கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் ஸ்ரேயா காதல்!!

brovo

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெயம்ரவியுடன் நடித்த மழை, தனுசுடன் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படங்கள் அவரை பிரபலபடுத்தின. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்தார். இந்த படம் 2007ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய், விக்ரம், விஷால், ஜீவா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்தார். ஆனால் சமீபகாலமாக புதுமுக கதாநாயகிகள் வரத்து அதிகமானதால் ஸ்ரேயாவுக்கு படங்கள் குறைந்து விட்டன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவே அழைப்புகள் வருகின்றன.

ஸ்ரேயாவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. இதனால் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் பட உலகில் பேசப்பட்டது.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் ஸ்ரேயாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு அவர்கள் ஜோடியாக வந்தார்கள். அங்கு அருகருகே உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்கள். நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி ஒரே காரில் புறப்பட்டு சென்றார்கள்.

அப்போது சிலர் செல்போனில் படம்பிடித்தனர். அதுபற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இருவரும் ஜோடியாக ஓட்டலுக்கு சென்று வந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றன.

வெய்ன் பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கலாசார பண்பாடுகள் தனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று பேட்டிகளிலும் அடிக்கடி சொல்லி வந்தார்.

ஸ்ரேயாவும், வெய்ன் பிராவோவும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாக பட உலகில் தகவல் பரவி உள்ளது.

brovo1

வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்!(படங்கள்,காணொளி)

வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்! என  TRAILSL என்கிற காலி கராபிட்டிய  வைத்திய சாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவை ஆரம்பிபதற்காக  இலங்கை அணியின் கிரிகட் வீரர்கள்  மகேல ஜெயவர்த்தனே  மற்றும்  குமார் சங்ககார ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன்   கடந்தவாரம்  யாழில் இருந்து   தொடங்கி  நேற்று  வவுனியா நகரை கடந்துள்ளது .

மேற்படி நடைபவனிக்கு   மாணவர்கள் , அரச தனியார் துறை ஊழியர்கள் ,பாடசாலை சமூகங்கள், வர்த்தகர்கள் எனப்பல்வேறு  தரப்பினரும் கலந்து கொண்டதோடு  தங்களாலான நன்கொடைகளையும்  வழங்கியிருந்தனர்.

மேற்படி நடைபவனிக்காக வவுனியா மக்களின்  ஒத்துழைப்பை பாராட்டி  அவர்களது  சமூக வலைதளத்தில் வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்  எனப் பதிவிடபட்டிருந்தது.

1 2 3 4 14666134_1308311312554054_8292969065708525871_n 14681604_10154643210109600_5999869596166464196_n 14695465_1308320299219822_1546608285454392336_n

14713517_10154643210064600_2254543412845032070_n 14717061_1308302949221557_2892816523023208307_n 14718703_1308306312554554_3049495097251858682_n

14567597_1309265822458603_4223406658175375061_o 14691955_1309268289125023_5077326228085179380_o 14711661_1309265929125259_4092590443965875779_o 14712997_1309269362458249_3705449473512489838_o

14724106_1332355403451076_784296582_o

இருளில் முழ்கிய வவுனியா பஸ் தரிப்பிடம்!!

 
வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் காணப்படும் மின்குமிழ்கள் ஒளிராமையினால் பேரூந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.

வடக்கின் வாசலாக காணப்படும் வவுனியா பேரூந்து நிலையத்தில் மின்குமிழ்கள் ஒளிராமையினால் கடந்த இருதினங்களாக பேரூந்து நிலையம் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றது.

வவுனியா நகரபைக்கு பலமுறை வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்ட போழுதும் இதுவரை சீர்செய்யவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் மற்றும் சாரதிகள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?

