ஊளைச் சதையால் அவஸ்தையா : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

fat

ஆண்கள் ஒரே இடத்தில் இருந்துக் கொண்டு தங்களின் பணிகளை செய்வதுடன், பாஸ்ட்புட் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், ஊளைச் சதைகள் ஏற்படுகிறது.

பெண்கள் அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கொள்வது, சத்தான உணவுகளை உட்கொள்ளாமல், பகலில் அதிக நேரம் பகலில் தூங்குவது போன்ற காரணங்களினால் அவர்களுக்கு ஊளைச் சதைகள் ஏற்படுகிறது.

இந்த மாதிரியான ஊளைச் சதைகளை மிகவும் எளிமையான முறையில் குறைப்பது எப்படி என்பதற்கான டிப்ஸ் இதோ..

நாம் தினமும் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக சோம்பு கலந்த தண்ணீரை அருந்தி வந்தால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் நீங்கி, ஊளைச் சதைகள் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கிறது.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நாம் தினமும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து. உடலிற்கு புத்துணர்ச்சி ஒல்லியான உடலமைப்பு கிடைக்கும்.

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தினமும் பப்பாளிக்காயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் மெலிந்து அழகாகக் காணப்படும்.
மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வரலாம். மேலும் அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றையும் பாலில் காய்ச்சி தினமும் குடித்து வந்தால் ஊளைச் சதைகள் குறைந்து, உடல் எடையும் குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 முறைகள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் ஊளைச்சதை போடுவதைத் தடுப்பதற்கு தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் தினமும் குடித்து வரவேண்டும்.

வாழைத்தண்டு சாறு மற்றும் அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வந்தால், ஊளைச்சதை போடுவதைத் தடுக்கலாம். மேலும் இதனுடன் அதிகாலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்தால், உடலும், மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

வந்துவிட்டது 5G : முதன்முறையாக சோதிக்கும் Vodafone!!

vodafone

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு பல்தேசிய தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனமான Vodafone ஆனது முதன் முறையாக 5G வலையமைப்பு தொழில்நுட்பத்தினை பரீட்சிக்கவுள்ளது.

இந் நிறுவனத்தின் அவுஸ்திரேலிய கிளையே இப் பரீட்சிப்பனை மேற்கொள்ளவுள்ள நிலையில் சிட்னியிலுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் நோக்கியா நிறுவனத்தினையும் இணைத்துக் கொண்டு செயற்படவுள்ளது.

தற்போது 4G தொழில்நுட்பமானது உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் கூகுள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் அடுத்த தலைமுறை வலையமைப்பு தொழில்நுட்பமான 5G இனை ஏற்கனவே பரிசீலித்துள்ளன.

எனினும் அந் நிறுவனங்கள் தமது ஆய்வு கூடங்களில் மட்டுமே இந்த பரிசோதனையை மேற்கொண்டிருந்தன.

ஆனால் Vodafone நிறுவனம் தற்போது சேவையில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரங்களின் ஊடாக இப் புதிய தொழில்நுட்பத்தினை பரிசோதனை செய்யவுள்ளது.

இவ் வலையமைப்பானது 4G வலையமைபினை விடவும் 100 மடங்கு வேகத்தில் செயற்படக்கூடியது. அதாவது செக்கனுக்கு 20 ஜிகாபைட் வேகத்தில் தரவுகளை கடத்தவல்லது.

லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீராங்கனையின் பதக்கம் பறிப்பு!!

olympic

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோவின் பதக்கம் பறிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோ பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

ரஷிய வீராங்கனைகள் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு சமீபத்தில் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தாத்யானா லைசென்கோவிடம் அப்போது எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருந்த சிறுநீர் மாதிரி மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் தாத்யானா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராக அழைத்தும் அவர் மறுத்து விட்டார். இதனால் அவரது தங்கப்பதக்கத்தை பறிக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

33 வயதான தாத்யானா லைசென்கோ 2011 மற்றும் 2013-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கியதால் 2007 முதல் 2009-ம் ஆண்டு வரை தாத்யானா போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அவர் 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.

