காதலை புறக்கணித்த காதலியை வீடு புகுந்து கடத்திச் சென்ற காதலன்!!

kidnap11

காதலியின் வீட்டுக்கு சென்று அவரது தாயை கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணை கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று அனுராதபுரம் மிஹிந்தலையில் நடந்துள்ளது.

இதையடுத்து திவியாபெந்தவெவ காட்டில் கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை மறைத்து வைத்திருந்த காதலன் மற்றும் அவரது நண்பனை மிஹிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட 17 வயதான யுவதியின் தாய் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 4 இளைஞர்களுடன் யுவதியின் வீட்டுக்குச் சென்ற பிரதான சந்தேகநபர் யுவதியை கடத்திச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரும் யுவதியும் கடந்த 5 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் தொடர்பை யுவதியின் பெற்றோர் விரும்பாத காரணத்தினால், யுவதி காதலை இடையில் நிறுத்திக்கொள்வோம் என யுவதி சந்தேகநபரிடம் கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த சந்தேகநபரான காதலன் சில முறை யுவதியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக யோசனை முன்வைத்துள்ளார்.

இதனை காதலி விரும்பவில்லை என்பதால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் கடந்த 10ஆம் திகதி அதிகாலை 1.30 அளவில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு யுவதியின் வீட்டின் முன் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, காதலியின் தாயின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய போவதாக மிரட்டி, அறையில் தூங்கிக்கொண்டிருந்த காதலியை இரவு அணியும் ஆடையுடன் அப்படியே கடத்திச் சென்றுள்ளார்.

யுவதியை கட்டுப் பகுதிக்கு கடத்திச் செல்லும் போது சந்தேக நபர் அவரது கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். கத்தி, கழுத்தில் பட்டு யுவதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர் யுவதியை பலவந்தமhக தரையில் இழுத்துச் சென்றதால், யுவதியின் வயிறு, கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் சந்தேகநபர் யுவதிக்கு பாலியல் ரீதியான எந்த தொந்தரவையும் கொடுக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டோனியின் மனைவி செய்த மோசடி?

dhoni

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனியின் மனைவி சாக்சி, அருண் பாண்டே, சுபாவதிபாண்டே மற்றும் பிரதிமா பாண்டே ஆகியோர் ரிதி எம்.எஸ்.டி. அலமோடே பிரைவேட் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர். இவர்கள் மீது குருகிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் அரோரா என்பவர் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில், தனது தந்தை விகாஸ், தன்னிடம் இருந்த ஸ்போர்ட்ஸ்பிட் வேர்ல்டு நிறுவனத்தின் 39 சதவீத பங்குகளை ரிதி எம்.எஸ்.டி. அலமோடே பிரைவேட் நிறுவன இயக்குனர்களிடம் விற்பதற்கு ரூ.11 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாகவும், இதில் 2.25 கோடி மட்டுமே கொடுத்து விட்டு மீதி தொகையை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி, சாக்சி உள்ளிட்ட 4 பேர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், சாக்சி தங்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறி ஓராண்டுக்கும் மேலாக ஆகிவிட்ட நிலையில் அவர் மீது இப்போது எப்படி எப்ஐஆர் பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் வழக்கு பதிவு செய்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

உலகத்திலுள்ள மிக பழமையான கார்களிலொன்று யாழ்ப்பாணத்தில்!!

c1

உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது.

இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் இருந்திருந்தனர்.

அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும் வேட்டைக்கு செல்லவும் இக் காரையே பயன்படுத்தியிருக்கிறார்.

குறித்த நபர் இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்துவரும் கார் விற்பனை நிறுவனமொன்றின் ஊடாக இலங்கை பெறுமதி 3300 ரூபாவிற்கு 1931ஆம் ஆண்டு கொள்வனவு செய்துள்ளார்.

இதன் விலையை ஞாபகப்படுத்தும் வகையிலேயே இக் காரிற்கு இவர் 3300 என்ற இலக்கத் தகட்டையும் வைத்துள்ளார்.

