அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கிடைத்த அதிஷ்டம்!!

nisal

2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற மாணவன் சித்திஜ ஹிரான் சமரவிக்ரமவுக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர வழங்கியுள்ளார்.

அமெரிக்காவுக்கு இரண்டு வாரங்கள் குறித்த மாணவன் தனது பெற்றோர்களுடன் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,195 புள்ளிகளைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலய மாணவரான கோகுலதாசன் அபிசிகன் மற்றும் குளியாப்பிட்டிய எஸ்ஸதும சுபாரத்தி வித்தியாலயத்தின் மாணவி ருவான்யா மெத்மினி

குணசேகர ஆகியோர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!!

h1

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூலாவடி 8ஆம் குறுக்கைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி சக்திவேல் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அறியமுடிகின்றது.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.

h2

மகனின் தாக்குதலில் தந்தை பலி!!

attack

மொனராகல-தம்பலகல பிரதேசத்தில் மகன் ஒருவரின் தாக்குதலில் தந்தை பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (07) மொனராகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், நில பிரச்சினையால் 36 வயதான மகனது தாக்குதலில் 67 வயதுடைய தந்தை பலியாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்து இன்றைய தினம் மொனராகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 339 பேர் பலி : 500ற்கு மேற்பட்டோர் காயம் : அவசரகால நிலை பிரகடனம்!!

usa

அமெரிக்காவில் புயல் தாக்கியதில் 339 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து அங்குள்ள புளோரிடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கரீபியன் கடலில் உருவான மேத்யூ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் அமரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது.

இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹெய்தியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.

இதனால், பலத்த மழை கொட்டியது. ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கியாஸ் நிறுவனங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.இதனால் ஏராளமான வாகனங்கள் ஓடாமல் ரோட்டோரம் வரிசையாக நிற்கின்றன. கியாஸ் நிரப்பும் நிலையங்களில் காத்து கிடக்கின்றன.

உணவு பொருட்கள் சப்ளை இல்லாததால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.புளோரிடாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே 15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் அவசர கால குழுக்கள் இங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனவே, புளோரிடாவில் அதிபர் ஒபாமா அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

ஜர்ஷியா, மற்றும் தெற்கு கரோலினாவிலும் 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகம் பாதித்த புளோரிடாவில் 60 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளில் இருந்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டு அவை மூடப்பட்டன.

புளோரிடாவில் உள்ள மியாமி, போர்ட்லவுடர்யில் மற்றும் ஒர்லண்டோ உள்ளிட்ட நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தாக்கிய ‘மேத்யூ’ புயலுக்கு இதுவரை 339 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்ததில் சிக்கியவர்கள் ஆவர்.

மேத்யூ’ புயல் தாக்குதலில் கெய்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏராளமான மரங்கள் வேருடன் பிடுங்கி தூக்கி வீசப்பட்டன. இங்கு புயல் மழைக்கு 136 பேர் உயிரிழந்தனர்.

பகாமாஸ் நாட்டில் தலைநகர் நஸ்காயு நகரில் மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியது.

ஏராளமான பேரீச்சை உள்ளிட்ட மரங்கள் வேருடன் பிடுங்கி காற்றில் அடித்து வரப்பட்டு வீடுகள் மீது விழுந்தது.

பிரபுதேவாவின் அடுத்த காதல் ஆரம்பம்!!

prabudeva

பிரபுதேவாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் படவுலகில் பரபரப்பு தகவல் பரவி உள்ளது.

தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரபுதேவா தமிழ் மற்றும் இந்தி படங்களை டைரக்ட் செய்து வந்தார்.

இருவரும் தமிழ், இந்தியில் தயாரான ‘தேவி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில் பிரபுதேவாவின் நடனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தமன்னா பேசி வந்தார். தமன்னாவும் திறமையாக நடனம் ஆடுகிறார் என்று பிரபுதேவா புகழ்ந்தார்.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டார்கள்.

தமன்னா இதற்கு முன்பு தான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர். இதற்காக அவர் மீது சினிமா சங்கங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் தேவி பட நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டார்.