ரஷிய தடகள அணிக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டதால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்ற மகள்களையே விற்ற தந்தை : அதிர வைக்கும் காரணம்!!

sale

மத்தியபிரதேச மாநிலத்தில் வறுமை காரணமாக தந்தையே பெற்ற மகள்களை 20,000 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் பிகார் கிராமத்தைச் சேர்ந்த ராமே என்பவர் ஒரு தினக்கூலி. இவருக்கு நிலையான வேலைவாய்ப்பு இல்லாததால், கிடைக்கும் வேலையை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது மனைவி மரணமடைந்துள்ளார்.

இதனால் மூன்று குழந்தைகளையும் பராமரிக்க முடியாமல், ராமே கடுமையாக சிரமப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக உள்ளூரில் ஒரு குடும்பத்தினரிடம் வேலை பார்த்த ராமே, முறையே ஆறு மற்றும் 13 வயதாகும் தனது இரண்டு மகள்களையும் அங்குள்ள இருவேறு குழுக்களிடம் தலா 10,000 ரூபாய்க்காக விற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய மகனையும் தான் வேலைபார்க்கும் இடத்திலேயே விட்டுச் சென்ற ராமே, தீடீரென தலைமறைவாகிவிட்டார்.

இது குறித்து தகவலறிந்த உள்ளூர் காவல்துறையினர், தலைமறைவான ராமேவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய பூசணிக்காய்!!

1

பெல்­ஜி­யத்தில் 1,190.5 கிலோ­கிராம் (2623 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய பூசணிக்காய் அறுவடை செய்யப்­பட்­டுள்­ளது. உலகில் இது­வரை அறு­வடை செய்­யப்­பட்ட மிகப் பெரிய பூசணிக்காய் இது எனக் கருதப்­ப­டு­கி­றது.

ஜேர்­ம­னியில் நடை­பெற்ற பிர­மாண்ட பூசணிக்காய் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் சுமார் 1000 கிலோகிராம் எடை­யுள்ள பல பூசணிக்­காய்கள் காட்­சிப்­
ப­டுத்­தப்­பட்­டன.

பெல்­ஜி­யத்தைச் சேர்ந்த சேர்ந்த மெத்­தாயஸ் வில்­லேமிஜ்ன்ஸ் என்­பவர் 1990.5 கிலோ­கிராம் எடை­யுள்ள பூசணிக்­காயை காட்­சிப்­ப­டுத்­தினார். இப் பூசணிக்காய் மேற்­படி போட்­டியில் முத­லிடம் பெற்­றது.
அதே­வேளை, இது எடை அடிப்­ப­டையில் உலக சாத­னைக்­கு­ரிய பூசணிக்­ கா­யா­கவும் விளங்­கு­கி­றது.

சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த பெனி மேய்யர் என்­பவர் அறு­வடை செய்த 2323 இறாத்தல் (சுமார் 1053 கிலோ­கிராம்) எடை­யுள்ள பூசணிக்­காயே மிக அதிக எடை­யுள்ள பூசணிக்­கா­யாக இறு­தி­யாக கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

A girl plays on a giant pumpkin at the Giant Pumpkins European Championship in Ludwigsburg, southwestern Germany, on October 9, 2016.  / AFP PHOTO / THOMAS KIENZLE

3

வவுனியா ஒமந்தையினை வந்தடைந்த மகேல ஜெயவர்த்தனவின் நடை பவனி!!

 
தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது. இன்று காலை 5.30 மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி இன்று (13.10.2016) காலை 7.30 மணியளவில் ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் பண்ட் வாத்திய இசையுடன் ஒமந்தை மத்திய கல்லூரியினை வந்தடைந்தது.

இப் பேரணி 9.00 மணியளவில் வவுனியா நகரை வந்தடையும் என ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சுமார் 5 மில்லியன் நிதியினை திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து தெற்கிற்கு 28 தினங்களாக பயணிக்கவுள்ள இந்த நடைபவனி கடந்த (06.10.2016 )வியாழக்கிழமை யாழ். பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கபட்டிருந்தது

ஒரு நாளில் சுமார் 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ள இவ் நடைபவனியானது பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம், மாங்குளம், வவுனியா மதவாச்சி,கல்முனை, குருணாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணாந்துறை மற்றும் சீனிகம போன்ற நகரங்களை கடக்கவுள்ளது.

