனியா புளியங்குளம் புரட்சி விளையாட்டு மைதானத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது .
சுமார் 5 மில்லியன் நிதியினை திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து தெற்கிற்கு 28 தினங்களாக பயணிக்கவுள்ள இந்த நடைபவனி கடந்த (06.10.2016 )வியாழக்கிழமை யாழ். பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கபட்டிருந்தது.
ஒரு நாளில் சுமார் 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ள இவ் நடைபவனியானது பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம், மாங்குளம், வவுனியா மதவாச்சி, கல்முனை, குருணாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணாந்துறை மற்றும் சீனிகம போன்ற நகரங்களை கடக்கவுள்ளது.
இன்றுகாலை வவுனியா புளியங்குளத்தை வந்தடைந்த இந்த நடை பவனியை பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள் எனப்பல்வேறு தரப்பினரும் வரவேற்று தங்களாலான நன்கொடைகளை வழங்கியதோடு நடை பவனியில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு மற்றும் பழங்களையும் வழங்கியிருந்தனர் .நாளைய தினம் இந்த நடை பவனி வவுனியாவை நோக்கி செல்கிறது.
சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால் விரும்பப்பட்ட முச்சக்கர வண்டிப் பயணம் தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றது. நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது.
வீதிப் போக்குவரத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. நாளொன்றுக்கு 07 பேர் வீதம் விபத்துக்களின் மூலம் உயிரிழப்பதாகத் தெரியவந்துள்ளது.
விபத்துக்களில் அதிகமானவர்கள் உயிரிழப்பதுடன், காயத்துக்குள்ளாகி, அவயவங்களையும், உடைமைகளையும் இழந்து வருகின்றனர்.
விபத்துகள் வாழ்க்கையில் மாறாத வடுக்களையும், உளக் காயங்களையும் ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து விழிப்படைய வேண்டிய தேவையும், அவசியமும் சாரதிகளுக்கும், பயணிகளுக்கும் உண்டு.
சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால் விரும்பப்பட்ட முச்சக்கர வண்டிப் பயணம் தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றது.
முச்சக்கர வண்டிப் பயணங்கள் இவ்வாறு மக்களினால் நம்பிக்கை இழக்கக் காரணம் என்ன என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதுடன், அதனை நம்பிக்கைக்குரிய பயணமாகவும் மாற்ற முயற்சிக்க வேண்டும்.
குறைந்த செலவு, இலகு பயணம், நினைத்த மாத்திரத்தில் சேவையை பெற்றுக் கொள்ளக் கூடியதாயிருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெருமளவிலானவர்களினால் விரும்பப்படும் முச்சக்கர வண்டிப் பயணம் இன்று அதே மக்கள் மத்தியில் நம்பிக்கையிழந்து வருவதுடன், அதிகம் அச்ச நிலைமைகளையும் தோற்றுவித்துள்ளது என்றால் அதனை எவரும் மறுக்க மாட்டார்கள்.
முச்சக்கரவண்டிகள் அதிகம் சமூக விரோதச் செயற்பாடுகளுடன் தொடர்புபடுவதனால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளன.
அன்றாடம் நாட்டில் இடம்பெறும் விபத்து, கொலை, கொள்ளை, திருட்டு, கடத்தல், கப்பம், பாலியல் சேஷ்டை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் போன்ற சம்பவங்களில் ஏராளமான முச்சக்கர வண்டிகளும், அதன் ஓட்டுனர்களும் அதிகம் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 101 வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
தினசரி இடம்பெறும் கோர விபத்துக்களில் முச்சக்கர வண்டிகள் அதிகம் சம்பந்தப்படுகின்றன.
அன்றாடம் இடம்பெறும் அதிகளவிலான குற்றச் செயல்களிலும் முச்சக்கர வண்டிகளும், அதன் சாரதிகளும் அதிகம் சம்பந்தப்படுகின்றனர் என்பதை பொலிஸ் மற்றும் ஊடகச் செய்திகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
ஏனைய வாகனச் சாரதிகள் ஓட்டுனர்களை விடவும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தொடர்ந்தும் வித்தியாசமான அணுகுமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள போக்குவரத்துச் சட்டங்கள், போக்குவரத்து ஒழுங்கு விதிகளை முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அல்லது அதன் சாரதிகள் அதிகம் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.