பிரபுதேவாவுக்கும் தமன்னாவுக்கும் படப்பிடிப்பின்போது நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால்தான் இருவரும் பட விழாக்களில் ஜோடியாக சுற்றுகிறார்கள் என்றும் பட உலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெலுங்கு டைரக்டர் ஒருவர் உறுதிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபுதேவா ஏற்கனவே நயன்தாராவை காதலித்து தோல்வி அடைந்தவர். இருவரும் திருமணம் வரை நெருங்கினார்கள். இதற்காக நயன்தாரா மதம் மாறவும் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள். பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.

பிரபுதேவாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை வற்புறுத்தி வருகிறார்கள்.

தமன்னாவையும் இதுவரை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கள் வரவில்லை. பிரபுதேவாவிடம் அவர் மனதை பறிகொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் இரகசிய காதல் விவகாரம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று பேசப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு நான்கு மாத கால அவகாசம்!!

mc

இதுவரை பதிவுசெய்யப்படாத இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பதிவுசெய்து கொள்வதற்காக ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் நான்கு மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் சட்ட ரீதியான பதிவின்றி போக்குவரத்தில் ஈடுபடுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்கவேண்டிய பதிவுக் கட்டணம், வருடாந்த வருமான வரி மற்றும் காப்புறுதி கட்டணங்களும் இதுவரை செலுத்தப்படவில்லை என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதுதவிர விபத்துகள் இடம்பெற்றால், பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை அடையாளங் காணமுடியாத நிலை ஏற்படுவதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகும் சாத்தியங்களும் அதிகளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி ஆவணங்கள் இல்லாத போதிலும், அவற்றைப் பதிவுசெய்து கொள்வதற்காக கால அவகாசம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும் அரசாங்கத்திற்கு கிடைக்காமல் போன, சுங்கவரிக்குப் பதிலாக 65,000 முதல் 300,000 ரூபா வரையான கையிருப்பு கட்டணத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

யாழில் ஜெயவர்த்தனவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த தமிழ் யுவதி!!

m1

காலி ஹராபிட்டிய வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிக்கும் நடைபவனி நேற்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆரம்பமாகியது. இந்த நடைபவனியை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

நடைபவனிக்கான ஆரம்ப வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உட்பட பிரபல கிரிகெட் வீரர்களான குமார் சங்ககார, மகேல ஜேயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டிருந்தன. குறித்த நடைபவனி மூலம் சுமார் ஐந்து மில்லியன் ரூபா நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளதாக ட்ரெயில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

எதிர் பாராத விதமாக யாழ் வீதிகளில் வந்த வேளை ஒரு வீட்டிலிருந்த யுவதி ஓடி வந்து முன்னாள் இலங்கை கிறிக்கட் அணியின் தலைவர் ஜெயவர்த்தனாவை கட்டிப் பிடித்து முத்தமிட்டது அனைவரையும் பரபரப்படைய வைத்துள்ளது.

m2 m3

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதம் 2016 : அமைச்சர் இராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!

 
வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று (07.10.2016) காலை 9.30 மணியளவில் தேசிய வாசிப்பு மாதம் 2016 நிகழ்வுகள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, ம.தியாகராசா, செ.மயூரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, பிரதேச சபை தலைவர்கள், சர்வமதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டதுடன், சிறந்த நூலகங்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

img_1057 img_1058 img_1059 img_1063 img_1065 img_1066 img_1068 img_1074 img_1075 img_1081 img_1085 img_1086 img_1088 img_1092 img_1096 img_1097 img_1101 img_1103 img_1105 img_1106 img_1114 img_1115 img_1125 img_1128 img_1130 img_1132 img_1133 img_1140 img_1141 img_1142 img_1146 s5640050 s5640052 s5640053

வவுனியா ஓமந்தை கள்ளிக்குளத்தில் மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிய சுவிஸ் தமிழர்!!

 
ஓமந்தை கள்ளிக்குளத்தில் வசிக்கும் மாணவன் சஞ்சய் அவர்களுக்கும் மற்றும் 11 குடும்ப பொதுப் பாவனைக்குமாக இரு துவிச்சக்கர வண்டிகள் சுவிஸ் நகரில் தனது 12 வது பிறந்த நாளை கொண்டாடிய சி.சுதாகரன் மற்றும் திருமதி சு. செல்வி அவர்களின் புதல்வன் ஆதி அவர்களால் தமிழ் விருட்சம் வவுனியா ஊடாக கடந்த 03.10.2016 அன்று வழங்கப்பட்டது.

