முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நாளை அறிவுத் திருக்கோவில் திறப்பு !

உலக சமுதாய சேவா சங்கத்தின் அறிவுத்திருக்கோவில் முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மனவளக்கலையினை அறிமுகம் செய்து வரும் மனவளக்கலை மன்றம் யாழ் பிறவுன் வீதியில் இந்தக் கோவிலைத் திறந்து வைக்கின்றது. திறப்பு விழா வைபவத்தில், தமிழகத்தில் இருந்து பெருமளவான அறிஞர் பெருமக்கள் கலந்துகொள்கின்றனர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்கே.எம்.மயிலாநந்தம் தலைமையில் மனவளக்கலை அறிஞர்கள் வருகை தரவிருப்பதுடன்,சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெறவிருக்கிறது

நிகழ்வுகள்

  • திறப்பு விழா மங்கலம்October 15, 2016 at 7:00 am – 8:00 amயாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறகட்டளை இல-81 பிரவுன் வீதி யாழ்ப்பாணம். இலங்கைஅறிவுத் திருக்கதவு திறத்தல் திறந்து வைப்பவர்- அருள்நிதி பத்மஸ்ரீ S.K.M மயிலானந்தன் (தலைவர், உலக சமுதாய சேவா சங்கமம்)
  • அறிவுலக சங்கமம் – நாள் 1October 15, 2016 at 9:00 am – 7:30 pm
  • அறிவுலக சங்கமம் – நாள் 2October 16, 2016 at 10:30 am – 7:30 pmமலை 4 மணி – 8
  • 14643158_1331629310190352_1008367861_n 14658341_1331629230190360_2137224700_n 14686043_1331628850190398_933009345_n 14694609_1331629233523693_1243854813_n 14699876_1331629273523689_1040035638_n 14724243_1331629263523690_889591148_o 14724274_1331629013523715_1854227902_o

வவுனியாவில் சற்று முன் ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு!!

 
வவுனியா மூன்றுமுறிப்பு தச்சனங்குளத்தில் இன்று (14.10.2016) மதியம் 1.20 மணியளவில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

இன்று (14.10.2016) காலை தனது தோட்டக் கிணற்றை புணரமைப்பதற்காக முற்பட்டவேளை கிணற்றில் ஆயுதங்கள் கிடந்ததைக் கண்ட வீட்டு உரிமையாளர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரால் கிளைமோர் குண்டு, டேத் கோட், எட்டு மிதிவெடி, ஆறு வெளிச்சக்கூடு, கிளைமோர் குண்டு ஒன்று என பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை மேலும் பல ஆயுதங்கள் கிணற்றினுள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கிணற்றிலிருள்ள நீரை நீர்ப்பம்பி மூலம் அகற்றி வருகின்றனர்.

அத்துடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

1 news-1 news-2 news-3 news-4 news-5 news-6 news-7 news-8 news-10 news-11 news-12 news-13 news-14 news-15 news-16 news-17 news-18 news-19 news-20 news-21

சென்னையில் பயங்கரம் : வீதியைக் கடக்க முயன்ற 3 கல்லூரி மாணவிகள் பலி!!

chennai

சென்னையில் சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது தண்ணீர் லொரி மோதியதில் மாணவிகள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிண்டி- கத்திபாரா மேம்பாலத்திற்கு அருகே செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தான் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

விபத்தில் பலியான மாணவிகளின் பெயர் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்திரி என்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தண்ணீர் லொரி வேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லொரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

chennai11

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மீண்டும் சிகிச்சை!!

jeyal

முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டனைச் சேர்ந்த மருத்துவரும், எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களும் வியாழக்கிழமை மீண்டும் சிகிச்சை அளித்தனர்.

உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்ட் பீலே செப்டம்பர் 30ம் தேதி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்.

அவர் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அப்பல்லோ மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனை நடத்தினார்.

மேலும் முதல்வருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளோடு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளையும் கூடுதலாகப் பரிந்துரைத்தார்.

எய்ம்ஸ்’ நிபுணர்கள்: இதைத்தொடர்ந்து, டில்லி “எய்ம்ஸ்’ மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இருதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் அடங்கிய குழுவினர் அக்டோபர் 5ம் தேதி மருத்துவமனைக்கு வந்தனர்.