நாடளாவிய ரீதியில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் இருந்து இவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்ற போதிலும், முச்சக்கர வண்டிச் சாரதிகளில் குறித்த சிலர் இவை குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்களாகவே தொழிற்படுகின்றனர்.
இதனால் அதிகம் விபத்துக்களையும், இழப்புக்களையும் எதிர்கொள்வது தெரிந்த செய்தி.
ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகள் பணத்துக்காக குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதற்கு தயங்குவதில்லை.
தங்களது ஜீவனோபாயத்திற்காகவும், தொழிலுக்காகவும் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்கள் இவ்வாறான பெருங்குற்றச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஏனையவர்களுக்கும் இழுக்கைப் பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை உரியவர்கள் தெரிந்து கொண்டு எதிர்காலப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையிலீடுபடும் முச்சக்கர வண்டிகள், அலுவலக உத்தியோகத்தர்களின் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், பொருட்களை கொண்டு செல்லும் முச்சக்கர வண்டிகள் எதுவாக இருந்தாலும் வித்தியாசம் வேறுபாடுகளின்றி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பது சமூகத்தவர்களின் மதிப்பீடாகும்.
பாடசாலைக் கல்வி பெறுவதற்காக தனது பிள்ளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலுள்ள பெற்றோர்களின் அதீத நம்பிக்கையை வீணடிக்கும் வகையில், சில முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் இச்சைக்கு மாணவர்கள் இரையாகியுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இது வேலியே பயிரை மேய்ந்த கதையாகும். மாத்திரமன்றி பணத்திற்காக வேறு தரப்பினருக்கும் இவ்வாறு மாணவர்களை இரையாக்கிய படுபாதகச் செயல்களில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அதிகம் ஈடுபட்டுள்ளமை கசப்பான உண்மையாகும்.
ஆண் உதவியில்லாத பெண்கள், கணவன் வெளிநாட்டில் தொழில் புரியும் நிலையில் தனியாக வாழும் குடும்பப் பெண்கள், அலுவலகங்கள் மற்றும் அவசர தேவையின் நிமித்தம் பயணிக்கும் பெண்கள், யுவதிகள் என தனியாகப் பயணிக்கும் பெண்களிடமும் இவர்கள் தங்களது சேஷ்டைகள், பாலியல் குற்றங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் கூட்டாக இணைந்து இவ்வாறான பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பெண்களின் தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி இலக்கங்களை பெற்று, பின்னர் தொடர்பினை ஏற்படுத்துதல், இரட்டை அர்த்தத்தில் பேச்சுத் தொடுத்தல், தேவையின்றி அவர்களது வீட்டுக்குச் செல்லுதல் போன்ற தரக்குறைவான செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றமை தெளிவாகும்.
இவ்வாறான சம்பங்களின் போது பொதுமக்கள், சிவில் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் பொலிஸாரிடம் அகப்பட்ட சம்பவங்களும் அதிகம் பதிவாகியுள்ளன.
திருமணம் முடிந்ததும் ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கும் பொறுப்புகள் அனைத்தும் ஆண்களைச் சார்ந்தது. எனவே கணவன் அவர்களின் மனைவிக்கு பிடித்தது போல ஒருசில விடயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரிவுகள் மற்றும் சண்டைகளை தவிர்த்து, எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியும்.
திருமணத்திற்கு பின் ஆண்கள் செய்யக் கூடாதவை
திருமணம் முடிந்த ஆண்கள், வீட்டில் மனைவியுடன் இருக்கும் போது, அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது உங்களுடைய கண்கள் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகமாக பாதிப்பதுடன் உங்கள் மனைவியின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள்.
திருமணம் முடிந்து நம் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை சம்பாதிப்பது தவறில்லை. ஆனால் ஓவர் டைம் என்று கடுமையாக உழைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் மனைவியுடன் அதிக நேரம் இருக்க முடியாமல் போய்விடும்.
பொதுவாக இரவு வேளைகளில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பெருமளவில் உடல் எடை அதிகரிக்க செய்யும். ஏனெனில் எந்தவொரு மனைவியும், தனது கணவனின் உடல் எடை அதிகரிப்பதை விரும்ப மாட்டாள்.