இன்று காலை வவுனியா ஒமந்தையை வந்தடைந்த இந்த நடை பவனியை பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள் எனப்பல்வேறு தரப்பினரும் வரவேற்று தங்களாலான நன்கொடைகளை வழங்கியதோடு நடை பவனியில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு மற்றும் பழங்களையும் வழங்கியிருந்தனர் .

நாளைய தினம் இந்த நடை பவனி மதவாச்சி பயணிக்கவுள்ளது.

1 dsc_0005 dsc_0007 dsc_0008 dsc_0010 dsc_0011 dsc_0014 dsc_0020 dsc_0021 dsc_0022 dsc_0023 dsc_0024 dsc_0025 dsc_0026 dsc_0028 dsc_0029 dsc_0030 dsc_0031 dsc_0032 dsc_0033 dsc_0034 dsc_0035 dsc_0036 dsc_0037 dsc_0038 dsc_0039 dsc_0040 dsc_0042 dsc_0043 dsc_0044 dsc_0045 dsc_0046 dsc_0047 dsc_0049 dsc_0050 dsc_0051 dsc_0058 dsc_0063 dsc_0064 dsc_0065 dsc_0066 dsc_0068 dsc_0070 dsc_0071 dsc_0072 dsc_0074 dsc_0075 dsc_0076 dsc_0078 dsc_0079 dsc_0081 dsc_0082 dsc_0083 dsc_0084

காதலி மீது சந்தேகம் : உளவு பார்ப்பதற்காக புர்கா அணிந்த பெண் போன்று நடமாடிய காதலன்!!

faceveil

கம்­பஹா பிர­தே­சத்தில் தனது காத­லியை உளவு பார்ப்­ப­தற்­காக பெண் வேடம் தரித்து நட­மா­டிய நபரொ­ருவர் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதன் பின்னர் கடும் எச்­ச­ரிக்கை மத்­தியில் விடுவிக்கப்பட்­டுள்ளார்.

இந்­நபர் நீண்­ட­கா­ல­மாக பெண் ஒரு­வரை காத­லித்து வந்த நிலையில் சில கால­மாக அப்­பெண்­ணுக்கு வேறொரு காதலன் இருப்­ப­தாக சந்­தேகம் கொண்டு அவரை உளவு பார்ப்­ப­தற்­கென புர்கா அணிந்து பெண்­களை போன்று கவுனும் அணிந்து அவரை பின்­தொ­டர நினைத்து கம்­பஹா ரயில் நிலை­யத்தில் அமர்ந்­தி­ருந்­துள்ளார்.

இவர் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா அணிந்த போதிலும் கண்கள் இரண்டும் வெளியில் தெரியும் வகையில் அதனை அணிந்­துள்ளார்.

வழ­மை­யான பெண்­க­ளுக்கு போன்­றல்­லாது இவ­ருக்கு சற்று பெரிய புரு­வங்கள் காணப்பட்டமையினால் சந்­தேகம் கொண்ட சிலர் அந்­ந­ப­ருக்கு அருகில் சென்று சோத­னை­யிட்ட போது அவர் ஒரு ஆண் என தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து இந்­நபர் ரயில் நிலை­யத்தில் இருந்­த­வர்­களால் பிடிக்­கப்­பட்டு கம்­பஹா பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

பொலிஸார் விசா­ர­ணைகள் மேற்­கொண்ட போது தனது காத­லியை உளவு பார்ப்­ப­தற்­காக இவ்­வாறு பெண் வேடம் அணிந்­த­தாக அவர் ஒப்புக் கொண்­டுள்ளார்.

அதன்­பின்னர் அவரை பொலிஸார் கடு­மை­யாக எச்சரித்ததுடன் அவரது பெண்ணாடையையும் திருப்பிக் கொடுத்து விடுதலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சாமி இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவை ஓரங்கட்டிய ராகுல் ப்ரீத் சிங்!!

trisha_preetsingh

ஹரி இயக்கவுள்ள சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான சாமி படம் ஹிட்டானது. 13 ஆண்டுகள் கழித்து சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்துள்ளார்.