1 news-1 news-2 news-3 news-4 news-5 news-6 news-7 news-8 news-9 news-10 news-11 news-13

கண்ணீர் விட்டு அழுத சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால், சிம்பு!!

siva

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ரெமோ. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக செலவில் உருவான படமும் இதுதான். இப்படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில், ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கண்கலங்கினார். தான் செய்யும் வேலையை யாரோ தடுப்பதாக ஒரு குற்றச்சாட்டையும் வைத்தார். சிவகார்த்திகேயனின் உணர்ச்சிகரமான பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி காஞ்சிபுரத்தில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கும்போது, சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். சக நடிகனாக நான் அவருக்கு துணை நிற்கின்றேன். இதுதொடர்பாக, நடிகர் சங்கத்திலும் புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்கள் மீது நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் சினிமாவில் பல துறைகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் போன்று ஒருகாலத்திலும் நானும் பிரச்சினைகளை சந்திதேன் என்று பேசினார்.

இந்த பிரச்சினையில் சிம்புவும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக தெரிவிக்கும்போது , கவலைப்படாதே சிவா, இந்தப் பிரச்சினை உனக்கு மட்டும் நேர்ந்துவிடவில்லை. இந்த மாதிரி பிரச்சினை செய்பவர்வள் யார் என்று எனக்கும் தெரியும்.

பிரச்சினை செய்கிறவர்களுக்கு அது மட்டும்தான் செய்யத் தெரியும். நம்முடைய குறிக்கோள் கடின உழைப்பு ஒன்று மட்டுமே. மற்றதையெல்லாம் கடவுளிடம் விட்டுவிடு, அவர் பார்த்துக் கொள்வார் என்று சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உருக்குலைந்த சடலத்தை பார்த்து கதறி அழுத மாணவிகள், பெற்றோர்கள் : அதிர்ச்சிப் படங்கள்!!

a1

சென்னையில் கிண்டி- கத்திபாரா சாலையில் நேற்று நடந்த தண்ணீர் லொறி விபத்தில் மூன்று மாணவிகள் பரிதாபமாக பலியாகினர்.

செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்திரி ஆகிய மூன்று பேரும் சாலையை கடக்கும் போது பரிதாபமாக பலியாயினர்.

திருவொற்றியூர் ராஜாஜி நகரை சேர்ந்த சித்ரா, புளியந்தோப்பு நரசிம்மன் நகரை சேர்ந்த ஆஷா ஸ்ருதி இருவரும் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

போரூர் ஆலப்பாக்கம் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் காயத்திரி, இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மூன்று பேருமே ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள், நொடிப்பொழுதில் இவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது பிரேத பரிசோதனை இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

கல்லூரி மாணவிகள் ராஜப்பேட்டை மருத்துவமனைக்கு திரண்டு வந்து கதறி அழுதனர், சிலர் மயக்கம்போட்டு விழுந்தனர்.

அப்போது மருத்துவமனை ஊழியர்களும், வழக்குப் பதிவு செய்துள்ள கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும் பலியான மாணவிகளின் பெயரை தனித்தனியாக குறிப்பிட்டு அடையாளம் காட்டும்படி அழைத்தனர்.

அப்போது உள்ளே சென்ற மாணவிகள் சடலமாக கிடந்த மாணவிகளின் சிதைந்த உடலை பார்த்து கூச்சலிட்டனர், சிலர் வெளியே வந்து மயங்கி விழுந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

சித்ராவின் உறவினர் கூறுகையில், கூலி வேலை செய்தே சித்ராவை படிக்க வைத்தனர். சித்ராவுக்கு செல்போன் கூட கிடையாது, அரசு அதிகாரியாக வேண்டும் என்பதே அவருடைய கனவு.

நான் சம்பாதித்து உங்கள் அனைவரையும் பார்த்துக் கொள்கிறேன் என எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார், இவரை சடலமாக பார்ப்போம் என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லொறி ஓட்டுநர் ராஜேந்திரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ராஜேந்திரன் வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் கூறுகையில், கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி தண்ணீர் லொறியை ஓட்டிச் சென்றேன்.

பாலத்தில் இருந்து இறங்கியதும் லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை.