திருமணதிற்கு பிறகு நைட் ஷோ போவதை பெண்கள் விரும்ப மாட்டார்கள். அதிலும் நீங்கள் உங்கள் உடன் பணிபுரியும் நபர்களுடன் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
திருமணம் முடிந்த ஆண்கள் பார்ட்டி என்ற பெயரில் நண்பர்களுடன் சென்று குடித்துவிட்டு இரவு நேரங்களில் வீட்டிற்கு வருவதை பெண்கள் விரும்பமாட்டார்கள், இதனால் குடும்பத்தில் அதிக சண்டை சச்சரவுகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
சம காலத்தில் அனைத்து விடயங்களும் பேஸ்புக் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதை தமது பக்கத்தில் ஸ்டேட்டஸ்ட் ஆக போட்டுவிடுகிறார்கள்.
இதேபோல பல்வேறு நிறுவனங்களும் தமது நிழ்ச்சிகளை பேஸ்புக் ஊடாக தெரிவித்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு பேஸ்புக் நிறுவனம் Facebook Events எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
அதிலும் பயனர் ஒருவர் இருக்கும் இடத்தை ஒட்டி நடக்கும் நிகழ்வுகளை தெரியப்படுத்துவதும் இந்த அப்பிளிக்கேஷனின் மற்றுமொரு சிறப்பியல்பு ஆகும்.
நாள்தோறும் 100 மில்லியன் வரையான பயனர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பில் பேஸ்புக்கின் ஊடாக தகவல்களை பெறுகின்றனர் என்பதனையும் அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இவ் அப்பிளிக்கேஷன் தற்போது iOS சாதனங்களான iPhone, iPad என்பவற்றிற்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ஏனைய மொபைல் சாதனங்களுக்கும் கிடைக்கப்பெறும் என்பதில் எவ்விய ஐயமும் இல்லை.
தமிழாடு தக்கலை அருகே பள்ளி மாணவி ஒருவர் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலையை அடுத்த கீழ மூலச்சல் பகுதியைச் சேர்ந்தவர் குமாரதாஸ். இவரது மகள் ஜெனிபர் (17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய ஜெனிபர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் ஜெனிபரை தேடினர்.
அப்போது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மருந்துகோட்டை மலை பகுதியில் ஜெனிபர் பிணமாக கிடந்தார்.
ஜெனிபர் சுமார் 90 அடி ஆழ பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது பற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜெனிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், ஜெனிபர் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே ஜெனிபர், தனிஷ் என்பவர் ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மகளிர் பொலிசில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தனிஷ்சை அதிரடியாக கைது செய்த பொலிசார், மேலும் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களையும் தேடி வருகிறார்கள்.
யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெற்ற திருமண விழாவொன்று பலரையும் கவர்ந்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த வெள்ளையின இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணைக் கரம் பிடித்துள்ளார்.
இந்த திருமணம் தமிழர் மரபுப்படி நடந்தேறியுள்ளது. தோரணம், மாவிலை, வாழை கட்டி அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மங்கள இசை முழங்க பெற்றோர் பெரியோர் இறை ஆசியுடன் நடைபெற்ற இந்த திருமண வைபவத்தில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து மணமகனின் உறவினர்கள், நண்பர்களும் வருகை தந்திருந்தனர்.
மணமக்கள் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டனர். பட்டு வேட்டு சால்வை தலைப் பாகை அணிந்து நெற்றி நிறைந்த திருநீற்றுடன் மண மேடை யில் மணமகன் காணப்பட்டார். ஹோமம், கன்னிகா தானம், திருமாங்கல்யதாரணம், சப்தததி முதலாய கிரியை களும் இடம்பெற்றன.
தனது காமப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக தனது பிள்ளையையே தாய் பலி கொடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. சத்துணவு கூடத்தில் வேலை பார்க்கும் பெண் வள்ளி.
பிச்சை அவளது கணவர். காய்கறிக் கடை ஒன்றை வைத்திருக்கும் இவர் வீட்டிலிருந்து காலையில் சென்றால் இரவு கடையை பூட்டி விட்டு வீடு திரும்பும் போது இரவு 12 மணி யாகிவிடும்.