துவிச்சக்கர வண்டிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்(கண்ணன்)புளியங்குளம் ஆசிரிய நிலைய முகாமையாளர் திரு.சு.ஜெயசந்திரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

1 14555873_1299356990108520_1459764056_n 14569214_1299356396775246_803273673_n 14580450_1299357560108463_454080096_n 14580545_1299356653441887_220159081_n 14580602_1299357193441833_213238312_n 14593694_1299356393441913_1135227590_n 14593774_1299357026775183_322973125_n

பெண்களின் கைகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியுமா?

hand

மிருதுவான கைகள்

கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

வறட்சியான கைகள்

கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள்.

உள்ளங்கை பள்ளம்

உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருக்கும் பெண்கள் உத்தமிகள். உண்மையைப் பேசும் குணமுடையவர்கள். ஒழுக்கமானவர்கள். உள்ளங்கைகள் அதிக பள்ளமாகவும், முக்கியமான ரேகைகள் மட்டுமே நன்றாகத் தெளிவாகப் பிரகாசமாக இருந்தால் எந்தக்காலத்திலும் சரீர ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

கைகளின் நீளம்

பெண்களது கைகள் முழங்கால் அளவுக்கு நீண்டு தொங்கும்படி அமைந்திருந்தால், அவர்கள் சகல சவுபாக்கியங்களுடன் இருப்பார்கள். வாழ்க்கையின் சங்கடங்கள் எதையும் சிரித்த முகத்துடன் சகித்துக் கொள்வார்கள். கணவனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

கை விரல்கள்

பெண்களின் கை விரல்கள் மென்மையாகவும், ஒழுங்காகவும், அழகாகவும் இருந்தால் சகல சவுபாக்கியங்களும் அமைந்திருக்கும். இத்தகைய பெண்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். கணவனை மதிப்பவர்கள். எல்லோரும் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். இனிமையாகப் பேசி, பழகக்கூடியவர்கள். நீண்ட கை விரல்களை உடைய பெண்கள் கலையார்வமுள்ளவர்கள். இசை ஞானம் உள்ளவர்களாகவோ, இசைக் கருவிகளை வாசிப்பதில் பெரிதும் வல்லவர்களாகவோ இருப்பார்கள்.

சிலர் நாட்டியத்திலும், சிலர் நடிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். கை விரல்கள் பருமனாகவும், முரடாகவும் அமையப் பெற்ற பெண்கள், உழைத்து சம்பாதித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். பொறாமைக் குணமுடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குப் புத்திர பாக்கியம் அமைவது அரிது. கை விரல்கள் நெருக்கமாக சேர்ந்திருந்தால், கஞ்சத்தனம் மிக்கவர்களாகவும், பணம் சேர்ப்பதிலேயே எப்போதும் குறியாகவும் இருப்பார்கள்.

நகங்கள்

கைவிரல் நகங்கள் சொத்தையாகவும், கறுப்பாகவும் இருந்தால் ஆயுட்காலம் முழுவதும் கஷ்டமும், வறுமையும், பலரின் பழிப்பும் உண்டாகும். விரல் நகங்கள் சிவந்து, பளபளப்பாக, அழகாகக் காணப்பட்டால் அப்பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். பெண்களது கைகள் சமமாக இருந்தால், அவர்களுக்கு எல்லா சவுபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தை நன்றாக நிர்வாகிப்பார்கள். பெரியவர்களிடம் மரியாதை மிக்கவர்கள். இவ்வாறு பெண்களின் கை அமைப்பினை வைத்தே அவர்களின் குணாதிசியங்களை தெரிந்து கொள்ளலாம்.