கியர் லொக் போட்டும் லொறி நிற்கவில்லை, வலதுபுறம் திருப்பினால் அதிகளவில் சேதம் ஏற்படும் என நினைத்தேன்.

எனவே தான் இடதுபுறம் திருப்பினேன், மாணவிகள் ஓடிவிடுவார்கள் என நினைத்தேன், ஆனால் விபரீதமாகி போனது என தெரிவித்துள்ளனர்.

a2 chennai

கொள்ளையடித்த பணத்தில் காதலிக்கு ஆடி கார் : இளைஞருக்கு வலைவீச்சு!!

car

இந்தியாவில் சாகர் தக்கார் என்ற 23 வயது இளைஞர் கோல் சென்டரில் செய்த ஊழல் பணத்தில் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக 2.5 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வழங்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சாகர் குறித்து தானே பொலிசார் அளித்துள்ள தகவலில், அகமதாபாத்தில் உயர்ரக கார் வாங்கிய முதல் நபர் சாகர் தான். எனினும், அவரின் காதலி குறித்த துப்பு இதுவரை கிடைக்கவில்லை.

சாகரின் பள்ளி நண்பர்களை கைது செய்து விசாரித்ததில் காதலிக்கு அளிக்க போகும் பரிசு குறித்து அவர்களிடம் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத்தில் சாகர் வேலையின்றி தான் தங்கை ரிமாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவல் மூலம் சாகர் குறித்த ஊழலில் ஈடுபட்டுள்ளார். ஊழல் பணத்தில் துபாயில் சாககுருக்கு பெரிய வர்த்தகம் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், FBI அதிகாரிகள் சாகர் குறித்து தகவலை கேட்டு தானேவுக்கு விரைந்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு பணமோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது தலைமறைவாக இருக்கும் சாகரை FBI தீவரமாக தேடிவருகின்றனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருட முயன்ற பெண் : அதிர வைக்கும் சம்பவம்!!

pro

பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றை கிழித்து பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்ணை அந்நாட்டு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரேசில் நாட்டின் Sao Paulo மாகாணத்தில் உள்ள Pitangueiras என்ற நகரில் Valissia Fernandes de Jesus என்ற 15 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்.

எட்டு மாத கர்ப்பிணியான அவர் தனக்கு பிறக்குபோகும் பிள்ளைக்காக ஆடைகள் மற்றும் பச்சிளம் குழந்தைக்கு தேவையான பொருட்களை சேமித்து வந்துள்ளார்.

இதே நகரில் Mirian Siqueria(25) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை இவர் வீட்டில் இருந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நீண்ட மாதங்களாக கர்ப்பம் அடையவில்லை.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக தனது கணவரிடம் அவர் கூறியுள்ளார். மேலும், அவரது வயிற்று பகுதி பெரிதாக உள்ளதால் கணவருக்கு சந்தேகம் எழவில்லை.

ஆனால், குழந்தையை கணவரிடம் காட்ட வேண்டும் என எண்ணிய அவர் கர்ப்பிணி பெண்களை நோட்டம் விட்டு வந்துள்ளார்.

இதுபோன்ற ஒரு சூழலில் 15 வயதான கர்ப்பிணி பெண்ணை அவர் ஒரு பொது இடத்தில் நேற்று முன் தினம் சந்தித்துள்ளார்.

பின்னர், ‘எனது வீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான அழகிய பொருட்கள் இருக்கின்றன. நேரடியாக எனது வீட்டிற்கு வந்த அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

பெண் கூறியது உண்மை என எண்ணிய கர்ப்பிணி அவருடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் நுழைந்ததும் 8 மாதமான அந்த கர்ப்பிணி பெண்ணை அவர் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் கர்ப்பிணி பெண் சுயநினைவை இழந்துள்ளார்.

பின்னர், சமையலறைக்கு சென்ற அப்பெண் கூர்மையான கத்தியை எடுத்து வந்து கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த பச்சிளம் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.

ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது கண்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், கத்தியால் தாக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இருவரின் உடல்களையும் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரப்பெட்டியில் வைத்து அப்பெண் மறைத்துள்ளார்.

ஆனால், அப்பெண்ணின் கொடூரமான செயல்கள் அவரது கணவர் மூலம் வெளியே வந்ததை தொடர்ந்து அப்பெண் தற்போது தலைமறைவாக உள்ளார்.

கர்ப்பிணி பெண் மற்றும் வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரப் பெண்ணை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அப்பிள் ஐபோனும் வெடிக்கின்றது : ஓர் எச்சரிக்கைத் தகவல்!!

iphone

சம்சுங் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகள் வெடிக்கிறது என்ற புகார் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அப்பிள் ஐபோன் கைப்பேசிகளும் வெடிப்பதாக புகார்கள் ஆதாரங்களுடன் வந்துள்ளது.

கைப்பேசி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் சம்சங்கின் கேலக்ஸி நோட் 7 போன்கள் சார்ஜ் போடும் போது வெடிப்பதாக பல்வேறு புகார்கள் ஆதாரங்களுடன் வந்தன.

இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அந்த மொடல் கைப்பேசிகளின் உற்பத்தியை நிறுத்துவதாக சம்சங் நிறுவனம் அறிவித்தது, மேலும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியது.

கேலக்ஸி நோட் 7 போன்களுக்கு போட்டியாக கருதப்படும் இன்னொரு பிரபல கைப்பேசி நிறுவனமான அப்பிளின் ஐபோன் 7 மாடல் கைப்பேசியும் வெடித்து சிதறுகிறது என்ற தகவல் தற்போது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது.

சீனாவில் ஒருவர் தன்னுடைய ஐபோன் 7 மூலம் வீடியோ எடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த கைபேசியானது வெடித்துள்ளது. நல்லவேளையாக அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாமல் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

அப்பிள் ஐபோன் பற்றி மேலும் எதாவது புகார்கள் வந்தால் நிச்சயம் சம்சங் போல இதுவும் பிரச்சனையை எதிர்கொள்ள கூடும் என்பது மட்டும் உண்மை.

300 கோடி அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியில் மோதப்போகும் விண்கல் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

ston

சூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன, இவை அவ்வப்போது புவிஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.

ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. எனவே அவ்வாறு தீப்பிடிக்கும் விண்கற்களால் பூமிக்கு பெரிய ஆபத்து ஏற்டுவதில்லை.

இந்த நிலையில் விண்ணில் சுற்றிவரும் மற்றொரு விண்கல் மூலம் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

2009 இ.எஸ். என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் சூரிய மண்டலத்தைச் சுற்றி வருகிறது.

15 கிலோ மீட்டர் அகலத்தில் இந்த கல் உள்ளது. அது சுற்றுப்பாதையிலிருந்து சிறிது, சிறிதாக மாறி பூமியின் வட்டபாதைக்குள் வரும் என்றும், அப்போது அது பூமியில் மோதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் மோதும்போது அது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தும், இதனால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த விண்கல் எப்போது மோதும் என்று சரியாக கணக்கிட முடியவில்லை, சில ஆண்டுகளில் இந்த மோதல் நடக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

லிபியா அருகே புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு மூழ்கியதில் 17 பேர் உயிரிழப்பு!!

boat

லிபியா கடற்கரை அருகே புகலிடக் கோரிக்கையாளர்களி்ன் படகு மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு கடலில் மூழ்கியுள்ளது. படகு மூழ்குவதை அறிந்த, ஐரோப்பிய தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல் ஒன்று உதவிக்குச் சென்றுள்ளது.

அக்கப்பல் உடனடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்ட காரணத்தால் பலர் காணாமற்போயுள்ளனர்.

அவ்வாறு காணாமற்போயுள்ளவர்களில் 3 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு படகு மூழ்கியதாகவும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

வவுனியா – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயம்!!

acci

வவுனியா – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா அநுராதபுரம் பிரதான வீதியில் சாலிய புர பகுதியில் இந்த விபத்து நேற்று (13) மாலை
இடம்பெற்றது.

மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வேன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வவுனியாவிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த பஸ் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் வேனில் பயணித்த 6 பேரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை!!

 
ஐ.எஸ். தீவிரவாதிகள் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு சிரியாவில் ஈராக்கிய எல்லைக்கு அண்மையிலுள்ள அபு கமால் நகரில் சிறுவர்கள் உள்ளடங்டகலாக பெருமளவான பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிரவாதியொருவர் ஒலிபெருக்கி மூலம் அந்த இருவராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல் குறித்து அறிக்கையொன்றை வாசிப்பதையும் பின்னர் அந்த இரு கைதிகளும் நிலவிரிப்பு ஒன்றின் மீது கண்கள் கட்டப்பட்டு கைவிலங்கிடப்பட்ட நிலையில் மண்டியிட்டு அமர்ந்திருக்க அவர்கள் மீது தீவிரவாதிகள் பாரிய கற்களை எடுத்து வீசுவதையும் அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

1 2 3 4 5

127 கோடி மக்களுக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்: உருக வைக்கும் வீடியோ!!

dead

தமிழகத்தில் இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த 20 வயதான ஜவகர் என்ற இளைஞரே இவ்வாறு உயிர் தியாகம் செய்துள்ளார்.

ஜவகர், பிளாஸ்டிக்கை ஒழிக்க தனி மனிதனாக சாலையில் அமர்ந்தும், டவரில் ஏறியும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

இறுதியில் ஐவகர், தஞ்சாவூர் புதிய ஆற்றுப் பாலத்தின் மேல் தீக்குளித்து ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.

இறப்பதற்கு முன் ஜவகர் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை.

127 கோடி மக்கள் நல்லா வாழ பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும், சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும், அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.

ஜெயலலிதா நலம் பெற வேண்டி தொண்டர் முள்படுக்கை!!

mulpadukkai

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் திகதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளதாகவும், இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இதனால் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் என பலர் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதா விரைவில நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக கோவிலில் முள்ளின் மீது படுத்து தனது பிரார்த்தனையை நிறைவேற்றியுள்ளார்.

ரெமோ வெற்றி விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!!

siva

24 AM STUDIOS நிறு­வனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயா­ரித்து, சிவ­கார்த்­தி­கேயன் இரட்டை வேடங்­களில் நடித்த ‘ரெமோ’ வெற்­றி­க­ர­மாக ஓடிக்­கொண்­டி­ருப்­பதை முன்­னிட்டு நன்றி தெரி­விக்கும் விழா நேற்று முன்தினம் நடை­பெற்­றது.

இந்த விழாவில் இயக்­குநர் பாக்­யராஜ் கண்ணன், சிவ­கார்த்­தி­கேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவி­குமார், சரண்யா பொன்­வண்ணன், சதீஷ், பி.சி.ஸ்ரீராம், அனிருத், ஒலிப்­ப­தி­வாளர் ரசூல் பூக்­குட்டி, மற்றும் பலர் கலந்து கொண்­டனர். அப்­போது சிவ­கார்த்­தி­கேயன் பேசும்­போது,

‘‘என்னை இப்­ப­டத்தில் கதா­நா­ய­க­னாக நடிக்க வைத்த பாக்­யராஜ் கண்­ண­னுக்கு நன்றி! நான் அழ­காக இருக்­கிறேன் என்று என்னை உணர வைத்­தவர் பி.சி.ஸ்ரீராம் சார். அவ­ரு­டைய ஒளிப்­ப­திவில் நடித்­தது எனக்கு மிகவும் பெருமை.

நான் லேடி கெட்­டப்பில் நடிக்கும் போது, நடிகை கீர்த்தி சுரேஷ் பல உத­விகள் செய்தார். அது மறக்க முடி­யாது. இப்­ப­டத்தின் தயா­ரிப்­பாளர் ஆர்.டி. ராஜா கடின உழைப்­பாளி.