சாமி படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனாலும், அதில் நடித்த விக்ரமும் த்ரிஷாவும் இன்னும் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இதனால் இரண்டாம் பாகத்திலும் இவர்களே ஜோடி சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சாமி – 2 படத்தில் த்ரிஷாவுக்கு முக்கிய கதாப்பாத்திரத்தைக் கொடுத்துவிட்டு டோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ராகுல் ப்ரீத் சிங்கை விக்ரமுக்கு ஜோடியாக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஹரி.

ராகுல் ப்ரீத் சிங் விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஏ.ஆர். முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

கோர விபத்தில் இருவர் பலி, ஏழு பேர் படுகாயம்!!

 
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 06.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மரக்கறி தோட்டமொன்றுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் நுவரெலியாவுக்கு திரும்பி சென்ற வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1 2 4 5

5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா? உலகை அசத்தியுள்ள கண்டுபிடிப்பு!!(காணொளி)

oetzi_the_iceman_rekonstruktion_1-copy

இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் அல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19ம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல் ஆகும்.

இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அந்த உடல் 90% சதவிகிதம் அப்படியே இருந்ததுதான். அதுமட்டுமல்ல அந்த மனிதன் பயன்படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான்.

கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இறந்து கிடந்ததால் இப்படி அச்சு குலையாமல் அந்த உடல் கிடைத்துள்ளது.

இந்த மம்மி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்த இடத்தை ‘ஊட்ஸல் அல்ப்ஸ்’ என்று அழைப்பார்கள். அதைக் காரணமாக வைத்து அந்த மம்மி மனிதனுக்கும் ‘ஊட்சி’ என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர்.

தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது என்ன தெரியுமா? சிவப்பு மானின் இறைச்சி.

அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்ததையும், அவருக்கு பல்வேறு எலும்புப்பிரச்சினைகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பினால் இறந்ததையும், அப்போது அவருக்கு வயது 45 என்பதையுமே கண்டுபிடித்துவிட்டார்கள்.

இதைவிட கூடுதல் தகவல் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர் மனவேதனையுடன் இருந்ததையும் விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

கணனி மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப்போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.

இதையெல்லாம் கண்டு பிடித்துள்ள விஞ்ஞானிகள் மற்றொன்றையும் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தொடர்ச்சியான முயற்சியால் ஊட்சியின் குரல் தடத்தை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பனி மனிதனின் குரலின் மூலம் உலகின் எந்த மொழியையைம் பேச வைக்க முடியும் என்கின்றனர் அழுத்தமாக.

பல்வேறு ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஓடியோவினை உருவாக்கி விட்டனர். அதாவது ஊட்சி குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என ஒரு டெமோ ரெடி.. அது நம் தமிழைப் போன்றே ஒலிக்கிறது.

“ஆ, ஈ, உ ஊ” ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கும் போது தான் நமது நுரையிரலும் குரல்வளையும் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது. அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது. அப்படி இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஓடியோ வெளியாகியுள்ளது.

oetzi_the_iceman_rekonstruktion_1 otzi otzi2

வவுனியாவில் வீதிப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு!!

 
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிபோக்குவரத்துச் செயற்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் இன்று (12.10.2016) காலை சிந்தாமணிபிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் வீதி விபத்துக்கள் ஏற்படும் விதம் குறித்த வீதி நாடகமும் இடம்பெற்றது.

வவுனியா நகர பாடசாலை மாணவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவர்கள் இதில் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியா போக்குவரத்துப் பொலிசார் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் இதனை பார்வையிட வந்திருந்தனர்.

 1 img_1282 img_1283 img_1285 img_1286img_1287 img_1289 img_1292img_1293 img_1296 img_1300img_1303 img_1309 img_1317img_1319 img_1327 img_1331

நடுக்கடலில் தெரிந்த பேய்க் கப்பல்!!(வீடியோ)

gost

கடலின் நடுவில் ஒரு மாயமான கப்பல் போன்ற உருவம் தோன்றியதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா நாட்டை சேர்ந்த இளைஞர் Jason Asselin. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வடக்கு அமெரிக்காவில் உள்ள சுப்பீரியர் ஆற்றுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

வீடியோ படமெடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட Jason தனது கமெராவில் கடலின் அழகை படமெடுத்த படியே வந்துள்ளார். அப்போது கடலில் ஒரு மங்கலான உருவம் கப்பல் போன்ற தோற்றத்தில் செங்குத்தாக அவருக்கு தெரிந்துள்ளது.