யாழில் நான்கு இளைஞர்கள் அதிரடியாகக் கைது!!

vaal_rowdy

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர் வாள்வெட்டு சம்பவங்கள் யாழில் அதிகரித்துள்ள நிலையில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை தேடிவந்த நிலையிலும் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வைத்து இவர்கள் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் குருநகர் பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மற்றும் அசம்பாவித வேலைகளில் ஈடுபடுபவர்கள் தற்போது யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள்!!

sl

இலங்கைக்கு சுற்றுலா விசா மூலம் வருகைத் தரும் வெளிநாட்டவர்கள் கிட்டத்தட்ட 2 லட்சம் மேற்பட்டோர் நாள் சம்பளத்திற்கு வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து வரும் நபர்களில் அதிகமானோர் இந்தியா, பாகிஸ்தான், மாலைத்தீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு நாள் சம்பத்தில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

சார்க் பிராந்தியத்திலுள்ள இலவச விசா மூலம் இவர்கள் இலகுவாக இலங்கைக்குள் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டிற்கு பாரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் நிர்மாணிப்பு வேலைகளுக்கு இந்த ஊழியர்களை மிகவும் விருபத்துடன் இணைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வரும் வெளிநாட்டவர்களிடம் குறைந்த சம்பளத்தில் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதனால் இவ்வாறு விருப்பத்துடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ஆகியவை குறித்த ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதனாலும் இவர்கள் இலகுவாக இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிலுக்காக மலேசிய சென்ற இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!!

malaysia

தனியார் கப்பல் நிறுவனமொன்றில் பணியாற்றுவதற்காக மலேசியா சென்ற நிலையில், உயிரிழந்த இளைஞரின் இறுதிக்கரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளது.

காலி – அக்மீமன, பனாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுபுன் மல்ஷார எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தனியார் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியாவிற்குச் சென்றுள்ளார்.

ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சென்ற அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகத் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளைஞரின் சடலம் கடந்த முதலாம் திகதி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், நேற்றைய தினம் இறுதிக்கிரியைகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸிக்கா வைரஸை கட்டுப்படுத்த இலங்கையிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!!

zika

வேகமாகப் பரவி வரும் ஸிக்கா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளிடம், உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 3ம் திகதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாய்லாந்தில் ஸிக்கா தொற்றினால் தலை சிறியதாக இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதை அடுத்தே உலக சுகாதார ஸ்தாபனம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

விசேடமாக ஸிக்கா வைரஸ் பரவும் சாத்தியக்கூறுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நுளம்புகள் பரவும் இடத்தை அழித்தல் உள்ளிட்ட நுளம்புகளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்தல், கர்ப்பிணித் தாய்மார் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தல் போன்றவற்றில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு, உலக சுகாதார ஸ்தாபனம் ஆசிய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் ஸிக்கா தொற்று தற்போது பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தள விமானநிலைய ஆபத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!!

dubai

அம்பாந்தோட்டை மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் பறவை ஒன்றினால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து விமானியின் சமர்த்தியத்தினால் பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர்.

மத்தள விமான நிலையத்தில் நேற்று பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்த விமானமொன்றின் முன்பக்க என்ஜினில் பறவையொன்று மோதுண்டுள்ளது.

விமானம் தரையிறக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு நடு வானில் பறவை மோதியதனால் விமானத்தின் இயந்திரமொன்று (என்ஜின்) செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு இயந்திரம் செயலிழந்த போதிலும் மற்றைய என்ஜினின் ஊடாக விமானத்தை பாதுகாப்பாக விமானி தரையிறக்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த ப்ளை டுபாய் (FLY DUBAI) விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்கியது.

இசட்551 ரக விமானத்தில் பறவை மோதுண்டதாகவும் விமானத்தில் 43 பயணிகளும் 7 சிப்பந்திகளும் பயணித்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

என்ஜின் செயலிழந்த காரணத்தினால் பயணிகள் சில மணித்தியாலங்கள் காத்திருந்து வேறு விமானத்தில் டுபாய் நோக்கிப் பயணித்துள்ளனர்.

யாகூ மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!

yahoo

பிரபல நிறுவனமான யாகூ தன்னுடைய பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வரும் யாகூவின் இந்த செயலால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு துறையின் உத்தரவின் பேரிலேயே யாகூ இதை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான பிரத்யேக மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளதும், இதன்மூலம் பயனாளர்களின் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்து ரகசியமாக கண்காணிப்பதும் தெரியவந்துள்ளது.