இதன்பின்னர் அவர் இறந்துபோகவே யாழ்.குடாநாட்டில் பெயர்போன கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வன் (கப்பிரெக்ஸ் ரவி) என்பவருக்கு 1994 ஆம் ஆண்டு 2 அரை இலட்சத்திற்கு அக் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன்பின்னர் இக் காரை இன்றுவரை அவரே வைத்துள்ளார். தற்போது இக்காரை வைத்துள்ள குமாரசாமி ரவிச்செல்வன் கருத்து தெரிவிக்கும் போது,

இது நீண்ட பராம்பரியம் மிக்க கார். இதனை பண்ணையர் வைத்திருக்கும் போது எங்களுக்கு பத்து வயதிருக்கும். பண்ணையர் யாழ்ப்பாணத்தில் தினகரன் விழா நடக்கும் போது அங்கு இடம்பெறும் கார் போட்டியில் இக் காரே முதலிடம் பெறும். அப்போதிருந்தே எனக்கு இந்த காரில் பிரியம் ஏற்பட்டது.

அதன்பின்னர் பண்ணையர் இறந்துபோக இக் காரை நான் ஆசைப்பட்ட பிரகாரமே எனக்கு விற்றுவிட்டனர். அதன்பின்னர் இக் காரை என்னிடம் கொழும்பில் இருந்து கூட வந்து 45இலட்சம் வரை விலைக்கு கேட்டிருந்தனர். ஆனால் நான் விற்காமல் வைத்துள்ளேன்.

இக் காரில் முன்னால் உள்ள விளக்கின் மேல் சிவப்பு கல்லொன்று உள்ளது. இது கார் ஒடும்போது விளக்கு ஒளிர்கின்றதா? இல்லையா? என்பது சாரதி ஆசனத்தில் இருந்தவாறே இதனூடாக பார்க்க முடியும்.

தற்போது இக் காருக்கு தேவையான பாகங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு இலண்டனில் இருந்து வாங்கி வந்து வைத்துள்ளேன் என்றார்.

அத்துடன் இலங்கையில் “A” எழுத்திலுள்ள ஒரேயொரு காரும் இதுவேயாகும். இக் காரை இறக்குமதி செய்த நிறுவனம் தற்போதும் கொழும்பில் அதே முகவரியில் உள்ளது அவர்கள் இறக்குமதி செய்த காரும் என்னிடமுள்ளது என்றார்.

தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள இக் கார் இலங்கையிலே “A ” எழுத்திலுள்ள ஒரேயொரு கார் என நம்பப்படுகின்றது. குறித்த காரை நல்லூர் ஆலய நிர்வாகத்தினர், இராணுவத் தளபதிகள் உட்பட பலர் 45 இலட்சம் ரூபா வரையில் கேட்டும் அதனை விற்காமல் அதன் உரிமையாளர் வைத்துள்ளார்.

செல்பி மோகத்தால் உயிரிழந்த சீனப் பெண்ணின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!!

selfi

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலி – அம்பலாங்கொட பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சீனப் (25) பெண் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பெண்ணின் சடலம் அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தில் சீனப் பெண்ணின் இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், புகையிரத மிதி பலகையில் நின்றுக் கொண்டு செல்பி எடுத்த காரணத்தினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சீனப் பெண் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வேளையில், புகையிரதம் அம்பலாங்கொட மாதம்பை நிலையத்தை அடைந்ததை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பூமியில் மோதப்போகும் விண்கல்!!

stone

சூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவிஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.

ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. எனவே பூமிக்கு பெரிய ஆபத்து ஏற்டுவதில்லை.

இந்த நிலையில் விண்ணில் சுற்றிவரும் மற்றொரு விண்கல் மூலம் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2009-இ.எஸ். என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் சூரிய மண்டலத்துக்குள் சுற்றி வருகிறது.

15 கிலோ மீட்டர் அகலத்தில் இந்த கல் உள்ளது. அது சுற்றுப்பாதை சிறிது, சிறிதாக மாறி பூமியின் வட்டபாதைக்குள் வரும் என்றும், அப்போது அது பூமியில் மோதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் மோதும்போது அது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தும். இதனால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த விண்கல் எப்போது மோதும் என்று சரியாக கணக்கிட முடியவில்லை. சில ஆண்டுகளில் இந்த மோதல் நடக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வவுனியா பொதுவைத்தியசாலையில் விபத்தில் மரணித்த வைத்தியருக்கு அஞ்சலி!!

 
வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் அவரது பெறாமகளும் கடந்த 11.10.2016 அன்று மாகோவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று வவுனியாவிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது.

வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், தாதிய பயிற்சியாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியதுடன் வைத்தியரின் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.

dsc_0111 dsc_0112 dsc_0113 dsc_0114 dsc_0115 dsc_0119 dsc_0120 dsc_0121 dsc_0122 dsc_0123 dsc_0127 dsc_0128 dsc_0129 dsc_0130 dsc_0131 dsc_0133

வவுனியா நகரை வந்தடைந்த மகேல ஜெயவர்த்தன : மாணவர்கள் உட்பட மக்கள் அலையென திரண்டு வரவேற்பு!!

 
தெற்கில் புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று காலை 5.30 மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி இன்று (13.10.2016) காலை 9.50 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்த பேரணியானது. வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நிறைவடைந்தது.

இப் பேரணியில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், மற்றும் சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சத்தியசீலன், வவுனியா வர்த்தகர்கள், அரசஉத்தியோகத்தர்கள், மாணவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புற்றுநோய் சிச்சைப் பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இது வரை 189 கிலோமீற்றர் தூரம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளையதினம் இந்த நடைபவனி மதவாச்சி நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0001 dsc_0002 dsc_0003 dsc_0005 dsc_0006 dsc_0010 dsc_0012 dsc_0022 dsc_0023 dsc_0024 dsc_0027 dsc_0034 dsc_0036 dsc_0037 dsc_0038 dsc_0040 dsc_0044 dsc_0045 dsc_0048 dsc_0052 dsc_0053 dsc_0055 dsc_0056 dsc_0058 dsc_0061 dsc_0063 dsc_0067 dsc_0068 dsc_0069 dsc_0072 dsc_0077 dsc_0079 dsc_0083 dsc_0084 dsc_0085 dsc_0086 dsc_0087 dsc_0095 dsc_0096 dsc_0100 dsc_0101 dsc_0103

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள்.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது.

பதினோராம் நாளான நேற்றுமுன்தினம்  (11.10.2016)  விஜயதசமியின்போது   மாலையில்  மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும்  இடம்பெற்றது.

14611049_1135974473177152_880967914447653283_n 14641951_1135978433176756_4177596541562233077_n 14642364_1135974326510500_7088821351482238544_n 14656433_1135978459843420_6732481846032877606_n 14666231_1135974179843848_4265585901915877652_n 14681640_1135978339843432_5656793716128141165_n 14708236_1135978579843408_3282348227223754475_n 14725483_1135978726510060_656645448628086755_n

வவுனியா சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தில் இம்முறை ஐந்து மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி!(படங்கள்)

வவுனியா வடக்கு கல்வி வலயத்துகுட்பட்ட நெடுங்கேணி கோட்டத்துக்குள்  அமைந்துள்ள செநிபுளவு உமையாள்  வித்தியாலயத்தில் இம்முறை  05   மாணவர்கள்  புலமை  பரிசில் பரீட்சையில்   சித்தியடைந்துள்ளனர். இம்முறை 31  மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

மேற்படி பாடசாலையில்

ஜே .செந்தீபன்  180 புள்ளிகள்

யோ. திலக்சன்  158 புள்ளிகள்

கோ.யதுர்ஷன்   156 புள்ளிகள்

அ. சேரிக்கா   155 புள்ளிகள்

க. மயூரி  152 புள்ளிகள்

ஆகியோர்  சிறந்த பேறுகளை பெற்று இம்முறை பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்படி  சித்தியடைந்த  மாணவர்களையும்   பரீட்சைக்கு  தயார் படுத்திய ஆசிரியர்கள் அதிபர் ஆகியோரையும்  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்  க. பரந்தாமன் அவர்கள்  நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

14543963_338897639795401_369498761631380163_o 14589834_338901553128343_163165605781658384_o

தப்பிச்சென்ற 80,000 மீன்களை பிடிக்கக் கோரிக்கை!!

fish

டென்மார்க்கில் உள்ள தூண்டில் மீனவர்கள், சுற்றுச்சூழல் சோகமாகக் கருதப்படும் நிகழ்வு ஒன்றை தவிர்க்க, தங்கள் தூண்டில்களில் மீன்களை கவரும் பூச்சிகளை ஏற்றி, தப்பிச் சென்ற வானவில் ட்ரவுட் வகை மீன்களைப் பிடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