அதை வீடியோவாக பதிவேற்றி அவர் சமூக வலைதளங்களில் விட்டுள்ளார். அதை பார்த்த ஒருவர் கூறுகையில், அந்த கடலை சுற்றி மலை குன்றுகள் உள்ளது அதை தான் அவர் மாய கப்பல் என சொல்கிறார் என கூறியுள்ளார்.

இன்னொருவர் கூறுகையில், அங்கே கிரேனைட் ஐலேண்ட் லைட் அவுஸ் உள்ளது அது தான் அவர்களுக்கு கப்பல் போல தெரிந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், Jason Asselin சமூகவலைதளமான யூ-டீயூபில் பதிவேற்றியுள்ள இந்த வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் 16 வயதுச் சிறுவன் 24 கசிப்புப் போத்தல்களுடன் கைது!!

kasippu

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் 24 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவனை சான்று பெற்ற பாடசாலையில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 24 போத்தல் கசிப்பினை உடமையில் வைத்திருந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனை நேற்று தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த சிறுவன் தான் கசிப்பு வைத்திருந்ததை நீதிமன்றில் ஏற்றுக்கொண்ட நிலையில் இது தொடர்பான தீர்ப்பிற்காக எதிர்வரும் 3ஆம்திகதி தவணையிடப்பட்டதுடன் அச்சுவேலியில் அமைந்துள்ள சான்று பெற்ற பாடசாலையில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் தலைமையில்01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது.

பதினோராம் நாளான நேற்று (11.10.2016)  விஜயதசமி தினமான  நேற்று  வித்தியாரம்பம் என்று  சொல்லபடுகின்ற ஏடு தொடக்கல்  நிகழ்வும் மாலையில்  மானம்பூ அல்லது மகிடாசூர சம்காரமும்   இடம்பெற்றது.

படங்கள்: பிரபாகரகுருக்கள்

14440793_1324867634231210_2248104696817250033_n 14463252_1324867167564590_1958172180545499870_n 14469673_1324867327564574_3396827791303095846_n 14517345_1336594639725176_2716464495671888771_n 14523120_1324869027564404_4709033955930712499_n 14523171_1336593269725313_160033807175621456_n 14523292_1336592479725392_672426076751141765_n 14567465_1336594326391874_8451297298021528907_o 14570469_1336593303058643_3097402653915026393_n 14581365_1336592249725415_2670798245666051872_n 14595667_1336592959725344_876828809055172713_n 14633687_1336593169725323_1762338686650039998_o 14639650_1338315416219765_1779876020353723390_n 14695465_1767897060131795_8887988711875089937_n 14705650_1338315512886422_5521861534604474271_n

இலங்கையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!!

train

இலங்கை போக்குவரத்து துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக மேல் மாகாணம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் இந்த மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வருடம் மே மாதமளவில் இந்த பணிகள் நிறைவடைந்ததும், அடுத்த கட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடுகளுக்கான ஆரம்பகட்ட நிதி உதவியாக ஒரு மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திட்டத்தை நிறைவு செய்வதற்கு 300 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.

பாடகர் SB பாலசுப்ரமணியம் வருகையால் யாழ். மாநகரசபைக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

spb

தென்னிந்திய பிரபல பாடகர் பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தென்னிந்திய கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் ஆகியோரின் யாழ். வருகையின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

மேற்படி மாநகரப் பிரதேசத்திற்குள் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு வரியாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தினை பயன்படுத்தியதற்கான 3 நாட்களிற்கான வாடகை நாள் ஒன்றிற்கு 11 ஆயிரம் ரூபா வீதம் 33 ஆயிரம் ரூபாவும் இதற்கான 13 வீத வரிப்பணமும் மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்றது.

இதன் பிரகாரம் யாழில் இடம்பெற்ற நிகழ்வினால் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா அளவிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. எனவும் சுட்டிக்காட்டினார்.