முதல்வருக்கு ஏற்கனவே காணப்பட்ட சர்க்கரை நோய், குளிர்கால மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனை தகவல்: தொடர் சிகிச்சையின் காரணமாக முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், அவருக்குத் தேவையான சுவாசத்துக்கு ஆதரவு அளிக்கும் சிகிச்சை, நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், ஊட்டச்சத்து, உடல் இயக்கமற்ற இயன்முறை மருத்துவம் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

3வது முறையாக நிபுணர்கள்: இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே 3வது முறையாக வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்.

அவர் முதல்வரின் உடல்நிலையை ஆய்வு செய்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் மேலும் சில நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை அளிக்க உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவும் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்த சிறப்பு நிபுணர்கள் குழுவினரும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

நீத்தா அம்பானி வருகை: முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவர்களிடம் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் மாலை 6.55 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர் புறப்பட்டார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரனும் வியாழக்கிழமை மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

– தினமணி-

அன்று ஈழத்து அகதி : இன்று அவுஸ்திரேலிய இராணுவ மேஜர்!!

2

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லவன் என்று அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா என்ற ஈழ அகதி ஒருவரே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் இராணுவ மேஜராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிட தஞ்சம் கோரி சென்ற அவர் தற்போது இராணுவ மேஜராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேஜர் தர்மராஜாவின் நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம்.

கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம். எனினும், லவன் தனது பயணம் குறித்து ஒருபோதும் சொன்னதில்லை.

அவருடைய இந்தப் பயணம் தனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றேன் என கூறியுள்ளார்.

தற்போது அகதிகள் தொடர்பாக மக்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் மேஜர் தர்மராஜ் என அழைக்கப்படும் லவனிடமிருந்து நான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்.

அவருடைய எளிமையான வாழ்க்கைத் தத்துவம் தன்னை அவரிடம் கட்டிப்போட்டுள்ளது. லவன் தன்னுடைய பயணத்தின் அடுத்த கட்டத்தில் இருப்பதையிட்டு நான் பெருமைப்படுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1

வைத்தியர்கள் இன்மையால் யாழில் மாணவி பலி!!

untitled-1

யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றய தினம் ர.டிலாஜினி என்ற 18 வயது மாணவி திடீர் சுகயீனமுற்ற நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை. மேலும் உடனடி வைத்திய உபகரணங்களும் இல்லாத நிலையில், குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

d1 d2 d3 d4

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!!

 
கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை விடுதலை செய்யமாறு கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்ட அனுசரனையுடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் வேட்டை இன்று (14.10.2016) காலை 10 மணிக்கு வவுனியா இலுப்பபையடிப் பகுதியில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், இ.இந்திரராசா, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் நி.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இக் கையெழுத்து வேட்டையில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

1 image-0-02-06-2e102e473de7c48dc3cd8db895ff34e6bd33cfbcc3896095c1eb62de3072ab5d-v image-0-02-06-70ad35892f01c64289129e8032354a3fa377ee1d70186377a7719e16e6329cfe-v image-0-02-06-31070c8b0022c16369a318e9bbaab7900fa58f965b249684e83cb4e14546db09-v image-0-02-06-74462d0d18589779ace5e70f403798daaa2ab018aa3153d6ef4cb86d9a92ef8a-v image-0-02-06-a06892bb360733555202d43e309f1ef516b3563f1050555a62f04766fccc2a82-v image-0-02-06-ae41665bba8844e6376b31c7368c1a3ee087b617a0b8e6815df20222c5a3de98-v image-0-02-06-b1b8d70ceee1bed63481724f65acf491876cf2c7c0942052c86de5c311f3c376-v image-0-02-06-b8bd6243a3c121db56288d149ebdf5a45bc235d4d86ca7bd119c09b979ffca70-v image-0-02-06-b43e0afda32f1dc0312141a220757ff71679d904e2e29b02ad8197faeaab9cb8-v image-0-02-06-bb298c1565a1801cc186e7fc6536997a0ec4e9b29307c411553f07b471f92352-v image-0-02-06-c50bc67cf831c9a93f6642bfae5c2309c8a08d8bfcd7b7aa27318bf543fd614c-v image-0-02-06-dae9182610469599a1ef6b2ad16aaafb6ec11fee45df3a0c5497a5c9140bc994-v image-0-02-06-f59a416e5725af0769985f9623fe02f6641c6b7dfca49efea3bc75d40fd039d7-v