ஜட்லாந்து தீபகற்பத்தில் உள்ள மீன் பண்ணை ஒன்றின் மீது சரக்கு கப்பல் மோதியதில், கடலுக்குள் தப்பி சென்றதாக மதிப்பிடப்பட்ட 80 ஆயிரம் வானவில் ட்ரவுட் வகை மீன்களை, பிடித்து ஒரு வகை மீன்களால் மற்றொரு மீன் இனத்திற்கு ஏற்பட இருக்கும் சாத்தியமான பேரழிவை தடுக்க அவர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று கிலோ கிராம் எடை கொண்ட அந்த வானவில் ட்ரவுட் மீன்கள் , அவைகளுக்குப் பிடித்த உணவான கடல் ட்ரவுட் மீன்களின் முட்டைகளை, தின்றுவிடும் என அஞ்சப்படுகிறது.

வருடத்தின் இந்த காலங்களில் கடல் ட்ரவுட் மீன்கள் முட்டையிடுவதற்காக நதியை நோக்கி செல்லும்.

வானவில் ட்ரவுட் மீன்கள், முட்டையிட இருக்கும் கடல் ட்ரவுட் மீன்களின் வால்களை பின் தொடர்ந்து அவற்றின் முட்டைகளை தின்று விடும் என சுற்றுச் சூழல் ஆர்வலரும் மீன் பிடிப்பவருமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறந்த மனைவியின் உடலுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த கணவன்!!

old-man

டெல்லியில் இறந்த மனைவி உடலுடன் முதியவர் 4 நாட்கள் வீட்டில் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி என்ற இடத்தை சேர்ந்தவர் கோவிந்தராம் ஜதானி (வயது 90). இவரது மனைவி கோபிஜதானி (85). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

கோவிந்தராம் ஜதானி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். கணவன் – மனைவி இருவரும் அந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வந்தனர். அவர்களுக்கு உதவியாக யாரும் இல்லை.

கோவிந்தராம் ஜதானிக்கு 90 வயது ஆகிவிட்டதால் முதுமை காரணமாக அவரது மனநிலை சற்று பாதிக்கப்பட்டிருந்தது. அவரை மனைவி கோபிஜதானி கவனித்துக்கொண்டார்.

கோபிஜதானி முதுமை காரணமாக உடல்நலம் இல்லாமல் இறந்துவிட்டார். அவர் இறந்ததை கோவிந்தராம் ஜதானியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவர் மனைவி உடல் இருந்த வீட்டிலேயே 4 நாட்களாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கோபிஜதானி உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தான் அவர் இறந்திருப்பது தெரியவந்தது. பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் அங்கு வந்து பிணத்தை அப்புறப்படுத்தினார்கள். கோவிந்தராம் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் பலி!!

bike

பதுளை – மஹியங்கனை வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் விரைவில் மின்சார தடை ஏற்படும் அபாயம்!!

power-cut

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படக் கூடும் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வரட்சியான காலநிலையே இதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு மழை கிடைக்காமையினால் நீர்மட்டங்கள் விரைவாக குறைவடைந்து வருகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும் என பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் மக்களை நெருக்கடிக்குள் சிக்க வைக்காமல் முடிந்த வரையில் மின்சாரம் வழங்குவதற்கு மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார நெருக்கடி ஏற்பட்டாலும் இல்லை என்றாலும் முடிந்த அளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை அடுத்து வரும் சில நாட்களில் வறட்சியான காலநிலை விலகி, மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சூரிய ஒளியில் பனாட்டு உலர்த்தும் நவீன பொறி யாழில் அறிமுகம்!!

11

பனங்களியிலிருந்து பெறப்படும் பனாட்டுக்களை இலகுவான முறையில் உலரவிட்டுப் பயனடையும் நோக்குடன் சூரிய ஒளியில் பனாட்டு உலர்த்தும் நவீன பொறியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.