மீண்டும் அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு சந்தைக்குப் போய் விடுவார். கணவன் மனைவிக்கிடையே தொடர்பு அதிகம் இல்லாததால் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
இவர்களிருவருக்கும் ஜீவிதா என்கின்ற எல் கேஜி படிக்கும் மகள் இருக்கின்றாள். இந்த சிறுமி மீது தந்தை பிச்சைக்கு அதிக அன்பு செலுத்தி வந்துள்ளார். இந்நிலையிலேயே வள்ளிக்கு அவருடன் ஒன்றாக வேலை பார்க்கின்ற தம்பு என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
வள்ளியை விட 2 வயது குறைவான தம்புவுடனான நட்பு காலப் போக்கில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில் ஒருநாள் இருவரும் வள்ளியின் வீட் டில் யாருமில்லாத சமயம் உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனால் வள்ளி தம்பு மேல் பைத்தியமாகி யுள்ளார்.
தொடர்ச்சியாக இவர்களிருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். திடீரென்று தம்புவிற்கு நிமோனியா காய்ச்சல் வந்ததைத் தொடர்ந்து சுமார் 20 நாட்களுக்கு வள்ளியைப் பார்க்க வரவில்லை.
பிரிவினை தாங்காத வள்ளி அவனைத் தேடிப் போயுள்ளார். பின்னர் காய்ச்சல் சுகமடைந் ததைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து இருவரும் தனிமையில் இருக்க, தம்புவால் பழைய மாதிரி உற்சாகமாக வள்ளியோடு சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
இதை வள்ளியால் தாங்கமுடியவில்லை. தம்புவுக்கு உறவில் விருப் பம் இல்லாததை தெரிவித்துள்ளான். இதனையடுத்து இருவரும் ஒரு சாமியாரிடம் சென்று தம்புக்கு ஏற்பட்ட நிலையினை தெரிவித்துள்ளனர்.
அப்போது குறித்த சாமியார் ஒரு பெண்ணை நர பலி கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார். அதுவும் முதல் பெண் குழந்தையை கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.
உடல் இச்சைக்கு அடிமையான தாய் தனது பெற்ற மகளையே பலி கொடுக்க தயாரானாள். இதை கேட்டு அஞ்சிய தம்பு அப்படி ஒரு சுகம் தேவை இல்லை. இது பாவம் என வள்ளியைத் தடுத்தும் அவள் கேட்கவில்லை.
அடுத்த அமாவாசை அன்று மகளை ஏமாற்றி கூட்டிப் போய் கடப்பா விலுள்ள மந்திரவாதியிடம் ஒப்படைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு வள்ளிச் சென்றுள்ளார்.
கணவன் பிச்சை குழந்தையை தேட வள்ளியும் பஸ் நிலையத்தில் தவறி விட்டாள் என நாடகமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவன் பிச்சை பொலிஸாருக்கு தகவல் கொடுக்க முதல் கட்ட விசாரணையிலேயே வள்ளி மாட்டிக் கொண்டாள்.
இப்போது வள்ளி, தம்பு இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலை யில் குறித்த மந்திரவாதி மாயமாகியுள்ளார்.
ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு டாப்ஸி. அதன் பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாத டாப்ஸி தற்போது பொலிவூட்டில் வேகமாக வளர்ந்து வருகிறார்.
அமிதாப்பச்சனுடன் இவர் நடித்த பிங்க் படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளதால் டாப்ஸிக்கு ஏறுமுகம்தான். தற்போது அவர் நாம் ஷபானா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இது முன்பு வெளிவந்துஹிட்டான பேபி படத்தின் இரண்டாம் பாகம் இது. மனோஸ் பாஜ்பாய், பிருத்விராஜ் நடிக்கிறார்கள். அக் ஷய்குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இதில் டாப்ஸிக்கு எக்ஷன் கெரக்டர். இதற்காக அவர் கிரவ் மஹா என்ற இஸ்ரேலிய தற்காப்புகலையையும், அய்கிடோ என்ற ஜப்பானிய தற்காப்பு கலையையும் கற்று வருகிறார்.
இதற்காக தனி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புகள் ஆரம்பமாகிறது.