இப்­ப­டத்­திற்­காக அதி­க­மாக உழைத்­தவர் அவர்தான். நான் 18 மணி­நேரம் வேலை பார்த்து விட்டு வீடு திரும்­புவேன். என் குடும்­பத்­துடன் இருப்பேன். ஆனால், இந்த படம் துவங்­கிய நாளி­லி­ருந்து ராஜா வீட்­டுக்கு கூட செல்­லாமல் தொடர்ந்து வேலை பார்ப்பார்.

இப்­படி வேலை செய்யும் இவரை பலர் வேலை செய்ய விடாமல் தடுக்­கி­றார்கள். நாங்கள் யாருக்கும் எந்த கெடு­தலும் செய்­த­தில்லை. ஆனால், எங்­களை வேலை செய்ய விடாமல் தடுக்­கி­றார்கள்.

ஏன் இப்­படி செய்­கி­றார்கள் என்று எங்­க­ளுக்கு தெரி­ய­வில்லை’’ என்று கூறி­ய­வாறு கண்­க­லங்­கினார் சிவ­கார்த்­தி­கேயன். ஒரு சில நிமி­டங்கள் கழித்து மீண்டும் பேசு­கையில், ‘‘எந்த ஒரு படமும் நூற்­றுக்கு நூறு பேரையும் திருப்­தி­ப­டுத்­தாது.

அப்­ப­டி­யான படத்தை யாராலும் எடுக்க முடி­யாது. சில­ருக்கு பிடிக்கும், சில­ருக்கு பிடிக்­காது. இது காலம் கால­மாக இருந்து வரு­கிற விடயம் தான். பிடித்தால் நான்­றாக எழு­துங்கள்! பிடிக்­க­வில்­லை­யென்றால் குறை­களை சுட்டி காட்­டுங்கள்! திருத்திக் கொள்­கிறோம்.

இப்­ப­டத்தின் வெற்றி எங்­க­ளுக்கு பெரும் உற்­சாகம் தரு­கி­றது. இது வெற்­றி­விழா இல்லை! இப்­ப­டத்தை வெற்­றி­பெற செய்­த­வர்­க­ளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான்! இந்த டீம் மீண்டும் இணைந்து படங்கள் பண்ணும்! நாங்கள் முடிந்தவரை யிலும் தரமான படங்களை தர முயற்சிப்போம்’’ என்றார்.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தேர்த்திருவிழா!(படங்கள்,காணொளி)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (14.10.2016 வெள்ளிகிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

இன்றுகாலை உற்சவம் ஆரம்பமாகி பக்தர்கள் பாற்குட பவனியாக வந்து அந்த பாலில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணுமூர்த்திக்கு அபிசேகம் நடைபெற்று எட்டு மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து  ஒன்பதரை மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் உள்வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பகவான் தேரில் ஆரோககணி த்தருளினார்.

தொடந்து எம்பெருமான் ரதத்தை ஒரு புறம் ஆண் பக்தர்களும் மறுபுறம் பெண் பக்தர்களும் இழுத்து வர சரியாக காலை பதினோன்றரைமணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார்.

அதன்பின் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடந்து பச்சை சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மேற்படி உற்சவத்தில் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மஹா விஷ்ணுவின் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

-பிரதேச நிகழ்வுகளுடன் கஜன்–

dsc08672 dsc08684 dsc08689 dsc08691 dsc08697 dsc08714 dsc08717 dsc08725 dsc08732 dsc08744 dsc08747 dsc08763 dsc08764 dsc08768 dsc08771 dsc08780 dsc08784 dsc08787 dsc08791 dsc08798 dsc08808 dsc08810 dsc08816 dsc08819 dsc08830 dsc08833 dsc08835 dsc08842 dsc08845 dsc08850 dsc08855 dsc08859 dsc08864 dsc08872 dsc08881 dsc08882 dsc08885 dsc08897 dsc08898 dsc08900 dsc08904 dsc08914 dsc08916 dsc08918 dsc08930