இலங்கையிலேயே முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் இந்தப் பொறி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் மாலினி குமாரி ரணதுங்கவினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பொறியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் மாலினி குமாரி ரணதுங்க கலந்து கொண்டு பனாட்டு உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பான செயன்முறை விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பி.பன்னீர்ச் செல்வம், பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் முகாமையாளர் ஸ்ரீ விஜேந்திரன் மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், வடமாகாணத்தில் பனை அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் முகாமையாளர் ஸ்ரீ விஜேந்திரன் குறித்த நவீன பொறி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

பனாட்டு பாரம்பரிய உற்பத்தி முறையில் காயவைக்கும் போது தரமான உற்பத்திகளைப் பெறுவது கடினமாகவிருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தப் பொறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த காலப் பகுதியில் தரமான, ஏற்றுமதிக்கு உகந்த பனாட்டுகளை இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.

பனம் பழங்களிலிருந்து பனாட்டுக்களை உற்பத்தி செய்கின்ற பிரதேசங்களில் இந்த இயந்திரத்தை அறிமுகம் செய்வதன் மூலம் பனாட்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என நம்புகின்றோம் என்றார்.

பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பி. பன்னீர்ச் செல்வம் கருத்துத் தெரிவிக்கையில், இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பொறி மூலம் குறைந்த நேரத்தில் விரைவாகப் பனாட்டு உற்பத்தியைப் பெறுவதுடன், சுகாதாரம் அதிகமாகப் பேணப்படும்.

மூன்று நாட்களில் பத்துக் கிலோ பனாட்டுக்களை இந்த இயந்திரம் மூலம் உற்பத்தி செய்ய முடியும். குறித்த இயந்திரத்தில் உணவுத் தரத்திற்கேற்ப ஐந்து தட்டுக்கள் காணப்படுகின்றன.

ஒரு தட்டில் சுமார் இரண்டு கிலோ நிறையுள்ள பனம் களியை ஊற்ற முடியும். பனாட்டு உற்பத்தி மாத்திரமன்றி பனம் கிழங்குகள் உற்பத்தி செய்யப்படும் காலப் பகுதியில் சுகாதாரமான முறையில் இந்தப் பொறி மூலம் காயவிட்டுப் பயன் பெற முடியும்.

இந்தப் பொறிக்கு மேற்காவுகை மூலம் வெப்பம் வரும் எனவும் தெரிவித்தார். இதேவேளை, கடந்த 2009ஆம் ஆண்டு கைதடி பனை ஆராய்ச்சி நிறுவனத்தில் பனம் பழத்திலிருந்து பனம் களியை பிரித்தெடுக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இயந்திரம் தற்போது வடகிழக்கு மாகாணங்களிலுள்ள பல பனம் களி உற்பத்தி நிலையங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் நவீனரக பனை மரம் ஏறும் கருவி அண்மையில் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

யப்பான் தொழில் நுட்பத்துடன் யப்பான் நாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்தக் கருவி யாழ்ப்பாணத்தில் பரீட்சார்த்தத்திற்கு விடப்பட்டுள்ள நிலையில் பரீட்சார்த்தம் வெற்றியளித்துள்ளதாக பனை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

12 13

ஜனாதிபதி என்னை ஏமாற்றிவிட்டார் : காணாமல்போன மாணவியின் தாய் கதறல்!!

vav

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

அவர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் பல இடங்களில் பிள்ளைகளைத் தேடித் திரிகின்றனர்.

ஜனாதிபதியைச் சந்தித்து நான் எனது மகள் தொடர்பான தகவல்களைக் கூறிய சந்தர்ப்பத்தில் ஒரு மாதத்திற்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என வவுனியாவைச் சேர்ந்த ஜெயவனிதா என்ற தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

மருதானையில் அமைந்துள்ள சீ.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பட்டதாரிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தொழில் வாய்ப்பு : பிரதமர்!!

phd

பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் பட்டதாரிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து வெளியேறும் அனைத்து பட்டதாரிகளுக்கும் கட்டாயம் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

பட்டக் கல்வியை பூர்த்தி செய்ததன் பின்னர் அவர்கள் தொழில் இன்றி வீட்டில் இருக்கும் காலம் ஆறு மாதங்களுக்கு வரையறுக்கப்பட வேண்டும்.

இதன்படி, அரசாங்கத்தில் காணப்படும் சகல வெற்றிடங்களுக்கும் பட்டதாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதற்காக விசேட திட்டமொன்று எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.

பட்டதாரிகள் ஏதேனும் ஓர் தொழில் துறையில் பணியாளர்களாக உள்ளீர்க்கப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.