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

weather

இலங்கையில் காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை வரட்சியை தோற்றுவித்த காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இடைப்பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நாட்டில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்றும் திடீரென காற்று வீசி இடி, மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் மற்றத்தினால் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வீடுகளுக்கு அருகில் இருக்கும் பெரியமரங்களில் உள்ள பட்ட மரக்கொப்புகளை அகற்றுவதன் மூலமும் பாதுகாப்பை உறுதிப்படுத்திகொள்ள முடியும் என்றும் இடிமின்னல் தாக்கத்தின் வெற்று பிரதேசங்களில் நிற்பதை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடும் வரட்சிக்குப் பின்னர் நேற்று பொலநறுவையில் கன மழை பெய்துள்ளது. அதேவேளை இன்று அதிகாலையிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

14516450_1200391236649341_587232709240967612_n

வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை நடைபெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளதுடன். காலை 9 மணிமுதல் பழையமானவர்கள் தங்கள் பதிவு மற்றும் அங்கத்துவத்தை உறுதிப்படுத்தி கொள்வதுடன் அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபைத் தெரிவும் நடைபெறும்.

scan0071

வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி பயணமானது மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான நடைபவனி!!

 
தெற்கில் புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று காலை 5.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் ஆரம்பமாகி மதவாச்சி நோக்கி புறப்பட்டது.

இவ் பேரணியில் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக , வங்கி ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார் , பாதுகாப்பு படையினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மகேல ஜெயவர்த்தனவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0061 dsc_0063 dsc_0064 dsc_0065 dsc_0066 dsc_0068 dsc_0069 dsc_0070 dsc_0071 dsc_0072 dsc_0073 dsc_0074 dsc_0075 dsc_0076 dsc_0080 dsc_0081 dsc_0082 dsc_0083 dsc_0084 dsc_0086 dsc_0087 dsc_0092 dsc_0095

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அவலநிலை!!

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் நோயாளர்களை தரையில் படுக்க வைத்து பராமரித்து வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளர்களை போதிய கட்டில் வசதியின்மையினால் தரையில் உறங்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் நோயினை குணப்படுத்துவதற்காகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றோம். அப்படி இருக்கையில் இடுப்பு வருத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நோயாளர்கள் தரையில் படுத்து மேலும் வருத்தத்தை அதிகரித்த வீடு செல்வது? வசதிகள் அனைத்தும் நிறைந்த வைத்தியசாலை. புதிதாக கட்டிடங்கள், புதிய தொழில்நுட்பங்கள் போன்றவாறாக சகல வசதிகளுடனும் மிளிர்கின்ற வைத்தியசாலை ஏன் இப்படியாக காணப்பட வேண்டும்?

இவ் விடயம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் கருத்து தெரிவிக்கையில் ,

எமது வைத்தியாசாலைக்கு தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே காணப்படுகின்றது.; 42 கட்டில்கள் மாத்திரமே கொண்ட ஒரு நோயாளர் விடுதியில் 90 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிகுதி நோயாளர்களுக்கு படுக்கை விரிப்புக்கள் வழங்கப்பட்டு தரையில் படுக்க வைக்கவேண்டிய நிற்பந்தத்திற்கு உள்ளாகின்றது. விரைவில் இதற்குரிய தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

1 image-0-02-06-48b176bb9cbb7acbf20d0d09f25be2139f50dd9cb5e0b925c4013c50d1dd8b23-v image-0-02-06-acf7ed9001850fdf53a385bec46cda4f501671effa2d49d94ef10dd846118d0b-v image-0-02-06-b0f2d6467f6415481b60459ec28378db6c83fabc8f34c5933083d574b36b4daa-v image-0-02-06-e1e6956c06de064206fe381c2fa5bfeac8ae2ad5899da0729a0fac6f44e59391-v

வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக 3111 பேர் பாதிப்பு!!

drought

நாட்டில் கடந்த சில மாதங்களான ஏற்ப்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியாவில் 938 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதான வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 938 குடும்பங்களை சேர்ந்த 3111 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒமந்தை, ஆசிக்குளம், பூந்தோட்டம் , பறனாட்டாங்கல், சமனங்குளம் ஆகிய பகுதிகளில் 464 குடும்பங்களும்,

சன்னாசிப்பரந்தன், நெடுங்கேனி தெற்கு, நைனாமடு, அனந்தர்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் 474 குடும்பங்களும் வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களும்  கடும் வறட்சி காரணமாக பாதிப்படைந்துள்ளதாகவும் இக் கிராமங்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு!!

 
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு, கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன் தலைமையில் கனடா வாழ் சேமமடு உறவுகளின் பங்களிப்புடன், வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் நேற்று (13.10.2016) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வுகளில் முதியோருக்கான பயணப்பொதிகளும், விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த்தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான முத்தையா கண்ணதாசன் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன் உறுப்பினர்களான கெர்சோன், சஞ்சீவன், பிரகாஷ்கர் ஆகியோருடன் ஆனந்த இல்லத்தின் நிமலன் மற்றும் ஆனந்த இல்ல முகாமையாளர் திருமதி ஜெயா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

1 img_9421 img_9429 img_9447 img_9449 img_9452 img_9462 img_9544 img_9546 img_9547 img_9549 img_9551 img_9552 img_9555 img_9569

ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக் கொலை : பழிக்கு பழி தீர்த்ததாக விசாரணையில் தகவல்!!

bus

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பச்சாமி என்பவர் மதுரையை நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் நேற்று பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர் அருகே பயணம் செய்த இருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கருப்புச்சாமியை சுட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

கருப்பசாமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், கடந்த யூலை மாதம் அப்துல்லா என்பவரை கருப்புச் சாமியின் சகோதர்கள் கொலை செய்ததாகவும், இதற்கு பழி தீர்ப்பதற்காகவே கருப்புச் சாமியை அப்துல்லாவின் தந்தை ரபீக் என்பவர் சில நபர்களை வைத்து கொலை செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 9 பேரை பொலிசார் கைது செய்திருப்பதாகவும், தலைமறைவாக உள்ள அப்துல்லாவின் தந்தை ரபீக்கை பொலிசார் தீவிரமாக தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு கொலையாளிகள் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பணிப்பெண்ணாக துபாய் செல்ல முற்பட்டவருக்கு வழியில் நேர்ந்த கதி!!

sl

சுற்றுலாப் பயணிகளின் விசா மூலம் பெண் ஒருவரை துபாய்க்கு பணிப்பெண்ணாகவேலைக்கு அனுப்பிய நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கைதுசெய்துள்ளது.

குறித்த பெண் துபாய்க்கு செல்ல முற்பட்ட போது போலி கடவுச்சீட்டு காரணமாக கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சுற்றுலா விசா மூலம் துபாய் செல்ல முயற்சித்த பெண் வழங்கிய தகவலின்அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைது செய்யப்படும் போது அவரிடம் 9 சட்டவிரோத கடவுச்சீட்டுக்கள்இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலதிக விசாரணைகள்முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாமி ஆடிய நிலையில் கிணற்றினுள் இறங்கிய குடும்பஸ்தர் மரணம்!!

well

சாமி ஆடிய நிலையில் கிணற்றுக்குள் இறங்கிய குடும்பஸ்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று நேற்றைய தினம் யாழ். வறுத்தலைவிளான் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இணுவில், காரைக்கால் முகாமைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான தாசன் உதயபாலு (வயது-44) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வறுத்தலை விளான் பகுதியில் உள்ள அன்னம்மார் கோவிலுக்கு மேற்குறித்த நபரும் அவருடைய தாயாரும் நேற்றைய தினம் நண்பகல் சென்றுள்ளனர்.

குறித்த நபருக்கு பிற்பகல் 2.45 மணியளவில் சாமி உருவேறிய போது கோவிலுக்கு அருகில் இருந்த 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் இறங்குவதற்கு முயற்சித்துள்ளார்.

சுற்றி இருந்தவர்கள் அவரை இறங்க விடாது தடுத்த போது தனது உடலில் கயிற்றை கட்டியவாறு கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

சற்று நேரத்தின் பின்னர் கிணற்றில் இறங்கியவரை தரையில் இருந்தவர்கள் பார்த்த போது அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக இருவர் கிணற்றுக்குள் இறங்கி அவரை காப்பாற்ற முயற்சித்து கிணற்றுக்குள் இறங்கிய போது கிணற்றின் இடைப் பகுதியில் அவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதில் அவர்கள் மீண்டும் மேலே வந்துள்ளனர்.

பின்னர் யாழ் மாநகரசபைக்கு அறிவித்து தீயணைப்பு படையினர் வந்து மீட்புப் பணிக்காக கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர். அவர்களுடைய முயற்சியும் தோல்வியுற்ற நிலையில் கடற்படையினர் அவ்விடத்துக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

கடற்படையினர் ஒட்சிசன் சிலிண்டர் பொருத்திய நிலையில் கிணற்றுக்கள் இறங்கி குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர்.

குறித்த கிணற்றில் அரை அடிக்கு மாத்திரமே தண்ணீர் உள்ளது என்றும் ஆனால் ஒட்சிசன் இல்லாத காரணத்தினாலே அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலம் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.